Friday, August 01, 2008

இப்படிக்கு பெங்களூரிலிருந்து அம்பி

கடந்த வெள்ளி லீவு எடுத்து கொண்டு சென்னை சென்ற பின், முழுதுமாக என்னை ஊடகங்களிடமிருந்து தொடர்பற்றவனாக்கி கொண்டாலும் மதியம் என் ஆபிஸ் நண்பனிடம் வந்த குறுஞ்செய்தி என்னை அவசரமாக டிவி பார்க்க சொன்னது. நடந்து போன விபரீதமும் புரிந்தது. அடுத்த நாள் முந்தைய நாள் நிகழ்வுகள் ச்சும்மா டிரெயிலர் தான் என்பதும் அறிந்து கொள்ள முடிந்தது.

பொட்டலம் பொட்டலமாக வைத்தவர்களது கொள்(ல்)கை வெற்றி பெற்றதா? என அதையும் ஈமெயில் செய்தால் நன்றாக இருந்திருக்கும். விடுமுறை முடிந்து சென்னை சென்ட்ரல் வந்தால் ஒரே களேபரம். என் மாமியார் எனக்கு கட்டி குடுத்த சப்பாத்திகளை எல்லாம் போலிஸ்காரரிடம் காட்ட வேண்டி இருந்தது. தொட்டுக்க ஒன்னும் இல்லையா?னு அவர் கேட்டு விடுவாரோ என எனக்கு பயம். அவர் பக்கத்தில் இருந்த நாய் வேறு என்னை பார்த்து சினேகமாக வால் எல்லாம் ஆட்டியது. படக்குனு சப்பாத்தி பாக்கெட்டை கவ்வின்டு ஓடிட்டா என்ன செய்வதுனு என் கவலை.

பாதுகாப்புக்கு இருந்த அத்தனை காவல்துறையினர் முகத்திலும் ஒரு வித பதட்டம் தெரிந்தது. வீரம் என்பது பயம் இல்லாத மாதிரி நடிப்பது!னு சும்மாவா சொன்னார்கள். பாவம் அவர்களுக்கும் குழந்தை குட்டி இருக்குமே! இந்த பாமை செயலிழக்க செய்யும் வீரர்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் இன்ஷுரன்ஸ் அளிக்க முன்வருவதில்லையாம். வருத்தப்பட வேண்டிய விஷயம்.

பெங்களூரில் மக்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள வில்லை. பஸ் ஸ்டாபில் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்து கொள்கிறார்கள். தியேட்டர்களில் எல்லாம் ரூவாய்க்கு மூனு டிக்கட்னு கூவாத நிலை தான். மெகா மால்களில் மக்கள் செல்ல தயங்குகிறார்கள். அனேகமாக பெங்களூரில் இன்று பசுபதி நடித்த குசேலன் ரீலிஸ் செய்வார்கள் என எண்ணுகிறேன். அதுல ரஜினி கூட வந்து போயிருக்காராம். அதான் ரஜினி மாப்பு மன்னிப்பு எல்லாம் கேட்டு இருக்காரேன்னு பாத்தா, அவர் இங்கு நேர்ல வந்து மன்னிப்பு கேக்கனுமாம். இது கன்னட கண்மணிகளின் கோரிக்கை(மிரட்டல்னு கூட வாசிக்கலாம்).

இவ்வளவு நாளாக மன்னிப்பு கேட்க தோன்றாத எண்ணம் தீடிர்னு ரஜினிக்கு தோணியது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. இதே போல தெரியாம குண்டு வெச்சுட்டோம்!னு எதிர்காலத்தில் அவர்களும் மன்னிப்பு கேட்கலாம். நமக்கு தான் பெரிய மனசாச்சே! கேசை ஜவ்வாக இழுத்து மன்னித்து விடுவோம். ரெண்டு வாரத்துக்கு குசேலனில் நியூட்டன் தியரி, ஐன்ஸ்டீன் தியரினு திறனாய்வு பதிவுகளும், பசுபதிக்கு பல்பு, மீனாவுக்கு அல்வா, ரஜினிக்கு ஒரு திறந்து மூடிய கடிதம்னு பதிவுகள் தமிழ்மணத்தில் வலம் வரலாம். வாழ்க இந்திய ஜன நாயகம்!

29 comments:

தமிழன்-கறுப்பி... said...

me the first!

இராம்/Raam said...

/ரெண்டு வாரத்துக்கு குசேலனில் நியூட்டன் தியரி, ஐன்ஸ்டீன் தியரினு திறனாய்வு பதிவுகளும், பசுபதிக்கு பல்பு, மீனாவுக்கு அல்வா, ரஜினிக்கு ஒரு திறந்து மூடிய கடிதம்னு பதிவுகள் தமிழ்மணத்தில் வலம் வரலாம். வாழ்க இந்திய ஜன நாயகம்!///

அதுதான் ஆரம்பிச்சாச்சே... :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதானே ஆரம்பிச்சப்பறம் ஆருடம் சொல்றீங்க..:)

சப்பாத்தி விசயம் படிச்சு சிரிப்ப அடக்கமுடியல எனக்கு.. வெறும்சப்பாத்தின்னாலும் அத விட மனசில்ல பாருங்க.. உங்களுக்கு.

Jackiesekar said...

அனேகமாக பெங்களூரில் இன்று பசுபதி நடித்த குசேலன் ரீலிஸ் செய்வார்கள் என எண்ணுகிறேன். அதுல ரஜினி கூட வந்து போயிருக்காராம்.


ambi that is very nice line keep it up

Syam said...

//இராம்/Raam said...
ரெண்டு வாரத்துக்கு குசேலனில் நியூட்டன் தியரி, ஐன்ஸ்டீன் தியரினு திறனாய்வு பதிவுகளும், பசுபதிக்கு பல்பு, மீனாவுக்கு அல்வா, ரஜினிக்கு ஒரு திறந்து மூடிய கடிதம்னு பதிவுகள் தமிழ்மணத்தில் வலம் வரலாம். வாழ்க இந்திய ஜன நாயகம்!

அதுதான் ஆரம்பிச்சாச்சே... :))//

நான் சொல்ல வந்தேன் ரஞ்சனி & மகா ஊட்டுக்காரர் சொல்லிட்டார் :-)

Anonymous said...

\இதே போல தெரியாம குண்டு வெச்சுட்டோம்!னு எதிர்காலத்தில் அவர்களும் மன்னிப்பு கேட்கலாம்\ அவங்களுக்கு பெங்களூர்ல படமெல்லாம் ரிலீஸாகுதா என்ன மன்னிப்பு கேக்க.

Syam said...

//அதுல ரஜினி கூட வந்து போயிருக்காராம்.
//

இது ரஜினி ரசிகர்களுக்கு தெரிஞ்சா நீ மன்னிப்பு கேட்க வேண்டி இருக்கும்
:-)

சந்தனமுல்லை said...

//இந்த பாமை செயலிழக்க செய்யும் வீரர்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் இன்ஷுரன்ஸ் அளிக்க முன்வருவதில்லையாம். வருத்தப்பட வேண்டிய விஷயம்.//

அடப்பாவமே! :-(

//இன்று பசுபதி நடித்த குசேலன் ரீலிஸ் செய்வார்கள் என எண்ணுகிறேன். அதுல ரஜினி கூட வந்து போயிருக்காராம். //

ம்ம்.இது ரொம்ப நல்லாருக்கே!!

//ரெண்டு வாரத்துக்கு குசேலனில் நியூட்டன் தியரி, ஐன்ஸ்டீன் தியரினு திறனாய்வு பதிவுகளும், பசுபதிக்கு பல்பு, மீனாவுக்கு அல்வா, ரஜினிக்கு ஒரு திறந்து மூடிய கடிதம்னு பதிவுகள் தமிழ்மணத்தில் வலம் வரலாம். வாழ்க இந்திய ஜன நாயகம்!//

அதான் தெரிஞ்ச விஷயமாச்சே!!

தமிழன்-கறுப்பி... said...

//இன்று பசுபதி நடித்த குசேலன் ரீலிஸ் செய்வார்கள் என எண்ணுகிறேன். அதுல ரஜினி கூட வந்து போயிருக்காராம். //


இது மாட்டரு...:)

தமிழன்-கறுப்பி... said...

பதிவ படிக்காம முதல் ஆளுன்னு போட்டுட்டேன் அப்புறமா பாத்தா அரசியல் பதிவு...;)

rapp said...

அன்னைக்கு கொஞ்சம் நேரம் எல்லா கைப்பேசியும் செயலிழந்துட்டதால, என்னோட கசின் சிஸ்டர்கிட்ட பேச முடியாம, எங்கம்மா ரொம்ப பயந்து போய்ட்டாங்களாம். இதில் ஒரேடியா போய்ட்டாக் கூட பரவாயில்லை, மாட்டிக்கிட்டு குத்துயிரும் குலையுயிருமா, கெடந்து பாடுபடணுமோன்னு பயமாயிருக்குன்னு அன்னைக்கு சூரத்ல இருந்து கெளம்பிக்கிட்டு இருந்தவங்க ஒருத்தங்க சொன்னதக் கேட்டப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு

//பொட்டலம் பொட்டலமாக வைத்தவர்களது கொள்(ல்)கை வெற்றி பெற்றதா? என அதையும் ஈமெயில் செய்தால் நன்றாக இருந்திருக்கும். //
நல்லா நச்னு சொன்னீங்கண்ணே

//என் மாமியார் எனக்கு கட்டி குடுத்த சப்பாத்திகளை எல்லாம் போலிஸ்காரரிடம் காட்ட வேண்டி இருந்தது. தொட்டுக்க ஒன்னும் இல்லையா?னு அவர் கேட்டு விடுவாரோ என எனக்கு பயம்.//
தொட்டுக்க எதுவும் இல்லாம எப்படிண்ணே சாப்டீங்க?

//அனேகமாக பெங்களூரில் இன்று பசுபதி நடித்த குசேலன் ரீலிஸ் செய்வார்கள் என எண்ணுகிறேன்.//
:):):):):)

சரவணகுமரன் said...

//படக்குனு சப்பாத்தி பாக்கெட்டை கவ்வின்டு ஓடிட்டா என்ன செய்வதுனு என் கவலை.

உள்ளது உள்ளபடி சொல்லிடீங்க... சூப்பர்..

MyFriend said...

// Syam said…

//இராம்/Raam said...
ரெண்டு வாரத்துக்கு குசேலனில் நியூட்டன் தியரி, ஐன்ஸ்டீன் தியரினு திறனாய்வு பதிவுகளும், பசுபதிக்கு பல்பு, மீனாவுக்கு அல்வா, ரஜினிக்கு ஒரு திறந்து மூடிய கடிதம்னு பதிவுகள் தமிழ்மணத்தில் வலம் வரலாம். வாழ்க இந்திய ஜன நாயகம்!

அதுதான் ஆரம்பிச்சாச்சே... :))//

நான் சொல்ல வந்தேன் ரஞ்சனி & மகா ஊட்டுக்காரர் சொல்லிட்டார் :-)//

ரிப்பீட்டேய். :-))

Sumathi. said...

ஹாய் அம்பி,

//அதுல ரஜினி கூட வந்து போயிருக்காராம். //
//இது ரஜினி ரசிகர்களுக்கு தெரிஞ்சா நீ மன்னிப்பு கேட்க வேண்டி இருக்கும்
:-)//
அதுவும் சென்னைக்கு வந்து அவங்க சொல்ற மாதிரி. அத வுட்டுட்டீங்களே நாட்டாமை. அம்பி ரெடியா இருங்க மன்னிப்பு கேக்க.

கோவை விஜய் said...

//இந்த பாமை செயலிழக்க செய்யும் வீரர்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் இன்ஷுரன்ஸ் அளிக்க முன்வருவதில்லையாம். வருத்தப்பட வேண்டிய விஷயம்//

இருளை போக்கி உலகுக்கு ஒளியை தந்து தன்னை உருக்கும் மெழுகுவர்த்தி இவர்கள் அல்லவா.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Geetha Sambasivam said...

//ரெண்டு வாரத்துக்கு குசேலனில் நியூட்டன் தியரி, ஐன்ஸ்டீன் தியரினு திறனாய்வு பதிவுகளும், பசுபதிக்கு பல்பு, மீனாவுக்கு அல்வா, ரஜினிக்கு ஒரு திறந்து மூடிய கடிதம்னு பதிவுகள் தமிழ்மணத்தில் வலம் வரலாம். வாழ்க இந்திய ஜன நாயகம்!//

எல்லாரும் சொல்லிட்டாங்க, இருந்தாலும் நானும் சொல்றேன், மாமியார் வீட்டிலே அவ்வளவு வேலையா அம்பி???? இதைக் கூடக் கவனிக்க முடியாமல்! :P :P :P :P அது சரி, தொட்டுக்க ஒண்ணும் இல்லாத சப்பாத்திக்கே இவ்வளவு அலையணுமானு தோணலை?? :P :P :P நல்லவேளை நான் அன்னிக்குத் தான் கேசரி பண்ணி வச்சிருந்தேன், நீங்க வரலை, நிம்மதி! :P

Geetha Sambasivam said...

சென்னைக்கு அடுத்த முறை வருவீங்க இல்லை, அப்போ இருக்கு உங்களுக்கு ரஜினி ரசிகரிகளின் மறியல்! தலைமை தாங்கப் போற ஆள் யார் தெரியுமா?? அதிர்ச்சியா இருக்கப் போகுது!:P

Kavinaya said...

//இந்த பாமை செயலிழக்க செய்யும் வீரர்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் இன்ஷுரன்ஸ் அளிக்க முன்வருவதில்லையாம். வருத்தப்பட வேண்டிய விஷயம்//

ரொம்பவே... :(

Anonymous said...

mudalla banglore,appuram ahmedabad,surat bayankaram.(b omb diffusers interview ketta bodhu (aaj tak)vayirril amilam surandhadu)engeyo afghanistanila irukkirom enru thondriyadhu.kaatu mirandigal.neengal solvadhu pol enna sadhittargal???indha bayangarathin naduvil ennal kuselanayo,kumbakarnaniyo rasika mudiyavillai.sorry.nivi.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, நீங்க பத்திரமா இருக்கவும், மற்ற எல்லோரும் சுகமா இருக்கவும் வேண்டிக்கிறேன்.
இங்கேயும் குசேலம் நேற்று ரிலீஸ். ரெவியூக்கள் படிக்கக் காத்திண்டு இருக்கேன்:0)

Vijay said...

//படக்குனு சப்பாத்தி பாக்கெட்டை கவ்வின்டு ஓடிட்டா என்ன செய்வதுனு என் கவலை.//

நாய்க்கும் அதே கவலைதானாம்!!!!!!!!! :P

ராஜ நடராஜன் said...

// என் மாமியார் எனக்கு கட்டி குடுத்த சப்பாத்திகளை எல்லாம் போலிஸ்காரரிடம் காட்ட வேண்டி இருந்தது.//

சந்தடி சாக்குல மாமியார் கட்டி குடுத்த சப்பாத்தியே குண்டு மாதிரி இருக்குதுங்கிறீங்களே.தொட்டுக்க வேற ஒண்ணுமில்லைன்னா போலிசுக்கு சந்தேகம் வருமா?வராதா?

ambi said...

வாங்க தமிழன்,

@இராம், ஆமா, நான் தான் கொஞ்சம் லேட்டு.

@முத்தக்கா, பின்னே, மாமியார் குடுத்ததாச்சே!

@நன்னி ஜாக்கிசேகர். ஜாக்கி என்பது நீங்க படிச்சு வாங்கின பட்டமா? :p

//ரஞ்சனி & மகா ஊட்டுக்காரர் சொல்லிட்டார்//

@ஷ்யாம், என்னது வூட்டுகாரரா? நான் வேற இல்ல கேள்விபட்டேன். :p

@சின்ன அம்மிணி, சொல்ல முடியாது, எடுத்தாலும் எடுப்பாங்க.

@ஷ்யாம், பத்த வெச்சியே பரட்ட.

முதல் வருகைக்கு நன்னி சந்தன முல்லை.

//இது மாட்டரு...:)//

அப்ப நயன் தாரா? :p

//பதிவ படிக்காம முதல் ஆளுன்னு போட்டுட்டேன் //

விடுங்க தமிழன், நாமே எப்பவுமே இப்படி தானே? :p

ambi said...

//ஒருத்தங்க சொன்னதக் கேட்டப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு
//

@rapp, Same Blood here. :(

//தொட்டுக்க எதுவும் இல்லாம எப்படிண்ணே சாப்டீங்க?
//

அடுத்த நாள் வீட்டுக்கு வந்து சீனி, ஊறுகாய் வெச்சு தான். :))

//உள்ளது உள்ளபடி சொல்லிடீங்க... சூப்பர்..
//

வாங்க சரவண குமரன், ஏதும் உள்குத்து இருக்கா? :p

@மலேசிய மாரியாத்தா வருகைக்கு நன்னி,

@சுமதியக்கா, ஷ்யாம் கூட கூட்டணியா? உசாரா இருங்க.

உங்க கவிதை நல்லா இருக்கு கோவை விஜய். (கவிதை தானே எழுதி இருக்கீங்க?) :))

//தொட்டுக்க ஒண்ணும் இல்லாத சப்பாத்திக்கே இவ்வளவு அலையணுமானு தோணலை?? //

@geetha paati, அது மாமியார் குடுத்த சப்பாத்தியாக்கும். :p

உண்மை பல சமயம் சுடும் கவிநயா அக்கா. ;(

@nivi, உண்மை தான் நிவி. ரொம்பவே அப்செட். இப்பவெல்லாம் பதிவு போட கூட தோண்றதில்லை. :(

@வல்லி மேடம், ரிவியூ எல்லாம் எழுத மாட்டேன், ஏன்னா பாக்க போறதில்லை.

@விஜய், ஹஹா, ரசித்தேன், ஆமா அது எப்படி உங்களுக்கு தெரியும்? :p

//சந்தடி சாக்குல மாமியார் கட்டி குடுத்த சப்பாத்தியே குண்டு மாதிரி //

@ராஜ நடராஜன், ஆஹா, நான் யதேச்சையாக எழுதிய ஒரு வரியில் இவ்ளோ நுண்ணரசியலா? முடியல. :))

Vijay said...

//Vijay said...
//படக்குனு சப்பாத்தி பாக்கெட்டை கவ்வின்டு ஓடிட்டா என்ன செய்வதுனு என் கவலை.//

நாய்க்கும் அதே கவலைதானாம்!!!!!!!!! :P

அம்பி said...
@விஜய், ஹஹா, ரசித்தேன், ஆமா அது எப்படி உங்களுக்கு தெரியும்? :ப்//

என்ன கேள்வி இது அம்பி, கோபிகாவுக்கு எல்லாம் ப்ளாக் இருக்கும்(:P) போது அதுக்கு இருக்காதா? அதுலதான் எழுதி இருந்துச்சி... முழூசும் படிச்சப்ப அது உங்களை பாத்ததும் அதும் பிஸ்கேட் பாக்கட்டை போலீஸ்காரர் கையில் இருந்து புடிங்கிட்டு போய் ஓளிச்சி வச்சதெல்லாம் கூட எழுதி இருந்துச்சி....:P(Hey, just kidding, sorry.)

திவாண்ணா said...

அம்பி பதிவுகள்ல நகைச்சுவை அதிகமா இல்லை காமென்டுகள்ல ந.சு அதிகமான்னு பட்டி மன்றம் நடத்தலாம் போல இருக்கு!

ambi said...

//உங்களை பாத்ததும் அதும் பிஸ்கேட் பாக்கட்டை போலீஸ்காரர் கையில் இருந்து புடிங்கிட்டு போய் ஓளிச்சி //

@vijay, :))))


@திவாண்ணா, இப்ப்வெல்லாம் பதிவு எழுதவே தோண மாட்டேங்குது. அதான் பெரிய நகைச்சுவையா இருக்கு எனக்கு. :))

@கோவை விஜய், அதான் தினமும் ஆற்காடு வீராசாமி அந்த நல்ல காரியத்தை குறைஞசது ஒரு மணி நேரமாவது நடத்தி தராரே!
இங்க பெங்களூரிலும் கரண்ட் கட் இருக்கு விஜய்.

ராமலக்ஷ்மி said...

//பொட்டலம் பொட்டலமாக வைத்தவர்களது கொள்(ல்)கை வெற்றி பெற்றதா? //

அதானே யாருக்கும் விளங்கவில்லை!

//அதையும் ஈமெயில் செய்தால் நன்றாக இருந்திருக்கும்.//

வைத்தவர்கள் விளக்காவிட்டாலும் தாம் இப்படிச் செய்தால் விளங்குவோமான்னு யோசிக்கவே மாட்டேன்கிறார்களே:(!

நான் தமிழ் மணம் பக்கம் ஒரு வாரம் வரலை. நீங்கள் பதிவை வெளியிட்ட ஒன்றாம் தேதி காலை என் தங்கை சென்னையிலிருந்து இங்கு(பெங்களூர்) வந்த போது அவளுக்கும் இதே செக்கிங்தான். லக்கேஜும் ஜாஸ்தி us-லிருந்து வந்திருந்ததால். எல்லாத்தையும் பிரிச்சவங்க பசங்களைப் பாத்துட்டு ரொம்ப பிய்க்காம விட்டதா சொன்னாள். ஆனால் நேற்று இங்கிருந்து திருநெல்வேலி கிளம்பினாள் தூத்துக்குடி எக்ஸ்பிரஸில். ஒரு செக்கிங்கும் இல்ல. அட்லீஸ்ட் ஸ்டேஷனில் நுழைகையில் ஒரு மெட்டல் டிடக்டர் கூட இல்ல. எல்லாம் ஒரு வாரம்தான். அப்புறம் காவல் துறை தூங்கப் போயிடுதே! [பி.கு: தைரியமா பிவிஆர்-ல குசேலன் பாத்துட்டுதான் கிளம்பினா:)))!]

ambi said...

//ஒரு செக்கிங்கும் இல்ல. அட்லீஸ்ட் ஸ்டேஷனில் நுழைகையில் ஒரு மெட்டல் டிடக்டர் கூட இல்ல. எல்லாம் ஒரு வாரம்தான்.//

வாங்க ராமலக்ஷ்மி, சரியா சொன்னீங்க, நானும் இதை தான் நினைச்சேன்.

மறுபடி ஆகஸ்ட் 13, 14 செக் பண்ணுவாங்க பாருங்க. :))

உங்க தங்கை கருமமே கண்ணா இருந்து இருக்காங்க போல. :p