Tuesday, April 29, 2008

தீதும் நன்றும்...


டிஸ்கி ஒன்னு: இந்த கதையில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் யாவும் கற்பனையே!

காட்சி ஒன்று:

புகழேந்திக்கு மிகவும் படபடப்பாக இருந்தது. ஆளுங்கட்சியில் ஒரு முக்ய பொறுப்பில் இருந்தாலும், அவனுக்கு இந்த இரண்டாம் நிலை தலைவர்கள் என்ற பட்டம் பிடிக்கவில்லை. அதுலயும் தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் முதிந்தவர்கள் பலர் இருக்கிறார்களே! என்ற ஏக்கம் பெருமூச்சாக வெளி வந்து கொண்டிருந்தது. ஏதேனும் செஞ்சே ஆகனும்!

மருத்துவர், முதல்வர் அறையிலிருந்து வெளிவருவதை பார்த்து, அரக்க பரக்க முக்ய தலைகள் ஓடினர்.

தலைவருக்கு ஒன்னும் ஆபத்தில்லையே?

ஒன்னும் சொல்றதுக்கில்லை, இருபத்தி நாலு மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும். என்னால முடிஞ்சத எல்லாம் செஞ்சு இருக்கேன். பார்ப்போம்! மருத்துவர் நகர்ந்து விட்டார்.

மருத்துவரின் பேச்சு பெருந்தலைகளுக்கு காத்து புடுங்கி விட்டது போல ஆனது. ஒருவர்பின் ஒருவராக கலைய தொடங்கினர்.

புகழு! இதவிட்டா அடுத்து ஒரு வாய்ப்பு கிடைக்காது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கோ! என உள்மனம் சொல்ல, "அய்யகோ! தமிழகத்தின் தலைமகன் தலையணை இல்லாமல் உறங்குவதா?" என கதறியபடியே முதல்வர் அறைக்குள் சென்ற புகழை மெய்காவலர்கள் தடுக்க வில்லை.

நாற்பது வருடங்களுக்கு பிறகு,

காட்சி இரண்டு:

முதல்வர் வீட்டுக்கு வெளியே வட்டம், மாவட்டம் என எல்லாம் ஒன்று கூடி ஒரே சலசலப்பு.

முறைப்படி, மூத்தவர் தானே ஆட்சிக்கும் வாரிசா வரனும்?

என்னயா முறைப்படி? இரண்டாமவர் தான் கட்சிக்கு எல்லாம். எல்லா தொகுதி பணிகளையும், மாநாட்டையும் இவரு தான் முன்னின்னு நடத்தறாரு. அப்ப எல்லாம் வராத மூத்தவரு இப்ப எங்கயா வந்தாரு? ஒரு வட்டம் தன் விசுவாசத்தை காட்டியது.

மூக்கு ஒழுகிட்டு இருந்தவங்க எல்லாம் முச்சந்தில மேடை போட்டு பேசினா முதல்வராகிட முடியுமா? தென் மாவட்ட ஆதரவு இல்லாம தமிழகத்துல எவனும் ஆட்சி அமைக்க முடியாது. எங்க அண்ணன் கன்ட்ரோலுல இருக்கு டோட்டல் தென்னகமே! அது தலைவருக்கும் தெரியும். தல இருக்கும்போது வாலாட கூடாது. ஒரு மாவட்டம் பதிலுக்கு வாலாட்டியது.

இந்த சூடான விவாதங்களை எல்லாம் மாடியிலிருந்து கேட்டபடியே நம்பர் இரண்டு, முதல்வர் அறைக்கு நுழைந்தது.

என்ன டாக்டர்? இப்ப எப்படி இருக்கு தலைவருக்கு?

தலைவர் நிறைய ரெஸ்ட் எடுக்கனும். இப்பவும் தலைவர்னு தான் கூப்டனுமா? அப்பானு சொல்ல கூடாதா? டாக்டர் சரியான நேரத்தில் பிட்டு போட்டார். மருத்துவ கல்லூரிக்கு அப்ரூவல் வாங்கியாகனுமே!

இல்ல டாக்டர், அவர் இந்த நாட்டுக்கே தலைவர், அப்புறம் தான் எங்களுக்கு எல்லாம் அப்பா.

சரி தம்பி, நான் கிளம்பறேன், ஏதாவது தேவைனா போன் பண்ணுங்க.

இருவரின் சம்பாஷணைகளை கேட்டு புன்முறுவல் பூத்த தலைவர்,

தமிழ் மூன்றேழுத்து!

தம்பி மூன்றேழுத்து!

அன்பு மூன்றேழுத்து!

கட்சி மூன்றேழுத்து!

வெற்றி மூன்றேழுத்து!

வீரம் மூன்றேழுத்து!

யோவ்! அல்வா கூட மூன்றேழுத்து தான்! இப்ப எதுக்கு இந்த பிட்டு? இப்பவே என்னை அடுத்த வாரிசு!னு அறிவிக்கனும், இல்ல நடக்கறதே வேற.

ஆத்திரம் அறிவுக்கு பகை தம்பி! பொதுகுழு கூடி ஒரு நல்ல முடிவு எடுக்கும். அதுவரை காத்திரு!
கழகம் காத்து இரு!
பொறுமை கூட மூன்றேழுத்து தான் தம்பி! (புகழேந்தியா கொக்கா? )

கடுப்புடன் நம்பர் இரண்டு, அறையை விட்டு வெளியேறியதும் நம்பர் ஒன் வந்து சாமியாடிவிட்டு, அதே பதிலை வாங்கி கொண்டு கடுப்புடன் வெளியேறியது.

நடு நிசியில், "அய்யகோ! தமிழகத்தின் தலைமகன் தலயணை இல்லாமல் உறங்குவதா?னு கூவியபடியே நுழைந்த நம்பர் ஒன்னையும், இரண்டையும், முதல்வரின் மெய்காவலர்கள் ஏனோ தடுக்க வில்லை.

டிஸ்கி இரண்டு: டிஸ்கி ஒன்னை மறுபடியும் படித்து விட்டு பின்னூட்டத்துக்கு செல்லவும்.
*************************************************
இந்த இடுகையும் ரெண்டு போட்டிக்கு தான்.

8 comments:

வெட்டிப்பயல் said...

அரசியல் எல்லாம் பேசறீங்களே அம்பி...

Dreamzz said...

எவ்ளோ கொடுத்தாங்க ;) அரசியல்.. அதிருதுல்ல..

Anonymous said...

:-((( நகைச்சுவை மாதிரி இல்லை. ஏதோ காழ்ப்புசுவை மாதிரியில்ல இருக்கு. நீங்க இத எழுதியிருக்க வேணாம்.

மெளலி (மதுரையம்பதி) said...

//அரசியல் எல்லாம் பேசறீங்களே அம்பி...//

ரீப்பிட்டே

வல்லிசிம்ஹன் said...

அம்பி, அரசியலா.
நடக்கற விஷயம்தான் எழுதி இருக்கீங்க:(

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

You want me to believe that this is just you imagination. Nalla katha vuduringale anne!

கோபிநாத் said...

கதை நல்லாருக்கு ;))

Unknown said...

உங்க கோபம் முதல்வர் மேல தானே.
இருக்கட்டும். இதே முன்னால் முதல்வராக இருந்தால் வீட்டுக்கு ஆட்டோ வரும்.