When the student is ready, the master appears - Buddhist Proverb.
இன்றைய சூழலில் பிள்ளைகள் மட்டுமல்ல, பெற்றோரும் செல்பேசி, கணிணி, ஈமெயில் அறிவு பெற்றவர்களாக இருப்பது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. இப்பொழுது வரும் செல்போன்கள் எல்லாம் பாக்க அழகா பாவனா மாதிரி இருக்கு. ஆனா கீபேடுகள் அவ்ளோ சுலபமா இருப்பதில்லை. அதிலும் நேரு காலத்து ட்ரிங்க் ட்ரிங்கையே உபயோகித்து வந்தவர்களுக்கு தீடீர்னு இப்படி உள்ளங்கையில் உலகம் வந்தவுடன் சிறிது தயக்கம், நாம ஏதும் அமுக்கி, ஏதும் ரிப்பேர் ஆனா பையனுக்கு வேற தண்டச் செலவு என்ற பெற்றோருக்கே உரித்தான பயம். செல்போனுக்கே இப்படினா கணிணி இன்னும் மோசம்.
அம்மா! இங்க பாரு, இது தான் இன்டர் நெட் எக்ஸ்ப்ளோரர், இது வழியா தான் மெயில் அனுப்ப முடியும், என நம் வழக்கமான மேதாவிதனத்தை காண்பித்தால் பெற்றோர் முகத்தில் தயக்கம், மலைப்பு என எல்லாம் ஒன்று சேர்ந்து விடுகிறது.
அப்புறம் நாம் புரிந்து கொண்டு சுலபமான வார்த்தைகளை போட்டு சொல்லி குடுத்தால் கற்று கொள்ளும் ஆர்வம் கண்ணில் மின்னுகிறது. இருந்தும் இந்த வயதில் கத்துக்க முடியுமா? இதெல்லாம் சாத்தியமா? என நியாயமான கவலைகள். ஆனாலும் பிள்ளைகளின், பேரன்களின் ஓட்டத்துக்கு ஈடு குடுக்கனுமே? என்ற பரபரப்பு.
நினைத்து பார்க்கிறேன், நான் வார்த்தைகளை கூட்டி கூட்டி பேச ஆரம்பித்த புதிதில் இந்த 'க' எனக்கு வராது. எனவே தக்காளியெல்லாம் தத்தாளி தான். கத்ரிக்காய் எல்லாம் தத்தரிதாய் ஆனது. ஆங்கில எழுத்தில் 'சி' எனக்கு மட்டும் வலது பக்கமாக வரும் அரைவட்டம்(தாரே சமீன் பர்?). ஆனாலும் பொறுமையாக எனக்கு பயிற்சி அளித்து, திருத்திய அவர்களின் பொறுமையில் தசாம்சமாவது (அய்யோ! படம் இல்லீங்கணா! பத்தில் ஒரு பங்குனு சொல்ல வந்தேன்) எனக்கு வாய்க்காதா என்ன?
நம்மிடையே வலையில் உலா வரும் பல அம்மாக்களின்/பாட்டிகளின் முயற்சிகளை நினைத்து பிரமிக்கிறேன். செளகார் ஜானகி, காரைக்கால் அம்மையார் என எத்தனை காரண பெயர்களுடன்(பட்ட பெயர்களுடன்) வலையுலா வந்து, பின்னூட்டமிட்டு, சமையல் குறிப்பு எழுதி, ஊர் உலகமெல்லாம் நமக்கு சுத்தி காட்டி, கதை சொல்லி, படம் காட்டி, தாலேலோ பாடி, நம் இல்ல விழாக்களில் முடிந்தால் நேரிலோ, மெயில் மூலமாகவோ வந்து வாழ்த்தி, ஹிஹி, மொய்யெழுதி, கால ஓட்டத்தில் கரைந்து விடாமல் நாணலாய் வளைந்து, தம் மக்கள் நின்றால் குடையாக, அமர்ந்தால் சிம்மாசனமாக வலம் வரும் எல்லா பெற்றோருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம். :)
49 comments:
firstu attendance..ambipostla first varathuna summava
//அவர்களின் பொறுமையில் தசாம்சமாவது//
ஆமாம் அம்பி. அதை பலரும் நினைத்தே பார்ப்பதில்லை.
மனதைத் தொடும் பதிவு. வாழ்த்துக்கள். அனைவரின் மனதையும் தொட பிரார்த்திக்கிறேன்
youroda ka tha mathiri enaku b and d...rendum oray mari poduven..engappa oru thaba scaleala muttiliye onnu poatathula b thiru(mb/nth)i d aidchi :))
antha thaasangamnu //தசாம்சமாவது//
potrunthele...apdina pooja roomla koluthi vaikara item ilayo??
//apdina pooja roomla koluthi vaikara item ilayo??
//
யோவ் கில்ஸ், அது தசாங்கம். உங்க அப்பா இன்னும் நாலு சாத்து சாத்தி இருக்கனும். :))
//அதை பலரும் நினைத்தே பார்ப்பதில்லை.
//
@ரா-லக்ஷ்மி, கசப்பான உண்மை தான், முதியோர் இல்லங்களே சாட்சி. :(
வாழ்த்துக்கு மிக்க நன்னி :)
என் பொண்ணுக்கும் b and d க்கு மிஸ்டேக் வரும்.. பையன் .. பைக் அப்படிங்கறத கைப் ன்னு சொல்றான்.. பின்னால இருந்து எப்படிவாசிக்கறான் மனசுலன்னு தெரியல. :)
//நினைத்து பார்க்கிறேன், நான் வார்த்தைகளை கூட்டி கூட்டி பேச ஆரம்பித்த புதிதில் இந்த 'க' எனக்கு வராது//நெம்ப கரக்டண்ணே, எனக்கு இதேமாதிரி இ எழுத வராது. எங்கம்மா இதுக்காக வருத்தப்பட்டு எங்க பாட்டி, பெரியாம்மானு எல்லார்க்கும் எழுதுன லெட்டர்லாம் இப்போ பார்த்து எல்லாரும் சிரிக்கறோம். எங்ககூட பேசறத்துக்காகவே யாஹூ மெஸ்ஸன்ஜர் ஆப்பரேட் பண்ண கத்துக்க ஆரம்பிச்சவங்க இப்போ ஓன்னேஜ் வாங்கிட்டாலும் இணையத்தில் அவங்களுக்கு எக்கச்சக்க ஆர்வம் வந்து பயங்கரமா கலக்கிட்டிருக்காங்க.
//இப்பொழுது வரும் செல்போன்கள் எல்லாம் பாக்க அழகா பாவனா மாதிரி இருக்கு. //
அம்பி,
உங்க இந்தக் குசும்புக்காகத்தான் இங்க
http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_19.html போட்டு கும்மிட்டேங்க..
rapp said...//எங்ககூட பேசறத்துக்காகவே யாஹூ மெஸ்ஸன்ஜர் ஆப்பரேட் பண்ண கத்துக்க ஆரம்பிச்சவங்க இப்போ ஓன்னேஜ் வாங்கிட்டாலும் இணையத்தில் அவங்களுக்கு எக்கச்சக்க ஆர்வம் வந்து பயங்கரமா கலக்கிட்டிருக்காங்க.//
அப்புறம் என்னங்க rapp, இன்னொரு அருமையான hobby அமைந்து விட்டதல்லவா அவர்களுக்கு.
பீலிங்க்ஸ்?! நடக்கட்டும்.
அப்பா ஆனவுடன் பேரண்ட்ஸ் க்ளப்'க்குப் போயிட்டிங்களே..
ஆனால்,அத்தனை வார்த்தைகளும் முத்து !
ஆமாங்க, எங்கம்மா செம ஜாலி பார்ட்டிங்க ராமலக்ஷ்மி மேடம். இதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. எங்கம்மா பொழுதுபோக்கக் கூட ஒரு கமிட்மெண்டோட செய்வாங்க. ஆனா அது செமக் காமடியா இருக்கும். எங்கம்மா சீரியல் பார்க்க ஆரம்பிச்ச சீசன் பத்தி என் பதிவுல சொல்லிருக்கேனில்லயா? அந்த ப்ராப்ளம் சால்வான அப்புறமும் ஏதோ அந்த நேரத்துல அவங்க பார்த்த சீரியல் தான் அவங்கள காப்பாத்திச்சுன்னு ஒரு நம்பிக்கை வந்திடுச்சி. அதுக்கு பதில் மரியாதை செய்யணும்னு அவங்களுக்கு ஒரே பொறுப்புணர்ச்சி வந்திடுச்சி. ஆனா அவங்களுக்கு சீரியல் பார்க்கப் பிடிக்காதே, என்னா செய்யருதுன்னு யோசிச்சவங்க ஒரு பலே ப்ளான ரெடி பண்ணாங்க. அதென்னன்னா, வெளிநாட்ல இருக்க எங்கக்காவும், இப்ப நானும் ஆளுக்கொரு நாள் அந்த சீரியல் பார்த்து டெய்லி பேசும்போது அவங்களுக்கு அப்டேட் செய்யணும். அவங்க அதை கேட்டுப்பாங்க, பின்ன என்னிக்காவது ஒரு நாள் எங்கப்பாவுக்கும் அவங்களுக்கும் சண்டைனா ஒடனே அன்னைக்கு அந்த சீரியல் போட்டு பார்க்க ஆரம்பிச்சி எங்கப்பாவ கடுப்பேத்தி, அவர சரண்டராக வெச்சிடுவாங்க. அதோட அந்த சீரியலுக்கும் பதில் மரியாதை செஞ்சு தன் கடமையுணர்ச்சி, நன்றி மறவாமை எல்லாத்தையும் எக்சீக்யூட் பண்ணி மன நிறைவோட இருப்பாங்க.
rapp said..//மன நிறைவோட இருப்பாங்க.//
சரி அது இருந்தா போதும். நமக்கு வேறென்ன வேணும்?
ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியா!!!
//பீலிங்க்ஸ்?! நடக்கட்டும்.//
ரிப்பீட்டே!!!
அம்பி, அருமையான எழுத்து.
எங்க சின்னவனுக்கு ர வராது. ர எல்லாம் ட ஆகிவிடும். ரொம்ப இனிமையான நினைவுகளை எழுப்பி விட்டீர்கள்.
unga paiyan edho solli kuduthu neenga thiru thirunnu mulichirpinga pola?
lightaa generation maathitu posta potinga pola :)
nice one though...
\\நாம ஏதும் அமுக்கி, ஏதும் ரிப்பேர் ஆனா பையனுக்கு வேற தண்டச் செலவு என்ற பெற்றோருக்கே உரித்தான பயம்.\\
ஆனா ஆரம்பத்துல தயக்கம் காமிச்சாலும் போக போக நல்லா Pick up பன்னிடராங்க.இப்போல்லாம் எங்க அம்மா வீட்டு Phone உபயோகபடுத்தரதே இல்ல..Missed calls bestah use பன்ரது அவங்களும் அவங்க friends தான் :)
\\ஆனாலும் பொறுமையாக எனக்கு பயிற்சி அளித்து, திருத்திய அவர்களின் பொறுமையில் தசாம்சமாவது (அய்யோ! படம் இல்லீங்கணா! பத்தில் ஒரு பங்குனு சொல்ல வந்தேன்) எனக்கு வாய்க்காதா என்ன?\\
வயசான கொழந்தையா அவங்கள பாக்கனும்ல :)
எனக்கு இந்த பதிவு பிடிச்சிருக்கு அம்பி! எனக்கும் பதிவு போட ஒரு மேட்டர் கிடைச்சுது, நன்றி நன்றி நன்றி:-)))
Ambi, very good touching post.
சிறிது தயக்கம், நாம ஏதும் அமுக்கி, ஏதும் ரிப்பேர் ஆனா பையனுக்கு வேற தண்டச் செலவு என்ற பெற்றோருக்கே உரித்தான பயம். செல்போனுக்கே
correcta soneenga.
ரொம்ப நல்ல பிள்ளையா இருக்கீங்களே :) கொடுத்து வச்ச பெற்றோருக்கு என் பணிவான வணக்கங்கள்.
:)...உண்மை! தங்கள் சமர்ப்பணத்தில், சேர்ந்து கொண்டு,நானும் அவர்களுக்கு 'வாழ்த்துகள்' சொல்லிக்கவா? :)))
//கயல்விழி முத்துலெட்சுமி said...
என் பொண்ணுக்கும் b and d க்கு மிஸ்டேக் வரும்..
//
கயலக்கா! சேம் ப்ராப்ளம்...என்னா பண்ணலாம்?....:(((
ok ok, appa aana udane ennanamo pesara ;) nadathu...idhu enna idhu enga ponalum dasavatharam review? Naan ennoda post publish pannave poradhilla!!
இப்ப யாரு தகப்பன் சாமி? அம்பியா? அம்பி அப்பாவா? :-)
என் அனுபவம் - குழந்தைகளுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்காதீர்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ நீங்கள் அப்படி இருங்கள். அவர்கள் சுலபமாக கற்றுக் கொண்டு விடுவார்கள்.
//செல்போன்கள் எல்லாம் பாக்க அழகா பாவனா மாதிரி இருக்கு. ஆனா கீபேடுகள் அவ்ளோ சுலபமா இருப்பதில்லை.//
என்னமோ பாக்யராஜ் மாதிரி சொல்றீங்க. நமக்கு எங்கே புரியுது இதெல்லாம். :-))
romba touching post.enakkaga cell phone usage indha vayasilayum kathukkitta enga appavoda sincerity nyabagam vandhadhu.anaa karpooram madhiri takkunu pudichittaru.amazing.thankyou ambi sir.romba neram neenga sonnadhe pathi yosichen.
nivi.
//பையன் .. பைக் அப்படிங்கறத கைப் ன்னு சொல்றான்//
@முத்தக்கா, உங்க பையன் கைப்புள்ள!னு சொல்ல வந்ருப்பான். எதுக்கும் விசாரிங்க. :p
//எங்ககூட பேசறத்துக்காகவே யாஹூ மெஸ்ஸன்ஜர் ஆப்பரேட் பண்ண கத்துக்க ஆரம்பிச்சவங்க //
@rapp,சரியா சொன்னீங்க. பாசம் தான் ஆர்வத்துக்கு காரணம் இல்லையா? :))
//உங்க இந்தக் குசும்புக்காகத்தான் இங்க
http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_19.html போட்டு கும்மிட்டேங்க..
//
@ரிஷான், நேத்து பாத்துட்டு சத்தம் போடாம வந்துட்டேன். :))
மாட்டமையா போவிங்க ரிஷான், அப்ப இருக்கு உங்களுக்கு ரம்ஜான். :p
//பீலிங்க்ஸ்?! நடக்கட்டும்.
//
@கொத்ஸ் & மதுரையம்பதி,
தங்கள் இருவர் வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் மிக்க நன்னி. :))
//அப்பா ஆனவுடன் பேரண்ட்ஸ் க்ளப்'க்குப் போயிட்டிங்களே..
//
சரியா பாயிண்ட புடிச்சீங்க அறிவன்.
//இப்பொழுது வரும் செல்போன்கள் எல்லாம் பாக்க அழகா பாவனா மாதிரி இருக்கு. //
இது கூடவா? :p
ஆஹா, என்ன ராலக்ஷ்மி மேடம் & ராப், கிழக்கே போகும் ரயில் மாதிரி என் பிளாக்குல சாட்டிங்கா? :))
நடக்கட்டும். தலைக்கு அஞ்சு டாலர் கட்டிட்டு தொடருங்க பாப்போம். :p
முருகன் டாலரா? ஐயப்பன் டாலரா?னு காமடி கீமடி எல்லாம் பண்ண்பிடாது, சொல்லிட்டேன்.
@ராப், உங்க அம்மா பட்டய கிளப்பறாங்க போல. ரொம்ப ரசித்தேன்.
//ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியா!!!//
என்ன ச்சின்ன பையன், பொதுவா நீங்க அவ்வ்வ்வ் தானே போடுவீங்க? :p
//ரொம்ப இனிமையான நினைவுகளை எழுப்பி விட்டீர்கள்.
//
@வல்லி மேடம், ஆக எங்களுக்கு ஒரு அப்திவு கிடைக்கும், இல்லையா? :))
//lightaa generation maathitu posta potinga pola //
ஆமா அருண், தீடிர்னு தோணிச்சு. கருத்துக்கு நன்னி. :)
//Missed calls bestah use பன்ரது அவங்களும் அவங்க friends தான் //
@ramya, சூப்பர். வயசான குழந்தை... மிக சரியா சொன்னீங்க. :)
//எனக்கும் பதிவு போட ஒரு மேட்டர் கிடைச்சுது,//
@abi appa, தன்யனானேன் பிரபு. (னான் பிரபு இல்ல, தொல்ஸ்னு கலாய்க்க கூடாது) :p
//Ambi, very good touching post.
//
@kittu, wow, Just today morning only i thought of U and U r here. great. again lost your mail id :(
//ரொம்ப நல்ல பிள்ளையா இருக்கீங்களே //
@கவி, நம்பிட்டீங்க இல்ல, ரெம்ப நன்னி. :p
//தங்கள் சமர்ப்பணத்தில், சேர்ந்து கொண்டு,நானும் அவர்களுக்கு 'வாழ்த்துகள்' சொல்லிக்கவா?//
@newbee, என்ன தயக்கம்? அம்பி அழைக்கிறார், அணி திரண்டு வாரீர். :p
//appa aana udane ennanamo pesara ;) nadathu...//
@usha, neeyum pesuva koodiya seekram. :p
//idhu enna idhu enga ponalum dasavatharam review? //
first en review padi, then U will understand. :p
//இப்ப யாரு தகப்பன் சாமி? அம்பியா? அம்பி அப்பாவா?//
@sridhar, இப்போதைக்கு அம்பி அப்பா தான்!
//என் அனுபவம் - குழந்தைகளுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்காதீர்கள். //
அப்படியா? சரி ட்ரை பண்ணி பாக்கறேன். :)
//அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ நீங்கள் அப்படி இருங்கள்.//
சூப்பர். இத இத தான் எதிர்பார்த்தேன். சிம்பிளா சொல்லீடீங்க. :))
//என்னமோ பாக்யராஜ் மாதிரி சொல்றீங்க. நமக்கு எங்கே புரியுது இதெல்லாம்.//
நம்பிட்டேன். :p
//thankyou ambi sir. romba neram neenga sonnadhe pathi yosichen.
//
@நிவி, அப்படியா? தன்யனானேன். :)
//அப்பா ஆனவுடன் பேரண்ட்ஸ் க்ளப்'க்குப் போயிட்டிங்களே..//
Repeat Machi Welcome to the club!
சூர்யா பலே பலே பேஷ் பேஷ்.
பொறந்து ஒரு மாசமாகலை. அதுக்குள்ளே அப்பாவின் 'ஞானக் கண்ணைத் திறந்துட்டீரே'
பதிவு நல்லா இருக்கு அம்பி.
வணக்கம் அம்பி அப்பா,
கலக்கல் பதிவு..ஆனா நாந்தான் ரோம்ப லேஏட். உங்களுக்காவது "க" ....."இ" இல்ல B D பிரச்சனைகள்தான். எங்க பக்கத்து வீட்டுல இருந்த பையனுக்கு ஐஞ்சு வயசு. ஆனா அவன் பேசறத கேட்டா பயந்துடுவீங்க. எல்லாத்துக்கும் அவனே ஒரு பேரு வச்சி இருப்பான். "தண்ணி"னா அவன் பாஷைல "சுட்டா" . அப்புறம் "வேணாம்"ன்கறது அவன் லேங்வேஜ்ல "குல்னா". அட அம்மாங்கறதெ அவன் வாய்ல "சும்பி"தான். நிச்சியமா ஒளர்ர மாதிரி எல்லாம் கிடையாது. அதெ அதே வார்த்தைங்க தான் எப்பவும். ஆனா அவனே வச்சிகிட்டது. அவங்க அம்மாவுக்கு மட்டும்தான் புரியும். அவங்க கிட்ட கேட்டுகிட்டு நாமளும் அதே வார்த்தைய உபயோகிச்சா கிடுகிடுண்ணு பேசுவான். அதுக்கே அவங்க அம்மா மொகத்தை பாக்கணுமே!!!! பூரிப்புதான். அவங்க அப்பா ஒரு படி மேல....."இருக்கட்டும்பா....உலகத்துல எவ்வளவோ மொழி இருக்காம்...நாம்ளும் ஒண்ணு உருவாக்குவோமே"...எங்க அம்மாதான் ரொம்ப சத்தம் போட்டு டாக்டரை பாக்க சொன்னாங்க.....ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் சேர்ந்து அவங்க அம்மாதான் ரொம்ப முயற்சியெல்லாம் எடுத்து இப்பொ பத்தாங்வகுப்புல தமிழ்ல ஸ்கூல் பார்ஷ்ட்டாம்....அவங்க அம்மா முகத்துல இதுக்கும் அதே பூரிப்புதான்....என்னாண்ணு சொல்றது.....ம்ம்ம்......
hai ambi,
//பீலிங்க்ஸ்?! நடக்கட்டும்.//
repeatuuuuuuuuuuuuuu
// நான் வார்த்தைகளை கூட்டி கூட்டி பேச ஆரம்பித்த புதிதில் இந்த 'க' எனக்கு வராது. எனவே தக்காளியெல்லாம் தத்தாளி தான். கத்ரிக்காய் எல்லாம் தத்தரிதாய் ஆனது. ஆங்கில எழுத்தில் 'சி' எனக்கு மட்டும் வலது பக்கமாக வரும் அரைவட்டம்(தாரே சமீன் பர்?). //
அம்பி, அம்மாஞ்சி அம்பி, இப்போ மட்டும் என்ன வாழ்ந்தது?? நாங்க புரிஞ்சுக்கறோமே கஷ்டப்பட்டு?? :P ஒழுங்கா ஒரு வார்த்தை பேச வரதில்லை! இதிலே யாரோ எழுதிக் கொடுத்து எழுதற பதிவுக்கு இத்தனை பில்ட் அப்பா????? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அட்றா .. அட்றா.. எங்க அண்ணனுக்கு பொறுப்பு வந்துடிச்சி.. ஆனாலும் இன்னும் பாவனாவ புடிச்சி தொங்கறத நிறுத்த மாட்டேளா? :P
//இது தான் இன்டர் நெட் எக்ஸ்ப்ளோரர், இது வழியா தான் மெயில் அனுப்ப முடியும்,//
அம்பி அண்ணா.. இப்டி எல்லாம் குட்டி அம்பிக்கு தப்பு தப்பா சொல்லி தராதேள்.. ஈமெயில் அனுப்ப நெறைய இமெயில் க்ளையண்ட்ஸ் இருக்கு.. :P ஹிஹி..
//வாழ்த்தி, ஹிஹி, மொய்யெழுதி, கால ஓட்டத்தில் கரைந்து விடாமல் நாணலாய் வளைந்து, தம் மக்கள் நின்றால் குடையாக, அமர்ந்தால் சிம்மாசனமாக வலம் வரும் எல்லா பெற்றோருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம். :)//
உனக்கே சமர்ப்பணம்-ன்னும் சொல்லிக்க இம்புட்டு அழகிய பதிவா?
இல்லை...ஏதோ மொய்-ன்னு சொன்னியேப்பா, அதுக்கா சமர்ப்-பணமா? :-)
//நின்றால் குடையாக, அமர்ந்தால் சிம்மாசனமாக//
இந்த வரிகளை மட்டும் அடியேன் பொடியேன் படிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் குருவே!:-)
//செல்போன்கள் எல்லாம் பாக்க அழகா பாவனா மாதிரி இருக்கு. ஆனா கீபேடுகள் அவ்ளோ சுலபமா இருப்பதில்லை.//
பாவனைப் பழித்துப் பேச வேண்டாம் என்று உம்மை எச்சரிக்கிறேன்!
எங்க பாவனா பாவம்! :-)
வாங்க மெட்ராஸ்காரரே! நீங்களும் டாடியா?
@tulasi teacher, என்னத்த கண்ண தொறந்து? நீங்க தான் நம்பறீங்க போங்க. :))
@விஜய், லேட் எல்லாம் ஒன்னும் இல்லை, பதிவு போட்டு 2 நாள் தான் ஆவுது. :)
நீங்க சொன்ன சம்பவம் யோசிக்க வைக்குது. நீங்க தான் அந்த கொங்கு மண்டல போராளியா?னு புரபைல் செக் பண்ணினேன். ஹிஹி.
வாங்க சுமதியக்கா, அதே பதில் தான் உங்களுக்கும்.
@கீதா பாட்டி, இன்னும் எனக்கு மழலை போகலைனு சபைல உரக்க சொன்ன உங்களுக்கு ரெம்ப நன்னி. :))
தம்பி சஞ்சய் ராமசாமி, பதிவ முதல்ல நல்லா படிப்பா. என் அப்பா அம்மாவுக்கு தான் நெட் சொல்லி குடுக்கறேன். நெருப்பு நரி, அது இதுனு இப்பவே பயமுறுத்த வேணாம்னு தான் ஒரே கிளையண்ட் கொள்கை.
//இந்த வரிகளை மட்டும் அடியேன் பொடியேன் படிக்கவில்லை //
@KRS,
அந்த வரியே உங்களை கவர்ந்து இழுக்கத்தான் எழுதபட்டது எம்மாழ்வாரே! கேள்வி அப்தில் எல்லாம் நேத்தே பாத்துட்டேன். மெதுவா வந்து கும்முவோம்னு மீ வெய்டிங்க்.
பாவனா மீது என்ன ஒரு கரிசனம் கேஆரெஸ் அங்கிளுக்கு!னு ரிஷான் சொல்ல சொன்னான்.
நக்கல்ஸூஉ? ம்ம்ம்....நாங்கதான் கிளீனா போட்ருக்கோம்ல "வரும்ம்ம்....ஆனாஆ......வாராதூஊஉ...."னு எங்க பிளாக்லேயே (எப்ப்ப்பபப...னு கேக்றியா? அட..நாங்க என்னா வச்சிகிட்டா வஞ்சன பண்றோம்....எதாவது கொஞ்சம் தேறினாக்கா...அதையும் இந்த பின்னூட்டம் புடிங்கிட்டு போயிட்து..அவுரு..... லெவலே வேற..ம்... வந்தமாஆ...எதாவது ஒரு பிளாக்க ஓபன் பண்ணமா....பின்னூட்டத்துல கைல கீற Template ADVTai...குட்தமான்னு போய்னே இருக்காரு..இல்ல அரசியல்வாதி கணக்கா பதிவர் லிஸ்ட் எடுத்து "கோடான கோடி நன்றி"ன்னு போட்டு கலக்கறாரு... இனிமே பேசாம அவரு மேரி அரம்பிச்சிட வேண்டியதுதான்..அது சரி பதிவு போட்டாதான அந்த பிரச்சனையெல்லாம்.......) அப்புறம்.. என்னாஆ.....போராளீ......புகை(பட)யாளீ......ன்னுகிட்டு...... ஆமா இதுக்கு என்னாதான் பண்றது? அவரு வேற மூத்த(வயசை சொல்லலைபா...நீ வேற..போட்டுகுடுக்காதெ...) பதிவர போய்டாரு....அவரு கிட்ட இருந்து இந்த பேர (அதான்பா "விஜய்") எப்பிடி டாகால் வேலை காட்டி வுருவரதுன்னுதான் டெய்லி வோசனயா கீது....எதுனா ஐடியா இருந்தா எடுத்து உடேன்.....(பேசாம அவரு போராளீ......புகை(பட)யாளீ ப்ளாக்குக்கு ஒரு 100 அட்வடைசுமெண்டு குடுக்கறென்னு கேட்டு பாத்துறலாமா? எதோ நீங்க எல்லாந்தாந் கீறீங்களே.....ஹெலுபு...கிலுபு...பண்ண மாட்டிங்க?......)
//எதோ நீங்க எல்லாந்தாந் கீறீங்களே.....ஹெலுபு...கிலுபு...பண்ண மாட்டிங்க?......)//
இந்தாப்பா விசய், நாங்களே ஆடி போயிருக்கோம்.
மறுபேச்சு பேசாம அண்ணன் விசய் வூட்டுக்கு போனாமா, ஒரு மொய் வெச்சமானு வந்துகினே இருக்கனும். :P
சூப்பர் மேட்டர் அம்பிண்ணா! நம்ப பெத்தவங்களுக்கு எந்த தட்டுல சோறு போடுறோமோ அந்த தட்டு தான் பின்னாடி நமக்கு. ரொம்பப் பயலுக்கு அது புரியிரதேயில்லை.
ரோம்ம்ம்ம்ப நன்னிபா, கழ்டிவுட்டுகினு போய்னே கீறியே? நாயமா? பேரு? அப்போ அவ்ளோதானா?
//அம்மாக்களின்/பாட்டிகளின் //
இதுல உள்குத்து ஒன்னும் இல்லையே?..சும்மா ஒரு டவுட்டு... :-)
//நம்ப பெத்தவங்களுக்கு எந்த தட்டுல சோறு போடுறோமோ அந்த தட்டு தான் பின்னாடி நமக்கு.//
சரியா சொன்னீங்க அப்துல்லா.
@vijay, :)))
//இதுல உள்குத்து ஒன்னும் இல்லையே?..சும்மா ஒரு டவுட்டு//
சே! சே! நான் பொதுவா தான் சொன்னேன். எப்படி இருக்க ஷ்யாம்? :))
நானும் வளர்ந்த பிள்ளைகளுக்கு தந்தை என்றமுறையில் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். பதிவு நன்றாக இருக்கிறது.எல்ல பதிவுகளுமே.
நல்ல பதிவு அம்மாஞ்சி
பொறுமை இப்பொழுது இளந்தலை முறையினரிடம் நிறையவே இருக்கிறது. கற்றுக்கொள்ளும் பொறுமை தான் வேண்டும்
நல்வாழ்த்துகள்
இரண்டு திருக்குறள் நினைவுக்கு வருகிறது.
1மகன் தந்தைக்காற்றும் உதவி - இவன்தந்தை
என்னோற்றான் கொல் என்சொல்
2.தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
vanakkam ambi,
negizhavaikum padhivu....
taare zameen par nalla uvamai. ... en payyan...CAT padikkarappo T A C cat nu thaan ippo padikraan..enakkum intha padam thaan nyabagam vanthathu..
sasi
Post a Comment