Saturday, July 08, 2006

Pubs In Banglore



பெங்க்ளுரில் நீங்கள் ரோட்டில் தடுக்கி விழுந்தால் மூன்று இடங்களில் விழ வாய்ப்புள்ளது.

1) அனுமார் கோவில்கள் - தினமும் நான் சாஷ்டாங்கமாக விழும் இடம்.
2) பூங்காக்கள் - 1 அல்லது 2 வாரங்களுக்கு ஒரு முறை சன்டேக்களில் லால் பாகில் அதி காலை தடுக்கி விழுவேன்.
3) பப்புகள்.

நான் நெல்லை மாவட்டத்தில் பள்ளி செல்லும் காலங்களில்(ஒரு 8th படிக்கும் போது), நம்ம தோஸ்து ஒருத்தன் லீவுக்கு பெங்க்ளுர் போய்ட்டு வந்து, எங்களிடம் 70 எம்.எம் சினிமாஸ்கோப்பில் பி.வாசு மாதிரி சூப்பரா கதை விட்டான். அதில் சில துளிகள்:

1) பெங்க்ளுரில் எப்போ பார்த்தாலும் பனி மழை தான். நன்னாரி சர்பத் பாட்டில் கையில இருந்தா, நாம ஜூஸ் போட்டு, போட்டு குடிச்சுண்டே இருக்கலாம்.

(இங்கு இருக்கும் மிதமான கிளைமேட்டுக்கு தான் அந்த p.வாசு இவ்வளவு பில்டப் குடுத்தான்னு எனக்கு அப்போ தெரியாது. ஆஆ!னு வாய் பிளந்தேன்.)

2) சகஜமா நாம, தெருவுல கூட எல்லா இந்தி நடிகைகளையும் பார்க்கலாம். மாதுரி தீட்சித்தை கூட நான் பார்த்தேன்.(அப்போ, ஏக்! தோ! தீன் பாட்டு சக்கை போடு போட்டது!)

(இங்கு உலா வரும் சில சப்பாத்திகளை தான் அந்த நாதாரி பாத்துட்டு, "மாதுரி தீட்சித்"னு எங்களிடம் கதை விட்டான்னு எனக்கு இப்போ தான் உரைக்கிறது.)

3) அங்கே நிறைய பப்புகள் இருக்கு!

மூணாவது பாயிண்ட் தான் எங்களுக்கு புரியலை.

"போடா! நீ ஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் ஏதோ ஒரு வார்த்தையை பாத்துட்டு எஙகளிடம் ரீல் விடறியா?"னு எங்கள் செட்டில் ஒருத்தன் சுதாரித்து விட்டான்.

நானும் என் பங்குக்கு, " நான் குழந்தையா இருக்கும் போது(இப்பவும் நான் குழந்தை தான்) என் அம்மா நெய் விட்டு பிசைஞ்சு பிசைஞ்சு எனக்கு ஊட்டி விட்ட பப்பு சாதம் விக்கற ஓட்டலை தானேடா நீ சொல்ற?" இது ஒரு பெரிய விஷயமா?னு புத்திசாலிதனமா அவனை மடக்கி விட்டேன்.

அந்த கூட்டத்துக்கு நான் தான் மொட்டை பாஸ்.
என் கூட்டத்துக்கு நான் சொல்றது தான் தீர்ப்பு! செல்லாது! செல்லாது!னு அவனது மூணாவது பாயிண்டை தள்ளுபடி செய்து விட்டோம்.

அதன் பின் நான் காலேஜ் படிக்க மதுரை வந்தாச்சு. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, இங்கேயும் ஒரு நண்பன் லீவுக்கு பெங்க்ளூர் போயிட்டு வந்து, "பெங்க்ளூர் கலக்கலா இருக்குடா மச்சான்! கிளைமேட்டும் சரி, அத விடு, பப்ஸ் எல்லாம் அட்டகாசமா இருக்கு டா மாப்ளே!"னு சொல்ல, நான் "சரி, இவன் ஏதோ ஐயங்கார் பேக்கரி கடையில் கிடைக்கும் பப்ஸை தான் சொல்றான்!"னு நினைத்துக்கொண்டேன்.

வேலைக்கு சென்னை வந்து ஒரு வருடம் ஓடிய பின் தான் கொஞ்சம் விவரம் புரிந்தது. அதுவும், கம்பெனியில் எதாவது பார்ட்டி வந்தா, உடனே, நண்பர்கள் "எலா! சன்முகம்! எடுறா வண்டிய!"னு நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு சவுண்டு விட்டு, பப்ஸை நோக்கி படை எடுப்பார்கள்.(அங்கு சென்று வாந்தி எடுப்பார்கள், அது வேற விஷயம்!)

நீயும் வா! சும்மா வேடிக்கை பாரு!னு கெஞ்சினாலும் நான் சிக்கியதில்லை.

அதன் பின் பெங்க்ளுரில் வேலை கிடைத்தவுடன், ஊருக்கு போய் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு ஜாயின் பண்ணலாம்னு போனேன்.

என் பக்கத்து வீட்டுல ஒரு புண்ணியவான் இருக்கார். அவர் நின்ன இடம் தீப்பற்றி எரியும். கொளுத்தி போடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

சும்மா நான் லீவுக்கு போனாலே, "ஏய்! என்ன அம்பி வந்துட்ட? வேலை அவ்ளோ தானா?"னு கேட்டவர். யோவ்! லீவுக்கு வந்திருக்கேன்யா! 4 நாளுல திரும்பி போயிடுவேன்!னு நான் மட்டும் விளக்கம் சொல்லலை அவ்ளோ தான்!

"நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!அம்பியை வேலயை விட்டு தூக்கிட்டா! அதான் திரும்பி வந்துட்டான்!'னு டமுக்கு அடித்து விடுவார் அந்த மனுஷன்.

நான் தாமிர பரணியில் குளிக்க போயிருக்கும் போது(சுமாரா ஒரு 4 மணி நேரம் ஊறுவேன்) என் அம்மா அப்பாவிடம் என்ன சொன்னாரோ தெரியாது.

நான் (ஊறி) வந்தவுடன் என் அம்மா, "இதோ பாரு! பெங்களுரில் கண்ட கண்ட இடத்துக்கேல்லாம் போக கூடாது! நல்லவாளோட சேரணும்! உனக்கு நல்ல புத்தியை குடுக்கனும்னு அந்த பகவானிடம் நாங்க வேண்டிப்போம்! நீயும் வேண்டிக்கோ! என்ன புரிஞ்சதா?"னு என்னை போட்டு தாக்க, "ஆகா! பத்த வெச்சியே பரட்டை!"னு நான் அந்த ஆள் வீட்டை பார்த்து முறைத்தேன்.

என் தம்பி, இது தான் நல்ல சமயம்னு, அம்மா! அண்ணா அத மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் மா! தண்ணி அடிச்சாலும், வாந்தி எடுக்க மாட்டான் மா!னு ஸேம் சைடு கோல் அடித்தான்.

அடப்பாவி! உனக்கு பேண்ட், டி.ஷர்ட், sweets எல்லாம் நான் வாங்கி தறலையா? ஏன்டா இந்த நேரத்துல பழி வாங்கற?னு நான் கெஞ்சினேன்.

அதன் பின், தென் ஆப்ரிக்காவுக்கு போகும் காந்தி ரேஞ்சுக்கு, "பெருமாள்/அனுமார் கோவில் தீர்த்தம் தவிர எதையும் நான் இதுவரை தொட்டதில்லை! இனி தொட போவதும் இல்லை!"னு டிஸ்கிளைமர் குடுத்த பின் தான் வீடு சகஜ நிலைக்கு திரும்பியது.

போன வாரம், நண்பர் ஒருவருடன் M.G.ரோடில் ரோடில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் இரவு டிபன் சாப்பிட நேர்ந்தது. பில்லை அவர் கட்டுவார்னு நான் நினைக்க, என்னை விட பார்ட்டி படு உஷாரு. பின் இரண்டு பேரும் ஷேர் பண்ணினோம்.

மாடியில் இருந்த அந்த ஓட்டலுக்கு கீழே ஒரு பப் இருந்ததை நான் கவனிக்க வில்லை. அவர் பார்த்து விட்டு, "என்ன, அம்பி! இதேல்லாம் பாத்ருக்கீங்களா? தண்ணி அடிச்ச்ருக்கீங்களா?னு கேட்டார்.

இது என்ன, மைசூர் ராஜா அரண்மனையா? மற்றபடி, மதுரையில் இரண்டு நாளைக்கு ஒரு தரம் வைகை தண்ணீர் கார்பரேஷனில் விடுவார்கள். குடம் குடமா எங்க பாட்டிக்கு அடிச்சு குடுத்ருக்கேன்னு நான் நக்கல் விட்டதில் பார்ட்டி டென்ஷனாகி விட்டார்.

சம்போ மகாதேவா! நாம கிளம்பலாமே!னு அவஸ்தையாக நெளிந்தேன்.

அவர் விடாமல், எப்படி இருக்கு?னு சும்மா உள்ள போயி பாருங்க!னு கூட்டி போனார்.

நைட் லேம்ப் தான் எல்லா டேபிள்களிலும் போட்டிருந்தனர். ஒரே புகை மண்டலம். எல்லார் கையிலும் புகைந்து கொண்டு இருந்தது.

சிவ சிவா! ராம ராமா! சில பாரதி கண்ட புதுமை(?) பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். சில பேர் கையில் சோம பானம் வேறு!

பாவம்! அவாளுக்கு வீட்டில் என்ன கஷ்டமோ, மாமியார் கொடுமையோ யாரு கண்டா!

"மூச்சு முட்றது! போகலாம்!"னு நான் வெளியே வந்து விட்டேன்.

ரூமுக்கு வந்ததும், ஜில்லுனு(night 10 pm) ஒரு குளியல் போட்டு அனுமார் ஸ்லோகங்கள் சொன்ன பிறகு தான் நிம்மதி பிறந்தது!
நான் UG - B.sc(chem)படித்ததால், சிகரெட், மற்றும் தண்ணியால் என்னவேல்லாம் வரும்னு நல்லா தெரியும்.

பின் குறிப்பு: அடுத்த போஸ்ட் "கும்பாபிஷேகா! ஆராதனா!"
எட்டாவது அதிசயமான ஐஸ் குட்டி நடித்த ஜீன்ஸ் படம் பார்த்து விட்டு இந்த போஸ்ட்டை படிக்கவும்.

49 comments:

G.Ragavan said...

அம்மாஞ்சி....சரியா ஏழு வருசம் முன்னாடி பெங்களூர் நான் வந்தப்போ இருந்ததுக்கும் இப்ப இருக்குறதுக்கும் வித்தியாசம் எக்கச்சக்கம். அப்பல்லாம் துணியக் காயப் போட்டா காய நாலு நாளாகும். அப்புறமும் எடுத்து உள்ள வெச்சா...ஏதோ ஈரத்துணி மாதிரியே இருக்கும். இப்பல்லா பயங்கர வெயிலப்பா.

downtown, naza, purple haze, night watchman இதெல்லாம் தெரியுங்களா?

கைப்புள்ள said...

//நானும் என் பங்குக்கு, " நான் குழந்தையா இருக்கும் போது(இப்பவும் நான் குழந்தை தான்) என் அம்மா நெய் விட்டு பிசைஞ்சு பிசைஞ்சு எனக்கு ஊட்டி விட்ட பப்பு சாதம் விக்கற ஓட்டலை தானேடா நீ சொல்ற?" இது ஒரு பெரிய விஷயமா?னு புத்திசாலிதனமா அவனை மடக்கி விட்டேன்.//

அம்பி...கலக்குறீங்க. இன்னுமொரு டிரேட்மார்க் அம்பி பதிவு. தமிழ்மணத்துல வேறே சேந்துட்டீங்க இல்ல...இனிமே பாருங்க பின்னூட்டம் பிச்சிக்கிட்டு போவப் போவுது.

தி. ரா. ச.(T.R.C.) said...

"மூச்சு முட்றது! போகலாம்!"னு நான் வெளியே வந்து விட்டே".
எப்பொ முச்சு முட்டினது.உள்ளே போனதற்கு முன்னாலேயா, உள்ளே இருந்தபோதா, இல்லே வெளியே வந்தபோதா? விவரமாச்சொல்ல வேண்டாம்.

நாகை சிவா said...

அம்பி, என்ன இது, என்ன இதுனு கேட்டேன். "Pubs in Bangalore"னு தலைப்பையை போன பதிவில் நீங்க சொன்னதில் இருந்து ஆஹா, தமிழ் உலகம் எதிர்பார்க்கும் ஒரு நல்ல பதிவை தரு இருக்கும் அம்பி வாழ்க, அம்பி வாழ்கனு சொல்லிகிட்டு இருந்தவங்க எதிர்பார்ப்பை எல்லாம் இப்படி ஏமாற்றி விட்டீர்கள் என்று அங்க ஷாம் சொல்லுரது, எனக்கு இங்க இப்ப கேட்குது. இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கும் கேட்கும்.

நாகை சிவா said...

//தமிழ்மணத்துல வேறே சேந்துட்டீங்க இல்ல...இனிமே பாருங்க பின்னூட்டம் பிச்சிக்கிட்டு போவப் போவுது. //
வா தல.. நீ வரதுக்கு முன்னால நான் வந்துட்டேன்.
நீ சொல்லிட்டல அம்பியை பிச்சுக்கிட்டு போக வச்சுட்டுத் தான் மறுவேலை.

நாகை சிவா said...

//அங்கு சென்று வாந்தி எடுப்பார்கள் //
என்ன இன்னும் சின்னப்புள்ளத் தனமா வாந்தினு சொல்லிகிட்டு, ஆப்பாயில், ஆம்லெட் என்று பல வார்த்தைகளை கண்டுப்பிடித்து இருப்பது, உங்களுக்கு தெரியாதா?

//நான் தாமிர பரணியில் குளிக்க போயிருக்கும் போது(சுமாரா ஒரு 4 மணி நேரம் ஊறுவேன்) //
நம்ம குடும்ப வழக்கம் அது தானே. அத மாத்த முடியுமா? :))))

//இது தான் நல்ல சமயம்னு, அம்மா! அண்ணா அத மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் மா! //
எல்லா இளவல்களும் இப்படி தான் இருப்பான்களோ!

நாகை சிவா said...

//இது என்ன, மைசூர் ராஜா அரண்மனையா?//
ஏன் சாரு, மைசூர் ராஜா அரண்மனைய தவிர வேற எதையும் பார்க்க மாட்டீர்களோ?

//நான் UG - B.sc(chem)படித்ததால், சிகரெட், மற்றும் தண்ணியால் என்னவேல்லாம் வரும்னு நல்லா தெரியும். //
என்னவரும். அத கொஞ்சம் சொன்னால் B.sc(chem) படிக்காதவாள் எல்லாம் தெரிஞ்சிப்பா....உமக்கும் புண்ணியமா போகும்ல...

Dis: இப்பவே தொடர்ந்து நாலு கமெண்ட் போட்டாச்சு. மிச்சத்த நாளைக்கு பாத்துக்கலாம். அதுவரை அம்பியிடம் இருந்து விடை பெறுவது, சிவா... சிவா... சிவா...

இலவசக்கொத்தனார் said...

நம்பிட்டேன்யா. நம்பிட்டேன். கவலைப் படாதே. அன்னிக்கு ஒரு நாள் பிரிகேட் ரோட் முனையில் ஒரு ஆட்டோ முன்னாடி நின்னுக்கிட்டு "உங்க நாலு பேழுல யாழு ஆட்டோ டைவர்?" அப்படின்னு நீ கேட்டதையும், அங்க இருந்த ஒரே ஆட்டோ ட்ரைவர், தலையில் அடிச்சுக்கிட்டு உன்னை தூக்கிட்டுப் போனதையும் வெளிய சொல்ல மாட்டவே மாட்டேன்.

Gopalan Ramasubbu said...

hmmmm,ok.நம்பிட்டேன்

Syam said...

//எதிர்பார்ப்பை எல்லாம் இப்படி ஏமாற்றி விட்டீர்கள் என்று அங்க ஷாம் சொல்லுரது//

சிவா ஆயுசு நூறு...

அதான ஏம்பா அம்பி..பப்ல நடக்கற சில பல மேட்டர்கள பத்தி சொல்வேனு பார்த்தா இப்பிடி பன்னீட்டயே...

இருந்தாலும் அம்பி டச் அப்பிடியே இருக்கு...

Syam said...

தல வேர வந்து தத்துவம் சொல்லீட்டு போய்ருக்காரு...இனி ரேட்டிங் கிடு கிடுனு ஏறபோகுது....

Syam said...

//மூணாவது பாயிண்ட் தான் எங்களுக்கு புரியலை//

காலேஜ்ல second year Industrial Tour (???!!!) பெங்களூருக்கு போர வரைக்கும் எனக்கும் நாயர் டீ கடை பப்ஸ் தான் தெரியும்...

யப்பா நானும் 3 comments போட்டுட்டேன்... :-)

My days(Gops) said...

ambi..unga post chance'ey illa...vai vittu sirichuten....obbisla... he hehe

ippadi aniyai'athuku nallavana anniyan madhiri irrukeengaley?
kavalai'ey padadheeena, neenga election'la dhairiama nillunga., naanga ungalukku aadharavu thiratturen..

pakkathu veetu ambi( aaalu) ippa enna solluraaaan? round kattiruvoma? mmmm'nu oru vaarthai sollupaa..naan pin vaaasal valia escape aagiduren.....

@pubs:- ennathe solluradhu...idhey MG road experience enakkum undu.....

Vicky Goes Crazy... said...

ambi ... u must b knowing me i assume :) .. niraiya sensor nd twist n story pola ... unmai sollu nee enna ellam pannuney PUB ley :D ..chill just jokin ;) ..

ya i too went to a pub n chennai once ... big hotel n chennai ... nite 9 ku ponen ..trust me i dont smoke or drink .. friend oruthan kupitan ..machan inga vanthu c the babes nu ... nan sari ennamo solluran nu ponen ... pona neram ..kadamaiku dress pottu ponnunga vanthanga ..

appuram ullaey ponen .. (ssh no entry fee ellam confirm pannikitten athunaley than ponen illaina poi iruka matten :D ) .. anga partha .. English film ley nadaka kudiya ellam nadanthu pa ... solla kuda mudiyathu .. dont know epidi than avanga appa amma viduaranganu .but booze pannathey vida ...mitha co curricular activities than asigam ..chennai ah ippidi nu shock aaiten .. :) but all n the game ..but stil chennai s not as worse as banglore .. :) east or west chennai s the best :) ..

more over one more thing i want to really appreciate u .. CLAPS FOR U :) .. ur writing n TAMIZH !!! i was born n bought up n mumbai ..later at 8 went to kumbakonam but then at tat point couldnt catch tamil so much .. considering my future i had to take hindi .. but self interest, i learnt to read tamil well .. cant write :(( .. so my best wishes to u .. keep riting n tamil .. u can reply back to my blog also n tamizh .. vazga un tamil .. :) ...

have a nice day dude ... will keep n touch with ur blogs regularly :) ..

Butterflies said...

ambi engalukkum unga pakkathu aathu mamakku entha sambandamum illai!neenga ethukku ivlo explanation kudukkringa?ithellam naanga nambava illa antha maama nambava?aama asin thambiyaame neenga ..chk rams gops blog!

shree said...

adappavi ne ivvlo nallavanaa... yenakku pullarikkudhe

Ms Congeniality said...

So point conveyed: Ambi thanni adika maataaru(naa pump la thanni adikardha mean panlai)

Good :-)

Ms Congeniality said...
This comment has been removed by a blog administrator.
மு.கார்த்திகேயன் said...

அம்பி.. நான் என் நண்பர்களோட அடிக்கடி போவேன் சைடிஷ் சாப்பிட.. சில சமயம் என் நண்பர்கள், அவங்க தண்ணியை விட நான் சாப்பிட்ட சைடிஷ்க்கு தான் அதிகம் பில் அழுது இருக்காங்க.. அதுவும் இந்த T நகர்ல இருக்க அருணா ஹோட்டல் சைடிஷ் ஐயிட்டமே தனி தான்

ambi said...

@g.ragavan,ஆகா! அப்படியா? அதுனால தான் நான் ஜீன்ஸை எல்லாம் துவைக்கறதே இல்லை.

//downtown, naza, purple haze, night watchman //
இதேல்லாம் புதுசா வர போற இங்க்லீஷ் படம் பெயருங்களா? :)

btw, முருகன் உங்கள் பற்றிய பதிவுகள் எல்லாம் மிகவும் அருமை. :)

@kaipulla, ஆகா! பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வாராக! எனக்கு கையும் ஒடல, காலும் ஒடல!
சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் கூட்டத்துகே தல நீங்க!

//அம்பி...கலக்குறீங்க. இன்னுமொரு டிரேட்மார்க் அம்பி பதிவு. //
பிறந்த பயனை அடைந்தேன் கைப்புள்ள! :)

ambi said...

@veda, ஏன்மா? நானே ஒரு வம்பு தும்புக்கும் போகாம சிவனேனு இருக்கேன்! அது உனக்கு பிடிக்கலையா? gr..rrr

@TRC sir,
//எப்பொ முச்சு முட்டினது.உள்ளே போனதற்கு முன்னாலேயா, உள்ளே இருந்தபோதா, இல்லே வெளியே வந்தபோதா?//
நீங்களுமா என்னை நம்பலை?
கலாசறீங்க சார், நான் தனிய உங்க கிட்ட டியூஷனுக்கு வரேன். :)

@naagai siva,
//ஆஹா, தமிழ் உலகம் எதிர்பார்க்கும் ஒரு நல்ல பதிவை தரு இருக்கும் அம்பி வாழ்க, அம்பி வாழ்கனு சொல்லிகிட்டு இருந்தவங்க எதிர்பார்ப்பை எல்லாம் இப்படி ஏமாற்றி விட்டீர்கள் //

நீங்க உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உங்க தல் உடம்பு ரணகளமா இருக்கு! என்னையும் சிக்க வைக்க கூட்டு சதியா? நடக்காதுடி!
நான் ஏடாகூடமா பதிவு போட போயி, சில நல்லவங்க வந்து சுத்தி கும்மி அடிச்சுட்டு போயிடுவாங்க அப்பு! :)

ambi said...

@koths,
//"உங்க நாலு பேழுல யாழு ஆட்டோ டைவர்?" //

ஒரே ஊரு காரனை இப்படி ரவுண்டு கட்டலாமா? நாம எல்லாம் ஒரே தண்ணிய (னான் தாமிர பரணிய சொன்னேன்) குடிச்சவங்க, ஏதோ பாத்து செய்யுவே! :)

@syam, see my reply to nagai siva.
thanks appu :)

@mydays(gops)
//ippadi aniyai'athuku nallavana anniyan madhiri irrukeengaley? //
நான் (மீசை வெச்ச) குழந்தை பா!
i'm glad that U enjoyed the post.

@vicky, thanks dude, yeeh, i too very unhappy with the latest trend among these boys/gals. everything is for some time.. one day they will realise.. daks for the claps of tamizh postings. :)

@shuba, i just shared the exp of mine, it's not an explanation. gr..rr.

@shree, he hee, danks yekka, unga thambriii naan, so unga maathiriyee nallavanaa thaan iruppen. :)

@Ms.C, correcttaaa pointaa pudicheenga. danks.

@karthik, //இந்த T நகர்ல இருக்க அருணா ஹோட்டல் சைடிஷ் ஐயிட்டமே தனி தான் //
i too heard about this thing when i was in chennai thru my frnz. :)

நாகை சிவா said...

என்ன அம்பி, ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டு எங்க தல மாதிரியே மத்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லாம போனால் எப்படி, மத்த கேள்விகளுக்கும் எதாவது சொல்லி சமாளிங்க

Anonymous said...

நல்லா எழுதியிருக்க அம்பி!!!

//ரூமுக்கு வந்ததும், ஜில்லுனு(னிக்க்ட் 10 ப்ம்) ஒரு குளியல் போட்டு அனுமார் ஸ்லோகங்கள் சொன்ன பிறகு தான் நிம்மதி பிறந்தது//

- அண்ணா சொன்னா ஆஞ்சநேயர் சொன்ன மாதிரி!! ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது...:)))))

kuttichuvaru said...

oho.... ambi also like me..... athey Gandhi-south africa bit enakkum nadanthurukku :-)

vazhakkam pola sooper post ambi!!

vishy said...

BSc Chemistry padichathala than alcohol / cigreete ode effecttheriyum nu sollaringa... chemistry ellam padikkamaye.. ennaoda friends naraya peru alcohol / dum patri nalla vevarama solluvanga...

alcohol and lemon oourgai makes good reaction... namma dHAMU sollara mari...

btw.. summankati rou petchu kaagavathu.. itha ellam try panni paarkanum.. to know how it feels.. and makkal itha poi eppadi dhan kudikarangalo.. wiskey.. worstu... appadiye varnish aah eduthu... vayula oothina mari irukkum..

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி. ஞாயிற்றுக்கிழமை தினமலர் செய்தி இரண்டாம் பக்கம் பார்த்தீர்களா? பாவமா இருக்கு உங்களை நினைச்சா.ஒருவருடம் என்னப் பண்ணபோறீங்க. அஸினோட அம்மா அப்பாவைத் தெரியுமா? உடனே ஓடுங்கள் கார்த்திக் முந்துவதற்குள். தி ரா ச

ambi said...

@nagai siva, he hee, romba nonda kudaathu, athaan samlikarennu theriyuthu illa! :)

@dubukku, he, hee danks annachi! scenaaa? ellaam neenga solli kuduththathu thane appu! :)

@kutti, unakkumaa? naama rendu perumee nallavangka paa! danks pa!

@vishy, labla original sarakku prepare panninoom. sila vishyangal try kooda panna koodaathu - ithu adiyen karuthu!

@TRC sir, enna solreenga, onnum puriyalayee? konjam vivaramaa sollunga sir!
dhinamalar ellam enga padikka mudiyalai. already ennai asinukku thambi aakitaanga sila sathrukkal. :)

Unknown said...

how come Ambi??? unmaya mattume pesureenga??

Geetha Sambasivam said...

அம்பி, தமிழ் மணத்திலே வேறேயா? போட்டிக்கு? அதான் என் பதிவுப்பக்கமே வரதில்லையா?அப்பாடி, ஒரு வழியா அசினுக்கு "அம்பி" தான் தம்பின்னதும் நிம்மதி ஆச்சு. இல்லாட்டி ஜல்லிக்கட்டுக்கு இல்ல தலமை தாங்கணும்.

Geetha Sambasivam said...

"pubs in Bangalore" "disco in chennai" னு போட்டா பின்னூட்டம் எங்கே எங்கே இருந்தெல்லாம் வருது? நேத்திக்குத் தமிழ் மணத்திலே சேர்ந்த அம்பி இன்னிக்குத் "தல" யா? ம்ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். புகை வருது தெரியுதா? :-)

smiley said...

என் பக்கத்து வீட்டுல ஒரு புண்ணியவான் இருக்கார். அவர் நின்ன இடம் தீப்பற்றி எரியும். கொளுத்தி போடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்

avar appa amma kittai blog pattri solli vittara?

Anonymous said...

Ambi, andha Hanumar kovil list, with addresses venume... oru post'a potta better. Thanks in advance, Viji.
P.S: enga amma'kaaga kekkaren. ;)

ambi said...

@bala.g, Ammaam paa! correcttaaa sollitiye! :)

@geetha,
//ஒரு வழியா அசினுக்கு "அம்பி" தான் தம்பின்னதும் நிம்மதி ஆச்சு.//

U too brutas..? namba mudiya villai, villai villai!(3 times echo)
i joined tamizh manam ellam 1 month b4 itself... he hee :)
//புகை வருது தெரியுதா? :-) //
முதலில் ஒரு பூசணி காயை சுத்தி, நம்ம பிளாக் மேல கண்ணு போடறவங்க தலையில உடைக்கனும்! :)

@smiley, my mom itself know about my blog. innum padikkalai, he hee :)

@anonymous(viji),
//Ambi, andha Hanumar kovil list, with addresses venume... oru post'a potta better//

potruvoom! Aapichla atha vida enna velai..? en anumaarai pathi naane ezhuthanumnu irunthen.
so amma thaan nallavanga polirukku! :)
note: enna Un blogid/passworda forgettenaa or shuba kitta kuduthutiyaa? :) LOL

Anonymous said...

adhellam illa, oru somberi thanam dhan. hehe. :D
-Viji

நாகை சிவா said...

//அண்ணா சொன்னா ஆஞ்சநேயர் சொன்ன மாதிரி!! ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது...:))))) //
என்னா இது, அண்ணாவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது சொன்னாங்க, அவர போயி ஆஞ்சநேயர் கிட்ட கம்பெர் பண்ணி இருக்கீங்க.
இருங்க நான் போயி திராவிட ராஸ்கல் மக்களை இங்கன அனுப்பி விடுறேன்.

ஆனா, அண்ணன் டுபுக்கு திராவிடத்தில் சறுக்கினாலும், கடைசியில் மேட்டர சரியா சொல்லிட்டார்
ஓவர் சீனு.... அதே தான்

நாகை சிவா said...

//how come Ambi??? unmaya mattume pesureenga?? //
ஹம்.... அவரு ஹாமாம் சோப் போட்டு குளிக்கிறார். அதான்....

நாகை சிவா said...

// Karthikeyan Muthurajan said...
அம்பி.. நான் என் நண்பர்களோட அடிக்கடி போவேன் சைடிஷ் சாப்பிட.. சில சமயம் என் நண்பர்கள், அவங்க தண்ணியை விட நான் சாப்பிட்ட சைடிஷ்க்கு தான் அதிகம் பில் அழுது இருக்காங்க.. //
அண்ணன் கார்த்திக் அண்ணன், அடுத்தவன் காசுல சைட் டிஷ் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு தானா அது... நான் இதுவரைக்கும் தப்பால நினைச்சிட்டு இருந்தேன்.

ambi said...

//ஹம்.... அவரு ஹாமாம் சோப் போட்டு குளிக்கிறார்//

@nagai siva, he hee, athellam onnum illai, naan eppavumee santhoor soap thaan. ambi's maeni ezhilukku kaaranam santhoor soap!

nalla narukkunu naalu vaarthai keluppa intha karthikaa! unakku thaniyaa oru pathivu podaren! :)

Butterflies said...

counter pottaaacha?gud gud!!!!!chk my comment im damn safe...valakkam pol.....oppice!!!!mumbaikkum enakkum sambandam illai....!!!!en blog la poi paarunga commentaaa

Sasiprabha said...

Neenga paravaa illa, publa thaan paatheenga.. Naan Paying guestaa irundha PGla rum, gin, shampain ellaame paathen..(Please kindly note, paathen.. saapitten illa)

Butterflies said...

I sleted the last comment due to unavoidable reasonsss! I talk to my frds a lot ...only to frds...non frd circle...i never open my mouth!!!!!!arjun talks a lot man ...he over rides me!!!!!!!!!!he
makes me dumb!!!! I think u d have the exp now!!!!!

Harish said...

Ambi...kalakiteenga pongo!
Padichcu vizhundu vizhundu sirichu adi paduduttu...koodiya seekiram medical bill anuparen :-)

ambi said...

@shuba, counter ellam last sat itself added. :)
it's good that U deleted. i shud have avoided that comment. no issues.

@harish, danks thala, thoda medical billaa..? nalla kathaiyaa irukke chellam..! :)

ambi said...

@sasiprabha, apdiyaa? che! enna aniyaayam parunga!
*ahem* he hee, antha PG address konjam mail panna mudiyumaa? :)

KC! said...

vena ambi poi solladhan, nee thanni adicha dhane? Iru unga amma kitta pottu tharen..ennamo ramar range-ku reel vidara??

மு.கார்த்திகேயன் said...

ambi, ennai thitturathukku aal chekkuriyala.. athukku oru thani pathivu lanjama.. sssssss.. appa oru manusan periya aal akitta, eppadiya enna

Balaji S Rajan said...

Ambi,

I remember Dr.Mathurubootham's comment.

Be addicted to your wife and not to any chemicals. Anything within limit is good Ambi.

Keep up your good habits.

Anonymous said...

Enjoyed a lot! »