நாள்: 20- பிப்ரவரி-2030
நேரம்: மாலை 4 மணி அடிக்க ஐந்து நிமிஷம்
மிதமாக குளிரூட்டப்பட்ட அந்த கான்பிரன்ஸ் ஹால் அனைத்து உலக டெலிவிஷன், பத்திரிகை, மீடியா மக்களால் நிரம்பி வழிந்தது. மரபியல் விஞ்ஞானி புரபசர் பத்ரிநாத் தீடிரென்று அழைத்தால் விஷயம் இல்லாமல் இருக்குமா? ஏதாவது புதுவகை லேகியம் கண்டுபிடித்து விட்டாரா?
சரியாக மணி நாலு அடிக்க, அந்த ஹாலில், கையில் லாப்டாபுடன் புரபசரின் உதவியாளினி மிஸ்.யாழினி உள்ளே நுழைய ஹால் களை கட்டியது. சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் யாழினியை பற்றி நாம் வர்ணிக்க ஆரம்பித்தால் இது தொடர்கதையாகி விடும் என்பதால் வழுக்கை தலை, கோல்ட் பிரேம் கண்ணாடியுடன் உற்சாகமாக வரும் நமது புரபசர் பக்கம் திரும்புவோம்.
புரபசர் மரபியல் துறையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பழம் தின்னு கொட்டை போட்டவர். இரண்டு முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டு, ரஷ்ய, அமெரிக்கர்களின் உருப்படாத கண்டுபிடிப்புகளால் கோட்டை விட்டவர். சரி, புரபசருக்கு இவ்ளோ அறிமுகம் போதும். புரபசரும், யாழினியும் தமது இருக்கைகளில் அமர்ந்து கொள்ள கூட்டம் நிமிர்ந்து உட்கார்ந்தது. யாழினி, தனது லாப்டாப்பை உயிர்ப்பித்து, விரல்கள் நோகாமல் அதில் பியோனோ வாசிக்க ஆரம்பித்தாள். குடுத்து வைத்த லாப்டாப்.
புரபசர் தொண்டையை கனைத்து கொண்டு பேச்சை ஆரம்பித்தார். டியர் பிரண்ட்ஸ்! என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு முதலில் நன்றி. நான் மரபியல் துறையில் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டு இருக்கிறேன். அதை பற்றி விளக்க தான் இந்த கூட்டம். விளக்கமா சொல்றேன்.
நம்ம எல்லோருக்குமே தத்தம் குழந்தைகள் பெரிய டாக்டரா, இஞ்சினியரா, ஒரு கிரிகட் ஸ்டாரா வரனும்! என்ற கனவு இருக்கு இல்லையா? ஆனா, படிக்க வசதி வாய்ப்பு இருந்தும், ஒரு சில பேர் தான் அவங்க துறையில மிளிர முடியுது. இதுக்கு வெளி காரணிகள் பலது இருந்தாலும், ஒரு மரபியல் விஞ்ஞானியா நான் கண்டுபிடிச்சது அவங்க ஜீன்களின் அமைப்பு தான் மெயின் காரணம்.
இன்னும் விளக்கமா சொல்லனும்னா, ஒரு சிலர் கணக்குல புலியா இருப்பாங்க. அதுக்கு அவங்க மரபியல் அமைப்பே காரணம். இந்த ஜீன்களின் அமைப்பை நமது விருப்பத்துக்கேப்ப மாத்த முடிஞ்சா, அதாவது கணினி புரோகிராமிங்க் மாதிரி எல்லாம் ஒரு கட்டுகோப்பா நடக்கும்.
என்னோட ஆராய்ச்சிபடி, கருவில ஒரு உயிர் உருவானவுடன் சரியாக அறுபதாவது நாளில், 0.12 மில்லிமீட்டர் மட்டுமே இருக்கும் அந்த உயிரின் க்ரோமோசோம் கட்டமைப்பை மாத்தி அமைச்சா உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி உங்க குழந்தை பெரிய டாக்டராவோ, விண்வெளி வீரனாகவோ, வர முடியும்! என சொல்லி நிறுத்தி ஒரு மடக்கு தண்ணீரை புரபசர் பருக,
இது சாத்யமா புரபசர்? இதை நீங்கள் எப்படி நிரூபிக்க முடியும்? ஒரு ரிப்போட்டர் இடைமறித்தார்.
முப்பது வருஷத்து ஆராய்ச்சி இது. இன்னிக்கி புகழ் பெற்று விளங்கும் சில பேர் என்னோட ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டவர்கள் தான், என சில பெயர்களை உரக்க சொல்ல, வரிசையாக புகழ் பெற்ற சில டாக்டர்கள், கம்யூட்டர் புலிகள், விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்து புரபசரின் கூற்று உண்மை தான்! என கூறினர்.
இந்த ஆராய்ச்சியில் உள்ள தீமைகள் ஏதாவது சொல்ல முடியுமா புரபசர்?
இந்த ஆராய்ச்சியில் நன்மைகள் தான் அதிகம். ஒரு ஆரோக்கியமான, வலிமையான பாரதத்தை நாம் உருவாக்க முடியும். நம் குழந்தை என்னவாக வேண்டும்? என்பதை கருவிலேயே நாம் முடிவு செய்து விடலாம். தீமைகள்னு பாத்தா, இவங்க தம் துறை தவிர மத்த விஷயங்களில் கிட்டத்தட்ட பூஜ்யமா இருப்பாங்க. உதாரணமா சொல்லனும்னா, கம்யூட்டர் துறையை சேர்ந்த ஒருவர், ஆபிஸ்ல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத மாட்டார், ஏன்னா அவருக்கு மொக்கை போடவே தோணாது.
அதாவது, கிட்டதட்ட ஒரு ரோபோ மதிரி இருப்பாங்க!னு சொல்றீங்க இல்லையா புரபசர்?
இல்ல, ஏவி விட்ட ஏவுகணை மாதிரி இருப்பாங்க.என பெருமையுடன் சொன்ன அந்த மைக்ரோ வினாடி, யாழினியின் செல்பேசி, "பூம்பாவாய் ஆம்பல்! ஆம்பல்! புன்னகையோ மெளவல்! மெளவல்!" என்ற பழைய திரைபட பாடலை ரிங்க்டோனாக ஒலித்தது.
ஈஸிட்? ரியலி? ஐ கான்ட் பீலீவ் திஸ் நியூஸ்! என ஏற்கனவே பெரிதான தனது அழகிய கண்களை இன்னும் அதிகமாக விரித்து பல ரிப்போட்டர்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்தாள் யாழினி.
என்ன விஷயம்? எனபது போல புரபசர் புருவத்தை தூக்க, உங்களுக்கு மரபியல் துறையில், இந்த மிகப் பெரிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிச்சு இருக்காங்க! என யாழினி திருவாய் மலர, அந்த அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. சந்தோஷத்தாலும், ரிப்போட்டர்களின் வாழ்த்துக்களாலும் திக்குமுக்காடி போனார் புரபசர்.
சார், ஒன் மோர் குட் நியூஸ் பார் யூ! உங்க பொண்ணு ஒரு அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்காங்க, இப்ப தான் ஹஸ்பிடலில் இருந்து கால் வந்தது என மறுபடி யாழினி இன்ப அதிர்ச்சி குடுக்க,
யாழ்! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! போதும், இன்னிக்கு இவ்ளோ சந்தோஷம் போதும். நான் உடனே என் மகளை பாக்க ஹாஸ்பிடல் கிளம்பறேன். நீ இந்த ரிப்போட்டர்ஸ்க்கு நம் ஆராய்ச்சி பற்றி தேவையான மேட்டரை குடுத்து பிரஸ் மீட்டை முடிச்சுடு. எனக்கு வரும் வாழ்த்துக்களை பதிவு செய்து, நன்றி தெரிவித்து விடு. பை டேக் கேர்! என சொல்லி விர்ரென புரபசர் பறந்தார்.
போடா போ! அங்க உன் பேர குழந்தை என்ற பெயரில் பிறந்து இருக்கும் ரோபோவை பாக்க போ! உன் ஆராய்ச்சிக்கு என் அக்கா குழந்தையை பலி வாங்கின இல்ல, உன் பேரனின் ஜீன் அமைப்பை உனக்கு தெரியாமல் மாத்தியாச்சு. 3 வருஷம் கழிச்சு அது உன்னை பாத்து தாத்தா!னு ஆசையா கூப்டாது. மாமா! பிஸ்கோத்துனு கேக்கும் பாரு.
இது தான் நான் உனக்கு குடுக்கும் தண்டனை! என மனதுக்குள் சிரித்துக் கொண்டே அழுதாள் யாழினி.
பி.கு: சர்வேசன் நடத்தும் நச்சுனு ஒரு கதை போட்டிக்கு கடைசி நாளான இன்று அவசரமாய் எழுதியது. வழக்கம் போல நீங்க ஷ்டாட் மிஜீக் போடுங்க.
28 comments:
அம்பி, கொஞ்ச முன்னாடியே யோசிக்க ஆரம்பிச்சு எழுதி இருந்தா இந்த கடைசி நிமிஷத்தில் அவதி அவதின்னு வெந்ததும் வேகாததுமா எழுதி இருக்க வேண்டாம்தானே!!
(நம்ம ஊர் பையன், நாம சொல்லலாம். ஆனா அடுத்தவங்க சொல்லக் கூடாது பாரு. அதான் முதலிலேயே இப்படி. நீ கவலைப்படாம எழுது ராசா!)
Dear ambi,
Yazhini nu kadhaiku per vechu. varnichu...... adada indha ambi maaravae ilai nu nenachen.
Illai ambi. Neenga romba porupa maareeteenga...
ambi ku ivvalavu nalla kadhai varudhae.. V.Good writings....
Sujatha vin "Vinyana sirukadhai" madhiri oru kadhaiyai padicha oru feelings.......... Short and Sweet writings........... Siru kadhai ku vendiya athanai Ilakangalum unga kadhaiyil iruku ambi......
With Love,
Usha Sankar.
:)))))))))
அப்புறம் இன்னொரு மேட்டர் அது என்ன - ""பூம்பாவாய் ஆம்பல்! ஆம்பல்! புன்னகையோ வவ்வல்! வவ்வல்!"" வவ்வல், வவ்வால் அப்படின்னுக்கிட்டு. அது மௌவல். அப்படின்னா காட்டு மல்லி. ஆம்பல் அப்படின்னா அல்லி மலர். புரியுதா?
// சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் //
அம்பியண்ணா இன்னும் அந்த கேசரிய மறக்கலைன்னு புரியுது,,ஹிஹி..:))
கதை சொம்மா நச்சுன்னு இருக்கு.. வாழ்த்துக்கள்..
:-))))
கதை என்னவாயிருந்தாலும் அம்பிண்ணேனுடைய குறும்பு அப்படியே இருக்கு. ;-)
அதானே.. யாழினின்னு பேரு வச்சிட்டு.. மொட்டத்தல ப்ரோபஸர் பத்தி பேசுறீங்களேன்னு பார்த்தேன்.. கடைசியில வச்சிங்க ஒரு நச். ;-)
// இலவசக்கொத்தனார் said...
அம்பி, கொஞ்ச முன்னாடியே யோசிக்க ஆரம்பிச்சு எழுதி இருந்தா இந்த கடைசி நிமிஷத்தில் அவதி அவதின்னு வெந்ததும் வேகாததுமா எழுதி இருக்க வேண்டாம்தானே!!//
ஹலோ.. அம்பியண்ணன் நிலைமை உங்களுக்கு கிண்டலா போயிருச்சா?
தினமும் சமையல்லாம் முடிச்சிட்டு, கெடைக்கற கொஞ்ச நேரத்துல கொஞ்ச கொஞ்சமா, போட்டி அறிவிச்சதிலிருந்தே எழுத ஆரம்பிச்சி இப்போதான் முடிச்சிருக்கார்..
அவர ஊக்கப்படுத்தாம குத்தம் சொல்லறீரே :P
//ஹலோ.. அம்பியண்ணன் நிலைமை உங்களுக்கு கிண்டலா போயிருச்சா?
தினமும் சமையல்லாம் முடிச்சிட்டு, கெடைக்கற கொஞ்ச நேரத்துல கொஞ்ச கொஞ்சமா, போட்டி அறிவிச்சதிலிருந்தே எழுத ஆரம்பிச்சி இப்போதான் முடிச்சிருக்கார்..
அவர ஊக்கப்படுத்தாம குத்தம் சொல்லறீரே :P//
repeatu!
kadhai is short and nice :)
//ஹலோ.. அம்பியண்ணன் நிலைமை உங்களுக்கு கிண்டலா போயிருச்சா?
தினமும் சமையல்லாம் முடிச்சிட்டு, கெடைக்கற கொஞ்ச நேரத்துல கொஞ்ச கொஞ்சமா, போட்டி அறிவிச்சதிலிருந்தே எழுத ஆரம்பிச்சி இப்போதான் முடிச்சிருக்கார்..
அவர ஊக்கப்படுத்தாம குத்தம் சொல்லறீரே :P//
repeatu!
// சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் //
KaLAKKAL
2030-ல போய் மடிக்கணிணி செல்போன் ரிங்டோன் - னுக்கிட்டு!!
அப்போ எல்லாம் அதெல்லாம் இருக்காது அண்ணாச்சி!!
2030-னு சொன்னதுக்கு அப்புறம் எதுவுமே 2030-னு காட்டறா மாதிரி எதுவுமே இல்ல!
அதுவுமில்லாம நச் எலமெண்ட் அவ்வளவா இல்ல!!
தப்பா நெனைச்சுக்காதீங்க அண்ணாச்சி!! தோணினத சொன்னேன்! :-)
பி.கு: Gattaca அப்படின்னு ஒரு படம் இதே கான்செப்டோட வந்திருக்கு பாத்திருக்கீங்களா?? :-)
Konjan Nachinu Irukku
Konjan Nachinu Irukku
ahha pere super.kadhai nalla irundadhu.indha pera enga pudicheenga?
kesari sapittu romba nalacho.thangamani,ambi sirukku oru kesari parcel!!!!!!!!yazhinikku yaaru inspiration ambi.summa therijikkalamnnu thaan.
nivi.
//சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் யாழினியை//
ulaga thamizh writers historylaye intha maathiri oru ponnai yaarum varnichathu kidayathu..
//யாழினியை பற்றி நாம் வர்ணிக்க ஆரம்பித்தால் இது தொடர்கதையாகி விடும் என்பதால் //
இது தான் உண்மையான காரணமா? நான் நம்பிட்டேன்...
//புரபசர் மரபியல் துறையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பழம் தின்னு கொட்டை போட்டவர்//
ஓ அதுல இருந்து எந்த மரமும் வரலையா?
//பூம்பாவாய் ஆம்பல்! ஆம்பல்! புன்னகையோ வவ்வல்! வவ்வல்!"" //
பழைய பாட்டா? :O
எப்படி தல் நீங்க விஞ்ஞானத்தை பத்தியும் அசால்ட்டா அவுத்து விடுறீங்க?... அட்ரா அட்ரா..
கதை நல்லா இருக்கு...
//யாழினின்னு பேரு வச்சிட்டு.. மொட்டத்தல ப்ரோபஸர் பத்தி பேசுறீங்களேன்னு பார்த்தேன்.. கடைசியில வச்சிங்க ஒரு நச். ;-)//
ரீப்பீட்டு
@அம்பி
ஆபிஸ்ல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத மாட்டார், ஏன்னா அவருக்கு மொக்கை போடவே தோணாது
கவலை வேண்டாம் அதுக்கெல்லாம் ஆள் தனியா இருக்காங்க.
Nice imagination,last para,description of yazhini-typical ambi's touch :D
Good one :)
கதையில், ப்ளாக் எழுதரதெல்லாம் சொல்லாம விட்டிருக்கலாம் ;)
நல்ல நச்!
ambi,
kesari yap paarththale inime yaazhini gnabakam thaan varum.
athuvum suda suda ney vittu sattiyila irunthu edukkanumaa?
unga veetla irukkura ammani kitta solli karandiya suda suda aduppula vachu unkala rendu izhu izhuththaaththaan sariyaa varuveenka.
kathai aana nalla irunthuthu.
jollu uuthunathaala konjam PC monitor thaan nanainchu pochu.
Raj.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா! தலை- new year-ஆ!! treat enga??
நச்சுனு இருக்கு.. பிடிங்க.. சூப்பர் அம்பி..
அப்புறம், Group A கதை படிச்சு ஓட்டு போட்டீங்களா?? இல்லைனா.. இப்பவே செய்யுங்க..
வீ எம்
yazhini foto potturunthaa nallaa irunthurukkum!!!
"கம்யூட்டர் துறையை சேர்ந்த ஒருவர், ஆபிஸ்ல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத மாட்டார், ஏன்னா அவருக்கு மொக்கை போடவே தோணாது. "
அம்பியைத் தவிரன்னு எழுதி இருக்கணும், மறந்துடுச்சா? :P
அப்டியே சுஜாதா எழுதின சிறுகதை டச் இருக்கு :)
ரொம்ப சரி, அதை அப்படியே ஜி3 பண்ணின மாதிரித்தான் இருக்கு! :P
Post a Comment