கர்நாடக பிலிம் சேம்பரின் அழுகுனி ஆட்டத்தாலும், என் மேனேஜரின் சதியாலும் படம் வந்த முதல் வாரம் போக முடியலை. இப்பல்லாம் படத்தின் ப்ரிவியூவுக்கே லாப்டாப்புடன் பதிவர்கள் சென்று அந்த டைரக்டருடன் அமர்ந்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள். போகட்டும்.
கதை என்ன? கருத்து என்ன?னு எல்லாம் நான் நீட்டி முழக்க விரும்பலை. கவனமாக எல்லா விமர்சனங்களையும் தவிர்த்து விட்டு தான் இந்த படத்தை பாத்தேன். படத்தில் ஐஸ் நடித்திருப்பதே தியேட்டருக்கு போன பின்பு தான் தெரியும். :)
பெண்களூரில் வார கடைசியில் தியேட்டருக்கு போனால் தலையில் துண்டு போட்டு கொண்டு தான் திரும்ப வரனும். எனவே கடவாய் பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டதுனு ஆபிசுக்கு லீவு சொல்லி ஐஸ் ராவணன் படம் பாக்க தம்பதி சமேதராய் கிளம்பியாச்சு. நிற்க, அம்மணிக்கு மணி ரத்ன படங்கள் பிடிக்கும்.
முன்புற சீட்டீல் காலை நீட்டாதீர், ஒன்று பெற்றால் ஒளி மயம், அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப், கோபுரம் மஞ்சள் தூள், பெண் குழந்தைகளை படிக்க வைங்க! என ஒரு விளம்பரமும் போடாமல் படக்குனு படத்தை போட்டுட்டாங்க பாவி பசங்க.
பொதுவாக மணி ரத்னம் படங்களை பார்ப்பதற்கு முன்னால் முந்தைய நாள் ஜான்சன் அன்ட் ஜான்சன் காது குடையும் பட்ஸ் வாங்கி காதை நன்றாக க்ளீன் செய்து கொள்வேன். படத்தில் பக்கோடா விக்கும் துணை நடிகர் முதல் வில்லன் வரை எல்லாருமே "ஏன்? எப்படி? அப்டியா? யாரு..?சொல்லிடு"னு ஏதோ கிச்சனுக்குள் கேசரி திருடி திங்க போனவன் மாதிரியே ஹஸ்கி வாய்ஸில் பேசுவார்கள். "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது"னு எழுபது டெசிபலில் வசனம் கேட்டு வளந்த நம்ம கூட்டத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது. புதுசா நாலு எவரெடி(சிவப்பு) பாட்டரி போட்ட ஒரு டார்ச் லைட்டும் ரொம்ப அவசியம். மொத்த படத்தையும் நாப்பது வாட்ஸ் பல்பு வெளிச்சதில தான் அவரு படமாக்கி இருப்பாரு. இருட்டா இருக்கற எடத்துல நாம டார்ச் அடிச்சு பாத்துக்கலாம்.
ஆனா இதுகெல்லாம் கொஞ்சமும் இடம் தராமல் இந்த படத்தில் ஐஸ் வராத ப்ரேம் கூட பளிச்சுனு இருக்கு. ஐஸை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒரு பாட்டு கூட வைக்க தெரியலை மணிக்கு. அட, விக்ரமுக்காவது
" நான் தான்டா வீரா,
பறக்குது பாரு புறா!
பாத்து தொலச்சியா சுரா?"னு ஒரு ஒப்பனிங்க் சாங்க் வைக்க வேண்டாமோ..?
மனிதர்களை அப்படியே காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு பில்டப் இல்லை, இவன் தான் வில்லன், இவன் தான் ஹீரோன்னு எல்லாம் முத்திரை குத்தலை. விக்ரம் ஏன் அடிக்கடி வாயல் கொட்டு அடிக்கிறார்?னு புரியலை. ஆனால் அவரது உடல்மொழிகள் அற்புதம். நாகரீகம் கருதி மிக கவனமாக பல வட்டார (கெட்ட) வார்த்தைகளை தவிர்த்து அல்லது எடிட் செய்து இருக்கிறார்கள்.
மலையில் இருந்து ஐஸ் கீழே விழும் காட்சியை வைரமுத்துவுக்கு போட்டு காட்டி விட்டு தான் உசுரே போகுதே! பாட்டை எழுதி வாங்கி இருப்பார்கள்னு உறுதியாக சொல்கிறேன். கள்வரே பாடலில் ஐஸை சுத்தி எதுக்கு ஆறு கண்ணாடி வைத்து படமாக்கினார்கள்னு தெரியலை. படத்தின் பல முடிவுகளை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார். "என்ன தைரியம் இருந்தா என் கண் முன்னாடியே வீராவ சுடுவீங்க?னு வீட்டுக்கு போயி, ஐஸ் ப்ருத்வியை கும்மு கும்முனு கும்முவாரா..? அல்லது ஐஸே ஒரு முடிவுக்கு வந்து ப்ரித்வியை டைவர்ஸ் செய்து விட்டு "ஓ! ஒரு தென்றல் புயலாகி வருதே!னு பேக்ரவுண்டில் சாங்க் ஒலிக்க இன்ஸ்டென்ட் பெண்ணீயவாதியாக மாறி நடந்து போய்கிட்டே இருப்பாரா?னு எனக்கு ஒரே மண்ட குடச்சல். மணிக்கு மெயில் அனுப்பனும்.
வசனங்கள் ஒகேன்னு சொல்ல தோணினாலும் ஷார்ப்பா இல்லை. வட்டார வழக்கு என்றெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. எங்கூரு பாசை எங்களுக்கு தெரியும்லே!
தூத்துகுடி இன்ஸ்பெக்டர் பெயர் ஹேமந்த் என்பது ரொம்பவே ஓவர். என்னிடம் கேட்டு இருந்தால் ஒரு டஜன் பெயர்கள் சொல்லி இருப்பேன். வழக்கமாக மணி படங்களில் வரும் கல்யாண சீன் பாடல்களில் ஏதாவது ஒரு பாட்டி அபிநயம் பிடிப்பார். ப்ரியா மணி கல்யாண சீன் மீண்டும் யாரோ யாரோடி நினைவு படுத்துகிறது. 'நித்தி புகழ்' ரஞ்சிதா அந்த பாடலில் ஏதோ ரேணிகுன்டா ரெட்டி வீட்டுப் பெண் போல காசு மாலை எல்லாம் போட்டுக் கொண்டு வருவதாக காட்டுகிறார்கள். இதையும் சன் டிவி நிஜம் நிகழ்ச்சியில் புலனாய்வு செய்வார்கள் என நம்புகிறேன்.
கார்த்திக், பிரபு இருவரையும் இதே மணி தான் அக்னி நட்சத்திரத்தில் இயக்கினார். இப்பொழுதும் அதே மணி தான் இயக்கி இருக்கிறார். தம்மை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இளமையும், காலமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
இன்னமும் அலை பாயுதே போல இல்லை, அக்னி நட்சத்திரம் போல இல்லைன்னு எத்தனை காலம் நாம் சொல்லி கொண்டிருக்க போகிறோம்னு தெரியலை. அதை போலவே இந்த படம் இருந்தால் தான் தப்பு. எனக்கு படம் பிடித்து இருந்தது. ஒரு வேளை நான் அறிவு ஜீவியாகி விட்டேனோன்னு பயமாகவும் உள்ளது.
பி.கு: எனக்கென்னவோ மணி படத்தின் பெயரை ஐஸ் ராவணன் என வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என தோன்றுகிறது.
28 comments:
Label "Feelings of India" என வைத்திருக்கலாம்:))
பல்லிடுக்கில் தேங்காய் துகள் புகுந்தது என லீவா? ம்ம் பெண்களூரில் வேலை பாக்கலாம் போலிருக்கே !!
நீங்க அறிவு ஜீவி என உங்களுக்கு படம் பிடித்ததில் இருந்து உறுதி செய்ய படுகிறது.
உண்மையில் உங்க விமர்சனம் தந்த நல்ல அனுபவம் எனக்கு படம் தரலை!
//முந்தைய நாள் ஜான்சன் அன்ட் ஜான்சன் காது குடையும் பட்ஸ் வாங்கி காதை நன்றாக க்ளீன் செய்து கொள்வேன்//
//இருட்டா இருகக்ற எடத்துல நாம டார்ச் அடிச்சு பாத்துக்கலாம்.//
//இதையும் சன் டிவி நிஜம் நிகழ்ச்சியில் புலனாய்வு செய்வார்கள் என நம்புகிறேன்.//
இப்படி பல இடங்களில் புன்னகைக்க வைத்தீர்கள். வாரம் ஒரு முறையாவது எழுதுங்கள். இது அன்பு கட்டளை :))
நல்ல விமர்சனம்.. ஆனா பாருங்க, நீங்க ஒரு முதாலளித்துவ சிந்தனையாளர் என்பதை நிரூபிக்கரீர்கள் ..
ஐஸைப்ப்பாத்து நீங்க ஜொள் விட்டதை தங்கமணி கண்டுக்கலை போலிருக்கு :)
எனக்கும் படம் பிடித்திருந்தது. நானும் அது பற்றி எழுடிஹ்யிருக்கேன். கிச்சன்’ல புகுந்து கேசரி தின்னற உவமை சூப்பர். இப்படி யோசனை வரதுக்கு ரூம் போட்டு யோசிப்பீயளோ?
ஐஸ்க்கு இவ்வளவு பில்ட் அப் பா?
ஐஸ் இருந்த ஜில்லுனு இருக்கும் நு பார்த்து இருக்கேன்... அம்பி இருக்கும் இடத்தில் ஐஸ் இருந்த ஜொள்ளுன்னு இருக்கும் நு இப்போ புரிஞ்சது
ஆஹா...இது விமர்சனம்.
நாலு பேர் அடிச்ச கமன்டடை வச்சு இது தேறாத படம் போல இருக்குன்னு நினைச்சு நிம்மதியா விட்டுருந்தேன். இப்போ, உங்க தயவுல, சென்னைல தண்ணி கஷ்டம் போது கை பம்ப்செட் ல அடிச்சு பிடிச்சி வச்ச பக்கெட் தண்ணி போல குழம்பிட்டேன் அம்பி, சந்தோசம் தானே? சரி போறேன்...எங்க வீட்டு அலமாரீங்கர குப்பை தொட்டீல இறங்க நேரம் வந்திருச்சு. எதுக்கா? பின்ன எப்படி டார்ச் மற்றும் ஜான்சன் அண்ட் சான்சன் பட்ஸ் எல்லாம் கண்டுபிடிக்கறது?
http://mikchar.blogspot.com
அந்த ஜான்சன் பட்ஸும் டார்ச் லைட்டும் தான் பதிவிலேயே அடுத்ததாய்ப் பிடிச்ச வரிகள். அப்போ மட்டும் கொஞ்சம் மூளை வேலை செஞ்சு அறிவு ஜீவியாய் ஆகி இருக்கீங்க போல! :P
:) நல்லாவே திருவாய் மலர்ந்து இருக்கீங்க அம்பி...
தலைப்பு, வசனங்களை தவிர்த்து படம் எனக்கும் பிடித்து இருந்தது :)
உங்களுக்கு பரந்த மனசுங்க...
கண்ணா... நான் படம் முதல் வாரம் பார்த்தேன்... எண்பது ரூபாய் நுழைவுச்சீட்டு (ticket) ... அதுவும் உங்கள் அறிவில் உள்ள திரைஅரங்கு தான்...
""ஐஸ் நடித்திருப்பதே தியேட்டருக்கு போன பின்பு தான் தெரியும். :)"
What a bluff!!:))
""பொதுவாக மணி ரத்னம் படங்களை பார்ப்பதற்கு முன்னால் முந்தைய நாள் ஜான்சன் அன்ட் ஜான்சன் காது குடையும் பட்ஸ் வாங்கி காதை நன்றாக க்ளீன் செய்து கொள்வேன் ""
பேசாம அந்தக்காலத்து குரும்பை கம்பி வாங்கி key chain ல கோத்துண்டுடுங்கோ. நன்னா குடைஞ்சு DRUM ம் டமார் ஆயிடும். அப்புறம்!!... சனி விட்டது !! கேக்கவே வேண்டாம் அவா ஒவ்வொத்தரும் மென்னு மென்னு முழுங்கி பேசறத !!
ஹிஹிஹி ஜெயஸ்ரீ, அருமையான யோசனை, இது தோணலை பாருங்க எனக்கு! :))))))))
உங்கள் விமர்சன வசனங்கள் அருமை.
இனிமேல் மணி நெல்லை பற்றிய படங்கள் எடுக்க நேர்ந்தால் (எப்படியும் எடுப்பார், மணி க்கு தமிழ்நாட்டு கிராமம் என்றாலே நெல்லை மாவட்டம் தான் தெரியும்) , உங்களை, டுபுக்கு போன்ற பதிவர்களை வசன கர்த்தாக்களாக வைத்து கொள்ள வேண்டும்.
இப்பல்லாம் படத்தின் ப்ரிவியூவுக்கே லாப்டாப்புடன் பதிவர்கள் சென்று அந்த டைரக்டருடன் அமர்ந்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள்
தூத்துகுடி இன்ஸ்பெக்டர் பெயர் ஹேமந்த் என்பது ரொம்பவே ஓவர் (அதென்ன அப்படி சொல்லிடிங்க, நாங்க வீ கே புறத்திலேயே மனிஷா koiralavai காட்டின ஆளுங்க (பம்பாய்), இந்திராவில் கிராமத்து மாணவனாக Fair&lovely அரவிந்த் சாமீ..).
//ஐஸ் ராவணன் படம் பாக்க தம்பதி சமேதராய் கிளம்பியாச்சு.//
அட! என்னா தெகிரியம்?
//இளமையும், காலமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.//
ஐயோ ஐயோ ஐயோ ! என்ன கருத்து :)-
பதிவு சூப்பர். அந்த படத்துல நடிச்ச சுஷ்மிதாசென் பத்தி எதுவும் சொல்லாதது வேதனையா இருந்த்துச்சு.
//கர்நாடக பிலிம் சேம்பரின் அழுகுனி ஆட்டத்தாலும், என் மேனேஜரின் சதியாலும் படம் வந்த முதல் வாரம் போக முடியலை. இப்பல்லாம் படத்தின் ப்ரிவியூவுக்கே லாப்டாப்புடன் பதிவர்கள் சென்று அந்த டைரக்டருடன் அமர்ந்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள். போகட்டும்.
கதை என்ன? கருத்து என்ன?னு எல்லாம் நான் நீட்டி முழக்க விரும்பலை. கவனமாக எல்லா விமர்சனங்களையும் தவிர்த்து விட்டு தான் இந்த படத்தை பாத்தேன். படத்தில் ஐஸ் நடித்திருப்பதே தியேட்டருக்கு போன பின்பு தான் தெரியும். :)
பெண்களூரில் வார கடைசியில் தியேட்டருக்கு போனால் தலையில் துண்டு போட்டு கொண்டு தான் திரும்ப வரனும். எனவே கடவாய் பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டதுனு ஆபிசுக்கு லீவு சொல்லி ஐஸ் ராவணன் படம் பாக்க தம்பதி சமேதராய் கிளம்பியாச்சு. நிற்க, அம்மணிக்கு மணி ரத்ன படங்கள் பிடிக்கும்.
முன்புற சீட்டீல் காலை நீட்டாதீர், ஒன்று பெற்றால் ஒளி மயம், அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப், கோபுரம் மஞ்சள் தூள், பெண் குழந்தைகளை படிக்க வைங்க! என ஒரு விளம்பரமும் போடாமல் படக்குனு படத்தை போட்டுட்டாங்க பாவி பசங்க.
பொதுவாக மணி ரத்னம் படங்களை பார்ப்பதற்கு முன்னால் முந்தைய நாள் ஜான்சன் அன்ட் ஜான்சன் காது குடையும் பட்ஸ் வாங்கி காதை நன்றாக க்ளீன் செய்து கொள்வேன். படத்தில் பக்கோடா விக்கும் துணை நடிகர் முதல் வில்லன் வரை எல்லாருமே "ஏன்? எப்படி? அப்டியா? யாரு..?சொல்லிடு"னு ஏதோ கிச்சனுக்குள் கேசரி திருடி திங்க போனவன் மாதிரியே ஹஸ்கி வாய்ஸில் பேசுவார்கள். "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது"னு எழுபது டெசிபலில் வசனம் கேட்டு வளந்த நம்ம கூட்டத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது//
as usual ambi style padithu siriiiiiiiiiiithen na siripathai parthu en PATU vum sirithu mahiznthathu
கர்நாடக பிலிம் சேம்பரின் அழுகுனி ஆட்டத்தாலும், என் மேனேஜரின் சதியாலும் படம் வந்த முதல் வாரம் போக முடியலை. இப்பல்லாம் படத்தின் ப்ரிவியூவுக்கே லாப்டாப்புடன் பதிவர்கள் சென்று அந்த டைரக்டருடன் அமர்ந்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள். போகட்டும்.
கதை என்ன? கருத்து என்ன?னு எல்லாம் நான் நீட்டி முழக்க விரும்பலை. கவனமாக எல்லா விமர்சனங்களையும் தவிர்த்து விட்டு தான் இந்த படத்தை பாத்தேன். படத்தில் ஐஸ் நடித்திருப்பதே தியேட்டருக்கு போன பின்பு தான் தெரியும். :)
பெண்களூரில் வார கடைசியில் தியேட்டருக்கு போனால் தலையில் துண்டு போட்டு கொண்டு தான் திரும்ப வரனும். எனவே கடவாய் பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டதுனு ஆபிசுக்கு லீவு சொல்லி ஐஸ் ராவணன் படம் பாக்க தம்பதி சமேதராய் கிளம்பியாச்சு. நிற்க, அம்மணிக்கு மணி ரத்ன படங்கள் பிடிக்கும்.
முன்புற சீட்டீல் காலை நீட்டாதீர், ஒன்று பெற்றால் ஒளி மயம், அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப், கோபுரம் மஞ்சள் தூள், பெண் குழந்தைகளை படிக்க வைங்க! என ஒரு விளம்பரமும் போடாமல் படக்குனு படத்தை போட்டுட்டாங்க பாவி பசங்க.
பொதுவாக மணி ரத்னம் படங்களை பார்ப்பதற்கு முன்னால் முந்தைய நாள் ஜான்சன் அன்ட் ஜான்சன் காது குடையும் பட்ஸ் வாங்கி காதை நன்றாக க்ளீன் செய்து கொள்வேன். படத்தில் பக்கோடா விக்கும் துணை நடிகர் முதல் வில்லன் வரை எல்லாருமே "ஏன்? எப்படி? அப்டியா? யாரு..?சொல்லிடு"னு ஏதோ கிச்சனுக்குள் கேசரி திருடி திங்க போனவன் மாதிரியே ஹஸ்கி வாய்ஸில் பேசுவார்கள். "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது"னு எழுபது டெசிபலில் வசனம் கேட்டு வளந்த நம்ம கூட்டத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது
as usual ambi style padithen sirithen nan siripathai parthu en PATU vum sirithu mahizhnthathu....
//புதுசா நாலு எவரெடி(சிவப்பு) பாட்டரி போட்ட ஒரு டார்ச் லைட்டும் ரொம்ப அவசியம். மொத்த படத்தையும் நாப்பது வாட்ஸ் பல்பு வெளிச்சதில தான் அவரு படமாக்கி இருப்பாரு. இருட்டா இருக்கற எடத்துல நாம டார்ச் அடிச்சு பாத்துக்கலாம்.//
ithellam epayo kumudam vikatan jokes le padicha gnabaham
ambi ku velai ilama iruka vazhtukal
படத்தில் ஐஸ் நடித்திருப்பதே தியேட்டருக்கு போன பின்பு தான் தெரியும். :)
apadiya nambitom !!!!!! kudumbathoda poirukingala pavam theriya vaipila than
பேசாம அந்தக்காலத்து குரும்பை கம்பி வாங்கி key chain ல கோத்துண்டுடுங்கோ. நன்னா குடைஞ்சு DRUM ம் டமார் ஆயிடும். அப்புறம்!!... சனி விட்டது !! கேக்கவே வேண்டாம் அவா ஒவ்வொத்தரும் மென்னு மென்னு முழுங்கி பேசறத !!
nalla yosanaya iruke try pani parunga ambi
நேற்றே உங்கள் பதிவில் கமெண்ட் இட்டு பிறகு அது காணாமல் போய்விட்டது (என் தவறுதான்). பிறகு எழுதலாம் என்று விட்டுவிட்டேன் :)
//கிச்சனுக்குள் கேசரி திருடி திங்க போனவன் //
இது :))
//மலையில் இருந்து ஐஸ் கீழே விழும் காட்சியை வைரமுத்துவுக்கு போட்டு காட்டி விட்டு தான் //
அப்படியா? அவர் விழுந்தாரா என்ன? ஏதோ நடனம் ஆடியது போல்தானே தெரிந்தது?
//தூத்துகுடி இன்ஸ்பெக்டர் பெயர் ஹேமந்த்//
எங்கூர்ல கூடத்தான் ரித்தேஷ், சுமந்த்னு நிறைய நண்பர்கள் இருந்தாங்க. தூத்துகுடின்னா அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன்னு மட்டும்தான் பேர் வைக்கனும்னு சொல்வீங்கப் போல :))
//இன்னமும் அலை பாயுதே போல இல்லை, அக்னி நட்சத்திரம் போல இல்லைன்னு எத்தனை காலம் நாம் சொல்லி கொண்டிருக்க போகிறோம்னு தெரியலை.//
அதுதான் சோகமான உண்மையும் கூட. அந்த மணியை நாம எல்லாரும் தேடிட்டுத்தாங்க இருப்போம்.
ராவணன் பற்றிய என் விமர்சனம்
இங்கே பார்க்கவும்
namba maniyachennu"nambi
" poi "raavan" parthadukku....hmm emathittarunnu dhaan sollanum.abi,ash,rahman,mani....combinationukku oru blockbuster edhirpathhu konjam emandhen.cinematography asathal.matrapadi.....maniya nambi ponadukku renga"mani" yoda pocketill irundha motha moneyum adlabs swaha!!!!pepsi,andavil popcorn,icecream,corn,2 coffee,nachos,burger ellam "combo"vil saapittum depression pogala.manisir,munna oru kalathilannu pulamba vechiruvarunnu ninaikkiren..ambi,unga vimarsanam padathai vida nalla irundadhu.
nivi.
ஒஹொ இதுதான் அந்த ஐஸ் பிரச்சினையா:)
நான் என்னவோன்னு நினைச்சுட்டேனே.:(
அம்பி உங்கள் பதிவைப் பார்த்த பிறகு எனக்கும் ராவணா பார்க்க ஆசை.
அவர்கள் எடுத்த முயற்சிக்காவது பார்க்கணும்னு யோசிக்கிறேன். மணிக்கு ''நெல்லை'' பிடிச்ச அளவு பிடிபடலையோ என்னவோ.சூப்பர் விமர்சனம். மத்தபடி நீங்க எழுதினைதையே திருப்பி காப்பி பேஸ்ட் செய்து உங்களைப் பாராட்டுவது தேவையில்லைன்னு நினைக்கிறேன். கேசரி பிரமாதம்.
உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி மோகன். விஜய் மாதிரி கட்டளை எல்லாம் போட்டு இருக்கீங்க. :))
எல்கே, அட ஆமா, நல்லா பாயிண்டை நோட் பண்றாங்க பா. :))
சின்ன அம்மணி, நான் தான் சொன்னேனே, தியேட்டருக்கு போன பிறகு தான் ஐஸ் இருப்பதே தெரியும்னு... :p
விஜய், உவமை எல்லாம் தானா வருதுடே. உம்ம விமர்சனம் நல்லா இருக்கு, கமண்டினேன், கூகிள்காரான் சதி பண்ணிட்டான். ;(
எக்ஸ்ட்ரா, ரைட்டு விடுங்க.
மீனா சங்கரன், உங்களுக்கு படம் பிடிக்கலாம், பிடிக்காம போனா டிக்கெட் கசு எல்லாம் மணியார்டர் பண்ண சொல்லி கேக்கப்படாது. :))
கீதா பாட்டி, உங்க அளவுக்கு மூளை வேலை செய்யாது, அதான் கூகிள் காரனுக்கே தெரிஞ்சு போச்சே. :p
நன்றி புலி. எப்படி இருக்கீங்க..? :)
ராராசோழன், ஆமாங்க, ரொம்ப நன்றிங்க.
வி.கடவுள், நான் சொல்வது மல்டிப்ளக்ஸ். புஷ்பாஞ்சலி இல்லை.
ஜெயஸ்ரீ, நல்ல யோசனை, படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தாலும் உங்க யோசனை ரெம்ப உதவியா இருக்கும். :p
ராம்ஜி, இதெல்லாம் டூ மச்சா எனக்கே தோணுது. வி.கே.புரத்திலும் மனீஷா ரேஞ்சுக்கு பிகர்கள் இருக்காங்க. :))
திவாண்ணா, எல்லாம் ஒரு நம்பிக்கை தான். :)
மணி, யோவ், நானே யோசிச்சு ஒன்னு சொன்னா இப்படியா சிரிக்கறது. :))
உத்ரா, இப்படி பதிவையே காப்பி பண்ணீனா எப்படி..? அடடா? குமுதம் ஜோக்கா? எனக்கு தெரியாதே.
ஸ்ரீதர் அண்ணாச்சி, உங்க விமர்சனம் தூள். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் தான் நெய் தீபம் இல்லை. :))
நிவி, உங்கள யாரு அபிஷேக் வந்துட்டு போன ராவண் பாக்க சொன்னது..? :p
வல்லிமா, ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு.
//பேசாம அந்தக்காலத்து குரும்பை கம்பி வாங்கி key chain ல கோத்துண்டுடுங்கோ. நன்னா குடைஞ்சு DRUM ம் டமார் ஆயிடும். அப்புறம்!!... சனி விட்டது !! கேக்கவே வேண்டாம் அவா ஒவ்வொத்தரும் மென்னு மென்னு முழுங்கி பேசறத !!// ஜெயஸ்ரீ, நீங்க எந்தப் பக்கமா இருக்கீங்கன்னு சொல்லுங்க, அந்த பக்கமா திரும்பி நமஸ்காரம் பண்ணிக்கிறேன். செம கமென்ட்!!!
அக்மார்க் அம்பி விமர்சனம். நன்றி:-)
ஆமா, //தியேட்டருக்கு போன பிறகு தான் ஐஸ் இருப்பதே தெரியும்னு... :p// படத்துல, விக்ரம் எப்படி இருந்தாருன்னு தங்கமணி சொன்னாங்களா? ஹிஹி:-)
nachu comment Nice
Post a Comment