Tuesday, July 06, 2010

நமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்

என்னிடம் ஒரு நல்ல (கெட்ட?) பழக்கம். காலையில் எந்த பாடலை முணுமுணுக்க ஆரம்பிக்கறேனோ அதே பாடல் இரவு தூங்க போகும் வரைக்கும் என்னுடன் பயணிக்கும். இதில் இன்னும் ஒரு படி மேலே போயி, பாடலுடன் அதன் பின்ணனி இசை எல்லாம் வேறு வந்து தொலைக்கும். உதாரணமாக

மேகம் கருக்குது! (டக்கு சிக்கு டக்கு சிக்கு)

மின்னல் சிரிக்குது (டக்கு சிக்கு டக்கு சிக்கு).


இப்படிதான் ஒரு நாள் "எம் பேரு மீனாக்குமாரி" வந்து விட மேலிடம் நெற்றிக் கண்ணை திறந்ததில் நாலு நாளைக்கு வலுக்கட்டயமாக "வினாயகனே வினை தீர்ப்பவனே" என சீர்காழி மாதிரி முணுமுணுக்க வேண்டியதா போச்சு.

நிற்க, நேற்று ஆபிஸ் கிளம்பும் வரை ஒரு பாடலும் வரவில்லை. இதற்காக நானும் ஒன்னும் பிரயத்தனப்படுவதில்லை. ஆபிஸ் போகிற வழியில் யாரோ ஒரு புண்யவான் தன் செல்பேசியில் ரிங்க் டோனாக கர்ணன் படத்தில் வரும் "கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? என்ற பி.சுசீலா அம்மா பாடிய பாடலை வைத்திருக்க இதோ இன்னிக்கு வரைக்கும் இந்த பாடல் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் கை வண்ணத்தில் இதை விட எளிமையாக ஒரு பெண்ணின் மனோபாவத்தை சொல்ல கூடிய பாடல் உண்டா? என சந்தேகமே.

இந்த பாடல் முழுக்க பிஜிஎம்மில் "ஆ ஆ" என ஒரு கோரஸ் ஒரே ராகத்தில் ஓடிக் கொண்டே இருக்கும். நாமே ஏதோ அரண்மனை அந்தபுரத்தில்(ஆசை தான்) உலவுவது போல தோன்ற வைக்கும்.

முதல் சரணத்தில் வரும்

"மணி கொண்ட கரம் ஒன்று அனல் கொண்டு வெடிக்கும்" - இதுக்கு என்ன அர்த்தம்? என் சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்களுக்கு என்றும் தன்யனாக இருப்பேன்னு சொல்ல வந்தேன். தங்கம் விக்கற விலையில ஆயிரம் பொற்காசு எல்லாம் பாண்டிய மன்னனுக்கே டூ மச்சோ மச்சு.

ரெண்டாம் சரணத்தில் வரும்
"கொடை கொண்ட மத யானை உயிர்க் கொண்டு நடந்தான்" - என்ன ஒரு உவமை.

யானை நின்றாலே அழகு, அதுவும் நடந்து வந்தால் இன்னும் அழகு. இதே வரிகளை கொஞ்சம் தூசி தட்டி
"தேக்கு மரம் உடலை தந்தது,
சின்ன யானை நடையை தந்தது"னு எம்ஜியாருக்கு பாடி விட்டார் ஒரு கவிஞர்(யார்னு தெரியுமா?).

சமீபத்தில் கவிஞர் தாமரை கூட காக்க காக்க படத்தில்

"சந்தியா கால மேகங்கள் வானில் ஊர்வலம் போகுதே,
பார்க்கையில் ஏனோ உந்தன் நடையின் சாயலே தோணுதே" என எழுதி இருந்தார்.

மறுபடியும் கர்ணன் பாடலுக்கு வருவோம். இந்த இடத்தில் கொடையா? குடையா..? குடையுடன் கூடிய யானை நடந்து வருவதை பார்த்ததுண்டா? ஒரு வேளை கர்ணன் என்பதால் இங்கே கொடை என்ற சொல் வந்ததா..? யாராவது கொஞ்சம் விம் பார் போட்டு விளக்குங்களேன்.

ஆபிஸ் மீட்டிங்குல கூட இதே சந்தேகம் தான். எவ்ரி திங்க் க்ளியர்?னு கேட்ட டாமேஜரிடம் இந்த டவுட்டை எல்லாமா கேக்க முடியும்? :)

கொடை கொண்ட மத யானை எப்படி நடந்து இருக்கும்?னு வீட்டில் நடந்து பாக்கும் போது தானா என் ஜூனியர் வரனும்? பார்த்து விட்டு கெக்கபிக்கெவென சிரித்து அவன் அம்மாவ வேற அங்கு கூட்டி வந்து விட்டான். இது போதாதா?

"என்னங்க, குழந்தை சாப்ட படுத்தறான், கொஞ்சம் சீக்ரம் வந்து அந்த நடை நடந்து காட்டுங்க" என தனக்கு கிடைத்த பெனால்டி கார்னரில் கோல் போட்டுக் கொண்டிருக்கிறார் தங்க்ஸ். ஆக கொடை கொண்ட மத யானை இப்பொழுது கோவில் யானையாக மாறி வீட்டில் சலாம் போட்டுக் கொண்டிருக்கிறது.

பி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)

31 comments:

மெனக்கெட்டு said...

// நமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல் //

”மச்சானப் பாத்தீங்களா மலை வாழைத் தோப்புக்குள்ள”

அப்பிடீன்னு சொன்னதா ஞாபகம்.!

கீதா சாம்பசிவம் said...

. ஆக கொடை கொண்ட மத யானை இப்பொழுது கோவில் யானையாக மாறி வீட்டில் சலாம் போட்டுக் கொண்டிருக்கிறது.

பி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)//

hihihiவேணுங்கட்டிக்கு வேணும்,
வெங்கலங்கட்டிக்கு வேணும்!

ஹிஹிஹிஹி, ஜாலியா இருக்கே~!

கீதா சாம்பசிவம் said...

மீ த பர்ஷ்டு??? ஹையா, ஹையா!எனக்கே பொற்காசுகள்.

G3 said...

Adhisayam aanaal unmai.. me the firstae :)))

G3 said...

Namithavukku piditha paatunu title pottutu ungalukku pudicha paata pathi pottirukkeenga..

idhan moolam thaangal solla varum karuththu.. U = Namithavaa??? (appadina thangamani yaanai nadai nadandhu kaata sonnadhu correctu dhaan :P)

Anonymous said...

என்ன கொடுமை இதல்லாம். ஒரு நல்ல யானையை இப்படி தட்சண்யமே இல்லாம கோவில் யானையா மாத்திபுட்டாய்ங்களே? நல்ல வேளை பையன் கையிலே கொஞ்சம் சில்லரை காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கும் விளையாட்டை சொல்லி தரலைன்னு சந்தோஷப்படுங்க அம்பி.

குறிப்பு: அழகா கம்பீரமா வளம் வந்த என்னை இப்படி அனானியா ஆக்கினது பிளாக்கர் குற்றம். நான் என்ன செய்யட்டும். என் பெயரில் போட்டா "சார் போஸ்ட்"ன்னு அடுத்த வினாடியே எனக்கே திரும்பி வந்துடுது. அதையே அனானியா போட்டா 'டாட்டா, பை பை" எல்லாம் சொல்லிட்டு நட்ராஜ் ஸ்கூல் போவது போல சமத்தா போகுது. எல்லாம் நேரம் தான்.

இப்படி பிளாக்கரே அனானிகளுக்கு ஆதரவு கொடுத்தா பின்னே ஏன் கலவரம் வராது?

Anonymous said...

அதானே பாத்தேன். பதிவு முழுக்க நமீதா பேரே வரலைன்னு. ஹிட் வாங்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அப்பறம் நமீதா பேரை போடாம எப்படி :)

கீதா சாம்பசிவம் said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜி 3 நான் இல்லை ப்ர்ஷ்டு??? என்னோட கமெண்ட் வந்ததைப் பார்த்துட்டுத் தானே ப்ளாகையே மூடினேன்?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்s

கீதா சாம்பசிவம் said...

கீதா சாம்பசிவம் has left a new comment on the post "நமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்":

. ஆக கொடை கொண்ட மத யானை இப்பொழுது கோவில் யானையாக மாறி வீட்டில் சலாம் போட்டுக் கொண்டிருக்கிறது.

பி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)//

hihihiவேணுங்கட்டிக்கு வேணும்,
வெங்கலங்கட்டிக்கு வேணும்!

ஹிஹிஹிஹி, ஜாலியா இருக்கே~!


grrrrrrr ithai mathiyanam 1-53kku potiruken, ninga appurama potirukinga, me the firshtu, enakke porkasukaL.

கீதா சாம்பசிவம் said...

கீதா சாம்பசிவம் has left a new comment on the post "நமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்":

மீ த பர்ஷ்டு??? ஹையா, ஹையா!எனக்கே பொற்காசுகள். //

ithu 1-54-kku potathu grrrrrrrrrrrrrrrrrrrrrrrr

Subha said...

//ஆபிஸ் மீட்டிங்குல கூட இதே சந்தேகம் தான். எவ்ரி திங்க் க்ளியர்?னு கேட்ட டாமேஜரிடம் இந்த டவுட்டை எல்லாமா கேக்க முடியும்? //
அப்பா தாங்க முடியல அம்பி:))) LOL

sriram said...

தாங்க முடியல அம்பி, ஏன் ஏன் ஏன்??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

k4karthik said...

//பி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)//

ச்சே.. இது தெரியமே பதிவை படிச்சுட்டேனே..

//U = Namithavaa??? //
namithavukku vandha sodhanai..

//(appadina thangamani yaanai nadai nadandhu kaata sonnadhu correctu dhaan :P)//

hee hee.. nee coreecta solludhu machan..

வித்தியாசமான கடவுள் said...

//என தனக்கு கிடைத்த பெனால்டி கார்னரில் கோல் போட்டுக் கொண்டிருக்கிறார்//தம்பி... பெனால்டி வேறு... கார்னர் ஷாட்/கிக் வேறு... ரெண்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது...


//இப்படிதான் ஒரு நாள் "எம் பேரு மீனாக்குமாரி" வந்து விட மேலிடம் நெற்றிக் கண்ணை திறந்ததில் நாலு நாளைக்கு வலுக்கட்டயமாக "வினாயகனே வினை தீர்ப்பவனே" என சீர்காழி மாதிரி முணுமுணுக்க வேண்டியதா போச்சு.//இதுக்கு தான் அப்பப்போ நாங்களும் இதை பாடுறோம் - "டேய்... வாய வச்சுகிட்டு சும்மா இருடா...."

அப்பாவி தங்கமணி said...

//இப்படிதான் ஒரு நாள் "எம் பேரு மீனாக்குமாரி" வந்து விட மேலிடம் நெற்றிக் கண்ணை திறந்ததில்//

எனக்கென்னமோ அது பாட்டுல இருக்கற fault னு தோணலை.... பாடினவர் கொடுமைய தாங்க முடியாம அவங்க அப்படி ஒரு reaction குடுத்து இருக்கலாம்... கரெக்ட் தானே தங்கமணி?


//நாமே ஏதோ அரண்மனை அந்தபுரத்தில்(ஆசை தான்) உலவுவது போல தோன்ற வைக்கும்.//

ஏன்பா கார்த்தி... என்னமோ அப்பாவி ரங்கமணிகள் ஆரம்பிக்கறதுக்கு இவிக தாங்க்ஸ் இவரை பாடவிடலைனு ஒரு காரணம் சொன்னீங்களே... நீங்கெல்லாம் அப்பாவிகளோ... மேல இருக்கற வரிய பாரு... நான் ஒண்ணும் சொல்லலப்பா...(ஹையோ ஹையோ...)

அப்பாவி தங்கமணி said...

//"மணி கொண்ட கரம் ஒன்று அனல் கொண்டு வெடிக்கும்" -//
அதுக்கு என்ன அர்த்தம்னா... இப்படி எல்லாம் பதிவு போட்டா வீட்டுக்கு போறப்ப ஹெல்மெட் போட்டுக்கணும்னு அர்த்தம்...கரெக்ட் தானுங்க நான் சொல்றது... (ஹி ஹி ஹி)

//"கொடை கொண்ட மத யானை உயிர்க் கொண்டு நடந்தான்"//
உங்கள பத்தி நீங்களே இப்படி பெருமை பேசிக்கணுமா என்ன... (ஹி ஹி ஹி)

//யாராவது கொஞ்சம் விம் பார் போட்டு விளக்குங்களேன்.//
ஐயோ ஐயோ ஐயோ.....

அப்பாவி தங்கமணி said...

//ஆபிஸ் மீட்டிங்குல கூட இதே சந்தேகம் தான். எவ்ரி திங்க் க்ளியர்?னு கேட்ட டாமேஜரிடம் இந்த டவுட்டை எல்லாமா கேக்க முடியும்? :)//
கேட்டு தான் பாருங்களேன்... கிளியர்ஆ வீட்டுக்கு போய்டலாம்... ஹி ஹி ஹி

//கெக்கபிக்கெவென சிரித்து அவன் அம்மாவ வேற அங்கு கூட்டி வந்து விட்டான். இது போதாதா?//
குழந்தையும் தெய்வமும் ஒண்ணு... வேற ஒண்ணும் சொர்லதுக்கு இல்லங்க... (ஹா ஹா ஹா)

//பி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)//'
இவங்க அப்பாவிக... இவங்களுக்கு ஒரு சங்கம்... இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லையா?

uthira said...

ena ivlo seekramaaaaaaaaaaaaaaaa adutha post nan vera edavthu blog ku mari vanthutena

ஷைலஜா said...

என்ன தைரியம் ஒரு தரமானபாடலுக்கு அர்த்தம் தெரியாமல் தலைப்பில் நமீதாவைபோடறதுக்கு?:)

//. நாமே ஏதோ அரண்மனை அந்தபுரத்தில்(ஆசை தான்) உலவுவது போல தோன்ற வைக்கும்//////

பேராசை அம்பி இதுக்குப்பேரு!!

//"மணி கொண்ட கரம் ஒன்று அனல் கொண்டு வெடிக்கும்" - இதுக்கு என்ன அர்த்தம்///

காதல் அனல் நெஞ்சில் வீசுதுப்பா....அதனால மணிகொண்டகரம் அதாவது குறுகிய அல்லது சிறுத்தஅல்லது இளைத்த கரம் என்று பெயர் அந்தக்கை சூட்டில வெடிக்குதாம். காதல் உணர்வினை அழகாய் சொல்றபாடலை கிண்டலா பண்றீங்க?:)
வரேன் கொடைகொண்ட மதயானைக்கும் ச்சீக்கிரமா:)

ஷைலஜா said...

மறுபடியும் கர்ணன் பாடலுக்கு வருவோம். இந்த இடத்தில் கொடையா? குடையா..? குடையுடன் கூடிய யானை நடந்து வருவதை பார்த்ததுண்டா? ஒரு வேளை கர்ணன் என்பதால் இங்கே கொடை என்ற சொல் வந்ததா..? யாராவது கொஞ்சம் விம் பார் போட்டு விளக்குங்களேன்/////
.<<<<>>>>

vimbarஆ?:) குறும்புத்திலகமே! கொடைன்னா என்ன? அள்ளிக்கொடுக்கும் தன்மைன்னு எல்லார்க்கும் தெரியும்.
கொடைன்னா புகழ் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. போரில் மன்னனுடன் சென்று வெற்றிபலகண்ட புகழ்கொண்ட மத யானை உயிர்க்கொண்டு நடந்தமாதிரி அப்படி ஒரு கம்பீர நடைன்னு சொல்லிக்கிறா காதலி.
எனக்கு ரொமப்பிடிச்ச இந்தப்பாடலை இனிமே நமீதாக்கு சமர்ப்பணம் செஞ்சீங்க அம்பி.... கேசரியை கண்ல காட்டவே மாட்டேன் ஆமா:):)

ambi said...

அடடா மெனகெட்டு வந்து ஒரு உண்மைய சொல்லிட்டீங்க, நீங்க தான் பஷ்ட்டு. :))

கீதா பாட்டி, வெள்ளி காசு தான், நல்லா கண்ணாடிய தொடச்சிட்டு பாருங்கோ. பிளக்கார் எல்லாருக்கும் அல்வா குடுத்து விட்டது. :))

ஜி3 அக்கா, செப்டம்பர் மாதம் வரட்டும். அப்புறம் இருக்கு உங்களுக்கு. :p

அபி அப்பா, இன்னும் காசு எல்லாம் தரலை. பிளாக்கர் புகுந்து விளையாடி விட்டது. :)

சின்ன அம்மணி, ஒல்ட் வைன் இன் நியூ பாட்டில். :)

நன்றி சுபா. :)

பாஸ்டன் அண்ணாச்சி, நல்ல பாட்டு தானே..? ஏன்? :)

வாங்க k4k, ஹிஹி, தலைப்ப பாத்து வந்தீங்களா..? :p

விகடவுள், தகவலுக்கு நன்றி.

Arunkumar said...

boss
konjam padikkambodhe therinjirchu.. indha postukkum namitha-kum sammandame illanu.. ponga boss...

கைப்புள்ள said...

///கவியரசு கண்ணதாசன் அவர்கள் கை வண்ணத்தில் இதை விட எளிமையாக ஒரு பெண்ணின் மனோபாவத்தை சொல்ல கூடிய பாடல் உண்டா? //

ஏதேது ஆராய்ச்சியெல்லாம் பலமாயிருக்கு? இருந்தாலும் நீங்க என்கிட்ட பகிர்ந்துக்கிட்ட உங்களோட 'அந்த' ஆராய்ச்சி மாதிரி இது திருப்திகரமா இல்லை எனக்கு :)

Shree said...

namakkum kathala enna songo adhu dhan naal mulukka. nethu it was "where is the party" :)
indha madhiri azhagana padalgal neraya undu. but most of them will comment on girls only. very rarely on boys!!
Namithakku enna pattu pudikkumnu pottuttu, ungalukku pudichadha pottu irukkeenga??
BTW i have moved to a new valaipoo. though not writing much... pls do visit http://wacky-ramblings.blogspot.com/

கைப்புள்ள said...

ஆசானே!
நீங்க என்கிட்ட சொன்னதை எல்லாரோட நன்மைக்காகவும் பப்ளிக் டொமைன்ல போட்டுருக்கேன். புத்தகமா நீங்க போட நெனச்சதை நான் பதிவா போட்டுட்டதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்.

http://kaipullai.blogspot.com/2010/07/blog-post.html

மோகன் குமார் said...

அம்மாஞ்சி உங்க பெங்களூரு பதிவை என் ப்ளாகில் (வாரா வாரம் எழுதும்) வானவில் பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். முடிந்தால் பார்க்கவும்

ambi said...

அப்பாவி தங்கமணி, ஒரு முடிவோட தான் பின்னூட்டம் போடறீங்க போல. :))

உத்ரா, வேலை இருந்தா நான் ஏன் பதிவு போட பொறேன்..? பதிவ பத்தி ஒன்னுமே சொல்லலையே..? :p

ஷைலக்கா, வாங்க, வாங்க, உங்களை தான் எதிர்பாத்தேன். என் சந்தேகத்தை தீத்து வெச்சுட்டீங்க. இந்த பாட்டை நான் எங்க கிண்டல் பண்ணீ இருக்கேன்..? நல்ல பாட்டுன்னு தானே சொல்லி இருக்கேன். :))

அருண், வாய்யா நல்லவனே, இப்ப தான் வழி தெரிஞ்சதா..? :))

கைப்ஸ், அந்த ஆராய்ச்சியா? எந்த ஆராய்ச்சி..? :p
நல்லா பழி வாங்கறாங்க பா.

வாங்க ஷ்ரீ, உங்க புது வீட்டுக்கு வந்து பாக்கறேன். வெயிட்டீஸ். :)

நன்றி மோகன்.

Anonymous said...

nalla patta enga ketka mudiyudhu....puli urumudhu idi idikidhunnu high decibel pattellam kettu kadhellam sevidanadhu dhaan micham.en rengamani addikadi paadi(verupetthum)pattu...kandhasami,madasami..pammal sambandham).sonna thirundhava poreenga!!!!
nivi.

ambi said...

//en rengamani addikadi paadi(verupetthum)pattu.//

@nivi, lol on that song. nalla karuthugal nerancha paatu. :))

Anonymous said...

Since this kind of business on the web grow rapidly, it attracts also some abusive individuals taking advantage of you. Remember that this is online, we do not know how reliable these sports betting websites. One way to determine the reliability of sports betting website is to join forums where you can inquire some of the details of this website. And the best one is to make sure that this sports betting website is registered in the where it operates. [url=http://www.pulsebet.com/bg/]bet online[/url] [url=http://www.pulsebet.com/da/]bet online[/url] [url=http://www.pulsebet.com/de/]bet online[/url] [url=http://www.pulsebet.com/es]apuestas[/url] [url=http://www.pulsebet.com/fr/]jouer en ligne[/url] [url=http://www.pulsebet.com/gr]bet online[/url] [url=http://www.pulsebet.com/jp]bet online[/url] [url=http://www.pulsebet.com/nl]bet online[/url] [url=http://www.pulsebet.com/pl]bet online[/url] [url=http://www.pulsebet.com/pt]bet online[/url] [url=http://www.pulsebet.com/ro]bet online[/url] [url=http://www.pulsebet.com/ru]bet online[/url] [url=http://www.pulsebet.com/se]bet online[/url] [url=http://www.pulsebet.com/it]bet online[/url] [url=http://www.pulsebet.com/cn]bet online[/url] When it comes time to place your wager, you should know how to bet the two most common types of wagers which is against the spread and betting the over/under. http://www.pulsebet.com/bg/ http://www.pulsebet.com/da/ http://www.pulsebet.com/de/ http://www.pulsebet.com/es/ http://www.pulsebet.com/fr/ http://www.pulsebet.com/gr/ http://www.pulsebet.com/jp/ http://www.pulsebet.com/nl/ http://www.pulsebet.com/pl/ http://www.pulsebet.com/pt/ http://www.pulsebet.com/ro/ http://www.pulsebet.com/ru/ http://www.pulsebet.com/se/ http://www.pulsebet.com/it/ http://www.pulsebet.com/cn/

mouli said...

முதலாவதாக, அந்த வரிகள்
"கொடை கொண்ட மதயானை" தான் "குடை கொண்ட " அல்ல !!

நானும் இந்த வரிகளின் பொருள் என்ன என அசை போட்டுப் பார்த்தேன்.

"அருள் கொண்ட" என்று ஆண்டவனைச் சொல்வதுண்டு அல்லவா
அது போல "கொடை கொண்ட" என்பதற்க்கு, கொடையெனும் பெரும் குணம் கொண்ட கர்ணன் என பொருள் கொள்ளலாம் அல்லவா? "மத யானை" என்பதற்க்கு
"கர்வம் கொண்ட " என கூட பொருள் கொல்ளலாம்

ஆமாம் ஏன் "உயிர் கொண்டு வந்தான்" என சொன்னார்?
"காதலியான எனக்கு உயிர்கொண்டு வந்தான்" என சொல்லுகிறாளோ என்னவோ?
அதனால் தான் அடுத்த வரியில்அவன் இல்லாமல் :
குறைகொண்ட் உடலோடு தனியாக மெலிந்தேன் என பாடுகிறாளோ

கண்ணதாசன், வெறும் எதுகை மோனைக்காக எழுதியவர் அல்ல என என்பது
எல்லோருக்கும் தெரியுமே.!! இதுபோல பல பாடல்களில் அவர் மறைமுகமாக‌
சொன்ன செய்திகள் தான் அவரை கவியரசராஅக்கின !!