Tuesday, January 20, 2009

ஒரு கிளிக்குக்கு நூறு டாலர் தராங்களாம்

நான் நிஜமாவே பிசியா வேலைல மூழ்கி இருக்கும்போது(நம்புங்க ப்ளீஸ்), என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தி தரதரன்னு என் சேரை இழுத்து, உன் கிட்ட ஒரு முக்யமான விஷயம் சொல்லனும் என கிசுகிசுப்பான குரலில் சொன்னதும் எனக்கு ஒரே யோசனையா போச்சு. என்ன தான் என் மேலே ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தாலும் இட்ஸ் டூ லேட். சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படின்னு நானும் சீரியசா பதில் சொல்ல நினைத்தாலும், பின் விளைவுகளை எண்ணி கப்சிப்னு விஷயத்துக்கு காது குடுத்தேன்.

விஷயம் ரொம்ப சிம்பிள். இந்த சைட்டுல போய் நம்ம ஈமெயில் ஐடிய குடுத்தா அவங்க ஒரு மெயில் அனுப்புவாங்களாம். நாம நல்ல பிள்ளையா அவங்க கிட்ட ரிஜிஸ்டர் பண்ணிகிட்டோம்னு வைங்க, அவங்க ஒரு நாளைக்கு ஒன்னு அல்லது ரெண்டு மெயில் அனுப்புவாங்களாம். அதுல இருக்கற விளம்பர லிங்கை கிளிக் பண்ணிட்டு ஒரு நாப்பது செகண்ட் பொறுமையா இருக்கனுமாம். (அந்த நேரத்துல இரண்டு பதிவு படிச்சிரலாம்).

எங்க லிங்கை கிளிக்கினதுக்கு ரொம்ப நன்றி, இந்தா பிடிங்க நூறு டாலர்ன்னு நம்ம அக்கவுண்டுல லபக்குனு போட்ருவாங்களாம். அட, இது என்ன நோகாம நொங்கு திங்கற வேலையா இருக்கே!ன்னு நானும் ஒரு அக்கவுண்ட் கிரியேட் பண்ணி சொன்ன மாதிரியே செஞ்சாச்சு. இதோ படம் போட்டு பாகம் குறிச்சு இருக்கேன் பாருங்க:

நாம இப்படி கஷ்டப்பட்டு(?) சம்பாதிச்ச பணத்தை(?) நமக்கு செக்காவோ, வெஸ்டன் யூனியனாவோ அனுப்புவாங்களாம். என்னவோ போங்க, ஆப்ரிக்காகாரன் அவங்க ஊர் பாங்குல லட்சகணக்கான டாலர்களை என் பெயரில் மாத்தி எழுதட்டுமான்னு தினமும் மெயில் விடு தூது விட்டுட்டு இருக்கான். அடுத்தவன் பணம் நமக்கெதுக்கு?ன்னு நானும், வேணாம் ராசா! நீயே வெச்சுக்கோன்னு சும்மா இருக்கேனாக்கும்.

இவங்க சொன்ன மாதிரி டாலர் செக் அனுப்புவாங்களா இல்லாட்டி வட பழனி முருகன் டாலர் அனுப்புவாங்களா?ன்னு இனிமே தான் தெரியும். :)

42 comments:

ஷைலஜா said...

ஐயோ அம்பி எனக்கு சிரிப்பு தாங்கலப்பா!(இதுல கிளிக் என்பதை கிளிக்கு எனஅவசரத்துல படிச்சிட்டேன்!!)
சிரிச்சிமுடிச்சிவந்து பின்னூட்டமிடறேன்!:)

கீதா சாம்பசிவம் said...

ரொம்பக் கொஞ்சமா இல்லை வந்திருக்கு?? நமக்கு பில்லியனிலே இல்லை வருது? அதுவும் மைக்ரோ சாப்டிலே இருந்து எல்லாம் வந்திட்டிருக்கு! உங்க ரேஞ்சு இவ்வளவு தானா?? :P:P:P:P:P

அபி அப்பா said...

அம்பி! எனக்கு ஏற்கனவே லெக்சஸ் கிடைச்சுது!நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்:-))

அன்புடன் அருணா said...

//ஐயோ அம்பி எனக்கு சிரிப்பு தாங்கலப்பா!(இதுல கிளிக் என்பதை கிளிக்கு எனஅவசரத்துல படிச்சிட்டேன்!!)//

Same blood....hahahahahgaha.
anbudan aruNaa

MayVee said...

நமக்கு எதுக்கு இந்த காசு......
நான் கடன் அட்டையை use பண்ணுற நிலைமை வந்த பிறகு பார்த்துப்போம் .....

ambi said...

அடடே இவ்ளோ சிரிபா ஷைலக்காவுக்கு? கிளியா? உங்க புரபைஃல்கிளின்னு நெனைச்சுட்டீங்களா? :))

கீதா பாட்டி, பில்லியன்ல வந்து என்ன பிரயோசனம்? கல்யாணத்துக்கு மொய்ய்ன்னா கப்சிப் ஆயிடறீங்களே? :p

அபி அப்பா, ஆஹா, நீங்களுமா?

அருணாவுக்கும் சிரிப்பா? :))

மேவீ, ரொம்ப தெளிவா இருக்கீங்க நீங்க. :)

பகீ said...

இந்த இணையத்தளம் பொய்யானது. இவர்கள் ஒருபோதும் ஒருவருக்கும் பணம் அனுப்புவதில்லை.

இவர்களை பற்றி கூகிள் செய்து பாருங்கள்.

நன்றி
ஊரோடி பகீ.

Sridhar Narayanan said...

நானும் 'கிளி'ன்னு படிச்சிட்டு ஏதோ 'சோ' காமெடிதான் (ரூபாய்க்கு மூணு கிளி கொடுக்கிறேன்னு ஒரு காமெடி பண்ணுவார்) ரீ-மிக்ஸ்க் பண்ணி போட்டிருக்கேன்னு நினச்சிட்டேட்ன்பா.

//இட்ஸ் டூ லேட். சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு// :))))

திவா said...

அப்பாடா எவ்வளோ பொய் இந்த பதிவிலே!
1.நான் நிஜமாவே பிசியா வேலைல மூழ்கி இருக்கும்போது.....
2.என்ன தான் என் மேலே ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தாலும் ......
3.இந்தா பிடிங்க நூறு டாலர்ன்னு நம்ம அக்கவுண்டுல லபக்குனு போட்ருவாங்களாம்.
4.நாம இப்படி கஷ்டப்பட்டு(?) சம்பாதிச்ச பணத்தை(?) நமக்கு செக்காவோ, வெஸ்டன் யூனியனாவோ அனுப்புவாங்களாம்.

GoodSoul said...

Ambi,

This is a scam done by south africans. They ask for your account details and if at all you reveal it, they will empty your account instead of deposit.
BEWARE ! Dont ever reveal your back account number.
There are lot of people in US who fell for this and are helpless.

Kathir said...

//நான் நிஜமாவே பிசியா வேலைல மூழ்கி இருக்கும்போது//

அம்பி,

என்ன வேலைன்னு நீங்க சொல்லவேயில்லை.... பதிவு எழுதுறது கூட வேலைதான்.....


:))

கீதா சாம்பசிவம் said...

//கீதா பாட்டி, பில்லியன்ல வந்து என்ன பிரயோசனம்? கல்யாணத்துக்கு மொய்ய்ன்னா கப்சிப் ஆயிடறீங்களே? :p//

முதல்லே ஒரு நறநற ஒரு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா பாட்டிங்கறதுக்கு!

இப்போ பில்லியன்லே எனக்கு வந்தால் உங்க கல்யாணத்துக்கு மொய் கொடுக்கணுமா என்ன?? No Way! அப்பாடா, எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?? அப்புறம் தம்பி கல்யாணத்துக்கு முன்னாலேயே சொல்லிட்டால், யு.எஸ்.ஸுக்கு டிக்கெட் வாங்கிடுவேன்! :P:P:P:P

கீதா சாம்பசிவம் said...

//என்ன வேலைன்னு நீங்க சொல்லவேயில்லை.... பதிவு எழுதுறது கூட வேலைதான்.....


:))//

போற போக்கிலே கதிருக்கு ஒரு ரிப்பீஈஈஈஈட்டேஏஏஏஏஏ போட்டுட்டுப் போறேன், வரவங்க எல்லாம் follow up கொடுங்கப்பா! :P:P:P:P

அபி அப்பா said...

// கீதா சாம்பசிவம் said...
//என்ன வேலைன்னு நீங்க சொல்லவேயில்லை.... பதிவு எழுதுறது கூட வேலைதான்.....


:))//

போற போக்கிலே கதிருக்கு ஒரு ரிப்பீஈஈஈஈட்டேஏஏஏஏஏ போட்டுட்டுப் போறேன், வரவங்க எல்லாம் follow up கொடுங்கப்பா! :P:P:P:P
//

ரிப்பீஈஈஈஈட்டேஏஏஏஏஏ!!!!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நானும் கிளின்னு தான் படிச்சேன்.. :)

என் பசங்க கூட பேப்பரில் பணமெல்லாம் எழுதி எழுதிக்கொடுப்பாங்க விளையாட்டுக்கு.. செக் கூட போடுவாங்க.உங்களுக்கு எவ்வளவு வேணும்ன்னு சொல்லுங்க நாளைக்கே அனுப்பிவிடறேன்..

சரவணகுமரன் said...

ச்சே... கிளி இல்லையா?

மெட்ராஸ்காரன் said...

Majority wins! Even I read the title as "Kili" :) This is a pucca fraud plan. Ambi Anna, be careful....

ராமலக்ஷ்மி said...

பாருங்க, கிளிகள் எல்லோரும் கிளிகள் என்றே படிச்சிருக்கோம்:)))!

துளசி கோபால் said...

கிளிமண்டபம் படிச்ச கையோடு இங்கே வந்து பார்த்துட்டு நானும் கிளின்னுதான் படிச்சேன்.

இதுலே 'கிளிக்கு எதுக்கு 100 டாலர்?.
பலான சமாச்சாரத்துக்கு மருந்துன்னு ஸூப் வச்சுக் குடிக்கறதுக்கா?'ன்னுகூட நினைச்சேன்:-)

swaminathan said...

ச்சே... கிளி இல்லையா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

Moral of the Story :

அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படக் கூடாது (அ) அலுவலகத்தில் பிசியாக இருக்கும்போது கிளி சொல்கிறதே என்று எதையும் செய்து பார்க்கக்கூடாது :)

ambi said...

அப்படியா பகீ? எனக்கு பகீர்னு இருக்கு. அக்கவுண்ட் விபரம் எல்லாம் நான் இன்னும் குடுக்கலை.

ஸ்ரீதர், ரீமிக்ஸா, நான் பாத்தது இல்லையே?

வாங்க ரங்கதிவாண்ணா, பாத்து ரொம்ப நாள் ஆச்சு, ஆனா வந்ததுக்கு டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்க. :))

கதிர், சரிப்பா, ஒரு பேச்சுக்கு கூட நான் பிசியா ஆபிஸ் வேலை பாக்கறேன்ன்னு சொல்ல கூடாதா? ஆப்புரைஸல் டைம் வேற. :))


Good soul, Thanks for the info, i will be careful. You are really a good soul :))

மறுபடியும் கீதா பாட்டி, இருங்க, என் பையனை விட்டு உங்களை கேக்க வைக்கறேன். போற போக்குல இது வேறையா? :))

அபி அப்பா, கீதா பாட்டிய நம்பி ஆத்துல இறங்காதீங்க, அவ்ளோ தான் சொல்வேன். :))


வாங்க முத்தக்கா, உங்க பசங்க எதிர்காலத்துல பெரிய வியாபார காந்தமா வருவாங்க போலிருக்கே! :p

சரவண குமரன், மெட்ராஸ்காரன்,சுவாமி நாதன், கிளி இல்லைங்க. :)


மெட்ராஸ், உங்க அன்புக்கு ரெம்ப நன்னி. :))

துளசி டீச்சர், கிளி மண்டபமா? யாரு எழுதி இருக்காங்க? சூப்பா? சரி தான். :))

ambi said...

//கிளி சொல்கிறதே என்று எதையும் செய்து பார்க்கக்கூடாது //

அடடா கரக்ட்டா பாயிண்டை புடிச்சீங்க பாருங்க, அங்க தான் சுந்தர் நீங்க நிக்கறீங்க. :))

Anonymous said...

kili velai avvalovu cheap ayidicchannu thigachi poyitten.kadiisiyela idu vera kilikku."game of life"nnu romba nnaal munnadi enponnoda oru game vilayuduven.adhulla ellame 1000 $.50000$nnu notes iruukkum.kadaisila kadanpattu ,thothuduven.andha game mudiyave mudiyadhu.eppavume adula nnaan jeichadilla.andha dollar vilayuttu madhiriye irukku.2 sandhegam.1.unga officella ungala innuma nambaranga.2.aani pudungara vella koranjuduchha illana comp games boraaditthu vittadha?idhellam vazhakkama nadakardhu dhaane.
nivi.

ambi said...

//unga officella ungala innuma nambaranga//

@nivi, avvvvvvv :))

//unga officella ungala innuma nambaranga//

adhu enniku koranju irukku? :))

Swamy Srinivasan said...

aaaha ambi, sikkidaadeenga? ippa dhaan recentaa thangamani kitta sikki innum meelavae illannu ninaikiraen..ippa indha clickukku matter ellam vaendaam..scene aagividum :)

Infact, even i've got so many mails like these fraudulent one's. Appadiyae Rajini padathula vara maadhiri oru 5 mins paatula periya aal aaidalaam endra feelingae vandhudum :) Avlo build up irukkum andha mails ellaam. hmmm namakku suzi irundhaa panam nammala thaedi varum...enna solreeenga?

anyways, 2009 la konjam blog ulaguthula marubadiyum irangalaam enra aasai dhaan :)

Wish you and your family a very happy new yr. Eppavum pola kalakkunga ambi. You are a brilliant entertainer and a narrator. Keep the gr8 work going.

-- Kittu Mama

ambi said...

வாங்க கிட்டு மாம்ஸ், உங்க அன்புக்கு ரெம்ப நன்னி. :))

நீங்க இந்தியா வந்த போது போன் பண்ண மிஸ் பண்ணிட்டேன், வெரி சாரி. :(

தாரணி பிரியா said...

:) :):) :)

shree said...

american dollaro murugan dollaro - kodukka mattanga, un kitterundhu vanga dhan theriyum. chapathi sonna enna vena seyve, thangs sonna procrastinationa.. edu phonea, kodu ambi thangs numbera..

ambi said...

//chapathi sonna enna vena seyve, thangs sonna procrastinationa.//

@shree, போற போக்குல ஆப்பு அடிச்சிட்டு போயிட்டியே மா! நல்லா இரு தாயி! :))

மகா said...

நானும் கிளின்னுதான் நினச்சேன். எந்த டாலர தர்றாங்கன்னு மறக்காம சொல்லுங்க

ambi said...

அடடே அப்படியா மகா..? கண்டிப்பா சொல்றேன். வருகைக்கு நன்னி.

rapp said...

துரோகிங்க அண்ணே, விடுங்க போகட்டும். அதான் நான் மங்காத்தாவைத் தவிர வேறதையும் நம்புறதில்ல:):):)

ambi said...

//அதான் நான் மங்காத்தாவைத் தவிர வேறதையும் நம்புறதில்ல//

@rapp, ஹிஹி, வாம்மா மின்னல். பிரான்ஸ்ல ஐஸ் கட்டி எல்லாம் எப்படி இருக்கு? :)))

Vijay said...

என்னா அம்பீஈ?

ரொம்ப குடுத்துட்டாங்களா? சத்தமே காணோமே? தூக்க முடியலனா சொல்லுபா. ஒரு கை ஹெல்ப்பு பண்ணானுமா? :)))) :P

ambi said...

//ரொம்ப குடுத்துட்டாங்களா? சத்தமே காணோமே? தூக்க முடியலனா சொல்லுபா. ஒரு கை ஹெல்ப்பு பண்ணானுமா? //

வாப்பா விஜய், ரொம்ப தான் குடுத்துட்டாங்க, ஆபிஸ்ல. :))

ஒத்தாசைக்கு வந்தா எனக்கும் வசதியா இருக்கும். :p

இந்த வாரம் ஒரு பதிவு போட ட்ரை பண்றேன்.

கைப்புள்ள said...

ஒரு மாசத்துக்கு மேல ஆச்சே? சொன்ன மாதிரி ஆயிரக் கணக்கான டாலர் சம்பாதிச்சீங்களா?

அப்படியே நேரமிருந்தா இங்கேயும் ஒரு எட்டு வந்துட்டுப் போங்க.

http://www.vvsangam.com/2009/02/blog-post.html

ராமலக்ஷ்மி said...

கிளி அடுத்த ரவுண்ட் கிளம்பி இருக்கிறதா:)! பதில் தரப் படாத வருத்தத்தில் போகிறது இந்தக் கிளி:(!

ambi said...

//கிளிகள் எல்லோரும் கிளிகள் என்றே படிச்சிருக்கோம்//

//பதில் தரப் படாத வருத்தத்தில் போகிறது இந்தக் கிளி://

கிளிக்கு ரொம்ப சாரி, மிஸ் பண்ணிட்டேன் போலிருக்கு. அதுக்காக றெக்கை முளைச்சு, பறந்து போக வேணாம். :))

ambi said...

//ஒரு மாசத்துக்கு மேல ஆச்சே? //

ஆமா தல, பாருங்க உங்களுக்கு தெரியுது, என் டாமேஜருக்கு தெரியுதா? :))

இதோ இப்பவே வந்து பாக்கறேன். சங்கத்துக்கு புது ஆபிஸ் சொந்தமா கட்டி இருக்கீங்க போல. :p

materials said...

chloe purse
chloe paddington handbag
chloe uk
dior
christian dior

Anonymous said...

http://smokefreearizona.us/herbals/284.html dangers of low vitamin d vitamin e reactions b6 vitamin food source and benefits vitamin d deficieny [url=http://smokefreearizona.us/general-health/aricept-smart-drug.html]aricept smart drug[/url] http://smokefreearizona.us/body-building/593.html blood test for vitamin d bio-b vitamin acai berry clear skin timeframe for vitamin absorption [url=http://smokefreearizona.us/skin-care/1euaq.html]alpha lipoic acid benefits side effects[/url] http://smokefreearizona.us/female-enhancement/540.html dog supplements vitamins dogs paxil and strattera and bipolar disorder acai berry in san antonio texas acai berrys dont work [url=http://smokefreearizona.us/hypnotherapy/580.html]deficiency vitamin complex b[/url] http://smokefreearizona.us/body-building/autism-mentat-retardation-anxiety-in-adults.html autism mentat retardation anxiety in adults natural vitamin company b vitamins safe to take first market brand of pilocarpine [url=http://smokefreearizona.us/herbals/drug-reaction-to-decadron.html]drug reaction to decadron[/url] http://smokefreearizona.us/herbals/10-worst-vitamin.html 10 worst vitamin prednisone in cat food finger nail growth improvement vitamins mangosteen acai goji juice [url=http://smokefreearizona.us/general-health/different-types-of-vitamins.html]different types of vitamins[/url] http://smokefreearizona.us/general-health/buy-vitamins-carb-powder-performance-triadhealth.html buy vitamins carb powder performance triadhealth too much vitamin c while pregnant e pill vitamin pregnant vitamin e [url=http://smokefreearizona.us/female-enhancement/NQX_gD.html]depakote dosage[/url] http://smokefreearizona.us/hypnotherapy/expectant-mother-vitamin-advice.html expectant mother vitamin advice microgestin interaction with trileptal buy alpha lipoic acid vitamin nutrition deficiency health problem [url=http://smokefreearizona.us/erectile-dysfunction/572.html]extreme morning sickness can't take vitamins[/url] http://smokefreearizona.us/female-enhancement/duet-dha-with-ec-prenatal-vitamins.html duet dha with ec prenatal vitamins health man sexual vitamin depakote bipolar disorder one amazon acai costco [url=http://smokefreearizona.us/body-building/acai-extract-from-plant.html]acai extract from plant[/url] http://smokefreearizona.us/female-enhancement/385.html cut points vitamin deficiency pregnancy vitamins mooresville nc depakote erowid carntine vitamins [url=http://smokefreearizona.us/general-health/244.html]acute overdose on vitamin a[/url] http://smokefreearizona.us/hypnotherapy/3Lcx2jj.html buy dr acai skin care api vite vitamin tablets bonine or dramamine over dose of vitamin b12 [url=http://smokefreearizona.us/male-enhancement/ethex-prenatal-vitamin.html]ethex prenatal vitamin[/url]