Friday, November 14, 2008

கொல்டிகாரு

உங்களுக்கு தெரிந்த ஒரு ஐந்து ஐ.டி கம்பனிகளில் ஒன்னுல தான் என் தங்ஸும் ஒரு பொறுப்பான போஸ்டுல இருக்காங்க. பொதுவா என் ஆபிஸ், வேலை விஷயத்துல தங்கமணி அதிகம் மூக்கை நுழைக்கறதில்லை. நமகெதுக்கு வம்பு?னு நானும் தங்க்ஸ் ஆபிஸ் வேலைகளை பத்தி அதிகம் கேட்டுக்க மாட்டேன். தீடிர்னு ஒரு நாள், அவங்க டாமேஜர் ஐதராபாத்லேருந்து போனை போட்டு, ஒரு பய சிக்கி இருக்கான், அவனை டெக்னிகல் இன்டர்வியூ பண்ணி எனக்கு ரிப்போட் அனுப்பிடு!னு சொல்லிட்டாரு.

அம்மணி முத முதலா இப்ப தான் இன்டர்வியூ எடுக்கற அனுபவம். சும்மா தானே(வெட்டியா தானேனும் வாசிக்கலாம்)இருக்காரு ரங்கு!னு என்னை கூப்ட்டு ஏதாவது டிப்ஸ் குடுங்களேன்னு ரெம்ப்ப பவ்யமா கேட்டாங்க.
நமக்கு இது போதாதா?
உள்ளுகுள்ள ரெம்ப சந்தோஷபட்டாலும், வெளிகாட்டாம, இதெல்லாம் உன் ஆபிஸ் சமாசாரம். என்ன தான் இருந்தாலும் நான் ஒரு மூனாம் மனுஷன். நீயே பாத்துக்கோ!னு பந்தாவா சொல்லிட்டேன்.

தங்க்ஸும், இதெல்லாம் கதைக்காவாதுனு முடிவு பண்ணி, சரி, நீங்க போய் நாளைக்கு சமைக்க வேண்டிய காய்கறி என்ன?னு பாத்து கட் பண்ணி வைங்க, அப்படியே வாஷிங்க்மெஷின்ல இருக்கற துணிய காய போட்ருங்க, இடைபட்ட கேப்புல தூங்கற ஜுனியர் எழுந்தா கொஞ்ச நேரம் தூளி ஆட்டுங்க, இல்லாட்டி அவனை தூக்கி வெச்சு ஏதாவது கதை சொல்லுங்க, மறக்காம டயப்பர் மாத்திடுங்க!னு வரிசையா அடுக்கிட்டே போக, எனக்கு அப்பவே கண்ண கட்டிடுச்சி.

சரி, நீ இவ்ளோ கேக்கற, ஹெல்ப் பண்ணாம இருக்க முடியல, போன் போட்டு நீ அந்த கேன்டிடேட் கிட்ட இன்டர்வியூ ஷெட்யூல் பண்ணி கன்பார்ம் பண்ணு. பேசிட்டே இரு. டெக்னிக்கலா ஸ்ட்ராங்கானு பாரு. நானும் கூட இருக்கேன்னு சொல்லி சமாளிசாச்சு.

ஆள் பெயர், ஊர் எல்லாம் என்னனு பாத்தா விஜயவாடாவுலிருந்து ஒரு பக்கா கொல்டி பையன். டக்குனு பல்ராம் நாயுடு இங்க்லீஷ் நினைவுக்கு வர எனக்கும் ஒரு ஆர்வம் தொத்திகிச்சு.

நாலு ரிங்க் போய், நம்மாளு போனை எடுத்து

ஹலோ! எவரண்டி?

நாங்க கெக்ரான் மோக்ரான் கம்பனில இருந்து பேசறோம், நாளைக்கு நைட்டு எட்டு மணிக்கு உங்க கூட டெக்னிக்கல் டிஸ்கசன் பண்ண போறோம், ரெடியா இருங்க என்ன?

ஐந்து செகண்டுக்கு எதிர்முனையிலிருந்து பேச்சே வரலை,

மேடம், நீங்க சொன்னதை எனக்கு மெயிலா அனுப்புங்க ப்ளீஸ், அப்ப தான் நான் நம்புவேன். ஏற்கனவே என் பிரண்டு ஒருத்தன் மைக்ரோசாப்டுல இருந்து பேசறோம்!னு சொல்லி ஒரு மணி நேரம் என்னை கலாய்ச்சுட்டான். அவ்வ்வ்வ்வ், தப்பா எடுத்துகாதீங்க ப்ளீஸ். (குசும்பன் வேலையா இது?)

பாவம் ரொம்ப அடி வாங்கி இருக்கான் போல!னு நினைச்சுகிட்டு, சரி! உடனே உங்க மெயில் பொட்டியை பாத்துட்டு எனக்கு பதில் அனுப்புங்க!னு சொல்லி தங்க்ஸ் போனை கட் பண்ணிட்டு டக்குனு ஒரு மெயில் தட்டி விட்டாங்க.

உங்க கம்பனில இன்டர்வியூ வரதெல்லாம் நான் செஞ்ச புண்யம், நளைக்கு ஏழு மணில இருந்தே நான் ரெட்டியா சே! ரெடியா இருக்கேன்.
மேடம், நீங்களும் தெலுகா? நாளைக்கு என்ன படிக்கனும்?னு கொஞ்சம் சொன்னா புண்யமா போகும்னு ரெண்டு நிமிஷத்துல ரிப்ளை வந்தது.

அடங்கொய்யால! பல்ராம் நாயுடு வேலைய இங்கயே காட்றியா? இருடி,உனக்கு நாளைக்கு இருக்கு தீவாளின்னு தங்க்ஸ் கடுப்பாயிட்டாங்க.

அடுத்த நாள் சொன்ன நேரத்துக்கு போனை போட்டு தங்க்ஸ் ஒரே டெக்னிகல் கேள்விகளா கேட்டு கொடஞ்செடுத்தாங்க. அந்த பையனும் ஓரளவு சரியான பதில்களா சொல்லிட்டான். நான் சைலண்டா எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்ததில் முக்யமான சில துளிகள்:

1) அந்ததந்த மாநில மக்களின் மொழி அக்ஸண்ட் அவங்க பேசர இங்க்லிபிசுல ஒலிக்கிறது.

ஆட்டோ, ஆபிஸ் எல்லாம் சேட்டன்களுக்கு(சேச்சிகளுக்கும் தான்) ஓட்டோ ஓபிஸ் ஆகிறது.
அனேகமாக எல்லா ஆங்கில வார்த்தைகளுக்கு பின்னும் தெலுங்குகாரர்கள் லு போட்டும், கன்னடர்கள் உ போட்டும் பேசுகிறார்கள்.
உதா: ஆரக்கல்லு, டேபிலு,டாக்குமெண்டு, கர்சர்ரு, கேபினு.

2) கொல்டிகள் ஐ.டி துறையில் எப்படியாவது ஒரு பெரிய்ய கம்பெனியில் நுழைந்து, அமெரிக்கா ஆன்சைட்டுக்கு போக வேண்டும்! என்பதை ஒரு தவமாகவே கருதுகிறார்கள். நன்றாக கவனிக்கவும் எப்படியாவது!

இங்கு பெரிய்ய கம்பெனி எனபதற்க்கு தகுந்த விளக்கம், அவங்க வட்டத்தில் அந்த கம்பெனி பெயர் சொன்னா தெரியனும்.
எ.கா: இன்போசிஸ், விப்ரோ, சத்யம், டிசிஎஸ்.

இதன் பின்புலம் என்னனு பாத்தா வெரி சிம்பிள்: எல்லாம் கல்யாணத்துக்கு வரும் வரதட்சணை தான். இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்: இந்த கம்பெனியில் இருந்து, அதுவும் அமெரிக்காவில் வேலை என்றால் ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி வரை ரொக்கம், ஒரு சைட்டு(அதாவது இடம்பா) அல்லது அப்பர்ட்மெண்ட், காரு சே! கார் மற்றும் ஒரு மணப்பெண். :-)

இதுவே இந்தியாவில் வேலை என்றால் ஐம்பது முதல் எழுபத்து ஐந்து லட்சம் வரை ரொக்கம், பிற பொருட்கள் மற்றும் ஒரு மணப்பெண்.

நிற்க, மேலே சொன்னதெல்லாம் கொல்டிகள் மற்றும் கன்னடர்களுக்கு மட்டும் தான்.
தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா? என நோண்டி நொங்கெடுத்து தான் "என் கண்ணயே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்"னு டயலாக் பேசுகிறார்கள்.

சரி டிராக் மாறி விட்டது.

ஓரளவுக்கு அந்த பையன் நல்லாவே பதில் சொல்ல, தங்க்ஸ் இன்டர்வியுவை முடித்து கொள்வதாக அறிவிக்க, அந்த பையன், "தெய்வமே! தெய்ய்ய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே!"னு ஒரு ரெண்டு நிமிஷம் நா தழ தழக்க முடித்து கொண்டான்.

இப்ப விசாரிச்சதுல அந்த பையன் அடுத்த கட்டங்களையும் தாண்டி, நேர்காணலுக்கு சென்று கொண்டிருக்கிறான்னு தெரிஞ்சது. ம்ம்ம், யாரு பொண்ணை பெத்து வெச்ருகாங்களோ?

35 comments:

Anonymous said...

In my company, when ever there is telephonic interview, the call is recorded(both the scheduling call and interview call). Just to make sure that the same guy attends the both the call..

--
Rajan.

ஆயில்யன் said...

:))

சக அலுவலர் கொல்டி காரு தன் பொண்ணுக்கு மருத்துவ படிப்பு சீட் வாங்க போகாத இடமில்ல வாங்காத கடனில்ல முக்கியமான மேட்டராக சொன்னது மெடிக்கல் படிச்சுட்டா அமெரிக்காவுல கல்யாணம் பண்ணிக்கொடுத்திட்டு நிம்மதியா இருக்கலாம்ங்கறதுதான்!

இந்த விசயத்தில் தமிழ்நாடு நிலைமை கொஞ்சம் மோசம்தான் பாஸ் :))

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் ரொம்பவே வருத்தப் பட்றா மாதிரி தெரியுதே:)?

CA Venkatesh Krishnan said...

எங்க வற்ரீங்கன்னு புரியுது.

உங்க தங்க்ஸுக்குப் புரிஞ்சுதுங்களா.

வர வர உங்க பதிவெல்லாம் ஸ்டீரியோடைப்பாவே இருக்கறாமாதிரி படுதே.

Blogeswari said...

ROFL ambi.

//தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா? என நோண்டி நொங்கெடுத்து தான் "என் கண்ணயே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்"னு டயலாக் பேசுகிறார்கள்//

add these -> karikaai nalla cut pannuvaana, samayal nalla terinjirukka - ideallamdaamum ponna pethavanga kettu vechikaraanga

பாலராஜன்கீதா said...

சு(ம்)மா தானே(வெட்டியா தானேனும் வாசிக்கலாம்)
;-)))

mgnithi said...
This comment has been removed by the author.
mgnithi said...

//ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி வரை ரொக்கம், ஒரு சைட்டு(அதாவது இடம்பா) அல்லது அப்பர்ட்மெண்ட், காரு சே! கார் மற்றும் ஒரு மணப்பெண். :-)//

avvvvvvvvvvv........

mgnithi said...

//தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா? என நோண்டி நொங்கெடுத்து தான் "என் கண்ணயே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்"னு டயலாக் பேசுகிறார்கள்.//

thamiznatula nadakkira intha arajagathai thadukkanum thalai...

Anonymous said...

elo..telgu makkaloda umakenna prachanai..erkanavay suthi irukara rendu perum thanni kaatrangalay ozhiya tharamatengaranga..irukaravanaiyum ipdi usupethanuma?

~gils

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எவரய்யா இதி, ஈ போஸ்ட் இட்டதி? எலே அம்பீ, நூ-னேனா? நூக்கே இதி பாக உந்தியா?
நூ டேமேஜரு நாயுடு காரா? ரெட்டி காரா?
டயாப்பர் அலவன்ஸ் ஈ லேதா? தாண்டிக்கி இந்த மாட்லாடு மாட்லாடுத்துன்னாவா? ஏமைய்யா இது அக்ரமம்? கொல்டி-னு தலைப்பைப் பாத்துட்டு, வெட்டிப்பையல் போஸ்ட்டோ-ன்னு உள்ள வந்தா...
:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதெல்லாம் உன் ஆபிஸ் சமாசாரம். என்ன தான் இருந்தாலும் நான் ஒரு மூனாம் மனுஷன். நீயே பாத்துக்கோ!னு பந்தாவா சொல்லிட்டேன்//

மொதல்ல உங்களுக்கு ஒரு டெக்னிக்கல் நேர்காணல் காணச் சொல்லணும் தங்கச்சிய!
அப்பறம் தெரியும் டீ உன் இன்டர்வியூ ஒட்டு கேக்கும் பழக்கமெல்லாம்! :)

//அந்த கம்பெனி பெயர் சொன்னா தெரியனும்.
எ.கா: இன்போசிஸ், விப்ரோ, சத்யம், டிசிஎஸ்//

//உங்களுக்கு தெரிந்த ஒரு ஐந்து ஐ.டி கம்பனிகளில் ஒன்னுல தான் என் தங்ஸும்//

அஞ்சுல, நாலு பேரு நீங்களே சொல்லீட்டீங்க? அந்த அஞ்சாவது எது? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அந்த பையன், "தெய்வமே! தெய்ய்ய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே!"னு ஒரு ரெண்டு நிமிஷம் நா தழ தழக்க முடித்து கொண்டான்//

ஒரு பச்சைத் தெலுங்கன் இப்படிப் பேசி இருக்கவே மாட்டான்!
தேவுடா தேவுடா ஏழுமலைத் தேவுடா
சூடுடா சூடுடா சுப்ரமணியத் தேவுடா
-ன்னு வேணும்னா நாத் தழ தழக்க பாடி இருப்பான்! என்பதை ஈ மண்டபம் லோ, சால விநயங்கா செப்பிக்கறேன் :)

Unknown said...

Hello 1 or 1.5 crore cash matum illai... andhra side ellamwest avanoda sisterkum 1% dowry kudukanum teriumla!!!!!!

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இருங்க இதெல்லாம் இப்போ எதுக்கு? சூர்யா வாழ்க்கையில் விளக்கேத்தறேன் பேர்விழின்னு, அண்ணி உங்க ப்யூச பிடுங்கிடற மாதிரி வெச்சுக்காதீங்க அண்ணே:):):)

Anonymous said...

mr.vambi..ithenna tamilishnu orubutton?? angapoi profile create pannen..aana enna matter ithu/

rapp said...

//தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா? என நோண்டி நொங்கெடுத்து தான் "என் கண்ணயே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்"னு டயலாக் பேசுகிறார்கள்.
//

காடு மல மேடுன்னு கண்ணன் தேவன் டீக்கு அலையற மாதிரி, அண்ணி வீட்ல உங்கள பெண்டு நிமித்திட்டாங்களா?:):):)

Anonymous said...

Enna dhan husband & wife a irundhalum official vishayathula, avanga interview panradha kooda irundhu kekkara alavukku mook nuzhaikkaradhu is not manners. Paavam andha appavi golti.

Unknown said...

//நானும் தங்க்ஸ் ஆபிஸ் வேலைகளை பத்தி அதிகம் கேட்டுக்க மாட்டேன்.// நம்பிட்டோம்!

//இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்: இந்த கம்பெனியில் இருந்து, அதுவும் அமெரிக்காவில் வேலை என்றால் ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி வரை ரொக்கம், ஒரு சைட்டு(அதாவது இடம்பா) அல்லது அப்பர்ட்மெண்ட், காரு சே! கார் மற்றும் ஒரு மணப்பெண். :-)// காம்பஸ்ல இன்ஃபோசிஸ் / டிசிஎஸ் கிடைச்சு அமெரிக்கா போன என்னை //ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி வரை ரொக்கம், ஒரு சைட்டு அல்லது அப்பர்ட்மெண்ட், காரு //எதுவுமே கொடுக்காம மணந்த மணப்பையன் கிட்ட முறையிடலாம்னு தான் நினைச்சேன். அப்புறம் அவர் அந்த மணப்பெண் எங்கேனு ஆரமிச்சுடுவாரோனு இப்போதைக்கு லூஸ்ல விடுறேன்.

:-)

Anonymous said...

உள்ளேன் ஐயா

Anonymous said...

என் ரங்கமணியோட friend லு வர் அவருக்கு அவங்க வீட்லே பொண்ணு பார்த்து ரொம்ப காலமா ஒன்னும் செட் ஆகலே என்னனு விசாரிச்சதுலே பையன் U.S லே இல்லை Munich(Germany)லே தானே இருக்காருனு பொண்ணு வீட்லே எல்லாம் ரொம்ப வருத்த பட்டு பொண்ணு கொடுக்க மாட்டேனு சொல்லிடாங்க அதனாலே பையனோட அப்பா அம்மா அவரே எப்படியாவது U.S போக சொன்னாங்க

பாருங்க நம்ம தமிழ் நாட்டு ரங்கமணிக்கு எல்லாம் எவ்ளோ easyயா கல்யாணம் நடக்குது

Anonymous said...

"இப்ப விசாரிச்சதுல அந்த பையன் அடுத்த கட்டங்களையும் தாண்டி, நேர்காணலுக்கு சென்று கொண்டிருக்கிறான்னு தெரிஞ்சது"

போன் லே பேசினவரும் நேர்லே வந்தவரும் ஒருவரே என்று நம்புவோம். லு மாநிலத்துலே தடுக்கி விழுந்தவங்களுக்கு எல்லாம் testing experience இருக்கும்

குடுகுடுப்பை said...

போன் லே பேசினவரும் நேர்லே வந்தவரும் ஒருவரே என்று நம்புவோம். லு மாநிலத்துலே தடுக்கி விழுந்தவங்களுக்கு எல்லாம் testing experience இருக்கும்

//

நம்புவோம்லு

Anonymous said...

//இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்: இந்த கம்பெனியில் இருந்து, அதுவும் அமெரிக்காவில் வேலை என்றால் ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி வரை ரொக்கம், ஒரு சைட்டு(அதாவது இடம்பா) அல்லது அப்பர்ட்மெண்ட், காரு சே! கார் மற்றும் ஒரு மணப்பெண். :-)//
// ம்ம்ம், யாரு பொண்ணை பெத்து வெச்ருகாங்களோ?//
நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் தான் விரும்பும் ஒரு மலையாளப் பெண்ணிற்காக மலையாளத் தாய் தந்தையாக இருவரை தத்து எடுத்துக்கொள்வாரே அதுபோல ரெட்டிகாருவாக மாற ஏதேனும் வழியிருக்கா என்ற எண்ணமா ?

Sridhar V said...

கங்கிராட்ஸ்!

டயப்பர் மாத்தறது, இட்லிக்கு மாவரைக்கிறதுன்னு இருந்த நீங்க இவ்ளோ தூரம பிரமோஷன் ஆவீங்கன்னு எதிர்பாக்கவே இல்லை :-)

நாங்க எல்லாம் 3000 ரூபாய் வீட்டு வாடகை பட்ஜெட்ல வருமான்னு யோசிச்சிட்டிருந்த காலத்தில நம்ம நண்பர் மாருதி எஸ்டீம் காரோட இலவசமா ஒரு பொண்ணு தராங்கன்னு கல்யாணம் பண்ணிகிட்டாரு. அவரும் கொல்டிகாருதான்.

வீசா ஆஞ்சநேயர் கோவில் கூட உண்டு அங்க.

ஷைலஜா said...

அம்பி!!! பாகுன்னாரா?:) லேசா சுஜாதா ஸ்டைல்ல நகைச்சுவையா ரொம்ப எதார்த்தமா எல்லாத்தியுமெழுதும் உங்க ஸ்டைல் எனக்குப்பிடிக்கும், இதுவும் அப்படியே!

வல்லிசிம்ஹன் said...

இப்ப தங்ஸ் கம்பனில தான் அம்பி டாமேஜரா.

கொல்டி எக்ஸ்பீரியன்ஸ் சூப்பர்.

Anonymous said...

ambigaaru,post adhirindhi,oru kodi rendu kodi anni godavari punniyathil 3 pogam vilainjidanal vandha sothu.namakku kavirila thanni kadayathu.katnaalu adhhan cash paiyannukku plus aadapadichu katnamnnu oru concept vera vundu.namma pasanga ppavam btw global recession vilaivaaka software matrum bank alliance avvalava prefer panradadhulla oru news item parthen.idhukenna solreenga ambigaaru????
nivi.

KC! said...

nethu I was talking to a telugu guy, avan sonnan ippolam credit crunch-oda effect avangaloda dowry-la theriyudham, 1L ippo 60K-ku down aayirtham..he he, you still think apartment and car is valid??

திவாண்ணா said...

என்ன அம்பி(பு)லு, முன்னாலேயே தெரியாம போயிந்தியா? ம்ம்ம் சான்ஸ் மிஸ் சேசினாரு!

Anonymous said...

//தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா? என நோண்டி நொங்கெடுத்து தான் "என் கண்ணயே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்"னு டயலாக் பேசுகிறார்கள்//
:))))

ambi said...

கரக்ட்டா சொன்னீங்க ராஜ், இன்னொரு ஆள் அப்படி தான் செஞ்சாருனு என் தங்க்ஸ் சொன்னாங்க. :)

கத்தார் மாப்ளைகளுக்கு செம மவுசாமே ஆயிலு, நெஜமா? :p

வாங்க ராமலக்ஷ்மி அக்கா,எப்படி ஆயிலுவருத்தபடாறாரு பாருங்க. :))

இளைய பல்லவன், நான் எங்கயும் வரலை, கொளுத்தி போடாதீங்க பாஸ், அடடா, ஸ்டீரியோ டைப்பா இருக்கா? கண்டிப்பா மாத்திக்கறேன், ரெம்ப நன்னிங்க. :))


பிளாக் அக்கா, வேணாம் அளுதுடுவேன். :)

வாங்க பாகீ, ஏதோ உள்குத்து இருக்கும் போல இருக்கே? :p

என்ன எம்ஜிநிதி, ரெம்ப பீல் பண்ணீ இருக்க, கல்யாணம் வேற நடக்க போகுது. வாட் இஸ் த மேட்டர்? :p

என்ன கில்ஸ், தெளுகு மக்கள் மேல உனக்கென்ன பாசம்? அத முதல்ல ஜொள்ளு. :))

ambi said...

கேஆரெஸ், அதானே பெருமாள் இருக்கற இடத்துகாரங்கள சொன்னா உங்களுக்கு பொத்துண்டு வந்துடுமே?
அப்புறம், கொல்டி என்ற வார்த்தைக்கு வெட்டி காப்பிரைட் வாங்கிட்டாரா என்ன? :p

வாங்க மன்னார், என்னது டவுரில ஒரு சதவிதமா? அட தேவுடா.

என்ன ராபக்கா, மீ தி பஷ்ட்டு போச்சே! :p

சரி, பழைய மேட்டர் எல்லாம் கிளறாதீங்க பா.

கில்ஸ், அதுவும் தமிழ்மணம் மாதிரி ஒரு சைட்டு(வலைதளம்பா). :))

வாங்க கெபிகே, உங்க ரங்கு கிட்ட கேட்டு தான் பாருங்களேன்.

வாங்க உத்ரா, சரியா சொன்னீங்க, கொல்டிஸ் ப்ரிஃபர் ஒன்லி அமெரிக்கா. :))

குடுகுடுப்பை, அதே அதே!

வாங்க அனானி, நமக்கு தான் எல்லாம் முடிஞ்சு போச்சே. பெயரை போட்டு போங்கப்பா.

டேம்ளேட் பின்னூட்டம் போடும் ஸ்ரீதர் நாராயணனுக்கு நன்னி ஹை. விசா ஆஞ்சேனேயரா? எங்க இருக்காரு அவரு? :))

வாங்க ஷைலக்கா, எதுக்கு சுஜாதா எல்லாம் இளுக்கறீங்க? நான் சின்ன கொசு. வருகைக்கு நன்னி. :))

வாங்க வல்லி மேடம், அவங்க வேற கம்பனி. நான் டேமேஜர் இல்ல. :)

வாங்க நிவி, ஆமா, நானும் கேள்விபட்டேன், சாப்ட்வேர், பாங்க் பையன்களுக்கு பொண்ணு குடுக்க தயங்கறாங்களாம். என்ன கொடுமை இது லேமேன் ப்ரதர்ஸ்? :))

சிங்காரி, இன்னமும் கார் எல்லாம் குடுக்கறதா தான் ஒரு கொல்டி சொன்னாரு.

வாங்க திவாண்ணா, ஆமா சான்ஸ் போயே போயிந்தி. :))

அடடே வாங்க சிவா, புது மாப்ளை. :)

Sridhar V said...

//டேம்ளேட் பின்னூட்டம் போடும் ஸ்ரீதர் நாராயணனுக்கு//

என்னதான் பிரமோஷன் ஆனாலும் பழசை மறக்க் கூடாதில்லையா. அதான் அப்பப்ப நினைவு படுத்தறது. ஏதோ நன்றியுணர்ச்சி இருந்தா சரிதான்.

சரவணகுமரன் said...

//தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா?//

:-))