Friday, February 13, 2009

Bangalore Pubs

பெங்க்ளுரில் நீங்கள் ரோட்டில் தடுக்கி விழுந்தால் மூன்று இடங்களில் விழ வாய்ப்புள்ளது.
1) அனுமார் கோவில்கள்
2) பூங்காக்கள்
3) பப்புகள்.

நான் நெல்லை மாவட்டத்தில் பள்ளி செல்லும் காலங்களில்(8th படிக்கும் போது), நம்ம தோஸ்து ஒருத்தன் லீவுக்கு பெங்க்ளுர் போய்ட்டு வந்து, எங்களிடம் 70 எம்.எம் சினிமாஸ்கோப்பில் பி.வாசு மாதிரி சூப்பரா கதை விட்டான்.

அதில் சில துளிகள்:

1) பெங்க்ளுரில் எப்போ பார்த்தாலும் பனி மழை தான். நன்னாரி சர்பத் பாட்டில் கையில இருந்தா, நாம ஜூஸ் போட்டு, போட்டு குடிச்சுண்டே இருக்கலாம்.

(இங்கு இருக்கும் மிதமான கிளைமேட்டுக்கு தான் அந்த p.வாசு இவ்வளவு பில்டப் குடுத்தான்னு எனக்கு அப்போ தெரியாது. ஆ!னு வாய் பிளந்தேன்.)

2) சகஜமா நாம, தெருவுல கூட எல்லா இந்தி நடிகைகளையும் பார்க்கலாம். மாதுரி தீட்சித்தை கூட நான் பார்த்தேன். அப்போ, ஏக்! தோ! தீன் பாட்டு சக்கை போடு போட்டது!

(இங்கு உலா வரும் சில சப்பாத்திகளை தான் அந்த நாதாரி பாத்துட்டு, "மாதுரி தீட்சித்"னு எங்களிடம் கதை விட்டான்னு எனக்கு இப்போ தான் உரைக்கிறது.)

3) அங்கே நிறைய பப்புகள் இருக்கு!
மூணாவது பாயிண்ட் தான் எங்களுக்கு புரியலை.
"போடா! நீ ஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் ஏதோ ஒரு வார்த்தையை பாத்துட்டு எஙகளிடம் ரீல் விடறியா?"னு எங்கள் செட்டில் ஒருத்தன் சுதாரித்து விட்டான்.

நானும் என் பங்குக்கு, " நான் குழந்தையா இருக்கும் போது(இப்பவும் நான் குழந்தை தான்) என் அம்மா நெய் விட்டு பிசைஞ்சு எனக்கு ஊட்டி விட்ட பப்பு சாதம் விக்கற ஓட்டலை தானேடா நீ சொல்ற?" இது ஒரு பெரிய விஷயமா?னு புத்திசாலிதனமா அவனை மடக்கி விட்டேன்.

அந்த கூட்டத்துக்கு நான் தான் மொட்டை பாஸ்.என் கூட்டத்துக்கு நான் சொல்றது தான் தீர்ப்பு! செல்லாது! செல்லாது!னு அவனது மூணாவது பாயிண்டை தள்ளுபடி செய்து விட்டோம்.

அதன் பின் நான் காலேஜ் படிக்க மதுரை வந்தாச்சு. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, இங்கேயும் ஒரு நண்பன் லீவுக்கு பெங்க்ளூர் போயிட்டு வந்து, "பெங்க்ளூர் கலக்கலா இருக்குடா மச்சான்! கிளைமேட்டும் சரி, அத விடு, பப்ஸ் எல்லாம் அட்டகாசமா இருக்குடா மாப்ளே!"னு சொல்ல, நான் "சரி, இவன் ஏதோ பேக்கரி கடையில் கிடைக்கும் பப்ஸை தான் சொல்றான்!"னு நினைத்துக்கொண்டேன்.

வேலைக்கு சென்னை வந்து ஒரு வருடம் ஓடிய பின் தான் கொஞ்சம் விவரம் புரிந்தது. அதுவும், கம்பெனியில் எதாவது பார்ட்டி வந்தா, உடனே, நண்பர்கள் "எல சன்முகம்! எடுறா வண்டிய!"னு நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு சவுண்டு விட்டு, பப்ஸை நோக்கி படை எடுப்பார்கள்.(அங்கு சென்று வாந்தி எடுப்பார்கள், அது வேற விஷயம்!)

நீயும் வா! சும்மா வேடிக்கை பாரு!னு கெஞ்சினாலும் நான் சிக்கியதில்லை.
அதன் பின் பெங்க்ளுரில் வேலை கிடைத்தவுடன், ஊருக்கு போய் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு ஜாயின் பண்ணலாம்னு போனேன்.
என் பக்கத்து வீட்டுல ஒரு புண்ணியவான் இருக்கார். அவர் நின்ன இடம் தீப்பற்றி எரியும். கொளுத்தி போடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

சும்மா நான் லீவுக்கு போனாலே, "ஏய்! என்ன அம்பி வந்துட்ட? வேலை அவ்ளோ தானா?"னு கேட்டவர். யோவ்! லீவுக்கு வந்திருக்கேன்யா! 4 நாளுல திரும்பி போயிடுவேன்!னு நான் மட்டும் விளக்கம் சொல்லலை அவ்ளோ தான்!

"நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!அம்பியை வேலயை விட்டு தூக்கிட்டா! அதான் திரும்பி வந்துட்டான்!'னு டமுக்கு அடித்து விடுவார் அந்த மனுஷன்.
நான் தாமிர பரணியில் குளிக்க போயிருக்கும் போது, என் அம்மா அப்பாவிடம் என்ன சொன்னாரோ தெரியாது.
நான் (ஊறி) வந்தவுடன் என் அம்மா, "இதோ பாரு! பெங்களுரில் கண்ட கண்ட இடத்துக்கெல்லாம் போக கூடாது! நல்லவங்க கூட சேரனும். உனக்கு நல்ல புத்தியை குடுக்கனும்னு அந்த பகவானிடம் நாங்க வேண்டிப்போம்! நீயும் வேண்டிக்கோ! என்ன புரிஞ்சதா?"னு என்னை போட்டு தாக்க, "ஆகா! பத்த வெச்சியே பரட்டை!"னு நான் அந்த ஆள் வீட்டை பார்த்து முறைத்தேன்.

என் தம்பி, இது தான் நல்ல சமயம்னு, அம்மா! அண்ணா அத மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் மா! தண்ணி அடிச்சாலும், வாந்தி எடுக்க மாட்டான் மா!னு ஸேம் சைடு கோல் அடித்தான்.

அதன் பின், தென் ஆப்ரிக்காவுக்கு போகும் காந்தி ரேஞ்சுக்கு, "பெருமாள்/அனுமார் கோவில் தீர்த்தம் தவிர எதையும் நான் இதுவரை தொட்டதில்லை! இனி தொட போவதும் இல்லை!"னு டிஸ்கிளைமர் குடுத்த பின் தான் வீடு சகஜ நிலைக்கு திரும்பியது.

போன வாரம், நண்பர் ஒருவருடன் M.G.ரோடில் ரோடில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் இரவு டிபன் சாப்பிட நேர்ந்தது. பில்லை அவர் கட்டுவார்னு நான் நினைக்க, என்னை விட பார்ட்டி படு உஷாரு. பின் இரண்டு பேரும் ஷேர் பண்ணினோம்.

மாடியில் இருந்த அந்த ஓட்டலுக்கு கீழே ஒரு பப் இருந்ததை நான் கவனிக்க வில்லை. அவர் பார்த்து விட்டு, "என்ன, அம்பி! இதேல்லாம் பாத்ருக்கீங்களா? தண்ணி அடிச்ச்ருக்கீங்களா?னு கேட்டார்.

இது என்ன, மைசூர் ராஜா அரண்மனையா? மற்றபடி, மதுரையில் இரண்டு நாளைக்கு ஒரு தரம் வைகை தண்ணீர் கார்பரேஷனில் விடுவார்கள். குடம் குடமா எங்க பாட்டிக்கு அடிச்சு குடுத்ருக்கேன்னு நான் நக்கல் விட்டதில் பார்ட்டி டென்ஷனாகி விட்டார்.
நாம கிளம்பலாமே!னு அவஸ்தையாக நெளிந்தேன்.

அவர் விடாமல், எப்படி இருக்கு?னு சும்மா உள்ள போயி பாருங்க!னு கூட்டி போனார்.
நைட் லேம்ப் தான் எல்லா டேபிள்களிலும் போட்டிருந்தனர். ஒரே புகை மண்டலம். எல்லார் கையிலும் புகைந்து கொண்டு இருந்தது.

சில பாரதி கண்ட புதுமை(?) பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். ஜக் மாதிரி இருந்த சில பெண்கள் கையில் ஜக்குடன் பீர் வேறு. சாந்த ஜக்குபாய் இவங்க தான் போலிருக்கு! :)

பாவம்! அவங்களுக்கு வீட்டில் என்ன கஷ்டமோ, மாமியார் கொடுமையோ யாரு கண்டா!

சக பதிவர்கள் எல்லாருக்கும் அன்பார்ந்த நேச தின நல்வாழ்த்துக்கள், அதான் வாலன்டைன்ஸ் டேன்னு ஆங்கிலத்துல சொல்றாங்களே தொரைமாருங்க. என்னவோ போங்க.

நாம எல்லாரையும் எல்லா நாளும் நேசிக்க கத்துகிட்டோம்னா எதுக்கு ஒரு தனி டே! கொண்டாடனும்?

பி.கு: மங்களூர்ல/பெண்களூருல யாரேனும் காதலர்களை பாத்தா ராம் சேனா ஆளுக நாளைக்கு கல்யாணம் முடிச்சு வெச்சுபுடுவாங்களாம். மங்களுர் சிவா இதான் சாக்குன்னு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க வேணாம், அவ்ளோ தான் சொல்வேன். :)

47 comments:

ambi said...

என் பதிவுக்கு நானே பஷ்ட்டு,

இந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்டது. இப்பவும் பொருந்துது. :))

ILA (a) இளா said...

எங்கேயோ படிச்சாப்ல இருக்குன்னு பின்னூட்டம் போடவந்தா முதல்லயே சொல்லிட்டீங்க. எத்தனை வருசத்துக்கு போட்டாலும் தகும்.

மணிகண்டன் said...

மீள் பதிவு எல்லாம் செல்லாது ! செல்லாது ! செல்லாது!

மேவி... said...

"இந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்டது. இப்பவும் பொருந்துது. :))"

காலங்கள் மாறும் ...
காட்சிகள் மாறும் ...
வந்தது போக எது மிதி .....

ஷைலஜா said...

ரெண்டுவருஷம் முன்னாடி நான் இதப்படிக்கல இப்ப படிச்சதும் வழக்கம்போல ரசிச்சேன் . பப்பு(சாதம்) சாப்ட்டுசாப்ட்டு அம்பிக்குரொம்பவே குறும்புதான்!

சதங்கா (Sathanga) said...

இன்னிக்கும் ரசிக்கிற மாதிரி இருக்கு. அருமை :)))

ambi said...

//எங்கேயோ படிச்சாப்ல இருக்குன்னு பின்னூட்டம் போடவந்தா //


இளா, உங்கள ஏமாத்த முடியுமா தல..? :))

மணி, ஹா ஹா, அடுத்த வாரம் நிலைமை சரி ஆயிடும்னு நினைக்கிறேன். அதுவரை வெயிட் மாடி. :))

மேவீ, கவிதை சூப்பரா இருக்கு. ஆமா கவிதை தானே ட்ரை பண்ணீங்க? :))

ஷைலக்கா, ரசிச்சதுக்கு மிக்க நன்னி.

சதங்கா, வருகைக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்னி.

G3 said...

//நாம எல்லாரையும் எல்லா நாளும் நேசிக்க கத்துகிட்டோம்னா எதுக்கு ஒரு தனி டே! கொண்டாடனும்?//

Repeatae :))))

G3 said...

//மங்களுர் சிவா இதான் சாக்குன்னு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க வேணாம், //

ROTFL :))) Ungalukku mattum eppadi ippadi ellam thonudhu?? Oru vela ungalukku appadi oru ennam irukko ;)

G3 said...

oru 10 pottuttu me the appeatu :D

அவன்யன் said...

ஏனுங்க நீங்க பொண்ணுங்க புப்க்கு போலாம் சொல்றீங்களா வேணாம்னு சொல்றீங்களா

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Labels: peelings of india, public awareness//

பதிவைப் படிச்சி சிரிச்சேனோ இல்லியோ, இதைப் படிச்சி ரொம்ப நேரம் சிரிச்சேன்! :))

//பெங்க்ளுரில் வேலை கிடைத்தவுடன், ஊருக்கு போய் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு ஜாயின் பண்ணலாம்னு போனேன்//

எங்கே? பப்-ல தானே? :))

//பெருமாள்/அனுமார் கோவில் தீர்த்தம் தவிர எதையும் நான் இதுவரை தொட்டதில்லை//

பெருமாள் கோயில் தீர்த்தத்தைத் தொட எல்லாம் முடியாது!
கையில் ஊத்துவாங்க! குடிக்கணும்!
இதில் இருந்தே தெரியலை? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்க அம்பி! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மக்களே
மாரல் ஆப் த பதிவு!
அம்பி சுத்தமான மோசமான பையன்!

இதை எல்லாரும் எப்பவும் ரிப்பீட்டணும்! அதுக்குத் தான் இந்தப் பில்டப் பதிவாம்! :)

வல்லிசிம்ஹன் said...

நல்ல டைட்டில். பொருத்தமாத்தான் இருக்கு. அந்தக் கொளுத்திப் போடற மாமாவைப் பார்க்கணுமே அம்பி.
;
0))))))))))))))))0ரெண்டு வருஷத்துக்கு முன்னால பப்ஸ் இவ்வளவு பிரபலமாகலியோ. எனக்குப் படிச்ச மாதிரி ஞாபகம் இல்ல:)
என்னாளும் அன்பர் தினமாக இருக்க வாழ்த்துகள்.

தமிழ் said...

சுவைத்தேன்

பழைய நினைவுகள்
மறக்க முடியவில்லை

வாழ்த்துகள்

ambi said...

ஜி3 அக்கா, ரொம்ப பீலீங்கஸ் காட்றீங்களே வாட் இஸ் தி மேட்டர்..? அட உங்க வீட்ல குவாட்டர்..? :))

அவன்யன், நான் பொண்ணுங்க போகக் கூடாதுன்னு எங்க சொன்னேன்? போகாம இருந்தாலும் நல்லா இருக்கும்னு தான் சொன்னேன். :))

நன்றி வலைபூக்கள். சேர்ந்தா டாலர் தருவீங்களா? :))

@KRS, இங்க பாருடா ஈயத்தை பாத்து இளிச்சதாம் பித்தளை.

வல்லி மேடம், கொளுத்தி போடற மாமாவையா? ஏதானாலும் பேசி தீர்த்துக்கலாம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு தமிழ்மணம் தெரியாது. :))

நன்னி திகழ்மிளிர். (ரொம்ப இனிமையான பெயர்)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா ஜாலியாத்தான் எழுதியிருக்கீங்க :). ஆனால், அதுவே கருத்தியல்ரீதியான வன்முறை ஆகிவிடுகிறது. ஏனென்றால்,

/சில பாரதி கண்ட புதுமை(?) பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். ஜக் மாதிரி இருந்த சில பெண்கள் கையில் ஜக்குடன் பீர் வேறு. சாந்த ஜக்குபாய் இவங்க தான் போலிருக்கு! :)/

இதுதான் கொஞ்சம் (ஒரு பேச்சுக்குத்தான் கொஞ்சம்ங்கறது) இடிக்குது :( :( :(

இதன் நீட்சிதான் ராம்சேனா சொல்வதும் என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்.

நாகை சிவா said...

பதிவை இப்போ படிக்கல..

அப்ப போட்ட கமெண்ட்டை எடுத்துக்கு கொள்ளவும்...

ambi said...

//இதுதான் கொஞ்சம் (ஒரு பேச்சுக்குத்தான் கொஞ்சம்ங்கறது) இடிக்குது //

@சுந்தர், ம்ம், என்ன செய்றது, சினிமாவுல நயன்தாரா பீர் அடிக்க பாக்கறதுக்கு நல்லா இருக்கு, அதே நம்ம வீட்ல ஒரு பெண் அடிக்கறதா(பீரை சொன்னேன்) நினைச்சு கூட பாக்க முடியல.

இப்படி சில விஷயங்கள் இடிக்கத் தான் செய்யும் சுந்தர். (நானும் ஒரு பேச்சுக்குத் தான் கொஞ்சம்னு சொன்னேன்) :))

@nagai siva, வேணாம் அளுதுடுவேன். :))

அபி அப்பா said...

நானும் எங்கயோ படிச்ச மாதிரி இருந்துச்சேன்னு ரொம்ப யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். யார் எழுதியிருப்பா பெங்களூர் எல்லாம் வருதே ஒரு வேளை வெட்டி எழுதியிருப்பாரோ அப்படீன்னு எல்லாம் யோசிச்சு யோசிச்சு பார்த்தா அடராமா! நேத்து ராத்திரி இங்க தான் படிச்சேன்! அப்ப பின்னூட்டம் போடலை! இப்பவும் போடலை போங்க:-)) என்னை மண்டை காய வச்சதுக்காக:-))

Vijay said...

இதனால் சகலரும் அறிய வேண்டியது என்ன வென்றால், அம்பி 2 வருஷத்துக்கு முன்னாடி போட்ட பதிவை மீள்பதிவாக்கி இருக்கறதால, இந்த ரெண்டு வருஷ ''கேப்''ல என்னா நடந்ததுன்னு சொல்லவே இல்லன்னு சொல்லி, மக்களே புரிஞ்சிக்கோங்க... புரிஞ்சிக்கோங்கன்னு சொல்லி... அவ்ளோதாம்பா.:P

சிங்கை நாதன்/SingaiNathan said...

Yes i read it bfre. First para itself i found out. Same except last para :)

Ithu enna Bongu Aattam :)

Anputan
Singai Nathan

திவாண்ணா said...

அட பிலாஸபியா அம்பி! அதுவும் அப்பவே?
இது மீள்பதிவு காலம். பல இடங்கள்ளேயும் இதான்.

ambi said...

அபி அப்பா, இதெல்லாம் ரெம்ப்ப ஓவரு, சொல்லிட்டேன். தமிழ் மணத்துல ரொம்ப நேரம் இருக்கீங்க போல, நல்லா ரெஸ்ட் எடுங்க, உடம்ப பாத்துகுங்க. :))

ஏம்பா விஜய், இப்படியெல்லாம் ஹைகோர்ட்டு வக்கீல் மாதிரி பாயிண்டு புடிச்சா நான் என்ன சொல்றது? :))

சிங்கை நாதன், ஆஹா, நீங்க பல காலமா பின்னூட்டம் போடாம படிச்சிட்டு இருக்கீங்களா? எனக்கு தெரிஞ்சு இது த்கன் உங்க முத பின்னூட்டம் இங்க. வருகைக்கு ரெம்ப நன்றி சார். :))

ஆமா திவான்னா, எல்லா ஆபிஸ்லயும் டாமேஜர்கள் இருக்காங்களே! :))

தாரணி பிரியா said...

:)

Vijay said...

அட, நீங்க நெல்லையா? நானும் தேன்.
பெங்களூர் வந்து 8 வருஷத்துக்கு மேல ஆச்சு. இன்னும் ஒரு பப்பு கூட போகலை.
Enjoyed your pub narration :-)

Vijay said...

\\அதன் பின், தென் ஆப்ரிக்காவுக்கு போகும் காந்தி ரேஞ்சுக்கு, "பெருமாள்/அனுமார் கோவில் தீர்த்தம் தவிர எதையும் நான் இதுவரை தொட்டதில்லை! இனி தொட போவதும் இல்லை!"னு டிஸ்கிளைமர் குடுத்த பின் தான் வீடு சகஜ நிலைக்கு திரும்பியது.\\

பெங்களூருக்கு வேலைக்கு சேர்ந்த போது, என் கசின் ஆஃபீஸைத் தேடி அலைந்த போது, தெரியாத்தனமா, அது தான் ப்ரிகேட் ரோட் என்று தெரியாமல் எங்க அம்மாவையும் கூட்டிக் கொண்டு போய்விட்டேன். அந்த நேரம் பார்த்து இரண்டு இளம்பெண்கள், குட்டப் பாவாடையில் பவனி வர, என்னிடம் எங்கம்மா, “டேய் இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் வந்துடாதேன்னு” எனக்கு பயங்கர அட்வைஸ். அடுத்த தடவை பிருந்தாவன் ஹோட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போயிட்டு, மீண்டும் ப்ரிகேட் ரோட் போகையில், மீண்டும் குட்டைப் பாவாடை அம்மணிகள். “ஏண்டா, இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் வரப்படாது போன தடவையே சொன்னேனே, நீ ரொம்ப கெட்டுப் போயிட்டன்னு செம அர்ச்சனை :-)

கைப்புள்ள said...

//போன வாரம், நண்பர் ஒருவருடன் M.G.ரோடில் ரோடில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் இரவு டிபன் சாப்பிட நேர்ந்தது. பில்லை அவர் கட்டுவார்னு நான் நினைக்க, என்னை விட பார்ட்டி படு உஷாரு. பின் இரண்டு பேரும் ஷேர் பண்ணினோம்.//

உங்க ப்ளாக்க்கை அவரு படிக்கிறதில்லையா???
:)

//சில பாரதி கண்ட புதுமை(?) பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். ஜக் மாதிரி இருந்த சில பெண்கள் கையில் ஜக்குடன் பீர் வேறு. சாந்த ஜக்குபாய் இவங்க தான் போலிருக்கு! :)

பாவம்! அவங்களுக்கு வீட்டில் என்ன கஷ்டமோ, மாமியார் கொடுமையோ யாரு கண்டா!//

//பி.கு: மங்களூர்ல/பெண்களூருல யாரேனும் காதலர்களை பாத்தா ராம் சேனா ஆளுக நாளைக்கு கல்யாணம் முடிச்சு வெச்சுபுடுவாங்களாம். மங்களுர் சிவா இதான் சாக்குன்னு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க வேணாம், அவ்ளோ தான் சொல்வேன். :)//

டிபிக்கல் அம்பி நக்கல்.
:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/சுந்தர், ம்ம், என்ன செய்றது, சினிமாவுல நயன்தாரா பீர் அடிக்க பாக்கறதுக்கு நல்லா இருக்கு, அதே நம்ம வீட்ல ஒரு பெண் அடிக்கறதா(பீரை சொன்னேன்) நினைச்சு கூட பாக்க முடியல. /

அதான் ஏங்க.. நம்ம வீட்ல இருக்கற ஆம்பளை பீர் அடிக்கலாம் ஆனா, பெண் அடிக்கறத (அட அதுகூட வேணாம், அப்படி நினைச்சுப் பாக்கறதே) ஏன் கஷ்டமா இருக்கணும்?

ambi said...

வாங்க தாரணி ப்ரியா.

ஆமா விஜய், நெல்லை தான். ப்ரிகேட் ரோடு வழியா அம்மாவை கூடிட்டு போனீங்களா? ரெம்ப தான் தைரியம் உங்களுக்கு. :)

நல்ல வேளை கோரமங்கலா Forum எல்லாம் போகாம இருந்தீங்க்ளே, தப்பிச்சீங்க. :p

வருகைக்கு ரெம்ப நன்றி கைப்ஸ். :))

@Jsunder, பஞ்ச தந்திரத்துல சொல்ற மாதிரி மாமா, கேள்வி கேக்கறது ரொம்ப ஈசி.

சீரியசா பதில் சொல்லனும்னா ஒழுக்க விதிகள் ஆண்/பெண் பேதமின்றி மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

என்ன செய்றது சுந்தர், இந்த சமுதாயம் இன்னமும் male ட்ரைவன் சொசைட்டியா தானே இருக்கு? :(

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்டது. இப்பவும் பொருந்துது. :))

அட ஆச்சரியமா இருக்குங்க
நான் படிச்சு சிரிச்சு முடிச்சு கடைசியில நீங்க இப்ப நடக்குற கூத்தைதான் சொல்றீங்களோன்னு நெனச்சி பின்னூட்டவந்தா, நீங்க ஏற்கனவே இப்படி ஒரு பின்னை குத்தி வெச்சிருக்கீங்க.

எது எப்படியோ
உங்க புண்ணியத்துல கொஞ்ச சிரிச்சிவெச்சேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

எல்லாருக்கும் அன்பார்ந்த நேச தின நல்வாழ்த்துக்கள், அதான் வாலன்டைன்ஸ் டேன்னு ஆங்கிலத்துல சொல்றாங்களே தொரைமாருங்

அட அப்பவே
நீங்க தமிழ்ல சொன்னீங்களா.
நாங்க இப்பதான் கத்துக்கறோம்.

Anonymous said...

pub pathi theriyadhu,inga sila star restaurentla drinks summa ennama oduthu.aangal pengal enralla, college pasanga+ponunga kooda casualla thayangama adikkiradha parthu konjam bayama kooda irundhadhu.en pennarasi ketta sila kelvikku mennu mennu muzhunginen.(muzhichen).
indha culture nammakku pudhiadhu plus puriyadhadu.1.akka annallam enna sappidaranga??2.andha anna school boy madhiri irukaan avan sapidarana appanna avan bad boyaa?akka,uncle ,aunty ellam neela glassla sapidiranga!!!girls allowedaaa!!!.naanum rengamaniyum oruvarai oruvar nondhukondom.arambathil enakke idhu oru cultural shockaaga irundadhu.oru velai naanum rengamaniyum thayirsadha uncle and auntyooo????neengal ezhudiyaadhu innum pathuvarushathukku porundhum.
nivi.

கைப்புள்ள said...

//என்ன செய்றது சுந்தர், இந்த சமுதாயம் இன்னமும் male ட்ரைவன் சொசைட்டியா தானே இருக்கு? :(//

அதை மாத்த நீங்க என்ன பண்ணறதா இருக்கீங்க? பாரதியாரும் உங்க ஊரு காரரு தானே? அவர் அந்த சொசைட்டியை மாத்த முயற்சி பண்ணலை? கமான் அம்பி யூ கேன் டூ இட். உங்களை நாங்க பாரதியாரா பாக்க ஆசை படறோம். விஜயையே பாத்துட்டோம்...உங்களைப் பாக்க மாட்டோமா?
:)

Anonymous said...

ஆமா, அமிர்தவர்ஷினி அம்மா, எனக்கும் ஆச்சர்யமா இருக்கு. வருகைக்கு ரெம்ப நன்றி.

உங்க பொண்ணு பெயருல ஒரு ராகம் இருக்கு. :))


வாங்க நிவி. என் பையன் என்ன கேள்வியெல்லாம் கேக்க போறானோ? எனக்கு இப்பவே கலக்குது. சரி, நீங்க ரெண்டு பேரும் என்ன பதில் சொன்னீங்க? :))

கைப்ஸ், தேரை இழுத்து தெருவுல விடறதுன்னா இது தானா? என்ன வெச்சு காமடி பண்றீங்கன்னு நல்லாவே தெரியுது.

கைப்புள்ள said...

//கைப்ஸ், தேரை இழுத்து தெருவுல விடறதுன்னா இது தானா? என்ன வெச்சு காமடி பண்றீங்கன்னு நல்லாவே தெரியுது.//

இப்படி ஸ்மைலி போடாம செண்டிமெண்டலா பேசுனா நாங்க ஃபீல் பண்ணிடுவமா என்ன?
:))

Anonymous said...

//இப்படி ஸ்மைலி போடாம செண்டிமெண்டலா பேசுனா நாங்க ஃபீல் பண்ணிடுவமா என்ன?
//

@kaips, மறந்திட்டேன், நாம எல்லாம் என்னிக்கு பீல் பண்ணி இருக்கோம்? :))))

ராமலக்ஷ்மி said...

அப்போ போட்டது எப்பவோ போட்டதுன்னு எடுத்தெடுத்து போடுவதெல்லாம் எக்காலத்துக்கும் பொருந்துவதாய் இருக்கிற.. என் வழியில்.. போட்டிருக்கும் பதிவா:)?

//அவர் நின்ன இடம் தீப்பற்றி எரியும். கொளுத்தி போடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.//

:))!

ambi said...

//எக்காலத்துக்கும் பொருந்துவதாய் இருக்கிற.. என் வழியில்.. போட்டிருக்கும் பதிவா//

ராம லட்சுமி, அதே! அதே! சபாபதே! எல்லாம் நீங்க காட்டிய பாதை தான். :))

Kavinaya said...

//ரெண்டுவருஷம் முன்னாடி நான் இதப்படிக்கல இப்ப படிச்சதும் வழக்கம்போல ரசிச்சேன் .//

அதேதான் :)

ஆனா பாரதி கண்ட புதுமைப் பெண் பத்தி தவறா புரிஞ்சு வச்சிருக்கீங்க போல :(

ambi said...

@கவிநயா அக்கா, பாரதி கண்ட புதுமை பெண்களை நான் தப்பா புரிஞ்சுக்கலை, பாரதி சொன்னதை தான் இந்த பெண்கள் வேற மாதிரி புரிஞ்சு வெச்ச்ருக்காங்க. :(

நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத போக்குடன் பப்புக்கு போறாங்க. :))

Kavinaya said...

//பாரதி சொன்னதை தான் இந்த பெண்கள் வேற மாதிரி புரிஞ்சு வெச்ச்ருக்காங்க. :(//

அப்படி சொல்றீங்களா? ம்... நீங்க சொல்றது சரிதான்.. :( விளக்கத்துக்கு நன்றி அம்பி.

ambi said...

சரியான புரிதலுக்கு மிக்க நன்னி கவி நயா அக்கா. :))

மங்களூர் சிவா said...

/
பி.கு: மங்களூர்ல/பெண்களூருல யாரேனும் காதலர்களை பாத்தா ராம் சேனா ஆளுக நாளைக்கு கல்யாணம் முடிச்சு வெச்சுபுடுவாங்களாம். மங்களுர் சிவா இதான் சாக்குன்னு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க வேணாம், அவ்ளோ தான் சொல்வேன். :)
/

எல்லாஆஆஆம்தான் முடிஞ்சி போச்சே
:)))))))))))))

மங்களூர் சிவா said...

//நாம எல்லாரையும் எல்லா நாளும் நேசிக்க கத்துகிட்டோம்னா எதுக்கு ஒரு தனி டே! கொண்டாடனும்?//

கலக்கல் அம்பிண்ணா!

மங்களூர் சிவா said...

//
ambi said...

நான் பொண்ணுங்க போகக் கூடாதுன்னு எங்க சொன்னேன்? போகாம இருந்தாலும் நல்லா இருக்கும்னு தான் சொன்னேன். :))
//

ஹா ஹா
ROTFL
:)))