Friday, February 01, 2008

பொங்கல் ரிலீஸ்

இந்த சன் டிவியில் கோட் சூட் அணிந்து, சலூன் கடை சேரில் கால் மேல் கால் போட்டு கொண்டு திரை விமர்சனம் செய்ய வருவாரே ஒருத்தர், அது மாதிரி என்னை நினைத்து கொண்டு மேலே படியுங்கள். பொங்கலுக்கு ரீலீஸ் ஆன படங்களில் பீமா, பழனி, மற்றும் காளை ஆகிய படங்களை தான் இப்போ கிழிக்க போறோம்.

முதலில் பீமா. படத்துக்கு இந்த பேர் வைச்சதுக்கே இயக்குனருக்கு சுத்தி போடனும். ஏற்கனவே தர்மா, அர்ஜுனா, கர்ணா எல்லாம் வந்து விட்டது. இந்த வரிசையில் இனி நகுலா, துரியோதனா, துச்சாதனா! சகுனினு வரலாம். கெளரவர்கள் நூறு பேர் பெயரும் என்ன?னு தெரிஞ்சா நம் தமிழ் இயக்குனர்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.

சரி படத்துக்கு போவோம்! விக்ரம் இந்த படத்தில் பஜாஜ் பல்சர் பைக் மாதிரி கும்முனு இருக்கார். படத்தில் அவர் வரும் பைக்குக்கும் அவருக்கும் வித்யாசமே தெரியலை. பாட்டி வடை சுடுவது போல டுமீல், டுமீல்னு படம் முழுக்க துப்பாக்கியால் யாரையோ சுட்டு கொண்டே இருக்கார். பாவம்! தயாரிப்பாளர் சம்பள பாக்கி வைத்து விட்டாரோ என்னவோ? படத்தில் பிரகாஷ் ராஜ் கூட இருக்கிறார். இப்படி பத்து படம் நடித்தால் தான் அவரால் மொழி போன்ற படம் தயாரிக்க முடியும் என்பதால் மன்னித்து விடுவோம்.

த்ரிஷா டூயட் பாடல் காட்சிகளில் காத்தாட வளைய வருகிறார் என்பதால் இசை மற்றும் பாடல் வரிகளை கவனிக்கவே முடியலை. அப்படியே கவனிக்க முயன்றாலும் (இசையை தான் சொன்னேன்) தங்கமணி டக்குனு கார்ட்டூன் நெட்வர்க் மாத்தி விடுகிறார். என் நிலையை பாத்து டாம் & ஜெர்ரி கூட விழுந்து விழுந்து சிரிக்கிறதோ?னு ஒரு சந்தேகம் அடி மனதில் உள்ளது.

பொதுவாக லிங்குசாமி படங்களின் கிளைமாக்ஸ் எல்லாம் ஒரு பாட்டில் பீரை இரண்டு லிட்டர் தண்ணி கலந்து குடித்தது போல சப்புனு இருக்கும். இந்த படத்திலும் அப்படித்தான். இந்த பீர் மேட்டர் எல்லாம் நண்பன் ஒருத்தன் தான் டெக்னிகல் சப்போர்ட் என்று நான் சத்யம் செய்தால் நீங்கள் நம்பி தான் ஆகனும்!
ஆக மொத்ததில், பீமா - பலசாலி இல்லை!

அடுத்து வருவது பழனி. படத்தின் பெயரை கேட்டவுடன் முருகன் பத்திய பக்தி படம் என நினைத்து, பதிவு போட ஏதாவது மேட்டர் கிடைக்கும் என சப்பு கொட்டிகொண்டு ஆன்மிக பதிவர்களான அண்ணன் கண்ணபிரான், ஜி.ரா, கீதா பாட்டி மற்றும் சிலர் தியேட்டருக்கு காவடி எடுக்க வேண்டாம் என இந்த சமயத்தில் எச்சரிக்கபடுகின்றனர்.

பாய்ஸ் படத்தில் அறிமுகமான பலரில் ஓரளவுக்கு உருப்பட்டது பரத், மற்றும் சித்தார்த் (இந்த வரியை படித்தவுடன் மை பிரண்ட் முகத்தில் பிரகாசமாய் பல்ப் எரியுது பாருங்க).

அஜித்தை வைத்து திருப்பதி என்ற முழு நீள காமெடி வெற்றி படம் குடுத்த இயக்குனர் பேரரசு "நல்ல வெயிட்டான ரோல்"னு பரத்துக்கு பஞ்சாமிர்தம் குடுத்திருக்கிறார்.

"வெட்டி சீவ நான் ஒன்னும் இளனி இல்ல பழனி" போன்ற காமெடி வசனங்களுக்காகவே படத்தை கண்டிப்பா பாக்கனும். ஏனேனில் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். பூ பூத்து, காயாகி, பழமாகி...னு பல்லை கடித்து கொண்டு பரத் வசனம் பேசி முடிக்கும்போது வில்லனுக்கு மட்டுமல்ல, நமக்கும் கொட்டாவி வருவது நிச்சயம்.

ஆக பழனி தயாரிப்பாளருக்கு மொட்டை! ரசிகர்களுக்கு அரோகரா!

அடுத்து வருவது சிம்பு நடித்த(?) காளை. அட பெயரை கேட்டவுடன் களுக்குனு யாருப்பா அங்க சிரிக்கறது? பொங்கல் சமயத்தில் படம் ரிலீஸ் என்பதால் காளைனு பெயர் வைத்தால் படம் தறி கெட்டு ஓடி விடும் என முடிவு செய்து விட்டார்கள் போலும். உண்மை தான்! தியேட்டரை விட்டு படம் தறி கெட்டு ஓடுகிறது, ரசிகர்களும் தான்.

நீளமாய் முடி வைத்த சிம்புவை அடிக்க வரும் அடியாட்களும் நீளமாய் ஹேர்ஸ்டையிலில் இருப்பதால் எல்லோருமே அடியாட்களாய் தெரிவதை தவிர்க்க முடியலை. "டண்டணக்கா டணக்கு டக்கா" என செவிக்கு இனிமையாய் பாடல்களை கேட்கும் போது, தயாரிப்பு செலவை குறைக்க பேசாம சிம்பு அப்பாவையே பாட்டு எழுத சொல்லி விட்டனரோ?னு நமக்கு சந்தேகம் வருகிறது. ஹிரோயின் பெயர் நினைவில் இல்லை.

பாடல்களை படமாக்கிய விதத்தை பாக்கும் போது சென்சார் போர்டில் உள்ளவர்கள் பாதி படத்தில் எழுந்து போய் பக்கோடா சாப்பிட போய் விட்டனர் என நினைக்கிறேன்.அனேகமாக எல்லா பாடல்களுமே ஏதோ விஜய் டிவியில் வரும் ஜோடி நம்பர் ஒன் சீசன்:ஐந்து பார்ப்பது போல் உள்ளது. ப்ரித்விராஜ்(எ) பப்லு தான் முதல் நாள் முதல் காட்சி முதலில் டிக்கட் எடுத்து தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரித்தார் என ரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில் காளை - ரொம்பவே முட்டி விட்டது.

பழனியையும் காளையையும் ஆஸ்கார் நாமினேஷனுக்கு இந்தியா சார்பாக அனுப்பியே தீருவோம்! என இரண்டு இயக்குனர்களும் அடம் பிடிக்கிறார்களாம்.

வெற்றி பெற நம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

53 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அம்பி எப்படி இப்படியெல்லாம்?..
ஹிஹிஹி

இராம்/Raam said...

//ப்ரித்விராஜ்(எ) பப்லு தான் முதல் நாள் முதல் காட்சி முதலில் டிக்கட் எடுத்து தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரித்தார் என ரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//

ROTFL............ :)))

CVR said...

//சிம்பு அப்பாவையே பாட்டு எழுத சொல்லி விட்டனரோ////
ஏன் அண்ணாச்சி இப்படி சொல்லிட்டீங்க??
அவரு கன்னா பின்னான்னு காமெடி பண்ணாலும் அவரின் பாடல் வரிகள் பலவற்றை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்!!

எப்பவும் போல அசத்தலான பதிவு!!
மிகவும் சிரித்து சிரித்து படித்தேன்!!

வாழ்த்துக்கள்!! :-)

Sumathi. said...

ஹாய் அம்பி,

ஆமாம், இந்த படங்களோட திருட்டு டிவிடியை எல்லாம் எங்க பிடிச்சீங்க?இத்தனை படங்களயும் நீங்க பாத்தீங்களா? ஒன்னும் ஆகலையே?
அப்பா கனேசா நீ தான் பாத்துக்கனும்....

Anonymous said...

annalum ungaluku romba diriyam than.indha padamellam pathu.... sontha selavula soonyam.vedikava theriyalaya.saringa nambitom.
-isthri potti

Dreamzz said...

//நூறு பேர் பெயரும் என்ன?னு தெரிஞ்சா நம் தமிழ் இயக்குனர்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.
//
ROFL!

Dreamzz said...

// இப்படி பத்து படம் நடித்தால் தான் அவரால் மொழி போன்ற படம் தயாரிக்க முடியும் என்பதால் மன்னித்து விடுவோம்.
///
neenga sonnal sari thaanunga...

Dreamzz said...

//த்ரிஷா டூயட் பாடல் காட்சிகளில் காத்தாட வளைய வருகிறார் //
கவனிச்சேன்.. So cute :)

Dreamzz said...

//இந்த வரியை படித்தவுடன் மை பிரண்ட் முகத்தில் பிரகாசமாய் பல்ப் எரியுது பாருங்க).
//
கொஞ்சம் விட்டா அந்த பிரகாசத்தில நம்மள குருடு ஆக்கிடுவாங்க... Off pannungappa yaarachum

Dreamzz said...

//வெட்டி சீவ நான் ஒன்னும் இளனி இல்ல பழனி//
பார்த்தேன்.. நானும் :((((

Dreamzz said...

//அடுத்து வருவது சிம்பு நடித்த(?) காளை. அட பெயரை கேட்டவுடன் களுக்குனு யாருப்பா அங்க சிரிக்கறது//
இத கேட்டு எவனாச்சும் சிரிக்காம இருந்தா தான் பிரச்சனையே...

கண்டிப்பா இந்த படம் எல்லாரும் பாருங்க..டோட்டல் காமெடி...நான் ரசிச்சு ரசிச்சு....சிரிச்சேன்..

Dreamzz said...

//பாடல்களை படமாக்கிய விதத்தை பாக்கும் போது சென்சார் போர்டில் உள்ளவர்கள் பாதி படத்தில் எழுந்து போய் பக்கோடா சாப்பிட போய் விட்டனர்//
அதான் நமக்கும் நல்லது... shhhhhhhh

Anonymous said...

நல்லா சிரிச்சேன்... நல்லவேளை, இந்த்ப மாதிரி காமடி பதிவுகள் எழுதவாச்சும் அந்தப் படங்கள் உபயோகப்படுதேன்னு திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்..

தி. ரா. ச.(T.R.C.) said...

கோட் சூட் அணிந்து, சலூன் கடை சேரில் கால் மேல் கால் போட்டு கொண்டு

சூப்பர் அம்பி

த்ரிஷா டூயட் பாடல் காட்சிகளில் காத்தாட வளைய வருகிறார்

தங்கமணி ஊரில் இருக்கும்போதே இப்படி


ஒரு பாட்டில் பீரை இரண்டு லிட்டர் தண்ணி கலந்து குடித்தது போல சப்புனு இருக்கும்

தமிரபரணி குடித்தவாயல் டப்பாதண்ணியை பற்றி....நம்ப முடியவில்லை இல்லை....

நிவிஷா..... said...

வாவ்! சூப்பர் கமெண்ட்டரி!
rasichen.

நட்போடு
நிமிஷா

நிவிஷா..... said...

oops.. i mean
nivisha. :)

இலவசக்கொத்தனார் said...

:)

Arunkumar said...

chance-ae illa... konja naala ella postume "sema sema sema" SUPER and ROTFL...

thala, eppidi ippidi ellam ?

Arunkumar said...

//
சலூன் கடை சேரில் கால் மேல் கால் போட்டு கொண்டு
//
LOL sema comparison!!!

//
இப்படி பத்து படம் நடித்தால் தான் அவரால் மொழி போன்ற படம் தயாரிக்க முடியும் என்பதால் மன்னித்து விடுவோம்.
//

idhu pointu :)

//
இசை மற்றும் பாடல் வரிகளை கவனிக்கவே முடியலை.
//
edhukkunguren?
adhellam thaan mp3-la gavanikkiromla...

video format-la kooda adhaye gavanicha apparam 3sha varutha pada maataanga !!!

//
என் நிலையை பாத்து டாம் & ஜெர்ரி கூட விழுந்து விழுந்து சிரிக்கிறதோ?னு ஒரு சந்தேகம் அடி மனதில் உள்ளது.
//
ROTFL-O-ROTFL :P


unga padhivu padichu sirichadhula pakkathu seetu paapa oru maathiri paakudhu... inime office-la padikka koodadhu da saami

Arunkumar said...

varisaya 3 comment potu pala naalaachu... :)

Arunkumar said...

//
கண்டிப்பா இந்த படம் எல்லாரும் பாருங்க..டோட்டல் காமெடி...நான் ரசிச்சு ரசிச்சு....சிரிச்சேன்..
//
dreamz
andha kudumbathoda family doctor ezhudinadhu thaan "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" :)

M.Rishan Shareef said...

'பழனி' பார்த்தேன்.படம் முடிந்ததும் நிறைய்...யச் சந்தேகங்கள் மனதில்.
உதாரணத்துக்கு ஒண்ணு.
பரத் 10 வயசிலேயே ஜெயிலுக்குபோறார். ரிலீஸ் ஆனதுமே ட்ரைவரா வேலைக்குச் சேர்ரார்.
அப்டீன்னா அவர் எங்கே ட்ரைவிங் கத்துக்கிட்டிருப்பார்?யாரு லைசன்ஸ் கொடுப்பாங்க?.
யாராவது சொல்லுங்களேன்?

Blogeswari said...

Hey ambi

Super review, as always !

Enna, ennoda US annan innum 'karuttu kannayiram' madiri vandu comment podaliya?

btw, why do your fellow bloggers put a minimum of 5 comments back to back? any vendudal?

கைப்புள்ள said...

//அடுத்து வருவது பழனி. படத்தின் பெயரை கேட்டவுடன் முருகன் பத்திய பக்தி படம் என நினைத்து, பதிவு போட ஏதாவது மேட்டர் கிடைக்கும் என சப்பு கொட்டிகொண்டு ஆன்மிக பதிவர்களான அண்ணன் கண்ணபிரான், ஜி.ரா, கீதா பாட்டி மற்றும் சிலர் தியேட்டருக்கு காவடி எடுக்க வேண்டாம் என இந்த சமயத்தில் எச்சரிக்கபடுகின்றனர்//

////ப்ரித்விராஜ்(எ) பப்லு தான் முதல் நாள் முதல் காட்சி முதலில் டிக்கட் எடுத்து தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரித்தார் என ரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//

சான்ஸே இல்ல...பல இடங்களில் இந்த மாதிரி ROTFL....:))) இந்தப் படங்களோட ட்ரெயிலரைப் பாத்துச் சிரிச்சதை விட இப்போ பயங்கரமா சிரிச்சிட்டிருக்கேன்.
:)

கைப்புள்ள said...

//'பழனி' பார்த்தேன்.படம் முடிந்ததும் நிறைய்...யச் சந்தேகங்கள் மனதில்.
உதாரணத்துக்கு ஒண்ணு.
பரத் 10 வயசிலேயே ஜெயிலுக்குபோறார். ரிலீஸ் ஆனதுமே ட்ரைவரா வேலைக்குச் சேர்ரார்.
அப்டீன்னா அவர் எங்கே ட்ரைவிங் கத்துக்கிட்டிருப்பார்?யாரு லைசன்ஸ் கொடுப்பாங்க?.
யாராவது சொல்லுங்களேன்?//

உன்னிப்பாத் தான் கவனிச்சிருக்கீங்க...சூப்பர்:)

Anonymous said...

LOL commentary.padathoda unga commentsukku nalla sirikka mudhinchathu.tom and jerry-chance illa.konjam irunga sirichiittu varen.super ambi.
padamnna udane nyabagam varudhu."taare zammeen par" please don"t miss the movie.i strongly recommend all parents and would be parents to see the movie. i could"nt control my emotions after seeing it.its a different movie.
please see it.
nivi.

Sanjai Gandhi said...

ஏனுங்ணா.. வரதெல்லாம் இந்த மாதிரி டுபாக்கூர் படங்கள்தான்னு தெரிஞ்சும் ஒண்ணு விடாம பாத்திருக்கிங்களே.. இன்னும் எதுனா நல்ல படம் வந்தா நீங்க ஊட்ல குந்துவீங்க? அப்பால சினிமா கொட்டாய்லையே தான் தவம் கெடப்பிங்க :P

Geetha Sambasivam said...

//என் நிலையை பாத்து டாம் & ஜெர்ரி கூட விழுந்து விழுந்து சிரிக்கிறதோ?னு ஒரு சந்தேகம் அடி மனதில் உள்ளது.//

புதுசா சேர்ந்திருக்கும் ஆப்பீச்சில் உள்ள உங்க டாமேஜரும் தான் சேர்ந்து சிரிக்கப் போறார். :P இப்போ உள்ள ஆபிஸில் வேலை, வெட்டி, ஒண்ணும் இல்லையா? :P

Geetha Sambasivam said...

//ஒரு பாட்டில் பீரை இரண்டு லிட்டர் தண்ணி கலந்து குடித்தது போல சப்புனு இருக்கும்

தமிரபரணி குடித்தவாயல் டப்பாதண்ணியை பற்றி....நம்ப முடியவில்லை இல்லை....//

ரிப்பீஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேஏஏஏஏஏஏ

M.Rishan Shareef said...

பழனி

## பரத் 10 வயதிலேயே சிறை சென்று விடுகிறார்.
மிக நீண்ட காலத்திற்குப் பிறகு வெளியில் வருகிறார்.
வந்தவுடனேயே குஷ்பு வீட்டில் ட்ரைவராக வேலை செய்கிறார்.
எந்த ஜெயிலில் ட்ரைவிங் கத்துக்கொடுத்து லைசன்ஸும் கொடுத்து அனுப்புகிறார்கள் எனத் தெரியவில்லை.

## ஒவ்வொரு சீனிலும் யாராவது ஒருவர் இன்னொருவரை அறைந்து கொண்டே இருக்கிறார்.பார்க்கும் நமக்கு வலிக்கிறது.

## இங்கும் குஷ்புவைச் சுற்றியே சர்ச்சைகள் பின்னப்பட்டிருக்கின்றன.
சினிமாவிலாவது அவரைச் சும்மா விட்டிருக்கலாம்.

## ஐஸ்வர்யாவுக்குக் கதை சொல்லும்போது 'படையப்பா ரம்யா கிருஷ்ணன்' ரோல் போலவே இருக்கும் எனச் சொன்னார்களாம்.அவரும் முழுக்க முழுக்க விறைப்பாகவே வந்து கூச்சலிடுகிறார்.

##படத்தின் இயக்குனரும் ஒரு சீனில் வந்து போகிறார் அருவெருப்பான பன்ச் டயலாக்குகளோடு.

## படம் பார்த்து விட்டு வெளியே வருகிறோம் காது நிறையப் பூக்களோடு.

Geetha Sambasivam said...

//அம்பி எப்படி இப்படியெல்லாம்?..
ஹிஹிஹி//
@மெளலி, பாவம் நீங்க, உங்களுக்கும் ஒரு தம்பி இல்லையே இப்படி எல்லாம் எழுதித் தர! :P

dubukudisciple said...

இந்த சன் டிவியில் கோட் சூட் அணிந்து, சலூன் கடை சேரில் கால் மேல் கால் போட்டு கொண்டு திரை விமர்சனம் செய்ய வருவாரே ஒருத்தர்//
saloon kadaila avalavu nalla chair iruka??

dubukudisciple said...

paavanga avaru.. ella padathayum thalaiezhuthene pakanum

dubukudisciple said...

பீமா - பலசாலி இல்லை//
enga vikram padatha ippadi vimarsanam panninathuku ungalai vanmaiyaga kandikiren

dubukudisciple said...

ஆக பழனி தயாரிப்பாளருக்கு மொட்டை! ரசிகர்களுக்கு அரோகரா!
//
idu therinju thaan sariya pazhaninu peru vachi irukaru pola

dubukudisciple said...

மொத்தத்தில் காளை - ரொம்பவே முட்டி விட்டது///
mutina thaan kalai ....illati illa..

ரசிகன் said...

தெளிவான திரைப்பார்வை:)
வாழ்த்துக்கள்...

Swamy Srinivasan aka Kittu Mama said...

haha:) ambi superrrrrrrrrrrrrrr !
adhuvum andha ending line appadiye top 10 movies paakara maari irundhuchu.

Swamy Srinivasan aka Kittu Mama said...

என் நிலையை பாத்து டாம் & ஜெர்ரி கூட விழுந்து விழுந்து சிரிக்கிறதோ?னு ஒரு சந்தேகம் அடி மனதில் உள்ளது.

chancea illa :)

Nilofer Anbarasu said...

Really I enjoyed very much with this post. Excellent timing and creative thoughts.

Anonymous said...

@M'pathi, சரி விடுங்க, தானா வருது இதேல்லாம். :)

@Raam, வாங்க தலைவா!

@CVR, அட ஆமா! அவர் பாட்டுக்கள் எல்லாம் ரொம்ப கவித்துவமா இருக்குமே. நன்றி வலிக்காம குட்டினதுக்கு. :))

@சுமதிக்கா, சும்ம டிரேயிலர் பாத்து தான் இந்த விமர்சனம். ஹிஹி.

@வாங்க இஸ்த்ரி பொட்டி, படம் எல்லாம் ஒன்னும் பாக்கலை.

@dreamz, அதானே! நீ கவனிக்காம இருப்பியா? :p

@prakash, அத சொல்லுங்க. நமக்கு இப்படி பதிவு போட உதவியா இருக்கு.

@TRC sir, அதானே! தாமிரபரணி குடித்த வாயால் மத்தது சே! நானாவது...? :))

நன்றி, நிமிஷா, சாரி நிவிஷா. :p

@arun, அதானே! MP3 எல்லாம் எதுக்கு இருக்கு?
உனக்கு தெரியுது, எஜமானுக்கு தெரிய மாட்டேங்குதே!
பக்கத்து சீட்ல பாப்பாவா? வெரி குட், வெரி குட். :))

@shreif, யப்பா! இவ்ளோ ஊன்றி பாக்கபடாது. பேரரசு அழுதுடுவார். :))

@B'wari, யக்கா, விடுங்க, பாசமா 4 கமண்ட் போடறாங்க. சந்தோச படனும், ஆராயபடாது. :p

Anonymous said...

@kaippulla, வாங்க தல, உங்கள சிரிக்க வெச்சதுக்கு என்ன பாக்யம் செய்தேன். :))

இவ்ளோ மாவட்டற வேலையிலும் தவறாம என் பதிவுக்கு வந்ததுக்கு மிக்க நன்னி. :p

@nivi, வாங்க நிவி, தங்கமணியும் அதே படத்தை பத்தி தான் சொல்லிட்டு இருக்காங்க. பக்கத்து வீட்ல இந்த வாரமாவது ஓசி சிடி வாங்கி பாத்துடனும். :))

@sanjai, சும்மா டிரெய்லர் பாத்து தான் இந்த பதிவு, நீங்க தான் அந்த சஞ்சய் ராமசாமியா? :p

@geetha paati, ஒரு ரெண்டு பதிவு போட்டா உங்களுக்கு பொறுக்காதே!

@sherif, ஸ்ப்பா, இப்பவே கண்ண கட்டுது.

@veda, மிக்க நன்னி வேதா!

@DD akka, அதானே! விக்ரம் பத்தி சொன்னா பொங்கி எழுந்துடுவீங்களே! :p

Anonymous said...

@rasigan, நன்னி ரசிகன், என்ன சுருக்கமா முடிச்சுட்ட, வழக்கமா நீ டேமை தொறந்தா மூட ரொம்ப நேரம் ஆகுமே? :p

@kittu, மிக்க நன்னி கிட்டு மாமா!

@raja, மிக்க நன்னி ராஜா :))

Sanjai Gandhi said...

//@sanjai, சும்மா டிரெய்லர் பாத்து தான் இந்த பதிவு, நீங்க தான் அந்த சஞ்சய் ராமசாமியா? :p//
ஆமா.. நீங்க எல்லாம் யாரு? என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்? :P

Anonymous said...

super comments ambi. pazhaniyappa padhi parkum bothe thonghi vitten,indha perarasuvai yaravathu
thaliban, al koida aatkalidam pidithu kodungalen,nalla iruppenga!

manipayal said...

பட விமர்சனங்களை விட அந்த டைட்டிலுக்கு ஒரு கமெண்ட் குடுத்தீங்க பாருங்க அது சூப்பர்

Senthil Ananth said...

அம்பி படம் எப்படியோ...
உங்க விமர்சனம்..பேஷ்..பேஷ்..

Arunkumar said...

annathe,
V'Day-ku enna special ? :)

மு.கார்த்திகேயன் said...

சன் டிவிக்கு போட்டியா விமர்சனமா அம்பி.. இப்போது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..

வழக்கம் போல அசத்தல் சீண்டல்கள், விமர்சனத்தில்

C.N.Raj said...

Ambi,

Unga vimarsanam Good Combinasan...
mindla vachukkuren...
Porappa maami messla naalu idli,
rendu vadai appadiye ketti chutney sollittu poidunga.

"வெட்டி சீவ நான் ஒன்னும் இளனி இல்ல பழனி"

Aaha.... Director Perarasu!!!!!
Intha oru vasanaththukkaaga avarukku National award enna...Oscar aye kuduthuralaam.

namma blogla oru mokkai potrukken..etti parunga time irunthaa..

C.N.Raj

Anonymous said...

புது பட விமரிசனங்கள் ஸூப்பர். பீமா தான் ரொம்ப எதிர்பார்த்தேன்..."கதை" யாலயே மண்டைல நச்சுனு அடிச்சா மாதிரி ஆயிடுச்சு (விக்ரம் அவ்ளோ பெருசா உடம்ப வளர்த்து ஏன் துப்பாக்கியால ஃபைட் பண்றார்னு இன்னும் புரியலை). பிரிவோம் சந்திப்போம் ஓரளவு பார்க்கிற மாதிரி இருக்கு. உங்க கலையுலக பணி தொடர வாழ்த்துக்கள்.

Anonymous said...

Look here

Natchatra said...

Ambiii

unga blog superrrrr.....
unga policy than yen policyum...be happy and make others happy... :) :)
arumai arumaii ungaloda yella yeluthukalumey arumaiiii....
ungaloda yeluthukaluku rasigai agi vitaen.. :) :)