Friday, January 09, 2009

நடந்தது என்ன? - நான் தான் ஜோதா அக்பர்


நேற்று இரவு விஜய் டிவி பாத்த போது ஒரு சுவாரசியமான விஷயத்தை காட்டினார்கள். முன் ஜென்ம நினைவு, மறுபிறவி இதிலெல்லாம் அனேகமாக எல்லாருக்கும் ஒரு வித எதிர்பார்ப்புடன் கூடிய குருகுருப்பு இருக்கும். " நான் போன ஜென்மத்துல ராணியா பொறந்திருப்பேன்" போன்ற டயலாக்குகளை அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கலாம்.

அதை போல தமிழ் நாட்டில் பிரபலமான குடும்பத்தை சேர்ந்த அந்த அம்மா தமக்கு ஏற்பட்ட நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். பதேஃபூர் சிக்ரி அரன்மனையை சுற்றி பார்க்கும் போது தமக்கு ஏற்கனவே அங்கு வாழ்ந்த நினைவு இருப்பதாக உணர்ச்சிபூர்வமாய் அவர் கூறியபோது நம்மால் நம்பாமல் இருக்க முடியலை.

இதை போல பல சம்பவங்கள் உலகமெங்கும் நடந்தேறி இருக்கிறது. நமக்கே சில விசித்திர கனவுகள் வரும். அதன் பொருள் நமக்கு தெரியாது. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் சிலபல ஆண்டுகள் கழித்து அதே மாதிரி ஒரு சம்பவம் நடக்கும் போது பளீர்னு மின்னல் வெட்டுவது போல நினைவலைகள் தோன்றும்.

குதிரைகளை பாக்கும் போது ஏதோ காலகாலமாய் அதனுடன் பழகியது போலவும், சான்டில்யன் கதைகளை படிக்கும் போது ஏற்கனவே அந்த கால சூழலில் வாழ்ந்தது போலவும் தோணுகிறதே. அதான் அந்த ஆசிரியரின் வெற்றி என நான் கருதுகிறேன். உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டு இருக்கிறதா?

நான் பலமுறை இதை மாதிரி உணர்ந்து இருக்கிறேன். இதை ஒரு அம்மானுஷ்ய சக்தி என்று சொல்வதா? மூளையின் நினைவுகளில் ஏற்படும் தாக்கம் என கொள்வதா? எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுது என பலபேர் சொல்வதை கேட்டு இருக்கோம். தம் உள்ளூணர்வை தான் அப்படி நாம் சொல்கிறோம்.

இந்த நிகழ்ச்சியின் இடையில் நானும் ரொம்ப சீரியசா முகத்தை வைத்து கொண்டு என் தங்கமணியிடம், "போன ஜென்மத்துல நான் தான் ராஜ ராஜ சோழன்னு எனக்கு தோணுது, இதை பத்தி நீ என்ன நினைக்கிறாய்?" என சீரியசா கேட்க, அம்மணிக்கு சிரிப்பை அடக்க முடியலை.

சரி, உங்களுக்கு இப்படி ஏதும் தோணி இருக்கா? சும்மா சொல்லுங்க பாப்போம்.

38 comments:

Unknown said...

did u know abt this?? a 4 year old girl from u.p claims herself to be kalpana chawla.and she had kept on telling this from the day she started speaking......

mgnithi said...

// இந்த நிகழ்ச்சியின் இடையில் நானும் ரொம்ப சீரியசா முகத்தை வைத்து கொண்டு என் தங்கமணியிடம், "போன ஜென்மத்துல நான் தான் ராஜ ராஜ சோழன்னு எனக்கு தோணுது, இதை பத்தி நீ என்ன நினைக்கிறாய்?" என சீரியசா கேட்க, அம்மணிக்கு சிரிப்பை அடக்க முடியலை//

L.O.L.

ambi said...

மன்னார், ஆஹா ஒரு க்ரூப்பா தான் கிளம்பி இருக்காங்க போல. :))

ஆனா அது உண்மையா கூட இருக்கலாம்.

மேவி... said...

ஆமாங்க.... என்னக்கு கூட சான்டில்யன் கதைகளை படிக்கும் பொது இந்த மாதிரி தோணும்.... நான் முன் பிறப்பில் பெரிய வீரன் என்ன தோணும். பொன்னியின் செல்வன் படிக்கும் போதும் அந்த காலத்திற்கே சென்று விடுவேன். UNCLE TOM’S CABIN படிக்கும் பொது இதே மாதிரி உணர்தேன்.....
முன் பிறவி ...... உணர்த்து இருக்கிறேன்.
நான் அந்த எபிசொட் மிஸ் பண்ணிட்டேன். என்ன செய்ய.

அபி அப்பா said...

அம்பி! ரொம்ப கொடுமை அம்பி! உங்களுக்காவது ராஜராஜசோழன்னு தோணுது. பலபேருக்கு பொ.செ படிச்சா வந்திய தேவன்நியாபகம் வருது! எனக்கு என்ன ஞாபகம் வருதுன்னு தனிமெயில்ல சொல்றேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராமலக்ஷ்மி said...

//அம்மணிக்கு சிரிப்பை அடக்க முடியலை. //

எங்களுக்கும்தான்.

எனக்கு அப்படியெல்லாம் தோணியதேயில்லை. ஆனால் ஒரு சமயம் கைரேகை பார்த்து பலன் சொல்லும் ஒரு அம்மாள் எங்கள் வீட்டுக்கு வர நேர்ந்தது. என் அம்மா எல்லோரது கையையும் நீட்ட வைத்தார். முன் பிறவியையும் சொன்னார் அவர். பெரிய தங்கை புத்த பிட்சுவாம். சின்ன தங்கை குதிரை ஏறி போர் புரிந்த வீராதி வீரனாம். போர் தழும்பின் வடு இப்ப கூட வயிற்றில் தெரியும் என்று சொல்ல தடவித் தடவி பார்த்தாள், பாவம். அப்ப நான்..? லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லேயின் தங்கையாகப் பிறந்து சின்ன வயதில் காலமாகி விட்டேனாம். எப்போ இவர்கள் டிவியில் தோன்றினாலும் ‘ஏய் ஓடி வா உங்கக்கா’ என என்னை கலாய்த்துத் தள்ளி விடுவார்கள். அப்படி ஒரு தங்கை அவர்களுக்கு இருந்தாளா என யாராவது கேட்டுச் சொல்லுங்கப்பா:)!

ambi said...

@mgnithi, என்ன சிரிப்பு..? எல்லாம் பிப்ரவரி வரைக்கும் தான். :))

@Mayvee, அட அப்படியா? அப்ப நீங்களும் ஒரு படை வீரரா? :))

வெரிகுட். வெரிகுட். இன்னிக்கும் அதன் தொடர்ச்சி போடறாங்க பாருங்க. :)

சரியா சொன்னீங்க அபி அப்பா. தனி மெயிலா? ஏதாவது ஏடாகூடாமா? சீக்ரம் சொல்லுங்க பா, ஆர்வம் தாங்கலை. :))

அட வாங்க ராமலக்ஷ்மி, உங்களுக்காக தான் அவங்க தங்கைகோர் கீதம் பாடறாங்களா? :))

அபி அப்பா said...

அட போங்கப்பா இதிலே என்ன ரகசியம்! எனக்கு அந்தவந்தியதேவனை சுமந்துகிட்டு ஓடும் குதிரையாக நான் இருந்திருப்பேனோன்னு எப்பவும் ஒருஎண்ணம்:-)))))))))))) வித்யாசமா இரூக்குல்ல!

Anonymous said...

@அபி அப்பா, நான் ஏதோ நீங்க அஜால் குஜாலா ஜொள்ள போறீங்களோன்னு நெனச்சேன். :))

சரி, இப்பவும் நேரம் இருக்கு, தனி மெயில்ல சொல்லுங்க. :p

Anonymous said...

நிகழ்ச்சி பார்க்கவில்லை. ஆனால் advertisement இல் அடிக்கடி காட்டிக்கொண்டு இருந்தார்கள்.
ஜோதா அக்பர் படம் பிரமாண்டமாக, அழகாக எடுத்து இருந்தார்கள். படம் பார்க்கும் போது
அக்பர் காலத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தான் நாமும் கதைத்துக்
கொண்டோம்.
அந்த அம்மாவையும் அதிகமாக அந்த படம் பாதித்து இருக்க வேண்டும்.
கங்கா சந்திரமுகி என தன்னை நினைத்தது போல் (சந்திரமுகி படத்தில்) , அவரும் தன்னை ஜோதாவாக‌
நினைக்கிறார் என நான் நினைக்கிறேன்.
இது என் கருத்து மட்டுமே.
(படத்தில் ஜோதாவாக நடித்த ஐஷ்வர்யாராய் அப்படியே
எல்லோருடைய மனதையும் கொள்ளை அடித்து சென்று விட்டார். )

அக்பர் அரண்மனையை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்பதை ஒரு லட்சியமாகவே நான்
கொண்டுள்ளேன்.

கமல் ஒரு படத்தில் (எனக்குள் ஒருவன் ?)முற்பிறப்பு நினைவு வருவது போல் நடித்துள்ளார்.

mgnithi said...

//@mgnithi, என்ன சிரிப்பு..? எல்லாம் பிப்ரவரி வரைக்கும் தான். :))//

ambi,
kalyanam aanathukku appuram sirikaratu koodava thappu :-)

Unknown said...

லேபிளை நாலு தரம் திருப்பிப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டேன், நகைச்சுவையா இல்லியான்னு.

நான் கிருஷ்ணர் திருடித் தின்ன வந்த வெண்ணை:-) (எங்கியோ போயிட்டேன்ல?)

Anonymous said...

//அந்த அம்மாவையும் அதிகமாக அந்த படம் பாதித்து இருக்க வேண்டும்.
கங்கா சந்திரமுகி என தன்னை நினைத்தது போல் (சந்திரமுகி படத்தில்) , அவரும் தன்னை ஜோதாவாக‌
நினைக்கிறார் என நான் நினைக்கிறேன்.
இது என் கருத்து மட்டுமே.
(படத்தில் ஜோதாவாக நடித்த ஐஷ்வர்யாராய் அப்படியே
எல்லோருடைய மனதையும் கொள்ளை அடித்து சென்று விட்டார். )
//
என் மகளின் வயது எட்டு....இந்த நிகழ்ச்சியை நான் விஜய் டிவியில் பார்துகொண்டிர்ந்த போழ்து அவள் மிகவும் cool அக சொன்னது 'இன்னும் கொஞ்ச நேரத்தில அந்த அம்மா ரா ரா -ன்னு பாடப்போரங்க என்றாலே பாருங்கள் ...நாங்க அப்படியே ஷாக் ஆயிட்டோம் ...

Anonymous said...

Déjà vu

சின்னப் பையன் said...

:-))))

அமுதா said...

/*அதான் அந்த ஆசிரியரின் வெற்றி என நான் கருதுகிறேன். உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டு இருக்கிறதா? */
அந்த ஆசிரியரின் வெற்றி தான். "பொன்னியின் செல்வன்", "உடையார்" எல்லாம் படிக்கும் பொழுது நிச்சயம் தஞ்சைல தான் பிறந்திருப்போம்னு நினைச்சேன், "சிவகாமியின் சபதம்" படிக்கும் பொழுது "காஞ்சி" அப்படினு நினைச்சேன். ஆனால் பாருங்க ஜீனோ படிக்கும்பொழுது நாம் என்ன மாடல் ரோபோவா இருப்போம்னு கூட யோசிச்சேன். அதாவது முற்பிறவி மட்டுமில்லை அடுத்த பிறவியும் தெரிஞ்சுது :-))

ரவி said...

இதை டேஜாவூ அப்படீன்னு சொல்வாங்க...

உலகமகா அறிவாளியான ஆனந்தவிகடன் மதனுக்கு ஒரு கேள்வி எழுதி அனுப்பவும், அரை பக்கம் ஓட்டுவார்...

நான் தான் யுவான் சுவாங்...

க்கீ மீ ஹை கூ அஹ் ஹ்ஹ்

மேவி... said...

i like tht amir character in kadal pura. i have felt tht i was him in my previous birth

G3 said...

// இந்த நிகழ்ச்சியின் இடையில் நானும் ரொம்ப சீரியசா முகத்தை வைத்து கொண்டு என் தங்கமணியிடம், "போன ஜென்மத்துல நான் தான் ராஜ ராஜ சோழன்னு எனக்கு தோணுது, இதை பத்தி நீ என்ன நினைக்கிறாய்?" என சீரியசா கேட்க, அம்மணிக்கு சிரிப்பை அடக்க முடியலை//

ROTFL :)))

CA Venkatesh Krishnan said...

//
உங்களுக்கு இப்படி ஏதும் தோணி இருக்கா? சும்மா சொல்லுங்க பாப்போம்//

காசெல்லாம் வேண்டாம். சும்மாவே சொல்றேன். எங்கிட்ட இதுமாதிரி தோணில்லாம் இல்ல.:((

ஆனா சில நிகழ்வுகள் நடக்கும் போது இது ஏற்கனவே நடந்தா மாதிரி இருக்கும்.?!?!?! இது மாதிரி உங்களுக்கு தோணி இருக்கா?

தாரணி பிரியா said...

எனக்கு தஞ்சாவூர் போகும் போது எல்லாம் ராஜராஜன் இந்த கோவிலை விட்டு போயிருக்க மாட்டார். இங்குதான் எங்கோ உலாவிட்டு இருப்பார்னு தோணும்

அதே போலத்தான் சரித்திர நாவல்கள் படிக்கும் போது யாராவது கூப்பிட்டா குதிரையில இருந்து இறங்கிவர கொஞ்சம் டைம் எடுத்துப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

அம்பீ,
நாடி ஜோசியம் பார்த்தால் எல்லாம் சொல்லுவார்கள்.அநேகமாஅ கலிங்கத்தில் பிறந்து கணவனைக் கொடுமைப் படுத்தி ,வயசான பிறகு தவறுகளை உணர்ந்ததால் இப்ப நல்ல பிறவி கிடைச்சுட்துன்னு சொல்வார்கள்.
ஆனால் எனக்கு இந்த முன் ஜன்மவிஷயம் ரொம்ப ஃபாசினேடிங் சப்ஜெக்ட். நான் நம்புகிறேன்.

பார்க்காம போயிட்டேனே.:)))

shree said...

didnt see the program but my neice was telling me about it. i was at sriperumbudur at that time, so i immediately started that it feels like i have seen ramanujar, i sat here at this spot, etc. etc. good enof that my niece got irritated yenda sonnom nu :)
i dont have any such thought, but i think i have ESP. 90% of my intution/guesses have worked out. but unlike ATM vijay, i dont go on a roller coaster and all. in fact that ESP will happen just few minutes before the actual event. very short ESP, you know :)
thinking of Raja raja cholan... well.. no comment! but after reading ponniyin selvan, my hub still goes around with that statement, so u/stand how funny it is for me when you say the same statement he he he :)

shree said...

BTW, waiting for a post on satyam

Karthik said...

enakku haary potter padhikkum podhu naa thaan harry potter nu thonum!!

Karthik said...

FINAL DESTINATION, Ilaya thalavali VIJAY in ATM poondra padangaali paakavum....

Anonymous said...

ippadiye thangamani kitte kelvi kettinga avanga appuram ,pona jenmathila nnaan kavundamaniyum,neenga senthilnnum sollidaporanga paarthu....
idha padichapuram naan ennoda rengamani kitta pona jenmathilayum naan thhan unga thangamani,pona jenmathila vaanga uttupona agraharam pattu indha jenmathilayavathu vaangi kodunga nnu nool vuttu parthen.onnum peyara villa.manushan kaikku sikkinal thaane!!!!
nivi.

Dinesh C said...

தெரியாம இருக்கும் வரை நல்லது..
போன ஜென்மத்திலும் சும்மா பிறந்தோம்..
வளர்ந்தோம்.. கட்டினோம்.. குழ்ந்தை குட்டியோடு
இருந்தோம்.. இறந்தோம்..
அப்படினு தெரிஞ்சு போச்சுனா....
ரொம்ப பீலிங்க்ஸா இருக்கும்..

தெரியாத வரை.. ஸ்வாரஸ்யமே!

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

ஹம்ம்ம்ம்....நான் தான் முன் பிறவில ஆழ்வார்க்கடியான்னு சொன்னா நம்பவா போறீங்க????

Anonymous said...

Dont u guys dream like ordinary folks in previous birth, say a rickshaw puller or a hotel bearer.

Ellamey Raaja , raani illaena dancer thaana ?

-- Rajesh

ambi said...

நானும் அதே கங்கா கதைய தான் நினச்சுகிட்டேன். வருகைக்கு மிக்க நன்னி மதுமிதா.

@mgnithi, சிரிக்கலாம் தப்பில்லை ஆனா அதன் சைடு எபக்ஃட் தான் அடுத்த தடவை சிரிக்கும்போது சிந்திக்க வைக்கும்.

கெபி அக்கா, நீங்க ரொம்ப ஷர்ர்ப்பு. யாராச்சும் கவனிக்கறாங்களா பாப்போம்?னு தான் அப்படி லேபிள் போட்டேன். :))

என்னது? கிருஷ்ணர் வெண்ணையா? முடியல. :))

@sg, ஹாஹா, உங்க பொண்ணு படு ஸ்மார்ட்.

தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி Nice PYG, சின்ன பையன், & ரவி.

ambi said...

அமுதா, சரியா சொன்னீங்க. காலத்தை கடக்க வைக்கும் வித்தை ஒரு சிலருக்கே வசப்படுகிறது.

மேவீ, நீங்க தான் அமீரா? அப்படியே மஞ்சள் அழகி யாருன்னும் சொல்லிடுங்க. ஏன்னா நான் தான் ஹிஹி.. :))

ஜி3 அக்கா. இப்படி சிரிச்சிட்டு போனா என்ன அர்த்தம்..?

இளைய பல்லவன், நீங்க நிறைய சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன். ஏமாத்திபுட்டீங்களே.

ஆமா, கண்டிப்பா அவர் அங்க தான் சுத்திட்டு இருப்பார் தாரணி ப்ரியா.

வாங்க வல்லிமா, அடுத்த ரெண்டு எபிசோட் பாத்தீங்களா? :)

ஷ்ரி, ESP எல்லாம் இருக்கா? நான் கொஞ்சம் உஷாரா இருக்கேன்.

உங்க ரங்கமணிய கிண்டலடிக்கனும்னா செம குஷியாயிடுவீங்களே!

சத்யம் பத்தி எழுதற அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை. :))

வாங்க கார்த்திக். ஹாரி பாட்டர் ஒரு கற்பனை பாத்திரம் தானே?

வாங்க நிவி, அதானே, போன ஜென்மமா இருந்தா என்ன? இந்த ஜென்மமா இருந்தா என்ன? ரங்குவுக்கு ஆப்பு அடிப்பதில் நமக்கு நிகர் யாரு? :p

போன ஜென்மத்துல தான் ஒன்னும் செய்யல, இப்பவாச்சும் ஏதும் செய்யலாம்னு தோணும் இல்ல தினேஷ்? :p

மெட்ராஸ்காரன், ஒரு ரேஞ்சா தான் இருக்காங்க பா எல்லாரும். :))

ராஜேஷ், போன ஜென்மத்துல ரிக்க்ஷாவே கிடையாதாக்கும். :))

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" அப்படின்னு கேள்விபட்ருக்கீங்களா? :p

Priyamanaval said...

idhu ellam unga mana brandhi dhaanga. idha deja vu nnu solvaanga.

ambi said...

//mana brandhi //

@priyamanaal, brandhiyaa? :)))

thx for the info. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆமாம் அம்பி எனக்கு கூட போன ஜன்மத்தில் அகஸ்தியர் போலவும் பங்களூரில் இரண்டு சகோதரர்களப் பார்க்கும்போது வாதாபி-- வில்வளன் போல இருக்கிறது.

rapp said...

எனக்கு அந்தம்மா கணவரை பாத்துத்தான் காமடியா இருந்துச்சி. அவரு ஒருவேளை போன ஜென்மத்தில் அவுரங்கசீபா பொறந்து பண்ண அழிச்சாட்டியத்துக்கு இப்போ அனுபவிக்கிறாரோன்னு இருந்துச்சி:):):)

ambi said...

@TRC சார், வாதாபி, வில்லாளனா? எப்படியும் இந்தியா வருவீங்க இல்ல, அப்ப காட்றோம் எங்க வேலைய. :))

@ராப், ஹிஹி, ஆமா அவரை பாக்க காமடியா இருந்துச்சு. :))

Rajeshkumar.JK said...

அடியேனுக்கு ரொம்ப முத்திடுச்சுன்னு நெனக்கிறேன்... இதையெல்லாம் தாண்டி வேற லெவல்ல, நான்தான் பல ஜென்மங்களுக்கு முன்னால் அங்காரகன்னு (செவ்வாய்) எனக்குத் தோனிச்சு, அதுவும் ஒருதடவை வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிருந்தப்ப... இத நம்புறதா வேண்டாமான்னு இன்னிக்கு வரைக்கும்... ஆனா பல பேருக்கு நான் CALL பண்ணும்போதே, இப்பதான்டா உன்ன நெனச்சேன்ன்னு சொல்வாங்க, அதுவும் அவங்கள அந்த நாள் வரைக்கும் போன்லயே பேசியிருக்க மாட்டேன், அவங்க நம்பரே அப்பதான் யார்கிட்டயாவது வாங்கிப் பேசிருப்பேன்... அவங்கள்லாம் சொல்வாங்க...