Friday, November 21, 2008

குவிஜு விடைகள்


ஜார்ஜ் புஷ்ஷே! மன்னிப்பு கேள்! ஓபாமா உனக்கு புடிச்சது உப்புமாவா? போன்ற உணர்ச்சி குவியலாய் தமிழ்மணத்தில் எழுதபடும் பதிவுகளில் இருந்து உங்களுக்கு தற்கால விடுதலை அளிக்கவே இம்மாதிரி குவிஜை அறிமுகப்படுத்தினேன். வேற எதுவும் காரணம் இல்லை.

முதல்ல இந்த குவிஜுக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.
இந்த குவிஜை எப்படி அணுகனும்?னு நான் வழிமுறை எல்லாம் உதாரணத்தோட போட்டு இருந்தும், பல பேர் கண்ண மூடிகிட்டு தொபக்கடீர்னு போட்டில குதிச்சு இருக்கீங்க. உங்க ஆர்வத்தை நினைச்சா எனக்கு புல்லரிக்கிது. :)

நான் ரொம்ப தெளிவா சொல்லியிருக்கேன்:

1) எல்லா கேள்விகளும் குறிபிட்ட ஆட்களை பத்தி தான்.
2) எல்லா குறிப்புகளும் நேரிடையாகவோ மறைமுகமாவோ ஆட்களை தான் குறிக்கும்.

சரி விடுங்க, அடுத்த தடவை நான் இன்னும் கொஞ்சம் கவனமா முடிஞ்சா உங்க வீட்டுக்கே வந்து பிட் நோட்டீஸ் குடுக்க முடியுமா?னு ட்ரை பண்றேன். அதோட இல்ல, இந்த வகை குவிஜை இன்னும் எளிமையாக, 'நாலுல ஒன்ன தொடுங்க பாப்போம்!' ரேஞ்சுல நடத்த முடியுமா?னு சிந்திக்கிறேன்.


இப்போ விடைகளை பாப்போம்.


1) ஒரு வீணை, திருவள்ளுவர் சிலை இதானே படங்கள். வள்ளுவர் வீணை வாசிச்சா ஒரு இசை கலைஞர் வருவார்னு சொல்லிட்டேன்.

வெரி சிம்பிள்: பாலசந்தரின் கவிதாலயாவின் லோகோ என்ன? வள்ளுவர். ஆக விடை விணை பாலசந்தர்.
(என்ன இப்பவே கண்ண கட்டுதா?)

2) கிரிகெட்டுக்கும் பீருக்கும் என்ன சம்பந்தம்? இதானே குறிப்பு. பீர்னாலே விஜய் மல்லயா தான். கிரிகெட்டுல 20-20ல கைய சுட்டுகிட்டாரே.

ஸ்ரீதர் கவுதம் கம்பீர்னு சொல்லி இருக்கார். சரி அதுக்கும் மார்க் குடுத்து இருக்கேன். ஆக விடை விஜய் மல்லய்யா.


3) இங்க்லீஷ் எழுத்துக்கள்(A to Z) மற்றும் கிருஷ்ணர் பேமிலி (கிருஷ்ணர்+பாமா+ருக்மணி)படம். அதாவது ஓ+பாமா=ஓபாமா.
(யாருப்பா அது? கல்ல விட்டு எறியறது?)


4) டாலர் படம் + சில ரத்னங்கள் படம். அத ஏன் டாலரா பாக்கறீங்க? 'மணி'யா(Money) பாருங்க பா. ஆக மனிரத்னம். குறிப்பை வாசிங்க, மனிரத்னம் பட வசனம் மாதிரி இருக்கா? :)


5) இது ரொம்ப சிம்பிள். பல்லாங்க்குழியின் வட்டத்தை பாத்து ஒத்தை நாணயம்னு பாடின சினேகா தான் விடை. சிலருக்கு அந்த பாட்டுல வேலை பாத்த லைட்பாய்ஸ் பேர் கூட தெரிஞ்சு இருக்கலாம். சொல்லுங்க, சந்தோஷமா நானும் தெரிஞ்சுக்கறேன். :D


6) ஒரு சுவர் படம் + ஒரு ஆமை படம். 'தி வால்'னு(The Wall) ராகுல் டிராவிட்டை ஒரு காலத்துல சொல்லிட்டு இருந்தாங்க. அண்ணன் 20-20 கிரிகெட்டையே டெஸ்ட் ரேஞ்சுக்கு ஆமை வேகத்துல ஆடறதுல கில்லாடி.


7) சுட சுட ஈமெயில் அதாவது ஹாட்மெயில். அதை ஆரம்பிச்சது யாரு? சமீர் பாட்டியா. கொஞ்சம் கூகிள் ஆண்டவரை கேட்டு தான் பாருங்களேன்.


8) சாமான்யனுக்கும் விமான பயணம் கிட்டனும்னு ஆசை பட்டவரு டெக்கான் ஏர்லைன்ஸ் ஓனர் கேப்டன் கோபி நாத். சிலர் இதுக்கு விஜய் மல்லயானு சொல்லி இருக்காங்க. சாரி, அவரு சல்லிசா ஷேர் தான் வாங்கினாரு. விடை கேப்டன் கோபி நாத் தான்.


9) ஒரு பாங்க்ரா டான்ஸ்(பஞ்சாபி)+ ஒரு கதகளி டான்ஸ் போட்டோ. நயன்தாரா உங்களுக்கு(எனக்கும் தான்) புடிக்கும் தான். ஆனா குறிப்பையும் படிங்கண்ணே. பளார்னு ஒரு அறை விட்டது யாரு? ஹர்பஜன் சிங்க் தானே? சிலர் ஸ்ரீசந்த்னும் சொல்லி இருக்காங்க. சரின்னு மார்க் குடுத்து இருக்கேன்.


10) அரை வேக்காட்டு பிட்சாவை மட்டுமல்ல சோனியாகாந்தியையும் நமக்கு அறிமுகப்படுத்தியது யாரு? இத்தாலி. காந்தி படமும் போட்டு இருக்கேன். ஆக விடை சோனியா காந்தி.


ரொம்பவே கஷ்டமா இந்த குவிஜை நான் அமைச்சு இருந்தததா நீங்க கருதினா, நான் உங்க கிட்ட சாரி கேட்டுக்கறேன். சத்தம் போடாம பதிவை படிச்சிட்டு குவிஜை ட்ரை பண்ணியவங்களுக்கும் மிக்க நன்னி.

சரியான விடை சொன்னவர்கள் விபரம்:

ரவி: 7/10
ஸ்ரீதர் நாராயணன்: 6/10
எம்ஜி நிதி: 5/10
கில்ஸ்: 4/10
ராப்: 5/10
கெக்கேபிக்குணி அக்கா: 3/10
வல்லி சிம்ஹன்: 3/10

(மார்க் தப்பா இருந்தா சொல்லுங்க திருதிடறேன். )

25 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பத்துக்கு மூணு மார்க் எனக்கும் போட்டுக்குங்க அம்பி.. நேத்து ராப் யோசிங்கன்னு சொன்னாளேன்னு யோசி யோசின்னு யோசிச்சதில.. பின்னூட்டம் போடவே மறந்துட்டேன்.
விஜய்மல்லய்யா
சமீர்
சினேகா மூணு விடை மட்டுமே கெஸ் செய்ய முடிஞ்சது.. :)

rapp said...

me the 2ND:):):)

ambi said...

வாங்க முத்தக்கா, மூனு என்ன முப்பது மார்க் கூட தருவேன், நீங்க பின்னூட்டம் போட்டு இருந்தா. :p

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். :))

ராப், ஐயகோ, ரெண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டீர்களா?

mgnithi said...

one question.. naanga ellarum sernthu pathu questionukkum answer kandu pudichitoma illaya? :-)

மெளலி (மதுரையம்பதி) said...

உம்மை என்ன செய்யறதுன்னு தெரியல்ல...யோசிச்சுட்டு அடுத்த இடுகைக்கு வரேன் :)

rapp said...

ஆஹா இது போங்காட்டம். வீணை பாலச்சந்தரா? நான் பால் வெச்செல்லாம் யோசிச்சேன்:):):) நல்லா போடுறீங்க கேள்விய. அதேப்போல திராவிட் கேள்வியும் போங்குதான். நீங்க ஜாம் பாட்டில் படம் போட்டிருக்கணும். அது பக்கத்தில் ஆமை படம் போட்டிருந்தா பூந்து புறப்பட்டிருப்போம்ல:):):) எத்தனப் பேர் கிருஷ்ணர் படத்தை ராதை, ருக்மணின்னு யோசிச்சிருப்பாங்க:):):) என்னை மாதிரி இன்ஸ்டன்ட் சேவை திகில் படம் காட்னாத்தான் அதுக்கெல்லாம் விடை ஈசியா கண்டுபிடிக்க முடியும்:):):)

rapp said...

//ராப், ஐயகோ, ரெண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டீர்களா?//

ஆமாம்ணே, நேத்துல இருந்து சும்மா இருந்துட்டு இன்னைக்கு வந்து முத்து வேலையக் காமிச்சுட்டாங்க:):):)

rapp said...

ரெண்டாவது கேள்விக்கு தத்துவார்த்த ரீதியில் நான் சொல்லிருந்த விடைக்குத்தான் மொதோ பரிசு கொடுக்கணும்:):):)

rapp said...

// ஓபாமா உனக்கு புடிச்சது உப்புமாவா//

super:):):)

உங்க நக்கலுக்கு இன்ஸ்டன்ட் சேவை மட்டுமில்ல, இன்ஸ்டன்ட் சக்கர சாம்பார்(கர்நாடகா ஸ்பெஷல்), உப்பு கேசரி எல்லாம் செஞ்சு சாப்பிட வெக்கணும்:):):)

rapp said...

me the 10TH

ambi said...

@எம்ஜிநிதி, நக்கலு...? பிப்ரவரி 2009 வரட்டும், அப்புறம் தெரியும். :))

வாங்க மதுரைண்ணா, நீங்க உள்ளேன் ஐயா தானே போட்டீங்க. :)


@rapp,திராவிட் கேள்வி கொஞ்சம் கஷ்டம் தான், ஒத்துக்கறேன். அதுக்காக எதுக்கு சேவை எல்லாம் இழுக்கற? நான் குவிஜே இனிமே போடல போதுமா? :D
முத்தக்கா வேலைய காமிச்சுட்டாங்களா? இத இப்படியே விடாதீங்க ராப், அப்புறம் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுடும். :))

ஒன்னு போனா என்ன பத்தாவது இடம் புடிச்சா ராப் வாள்க. :D

மெளலி (மதுரையம்பதி) said...

//வாங்க மதுரைண்ணா, நீங்க உள்ளேன் ஐயா தானே போட்டீங்க. :)//

நான் போட்ட உள்ளேனய்யாவையும் நீங்க ரிஜெக்டிட்டீங்களே... :)

ambi said...

//நான் போட்ட உள்ளேனய்யாவையும் நீங்க ரிஜெக்டிட்டீங்களே//

ஆமா, அந்த பதிவையே தூக்க வேண்டியதா போச்சு. :))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தப் போட்டி பொறாமை போன்ற விஷயங்களில் கலந்து கொள்ளாத என்னுடைய நல்ல உள்ளத்திற்கு ஏதாவது பரிசு உண்டா?

Sridhar V said...

ம்ம்ம்... கம்பீர்-க்காக மார்க் கொடுத்ததுக்கு நன்றிங்கோவ்.

தொடர்ந்து இந்த மாதிரி போட்டி வைங்க. நல்லா இருக்கும். பெனாத்தல் சுரேஷ்-ன்னு ஒருத்தர் ப்ளாஷ்ல நல்ல டெம்பிளேட் எல்லாம் போட்டு சூப்பரா வச்சிருக்கார். அத்தக் கூட நீங்க அடாப்ட் பண்ணலாம்.

புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் அம்பி :)

ambi said...

@சுந்தர், வாங்க தலைவா, அமிர்தம் பருகியவருக்கு வேற என்ன தருவது? உங்க நல்ல உள்ளமே மிகப் பெரிய பரிசு. :))

வாங்க ஸ்ரீதர், பெனாத்தலாருக்கே அறிமுகமா? ஹஸ்பன்டாலஜி குருவாச்சே அவரு.

அந்த ப்ளாஷ் குவிஜு நானும் கலந்துகிட்டு மொத்தத்துல ரெண்டு மார்க் மட்டும் கோட்டை வுட்டேன். எனக்கு ப்ளாஷ் எல்லம் தெரியாதே! ஆனா அவரு தான் நமக்கு இன்ஸ்பிரேஷன் (குவிஜுல மட்டும் தான்) :p

பரிசல்காரன் said...

தல..

ஜூப்பரோ ஜூப்பர் ஐடியா தல..

எப்படி கவனிக்காம விட்டேன்னு தெரியல...

FOLLOW THIS BLOG போடுங்க... நான் ஃபாலோ பண்ணணும்.

அப்புறம்..

ஒரு விண்டோல என் ப்ளாக் ஓப்பன் பண்ணிவெச்சுட்டு உங்க ப்ளாக்கை ரெண்டு, மூணு தபா திறந்து திறந்து மூடினேன்.. திரும்பத்திரும்ப என்னோடதே ஓப்பன் ஆகுதேன்னு.. அப்புறம்தான் பார்த்தேன்.. ஸேம் டெம்ப்ளேட்!!!

Anonymous said...

mr.vambi gils score 5 on 10....obama..kanraavi...ithukagavay ummai kallala adikanum..and athu sabeer bhatia nenakren..sameer ila..quiza bloga poatathu semma interesting concept..athuvum directa googlaandavaruku archanai pani answer vanga mudiyama ipdi clue vachu poatathu top effort..aana personalitykaga kudutha clue thaan..tamizh papera correct panra english teacher kanakka aaidichi..adutha thaba konjam easya clue tharavum :D

Anonymous said...

//இந்தப் போட்டி பொறாமை போன்ற விஷயங்களில் கலந்து கொள்ளாத என்னுடைய நல்ல உள்ளத்திற்கு ஏதாவது பரிசு உண்டா?//

hahahahah..chaancela vambi..koappaiyai ivarukay thanthirunga :D

shree said...

all out! :(
but yepdi ipdi yellam... kavundhu paduthu yosippiyo...

ILA (a) இளா said...

//அதாவது ஓ+பாமா=ஓபாமா///
இதுக்கு கம்னு கோட்டிக்காரனா அலைங்கடான்னே சொல்லி இருக்கலாம்..

Anonymous said...

mukki,thalagizha paduthu,mallakka paduthu,thalaiyala thanni kudhichhi 5 bathil thaan kidachadhu,ithukku mela moollai (salavai seiyya)mudiyathu,rathiri thookathil kooda unga quiz kanavil varudhu,deivame,romba sothikatheenga.next time konjam easyaa kodunga.ivalluvu kashtama koduthadukku comment podamudiyaatha naan romba thinaritten.ammadiyov ivallavu budhisaliya irukkanga!!!!
nivi.

ambi said...

நன்றி பரிசல், ஃபாலோ எல்லாம் எதுக்குங்க? ஏதோ அறியா சிறுவன் தெரியாம பண்ணிட்டேன். :))

அப்புறம், நான் 18 பிப்ரவரி 2006ல பிளாக் ஆரம்பிச்சு ஒரு 6 மாசம் கழிச்சு இந்த டேம்ளேட்டுக்கு மாறிட்டேன். அதுக்கப்புறம் நோ மாற்றம். :))


@ஸ்ரீ, ஹிஹி, இப்போ என் பையன் தான் குப்புற படுத்துகிட்டு யோசிக்கறான். ஸ்ரீநிதி சவுக்யமா? :))

@இளா, என்ன தலைவா? இப்படி சொல்லிட்டீங்க? வேணும்னா கன்னத்துல(என் கன்னத்துல தான்) போட்டுக்கறேன்.

@நிவி, என்னது கனவுல கூட என் குவிஜா? ரொம்ப டார்சர் குடுத்துட்டேன் போல. இனிமே ஈசியா குடுக்கறேன், அதுக்காக மொய் எழுதாம இருக்காதீங்க. :))

//ammadiyov ivallavu budhisaliya irukkanga!!!!
//

@nivi, என்னை வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலையே? இல்ல எனக்கே கொஞ்சம் டவுட்டாயிடுச்சி, அதான் கேட்டேன். :)))

திவாண்ணா said...

விடைகளை மெய்ல் பண்ண எனக்கு மார்க் போடாத அம்பியை.... பாராட்டுகிறேன்.
:-))
//
(யாருப்பா அது? கல்ல விட்டு எறியறது?)//

நான்தான்!
நெசமாவே கல்லு வுட்டு எரியணும்தான்!
;-))

திவாண்ணா said...

அடுத்த குவிஜு எப்ப? :-))