Thursday, December 03, 2009

சைனாவின் மற்றுமொரு சதி

இந்த சைனாகாரன் இருக்கானே, சும்மாவே இருக்க மாட்டான். இல்ல, அவங்க மக்கள் தொகையை பத்தி நான் சொல்ல வரல. எல்லையில என்னடானா சின்ன பிள்ளதனமா பாறையில சைனானு எழுதி வைக்கறான். அருணாசல பிரதேசத்துல எல்லாருக்கும் மூக்கு சப்பையா இருக்கு, அதனால் அதுவும் எங்க இடம் தான்னு சொல்லிட்டு இருக்கான். பிராணப் முகர்ஜியும் சும்மா தாமாசு!னு சிரிச்சுகிட்டே அறிக்கை விடறாரு. எப்படியோ ஒழியட்டும்.


ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசில தமிழ் பதிவர்கள் தலையிலுமா கைய வெப்பான்? உங்க பதிவுகளில் அனானி கமண்ட் போடற ஆப்ஷன் இருந்ததுனா போச்சு! உடனே உங்க பதிவுக்கு வந்து முத்து முத்தா பின்னூட்டம் போட்டுட்டு போயிடுவான். நான் கூட ரொம்ப நாளா நம்ம பதிவு சைனா கொரியா வரைக்கும் ரீச் ஆயிருக்கு போல!னு ஆனந்த கண்ணீர் விட்டுட்டு இருந்தேன்.


அவன் போட்ட கமண்ட் எல்லாம் வைரஸ்ஸாம். நிலா ரசிகனையே புலம்ப வெச்சுருக்கான் பாருங்க.


இதெல்லாத்துக்கும் ஹைலேட்டா அருமை அண்ணன், பக்கபக்கமா எழுதும் உனாதானா அண்ணாச்சியின் பதிவையே கடத்திவிட்டான். அவர் எழுதி இருக்கறத எல்லாம் கடத்தறதுக்கே சைனா காரனுக்கு மூனு நாள் ஆயிருக்குமே! அவ்ளோ எழுதி இருக்காரு அவரு.

சைபர் கிரைமில் புகார் குடுத்தாரா? அப்படியே குடுத்தாலும் ஏதோ கிணத்தை காணல!னு வடிவேலு குடுத்த மாதிரி என் பிளாக்கை காணலை!னு சொன்னா புகாரை எடுத்துப்பாங்களா? ஒன்னும் புரியலை.

சமீபத்தில் பாண்டிசேரி அமைச்சர்களின் தீனிப் பழக்கத்தை எதிர்த்து ஒரு பதிவு போட்டு இருந்தாரு(பாருங்க, அவரு பதிவுக்கு லிங்க் கூட குடுக்க முடியலை இப்போ). ஒரு வேளை இது அரசியல் காழ்ப்பின் காரணமாக இருக்குமோ? என்ற கோணத்திலும் சைபர் போலிஸ் விசாரிக்க வேண்டும்.

இதற்கு பதிலடியாக சைனாகாரனை எதிர்த்து உடனே பதிவர்கள் எல்லாரும் எதிர்வினை ஆத்தி பதிவு போடனும். முடிஞ்சா அவன் பிளாக்குல போய் நாம தமிழ்ல கமண்ட் போட்டுட்டு வரலாம்.

கொஞ்சம் சீரியசா சொல்லனுமா:

1) எல்லாரும் உடனே தங்கள் பதிவை பேக்கப் எடுத்துக் கொள்ளவும். ( நிலா ரசிகன் விரிவா விளக்கி இருக்காரு.)

2) பின்னூட்டத்தை மட்டுறுத்தவும்.

3) மட்டுறுத்த சோம்பலா நினைக்கும் என்னைப் போன்றவர்கள் வேர்டு வெரிபிகேஷன் வைக்கவும். சைனா காரனுக்கு இங்க்லீஸ்னா அலர்ஜி என்பதை நினைவில் கொள்க. :)

4) எல்லாத்துக்கும் மேலே காக்க காக்க என் பிளாக்கை காக்க!னு பிளாகுலக குலசாமி மகர நெடுங்குழை காதனிடம் வேண்டி கொள்ளவும். :))

அவ்ளோ தான் எனக்கு தெரிஞ்சது.

41 comments:

மகா said...

superapu...

செந்தழல் ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


வேர்ட் வெரிப்பிக்கேஷன் வேண்டாம்னு நினைக்கறேன். மட்டுறுத்தல் இருந்தால் மட்டும் போதும்...

அபி அப்பா said...

\\1) எல்லாரும் உடனே தங்கள் பதிவை பேக்கப் எடுத்துக் கொள்ளவும். ( நிலா ரசிகன் விரிவா விளக்கி இருக்காரு.)\\

இதை சொன்னேன் உனா தானா தம்பி கிட்ட அதுவும் முடியலையாம். பல்லாயிரக்கணக்கான MB எல்லாம் பேக்கப் எடுக்க முடியாதாம்.

சரி அம்பி! உடனே வேர்டு வெரிபிகேஷன் நீங்க எதுக்கு போட்டீங்க. நம்ம பதிவை எவன் கடத்த போறான். உனாதானா பதிவை எல்லாம் பிரிண்ட் போட்டு கடலை கடைகாரனுக்கு போட்டா கூட ஒன்பது தலை முறைக்கு சாப்பிடலாம். நாமெல்லாம் என்ன பிஸ்கோத்து பதிவர். நமக்கு எதுக்கு பயம்:-))

சென்ஷி said...

அம்பி இந்த சைனாக்காரன் தொல்ல புதுசா இல்லை. ரெண்டு வருசமாகவே இருந்துக்கிட்டு இருக்குது. அவன் தொல்லையிலதான் நான் அதிகமா பாதிக்கப்பட்டேன். ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துற கதையா ஒரு பின்னூட்டம் கூட இல்லாத பதிவுல புரியாத வடிவத்துல 25 கமெண்ட் எனக்கு வந்திருக்குது.

ஆனாலும் உ.த. மேல உங்களுக்கு இருக்கற பாசத்த நெனைச்சா உடம்பு ஒதறுது.. ஊருக்கெல்லாம் வெர்ட் வெரிஃபிகேசனை தூக்கச் சொன்னா நீங்க இப்படி வச்சுக்கிட்டு இருக்கீங்க.. ப்ச்.. என்ன செய்ய.. பளக்க தோசம். கமெண்ட் போட வேண்டியிருக்குது :)

சென்ஷி said...

உ.த.வின் பதிவு இழப்பிற்கு நான் கடும் கண்டனங்களை இங்கு பதிந்து செல்கிறேன்...

உ.த. ரசிகர் மன்றம்
ஷார்ஜா

நிலாரசிகன் said...

:)

ராமலக்ஷ்மி said...

//உடனே உங்க பதிவுக்கு வந்து முத்து முத்தா பின்னூட்டம் போட்டுட்டு போயிடுவான். நான் கூட ரொம்ப நாளா நம்ம பதிவு சைனா கொரியா வரைக்கும் ரீச் ஆயிருக்கு போல!னு ஆனந்த கண்ணீர் விட்டுட்டு இருந்தேன்.//

எனக்கு தெரிஞ்சு உங்களுக்குத்தான் வலை உலகில் அதிக அள்வில் சைனா கொரிய ரசிகர்கள் என்றே இத்தனை காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன்:) இப்போதான் இதற்குப் பின்னால் இத்தனை சதிவேலைகள் இருப்பது புரிய வந்தது:))!

ஆயில்யன் said...

//எனக்கு தெரிஞ்சு உங்களுக்குத்தான் வலை உலகில் அதிக அள்வில் சைனா கொரிய ரசிகர்கள் என்றே இத்தனை காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன்:) இப்போதான் இதற்குப் பின்னால் இத்தனை சதிவேலைகள் இருப்பது புரிய வந்தது:))!///

அட இதையேத்தான் நானும் நினைச்சேன் ! :)

ம்ம் அம்பிக்கு சைனாவுல ஏகப்பட்ட ரசிகைகள் இருக்காங்கன்னு நினைச்சு ஒரு வாட்டி பெருமூச்சு விட்டு கவலையெல்லாம் கூட பட்டிருக்கேனாக்கும் ! - இப்பத்தான் ஒரு ஆறுதலா இருக்கு!

அகல்விளக்கு said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அட பாருங்கய்யா...

வெரிபிகேஷன் வேர்ட் 'chess' ஆம்

அகல்விளக்கு said...

அடுத்தது

'inondra'

அகல்விளக்கு said...

இப்போ

'lected'

THANGAMANI said...

///இந்த சைனாகாரன் இருக்கானே, சும்மாவே இருக்க மாட்டான். இல்ல, அவங்க மக்கள் தொகையை பத்தி நான் சொல்ல வரல!!!!?///

http://gkexpress.blogspot.com

sriram said...

ஆனாலும்
சோகத்தில இருக்கு உனா தனா அண்ணாச்சியை எல்லாரும் இப்படி கலாய்ச்சிருக்க வேணாம்.
இப்போ பாருங்க அவுரு இன்னொரு பதிவு ஆரம்பிச்சி ஒவ்வொரு இடுகையும் நாவல் அளவுக்கு போடப்போறாரு.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

எங்க இன்னும் பொற்கேடிய காணோம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

\\ம்ம் அம்பிக்கு சைனாவுல ஏகப்பட்ட ரசிகைகள் இருக்காங்கன்னு நினைச்சு ஒரு வாட்டி பெருமூச்சு விட்டு கவலையெல்லாம் கூட பட்டிருக்கேனாக்கும் ! - இப்பத்தான் ஒரு ஆறுதலா இருக்கு!

\\

ஆயில்யன் என்ன இது ? என் பையன் சபரி ப்ளாக்குக்கு வர சைனாக்கமெண்ட்டுன்னா எதிரி இத்தனை பேரான்னு? கேட்டுட்டு இங்க வந்து அம்பியின் ரசிகைகள்ன்னு சொல்லிட்டு இருக்கீங்க..

கவிநயா said...

:)))

ambi said...

மகா, இவ்ளோ பீல் பண்ணி பதிவு போட்டா சூப்பரா? அவ்வ்வ்வ். :))

@ரவி, மட்டுறுத்தினாலும், தவுறுதலா பளிஷ் செய்ய வாய்ப்புள்ளதுன்னு நிலா ரசிகர் சொல்லி இருக்காரு.
மேலும், வேர்டு வெரிபிகேஷன் என்னை மாதிரி மட்டுறுத்த சோம்பல் படுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். :))

அபி அப்பா, வாங்க எவ்ளோ நாளாச்சு நீங்க வந்து. உங்க கமண்டை பாத்து வாய் விட்டு சிரிச்சேன் (ரொம்ப நாளைக்கப்புறமா). :))))

அவரது எல்லாம் MB இல்ல GBல இருக்கும். மொத தடவையா என்னதை பேக்கப் எடுத்தேன், வெறும் 9.5 MB தான்னு சொல்லிடுச்சு.

சைனா காரனுக்கு இந்த பிஸ்கோத்து பதிவு தான் பிடிச்சு இருக்கு. கடந்த இருபது பதிவுக்கு மேல வந்து கமண்ட் போட்டு இருக்கான். எப்படியோ நானும் ரவுடி தான்னு இப்ப சவுண்டு வுட்டா தான் உண்டு. :))

ambi said...

சென்ஷி, 25 கமண்டா? அவ்ளோ பாசம் உங்க மேலே, உங்க பெயரும் பாருங்க சென்ஷினு ஏதோ சைனா அடிதடி வித்தை பேரு மாதிரி இருக்கு. :))

வேர்டு வெரிபிகேஷன் இருந்தும் கமண்ட் போட்டதுக்கு ரெம்ப நன்றி.
Word verification கொஞ்ச நாள் தான், மறுபடியும் தூக்கிடுவேன். கண்டனத்தை இங்க பதிவு செஞ்சு என்ன பிரயோசனம்? சைனாகாரன் சைட்டுல பதிவு செய்யுங்க. :))

வாங்க நிலா ரசிகரே!

ரா.ல, யப்பா, பயங்கர உள்குத்தா இருக்கே! :))

ஆயில்யன், வெந்த புண்ணீல் வேலை பாய்ச்சி, வெங்காயத்தையும் தடவும் ஆயிலுக்கு மென்மையான கண்டனங்கள். :))


அகல்விளக்கை கையில் வெச்சு பெரிய ஆராய்ச்சியே நடக்குது போல. :))

வாங்க தங்கமணி, பெயர கேட்டாலே சும்மா அதிருது. :p

துளசி கோபால் said...

எதிர்வினை 'ஆத்த' முடியலையேப்பா..... கூடச்சேர்ந்து ஒரு 'ஜெ'போட்டுக்கவா?

இந்தச் சீனாக்காரன் இப்படி சீன்னு ஸீன் காட்டுவான்னு தெரியாமப்போச்சே.

நம்ம ஆதிகாலத்துப் பதிவைக்கூட 'படிச்சுப் பார்த்து' பாராட்டுறான்னு நினைச்சுட்டேனே(-:

ambi said...

ஸ்ரீராம், அவரை கலய்க்கலை, கொரலு குடுக்கறோம். :p

நீங்க சொன்ன மாதிரி இந்த நேரம் ஆரம்பிச்சிருப்பாரு. பொற்கொடி இப்பல்லாம் ரெம்ப பிசி, அல்லது பிசி மாதிரி சீன். :))

உங்க பையனுக்கும் பிளாக் இருக்கா? அட்ரஸ் குடுங்க முத்தக்கா. :))

வாங்க கவிநயா அக்கா.

ambi said...

வாங்க டீச்சர், மறைமுகமா நீங்க அம்மா கட்சி தான்னு காட்டிடீங்க.. :))

நானும் அப்படிதான் ஏமாந்து போயிட்டேன். 750+ பதிவையும் பேக்கப் எடுங்க, இல்லாட்டி இருக்கவே இருக்காரு கோபால் சார், என்ன நான் சொல்றது..? :p

துளசி கோபால் said...

அம்பி,

நிலாரசிகன் சொன்னது போல் பேக்கப் எடுக்க முடியலை. எர்ரர்ன்னு சொல்லுது.

ஆமாம்....அப்ப அந்த மிச்சம் 200 பதிவு? மொக்கையா?

கோபால் சாரை வச்சே இன்னும் ஆயிரம் எழுதிறலாம்:-))) அப்பாவி....

Jayashree said...

ha..haa !!JE!! Ambi thambi
What could I say!!! fantabulous? ney! should be "FUN"TABULOUS. Simply couldn't contain my laughter!!

கீதா சாம்பசிவம் said...

//நான் கூட ரொம்ப நாளா நம்ம பதிவு சைனா கொரியா வரைக்கும் ரீச் ஆயிருக்கு போல!னு ஆனந்த கண்ணீர் விட்டுட்டு இருந்தேன்.//

ரொம்பத் தான் ஆசைப்பட்டீங்க! ஆசை, தோசை, அப்பளம், வடை! நல்லாக் கவனிச்சுப் பின்னூட்டம் வெளியிடுங்க இனிமேலே! எங்கே! மாவரைக்கவும், சமைக்கவும் நேரம் போக மிச்சம் டாமேஜருக்குப் பதில் சொல்லணும், தமவுக்குத் துணி துவைக்கணும், எவ்வளவு வேலை! பாவம் அம்பி நீங்க! சரியான அம்மாஞ்சி அம்பியே தான் போங்க! :P:P:P:P:P

கீதா சாம்பசிவம் said...

grrrrrrrr word verification ethukku??
anany options edunga muthalle, registerd bloggers than appadinu kodungga! enakku ennamo word verification parthale allergy! grrrrrrrrrrrr

வல்லிசிம்ஹன் said...

அம்பி ,இவ்வளவு சிரிச்சு நாளாச்சு.
எனக்கெல்லாம் எந்த சைனாக்காரனும் வரலியே;))
அவனுக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு எங்க எல்லாம் அவன் அதிகாரம் செல்லும்னு!!!

தியாவின் பேனா said...

வாழ்த்துகள்

Porkodi (பொற்கொடி) said...

yov yaaru busy madhri scene? sari ennatha padhivu potrukka poringa nu konjam alatchiyama irundhutten.. adhuku ivlo pecha?

Porkodi (பொற்கொடி) said...

oh indha chinakaranunga thaan unmai thamizhan bloga thookina gumbala? yappa sami naan pazhaiya padiku moderation enable panidaren..! ama moderation irundha kooda comment en inboxku vandha anga mattum virus paravadha? enaku romba bayama iruku ambi mama!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னோட ப்ளாக்லயே ஆங்கிலத்துல் லாஸ்ட் நாலு போஸ்டோட லிங்க் இருக்கும் அம்பி..

:)

http://ssabhari.blogspot.com

ambi said...

950+ போயிடுச்சா? மன்னிக்கவும் டீச்சர். :)

வாங்க ஜெயஸ்ரீ, இவ்ளோ சிரிப்பா..? வெரி குட். :)

கீதா மேடம், வேர்டு வெரிபிகேஷனை பாத்தாலே அலர்ஜியா? அப்ப நீங்களும் சைனாவா..? :p

வாங்க வல்லிமா, இருங்க, சைனாகாரனை அனுப்பி வைக்கறேன் அந்த பக்கம். :))

வருகைக்கு நன்றி தியாவின் பேனா.

வாம்மா கொடி. உன் பதிவுக்கும் நிறைய சைனா காரன் கமண்டை பாத்த நியாபகம். உசாரா இருந்துக்க. ;)

முத்தக்கா, அடடே, லிங்க் செக் பண்றேன். ஒரே கலை குடும்பமமா இருக்கீங்க போல. :p

கீதா சாம்பசிவம் said...

கீதா மேடம், வேர்டு வெரிபிகேஷனை பாத்தாலே அலர்ஜியா? அப்ப நீங்களும் சைனாவா..? :p///

grrrrrrrrrrrrr akkiramamaa irukkee?? ennai maathiri oru desa bakthi ulla aalaip parthu chinavanu kedkirathaa??? enna kodumaida saravana ithu???? :P:P:P:P:P:P:P:P:P:P

அன்புடன் மலிக்கா said...

இப்படியெல்லாம் வேற நடக்கிறதா?

பதிவு சூப்பர்..

http://niroodai.blogspot.com

ambi said...

ஆமா மலிக்கா, இப்படியும் நடக்குது. :)

Anonymous said...

Get [url=http://buy-cialis.icr38.net/Nizoral]nizoral online[/url] here - Incredible Chance flomax online easy - Advantageous Price

Anonymous said...

[b]Nuvi 205W[/b]

Garmin Nuvi 205W простой, но в то же время функциональный и надежный автомобильный навигатор от мирового лидера – компании Garmin. Навигатор поставляется с установленными детализированными лицензионными картами Украины. Прибор является недорогим, но в то же время идеальным решением для ежедневной навигации и автомобильного туризма. Garmin Nuvi 205W имеет широкоформатный 4,3” антибликовый, сенсорный экран и способен запоминать до 1000 маршрутных точек.

[url=http://info.je1.ru/GPS_008.html]Подробнее...[/url]

Anonymous said...

It is rather valuable piece

Anonymous said...

[b]Кабель удлинитель PS/2 3м[/b]

[url=http://info.je1.ru/GPS_061.html]Подробнее...[/url]

Anonymous said...

It that was necessary for me. I Thank you for the help in this question.

Anonymous said...

1BqUr9eZh6 Insurance Usa wQL7zN8TG Insurance Quotes elPbrzIZD2 Insurance Company 2OXU3ay9k5 Insurances asOcBoIHS Life Insurance Settlement CZHGnm1uOq insurance usa kapsVzMOr insurance wiki UIX73zhAr insurance with

Anonymous said...
This comment has been removed by a blog administrator.