Saturday, December 29, 2007

போடுங்கம்மா ஓட்டு!

அன்பார்ந்த பிளாக்காளர் பெருமக்களே! சர்வேசன் நடத்தும் கதைப்போட்டி பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நமக்கு விழபோவது என்னவோ ஒரு ஓட்டு தான், அதுவும் என்னுடைய ஓட்டு தான்! என நன்றாக தெரிந்து இருந்தும், மனம் தளராமல் பிரசாரத்தை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து, தங்கமணியிடம் கேட்டால், வழக்கம் போல இதெல்லாம் ஒரு பொழப்பா? என்பதையே ரொம்ப டீசன்டா சொன்னதில் இனி வழியில்லை என்பதால் இந்த பதிவு.
பிளாக்கில் பதிவு போட்டு கமண்ட் பொட்டியை தொறந்து வைத்து நாம் தேவுடு காத்து கிடந்தால், அனானியாக வந்து ஆப்படித்த கூட்டம் ஒரு பக்கம் என்றால் சத்தமே போடாமல் வந்து பதிவை படித்து விட்டு இடத்தை காலி செய்த கூட்டம் மறுபுறம். இதையெல்லாம் மீறி போனா போகுது!னு சில நல்லவர்கள், வல்லவர்கள் வந்து போவது மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது.

சரி மேட்டருக்கு வருவோம். இந்த லிங்கில் போய் உங்களுக்கு பிடித்த கதையை தேர்வு செய்து உங்கள் ஓட்டை போட்டு விடுங்கள். எனக்கு ஓட்டு போடுங்கள்! என நான் கேட்க போவது இல்லை.

"எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளையனார் கண்ணபிரானும் கட்டி காத்து வரும் தமிழ் மணத்தில் தகுதியான ஒரு கதை முதலிடம் பெற்றால் அதை கண்டு சந்தோஷபடும் முதல் மனிதன் நான் தான்!, என சீன் போட விரும்பவில்லை. ஹிஹி, என் கதை யாழினியும் உங்களுக்கு பிடிக்கும். எனவே மறக்காமல் ஓட்டு போடுங்கள். கடைசி தேதி டிசம்பர் 31 - 2007.

பி.கு: எதிர் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும்.

4 comments:

ரசிகன் said...

//இதையெல்லாம் மீறி போனா போகுது!னு சில நல்லவர்கள், வல்லவர்கள் வந்து போவது மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது.//

ஹிஹி.. அம்பியண்ணா என்னிய ரொம்ப புகழுறிங்களே.. ஆனா என்ன பண்ணறது என்னோட ஓட்டு ஏற்கனவே போட்டாச்சே.. (அந்த கதையையும் படிக்காமத்தேன் ஓட்டு போட்டேன்:P)

ரசிகன் said...

//மனம் தளராமல் பிரசாரத்தை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து, தங்கமணியிடம் கேட்டால், வழக்கம் போல இதெல்லாம் ஒரு பொழப்பா? என்பதையே ரொம்ப டீசன்டா சொன்னதில் //

இது சூப்பரேய்ய்ய்.....

//"எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளையனார் கண்ணபிரானும் கட்டி காத்து வரும் தமிழ் மணத்தில் தகுதியான ஒரு கதை முதலிடம் பெற்றால் அதை கண்டு சந்தோஷபடும் முதல் மனிதன் நான் தான்!, என சீன் போட விரும்பவில்லை//

அடிக்கடி நெசத்த வெளிப்படையா சொல்லி என்னிய புல்லரிக்க வைக்கறிங்க:P

Dreamzz said...

neenga imbuttu sonna pinna vote podaama iruppoma! itho ippove!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஒரிஜனல் ஓட்டு போட்டாச்சு. கள்ள ஓட்டு எதுனா போடனுங்களா? =)))