கல்யாணம் ஆகி கடந்த ரெண்டு வருஷத்தில் இப்படி ஒரு புத்தாண்டை நான் எதிர்கொள்ளவேயில்லை. இந்த முறை புத்தாண்டு ரொம்பவே வித்யாசமாய், விசேஷமாய், குதூகலமாய் அமைந்தது என மெய்மறந்து நான் சொல்ல நினைத்தாலும் கடந்த கால வரலாறு கற்றுக் கொடுத்ததை எண்ணி அடக்கி வாசிக்கிறேன். சரி, பீடிகை போதும்.
தங்கமணி டிசம்பர் கடைசி வாரம் என்னை தனியே விட்டு விட்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட (இல்லை, டீவி சீரியலில் வருகிற மாதிரி புருஷன் கொடுமையெல்லாம் ஒன்னுமில்லை) எனக்குள் ஷெம்பெய்ன் பாட்டிலை ஒப்பன் பண்ணியது போல, கழுத்துப் பட்டை செயினை அவுத்து விட்டதும் ஒரு வித மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து ஓடும் நாய் போல, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. அதெல்லாம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. கண்டவர் வின்டிலர் மாதிரி தான் இதுவும்.
சட்டுனு வெளிகாட்டினா தங்க்ஸ் பிரோக்ராமை கான்சல் செய்துவிடக் கூடிய அபாயங்கள் இருந்ததால் நிர்மலமான முகத்துடன் வளைய வந்தேன்.
நீங்க குக்கர் வெச்சா சாதம் குழஞ்சு கஞ்சி மாதிரியில்ல வரும்?
ஒரு வாரம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க? போன்ற கிடுக்குபிடி கேள்விகளுக்கு எல்லாம் லாவகமாய் தப்பினேன்.
சாப்பாடா முக்யம்? இப்ப என்ன, சாம்பார் வெச்சா ரசம் மாதிரி வரபோகுது. சாதம் கெட்டியா தான் இருக்கனும், இப்படிதான் சாம்பார் இருக்கனும் என்ன கோபன் ஹேகன்ல தீர்மானமா இயற்றி இருக்கு..?
திடுதிடுப்புனு கிச்சனுக்குள் நுழைந்தால் அலிபாபா குகை மாதிரி தான் இருக்கும். எப்படியும் தேடி கண்டுபிடிச்சுக்கலாம். என்ன ஆனாலும் புளி எங்க இருக்கு? பருப்பு எங்க இருக்கு?னு போன் பண்ணி கேட்க கூடாது. இந்த முறை தீர்மானமாய் இருந்தேன்.
"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்,
அவன் யாருக்காக கொடுத்தான்?"
"யார் தருவார் இந்த அரியாசனம்?"
மனதினில் கன்னாபின்னாவென சிச்சுவேஷன் சாங்க் வந்து விழுகிறது.
எப்படியும் ப்ரீயா தானே இருப்பீங்க, இதையெல்லாம் முடிச்சு வைங்க. ஒன்னரை முழத்துக்கு ஒரு லிஸ்ட் நீளுகிறது.
ப்பூ இவ்ளோ தானா? தொலைஞ்சு போறது. எவ்வள்வோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?
ஒரு வாரம் தங்கு தடையில்லாமல் கிரிகெட் மாட்ச் (ஹைலேட்ஸ் உட்பட) பாக்கலாம். ஜிடாகில் பழைய நண்பர்களுடன் வம்பளக்கலாம்.
"சொல்லில் வருவது பாதி!
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி!!"
இந்த பதிவை படித்துவிட்டு, கமண்டாமல் நீங்கள் நழுவுகிற நேரத்தில் இதோ ஒரு வாரம் முடிய போகிறது.
அந்த நாளும் வந்திடாதோ? (இல்ல சும்மா பக்த மீரா பாடலை பாடினேன் அவ்ளோ தான்).
எல்லோருக்கும் இனிய (தாமதமான) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பி.கு: அடுத்த பதிவு வர தாமதமானால் நீங்கள் அதிசயிக்க வேணாம். முடிந்தால் ஒரு பாட்டில் ஹார்லிக்ஸுடன் பதிவின் ஆசிரியரை நேரில் சந்திக்கவும். :)
27 comments:
இரண்டு பாட்டில் ஹார்லிக்ஸுடன்..
முயற்சிக்கிறேன்:))!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
hai naan dhaan first.happy new year.congrats.kpbramhachari aanadharku.sorry.samayallil busy aaga irupadhal ungalai disturb seiyya mattom.by the way, ungal kaiyaal nalla kesari anuppi vaikkavum.
nivi.
adharkul ramalakshmi mundhikondadhal oru parcel enakkum oru parcel avargallukkum anuppi vaikkavum.
niraya time irundhaal "3 idiots" padam paarthu,five point someone compare seiyaalam.
ps,ambi pakkathil veetil iruppavargalukku,bhopal rengirkku vasanai vandhal,ambi samaithu kondirukkirar enru purindhu kollavum.fire enginnukku phone siedhu tension aaga vendam.
nivi.
அம்பி
என்னாத் தெகிரியம் உங்களுக்கு??? கண்டிப்பா இந்த பதிவ ஸ்கிரீன் ஷாட் எடுத்து டுபுக்கோ இல்ல கேடியோ தங்கமணிக்கு அனுப்புவாங்கன்னு நான் பெட் கட்டறேன்? யாராவது எதிர் பெட் கட்டத் தயாரா? (ஸ்கிரீன் ஷாட் ஏன் எடுப்பாங்கன்னு சொல்றேன்னா - அம்பி ஓரிரு நாளில் பதிவ தூக்கிடுவார்)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நல்லா தான் என்ஜாய் பண்ணி இருக்கீங்க..
:))))) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாஸ்!
பாவம் பாஸ் நீங்க ஹாப்பியை அன்னிக்கே வெளிப்படுத்தமுடியாம ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கிட்டு வர்ற ஸ்டேஜ்ல - நாள்ல - சொல்லுறீங்க!
எனக்கும் ஒரே ஃபீலிங்ஸ்தான் முடிஞ்சா நானும் ஒரு பாட்டில் ஹார்லிக்ஸ் வாங்கி அனுப்பிச்சிடறேன் :))
ராமலஷ்மி , மூணு ஹார்லிக்ஸா வாங்கிட்டு போங்க அம்பியைப்பாக்கப்போகும்போது:)
ஹார்லிக்ஸ் வாங்கி நானே குடிச்சுக்கறேன். :P நீங்க தங்கமணி கொடுக்கிற பூரிக்கட்டையை வாங்கிக்குங்க, வேணும்னா நான் ஸ்பெஷலா வாங்கி கூரியர்லே அனுப்பறேன் பூரிக்கட்டையை!
பாக்கலாம், அளக்கலாம், அப்படின்னு இருக்கே? பாத்தீங்களா, அளந்தீங்களான்னு சொல்லுங்க :)
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அ(த)ம்பி! :)
http://pudugaithendral.blogspot.com/2010/01/blog-post_05.html
இதையும் படிக்க வேண்டுகிறேன்.
:))
ரா.ல, ஒரு பாட்டிலுக்கு ரெண்டு பாட்டிலா? ஒரு முடிவொட தான் இருக்கீங்க போல. :))
வாங்க நிவி, பஸ்ட் கமண்டு ஜஸ்டு மிஸ்ஸு. இனி தான் த்ரீ இடியட்ஸ் பாக்கனும். தனியா வேற பாக்கனுமா?னு வீட்ல கிண்டல். :))
ஸ்ரீராம், அவங்க ரெண்டு பேரும் எடுக்கலைன்னா கூட நீங்க எடுக்க சொல்ற மாதிரியில்ல இருக்கு? :p
கொலை செய்தவனை விட செய்ய தூண்டியவருக்கு தான் தண்டனை அதிகம். :))
வினோத், ஆமா, ஆமா. ரொம்பவே. :p
வாங்க ஆயில்யன். சீக்ரம் உங்களுக்கு காம்ப்ளான் பாட்டில் கிடைக்க வாழ்த்துக்கள். ;))
சின்ன அம்மணி, மூனா? சரி தான். :))
கீதா மேடம், அதானே பேச்சுக்கு கூட வராதே? :p
வாங்க கவி நயா அக்கா, பாத்துட்டே இருக்கேன். உங்களுக்கும் வாழ்த்துக்கள். :))
புதுகை அக்கா, படித்தேன், ரசித்தேன், கமண்டினேன். :)
இனி தான் த்ரீ இடியட்ஸ் பாக்கனும். தனியா வேற பாக்கனுமா?னு வீட்ல கிண்டல். :))
சிரிச்சுகிட்டே இருக்கேன். உங்க மனைவியை கண்டிப்பா சந்திச்சே ஆகணும். வர்றேன் பெங்களூருக்கு
gud. continue
regards
ram
www.hayyram.blogspot.com
there is a book fair going on in chennai...did u know
went to it and bought most of Sujatha's book..
Kolai uthir kalam was thrilling but the end was not that gud...it was not an end but a beginning of another mystery...
//"சொல்லில் வருவது பாதி!
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி!!"//
இதுக்குத்தான் வாய வச்சிகிட்டு சும்மா இருக்கனுங்கிறது. அடி ரொம்ப பலமோ? வாயில பாதி பேச்சுத்தான் வருதா?
ஹார்லிக்ஸோட வந்து என்னத்த பண்ண? பட்ட அடிக்கு மருந்தாவா தடவ முடியும்? நல்ல ஆயின்மெண்டா ரெடி பண்ணி எடுத்திட்டு வர்றேன். :)
கூட்டண்னிக்கு ஆள் சேக்கறீங்களா?கண்டிப்பா வாங்க புதுகை அக்கா. :)
வாங்க ஹாய்ராம்.
@buddha, அந்த புக் நல்லா இருக்குனு கேள்விபட்ருக்கேன் இன்னும் படிக்கலை. பேசும் பொம்மைகள் மற்றும் சுஜாதாவின் விஞ்ஞான கதைகள்னு ஒரு தொகுப்பு. நல்லா இருக்கும். முடிஞ்சா பாருங்க. :))
வாங்க ஸ்ரீதர் அண்ணாச்சி, எல்லாம் உள்காயம், ஆயிண்மெண்ட் எல்லாம் வேலைக்காவாது. ;))
Dey anna, roomba aattam poodaathey! vishayam melidathuku therinchathunna dappa dance aadirum! kaluthu pattaiyai avuthu vitta naayaa??? iru, iru manniku phone panni sollareen.....:)
unnoda Thambi
//kaluthu pattaiyai avuthu vitta naayaa??? iru, iru manniku phone panni sollareen.....:)//
vambi maams..padaiku anjalainaalum..intha mathiri thumbi iruntha..jadaiku anjiye aaganumnu periava tellings :D paathu naadnthukongo :D
:-)))))
//கழுத்துப் பட்டை செயினை அவுத்து விட்டதும் ஒரு வித மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து ஓடும் நாய் போல,//
இங்கே AVK ந்னு சொல்லுவோம்!
//இங்கே AVK ந்னு சொல்லுவோம்!//
ஹாஹ்ஹாஹாஹா, (அ)வம்பி, அவிழ்த்துவிட்ட கழுதை எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்த்தா சிப்பு சிப்பாய் வருது! :)))))))))))))))))))))
@திவா,
தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், ஒரு வார்த்தைனாலும் திருவார்த்தை!
AVK ,
ippadiyoru vaarththai irukku theriyumaa Ambi.:)
தம்பியுடையான் உதைக்கு அஞ்சான் என்ற புதுமொழியை உருவாகி விடும் போல. :)
வாங்க கஜினி கில்ஸ். அன்னம் செம டேமேஜ் பண்ணி இருக்காங்க போல. :p
திவாண்ணா, ஆஹா, இது கூட நல்ல உதாரணமா இருக்கே, ஆமா மதுரைல இருக்கற எங்க தாத்தா அடிக்கடி சொல்வார். :))
கீதா மேடம், இப்ப சந்தோஷமா? :p
வல்லிமா, ஓஹோ நீங்க கூட திவேலி-மதுரை தானே? :))
//கீதா மேடம், இப்ப சந்தோஷமா? :p//
பரம திருப்தி, பூரண சந்தோஷம், எக்கச்சக்கமா ஸ்வீட் வாங்கிக் கொண்டாடறேன்,
ஸ்வீட் எடு, கொண்டாடுதான்!
//முடிந்தால் ஒரு பாட்டில் ஹார்லிக்ஸுடன் பதிவின் ஆசிரியரை நேரில் சந்திக்கவும். :)//
முடிவு இப்படித்தான்னு தெரிஞ்சும் இந்த ஆர்ப்பாட்டமா?
@geetha madam, :))))
கண்மணி டீச்சர், எல்லா முடிவும் தெரிஞ்சு தானே கதை ஓடிட்டு இருக்கு. :)
வெந்த கீரையில எக்ஸ்ட்ரா தண்ணி ஊத்தின காமெடியை மறக்க முடியுமா???
Post a Comment