Friday, August 17, 2007

வல்லிய கேரளம்!

மு.கு: "போதுமே! நீங்க டைட்டில் வைக்கிற லட்சணம்! என்று சென்ஸார் போர்டின் கடுமையான ஆட்சேபனை காரணமாக "கும்தலக்கடி கும்மாவா! கேரளானா சும்மாவா?" என்ற அருமையான தலைப்பு கைவிடப்பட்டது.

கேரளா என்றவுடன் உங்களுக்கு சட்டுனு என்ன நினைவுக்கு வருகிறது?
1) God's Own country! India's Venice - என பீட்டர் விட ஆரம்பித்தால் அப்படியே சுண்டல் வாங்கி கொண்டு நடையை கட்டவும்.

2) நேந்ரங்காய் சிப்ஸ் சாம்பார் சாததுக்கு நல்ல சைடு டிஷ் என்று நினைத்தால் நீங்கள் ஒரு பொறுப்பான குடும்ப தலைவி.

3) கதகளி, கப்ப கிழங்கு, குழல் புட்டு, முல்லை பெரியார் அணை, ஆன்டனி என்று நீங்கள் நினைத்து இருந்தால் சினிமா அதிகம் பார்பவராக இருப்பீர்கள்.

4) மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், கோபிகா குட்டி, காவ்யா மாதவன், நவ்யா நாயர் போன்றவர்கள் அவதரித்த திவ்ய ஷேத்ரம் என நீங்கள் நினைத்து இருந்தால் கையை குடுங்கள் - யூ ஆர் ஸ்டில் யூத்.

5) சபரி மலை, மலையாள பகவதினு நீங்கள் அடுக்கினால் ஹிஹி, பழம் நீயப்பா! உலா வரும் ஒளிகதிர் நடத்த நீங்கள் தான் சரியான ஆள்.

6) களரிப் பயட்டு, வர்ம கலைனு உங்களுக்கு அதிரடியாக தோன்றினால் நீங்கள் தினமும் ஆப்பு வாங்கும் அப்பாவி ரங்கு அல்லது ஆப்படிக்கும் ஒரு தங்கமணி.
டேய்! உனக்கு என்ன தோணிச்சு? அத சொல்லு முதல்லனு நீங்கள் கேட்கலாம்.
என் போன்ற குழந்தைகளுக்கு கிருஷ்ணர் குழந்தை ரூபமாக தவழும் குருவாயூர் தான் நினைவுக்கு வரும்னு நான் சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. :)

சரி, பில்டப் போதும், மேட்டருக்கு வரேன்.
திருமணம் ஆனதும் ஹைனிமூனுக்கு மொரிஷியஸா? மாலத்தீவுகளா? எங்க போக போறோம்?னு தங்கமணி தாக்குதலில் குதிக்க, நாம எல்லாம் இந்தியர்கள், அதனால அன்னிய தேசத்துக்கு எல்லாம் ஹைனிமூன் போனா அப்துல்கலாம் கோச்சுப்பார்.

திருநெல்வேலியில் இல்லாத இடங்களா? அகஸ்த்தியர் அருவி இருக்கு, மணிமுத்தாறு, பாப நாசம் அணைகள் இருக்கு! எங்கூர் ஆத்தங்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து தாமிரபரணியில் கால் நனைத்து கொண்டே ஹனிமூனை கொண்டாடலாம்னு ஒரு பட்ஜட் பத்மநாபன் பிட்டை போட்டு பார்த்தும் ஒன்னும் நடக்கவில்லை.

நீங்க இப்படி ஏதாவது டகால்டி பண்ணுவீங்கனு எனக்கு தெரியும், அதனால நானே எல்லாம் விசாரிச்சு, கேரளா டிரிப்புக்கு ஆன்லைன்ல அட்வான்ஸ் கட்டியாச்சு. ஒழுங்கா பாக்கி பணத்தை கட்டிடுங்கனு தங்கமணி பதிலடி குடுக்க வாத நாடி அடங்கி போச்சு எனக்கு.

அப்ப மாலதீவு, மொரீஷியஸ்னு சொன்னது எல்லாம்?

ச்சும்மா! அப்படி ஷ்டார்ட் பண்ணா தான் எல்லா ரங்கமணிகளும் இதுக்காவது ஒழுங்கா வழிக்கு வருவாங்கனு என் பிரண்டு சொன்னா!

ஆஹா! தெளிவா தான் இருக்காங்க, அப்ப தான் லூசா?

(அந்த பிரண்டை நான் அவசியம் பாக்கனும். அவளுக்கு இருக்கு தீவாளி. கர்ர்ர்ர்ர்ர்)

மிக சரியா அம்மணி பிறந்த நாள் வேற வந்து சேர்ந்தது. அதனால ஒன்னும் பேச முடியலை. முதலில் குருவாயூர் போனோம்.

திருப்பதி ரேஞ்சுக்கு வரிசை நீன்டு இருந்தாலும் நிற்கும் களைப்பே தெரியலை. ஹிஹி, குருவாயூர் குத்து விளக்குகள் எல்லாம் கையில் விளக்குடன் வரிசையில் நின்னா எப்படிப்பா களைப்பு தெரியும்?

ஆபிஸில் இருக்கும் திருச்சூர் குத்து விளக்கிடம் சம்சரித்து(வறுத்து) டெவலப் பண்ணிய மலையாளம் எல்லாம் நன்னாவே கை குடுத்தது.

ஆனால் தமிழ் படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் வருவது போல "ஹி இஸ் மை ரங்கமணி!"னு அம்மணி சமயம் பார்த்து கோல் போட்டு நமட்டு சிரிப்பு(வில்ல சிரிப்பு) சிரிக்க, அதுவரை நன்னா சம்சரித்து வந்த குத்துவிளக்கு, "என்ட அம்மே அழைக்கினு"! சேனலை மாற்றி, கிளிக்கு இறக்கை முளைச்சு பறந்து போக, கோவில் கடைகளில் பூரிக்கட்டை என்ன விலை?னு அம்மணி விசாரிப்பதை பார்த்து விட்டு அவசரமாக ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டோம்.

ஒரு வழியா தரிசனம் முடிந்து(உம்மாச்சி தரிசனம்ப்பா!) அங்கிருந்து எர்ணாகுளம் சென்றடைந்தோம். அங்கே தயராக எங்கள் டிராவல் ஏஜண்ட் காருடன் வந்து எங்களை பிக்கப் செய்து கொண்டார்.

அடுத்த நாள் முழுக்க மூனார் ரவுண்டப் தான்.
அழகிய கேரள படங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போமா?

58 comments:

Blogeswari said...

PHASTUUUUUUUUUUUUUUUU COMMENTTTTTTTTTTTT
INDIA TOLLAI KAATCHIGALIL MUDAL MURAIYAAGA... BLOGESWARI PHASTTTTU COMMENT!!!! ha ha ha!!!

Blogeswari said...

Ambi.. Enakku Kerala-na Kalari payattu, varma kalai gnabagam varum.. naa enda category?

Kuthuvelakka paatadula thangamani kiterndu evlo kutthu kedachadu? unmayai sollalam , blog-il

வேதா said...

/"கும்தலக்கடி கும்மாவா! கேரளானா சும்மாவா?" என்ற அருமையான தலைப்பு கைவிடப்பட்டது./
ஹாஹா :)
விவிசி :)

கேரளா என்றாலே நினைவுக்கு வருவது இயற்கை அழகு தான் :)

/நேந்ரங்காய் சிப்ஸ் சாம்பார் சாததுக்கு நல்ல சைடு டிஷ் என்று நினைத்தால் நீங்கள் ஒரு பொறுப்பான குடும்ப தலைவி./

ஏன் குடும்ப தலைவிக்கு மட்டும் தான் அப்டி தோணுமா? உங்களுக்கு சாம்பார் சாதத்துக்கு பதிலா வேற ஏதாவதுன்னு சொல்லியிருந்தா இப்டி தோணியிருக்குமோ? ;)

/அவதரித்த திவ்ய ஷேத்ரம் என நீங்கள் நினைத்து இருந்தால் கையை குடுங்கள் - யூ ஆர் ஸ்டில் யூத்./
அப்ப கண்டிப்பா உங்களுக்கு அப்டி தோணியிருக்காது :)

வேதா said...

/குருவாயூர் தான் நினைவுக்கு வரும்னு நான் சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை/
அதான் நீங்களே சொல்டீங்க இல்ல அப்புறம் எதுக்கு இப்டி ஒரு டயலாக்? பில்டப்பு?:)

/அப்படி ஷ்டார்ட் பண்ணா தான் எல்லா ரங்கமணிகளும் இதுக்காவது ஒழுங்கா வழிக்கு வருவாங்கனு என் பிரண்டு சொன்னா!/
அட அட என்னமா புரிஞ்சு வச்சுருக்காங்க?:) நாங்கெல்லாம் உங்க தங்கமணிக்கிட்ட இதுக்கெல்லாம் ட்யூஷன் கத்துக்கறோம் :)

வேதா said...

/குருவாயூர் குத்து விளக்குகள் எல்லாம் கையில் விளக்குடன் வரிசையில் நின்னா எப்படிப்பா களைப்பு தெரியும்?/
சே இங்க தான் உங்க தங்கமணி கொஞ்சம் தப்பு பண்ணிட்டாங்க, அப்டியே அந்த குத்துவிளக்கால ஒரு குத்து குத்தியிருக்கணும் :)
யோவ் நீயெல்லாம் திருந்தவே மாட்டியா? ;)

வேதா said...

/கடைகளில் பூரிக்கட்டை என்ன விலை?னு அம்மணி விசாரிப்பதை பார்த்து விட்டு அவசரமாக ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டோம்./
அடச்சே இதெல்லாம் போற இடத்துல விசாரிச்சுக்கிட்டு முன்னாடியே சொல்லியிருந்தா கல்யாணத்துல அதையும் பரிசளிச்சிருப்போம் :) இப்பவும் ஒன்னும் கொறஞ்சு போயிடல அடுத்த தடவை சென்னை வர்றச்ச சொல்லுங்க வாங்கி கொடுக்கறோம் :)

வேதா said...

/அழகிய கேரள படங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போமா?/
யப்பா இந்த பதிவுலேயே உருப்படியா அதையாவது போடுங்க :)

ambi said...

முதலிடத்தை மிகவும் கஷ்டப்பட்டு பிடித்து, (ROTFL)
பஷ்ட்டு கமண்டு போட்ட பிலாகேஸ்வரி அக்காவுக்கு ஒரு அவல் உப்மா பார்ஷல்ல்ல். :p

//உங்களுக்கு சாம்பார் சாதத்துக்கு பதிலா வேற ஏதாவதுன்னு சொல்லியிருந்தா இப்டி தோணியிருக்குமோ? //

@veda, ஏதுக்கு ஷ்யாமை திட்டறீங்க? எதுனாலும் நேரடியாவே சொல்லலாம். அவன் மானஸ்தன். :p

//நாங்கெல்லாம் உங்க தங்கமணிக்கிட்ட இதுக்கெல்லாம் ட்யூஷன் கத்துக்கறோம் //

Grrrrrrr.

//அப்டியே அந்த குத்துவிளக்கால ஒரு குத்து குத்தியிருக்கணும் :)
யோவ் நீயெல்லாம் திருந்தவே மாட்டியா?//
ROTFL :) (innocently)
இப்ப என்ன தப்பு பண்ணினோம் நாங்க திருந்தறத்துக்கு? :p

//முன்னாடியே சொல்லியிருந்தா கல்யாணத்துல அதையும் பரிசளிச்சிருப்போம் //
@veda, ஏற்கனவே ரெண்டு இருக்கு வீட்டுல. நீங்க வேற...

Padmapriya said...

sema ROTFL post!!! :D

Padmapriya said...

/அவதரித்த திவ்ய ஷேத்ரம் என நீங்கள் நினைத்து இருந்தால் கையை குடுங்கள் - யூ ஆர் ஸ்டில் யூத்./

enaku prithviraj thaan ninaivuku vandhaan.. apo naa youth eh?

Padmapriya said...

//டேய்! உனக்கு என்ன தோணிச்சு? அத சொல்லு முதல்லனு நீங்கள் கேட்கலாம்.//
yean kekkanum.... adhaan point #6 la cover aayteengale!!

Padmapriya said...

Honeymoon photo irukkattum... mudhalla.. kalyana photo va anuppara vazhiya paarunga!!!!!

Gops :) said...

Vanakkam.. vandhanam.. en nethila illa santhanam!!!

(Idhu Gops kaha naa potta comment!!)

-Priya

Sumathi. said...

ஹாய் அம்பி,


//நான் சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. :)//

1.அது தான் தெரிஞ்ச விஷயமாச்சே, அப்பறம் எதுக்கு கேள்வி?

2. கண்ணா, நீ எதை சொல்லி நாங்க நம்பலை? இனிமே இப்டில்லாம் கேக்கப்டாது என்ன ...

Sumathi. said...

ஹாய் அம்பி,

//கேரளா என்றவுடன் உங்களுக்கு சட்டுனு என்ன நினைவுக்கு வருகிறது?//

எனக்கு இந்த கோவளம், சங்கு முகம் இந்த மாதிரி 'பீச்சு' நினைவு வருதே..

அப்போ நான் எப்டி? ஹா ஹா ஹா ஹா...(still more youth & colourful aa)

G3 said...

//என் போன்ற குழந்தைகளுக்கு //
Innuma indha dialoguea vidala? Edra vandiya police stationukku oru child marriage pathi complainta kudukkanum :P

//அன்னிய தேசத்துக்கு எல்லாம் ஹைனிமூன் போனா அப்துல்கலாம் கோச்சுப்பார்.//
ROTFL :)) Unga moolaikku mattum dhaan ippadi ellam vilakkam thonum..

G3 said...

//ச்சும்மா! அப்படி ஷ்டார்ட் பண்ணா தான் எல்லா ரங்கமணிகளும் இதுக்காவது ஒழுங்கா வழிக்கு வருவாங்கனு என் பிரண்டு சொன்னா!
//
//"ஹி இஸ் மை ரங்கமணி!"னு அம்மணி சமயம் பார்த்து கோல் போட்டு நமட்டு சிரிப்பு(வில்ல சிரிப்பு) சிரிக்க//

Aaha.. Thangamani thelivaa thaan irukkaanga.. appo ambi vaalu surundu dhaan irukkum :D Haiya.. kekkavae embuttu sandhoshama irukku ;)

G3 said...

//அழகிய கேரள படங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போமா? //

Ada paaveengala.. motha vaazhkaiyaiyum padhiva pottudara ideava? seri seri.. edho neenga odha vaangara kadhai ellam potta naangalum sandhosha paduvomilla :D

G3 said...

//enaku prithviraj thaan ninaivuku vandhaan.. apo naa youth eh? //

@Padmapriya, Haiya.. neengalum namma katchiya.. kai kudunga :))

CVR said...

வழக்கம் போல கலகலப்பான போஸ்ட் தல!!
நல்லா சிரிச்சு ரசிச்சு படிச்சேன்!!

நெக்ஸ்ட் பார்ட் சீக்கிரம் போடுங்க!! :-)

Dreamzz said...

//4) மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், கோபிகா குட்டி, காவ்யா மாதவன், நவ்யா நாயர் போன்றவர்கள் அவதரித்த திவ்ய ஷேத்ரம் என நீங்கள் நினைத்து இருந்தால் கையை குடுங்கள் - யூ ஆர் ஸ்டில் யூத்.//
மி இன் திஸ் குரூப்!!

Dreamzz said...

அடுத்த பதிவ மலையாளத்தில் போடாம இருந்தா சரி!!

Dreamzz said...

3

Dreamzz said...

24

Dreamzz said...

25

கீதா சாம்பசிவம் said...

மூணாறு ட்ரிப்புக்கு வெயிட்டிங்க்! :P

Anonymous said...

//மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், கோபிகா குட்டி, காவ்யா மாதவன், நவ்யா நாயர் போன்றவர்கள் அவதரித்த திவ்ய ஷேத்ரம் என நீங்கள் நினைத்து இருந்தால் கையை குடுங்கள் - யூ ஆர் ஸ்டில் யூத்.
//

Aen Ambi!! Mamooty,Mohan lal ellam unga kannukku thaeriatha???

Anonymous said...

//திருப்பதி ரேஞ்சுக்கு வரிசை நீன்டு இருந்தாலும் நிற்கும் களைப்பே தெரியலை. ஹிஹி, குருவாயூர் குத்து விளக்குகள் எல்லாம் கையில் விளக்குடன் வரிசையில் நின்னா எப்படிப்பா களைப்பு தெரியும்?
//

Aepadi Ambi ungalala mattum ippadi mudiuthu????

Veetla coffee thaan kazhakkuringa nu partha, Blog la intha kazhakku kazhakkuringa....

வல்லிசிம்ஹன் said...

Ambi,
azhaka Guruvaayoorappanooda
honeymoon Arambamaa.
munnaar padanggaL podunga sir.:)

enakku guruvayur paal paayasam thaan ninaivu vanthathu. appoo naan aanmikamthaane:))))

Arunkumar said...

தல
அயம் ஸ்டில் யூத் யா :)

Arunkumar said...

//
"கும்தலக்கடி கும்மாவா! கேரளானா சும்மாவா?"
//
ஆஹா இதுவல்லவோ டைட்டில் !!!

Arunkumar said...

//
எங்கூர் ஆத்தங்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து தாமிரபரணியில் கால் நனைத்து கொண்டே ஹனிமூனை கொண்டாடலாம்னு ஒரு பட்ஜட் பத்மநாபன் பிட்டை போட்டு பார்த்தும் ஒன்னும் நடக்கவில்லை.
//

இந்த பிட்டெல்லாம் அம்பது வருஷத்துக்கு முன்னாடி கூட எடுபடாது.. எதுக்கு இந்த ரிஸ்க்குங்கறென்..

Arunkumar said...

போட்டோக்களுக்காக பெயிட்டிங்.. சீக்கிரம் போடுங்க :)

Arunkumar said...

//
Ada paaveengala.. motha vaazhkaiyaiyum padhiva pottudara ideava? seri seri.. edho neenga odha vaangara kadhai ellam potta naangalum sandhosha paduvomilla :D
//

நல்லா இரும்மா..
நல்லா இரு !!!

Anonymous said...

Post that Trichoor "kuththu vilaku" photo...thanks

Gopalan Ramasubbu said...

உள்ளேன் குருவே!

Anonymous said...

ennaku keralanna vudane pachai pasel ooru, konjam gopika,meera jasmine,mammooty,konjam mohanlal,chips,konjam kalaripayattu ,eellathaikattilum romba romba azhgana chinna krishnan,elanner maduram (payasam),sandhana pengal ellam nyapagam varudhu.kudumba kuthuvillakkukku idhellam thonum.neega venunna thanga manikitte kettu parunga.
nivi.

Anonymous said...

poori kattai motham +retail sale pathi thangamani visaripathhhaga kelvi.innum bagavathy amman dharishanam aagala polirukku!!!!!!!! aattha thangamanikku konjam naalla arull!! purivai.namma velai mudinchu pochu .ineme ellam aatha pathupaa.

Anonymous said...

title "poori kattai pradhapangal_kerala vijayam part1"nnu vechirkkallam. illana "valliyoda keralam"vechirukkalam.nivi.

Anonymous said...

enga thangamaniya eppa kulu manali,mt.abu,d.dun ellam kooti povinga idellam avanga paarkavendama.appa than travel anubhavangal+adula ambisirukku kidaithha aapu pathi naanga rasikka mudiyum.ready for the trip!!!!
nivi.

தி. ரா. ச.(T.R.C.) said...

மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், கோபிகா குட்டி, காவ்யா மாதவன், நவ்யா நாயர் போன்றவர்கள் அவதரித்த திவ்ய ஷேத்ரம் என நீங்கள் நினைத்து இருந்தால் கையை குடுங்கள் - யூ ஆர் ஸ்டில் யூத்.


அம்பி என்ன நீ நயனதாராவை விட்டுடயே.CA பொண்ணு.ஆமாம் நான் எந்த கேடகரின்னு சொல்லு

காசை கணக்குப் பாத்து நீ தனிமூன் போறதா இருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும்

ஆரம்பமே களைகட்டிவிட்டது.பேஷ்

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-))))

ROTFL...

.:: மை ஃபிரண்ட் ::. said...

yappaaa. jollu thaanggalai.. konjam thodachikkongga anna. :-D

Karthik Sriram said...

Poori Kattai seems to be ever looming threat?? Anyways, Naanga guruvayoor pogamaya iruppom? appo parthukirom - swamy matrum kuthuvilakayaum thaan! :P

LKS

Anonymous said...

திருப்பதி ரேஞ்சுக்கு வரிசை நீன்டு இருந்தாலும் நிற்கும் களைப்பே தெரியலை. ஹிஹி, குருவாயூர் குத்து விளக்குகள் எல்லாம் கையில் விளக்குடன் வரிசையில் நின்னா எப்படிப்பா களைப்பு தெரியும்?

True True True......

ஒரு வழியா தரிசனம் முடிந்து(உம்மாச்சி தரிசனம்ப்பா!)

Romba thimir ambi.Idhai sonnadhadhukae MC ungalai poori kattaiyal nanna adikalam...... (indha madhiri cut and paste pannina than artham seriya iruku... he he he)

With Love,
Usha Sankar.

mgnithi said...

ROTFL post ambi.. kalakkal post..

Ungalukku keralanu sonna vudane 1 to 6 varaikkum irukkara ella pointum gnyabagam vanthurukku.. so neenga intha ella characteroda cocktail... ha ha

Arunkumar said...

//
காசை கணக்குப் பாத்து நீ தனிமூன் போறதா இருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும்
//
LOL :)

KK said...

Ambi style comment :D

Kittu said...

//அழகிய கேரள படங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போமா?

have u posted ur marriage snaps ? adhukulla honeymoon snapskku poiteenga

Kittu said...

//மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், கோபிகா குட்டி, காவ்யா மாதவன், நவ்யா நாயர் போன்றவர்கள் அவதரித்த திவ்ய ஷேத்ரம் என நீங்கள் நினைத்து இருந்தால் கையை குடுங்கள் - யூ ஆர் ஸ்டில் யூத்.
//

Aen Ambi!! Mamooty,Mohan lal ellam unga kannukku thaeriatha???

REPEATTU !
Poori kattai eduthum thirundhalaye neenga.

Kittu said...

pipty ! pipty ! pipty !

half century th comment pottadhukku
Butter scotch icecream venum.

K mami

My days(Gops) said...

//கேரளா என்றவுடன் உங்களுக்கு சட்டுனு என்ன நினைவுக்கு வருகிறது?//

முதல் எல்லாம் "சேச்சி"கள் தான் நியாபகத்துக்கு வரும்.. இப்போ எல்லாம்,

குண்டு அரிசியும்,
குழா புட்டும் தான் வருது... ஹி ஹி

My days(Gops) said...

//அதனால அன்னிய தேசத்துக்கு எல்லாம் ஹைனிமூன் போனா அப்துல்கலாம் கோச்சுப்பார்.//

இது வேற'யா? :O

//எங்கூர் ஆத்தங்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து தாமிரபரணியில் கால் நனைத்து கொண்டே ஹனிமூனை கொண்டாடலாம்னு//

அதுக்கு வீட்டிலேயே இருந்து இருக்கலாம்..

My days(Gops) said...

Rotfl Post தல...

//- யூ ஆர் ஸ்டில் யூத்.//

யா மீ மீ மீ டூ யூத்

அடுத்த போஸ்ட் சீக்கிரம்...

My days(Gops) said...

//Veetla coffee thaan kazhakkuringa nu partha, Blog la intha kazhakku kazhakkuringa//

ஹாலோ, இவரு முதல்'ல கலக்குனது பிலாக்'ல தான்.... அதுக்கப்புறம் தான் வீட்டுல காபி எல்லாம் கலக்க கத்துக்கிட்டாரு......

நல்லா சொல்லுறாங்கப்பா டீடெயிலு....

வசீகரா..Vaseegara said...

Ambi Anna,

Kerala vai pathi ezhudhittu...
Engal thalavi ASIN pathi onnume sollalaye anna.. really bad :(.

valliya keralam - title is better than what you said...

- Vaseegara

cheena (சீனா) said...

//குருவாயூர் குத்து விளக்குகள் எல்லாம் கையில் விளக்குடன் வரிசையில் நின்னா எப்படிப்பா//

கூட தங்கமணி கூட இருந்தும் = பக்கத்துலே பூரிக்கட்டை கடை இருந்தும் குத்து விளக்கு பாத்தா .... தைரியம் ஜாஸ்தி தான்.

// மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், கோபிகா குட்டி, காவ்யா மாதவன், நவ்யா நாயர் போன்றவர்கள் அவதரித்த திவ்ய ஷேத்ரம் என நீங்கள் நினைத்து இருந்தால் கையை குடுங்கள் - யூ ஆர் ஸ்டில் யூத்.//

நான் இந்த கேடகரி தான்

குருவாயூர்லே உம்மாச்சி தர்சனம் தான் பண்ணனும்

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信