Wednesday, August 22, 2007

சக் தே இந்தியா

இந்த ஜிலேபி தேசத்தில் 'சிவாஜி' என்ற தமிழ் படத்தின் பெயரையே கன்னடத்தில் எழுதி போஸ்டர் ஒட்டுகிற நிலமையில், இங்குள்ள என் இனிய தமிழ் மக்களுக்கு இஷ்க், பிஷ்க் போன்ற இந்தி படங்களும் 300 பருத்தி வீரர்கள், உறுமாறும் வேட்டையர்கள் போன்ற ஆங்கில படங்களே ஆறுதல்.
நீண்ட்ட்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஹிந்தி படம் வந்ருக்கு! மிஸ் பண்ணிடாத!னு எங்க ஆபிஸ் ரசகுல்லா சொன்னதை தட்ட முடியாமல், தங்கமணி சகிதமாய் இந்த படத்துக்கு போயாச்சு.

எனக்கெல்லாம் கோபுரம் பூசு மஞ்சள் தூள், ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ், மற்றும் அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ!னு விளம்பரம் பாத்துட்டு தான் படம் பார்க்க பிடிக்கும். இங்கே ஒன்னுமே காட்டாமல், படக்குனு படத்தை போட்டு விட்டார்கள். என்னை மாதிரியே தான் மற்றவர்களுமா?னு நான் சுற்றும் முற்றும் பார்த்ததை தப்பா புரிந்து கொண்ட தங்கமணி, பக்கத்து சீட்டுல என்ன லுக்? ஒழுங்கா படத்தை பாருங்கோ!னு இடிக்க சுய நினைவுக்கு வந்தேன்.

இதான்பா கதை:

பாகிஸ்தானுக்கு எதிரான ஹாக்கி பைனல் மேட்சில் கைக்கு கிடைத்த கேசரி போன்ற கோல் போடும் வாய்ப்பை கோட்டை விட மீடியாக்களால் ஷாருக் தேச துரோகி! என முத்திரை குத்தப்படுகிறார்.ஏழு வருடங்களுக்கு பிறகு இந்திய மகளீர் ஹாக்கி டீமுக்கு கோச்சாகி எப்படி பட்டய கிளப்புகிறார்? என்பது தான் கதை.

இது கதையல்ல நிஜம்:

மிர் ரஞ்சன் நேகி என்ற இந்திய ஹாக்கி வீரர் 1983 ல் பாக்குக்கு எதிரான மேட்ச்சில் 1 - 7 என கோட்டை விட, மேட்ச் பிக்ஸிங்க் செய்ததாக குற்றம் சுமத்தபடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு இந்திய மகளிர் அணிக்கு கோச்சாகி காமவெல்த் போட்டிகளில் தங்கம் வாங்கி தந்தார்.


திரைக்கதை நகர்த்திய விதம் அருமையோ அருமை. 16 பேர் கொண்ட டீமில் ஆந்திரா, ஹரியானா, மிசோரம், பஞ்சாப்(ஆமா! ஆமா) என பலதரப்பு முகங்கள். முதன் முறையாக யஷ் சோப்ரா படத்தில் கும்பலாக கும்மியடிக்காத, லிப்ஷ்டிக்கே போடாத பெண்கள்!

ஆச்சரியம் ஆனால் உண்மை!

உச்சா போறத்துக்கு கூட கோட் சூட் போட்டு ஹெலிகாப்டரில் ஒத்தை பெட்டியுடன் வந்திறங்கும் ஷாரூக் இதில் இல்லை.வசனங்கள் மிக ஷார்ப். "ஏக் காவ் மேம் ஏக் கிசான்" ஹிந்தி தெரிஞ்ச எனக்கே வசனம் புரிஞ்சதுனா பார்த்து கொள்ளுங்கள். அதிலும் அந்த ஜார்கண்ட் மா நில பெண்கள் வசனம் உச்சரிக்கும் விதம், ஹரியான்வி மொழியில் பேசும் பெண் கைத்தட்டலை பெறுகிறார்கள்.


பஞ்சாபி பெண் அந்த மாநிலத்துக்கே உரிய வேகம், கோபம் எல்லாம் கலந்து கட்டி அடிக்கிறார்! என நான் இங்கு மெய் மறந்து எழுதினால் ஒரு வாரம் நீங்க தான் பாத்ரம் தேய்க்க வேண்டி இருக்கும் என அம்மணி அன்பாக எச்சரித்து இருப்பதால் நீங்களும் இந்த வரிகளை விட்டு விட்டு படியுங்கள். கமண்ட் செக்ஷனில் காப்பி பேஷ்ட் பண்ற வேலை எல்லாம் வேணாம்! இப்பவே சொல்லிக்கறேன் .


ஷாரூக் - இதுவரை நான் நினைத்து கூட பார்த்திராத ஷாரூக். டான்(DON) என்ற படத்தில் ஹீரோவாக வந்து காமடியில் கலக்கிய ஷாரூக்கா இது? வயதுக்கேற்ற குறுந்தாடி, உடல் அசைவுகள், முழுக்கை சட்டையை அழகாக முட்டி வரை மடித்து விட்ட நேர்த்தி, மனித சைக்காலஜியை அழகாய் புரிந்து கொண்டு மகளீர் அணியினை வழி நடத்தும் விதம், தான் துரோகி இல்லை! என்பதை 4 பக்க வசனங்களாய்(கேப்டன விட்டா பட்டய கிளப்பி இருப்பார்) பொழியாமல் கண்களிலேயே காட்டிய விதம் என நடிப்பில் பிஸ்த்து காட்டுகிறார். அவார்டு உறுதிங்கோ!
கண்களை உறுத்தாத லைட்டிங்க், ஆஸ்த்ரேலியாவை படமாக்கிய விதம், மற்றும் குறிப்பிட்ட ஆங்கிள்களில் காமிரா கோணங்கள் குறிப்பாக சொன்னால் அந்த இந்தியாவுக்கும் அர்ஜெண்டினாவுக்கும் நடக்கும் ஹாக்கி மேட்ச்சை காமிரா வீராங்கனைகளோடு வந்து, பின் ட்ராலி ரோலிங்க் செய்து, சட்டுனு கிரேன் ஷாட்டில் மைதானத்தை காட்டிய விதம் இருக்கே! அடடா! (இப்படிலாம் டெக்னிகலா எழுதினா தான் இந்த பதிவு தேசி பன்டிடிலோ, கில்லியிலோ வருமாம் அதான்! கண்டுகாதீங்க)

இந்தியாவில் கிரிகெட்டை தவிர வேறு விளையாட்டை (டென்னிஸ் விதிவிலக்கு அதுவும் சானியா இருப்பதால் தான்) கண்டுகொள்ள ஆட்கள் இல்லை! என்ற உண்மையை அழகாக வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லி இருக்கிறார்கள். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு கோச்சாக இருப்பது எவ்ளோ கடினம்? என்பதை இதை விட சிறப்பாக யாராலும் காட்ட முடியாது. சாப்பல் மாமா ஏன் துண்டை கானோம் துணிய காணோம்னு ஓடினார்?னு இப்போ தெரியுது எனக்கு.

இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் ஷாருகிற்க்கு இல்ல, யாருக்குமே டூயட் கிடையாது. ஒவ்வோரு வசன முடிவிலும், எஸ்.ஏ. ராஜ்குமார் தயவில் "ல லா லா ல லா லா" கோரஸ் கிடையாது. மல்லிகா ஷெராவத்தின் ஐட்டம் சாங்க் இல்லை.

இன்டர்வல் ஒரு மணி நேரத்திலேயே வந்து விடுகிறது. பக்கத்து சீட் நாதாரி, பாப்கார்ன், பெப்ஸி, ஐஸ்க்ரீம் என வாங்கி வந்து என் வயதெறிச்சலை கொட்டி கொண்டான்.

தங்கமணி: எவ்ளோ பாசமா அவன் தங்கமணிக்கு பாப்கார்ன் ஊட்றான் பாருங்கோ!

அது அவன் தங்கமணி இல்லை, தள்ளிண்டு வந்தது.

உங்களுக்கு எப்டி தெரியும்?

எந்த லூசாவது நாப்பது ரூவாய்க்கு ஒரு பாக்கட் பாப்கார்ன் வாங்குவானா? எங்க ஊர்ல ரூவாய்க்கு நாலு அச்சு முறுக்கு. ரெண்டு ரூவாய்க்கு வாங்கினா ஒன்னு கொசுறு தருவான்.

தங்கமணி: ( நக்கலாக) உங்க ஊர்ல சக் தே இந்தியா படம் வருமா?

கிளைமாக்ஸ் எடுத்த விதம் மிக நேர்த்தி. டைரக்டருக்கு இது இரண்டாம் படமாம். நம்ப முடியலை. பின்ணணி இசை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாமோ? நல்ல கதைகளம், சோப்ரா சார், எங்க ஏ.ஆர். ரஹ்மானிடம் குடுத்து இருக்கலாமே! லகான் பாத்தீங்க இல்ல? பிரியாணி நல்ல வேணும்னா பாஸ்மதி ரைஸ் வாங்க தயங்க கூடாது சார்.

மொத்ததில் சக் தே இந்தியா - சலாம் இந்தியா.

இதே படத்தை பற்றி ஒரு அசத்தலான விமர்சனத்தை பிலாகேஸ்வரி வாயால் கேளுங்கள். அக்கா குவிஸ் போட்டி எல்லாம் நடத்தறாங்க. செம சுவாரசியமா இருக்கு.
இந்த படத்தின் தமிழ் உரிமை நமது ரீமேக் ராஜாக்கள் கையில் கிடைக்காமல் இருக்கனும். இல்லாட்டி, மாடசாமி s/o மயில்சாமி!னு ரீமேக் பண்ணிவிடுவார்கள்!

53 comments:

Blogeswari said...

phastuuuuuuuuuuuuuuuuuuuuuuuu!!!!

Karthik Sriram said...

That was a cool review Ambi!

I have been hearing only good reviews about this film....

One friend of mine here told its more like remember the titans movie..


LKS

Blogeswari said...

Ambi: nice review.. wish you had written something original.. parava illa.. better luck next time

Oh ya, thank you for the link :)

-Blogeswari thangachee

PRINCENRSAMA said...

படம் நல்லா இருந்தது...

Anonymous said...

Ambi...Mathan Thiraiparvai madiri Ambi Figure parvai nu aethavathu figure pathi review koduppingannu parththa, ippadi panitingalae..

G3 said...

Ambi blog dhaana idhu? illa maari vandhutaena? vimarsanam arumai :))

G3 said...

//கமண்ட் செக்ஷனில் காப்பி பேஷ்ட் பண்ற வேலை எல்லாம் வேணாம்!//

ippadi neenga aasa pattu kettukittadhaala.. idho andha ponnaana varigal..

//பஞ்சாபி பெண் அந்த மாநிலத்துக்கே உரிய வேகம், கோபம் எல்லாம் கலந்து கட்டி அடிக்கிறார்! //

CVR said...

சூப்பர் விமர்சனம்!! :-)
நல்லா எழுதியிருக்கீங்க அண்ணாத்த!! :-)

கீதா சாம்பசிவம் said...

நடுநடுவில் கொஞ்சம் அல்ப புத்தி வந்தாலும் மொத்தத்தில் நல்ல உருப்படியான விமரிசனம். படம் பார்த்துட்டுச் சொல்றேன் மத்ததை! :P

.:: மை ஃபிரண்ட் ::. said...

அண்ணா, ஒரு காலை வணக்கம். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

படம் வெளியே வந்துட்டுச்சா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த படம் பார்க்கணும்ன்னு ரொம்ப நாளா வவேயிட் பண்ணிட்டு இருந்தேன்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

வந்துடுச்சுன்னு யாரும் சொல்லவே இல்லை பார்த்தீங்களா????

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த வாரம் சக் டே இந்தியாதான் எனக்கும். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க வேற படம் சூப்பர்ன்னு விமர்சனம் போட்டுட்டீங்கல்ல.. மிஸ் பண்ண மாட்டேன் நான்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆனா, படம் முழுக்க அந்த பஞ்சாப் காரியை மட்டும்தன் பார்த்துட்டு இருந்ததா தியேட்டர்ல இருந்தவங்க சொன்னாங்களே? உண்மையா?

அரை பிளேடு said...

பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்.

mgnithi said...

Innnum padam paarkala.. Intha padatha vachi mediala romba comedy pannitaanga. padam release aagarathukku oru naal munnai varaikkum bayangara hype.

padam release aagi rendu naala padam flopnu oru bitta potttanga..

ippa ennada padam supernu oru bitta podaraanga.. ore confusion pa..

Unga reviewa nambi padathukku poren..

mgnithi said...

//"ஏக் காவ் மேம் ஏக் கிசான்" ஹிந்தி தெரிஞ்ச எனக்கே வசனம் புரிஞ்சதுனா பார்த்து //

L.O.L

mgnithi said...

//பஞ்சாபி பெண் அந்த மாநிலத்துக்கே உரிய வேகம், கோபம் எல்லாம் கலந்து கட்டி அடிக்கிறார்! ///


Appadiya? :-)

mgnithi said...

//வீராங்கனைகளோடு வந்து, பின் ட்ராலி ரோலிங்க் செய்து, சட்டுனு கிரேன் ஷாட்டில் மைதானத்தை காட்டிய விதம் இருக்கே! அடடா! (இப்படிலாம் டெக்னிகலா எழுதினா தான் இந்த பதிவு தேசி பன்டிடிலோ, கில்லியிலோ வருமாம் அதான்! கண்டுகாதீங்க)//

nalla velai neenga reason solliteenga...

mgnithi said...

//தங்கமணி: ( நக்கலாக) உங்க ஊர்ல சக் தே இந்தியா படம் வருமா?//

ithu thaan kelvi...besh besh romba nanna kettanga antha kelviya... ha ha.

mgnithi said...

//இல்லாட்டி, மாடசாமி s/o மயில்சாமி!னு ரீமேக் பண்ணிவிடுவார்கள்!
//

May be indiava kokka? nu kooda title vachalum vaipaanga..

mgnithi said...

oru quarter adichikaren...

mgnithi said...

quarter :-)

பழூர் கார்த்தி said...

நல்லா காமெடியா விமர்சனம் எழுதியிருக்கீங்க அம்மாஞ்சி..
கலக்கல்..நானும் போன வாரம் படம் பாத்து ஆச்சரியப் பட்டேன்.. எனக்கு அந்த கோமல் பொண்ணு ரொம்ப புடிச்சிடுச்சி !!! ஷாருக் வழக்கம் போலவே கலக்கியிருக்கார் :-))

<<>>

ஆமாம், அப்புறம் உங்க தங்கமணிக்கு பாப்கார்ன், ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்தீங்களா, இல்லையா ??? :-))

<<>>

யாருங்க இந்த மைபிரண்ட், சும்மா போற போக்குல 10-15 பின்னூட்டம் போட்டுட்டு போயிருக்காரு, அந்த புண்ணியவானை என் ப்ளாக் பக்கம் கொஞ்சம் வரச் சொல்றீங்களா :-)))))

Sudhakar said...

Very good review.I think Tom hanks had some such movie in English.Dunno Exactly.

Sudhakar said...

Edu erundalum Sharuk Sharuk than ellaya.
KCS

priya iyer said...

:-) yenna kodumai saar idhu????

ipdi tamil la ezhudinel na yenna madri irrukaravanga yepdi padipanga???? :-(

Anonymous said...

arumaiyana vimarsanam.thankyou.padam indha weekend than poganum.pathuttu solrenga.
nivi.

Anonymous said...

punjab patthi irandu posta kaanume ninaichhhen.neenga marakkamateenga enakku theryium.thangamani nalla gavaninga.ayyo thangamani neenga evalo buddhisali!!!!!!!
nivi.

Anonymous said...

seeing a movie in adlabs or inox creates a deep hole in the packet.enna seyyardhu.edhhavadhu korichikitte patha dhan padam partha madhiri irukku.
nivi.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//யாருங்க இந்த மைபிரண்ட், சும்மா போற போக்குல 10-15 பின்னூட்டம் போட்டுட்டு போயிருக்காரு, அந்த புண்ணியவானை என் ப்ளாக் பக்கம் கொஞ்சம் வரச் சொல்றீங்களா :-)))))//

பாஸ், அதுக்கு நீங்க ஃபார்மலா அழைப்பு விடுக்கணும். பொட்டி பொட்டியா பணம் கரேக்ட்டா வந்து சேர்ந்துடணும். மை ஃபிரண்ட் கமேண்டு உங்க ப்ளாக்ல..

கைல காசு. வாயில தோசை.. :-))

சரிதானே அம்பி அண்ணே?

dubukudisciple said...

ambi
thanks for the review...
parthutu solren unkite eppadi irukunu

dubukudisciple said...

vanthathuku 35

வேதா said...

இந்த படத்துல வர்ர பாடல்களை பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது, ஷாருக்கான் நல்லா நடிச்சுருக்காரு கேள்விப்பட்டேன், கண்டிப்பா பார்க்கணும்னு நினைச்சுருக்கேன் :)

இந்த படத்துக்கு பின்னாடி இப்டி ஒரு உண்மை கதை இருக்குன்னு இப்ப தான் தெரியுது :)

வேதா said...

சரி சொல்ல வேணாம்னு பார்த்தேன் போனா போகுதுன்னு சொல்றேன்,

விமர்சனம் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :):)

(இப்டி சொன்னதுக்கு பொட்டி கைமாறின விஷயத்தை யார் கிட்டயும் சொல்லிடாதீங்க;))

கீதா சாம்பசிவம் said...

மை ஃபிரண்டு? ஆணா? :P

@அம்பி, எப்போதில் இருந்து கொள்ளைக் காரனா மாறினீங்க? பொட்டி பொட்டியா மை ஃபிரண்டுக்கும், வேதாவுக்கும் தள்ளி இருக்கீங்க? கல்யாண மொய்யில் மிச்சமா? :P

Dreamzz said...

//மல்லிகா ஷெராவத்தின் ஐட்டம் சாங்க் இல்லை.

//

ithellam plusnu yaaruppa sonnathu?

Dreamzz said...

naan innum padam pakkala! english subtitled engayachum kidaicha pakkaren!

Dreamzz said...

padam nalla irukkum pola?

வல்லிசிம்ஹன் said...

Thank you Ambi.
kattaayam paarkkiREn.

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கீதா சாம்பசிவம்:

//மை ஃபிரண்டு? ஆணா? :P//

:-P
புதுசா யாரோ புரளியை கிளப்பி விடுறாங்கப்பா. :-P


//அம்பி, எப்போதில் இருந்து கொள்ளைக் காரனா மாறினீங்க? பொட்டி பொட்டியா மை ஃபிரண்டுக்கும், வேதாவுக்கும் தள்ளி இருக்கீங்க? கல்யாண மொய்யில் மிச்சமா? :P//

உங்களுக்கு இன்னும் வரலையா? சீக்கிரம் உங்க விலாசத்தை அம்பிக்கு அனுப்புங்க.. உங்களுக்கும் வரும்.. ஆனா பொட்டி காலியா இருக்கும். ஹீஹீ

தி. ரா. ச.(T.R.C.) said...

பஞ்சாபி பெண் அந்த மாநிலத்துக்கே உரிய வேகம், கோபம் எல்லாம் கலந்து கட்டி அடிக்கிறார்

அப்படியா எனக்கு தெரிஞ்சவரை தங்கமணிதான் கயத்துலே கட்டி அடிக்கிறதாகேள்வி.

Madhusoodhanan said...

"பிரியாணி நல்ல வேணும்னா பாஸ்மதி ரைஸ் வாங்க தயங்க கூடாது சார் "
Idhu enna pudhu mozhi ya ?

manipayal said...

வணக்கம் அம்பி, வழக்கம் போல தூள் கிளப்பிடீங்க. அது எப்படிங்க உங்களுக்கு மட்டும் வார்த்தை அப்பிடி வந்து விழுது. சரி சரி அதுக்காக விவேக் மாதிரி -- அ,அ, அது தானா வருதுன்னு உணர்ச்சி வசப்படாதீங்க

Anonymous said...

movie was wonderful.alpathanamana pattu,sagging storyline,glamour,naalu sandai nnu vazhakkamana mixed masala illama nalla padama irundhadhu.sharukhkhan agattum andha girls team agattum ellarume very impressive performance. must see.miss panna koodathu.
nivi.

G3 said...

oru 48

G3 said...

ippo 49

G3 said...

nalla padatha pathi nalla vimarsanam ezhudhi adha paaka vechadhukku indha 50 :d

வேதா said...

hei naan intha padam paarthuten :)

mglrssr said...

//அது அவன் தங்கமணி இல்லை, தள்ளிண்டு வந்தது.


உங்களுக்கு எப்டி தெரியும்?


எந்த லூசாவது நாப்பது ரூவாய்க்கு ஒரு பாக்கட் பாப்கார்ன் வாங்குவானா? எங்க ஊர்ல ரூவாய்க்கு நாலு அச்சு முறுக்கு. ரெண்டு ரூவாய்க்கு வாங்கினா ஒன்னு கொசுறு தருவான்//

சத்தியமான உண்மை வேற என்ன பாப்கார்ன் 40 ரூபா அது தான்.

மங்களூர் சிவா

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信