களத்தில் குதிக்கறத்துக்கு முன் அம்பி என்னிக்குமே,
Risk Factor Analysis Study பன்ணிட்டு தான் எறங்குவான். இல்லைனா, கைப்புள்ள rangeku அடி பட வேண்டிருக்கும்னு நேக்கு நன்னா தெரியும்.
சில பிகர்கள்,
BSRB exam எழுதவே அவஙக அப்பா, அன்ணன், தம்பி (வெட்டியா இருக்கும் பட்சத்தில்) ஒரு கோஷ்டியா தான் வரும்.
அப்பா, சும்மா இடி அமீன் மாதிரி இருப்பார். வெள்ளை வேஷ்டிய உஜாலா சொட்டு நீலம் போட்டு "மயிலிற்கே, மயிலிற்கே!" பாடலில் வரும் soorya வேஷ்டி கலரில் கட்டி இருப்பார். அதே வெள்ளை (ப்ளு) கலரில் சட்டையை தோள் வரை மடிச்சு விட்டு,ஒரு special effect தருவார்.
அண்ணன்மாருங்க, சோனியா காந்திய சுத்தி, வட்டமிட்டு வரும் பூனை படை போல இருப்பானுங்க.
நண்பன் ஒருத்தன், "என்னம்மா மின்னல்! இது எத்தனாவது படையெடுப்புனு? நக்கலடிக்க, அந்த பொண்ணு அப்பா குடுத்தார் பாரு ஒண்ணு! அவன் கடவா பல்லு கழண்டு விட்டது.
ஆழம் தெரியாமல் கால விட்டோம், அவ்ளோ தான்! பின்னி,பிருச்சுடுவாங்க!
Officela இதெல்லாம் கிடையாதே அம்பினு! உங்களுக்கு doubt வரும். ஆனா, இஙக வேற ரூபத்தில் வரும். சில, பல பசங்க, team membersnu buildup குடுத்துட்டு, எப்போதும், பிகர்களின் துப்பட்டாவ பிடிசுண்டு திரிவா!
இது எல்லாம் போதாதுனு இந்த TL, PL, PM nu ஒரு கூட்டம் உரிமை கொண்டாடும்!
இதெல்லாம், ரொம்ப carefulla analysis பண்ணினேன்!
நான் பயந்தபடியே ஒரு சின்ன சிக்கல் இருந்தது.
அந்த புயலின், எதிர் seatla அந்த டீம் லீடர் 6 அடி, 90 கிலோ சைசுல குட்டி கிங்காங் மாதிரி உக்காந்து இருக்கான்.
அந்த கிங்காங்கும்,எங்க பத்ர காளியும் daily lunch share பண்ணிக்ற அளவுக்கு நட்பாம்னு! Bengali ரசகுல்லா உளவுதுறை எச்சரிக்கை செய்தது.
கண்டிப்பா, அந்த பொண்ணு பத்தின details வேணுமா டா? nu அந்த சாது கிட்ட கேட்டேன்.
கேவலமா ஒரு பார்வை பார்த்தான்.
சரி, இனி அம்பி, ரெமொவா மாறினா தான் சரிப்படும்னு முடிவு பண்ணிட்டேன்.
Next day lunch hourla தடாலடியா, நேர அந்த பொண்ணு seat க்கு போயி, “hi, னு நான் ஆரம்பிக்குமுன்னரெ, அது, ஏய்! நீ மதுரை American காலேஜ் தானே! எங்க காலேஜ்க்கு competition க்கு வந்து தோத்துட்டு போனீங்களே! னு மானத்த வாங்கியது.
சரி, 5 போட்டில, 4 ஜெயிபோம், 1 வெற்றி வாயிப்பை இழப்போம்! (positive attitude, he hee)இதெல்லாம் பெரிசு படுத்த கூடாது! வீரனுக்கு அழகு விழுப்புண்கள்! nu சமாளிச்சேன்.
ஓகோ! எங்க college கே வந்து, எங்க prinicipal யே mimicry பண்ணி prize won பண்ணியே! அது தான்டா function highlightu!! (டா!வா? சைடுல சிந்து பாடறா?)
அப்புறம் என்ன, "யாக்கை திரி!" Rangekku ஒரெ வறுத்தல் படலம் தான்! லஞ்ச் வேற அவள் cabinla முடிஞ்சது!(சன்னா மசாலா கொஞ்சம் காரம்!)
அத்தனையும், சாது பாத்துண்டு இருந்தது!
டேய்! அவள் பேர தானெடா கேட்க சொன்னேன்! நீ டாப் கியர் போட்டு போயிட்ட போலிருக்கு!னு என் கழுத்த பிடித்தான்.
பொறுமையா கேளுடா! இப்பொ,நீ வேற, நான் வேறயாடா?
let’s assume x=y. that mean y=x னு சமாளிக்க பாத்தா, அதுக்குள்ள, நான் அவன்கிட்ட தள்ளி விட்ட tasks எல்லாத்தையும் delete பண்ணின்டு இருக்கான்.
இது போதாதுனு, நான் அந்த பொண்ணு கூட லஞ்ச் சாப்டத பத்ர காளி வேற பாத்து தொலசுட்டா! என்னை கொத்தா அள்ளின்டு போயி ஒரெ அர்ச்சனை! (இந்தில தான்!)
நம்ப இந்தி, அச்சா! பச்சா! hai Range தான்!
என்ன தான் சொன்னானு பெஙகாலி குலொப்ஜாமோன்ட கேட்டேன்.
"இந்த temala அடிக்கற லூட்டி போதாதுனு, அடுத்த teamla வேற pickup பன்னுரியா? மவனே! பொலந்துடுவேன்னு ரொம்ப decentaa சொன்னாளாம்!
எல்லாம் சரி, இந்த pickuppu na என்ன சட்டர்ஜி? nu அப்பாவியா கேட்டேன்.
லக லகனு சிரிச்சுடுத்து ரசகுல்லா!
பின்குறிப்பு: இப்பொ அந்த சாது, வேற ஒரு பொண்ணை பாத்து பெருமூச்சு விட்ரது. Help பன்ன தான் நான் இருக்கேன் என்ற தைரியம்! :)