Friday, April 11, 2008

ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!

இந்த இரண்டு என்ற எண் இருக்கே! சராசரி மனிதன் முதல் சன்யாசி வரை எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நீங்கா இடம் பிடித்து விடுகிறது. இன்பம்-துன்பம், பகல்-இரவு, பிறப்பு-இறப்பு, வானம்-பூமி, ஆண்-பெண், இளமை-முதுமை, சூரியன் - சந்திரன், நட்பு-பகை, தேவன் - சாத்தான், அகம்-புறம், சரி-தவறு, இந்த லிஸ்ட் போயிண்டே இருக்கும்.

அட உணவுல கூட பாருங்க நீங்க சைவமா? அசைவமா?னு தான் கேக்கறாங்க. சரி உணவை விட்டு தள்ளுங்க, ஆன்மிகத்துல ஜீவாத்மா-பரமாத்மானு த்வைதம் சொல்லுது. ஜீவன் பரமாத்மாவிலே அடக்கம்னு அத்வைதம் சொல்லுது. (எல்லாம் இந்த கேஆரெஸ் அண்ணன் பெங்களூர் விஜிட்டின் மகிமை.)

அரசியலுல பாருங்க, அது பிரிட்டீஷ் நாட்டுல இரண்டு கட்சி ஆட்சி முறை தான், இங்க தமிழ் நாட்டுலயும் அதே கதி தான்! அடிக்கடி காமராஜர் ஆட்சி அமைப்போம்!னு ஒரு கோஷ்டி காமெடி பண்ணும், அத எல்லாம் கண்டுக்கபடாது. :)

சினிமா துறைய எடுத்துகோங்க, தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா, சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல், என எல்லாமே ரெண்டு தான். ஹிரோக்களை சொல்லிட்டு மகளீர் பத்தி ஜொள்ளியே ஆகனும்னு நான் பாவனா - நயன்தாரானு ஷ்டார்ட் மீஜிக் போட்டால் வீட்ல சாம்பாரில் உப்பு அதிகரிக்க கூடிய சாத்தியங்கள் இருப்பதால், அந்த அரிய பணியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

சலசல! சலசல! ரெட்டைகிளவி தமிழில் உண்டல்லோ?னு ஐஸ் குட்டியே ஜீன்ஸ் படத்துல திருவாய் மலர்ந்திருக்காங்களே! (இன்னிக்கு சாம்பாரில் தெரியும் இந்த வரியின் தாக்கம்)

சினிமா காமடில ஒரு பழம் இந்தா இருக்கு! இன்னோரு பழம் எங்கே?னு கேட்ட அந்த காமடிய நம்மால மறக்க முடியுமா?
என்ன இப்ப எல்லாம் ரெட்டை அர்த்த வசனங்களில் வரும் நகைச்சுவைகளை சகித்து கொள்ள வேண்டி இருப்பது வருந்ததக்க விஷயமே!

சினிமால டபுள் ஆக்க்ஷன் படங்கள் சக்கை போடு போட்டு இருக்கு. எங்க வீட்டு பிள்ளை, கெளரவம், வாணி-ராணி, பில்லா, நாட்டாமைனு ஒரு பெரிய லிஸ்டே நீளும். ஆனா இப்ப எல்லாம் ஹீரோக்கள், அப்பா, பெரியப்பா, மகன், பேரன்னு சகட்டு மேனிக்கு எல்லா வேஷங்களையும் கலந்து கட்டி அடிக்கறாங்க. இதுனால் என்ன ஆகுது? இந்த அப்பா ரோலில் வரும் வி.எஸ்.ராகவன், பூர்ணம் விஸ்வ நாதன், மேஜர் சுந்தர்ராஜன் எல்லாம் பீல்ட் அவுட் ஆகி வீட்ல கோலங்கள் சீரியல் பாக்கற நிலைமை உருவாகிடுச்சு.

இசைத் துறையிலும் இந்த இரண்டு ஆதிக்கம் செலுத்திகிறது. கர்நாடக இசையில் ப்ரியா சகோதரிகள், கனேஷ்-குமரேஷ் (வயலின்), மான்டலின் ஷ்ரினிவாஸ்-ராஜேஷ்,மாம்பலம் சகோதரிகள், சூலமங்கலம், பாம்பே சகோதரிகள்னு எல்லாம் இரண்டு மயம் தான்.

(இன்னும் யாரையாவது மிஸ் பண்ணி இருந்தா பின்னூட்டதில் தெரிவிக்கலாமே!)

சினிமா இசையிலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, லக்ஷ்மிகாந்த்-பியாரேலால், சங்கர் கணேஷ், டைரக்டர்கள் ஜெடி-ஜெர்ரினு ரெண்டு ரெண்டா கலக்கி இருக்காங்க.

விளையாட்டு துறைய பாருங்க, டென்னிஸ்ல வீனஸ்-செரினா வில்லியம்ஸ் சகோதரிகள், கிரிக்கெட்டுல மார்க் வாக் - ஸ்டீவ் வாக்(ஆஸி), கிராண்ட் பிளவர்- ஆன்டி பிளவர்(ஜிம்பாவே)னு ரெண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.

உளவியல் ரீதியா சொல்லனும்னா, மனிதர்கள் எல்லோருக்குமே ரெண்டு முகங்கள் உண்டு. ஒன்னு சமூகத்தில் அவர்கள் காட்டும் முகம், மற்றது தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டும் முகம். கூடியவரை இந்த ரெண்டு வாழ்க்கையிலும் கோபம், பொறாமை, பேராசை,காம கசடுகள் இல்லாமல் பாத்து கொள்வது தனி மனிதனுக்கும், சமூகத்துக்கும் நல்லது. இல்லையா?

எதுக்குடா அம்பி இவ்ளோ பெரிய வில்லுபாட்டு?னு நீஙக கேக்கலாம்.

இந்த வ.வா.சங்கத்து இரண்டாம் ஆண்டு விழவுக்கு அவங்க அறிவிச்சு இருக்கற போட்டிக்கு தான் இந்த மொக்கை. அதானே! எலி ஏன் அம்மணமா ஓடுது?னு இப்ப புரிஞ்சுருக்குமே உங்களுக்கு.

ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! வ.வா.சங்கம் ஏற்கனவே அறிவிச்சு இருந்த பிரம்ம ரச புகைப்பட போட்டிக்கு நான் அனுப்பி இருந்த படங்களில் எனது இரண்டாம் படத்துக்கு இரண்டாம் பரிசு அறிவிச்சு இருக்காங்க. (அட பாருங்க! இங்கயும் இரண்டு தான்).

18 comments:

mgnithi said...

first attendance

mgnithi said...

//மகளீர் பத்தி ஜொள்ளியே ஆகனும்னு நான் பாவனா - நயன்தாரானு ஷ்டார்ட் மீஜிக் போட்டால் வீட்ல சாம்பாரில் உப்பு அதிகரிக்க கூடிய சாத்தியங்கள் இருப்பதால், அந்த அரிய பணியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்//

summa comedy pannatheenga ambi.. neenga panra sambarla neengale uppu neraiya poduveengala? ;-)

mgnithi said...

/(இன்னும் யாரையாவது மிஸ் பண்ணி இருந்தா பின்னூட்டதில் தெரிவிக்கலாமே!)//

Michael jackson/ Janet Jackson

mgnithi said...

//கூடியவரை இந்த ரெண்டு வாழ்க்கையிலும் கோபம், பொறாமை, பேராசை,காம கசடுகள் இல்லாமல் பாத்து கொள்வது தனி மனிதனுக்கும், சமூகத்துக்கும் நல்லது. இல்லையா?//

Message super....

mgnithi said...

5.. Me the appeatu..

சென்ஷி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் :))

அபி அப்பா said...

இரட்டை இலையை விட்டுவிட்டு ரெட்டை பதிவு போடும் போதே பளிச்சுன்னு தெரியுது உங்க நுன்னறிவியல்.நடத்துங்க, பின்ன ரெட்டை புறா, இரட்டைகிளி தீப்பெட்டி, ரெட்டை மாட்டு வண்டி, பின்ன மூப்பனாரின் சின்னம் பை சைக்கிள், இரட்டை குழல் துப்பாக்கின்னு அடிக்கடி ஒரு டயலாக் வருமே அரசியல்ல அது, எனக்கு இருக்கும் ரெட்டை சுழி, அய்யோ அய்யோ சொல்லிகிட்டே போகலாம் போலிருக்கே நான் பதிவு போடும் போது மாத்திரம் பொங்க மாட்டங்குது...சரி சங்கத்துல ரெட்டை பரிசா வாங்கிட்டு போங்க அம்பி! ஆனா இன்னிக்கு சாம்பார்ல உப்புதாண்டீய்:-))

Anonymous said...

bhavana nayan tharava,too(2)much,adi udha ada(cha)adu kuda rendu.sambarla uppa ,ungalukku saapade innikku sandhegam boss.anyway this 2 is an interesting number.niraya ezuthalam.good compilation.
nivi.

சத்யா said...

paarthu! thangamani vera maari ninaichukka poraanga!!!! en indha vibareetha vilayattu!

சத்யா said...

paarthu! thangamani vera maari ninaichukka poraanga!!!! en indha vibareetha vilayattu!

சத்யா said...

//summa comedy pannatheenga ambi.. neenga panra sambarla neengale uppu neraiya poduveengala? ;-)//

unmai ellam sollitaaaaangaaaaaaaaaaaaaaaaaaa!

வெட்டிப்பயல் said...

இவ்வளவு சொல்லிட்டு ரெண்டு பொண்டாட்டி சாமிங்களை சொல்லாம விட்டுட்டீங்களே...

அப்படி சொன்னா வீட்ல சாம்பார்ல உப்பு போய் உப்புல சாம்பார்னு ஆகிடும்னு ஒரு பயமா?

Swamy Srinivasan aka Kittu Mama said...

8 kulla ulagam irukkum raamaiyaavayae minjitteenga :-)

sema research ambi. 2 matter ku ivlo weightage padichaa dhaan theridhu...excellent thoughts...indha postukku mokkai post label sari alla...idhu oru sakkai poshhtt.

magalir pathi joLradhukku oru poshht podhaadae...so vidunga ada :-)

sari ambi sambar la unga amma aracha sambar podiya, thangamani amma aracha sambar podiya?? hmm edhukku vamdbu..yaedho oru podi illa

neenga solraa madhiri ippa 2 act thaanga mudila....nagesh maadhiri oru super actor ku ellaam role kidaikaama pogudhu..

pass/fail
adi udhai
annan thambi
akka thangai
saturday sunday
boy girl
science commerce
thangamani rangamani
thoon thurumbu

indha maadhiri 2ayum sollalaam...

இலவசக்கொத்தனார் said...

இரண்டாம் பரிசு வாங்க வாழ்த்துகள்!!

அபி அப்பா, நுண்ணரசியல் என்பதை நுண்ணறிவியல் (எழுத்துப் பிழை வேற!) எனச் சொல்லும் உள்குத்து சூப்பர்!

Geetha Sambasivam said...

//ஜீவன் பரமாத்மாவிலே அடக்கம்னு அத்வைதம் சொல்லுது. (எல்லாம் இந்த கேஆரெஸ் அண்ணன் பெங்களூர் விஜிட்டின் மகிமை.)//

இல்லைனா நமக்கு ஒண்ணும் தெரியாதுனு ஒத்துண்டதுக்கு நன்றி அம்பி! உண்மையை ஒப்புக்கறதுக்கும் தைரியம் வேண்டும். :P

Geetha Sambasivam said...

அம்பி! ஆனா இன்னிக்கு சாம்பார்ல உப்புதாண்டீய்:-))

ரிப்பீஈஈஈஈஈட்டேஏஏஏஏஏஏ

ambi said...

@mgnithi, வாப்பா! இப்படி சபைல என் மானத்தை வாங்க தான் பஷ்ட்டா வந்தியா? :p

கொஞ்சம் தமிழ்ல கமண்ட் போட கூடாதா? :))

@senshi, நன்றி சென்ஷி, உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். :)

//பளிச்சுன்னு தெரியுது உங்க நுன்னறிவியல்.//

@abiappa, உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? அடடா! சும்மா ரெண்டு ரெண்டா அள்ளி விடறீங்களே! :D

உங்க ரெண்டு( நடராஜ்) செம க்யூட். சுத்தி போடுங்க. :)

@nivi, ஆமா நிவி அக்கா, வீட்ல செம பூசை அன்னிக்கு. நல்லா இருங்க. :))

@sathya, இப்போதைக்கு எதுவும் ப்ரச்சனை இல்லை :))

//உப்புல சாம்பார்னு ஆகிடும்னு ஒரு பயமா?
//
@vettipayal, கரக்ட்டா சொன்னீங்க அண்னே! வீட்டுக்கு வீடு வாசப்படி. :P

@kittu, கிட்டு மாமா, சும்மா மழை மாதிரி பொழியறீங்களே! பாரட்டுக்கு மிக்க நன்னி. :))

//இரண்டாம் பரிசு வாங்க வாழ்த்துகள்!!
//
கொத்ஸ், இந்த குசும்பு தானே வேணாம்னு சொல்றது. :P

@geetha madam, அந்த தைரியம் உங்களுக்கு ஏன் இல்லை?னு தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. :P

தமிழ் said...

இரண்டு பின்னால் கூட
இவ்வளவு வரலாறா!!!!!!!!!!