Sunday, December 16, 2007

2007 பிளாகர் அவார்டுகள்

இந்த 2007 வருடத்தில் நம்மை கவர்ந்த சில பிளாகர்கள் வாங்கிய அவார்டுகளை இப்போ பார்ப்போம்:
முதல் போட்டியாளர்:
இவர் வலைபூவை திறந்தாலே திருப்பதிக்குள்ள நுழைஞ்ச மாதிரி ஒரு எபக்ட் கிடைக்கும். திருப்பதி லட்டு பத்தி நம்மாழ்வார் என்ன சொல்றாரு? புளியோதரை பத்தி பெரியாழ்வார் என்ன சொல்றாரு?னு அ முதல் ஃ வரை சும்மா பிரிச்சு மேஞ்சுபுடுவாரு. :)

அட சே! நாமளும் தான் பதிவு எழுதறோமே?னு சில(பல)சமயம் வெக்கபட வெச்சுபுடுவாரு.போட்டோவுல சும்மா ஹாலிவுட் ஹீரோ கணக்கா இருந்தாலும், அண்ணாச்சி தமிழ்ல சும்மா லெப்ட், ரைட்டுனு யூ டர்ன் போட்டு வருவாரு. அண்ணாச்சியை வெச்சு ஏதேனும் காமடி பண்ணலாம்னு நினைச்ச சங்கத்து சிங்கங்களுக்கு, வெங்கல கடையில் யானை புகுந்த கதையா நமது அண்ணன் அதிர்ச்சி வைத்தியம் குடுத்துட்டார் என்பது டாக் ஆஃப் தி தமிழ்மணம்.
எனவே இந்த வருடத்தின் பழம் நீயப்பா! அவார்டை போட்டியின்றி தட்டி செல்கிறார்.

இரண்டாவது போட்டியாளர்:
தில்லுமுள்ளு படத்தில் ஒரு ரோஜா மாலைக்காக சுவர் ஏறி குதிச்சு அம்மாவா நடிச்ச செளகார் ஜானகியை உங்களுக்கு நியாபகம் இருக்கா? நல்லது!
நல்லா எழுதி இருக்கீங்க! அல்லது சிறந்த பதிவு!னு நீங்க ஒரு கமண்ட் போட்டா உங்கள் மீது பாச மழை பொழிவார் இவர். போன் போட்டு சொன்னா நீங்க அனானியா இருந்தா கூடா உங்க பேர்ல தனி பதிவு போட்டு விடுவார்.
கைலாச யாத்ரை போற வழில பில்டர் காப்பி கேட்டு அந்த டிராவல் ஏஜண்டை ஓட ஓட விரட்டிய கதைய சொல்லவா? இல்லாட்டி, அமர்நாத் யாத்ரையில் குதிரை ஏறி இவங்க பாரம் தாங்காமல் அது குப்புற விழுந்த கதைய சொல்லவா?

சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் தான் ரவுடி! நான் தான் ரவுடி!னு வடிவேல் சொல்ற மாதிரி நான் தான் தலைவி! நான் தான் தலைவி!னு சொல்லிப்பாங்க. ஆன்மிகம், தமிழ், பாரதி, சுதந்திர போராட்ட வரலாறுனு அவியல் மாதிரி கலந்து கட்டி அடித்தாலும் மவுஸ் வேலை செய்யலை! என் வீட்டு (ரங்கு வைக்கற) ரசத்துல புளி இல்லை!னு இவங்க போடற மொக்கை தான் மக்கள் மனசுல நிலைச்சு இருப்பதால் (மொக்கை) பதிவுச் சூறாவளி - 2007 என்ற அவார்டை இவர் போட்டியின்றி தட்டி செல்கிறார்.

அடுத்த போட்டியாளர்:
உங்கள் கையில் நயன் தாரா அல்லது கோபிகா படம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? சபையில் சொல்ல கூச்சமாக இருக்கலாம். இவர் கையில் கிடைத்தால் "கை வண்ணம் இங்கு கண்டேன்! கால் வண்ணம் அங்கு கண்டேன்!" என நடுவில் மானே! தேனே போட்டு தேவதைகளை ஊர்வலம் வர செய்து விடுவார்.
இவரது மன நிலைக்கு ஏற்ப திரிஷா சிரிப்பார் அல்லது முறைப்பார். இவர் ஒரு போட்டியாளர். சரி அடுத்த ஆளை பார்ப்போம்.

சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?னு அவ்வைக்கு முருகன் கேட்ட மாதிரி இவர் சுட்ட பதிவு வேணுமா? சுடாத பதிவு வேணுமா?னு லெவல் காட்டுவார்.
இவர் போகாத ஹோட்டல் கிடையாது. இவருக்கு ட்ரீட் தந்து ஓட்டலில் மாவு ஆட்டாத பதிவரும் கிடையாது. இவரும் ஒரு போட்டியாளர்.

மூன்றாம் போட்டியாளரை பார்ப்போம்.
எல்லோரும் கவிதையோ கவிஜயோ தங்களது பதிவிலேயே போட்டு பதிவு எண்ணிக்கையை கூட்டுவர். ஆனா கவிதைக்கு தனி கடை வைத்து, தோணும் போதேல்லாம் கவிதைய போட்டு அது குப்பை தொட்டியோ, ரோஜா செடியோ எத பத்தி வேணாலும் பதிஞ்சு விடிவார். அவ்ளோ லேசுல புரியற மாதிரி இல்லாட்டியும், அங்க தான் நீங்க நிக்கறீங்க! அப்படினு எல்லோரும் பாராட்டுவாங்க, அது வேற விஷயம்.
எனவே இந்த மூனு போட்டியாளர்களில் கவிதைக்கு தனிகடை வைத்த தங்கம்! என்ற பட்டத்தை இவர் தட்டி செல்கிறார்.

இதைப் போல உங்களை கவர்ந்த பிளாக்கர்களுக்கு நீங்களும் அவார்டுகளை வாரி வழங்கலாமே! :)

30 comments:

நாகை சிவா said...

:)

எத்தன பெயரு எத்தனை அவார்ட் வாங்கினாலும் நம்ம தலைவலி வாங்கின மாதிரி வருமா

//போன் போட்டு சொன்னா நீங்க அனானியா இருந்தா கூடா உங்க பேர்ல தனி பதிவு போட்டு விடுவார்.//

ஹிஹிஹிஹிஹிஹி

வேதா said...

ஆகா அவார்டு கொடுக்கறேன்னு எல்லாருக்கும் ஆப்பு கொடுத்துருக்கீங்க :D இருக்கட்டும் நாளைக்கு வந்து கச்சேரிய வச்சுக்கறேன் ;D

My days(Gops) said...

வெள்ளிகிழமை நாயகன் அம்பி ,
இப்போ சண்டே நாயகன்??????

தல இன்னாதிது???

My days(Gops) said...

//நாளைக்கு வந்து கச்சேரிய வச்சுக்கறேன் ;D
//

@ வேதா:- அட்ரா அட்ரா பிளாகர்ஸ் உலகில் முதல் முறையாக அவார்ட் வாங்கிய அரை மணி நேரத்தில், அதை கொண்டாட கச்சேரி வைக்கும் வேதா அவர்களுக்கு எதிர்கட்சி பாராட்டு தெரிச்சிவிட்டுகிறது...

VSK said...

'உன் குடுமி என் கையில இருக்கு!'ன்னு அடிக்கடி மிரட்டுறதுல அர்த்தம் இருக்கோன்ற நினைப்பை ஊர்ஜிதப்படுத்திய பதிவு!
:))

தேர்வுகள் அனைத்தும் சூப்பர்!

Dreamzz said...

//ஆகா அவார்டு கொடுக்கறேன்னு எல்லாருக்கும் ஆப்பு கொடுத்துருக்கீங்க :D இருக்கட்டும் நாளைக்கு வந்து கச்சேரிய வச்சுக்கறேன் ;D//
repeatu! ஆனா நம்ம கச்சேரி இப்பவே!

Dreamzz said...

//இவர் கையில் கிடைத்தால் "கை வண்ணம் இங்கு கண்டேன்! கால் வண்ணம் அங்கு கண்டேன்!" //
அடப்பாவிகள! இதெல்லாம் நான் இவங்களை பாத்து சொன்னத தப்பா நினைச்சுகிட்டு இருக்கீங்கள! சரி அப்படியே maintain பண்ணுங்க!

Dreamzz said...

//எனவே இந்த மூனு போட்டியாளர்களில் கவிதைக்கு தனிகடை வைத்த தங்கம்! என்ற பட்டத்தை இவர் தட்டி செல்கிறார்.//
பொருத்தமான முடிவு! அசத்தல்! :D

G3 said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. வேதா ட்ரீம்ஸ் கூட போட்டிக்கு நானா? உங்க பாசத்துக்கு நான் அடிமை.. ஆனாலும் இப்படி அநியாயத்துக்கு நீங்க அவங்கள இன்சல்ட் பண்ணி இருக்க வேணாம் :P

ரசிகன் said...

அம்பியண்ணா பதிவு ரெண்டு நாள் லேட்டாயிட்ட மாதிரி இருக்கே?.:)

// நல்லா எழுதி இருக்கீங்க! அல்லது சிறந்த பதிவு!னு நீங்க ஒரு கமண்ட் போட்டா உங்கள் மீது பாச மழை பொழிவார் இவர். போன் போட்டு சொன்னா நீங்க அனானியா இருந்தா கூடா உங்க பேர்ல தனி பதிவு போட்டு விடுவார்.///

அவ்வ்வ்.....

ஹா... ஹா....ஹிஹி... :)))

நோ கமெண்ட்டு..(பின்ன, வாங்கிக் கட்டிக்கறது யாரு?)

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா. இது நல்லா இருக்கே! :-)))

பாராட்டுக்கு பாராட்டும் ஆச்சு.. ஆப்புக்கு அப்பும் ஆச்சு..

கலக்கல் அண்ணா. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அப்படியே உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அதுக்கு ஒரு பதிவு போடணும். அதுக்கு கோப்ஸ்தான் சரியான ஆள். ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

13------- ரிசெர்வ்ட் ஃபார் கோப்ஸ். ;-)

ரசிகன் said...

// இதைப் போல உங்களை கவர்ந்த பிளாக்கர்களுக்கு நீங்களும் அவார்டுகளை வாரி வழங்கலாமே! :)//

ஆப்பு வைக்கும் அண்ணலே.. வாழ்க வாழ்க...

நீங்க தானுங்கோ...

டிரிம்ஸ் பாத்துக்கிட்டிங்களா? என்னிய போயி...அவ்வ்வ்வ்வ்வ்.....

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அலோ...என்னா நடக்குது இங்க?
நாரதா இன்று உனக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா? :-)))

//அண்ணாச்சி தமிழ்ல சும்மா லெப்ட், ரைட்டுனு யூ டர்ன் போட்டு வருவாரு//
லெப்ட், ரைட் - எல்லாம் தமிழா? இருடீ...எங்க சொல்லணுமோ அங்க சொன்னாத் தான் அடங்குவ! :-))

//அண்ணாச்சியை வெச்சு ஏதேனும் காமடி பண்ணலாம்னு நினைச்ச சங்கத்து சிங்கங்களுக்கு, அதிர்ச்சி வைத்தியம் குடுத்துட்டார் என்பது டாக் ஆஃப் தி தமிழ்மணம்//

அடப்பாவிங்களா...
இப்படி ஒரு
டாக்கு-இருக்குன்னு
சாக்கு சொல்லிக்கிட்டி இருக்கீயளா?
புலியே...சங்கத்துச் சிங்கமே!
இதைக் கேட்டும் மறுக்காமப் போனா, சிங்கத்துக்குப் பங்கம் வராதா?
சீறு, மீறு, அம்பியைத் தீரு!

//எனவே இந்த வருடத்தின் பழம் நீயப்பா! அவார்டை போட்டியின்றி தட்டி செல்கிறார்//

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே!
அந்த பழம் தானே? சூப்பரு! அந்த மாதிரி ஸ்ட்ராபெர்ரி எல்லாம் எனக்கே கொடுத்துடுங்க! :-))

வேதா said...

/திருப்பதி லட்டு பத்தி நம்மாழ்வார் என்ன சொல்றாரு? புளியோதரை பத்தி பெரியாழ்வார் என்ன சொல்றாரு?னு அ முதல் ஃ வரை சும்மா பிரிச்சு மேஞ்சுபுடுவாரு. :)/
அதான உம்ம புத்தி எப்டி போகுது பாருங்க அதையெல்லாம் கரக்டா நோட் பண்ணிடுவீங்களே :)

/அட சே! நாமளும் தான் பதிவு எழுதறோமே?னு சில(பல)சமயம் வெக்கபட வெச்சுபுடுவாரு./
ஆங் இது சொன்னீங்களே இது தான் கரெக்ட் :)

/அண்ணாச்சியை வெச்சு ஏதேனும் காமடி பண்ணலாம்னு நினைச்ச சங்கத்து சிங்கங்களுக்கு, வெங்கல கடையில் யானை புகுந்த கதையா நமது அண்ணன் அதிர்ச்சி வைத்தியம் குடுத்துட்டார் /
ஆமா சான்ஸே இல்ல காமெடில பூந்து பட்டைய கிளப்பிட்டாரு :D

/இவங்க போடற மொக்கை தான் மக்கள் மனசுல நிலைச்சு இருப்பதால் (மொக்கை) பதிவுச் சூறாவளி - 2007 என்ற அவார்டை இவர் போட்டியின்றி தட்டி செல்கிறார்/
எங்க தானை தலைவி, தனிப்பெரும் தலைவலி சீசீ தலைவி, எப்பவும் உங்க பேரு எல்லா பதிவுகளிலும் வர்ர மாதிரி உங்களை இந்த பதிவுலுகத்துக்கே அடையாளம் காட்டினவரின் கருணையுள்ளத்தை புரிந்துக்கொள்ளாமல் இப்டி ஒரு பட்டத்தை கொடுத்ததை எதிர்த்து அவர் சிஷ்யகேடிகள் அனைவரும் கன்னாபின்னாவென்று கண்டிக்கிறோம் :D

/இவர் கையில் கிடைத்தால் "கை வண்ணம் இங்கு கண்டேன்! கால் வண்ணம் அங்கு கண்டேன்!" என நடுவில் மானே! தேனே போட்டு தேவதைகளை ஊர்வலம் வர செய்து விடுவார்./

இவரது மன நிலைக்கு ஏற்ப திரிஷா சிரிப்பார் அல்லது முறைப்பார்ஷ்யப்பா இதுக்கே தொண்டை வத்திப்போச்சு சோடா இருந்தா கொடுங்க அதை குடிச்சுட்டு நம்ம தத்துவஞானி மேல எறியனும் :D
எவ்வளவோ சொல்லி (மிரட்டி) பார்த்தும் அடங்க மாட்டேங்குறான் இந்த வலையுலக தபூசங்கர் :)

வேதா said...

/இவர் போகாத ஹோட்டல் கிடையாது. இவருக்கு ட்ரீட் தந்து ஓட்டலில் மாவு ஆட்டாத பதிவரும் கிடையாது./
ஹாஹா சென்னை வரும் பதிவர் மக்களே உஷாரா இருந்துக்கோங்க ;)

/ஆனா கவிதைக்கு தனி கடை வைத்து, தோணும் போதேல்லாம் கவிதைய போட்டு அது குப்பை தொட்டியோ, ரோஜா செடியோ எத பத்தி வேணாலும் பதிஞ்சு விடிவார். /
யப்பா உள்குத்தெல்லாம் பயங்கரமா இருக்கு :) அதென்ன எப்பப்பாரு இப்டி புலம்பறீங்க நீங்க வெள்ளிக்கிழமைகளில் பதிவெழுதும் காலத்துல ஒரு கவிதை எழுதி தர முடியுமான்னு என்னைய கேட்டு நான் எழுதி தராததனால இப்டி ஒரு கொல வெறியா? ;D

கீதா சாம்பசிவம் said...

"இல்லாட்டி, அமர்நாத் யாத்ரையில் குதிரை ஏறி இவங்க பாரம் தாங்காமல் அது குப்புற விழுந்த கதைய சொல்லவா? "

இதுக்குத் தான் பதிவை நல்லாப் படிக்கணும்கிறது, நான் அமர்நாத் போனதா எங்கே சொல்லி இருக்கேன்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்

கீதா சாம்பசிவம் said...

VSK said...
'உன் குடுமி என் கையில இருக்கு!'ன்னு அடிக்கடி மிரட்டுறதுல அர்த்தம் இருக்கோன்ற நினைப்பை ஊர்ஜிதப்படுத்திய பதிவு!
:))

தேர்வுகள் அனைத்தும் சூப்பர்!

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கீதா சாம்பசிவம் said...

இவங்க போடற மொக்கை தான் மக்கள் மனசுல நிலைச்சு இருப்பதால் (மொக்கை) பதிவுச் சூறாவளி - 2007 என்ற அவார்டை இவர் போட்டியின்றி தட்டி செல்கிறார்/
எங்க தானை தலைவி, தனிப்பெரும் தலைவலி சீசீ தலைவி, எப்பவும் உங்க பேரு எல்லா பதிவுகளிலும் வர்ர மாதிரி உங்களை இந்த பதிவுலுகத்துக்கே அடையாளம் காட்டினவரின் கருணையுள்ளத்தை புரிந்துக்கொள்ளாமல் இப்டி ஒரு பட்டத்தை கொடுத்ததை எதிர்த்து அவர் சிஷ்யகேடிகள் அனைவரும் கன்னாபின்னாவென்று கண்டிக்கிறோம் :D

ரிப்பீஈஈஈஇட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏ

கீதா சாம்பசிவம் said...

"யப்பா உள்குத்தெல்லாம் பயங்கரமா இருக்கு :) அதென்ன எப்பப்பாரு இப்டி புலம்பறீங்க நீங்க வெள்ளிக்கிழமைகளில் பதிவெழுதும் காலத்துல ஒரு கவிதை எழுதி தர முடியுமான்னு என்னைய கேட்டு நான் எழுதி தராததனால இப்டி ஒரு கொல வெறியா? ;D"

ஆஹா, பதிவுலக மக்களே, உண்மை எப்படி வெளியே வந்துடுச்சு பாருங்க, அம்பிக்குத் தம்பி தான் கோஸ்ட் ரைட்டர்னா, வேதா(ள்)வுமா??????????????????

"

ambi said...

//எத்தன பெயரு எத்தனை அவார்ட் வாங்கினாலும் நம்ம தலைவலி வாங்கின மாதிரி வருமா
//

@புலி, அதானே! அப்படி சொல்லு புலி.. :D

//இப்போ சண்டே நாயகன்??????
//
@gops, ஹிஹி, வெள்ளி கிழமை தான் போஸ்ட் பண்ணா இருந்தேன், வீட்டுல வேலை அதிகம். அதான்! :p

//தேர்வுகள் அனைத்தும் சூப்பர்!
//
@VSK, ஆஹா! வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றேன். தன்யனானேன் பிரபு! :D

//இவங்களை பாத்து சொன்னத தப்பா நினைச்சுகிட்டு இருக்கீங்கள!//

@dreamz, இவங்களையும் பாத்து சொல்ற!னு எங்களுக்கு தெரியும் ராசா! :p

//வேதா ட்ரீம்ஸ் கூட போட்டிக்கு நானா? உங்க பாசத்துக்கு நான் அடிமை.. //
@G3 akka, அடடா! என்னே உங்க தன்னடக்கம். :p

//அவ்வ்வ்.....

ஹா... ஹா....ஹிஹி... :)))

நோ கமெண்ட்டு..(பின்ன, வாங்கிக் கட்டிக்கறது யாரு?)
//

@rasigan, நீ தனியா கமண்டு போடாவிட்டாலும், அந்த அவ்வ்வ் & சிரிப்பையே பாட்டி கமண்டா எடுத்துகிட்டாங்களாம். :p

//பாராட்டுக்கு பாராட்டும் ஆச்சு.. ஆப்புக்கு அப்பும் ஆச்சு..
//
@my friend, ஆப்பா எங்கமா? :D
படம் குடுத்து உதவிய உனக்கு மிக்க நன்றி :p

//அப்படியே உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அதுக்கு ஒரு பதிவு போடணும். அதுக்கு கோப்ஸ்தான் சரியான ஆள்.//

அடடா! பத்த வெச்சியே மலேசிய மாரியாத்தா! :))

ambi said...

//13------- ரிசெர்வ்ட் ஃபார் கோப்ஸ். ;-)
//
அடடா என்ன ஒரு பாசம்! :p

//ஆப்பு வைக்கும் அண்ணலே.. வாழ்க வாழ்க...//

கீதா பாட்டி! நோட் திஸ் பாயிண்ட் :))

//நாரதா இன்று உனக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா?//

@KRS, ஹிஹி, ரொம்ப நாள் ஆசை இது. இன்னிக்கு தான் நிறைவேறியது. :p

//இருடீ...எங்க சொல்லணுமோ அங்க சொன்னாத் தான் அடங்குவ!//

இது வேறயா? ஏற்கனவே அவ்வ்வ்! :)

//இப்படி ஒரு
டாக்கு-இருக்குன்னு
சாக்கு சொல்லிக்கிட்டி இருக்கீயளா?
//

ஆமா! ஆமா! வேணுமினா அவங்க தல கைப்பு அங்கிள கூட கேட்டு பாருங்க. :))

//ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே!
அந்த பழம் தானே?//

பழம் மட்டும் தானே கேட்டீங்க? :p

//அதையெல்லாம் கரக்டா நோட் பண்ணிடுவீங்களே //
@veda, இதை விட நமக்கு என்ன வேலை? :p

//இப்டி ஒரு பட்டத்தை கொடுத்ததை எதிர்த்து அவர் சிஷ்யகேடிகள் அனைவரும் கன்னாபின்னாவென்று கண்டிக்கிறோம் //

கண்டிக்கற மாதிரி தெரியலையே! ரொம்ப சந்தோஷமா எதோ எழுதி இருக்கற மாதிரி இல்ல இருக்கு. :))

//எவ்வளவோ சொல்லி (மிரட்டி) பார்த்தும் அடங்க மாட்டேங்குறான் இந்த வலையுலக தபூசங்கர் //

ROTFL :)

//நீங்க வெள்ளிக்கிழமைகளில் பதிவெழுதும் காலத்துல ஒரு கவிதை எழுதி தர முடியுமான்னு என்னைய கேட்டு நான் எழுதி தராததனால //

ஹிஹி, நல்ல வேளை, நீங்க எழுதி தரல. :D

//நான் அமர்நாத் போனதா எங்கே சொல்லி இருக்கேன்?//
@geetha paati, ஆனா, குதிரை குப்புற விழுந்தது!னு சொல்லி இருக்கீங்க இல்ல. :p

Gopalan Ramasubbu said...

"பிளாகர் உதவியுடன் தங்கமணியை கண்டுபிடித்தோர் சங்கத்தின் தலைவர் அம்பி" அவர்களே,(இது தான் தானைத்தலைவர்,அம்பி குருவிற்கு சிஷ்யனின் 2007 க்கான..இல்லை இல்லை நிரந்திர அவார்ட்)

எப்படி இருக்கீங்க?ரொம்ப நாள் ஆச்சு..லாங் லாங் அகோ.. ஸொ லாங் அகோ எப்படி எல்லாம் ஜொல்லினீங்க..பஞ்சாபிய பத்தி ஒரு அப்டேட் உண்டா ஒன்னா..அடப் போய்யா.

மங்களூர் சிவா said...

//
இவர் போகாத ஹோட்டல் கிடையாது. இவருக்கு ட்ரீட் தந்து ஓட்டலில் மாவு ஆட்டாத பதிவரும் கிடையாது. இவரும் ஒரு போட்டியாளர்.
//
எப்பா நல்ல வேளை நான் ரெண்டு தபா மெட்ராசுக்கு போயும் நான் எஸ்கேப்பு

ஏம்மா இவ்ளோ நல்லவிங்களா நீங்க!!!!

Arunkumar said...

Award super..

//
"பிளாகர் உதவியுடன் தங்கமணியை கண்டுபிடித்தோர் சங்கத்தின் தலைவர் அம்பி" அவர்களே,(இது தான் தானைத்தலைவர்,அம்பி குருவிற்கு சிஷ்யனின் 2007 க்கான..இல்லை இல்லை நிரந்திர அவார்ட்)
//
LOL :-)

மதுரையம்பதி said...

அவார்டெல்லாம் சூப்பருங்க அம்பி.... :-)

////போன் போட்டு சொன்னா நீங்க அனானியா இருந்தா கூடா உங்க பேர்ல தனி பதிவு போட்டு விடுவார்.////

கலக்கலோ கலக்கல்...

ambi said...

@gops, அடடா! கரக்ட்டா வர வேண்டிய நேரத்துக்கு வந்து எனக்கு ஆப்பு(அவார்டு) தரும் சிஷ்ய கேடியே! உன் வரவு நல்வரவாகுக!

//பஞ்சாபிய பத்தி ஒரு அப்டேட் உண்டா ஒன்னா..//

ஏன்பா! இதை தனியா மெயிலுல கேட்டிருந்தா ஜொள்ளி இருக்க மாட்டேனா? ஏற்கனவே சொல்லி சொல்லி அடி விழுது. வீட்ல கமண்ட் செக்க்ஷன் பாத்தா இன்னிக்கு கச்சேரி தான்! நல்ல இருப்பா! :))

//நல்ல வேளை நான் ரெண்டு தபா மெட்ராசுக்கு போயும் நான் எஸ்கேப்பு
//
@M'glre siva, அப்படியா? பெரிய ஆள் தான் நீங்க. ஆனா, ஜி3 அக்கா இப்ப நோட் பண்ணிப்பாங்க பாருங்க. :p

@அருண், என்ன சிரிப்பு?சிறுபிள்ளதனமா? :))

//கலக்கலோ கலக்கல்...//
@M'pathi, ஆமா! ஆமா! இப்ப தான் நீங்க எங்க கட்சி! :p

கீதா சாம்பசிவம் said...

"//கலக்கலோ கலக்கல்...//
@M'pathi, ஆமா! ஆமா! இப்ப தான் நீங்க எங்க கட்சி! :p"

ஹாஹாஹாஹா, அசட்டு, அம்மாஞ்சி, அம்பியே, மதுரையம்பதிதான் இப்போதைய ஒற்றர் படைத் தலைவர், தெரிஞ்சுக்குங்க, காரியத்தோட தான் உங்க பக்கம் வந்திருக்கார், அதுவும் நான் சொல்லி! :P :P

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信