இப்ப தான் சமீபத்துல 2005ல நான் முதல்முதலா பெங்களூருக்கு நல்லா குளிர் அடிக்கும் டிசம்பர் மாதத்தில் வந்து சேர்ந்தேன். கம்பெனி குடுத்த கெஸ்ட் ஹவுஸ்ல பையை வெச்ச கையோட நண்பன் ஒருத்தனுடன் ரூம் பாக்க கிளம்பியாச்சு. ஏன்னா பதினெஞ்சு நாளைக்கு தான் இந்த கெஸ்ட் ஹவுஸ்ன்னு சொல்லிட்டாங்க.
இந்த ஊர்ல வீட்டு முதலாளிகள் ஒரு நல்ல பழக்கம் வெச்சு இருக்காங்க. அதாவது, ரூம் வேணும்னு போய் நின்னா முதல் கேள்வி எந்த கம்பெனில வேலை பாக்கறீங்க? என்பது தான். நீங்க சொல்லும் கம்பெனியின் மார்கெட் நிலவரத்தை பொறுத்து அந்த முக்கு சந்து வீட்டின்/ரூமின் வாடகை முடிவு செய்யப்படும்.
இதுவே சென்னையா இருந்தா கேட்கப்படும் முதல் கேள்வி நீங்க பேச்சுலர்ஸா? என நினைக்கிறேன். ஒரு வேளை இப்ப நிலமை மாறி இருக்கலாம்.
ஒரு வழியா ரூம் பாத்து செட்டில் ஆனதும், வார இறுதியில் வெளியே சுத்தி பாக்க கிளம்பியாச்சு. இங்க தான் பிரச்சனையே! முதல்ல கன்னடம் பிடிபடவில்லை. பஸ்ல ஏறினா ஒரக்கட பன்னி! பன்னி!னு கண்டக்டர் சொல்றார். என்னடா பன்னின்னு திட்றார்?னு மெல்ல விசாரிச்சா வாங்க!னு சொல்ல பன்னியாம். போங்கனு சொல்லனும்னா ஜன்னியா? யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம் தானே?
சரி விடுங்க, நம்ம ஸ்டாப் எதுன்னு கண்டுபிடிக்கறத்துக்கு சஞ்சய் ராமசாமி மாதிரி பஸ் போகும் போதே சின்னதா மேப் போட்டு வெச்சுகிட்டேன். உதாரணமா, சிவப்பு சட்டை போட்டு ரிஷப்ஷன்ல நச்சுனு உக்காந்து இருக்கும் பியூட்டி பார்லருக்கு ரெண்டாவது ஸ்டாப்புல தான் இறங்கனும். ஒரு தடவை அதே பொண்ணு மஞ்ச சட்டை போட்டு வந்ததால் என் ஸ்டாப் மிஸ்ஸாகி போச்சு. அதே ரோட்ல ரெண்டு பியுட்டி பார்லர்கள் இருந்தது அப்புறம் தான் தெரிஞ்சது.
இங்க இன்னொரு வினோத விஷயம், என்னனு பாத்தா எந்த பக்கம் திரும்பினாலும் மஞ்சளும் சிவப்பும் கொண்ட ஒரு கொடி முக்குக்கு முக்கு பறந்துகிட்டு இருக்கும். அப்புறம் தான் தெரிஞ்சது அது கர்நாடக மாநிலத்துக்குன்னு தனிகொடி. இந்த கொடி பறக்கற எந்த கட்டிடத்தின் மீதும் கல் எறிய மாட்டாங்க. அதனால் கூகிள், யாஹூன்னு எல்லா கம்பெனி வாசலிலும் இந்த கொடி பட்டொளி வீசி பறக்கும். :)
இன்னமும் சில பேர் கர்நாடகா என்பது மைசூர் ராஜா தலைமையில் உள்ள தனி நாடுன்னு தான் நெனச்சுட்டு இருக்காங்க. நல்லா இருங்கடே!
வெள்ளிகிழமை ஆனவுடன் ஒருவரை ஒருவர் கண்டிப்பா விசாரித்துக் கொள்ளும் கேள்வி, அப்புறம், வீக் எண்ட் பிளான் என்ன? என்பது தான். வெள்ளி மாலை பொழுதுகளில் எல்லா ஏடிஎம்களிலும் மக்கள் வரிசையில் நின்னு ரெண்டாயிரம் எடுத்து கொண்டு ரெண்டு நாளில் மெகா மால்களிலோ தியெட்டர்களிலோ மொய் எழுதி விட்டு வருவார்கள்.
சில குறிப்பிட்ட கம்பெனிகள் தவிர பெரும்பாலான கம்பெனிகளில் டிரஸ்கோட் எனப்படும் உடை விதிமுறைகள் சென்னை அளவுக்கு கிடையாது. எங்க மானேஜர் வருஷத்துக்கு ஒரு தரம் திருப்பூர் போயி ரெண்டு டஜன் டி-ஷர்ட் வாங்கிட்டு வந்துடுவாரு. உடைல என்ன இருக்கு? ஆணிய ஒழுங்கா புடுங்கினா போதும் எனபது தான் இங்குள்ள நிலை. ஆனா சென்னைல இப்படி கிடையாதுன்னு உறுதியா சொல்வேன். மே மாத வெயிலும் டை கட்டி போகும் ஆட்களும் உண்டு.
சென்னை மக்களிடம் இருக்கும் சுறுசுறுப்பு இங்க கிடையாது. அதுக்கு இங்கு நிலவும் வானிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். கல்யாணத்துக்கு பத்திரிகை குடுத்தா வளைகாப்புக்கு வந்து நிப்பாங்க. :)
- இன்னும் சொல்வேன்.
70 comments:
தைரியம் இருந்தா இதை கன்னடத்தில் எழுது மேன்!! :)
@கொத்ஸ், லூசாப்பா நானு? பிரிச்சு மேஞ்சுடுவாங்க. :))
தலைப்புக்கு ஏத்த மாதிரி நிறைய மேட்டரு சொல்லுவீங்க என்றால் இன்னும் சொல்லுங்க இல்ல சொன்னதே போதும் ;)
அந்த கொடி மேட்டரு புதுசு... தகவலுக்கு நன்றி!
பதிவை விட அந்த முதல் பின்னூட்டம் சூப்பரு:)))!
அந்தக் கடைசிப் பத்தி ரொம்பச் சரி. காலை பதினொரு மணிக்குதான் கடைகளைத் திறப்பாங்க:(!
//
இன்னமும் சில பேர் கர்நாடகா என்பது மைசூர் ராஜா தலைமையில் உள்ள தனி நாடுன்னு தான் நெனச்சுட்டு இருக்காங்க. நல்லா இருங்கடே!//
:-)
பாள சென்னாகீதே அம்பி. இலவசம் மாத்தன்ன கிவிலி ஹாக்கிம் பேடி
நல்லா இருக்கு, இதே கதை தான் குஜராத்திலும், அரசு அலுவலகங்களே 11 மணிக்குத் தான் திறப்பாங்க. பள்ளியா, கல்லூரியா? காலை 6 மணியிலே இருந்து 10-30 மணி வரைக்கும் தான். அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்துட்டு, வேலைக்குச் செல்லும் கல்லூரி மாணவ மணிகள் உண்டு, சிலர் சொந்த பிசினஸுக்குப் போவாங்க. இரவு 11 மணி, 12 மணி ஆனாலும் ஜே ஜே னு, மக்கள் கூட்டம் மொய்க்கும், முக்கியமாய் ஓட்டல்களில். இதைப் பார்க்கும்போது சென்னை ரொம்ப அவசரம், எப்போப் பார்த்தாலும் ஓட்டம், பிடி, டென்ஷன் தான். ! :))))))
தலைப்பு அப்ரூவ்ட் பை தங்கமணி???
கொத்ஸுக்கு ஒரு ரிப்பீட்டேயும் போட்டுக்கறேன், சந்தடி சாக்கில், ஒரு வாக்கியம் சொன்னாலும் திருவாக்கியம் இல்லை சொல்லி இருக்காரு! :P
me the back...
I'm back.................
I AM BACK BACK BACK
I
A
M
B
A
C
K
!
!
!
!
!
!
K
C
A
B
M
A
I
ரொம்ப நாள் ஆச்சு.. இங்கதான் மைதானம் பூட்டாம இருக்கு. அதான் ஸ்டார்ட் தி மியூஜிக் ;-)
//இன்னமும் சில பேர் கர்நாடகா என்பது மைசூர் ராஜா தலைமையில் உள்ள தனி நாடுன்னு தான் நெனச்சுட்டு இருக்காங்க. நல்லா இருங்கடே!//
இதுல அம்பிண்ணே ஸ்மெல் அடிக்குதே??
அட.. இது நீங்கதானே? ;-)
இன்னும் இந்த ஃபைடே போஸ்ட் மாறவே இல்ல.. ;-)
ஊர்வம்பு வேணாம்ண்ணே.. அப்புறம் உங்க உடம்பு ரணகலப்பட்டுறும்.. ;-)
கொத்ஸ் கமேண்டுக்கு ஒரு ரிப்பீட்டேய்..
ஆனா, அண்ணனுக்குதான் கன்னடம் (இன்னும்) தெரியாதே? ;-)
எதுக்குன்னு தெரியணுமா?
;-)
அண்ணன் ப்ளாக்ல ஒரு 25 கூட போடலைன்னா எப்படி? ;-)
முழுசா ஒரு 25... :-D
மை பிரண்டு, இது அநியாயமா இருக்கே, இப்படியா கமெண்ட் மழை பொழியறது? :P
ஏன்றி, ஆட்டோ களஸ்லா?....
ஊட்டா கொடுவது ஈவூரு, ஞாபகா இட்கொள்ளி....இல்லா கன்னட ரக்ஷண வேதிகேயவரத்தர ஹேளி, ஒடதாக்தீனி...ஹம்!!!
:-)
யப்பா, .:: மை ஃபிரண்ட் ::..இதோ நானும் வரேன்...ஆடுவோமே!...பள்ளு பாடுவோமே!!!! :-)
ஆமா, கீதாம்மா ரென்ஷனாகராங்க பாருங்க...அவங்க ப்ளாக்ல போயும் ஒரு 10 கமெண்டை தெளிங்க...மை ஃபிரண்ட் ::. :-)
சும்னே ஒப்ரே மாத்தாடக்கில்லா...மை ப்ரெண்ட் ஹோகிதரந்த காணத்தே....நானு ஹோக்தீனி....
indiavula enaku terinchu antha natukunu tani kodi vachu irukarathu karnataka matum thaan sir.
வட்டாள் நாகராஜ் கோமாளி அரசியல், ராஜ்குமார் குடும்ப கன்னட சினிமா உலகம் இப்படி நிறைய நிறைய எதிர்பாக்கிறேன் உங்க அடுத்த பாகத்தில்.
:))
/
பஸ்ல ஏறினா ஒரக்கட பன்னி! பன்னி!னு கண்டக்டர் சொல்றார்.
/
இப்பிடி எந்த கண்டக்டரும் சொல்லியிருக்க மாட்டாரே!?
:))))))
முதல்ல தலைப்புக்கு தேசிகன் அண்ணாகிட்ட ரைட்ஸ் வாங்கிட்டீங்களா? அவர் ஏற்கெனவே நிறைய ‘பெண்களூரு’ பதிவு எழுதிட்டாரே :-)
சிவப்பு சட்டை, மஞ்ச சட்டை கதை நம்பற மாதிரி இல்லையே. நீர் சட்டையை வச்சா அடையாளம் வைப்பீர்? :-))
திகில் கதை மாதிரி கடைசியில ஒரு திடுக்கிடும் திருப்பம் வேற
//- இன்னும் சொல்வேன்.//
அதான் படிக்கிறதுக்கு நாங்க எல்லாம் இருக்கோமே. நடத்துங்க... நடத்துங்க :-)
me th 100
he he he
2005 அனுபவத்தை பற்றி 2009 ல எழுதுறிங்க .......
சுந்தர கன்னடிக நாட்டில் இருந்து கொண்டே இப்படி எல்லாம் அவங்களை total damage பன்னுரின்களே .....
செம கலக்கல் தான்
சும்மா இருக்கிறவனே ஃபீல் பண்ண வைக்கனுமின்னு ஒங்களுக்கு என்ன வேண்டுதல் மேன்???
பத்த வைச்சிட்டியே பரட்டை... :(
//இப்ப தான் சமீபத்துல 2005ல நான் முதல்முதலா பெங்களூருக்கு நல்லா குளிர் அடிக்கும் டிசம்பர் மாதத்தில் வந்து சேர்ந்தேன்.//
நான் 2003 டிசம்பரிலே பெங்களூரூ வந்தேன்னு நினைக்கிறேன்...
அவ்வ்வ்வ்வ்வ்... ஒன்னும் சொல்லமுடியல... அழுவாச்சியா வருது.... நல்லாயிருங்க...
தலைப்பும் அருமை. பதிவும் அருமை.
உஷா அண்ணி இதை கன்னடத்தில் மொழிமாற்றம் செஞ்சு எனக்கு அனுப்பினா அதை வட்டாள் அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பாக்கியத்தை நான் எடுத்துப்பேன் என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன்:-))
அபி அப்பா said...
தலைப்பும் அருமை. பதிவும் அருமை.
உஷா அண்ணி இதை கன்னடத்தில் மொழிமாற்றம் செஞ்சு எனக்கு அனுப்பினா அதை வட்டாள் அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பாக்கியத்தை நான் எடுத்துப்பேன் என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன்:-))//
அதுக்கேனு ஸ்வாமி, மாடி பிடானா. இஷ்டூ ஒள்ள கெலச மாடாக்கே, கொட்டு இட்டிருபேக்கு.
சொல்ப டைம் கொடி
பி.கு வாட்டாளுக்கு தமிங்கடம் படிக்க தெரியுமா?
நல்லவேளை உங்களை எழுதச் சொன்னாரேனு நினைச்சேன், அபி அப்பாவோட தமிழே தடவல், இதிலே கன்னடமா, தமிங்கிடமா?? கஷ்டம்!
அதைப் படிச்சுட்டு வாட்டாள் உடனேயே KRS தண்ணீரை மொத்தமும் கர்நாடகாவுக்கே திருப்பாமல் இருந்தால் சரி! :P:P:P:P:P
அபி அப்பா, ஒரு சந்தேகம் அது வட்டாளா? வாட்டாளா?
சனி வாரா,பானு வாரா எம்.ஜி ரோடு டைம்பாஸ் பிட்பிட்டிதீரே...
\\அதுக்கேனு ஸ்வாமி, மாடி பிடானா. இஷ்டூ ஒள்ள கெலச மாடாக்கே, கொட்டு இட்டிருபேக்கு.
சொல்ப டைம் கொடி
பி.கு வாட்டாளுக்கு தமிங்கடம் படிக்க தெரியுமா?
\\
|\\அபி அப்பா, ஒரு சந்தேகம் அது வட்டாளா? வாட்டாளா?\\
யாருக்கு தெரியும் வட்டாளா? வாட்டாளான்னு ஆனா அவரு நல்லா உதை கொடுப்பாருன்னு மாத்திரம் தெரியும்:-))
\\ கீதா சாம்பசிவம் said...
நல்லவேளை உங்களை எழுதச் சொன்னாரேனு நினைச்சேன், அபி அப்பாவோட தமிழே தடவல், இதிலே கன்னடமா, தமிங்கிடமா?? கஷ்டம்!
அதைப் படிச்சுட்டு வாட்டாள் உடனேயே KRS தண்ணீரை மொத்தமும் கர்நாடகாவுக்கே திருப்பாமல் இருந்தால் சரி! :P:P:P:P:P
\\\
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதாம்மா! நானும் இனி தமிழை நல்லா படிச்சு எழுதி தமிழை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகலைன்னா பார்ந்துகோங்க:-))))))
@உஷாஜி, அபி அப்பா, கீதா மேடம்,
என்ன ஒரு வில்லத்தனம்? :))
இன்னிக்கு கும்மி இங்க தானா?
\\ ambi said...
@உஷாஜி, அபி அப்பா, கீதா மேடம்,
என்ன ஒரு வில்லத்தனம்? :))
இன்னிக்கு கும்மி இங்க தானா?\\
ஆமாம் டியர் ஆமாம், எதுனா ஆட்சேபனை இருக்கா!:-))
ஆட்சேபனை இருந்தாலும் கும்மி தான். அதான் மாடரேஷன் இல்லியே:-))
நாகை சிவா, புலி, தலைப்புக்கு ஏத்த மாதிரி இன்னும் டீடெயிலா எழுதினா செய்கூலி சேதாரம் ஜாஸ்தியாயிடும். :))
ரா ல, யூ டூ? குத்துங்க எஜமான் குத்துங்க. :))
வாங்க பப்பு அம்மா. :)
உஷாஜி, நிமஃகு கன்னடாவும் கொத்தா? :p
கீதா மேடம், பல மாநிலங்களில் ஷிப்ட் முறைப்படி தான் ஸ்கூல், காலேஜ் இல்ல? நீங்க ஏன் ஒரு தொடர் மாதிரி ஆரம்பிக்க கூடாது? :))
இன்னும் வீட்ல பதிவை படிக்கலைன்னு நினைகிறேன். :))
வாம்மா மலேசிய மாரியாத்தா, ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு ரெம்ப சந்தோஷம் :)
இப்படி கமண்டு மழை பொழிஞ்சா நான் என்ன பணூவேன்?
ஆமா, இப்பவும் வெள்ளி பதிவு தான். ஹிஹி,பழக்க தோஷம். இப்போ கன்னடம் புரியுது. பேசவும் வருது. :))
சரியாப் போச்சு அபி அப்பா, இதிலேயே எவ்வளவு தப்பு?? பார்த்துக்கோங்கனு எழுதறதுக்கு பார்ந்துகோங்கனு எழுதிட்டு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆயிரம் முறை எழுதுங்க அதை முதல்லே!
@அம்பி, கும்மிங்கற சாக்கிலே கமெண்ட்ஸ் எகிறுமே,அதான் ஏதோ, நம்மளாலே ஆன சின்ன உதவி!
மதுரை அண்ணா, நீங்க எப்ப வேதிகேவுல சேர்ந்தீங்க? எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க. ஆமா, கீதா மேடம் அங்க ஈ ஒட்டிட்டு இருக்காங்க. Pஒய் ஒரு வழி பண்ணுங்க.
ஆமா வினோத், எனக்கும் ரெம்ப ஆச்சர்யமா இருந்தது.
வாங்க சிவா, கர்நாடகா அரசியல் ரெம்ப காமடியானது இல்லையா? எழுத ட்ரை பண்றேன்.
:)
வாங்க ஸ்ரீதர். காப்பி ரைட்ஸா? நான் அதுக்கு தானே இங்லிஷ்லயும் பேர் போட்ருக்கேன். நல்லா போடு குடுக்கறீங்க பா. :))
என்ன செய்ய? பாய்சன் டிஸ்ட்ரிபியூசன் வெச்சு எல்லாம் எனக்கு கதை எழுத வர மாட்டேங்குதே? :p
ஆமா மேவீ, டேமேஜ் எல்லாம் பண்ணலீங்க. சோறு போடற தெய்வம் அவங்க.
:)
அடடே ராம், இப்போ நீங்க சிங்கை இல்ல? அதான் பீலீங்க்ஸ் ஆஃப் பெண்களூரா? நடத்துங்க. :))
அபி அப்பா, எதுனாலும் நாம பேசிக்கலாம். வேணும்னா திமுகவுகே ஓட்டு போட்டுடறேன்(காசு வாங்கிட்டு தான்). ;))
உஷாஜி, வாட்டாளுக்கு தமிங்கடம் படிக்க தெரியுமான்னு எனக்கு தெரியாது. ஆனா அவருக்கு ஆட்டோ அனுப்பத் தெரியும்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும். வாட்டாள் எனபது ஒரு ஊர் பெயர், அவரு படிச்சு வாங்கின பட்டம் இல்லை. :))
சிந்துசுபாஷ், அவுது சிந்து, அவுது. நீரூ ஏனு மாடுத்தாரே? :p
அபி அப்பா, எதுக்கு இந்த வீராப்பு? நாம நமக்கு வரதை மட்டும் பண்ணுவோம். இங்க எப்பவுமே மாடுரேஷன் கிடையாது. எல்லாருமே நமக்கு பாசக் கிளிகள் தான். :))
//சமீபத்துல 2005ல//
:))))
//@கொத்ஸ், லூசாப்பா நானு? பிரிச்சு மேஞ்சுடுவாங்க. :))//
எதுவா இருந்தாலும் நாங்க இருக்கோம்.....
நீங்க எழுதுங்க அண்ணே...
:)))
தலைப்பை ""பெண்களுருவில் அம்பியின் லீலைகள்" ன்னு வெச்சா இன்னும் நல்லா இருக்கும்......
:))
கதிர், நீங்க இருப்பீங்க, நான் இருப்பேனா? அதான் கேள்வி. :))
இந்த தலைப்புக்கே எவ்ளோ சேதாரம் ஆகுமோன்னு யோசிச்சிட்டு இருக்கேன். :))
கதிர், நீங்க இருப்பீங்க, நான் இருப்பேனா? அதான் கேள்வி. :))
இந்த தலைப்புக்கே எவ்ளோ சேதாரம் ஆகுமோன்னு யோசிச்சிட்டு இருக்கேன். :))
bangalore pathi aachu appuram romba naala thrissur pathi neenga ezhudave illaye????thangamani madam,paavam ambi,thanga kambi,thairiyama thrissur pathi aarambikka sollunga.so start the music......
nivi.
வாங்க நிவி, திருச்சூரா? ஒரு முடிவோட தான் கமண்டு போடறீங்க போலிருக்கு. :))
\\பஸ்ல ஏறினா ஒரக்கட பன்னி! பன்னி!னு கண்டக்டர் சொல்றார். என்னடா பன்னின்னு திட்றார்?னு மெல்ல விசாரிச்சா வாங்க!னு சொல்ல பன்னியாம். போங்கனு சொல்லனும்னா ஜன்னியா? யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம் தானே?\\
>>>>>>>>>>>>>>>>>>
பஸ்ஸுல இன்னும் இளி (இறங்குங்க) அப்டீன்னு சொல்வ்வாரே கண்டக்டர் அதையும் சொல்றதுதான...உங்களுக்கு முன்னாடி நான் இங்க குடியேறியாச்சு. இந்த ஊர் பஸ்களில் பெண்கள்முன்பக்கமாவும் பின்பக்கமா ஆண்கள் ஏறி இறங்குவதையும் சொல்லக்கூடாதாக்கும்..நல்லதெல்லாம் கண்ல படாதா...(புகுந்த வீட்டுப்ரேமைஎனக்கு:):)
சரி விடுங்க, நம்ம ஸ்டாப் எதுன்னு கண்டுபிடிக்கறத்துக்கு சஞ்சய் ராமசாமி மாதிரி பஸ் போகும் போதே சின்னதா மேப் போட்டு வெச்சுகிட்டேன். உதாரணமா, சிவப்பு சட்டை போட்டு ரிஷப்ஷன்ல நச்சுனு உக்காந்து இருக்கும் பியூட்டி பார்லருக்கு ரெண்டாவது ஸ்டாப்புல தான் இறங்கனும். ஒரு தடவை அதே பொண்ணு மஞ்ச சட்டை போட்டு வந்ததால் என் ஸ்டாப் மிஸ்ஸாகி போச்சு. அதே ரோட்ல ரெண்டு பியுட்டி பார்லர்கள் இருந்தது அப்புறம் தான் தெரிஞ்சது.>>>>>
மகா குறும்பு!
இப்ப தான் சமீபத்துல 2005ல நான் முதல்முதலா பெங்களூருக்கு நல்லா குளிர் அடிக்கும் டிசம்பர் மாதத்தில் வந்து சேர்ந்தேன். கம்பெனி குடுத்த கெஸ்ட் ஹவுஸ்ல பையை வெச்ச கையோட நண்பன் ஒருத்தனுடன் ரூம் பாக்க கிளம்பியாச்சு. ஏன்னா பதினெஞ்சு நாளைக்கு தான் இந்த கெஸ்ட் ஹவுஸ்ன்னு சொல்லிட்டாங்க.
இந்த ஊர்ல வீட்டு முதலாளிகள் ஒரு நல்ல பழக்கம் வெச்சு இருக்காங்க. அதாவது, ரூம் வேணும்னு போய் நின்னா முதல் கேள்வி எந்த கம்பெனில வேலை பாக்கறீங்க? என்பது தான். நீங்க சொல்லும் கம்பெனியின் மார்கெட் நிலவரத்தை பொறுத்து அந்த முக்கு சந்து வீட்டின்/ரூமின் வாடகை முடிவு செய்யப்படும்.
இதுவே சென்னையா இருந்தா கேட்கப்படும் முதல் கேள்வி நீங்க பேச்சுலர்ஸா? என நினைக்கிறேன். ஒரு வேளை இப்ப நிலமை மாறி இருக்கலாம்.
ஒரு வழியா ரூம் பாத்து செட்டில் ஆனதும், வார இறுதியில் வெளியே சுத்தி பாக்க கிளம்பியாச்சு. இங்க தான் பிரச்சனையே! முதல்ல கன்னடம் பிடிபடவில்லை. பஸ்ல ஏறினா ஒரக்கட பன்னி! பன்னி!னு கண்டக்டர் சொல்றார். என்னடா பன்னின்னு திட்றார்?னு மெல்ல விசாரிச்சா வாங்க!னு சொல்ல பன்னியாம். போங்கனு சொல்லனும்னா ஜன்னியா? யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம் தானே?
சரி விடுங்க, நம்ம ஸ்டாப் எதுன்னு கண்டுபிடிக்கறத்துக்கு சஞ்சய் ராமசாமி மாதிரி பஸ் போகும் போதே சின்னதா மேப் போட்டு வெச்சுகிட்டேன். உதாரணமா, சிவப்பு சட்டை போட்டு ரிஷப்ஷன்ல நச்சுனு உக்காந்து இருக்கும் பியூட்டி பார்லருக்கு ரெண்டாவது ஸ்டாப்புல தான் இறங்கனும். ஒரு தடவை அதே பொண்ணு மஞ்ச சட்டை போட்டு வந்ததால் என் ஸ்டாப் மிஸ்ஸாகி போச்சு. அதே ரோட்ல ரெண்டு பியுட்டி பார்லர்கள் இருந்தது அப்புறம் தான் தெரிஞ்சது.
இங்க இன்னொரு வினோத விஷயம், என்னனு பாத்தா எந்த பக்கம் திரும்பினாலும் மஞ்சளும் சிவப்பும் கொண்ட ஒரு கொடி முக்குக்கு முக்கு பறந்துகிட்டு இருக்கும். அப்புறம் தான் தெரிஞ்சது அது கர்நாடக மாநிலத்துக்குன்னு தனிகொடி. இந்த கொடி பறக்கற எந்த கட்டிடத்தின் மீதும் கல் எறிய மாட்டாங்க. அதனால் கூகிள், யாஹூன்னு எல்லா கம்பெனி வாசலிலும் இந்த கொடி பட்டொளி வீசி பறக்கும்<<>>>>>>
ஆட்டோக்களில் நவம்பர் ஒண்ணு பறக்குமே!
சென்னை மக்களிடம் இருக்கும் சுறுசுறுப்பு இங்க கிடையாது. அதுக்கு இங்கு நிலவும் வானிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். கல்யாணத்துக்கு பத்திரிகை குடுத்தா வளைகாப்புக்கு வந்து நிப்பாங்க. :)
<<>>>>>>>>பக்கத்துவீட்டு கன்னடக்கார சாந்தம்மாகிட்ட படிச்சிக்காமிச்சேன்.நல்லா அம்பியத்திட்டப்போறாங்கன்னு நினச்சா சிரிக்கிறாங்கப்பா:):):) நம்ம ஊர் மாமியா இருந்தா அம்பிய நாலுசாத்துசாத்தி இருப்பாங்க:):)
<<>>>>>>>>பக்கத்துவீட்டு கன்னடக்கார சாந்தம்மாகிட்ட படிச்சிக்காமிச்சேன்.>>>>>
ஷைலக்கா,
பக்கத்து வீட்டு சாந்தம்மாவா? ஏதேது விட்டா என் வீட்டு அட்ரஸும் குடுத்து ஆட்டோக்கு சார்ஜும் குடுப்பீங்க போலிருக்கே. :))
அடுத்த தடவை நான் உங்க வீட்டுக்கு வரும்போது ஜாக்ரதையா இருக்கேன்.
Hi, I am from Tamilnadu and I stay in Bangalore. I have written one post about kannada films.
Let me know your thoughts...
தமிழ்ல டைப் அடிச்சு பழக்கம் இல்லை...மன்னிக்கவும்
இப்ப தான் உங்க பதிவை படித்தேன் பிரதாப். நீங்க எழுதி இருக்கற மேட்டர் பெரிய காமெடி. :)
Our laws are too flexible. They shouldn't have been allowed to use a flag for their own state. There should be one flag and its the Indian flag.
youthவிகடன்ல பெங்களூர் அம்பியப்பாத்தேனே!!!! வாழ்த்துகள் அம்பீ! மகிழ்ச்சி மிகவும்!
its not oragada banni
its olagada banni
oragada banni means - veliya vaanga
olagada banni means - ulla vanga..
சீக்கிரம் கன்னடம் பேச கத்துக்கோங்க. சில ***அவசர**** நேரங்களில் தமிழ் கை கொடுக்காது
நம்ம ஊருல இருந்து அங்க போன உடனே முதல் வாரத்துல வர்ற தூக்கத்த பத்தியும் எழுதுங்க. அருமையான சுகமான தூக்கம் வரும் 24 மணி நேரமும், அந்த வானிலையால.
சிவாஜி நகர் பஸ்ஸ்டாண்டு போன உடனே பஸ் ஏறி மானத்த வாங்காதீங்க. ஒரு 20 நிமிஷம் அங்க நின்னு பாருங்க நான் சொல்றது என்னன்னு புரியும் :)
வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பதிவைப் பார்க்கhttp://blogintamil.blogspot.com/2013/05/blog-post_11.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment