Thursday, August 02, 2007

மாமியார் வீடு

பொதுவாக, கல்யாணம் முடிந்து ஒன்று அல்லது ரெண்டு மாதம் கழித்து எல்லா ரங்குகளும் கண்டிப்பாக தங்கள் மாமியார் வீட்டுக்கு போயே தீர வேண்டும். தானாக கூட்டி போனால் தங்கமணியிடம் ராஜ மரியாதை தான். ஆபிஸ் ஆணிகளில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தால், முதலில் தங்குகளிடமிருந்து "என்னங்க! நாம வாங்கி வந்த சாம்பார் பொடி, ரச பொடி, பருப்பு பொடி, மூக்கு பொடி எல்லாம் காலியாக போகுது. அதனால நாம ஒரு எட்டு நம்ம அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாம்!"னு ஒரு வேட்பு மனு தாக்கல் ஆகும்.
அடுத்த வாரம், சாம்பார், ரசத்தில் உப்பு புளி எல்லாம் குறைய தொடங்கும்(என்ன ஒரு வில்லதனம்?). அப்படியும் புரியாத மாங்கா மண்டைகளுக்கு கடைசியாக ரிவிட்டு தான்.
எப்படா மாப்ள வர போறார்? நம்ம பொண்ண எப்படி பாத்துக்கறார்?னு தங்கமணி சைடுலயும் அவங்க பெரியம்மா, சித்தி, மாமா, மாமினு ஒரு பெரும் படையே ரொம்ப ஆவலா இருக்கும்.

நல்ல வேளை, நானே முந்திக் கொண்டேன். ஒழுங்கா இருபது நாளுக்கு முன்னாடி டிக்கட் எல்லாம் புக் பண்ணி, டேமேஜரிடம் புளுகி லீவு எல்லாம் வாங்கிண்டு, டிரெயின் ஏறியாச்சு. நம்ம கோச்சுல லோயர் பர்த், மிடில் பர்த் யாரு? என்ன வயசு? போன்ற தங்கமணியின் பூரிக் கட்டைக்கு வேலை குடுக்கும் அதி முக்யமான தகவல்களை எல்லாம் கூட சர்வ ஜாக்ரதையாக தவிர்த்து விட்டு குட் நைட் சொல்லி(தங்கமணிக்கு மட்டும் தான் சாமி!) உறங்கி விட்டேன்.
என் தங்கமணி இருக்கும் ஏரியா இருக்கே, அடடா! ஒரு ஆட்டோ பிடிக்கறதுக்கே ஆட்டோல தான் போகனும். போயி இறங்கியதும், நல்ல குளியல் போட்டு டிபனுக்கு உக்காந்தாச்சு. என் புத்தி தெரிஞ்சோ என்னவோ, முதல் ஐட்டமே கேசரி சுட சுட வந்தது. அப்புறம் ஏன் நான் வாய தொறக்க போறேன்? நானுன்டு என் கேசரியுண்டு!னு கர்மமே கண்ணாக இருந்தேன்.

கல்யாணம் ஆகி முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு போனால் சில விசாரிப்புக்கள் கண்டிப்பாக இருக்கும்.
முதலில், பிளாடில் இருக்கும் ஒரு பாட்டி தான் தொண்டையை செருமி கொண்டு பஞ்சாயத்தை ஆரம்பிப்பார். என்ன? வீட்டுல ஏதும் விஷேசம் வருதா?னு ஒரு பிட்டு போட்டு விட்டு நம்மை உற்று நோக்குவார்.
இல்லாவிட்டால், தங்குவின் வாயை கிண்டுவார்கள். என்னமா? மாப்ள நன்னா கவனிசுக்கறாரா? அப்புறம், என்ன விஷயம்...? முகம் மலர்ச்சியா இருக்கே! குழந்தைகள் சந்தோஷமா இருந்தா சரி! மாப்ள! என்ன வாயவே தொறக்க மாட்டீங்கறீங்க?
- யப்பா! சிபிஐ, சிபிஸிஐடி எல்லாம் பிச்சை வாங்கனும் இவா கிட்ட.
ஒரு வழியாக இவர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி வந்தால் அடுத்த ஆப்பு தயாராக இருக்கும். மங்கையர் மலர், அவள் விகடன் போன்ற புத்தகங்களில் வந்திருக்கும் சமையல் ஐட்டங்களை மாப்ளை மீது டெஸ்ட் பண்ணியே தீருவது! என கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருக்கும் தங்குவின் சாதி சனங்கள் அவரவர் ரெஸிப்பிப்புக்கு தகுந்தவாறு நமது டைம் டேபிளை முடிவு செய்து விடுவார்காள்.
காலை சித்தி வீட்டில் புதினா பொங்கல், கத்ரிக்கா கொச்சு
மதியம் பெரியம்மா வீட்டில் அரைக்கீரை வடை கடலை மாவு பாயசத்துடன் சாப்பாடு
மாலை மாமா வீட்டில் முந்திரி கேக், முள்ளங்கி போண்டா
இரவு ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியல! ஜி3 அக்ககிட்ட அடுத்த தடவ டியூசன் எடுத்துக்கனும்.

இதுல எல்லாம் எஸ்கேப் ஆகி வந்தா அடுத்தது, நகர்வலம் செய்யும் கோரிக்கை வந்து சேரும். ரங்குக்களின் பர்ஸ்களுக்கு எதிரிகளான உஸ்மான் ரோடு, டி. நகர், பனகல் பார்க், பாண்டி பஜார், லஸ் கார்னர் போன்ற ஏரியாக்களை கவனமாக தவிர்த்து பார்த்தும் ஸ்பென்ஸரை தவிர்க்க முடியலை.
அதுக்கும் காரணம் இருக்கு. ஏற்கனவே பேசியபடி எஸ்கேஎம் அக்காவை அங்க தான் சந்திக்க முடிவானது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் எல்லை தகராறு, ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு சரிவு, நடந்து முடிந்த குடியரசு தேர்தல் போன்ற விஷயங்களை பற்றியெல்லாம் ஒன்னும் நானும் அக்காவும் விவாதிக்கலைனு தான் சொல்ல வந்தேன். அதுக்குள்ள எதுக்கு டென்ஷன் ஆறீங்க? எதுனாலும் பேசி தீத்துக்கலாம்.
இட்டிலிக்கு சரியான மேட்ச் தேங்காய் சட்னியா தக்காளி சட்னியா? மாவாட்டினதுக்கு அப்புறமா எவ்ளோ உப்பு போடனும்? தயிரை புளிக்க வைப்பது எப்படி? போன்ற அதிமுக்யமான விஷயங்களில் அக்காவின் ஆலோசனை கோரப்பட்டது. போகிற போக்கில், எனக்கு எப்படியெல்லாம் ஆப்பு வைக்கலாம்? என்னென்ன ஷாபிங்க் செய்யலாம்? என கொசுறாக அக்கா தங்குவிடம் கொளுத்தி விட்டு வந்த வேலையை செவ்வனே செய்து விட்ட திருப்தியில் நடையை கட்டினார்.
இப்படியாகத் தானே மாமியார் வீட்டின் விஜயத்தை வெற்றிகரமாக முடித்து, மறக்காமல் சாம்பார் பொடி, ரச பொடி, பருப்பு பொடி, புண்ணாக்கு பொடி, மூக்கு பொடி எல்லாம் பொட்டலம் கட்டிக் கொண்டு உங்கள் அம்பி பெங்களுர் வந்து சேர்ந்தான்.

60 comments:

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
வெட்டிப்பயல் said...

post super

வெட்டிப்பயல் said...

இளா டெலிட் பண்ணிட்டதால நான் தான் முதல் ஆள் :-)

வெட்டிப்பயல் said...

//புண்ணாக்கு பொடி, மூக்கு பொடி எல்லாம் பொட்டலம் கட்டிக் கொண்டு //

இதை கூடவா சமையலுக்கு பயன்படுத்தறீங்க???

Gopalan Ramasubbu said...

குருனா நீர்தான்யா..மாமியார் வீட்டுக்குப் போய் நல்லா மூக்கு பிடிக்க சாப்டுட்டு வந்ததை இப்படி பாலீஈஈஈஈஈஈஸ்ஸா சொல்றதுல ஆகட்டும்..தங்கமணிகிட்ட கடி வாங்கி சே, சாரி.. அடிவாங்கி ..கை வீங்கி ப்ளாக் எழுதமுடியாம போவதை சொல்றதாகட்டும்..அம்பி குருவை அடிச்சுக்க ஆளே இல்லை..வாழ்க வளமுடன். :)

பின்குறிப்பு: அடி தாங்க முடியலைனா செய்தி சொல்லி அனுப்புங்க குரு..ஆஸ்திரேலியாவுக்கு டிக்கட் எடுத்து அனுப்பறேன்.என்ன இருந்தாலும் குருபக்தினு ஒன்னு இருக்கில்ல :P

Unknown said...

YEAHHHHHHHHH!! 5TH COMMMENT!!!

Blogeswari said...

///ஒரு ஆட்டோ பிடிக்க ஆட்டோலதான் போகணும்... ///
Ha Ha Ha.. asusual Ambi.. you have me in splits :)

மங்கையர் மலர், அவள் விகடன் ரெசிபிஸ் உனக்கு கேவலமா போயிடுத்தா அம்பி? "குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க" அப்டீன்னு Title card எல்லாம் போட்டு ரெசிபி பப்ளிஷ் பண்றது உன்னை மாதிரி ஆளுங்க மேல அந்த முள்ளங்கி ஐஸ்க்ரீம், முந்தாநாள் சாதத்துல செஞ்ச போண்டா போன்ற ஐட்டங்களை ட்ரை பண்ணதான்

நீ எங்க வீட்டுக்கு அடுத்தவாட்டி வரும்போது கத்திரிக்காய் அல்வாவும், சுண்டைக்காய் பிரதமனும் பண்ணி போடறேன்.. சரி, எப்ப எங்க ஊட்டுக்கு வர with தங்கமணி ofcourse!

PS: 7வது கமெண்ட்... உனக்கு ஏழரை நாட்டு சனி ஆரம்பிச்சுடுத்து.. கவலைப்படாத ப்ளாகேஸ்வரிக்கு அடுத்த தடவை ஃபர்ஸ்ட் கமெண்ட்
போடும் பாக்கியம் தந்தால் பாவம் நீங்கும்

CVR said...

ROFL post!!! (as always)

Rock on!! B-)

Anonymous said...

//குருனா நீர்தான்யா..மாமியார் வீட்டுக்குப் போய் நல்லா மூக்கு பிடிக்க சாப்டுட்டு வந்ததை இப்படி பாலீஈஈஈஈஈஈஸ்ஸா சொல்றதுல ஆகட்டும்..தங்கமணிகிட்ட கடி வாங்கி சே, சாரி.. அடிவாங்கி ..கை வீங்கி ப்ளாக் எழுதமுடியாம போவதை சொல்றதாகட்டும்..அம்பி குருவை அடிச்சுக்க ஆளே இல்லை..வாழ்க வளமுடன். :)
//

Repeatttuu.. Guru va Anna nu replace pannikonga!!

Anonymous said...

Round aa 10!!

mgnithi said...

Attendance ma...

mgnithi said...

//போகிற போக்கில், எனக்கு எப்படியெல்லாம் ஆப்பு வைக்கலாம்? என்னென்ன ஷாபிங்க் செய்யலாம்? என கொசுறாக அக்கா தங்குவிடம் கொளுத்தி விட்டு வந்த வேலையை செவ்வனே செய்து விட்ட திருப்தியில் நடையை கட்டினார்.
//

ithukku peru thaan sontha selavila sooniyam vachikirathu.. ha ha

mgnithi said...

//காலை சித்தி வீட்டில் புதினா பொங்கல், கத்ரிக்கா கொச்சு
மதியம் பெரியம்மா வீட்டில் அரைக்கீரை வடை கடலை மாவு பாயசத்துடன் சாப்பாடு
மாலை மாமா வீட்டில் முந்திரி கேக், முள்ளங்கி போண்டா
//

ithula entha item ellam nalla irunthuchu?

துளசி கோபால் said...

:-))))))


ஆனா எல்லா 'ரங்கு'களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்கறதில்லையாக்கும்:-)

dubukudisciple said...

poi ocla sambar podi,rasapodi ellam vanginathuku ippadi oru build upa??

adu seri namaaku thaan ilavasamna pakathu veetukum serthu kepome.. appuram en mooku podi,punnaku podi ellam vanga mate

Sumathi. said...

ஹாய் அம்பி,

//காலை சித்தி வீட்டில் புதினா பொங்கல், கத்ரிக்கா கொச்சு
மதியம் பெரியம்மா வீட்டில் அரைக்கீரை வடை கடலை மாவு பாயசத்துடன் சாப்பாடு
மாலை மாமா வீட்டில் முந்திரி கேக், முள்ளங்கி போண்டா
//

அம்பி, இப்ப தான் எனக்கு புரிஞ்சுது, கீதா மாமி ஏன் அப்படி ஒரு போஸ்ட் போட்டாங்கன்னு.

Sumathi. said...

ஹாய் அம்பி,

//சாம்பார் பொடி, ரச பொடி, பருப்பு பொடி, மூக்கு பொடி//

அட..ஆச்சர்யமா இருக்கே... மூக்குப் பொடி ரெசிபி.. ம்ம்ம்.. புதுமையா இருக்கே. கொஞ்சம் சொல்லக் கூடாதா?

இதுல்லாம் வேற சாப்டுட்டு.. நீங்க எப்படி தான் இங்க வந்து சேர்ந்தீங்க?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//காலை சித்தி வீட்டில் புதினா பொங்கல், கத்ரிக்கா கொச்சு
மதியம் பெரியம்மா வீட்டில் அரைக்கீரை வடை கடலை மாவு பாயசத்துடன் சாப்பாடு
மாலை மாமா வீட்டில் முந்திரி கேக், முள்ளங்கி போண்டா
இரவு ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியல!//

இது எல்லாம் நீங்க எழுதிக் கொடுத்த Requesition...
ஆனா...உங்களுக்கு ஆடி மாசம் கூழு தான் ஊத்தினாங்க-ன்னு கீதாம்மா ஒரு ஃபேக்ஸ் மெசேஜ் அனுப்பிச்சி இருந்தாங்க, அம்பி!

இதில் எது உண்மை? :-)

Anonymous said...

assathal,summa recipe pera kettale adhirudu illa.kuduthu vecha mavarasan sir neenga.mamiyar veetu gavanippula innum anchu kilo erinadhu sollaveyilla???????
nivi.

Anonymous said...

eppadiyum sambar podi, mookupodi rasapodi, ellam ungavasathikuthaan enru thangamani support sangam sarpil sollikolkiren.oorukku vandhu samaikka udhavum enbathai therinchu thane munnadiye mamiyar veetu vijaythukku book senjinnga.rightaaa*********.
nivi.

Anonymous said...

mamiyar veetikku vetri vijayam seidhu vizhu punnudan vandha engal ambi raaja avarkalai varaverkiren!!!!!!!!!!!idhe madhiri pala vetri vijayangal nadakka vazhthukkirom.
nivi.

Anonymous said...

post superoooooo super.unga thangamani ungalai samalikkum(aaapu veikkum nnu padikka koodathu)pudhu vazhikkalai replenish seidhu vandhiruppar enru nambukirom.
nivi.

Anonymous said...

mangayar malar aval vikatan neenga kattayam padikkanum,nalla recipe eppa dhan kathupeenga?
nivi.

Dreamzz said...

aahaa! ithula ivlo kashtam irukutha!

Dreamzz said...

25!

Dreamzz said...

//போகிற போக்கில், எனக்கு எப்படியெல்லாம் ஆப்பு வைக்கலாம்? என்னென்ன ஷாபிங்க் செய்யலாம்? என கொசுறாக அக்கா தங்குவிடம் கொளுத்தி விட்டு வந்த வேலையை செவ்வனே செய்து விட்ட திருப்தியில் நடையை கட்டினார்/

ROFL!

Ponnarasi Kothandaraman said...

Yen blog romba thooram pola iruku :P

Hilarious post! :) Maamiyar paakanum intha post :D

மெளலி (மதுரையம்பதி) said...

ஓசில பொடிகளை எல்லாம் வாங்கிக்கொண்டு, மூக்குப்பொடின்னு கிண்டல் வேற.....

Boston Bala said...

:))

Geetha Sambasivam said...

ஹா ஹா ஹா, சுமதி, நான் எழுதினதின் காரணம் இப்போவாவது புரிந்து கொண்டாயா? அருமை சிஷ்யையே, இன்னும் உனக்குப் போதிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக வரும், கண்டு மகிழவும்!

@ஆப்பு, மாமியார் கிட்டே அடி வங்கினதைக் கூட இப்படி நாசூக்காச் சொல்ல உங்க ஒருத்தராலே தான் முடியும். அது சரி, மூக்குப் பொடி பழக்கம் எத்தனை வருஷமா? தங்கு கிட்டே இருந்து மெயில் வந்திருக்கு, கேட்கச் சொல்லி! இந்த மாட்டர் தானா?

தி. ரா. ச.(T.R.C.) said...

அடப்பாவி நம்பவீட்டுக்கு வந்து மொட்டை மாடியில் நன்னா விருந்து சாப்பிட்டதை அப்படியே அமுக்கிட்டியே. அதான் கை அப்படி போயிடுத்து. அதுக்கும் மருந்து வேறே மாமி கொடுத்தாளே அதையும் மறந்துட்டே. ஏன் கீதா மேடத்துக்கிட்டெ அத்தனை பயம்மா
கிண்டி வந்தேன்னு சொல்லறதுக்கு
தங்கமணி நீ கூடயா இப்படி.

Arunkumar said...

super post guru.. ungalaala mattum thaan ippdi ellam ezhuda mudiyum :)

Arunkumar said...

//
நம்ம கோச்சுல லோயர் பர்த், மிடில் பர்த் யாரு? என்ன வயசு? போன்ற தங்கமணியின் பூரிக் கட்டைக்கு வேலை குடுக்கும் அதி முக்யமான தகவல்களை எல்லாம் கூட சர்வ ஜாக்ரதையாக தவிர்த்து விட்டு குட் நைட் சொல்லி(தங்கமணிக்கு மட்டும் தான் சாமி!) உறங்கி விட்டேன்.
//

LOL :)
eppidi irundha neenga
ippidi aagitinga !!!

Arunkumar said...

//
- யப்பா! சிபிஐ, சிபிஸிஐடி எல்லாம் பிச்சை வாங்கனும் இவா கிட்ட.
//
pinna...
parambara parambaraya idhe kostins thaane :P

Arunkumar said...

//
அவரவர் ரெஸிப்பிப்புக்கு தகுந்தவாறு நமது டைம் டேபிளை முடிவு செய்து விடுவார்காள்.
//
very true.. aiyo no personal experience.. my brother-in-law's experience only :)

Arunkumar said...

//
இட்டிலிக்கு சரியான மேட்ச் தேங்காய் சட்னியா தக்காளி சட்னியா? மாவாட்டினதுக்கு அப்புறமா எவ்ளோ உப்பு போடனும்? தயிரை புளிக்க வைப்பது எப்படி? போன்ற அதிமுக்யமான விஷயங்களில் அக்காவின் ஆலோசனை கோரப்பட்டது.
//
ROTFL thala :)

Swamy Srinivasan aka Kittu Mama said...

அப்புறம் ஏன் நான் வாய தொறக்க போறேன்? நானுன்டு என் கேசரியுண்டு!னு கர்மமே கண்ணாக இருந்தேன்.


ambi, oru doubt ! vaai thorakama eppadi kesari saapiteenga ??

Swamy Srinivasan aka Kittu Mama said...

காலை சித்தி வீட்டில் புதினா பொங்கல், கத்ரிக்கா கொச்சு
மதியம் பெரியம்மா வீட்டில் அரைக்கீரை வடை கடலை மாவு பாயசத்துடன் சாப்பாடு
மாலை மாமா வீட்டில் முந்திரி கேக், முள்ளங்கி போண்டா

ssssssssss...naakula echal oorudhe !
oru vettu vetineenganu sollunga.

Swamy Srinivasan aka Kittu Mama said...

மறக்காமல் சாம்பார் பொடி, ரச பொடி, பருப்பு பொடி, புண்ணாக்கு பொடி, மூக்கு பொடி எல்லாம் பொட்டலம் கட்டிக் கொண்டு உங்கள் அம்பி பெங்களுர் வந்து சேர்ந்தான்.


punnaku podi ya..correctana podiya thaan unga thangamani amma kitendhu vaangitu vandhirukaanga.

Swamy Srinivasan aka Kittu Mama said...

என்ன? வீட்டுல ஏதும் விஷேசம் வருதா?னு ஒரு பிட்டு போட்டு விட்டு நம்மை உற்று நோக்குவார்.
இல்லாவிட்டால், தங்குவின் வாயை கிண்டுவார்கள். என்னமா? மாப்ள நன்னா கவனிசுக்கறாரா? அப்புறம், என்ன விஷயம்...? முகம் மலர்ச்சியா இருக்கே! குழந்தைகள் சந்தோஷமா இருந்தா சரி! மாப்ள! என்ன வாயவே தொறக்க மாட்டீங்கறீங்க?
- யப்பா! சிபிஐ, சிபிஸிஐடி எல்லாம் பிச்சை வாங்கனும் இவா கிட்ட.

superaa soneenga. very very true.! idhelam mattum evalavu varusham aanalum maarave maaradhu.!
ROTFL Post ! :)

Swamy Srinivasan aka Kittu Mama said...

சர்வ ஜாக்ரதையாக தவிர்த்து விட்டு குட் நைட் சொல்லி(தங்கமணிக்கு மட்டும் தான் சாமி!) உறங்கி விட்டேன்.


ayyo paavam! eppadi irundhe ambi eppadi aayittaru.-k mami

Sasiprabha said...

Oy Ambiyaare.. Ippallaam enakku kesariya paathaale nekku thangamani rengu thaan gyabagathukku varaa.. Enakke ippidina.. Maamiyaa aathula mattum marandhuduvaala enna..

Veetla aambadaya manasarinju sevai seiyiradhukkum oru periya manasu venum.. Thangamani sarba naan paarataren.. Mathapadi poorikattai samacharathula ellam naan thangamanikkuthaan support

golmaalgopal said...

Thala bak after maamiyaar veetu vijayam ;)

range.. :)

chancae illa...ellaa veetleyum ippidi dhaanaa?? ippo dhaan en akkakaari vandhu sambar,rasa podi adhu idhu'nu allindu poraa.. :))

Avial said...

Ambi You rock with ur writing . Keep writing .

///ஒரு ஆட்டோ பிடிக்க ஆட்டோலதான் போகணும்... ///
Soooooper appu .

Nijamavae solrean , neenga screenplay try pannalamey
( Ethi vidala ..mother promise a solrean )

Avial said...

Naan mammyiar veedu nnu vudana ..kalyanam Oru Jail nnu solla poreenga nnu bayandhutean..

Balaji S Rajan said...

கல்யாணம் ஆகிறதுன்னு ஒரு கார்டு கூட போடலை. அப்புறம் வேதா போஸ்ட் படிச்சுதான் தெரிஞ்சு கிட்டேன். சரி... மாமியார் வீட்டுக்கு போனதுல கலக்க்ஷன் எவ்வளவு? அத முதல்ல சொல்லுங்க... சரி நான் கேட்கறேன்.... பெங்களுர்ல தண்ணி ப்ரச்னை ஒன்றும் இல்லையே... எல்லாம் குளிக்கறீங்களா...அப்படின்னு யாரும் கேட்கலையா...

manipayal said...

இதுக்குத்தான் சமையல ஒழுங்கா கத்துக்கணும் இல்ல உள்ளூர்லயே பொண்ணு பாக்கணும்க்கறது.இப்பிடி பொடிக்காக அலயவேண்டாம் பாரு.
சரி சரி நமக்கெல்லாம் பொண்ணு குடுக்கறதே ஜாஸ்தி

My days(Gops) said...

தல எத்தனை நாள் ஆச்சி இப்படி உங்க போஸ்ட்'ய படிச்சி...

My days(Gops) said...

//அடுத்த வாரம், சாம்பார், ரசத்தில் உப்பு புளி எல்லாம் குறைய தொடங்கும்(என்ன ஒரு வில்லதனம்?). அப்படியும் புரியாத மாங்கா மண்டைகளுக்கு கடைசியாக ரிவிட்டு தான்.
//

ஹி ஹி லாஸ்ட் ஸ்டேஜ் சொல்லுற அளவுக்கு முன்னேறி இருக்கிறத பார்த்தால்., தலைக்கு ரீவ்வீட்ட்டா?

My days(Gops) said...

ஐம்பது போட்டுக்கிறேன்

My days(Gops) said...

//பொண்ண எப்படி பாத்துக்கறார்?னு தங்கமணி சைடுலயும் அவங்க பெரியம்மா, சித்தி, மாமா, மாமினு ஒரு பெரும் படையே ரொம்ப ஆவலா இருக்கும்.//

அட அட...
கரெக்ட்டா அவங்க வீட்டுக்கு போனவுடன், எங்ககளை எல்லாம் நியாபகம் இருக்கா'னு ஒடு பிட்டு போட்டு இருப்பாங்களே..

My days(Gops) said...

//மிடில் பர்த் யாரு? என்ன வயசு? போன்ற தங்கமணியின் பூரிக் கட்டைக்கு வேலை குடுக்கும் அதி முக்யமான தகவல்களை எல்லாம் கூட சர்வ ஜாக்ரதையாக தவிர்த்து விட்டு குட் நைட் சொல்லி(தங்கமணிக்கு மட்டும் தான் சாமி!) உறங்கி விட்டேன்.
//

எப்படி இருந்த எங்க தல இப்ப எப்படி ஆகிட்டார்.... எல்லா புகழும் அவங்களுக்கே.... ஹி ஹி....

My days(Gops) said...

//இருக்கும் ஏரியா இருக்கே, அடடா! ஒரு ஆட்டோ பிடிக்கறதுக்கே ஆட்டோல தான் போகனும். //

உங்க லொள்ளு இருக்கு பாருங்க..
ராட்புல் (ROTFL)....

அந்த ஏரியா அவ்வளவு பெரிய ஏரியாவா?

My days(Gops) said...

//வீட்டுக்கு போனால் சில விசாரிப்புக்கள் கண்டிப்பாக இருக்கும்.
முதலில், பிளாடில் இருக்கும் ஒரு பாட்டி தான் தொண்டையை செருமி கொண்டு பஞ்சாயத்தை ஆரம்பிப்பார். என்ன? வீட்டுல ஏதும் விஷேசம் வருதா?னு ஒரு பிட்டு போட்டு விட்டு நம்மை உற்று நோக்குவார்.
இல்லாவிட்டால், தங்குவின் வாயை கிண்டுவார்கள். என்னமா? மாப்ள நன்னா கவனிசுக்கறாரா? அப்புறம், என்ன விஷயம்...? முகம் மலர்ச்சியா இருக்கே! குழந்தைகள் சந்தோஷமா இருந்தா சரி! மாப்ள! என்ன வாயவே தொறக்க மாட்டீங்கறீங்க?
///


காலா காலத்துக்கும், பஞ்சாயித்துனா அங்க நாட்டமை , சொம்பு, வெத்தலை பொட்டி எப்படி இருக்குமோ, அதே மாதிரி இந்த டயலாக் எல்லாம் கண்டிப்பா இருக்குமெ.. ஹி ஹி.

My days(Gops) said...

//மங்கையர் மலர், அவள் விகடன் போன்ற புத்தகங்களில் வந்திருக்கும் சமையல் ஐட்டங்களை மாப்ளை மீது டெஸ்ட் பண்ணியே தீருவது! என கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருக்கும் தங்குவின் சாதி சனங்கள் அவரவர் ரெஸிப்பிப்புக்கு தகுந்தவாறு நமது டைம் டேபிளை முடிவு செய்து விடுவார்காள்.
//

இப்படி ஆசையான அன்பு தொல்லைகள் எல்லாம் ஆரம்பத்துல சகஜம் அப்பு....
(இப்ப தெரியுது ஏன் தல இவ்வளவு நாள் பிலாக் பக்கம் வரல'னு...

My days(Gops) said...

//இட்டிலிக்கு சரியான மேட்ச் தேங்காய் சட்னியா தக்காளி சட்னியா? மாவாட்டினதுக்கு அப்புறமா எவ்ளோ உப்பு போடனும்? தயிரை புளிக்க வைப்பது எப்படி? போன்ற அதிமுக்யமான விஷயங்களில் அக்காவின் ஆலோசனை கோரப்பட்டது. //

skm அக்கா எங்க ஆளை காண்னோம்'னு பார்த்தா, இப்படி ஆலோசகர் ஆகிட்டாங்களா?
அட்ரா அட்ரா....

My days(Gops) said...

//இப்படியாகத் தானே மாமியார் வீட்டின் விஜயத்தை வெற்றிகரமாக முடித்து, மறக்காமல் சாம்பார் பொடி, ரச பொடி, பருப்பு பொடி, புண்ணாக்கு பொடி, மூக்கு பொடி எல்லாம் பொட்டலம் கட்டிக் கொண்டு உங்கள் அம்பி பெங்களுர் வந்து சேர்ந்தான். //

பேச்சிலரா இருக்கும் போதும்,
பஞ்சாப், அஸ்ஸாம்'னு பல விஷயங்களை சொல்லி கொடுத்தீங்க,
இப்பவும் பல விஷயங்களை சொல்லி கொடுக்கிறீங்க....

நீங்க நல்லா இருப்பீங்க.....

Anonymous said...

//"என்னங்க! நாம வாங்கி வந்த சாம்பார் பொடி, ரச பொடி, பருப்பு பொடி, மூக்கு பொடி எல்லாம் காலியாக போகுது. அதனால நாம ஒரு எட்டு நம்ம அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாம்!"னு ஒரு வேட்பு மனு தாக்கல் ஆகும்.///

Ambi, Unmaiya sollungo..idellam unga Thangamani sonnangala, illai nenga sonningala?????

Padma said...

ha ha. ambi anna neenga Mamiyaar authukku ponadukke evalo build upa.. manni romba pavum.. y no mails nowadya? romba buziyo?

Karthikeyan Ganesan said...

add my name to ambi's fan club.

really nice kinda writing style.


Thanks...
Ambi made my day