part-1 part-2
சராசரியாக ஒரு நாளைக்கு முப்பது முதல் நாப்பது நிமிடங்கள் டிவி பார்ப்பவராக நீங்கள் இருந்தால் இந்த பதிவுக்கும் உங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. சமீப காலமாக உலா வரும் சில விளம்பரங்களை (சரி, அதில் வரும் மாடல்களை) உன்னிப்பாக கவனித்தது உண்டா?
ஒரு அம்மணி வழியில் கார் ரிப்பேர் ஆனதால் நடந்தே வந்ததாக தன் ரங்குவுடம் கூற, அந்த ரங்கு நிலைமை புரியாமல், காரை பூட்டிட்டு வந்தியா? எங்க பார்க் பண்ணிட்டு வந்தாய்? போன்ற சில்லி கேள்விகள் கேக்கிறார். காராய்யா இப்ப முக்யம்? என்பது போல அந்த அம்மணி ஒரு முறை முறைத்து விட்டு, கடனே என்று ஒரு ப்ரூ காப்பியை கலக்கி அந்தாள் கைல குடுக்க, நம்மாளு ஒரு வாய் குடித்து விட்டு ஞானம் வந்து அம்மணி காலை அமுக்குகிறார். அரை கண்ணால் இதை ரசித்த அந்த அம்மணி தன் இன்னொரு காலையும் நீட்டுகிறார்.
நல்லா இருங்கடே!
காபி அருந்துவது உடல் நலத்துக்கு கேடுன்னு டாக்டர்கள் சொன்னா கேக்றாங்களா? :)
காபில தான் இப்படி ஆப்புன்னா தேனீர்லயும் அதே கதை தான்.
அவசரக் குடுக்கையா ஒரு மலர் கொத்தும் ஒரு ஜோடி ஜிமிக்கியையும்(டிசைன் சூப்பர்)கைல வைத்துக் கொண்டு ஹேப்பி பர்த்டே சுஜி!னு ஒரு ரங்கு வழிய, யோவ்! பொறந்த நாளு அடுத்த மாசம்யா!ன்னு அந்தம்மா கடுப்பாறாங்க.
லூசுப் பய! யாராவது பொண்டாட்டி பிறந்த நாளை மறப்பாங்களா? அப்படியே மறந்தா என்ன நடக்கும்னு ஒரு நிமிஷம் நெனச்சுப் பாக்க வேணாம்.
அந்தம்மா கொஞ்சம் சாது போல. நல்லா யோசிச்சு அந்தாளுக்கு ஒரு மாசம் வல்லாரை கலந்த தேனீர் குடுக்கறாங்க. அப்புறம் என்ன, ரிசல்ட் பிரமாதமா வருது. அம்மணி கிட்ட எத்தனை டிசைன்ல எத்தனை கலர்ல புடவை இருக்குன்னு எல்லாம் நம்மாளு மைன்டுல வெச்சுக்கறாரு.
இன்னொரு விளம்பரம்:
சீக்கிரமே வீட்டுக்கு வந்த ஒரு ரங்கு பொறுப்பு சிகாமணியா மனைவிக்கு டின்னர் தயார் பண்ணி விட்டு "டின்னர் இஸ் வெய்டிங்க்"னு அம்மணிக்கு போன் போடுகிறார். வேலை அதிகம், வர லேட்டாகும்!னு பதில் வர, அப்படியே எல்லாத்தையும் பிரிஜ்ஜுல வெச்சு மூடி விட்டு "டின்னர் இஸ் ஸ்டில் வெய்டிங்க்"னு சந்தோஷப்படுகிறார். அந்த பிரிஜ் அவ்ளோ ப்ரெஷ்ஷா வெச்சு இருக்குமாம்.
இதே நீங்களா இருந்தா ஐபிஎல் மேட்சை பாத்துட்டு இருப்பீங்க, நான் வந்து தான் சமைச்சாகனும்!னு எங்க வீட்ல கமண்டு விழுந்தது. அந்த விளம்பர டைரக்டர் அட்ரஸ் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க. ஆட்டோ அனுப்பனும்.
காலத்துக்கு ஏற்ற மாதிரி விளம்பரங்களும் தம்மை புதுப்பித்துக் கொண்டால் தான் போட்டியை சமாளிக்க முடியும் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் இன்றைய விளம்பர இயக்குனர்கள். ஏனெனில் மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது! அவர்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
Friday, April 17, 2009
Monday, April 06, 2009
விமான நிலைய கஸ்டம்ஸில் மாட்டி இருக்கீங்களா?
அலுவலகத்தில் நம்ம தோஸ்து ஒருத்தர் பிசினஸ் ட்ரிப்பா சிங்கப்பூர் போயிட்டு வந்தார். அங்க சிலப்பல ஐட்டங்கள் எல்லாம் இந்தியாவை விட சல்லிசா இருக்குன்னு ஏற்கனவே தெரிஞ்சுகிட்ட அவரின் தோஸ்த்துக்கள் நைலான் ஜட்டி முதல் அகாய் டிவி வரைக்கும் ஒரு மளிகை கடை லிஸ்ட் போட்டு குடுத்து விட்ருந்தாங்களாம். நம்மாளும் உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்?ன்னு எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டிட்டு ஷாப்பிங்க பண்ணிட்டு கர்ம வீரரா பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
சிங்கப்பூர் விதிகள்படி இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்க்கு அதிகமான பொருளை அங்கிருந்து கொண்டு வந்தா சுங்க வரி கட்டனுமாமே! கஸ்டம்ஸ்காரங்க இவரு பொட்டிய ஒப்பன் பண்ணி
ஜட்டி - பத்து
பாடி ஸ்ப்ரே - எட்டு
செண்ட் பாட்டில் - பத்து
ஜானி வாக்கர் - நாலு பாட்டில்,
அகாய் டிவி - ஒன்னுன்னு லிஸ்ட்டை படிச்சிட்டு எல்லாத்தையும் ஒக்கே பண்ணிட்டு, டிவிய மட்டும் கப்புனு புடிச்சிட்டாங்களாம். இந்திய ரேட்படி அந்த எல்சிடி டிவியின் விலை முப்பத்தி ரெண்டாயிரம். அதனால் சைடுல ஒரு அஞ்சாயிரத்தை தள்ளிட்டு போயிட்டே இருன்னு அந்த ஆபிசர் பல்ல காட்டி இருக்காரு.
நம்மாளு சரியான ரூல்ஸ் ராமானுஜம்.
சிங்கப்பூர் ரேட்படி பாத்தா இருப்பத்தி ரெண்டாயிரம் தான் வருது. நான் எதுக்குயா உனக்கு மொய் எழுதனும்?னு சவுண்டு விட்ருக்காரு. சரி, இந்தாளு கிட்ட நம்ம ஜம்பம் பலிக்காதுன்னு உணர்ந்த ஆபிசர் ரேட்டை குறைச்சு ரெண்டாயிரத்துக்கு இறங்கி வந்து, சம்மர் ஆஃபர் குடுத்து பாத்ருக்காரு. அப்படியும் நம்மாளு மசியல. கடைசில ஆயிரம் ரூபாய்க்கு மேட்டர் சுமூகமா முடிஞ்சதாம்.
இல்ல, தெரியாம தான் கேக்கறேன், தாசில்தார், போக்குவரத்து துறை ஆபிசர்களை எல்லாம் நாலாயிரம் வாங்கினாங்க, மூவாயிரம் வாங்கினாங்கன்னு கைது செஞ்சு அவரு கர்ச்சீப்பால் முகத்தை மூடிக்கினு போறதை சன் டிவில காட்றாங்களே, இந்த சுங்கத் துறை ஆட்கள் இப்படி புகுந்து விளையாடறாங்களே, இவங்க மட்டும் என்ன உசத்தி? ஒரு ஆளை கூட டச் பண்ணினதா ஒரு நியுஸும் வர மாட்டேங்குது? எப்படி?
இந்த அளவு தான் கொண்டு வரலாம், இவ்ளோ தான் இதுக்கு சுங்க வரின்னு ஒரு வெளிப்படையான அறிவிப்புகள் எதுவுமே கண்ணுல காட்ட மாட்டேங்கறாங்களே? ஏன்?
ம்ம், இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு நினைக்கறச்ச எனக்கு சில சமயம் சிரிப்பு வருவதுண்டு. உங்களுக்கு எப்படி? இதே மாதிரி கஸ்டம்ஸ்ல எக்குதப்பா மாட்டின அனுபவம் உண்டா? கூச்சப்படாம கொஞ்சம் சொல்லுங்களேன் பாப்போம்.
பி.கு: நைலான் ஐட்டங்கள் எனக்கு அல்ர்ஜி, எனவே நான் அவனில்லை. :)

Subscribe to:
Posts (Atom)