பொதுவா இந்த கல்லூரிகளில் வருடம் முழுக்க செமஸ்டர் பரீட்சை, பிராக்டிகல்ஸ்னு மாணவர்களை பிராண்டி எடுத்தாலும் யூத் வெஸ்டிவல், ஒவ்வோரு துறைக்கும் தனி விழானு ஏதாவது ஒரு வகையில் ஒரு இடைகால நிவாரண நிதி அளித்து விடுவார்கள். அதுவரை வாலை சுருட்டி கொண்டிருந்த வானரங்கள் எல்லாம் அந்த ஒரிரு நாட்களில் அசோக வனத்தில் புகுந்த அனுமாராட்டும் கல்லூரியை துவம்சம் செய்து விடுவார்கள்.
அவனவன் த(ண்)னி திறமை எல்லாம் சும்மா பீறிட்டு வந்து பார்வையாளர்களை பரவசபடுத்தும். அதுவும், பதினெட்டு பட்டி மகளீர் கல்லூரிகளும் வருகிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
தீடிரென கடைகளில் பேர் அன் லவ்லி கீரிம்கள் அனைத்தும் விற்று தீரும். சலூன்களில் கூட்டம் ரொம்பி வழியும். துவைக்காத ஜீன்ஸும் டீ-ஷர்ட் சகிதமாய் பேஷன் ஷோவுக்கு வெங்கல கடையில் யானை புகுந்த கதையாய் இளைஞர் பட்டாளமும் களத்தில் குதிக்கும். ரீமிக்ஸ், மசாலா மிக்ஸ்னு கேசட் கடைகாரன் உயிரை வாங்கி பழம் நீயப்பா!வில் ஆரம்பித்து பம்பர கண்ணாலே! காதல் சங்கதி சொன்னாளேனு நைசா ப்ரபோஸ் பண்ணும் கேடிகளும் உண்டு.
தப்பிதவறி ஏதேனும் அப்பிராணி பெண் மேடையேறி அவள் குலதெய்வத்தை கும்பிட்டு, கண் மூடி, நித்யஷ்ரி மகாதேவன் ரேஞ்சுக்கு வாதாபி கணபதிம்! பஜே!னு ஆரம்பித்தால் பஜல்! பஜல்! காமன் பஜல் ஸே! பஜல்! பஜல்!னு மேடைக்கு கீழே ஒரு கூட்டம் தனியாவர்த்தனம் வாசிக்கும்.
இசைகருவிகள் போட்டினா, ஸ்டைலாக கிதார் வைத்து கொண்டு மைக்கேல் ஜாக்ஸனின் மச்சினன் மாதிரி பீட்டர் விடுவது ஒரு கோஷ்டினா மதுரை மண் மணம் கமழ, கரகாட்டகாரன் கவுண்டமணி மாதிரி தனிதவில் வாசித்து அசத்தும் இன்னொரு கோஷ்டி. டான்ஸ் போட்டினா இந்த மக்களுக்கு எங்கிருந்து தான் அவ்ளோ ஐடியா பெறுக்கெடுக்குமோ? ஆனா அழகா வந்து, அம்சமாய் ஆடி, முதல் பரிசை மகளிர் கல்லூரி தான் தட்டி செல்லும் எனபது ஊரறிந்த ரகசியம்.
நடன போட்டிகளுக்கு நடுவராய் அமர்ந்து சபாஷ்! சரியான போட்டி!னு சேவை புரிய புரபசர்களிடையே பலத்த போட்டி நிலவும். சலங்கை ஒலி பத்து தடவை பாத்தவனாக்கும்!னு பிஸ்து காட்டுவார்கள் சில பெருந்தலைகள்.
மாதம் ஒரு கிலோ லயன் டேட்ஸ்(பேரீச்சம்பழம்) சம்பளத்துக்கு நான் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிணி மாணவர்களோடு சேர்ந்து நானும் லெக்சரர் என்ற பெயரில் நான் படித்த காலத்தில் சாய்ஸில் விட்ட பாடங்களை மறுபடி படித்து, நடத்தி கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி இது.
என்னை போன்ற அம்மாஞ்சிகளுக்கு "களி மண்ணில் கை வண்ணம் காணும் போட்டி" அல்லது " நேர் நேர் தேமா! நிரை நேர் புளிமா! போன்ற கவிதை போட்டிகளுக்கு நடுவராய் மாரடிக்கும் பாக்யம் தான் வந்து சேரும்.
அந்த வருஷ போட்டிகளில் மாறுவேட போட்டியும் இருந்தது. சுமார் ஒரு பத்து கல்லூரிகள் கலந்து கொண்டன. என் மாணவன் ஒருவனும் போட்டி ஆரம்பிக்கும் ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே என்ன வேஷம் போடலாம்? ஒரு ஐடியா குடுங்க சார்!னு என்னை நச்சரித்து கொண்டிருந்தான்.
பொதுவா இந்த மாறுவேட போட்டினா ஒன்னு மொட்டை அடித்து கொண்டு கையில் கம்பு வைத்து, ஒரு டைம்பீஸ் கடிகாரத்தை முக்கால் முழ வேட்டியின் இடுப்பில் சொருகி காந்தினு பில்டப் குடுப்பார்கள், இல்லாட்டி தலையில் முக்காடு போட்டு கொண்டு அன்னை தெரஸானு அல்வா குடுப்பார்கள். நீ ஏதாவது வெரைட்டியா குடுடா! அப்ப தான் ஜெயிக்க முடியும்னு நான் வேறு கடுப்பேத்தி இருந்தேன்.
பையனுக்கு என்ன தோணினதோ தெரியலை, குடுகுடுனு போய் ஒரு நாடக கம்பனியிலிருந்து ஜடா முடி, நீளமான தாடி கமண்டலம் என அள்ளி கொண்டு வந்து சாமியார் வேஷம் போட போறேன்!னு ஒரு குண்டை தூக்கி போட்டான். வெறும் சாமியார் வேஷம் எல்லாம் கதைக்கு ஆவாதுனு நான் சொல்லியும் பையன் விடாபிடியா இருந்தான். சரி, வழக்கம் போல ஏதவது டகால்டி பண்ணிட வேண்டியது தான்!னு முடிவு பண்ணி கையில் பனை ஓலை கட்டு, எழுத்தாணி, வடகம் காய போட்டிருந்த வெள்ளை வேட்டினு சாமியாரை திருவள்ளுவரா மாத்தியாச்சு. மாத்தினாலும் ஒரு சின்ன நெருடல் இருந்தது. நமக்கு எல்லம் திருவள்ளுவர் என்றவுடன் என்ன ஞாபகம் வரும்? "அகர முத எழுத்தெல்லாம்"னு கே.பாலசந்தரின் கவிதாலயா தானே? (எனக்கு அப்படி தான்பா!)
அதே மாதிரி ஒரு அனிமேஷன் மேடையில பண்ணினா என்ன?னு தோணியது. அதை எப்படி செயல்படுத்தினேன்னு அடுத்த பதிவில் பார்ப்போமா?
13 comments:
me first me first,
ayyo,unga kitta padichha pasangallam enna gathiyil irukangga?
nivi.
neenga indha madhiri ethana mediyila kalakirukeenga!!!!!!
nivi.
பார்ப்போம்.
அடடே பீடிகை எல்லாம் பலமா இருக்கே!
ஆஹா! சூப்பரு! நல்லா interestinga போகுதே! மேல சொல்லுங்க அண்ணா!
அம்பி, லெக்சரரா????????
கற்பனை செய்யக் கூட முடியலையே.
இத்தனை நாட்கள் தெரியாமப் போச்சே. வணக்கம் சார்.
நிஜமாவே நல்லாத் தொடங்கியாச்சு.
இந்தப் புதிய இமேஜ் எப்படி மேற்கொண்டு போகிறது என்று ஆவலோட காத்திருக்கேன்.
சூப்பர் அம்பி!!!
@nivi, ஆமா நிவி, நீங்க தான் பஷ்ட்டு, இந்தாங்க சூடா ஒரு பிளேட் கேசரி. :)
நீங்க கேட்ட அதே கேள்வியை தான் என் தங்கமணியும் நக்கலா கேக்கறாங்க. :P
பாருங்க கொத்ஸ் அண்ணே! :)
@ramya, வாங்க ரம்யா, ரொம்ப பில்டப் குடுத்துட்டேனோ? :)
@dreamz, சொல்றேன் தினேஷ், சொல்றேன். :)
//அம்பி, லெக்சரரா????????
கற்பனை செய்யக் கூட முடியலையே.
//
@valli madam, இப்ப நினைச்சா எனக்கே ஆச்சரியமா இருக்கு. வணக்கம் எல்லாம் வேணாம். :))
enna animation?? yaarai imsai paduthina???
on your comment, naama ellam same blood dhane ;)
balachander padam maathiriye Build up ellam balama irukku..
அம்பி, தலைப்பு சூப்பர். இப்படி ஒரு படம் வந்தது இல்லையா? உலகமயமாக்கலில் இரட்டை சடை காணாமலேயே போயிடுச்சு இல்லையா :-)
@usha, அடுத்த பதிவுல சொல்றேன். :)
@mgnithi, பில்டப் ரொம்ப ஜாஸ்தியாயிடுத்தோ?
@usha madam, யக்கா, பதிவுல இவ்ளோ மேட்டர் இருக்கு. நீங்க தலைப்புலயே நிக்கறீங்க,
சரி விடுங்க, அந்த காலத்துல உங்களுக்கு ரெட்டை ஜடை போட்டு பின்னல் போட்ட ஞாபகம் வந்துவிட்டதோ? :D
இது தாராளமயமாக்கலின் ஒரு அங்கம் தான்! :))
மாணவரா இருந்து பண்ணின அட்டூழியத்துக்கெல்லாம், வாத்தியாரா ஆகி அனுபவிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஹிஹி ஒரு சந்தோஷம் தான்
Post a Comment