எந்த மொழி பாட்டானாலும் அந்த பாடல் ஹிட்டாக மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்னு அந்த பாடல் வரிகள், இரண்டு பாடல் வரிகளை அமுக்காத இசை, மூணு அந்த பாடலை பாடிய பாடகரின் தனிதிறமை. நான்காவதாய் படமாக்கிய விதத்தையும், அதில் நடித்த நடிக/ நடிகையரின் திறமையை சேர்த்து கொள்ளலாம், என்றாலும் அது இரண்டாம் பட்சமே!
என்ன தான் கவிஞர் சிறப்பாக எழுதினாலும், இசை கருவிகள் அந்த வரிகளை அமுக்கி விட்டால் அந்த பாடலின் கதி கோவில் திருவிழாவில் கொட்டு சத்தத்துக்கு இடையில் வில்லுபாட்டு மாதிரி தான். இதற்க்கு சரியான உதாரணம் சிவாஜியில் வரும் ஒரு கூடை சன் லைட் பாட்டு. அதில் அந்த பாடகர் ஒரு வாரமாய் ரெண்டுக்கு வராமல் நயம் மலவாழபழம் நான்கை உள்ள தள்ளி விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீரையும் குடித்து விட்டு டாய்லட்டில் பிரம்மபிரயத்தனம் செய்யும் போது ஏ.ஆர்.ரஹ்மான் ரீரெக்கார்டிங்க் வைத்திருப்பார் போலும். ரொம்பவே மெனக்கெட்டிருப்பார் பாவம்.
பிற மாநில பாடகர்களை வைத்து தமிழ்பாடல்களை பாட வைக்கும் போது இசை அமைப்பாளர்கள் சில தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும். யேசுதாஸ், சித்ரா, ஹரிஹரன்(?) போன்ற பிற மா நில பாடகர்கள் தம் கடும் உழைப்பால் தமிழர் மத்தியில் நீங்கா இடம் பெற்றுவிட்டனர். இந்த வரிசையில் ஷ்ரேயா கோசல், சாதனா சர்கம் போன்றோரும் மிக வேகமாக முன்னேறி வருகிறார்கள்.
இப்போ நம் பதிவின் நாயகன், உதித் நாராயண் பத்தி சில வரிகள் சொல்லியே ஆகனும். பல மொழிகளிலும், அவரது தாய்மொழியாம் போஜ் புரியிலும் பல பாடல்கள் பாடி உள்ளார். "மெஹந்தி ரஹா கே ரஹ்னா"வையும், லகானில் வரும் "மிட்டுவா! அரே மிட்டுவா!"வையும் யாராலும் மறக்க முடியாது. எல்லாம் சரி தான்.
இந்த சப்பாத்தி தேசகாரங்களுக்கு 'ச' 'ஸ'காரங்களில் உள்ள வித்யாசம் அவ்ளோ லேசில் வராது. டென் தெளசண்ட் என நாம் சொன்னால் டென் தெளஜண்ட் என அவர்கள் உச்சரிப்பார்கள். என் மீது நம்பிக்கை இல்லையானால் உங்க ஆபிஸில் இருக்கும் ஒரு சப்பாத்தியிடம் (பிகராய் இருத்தல் சால சிறந்தது) வாயை கிண்டி பாருங்கள்.
நமது அண்ணன் உதித் தென்னிந்திய மொழி அனைத்திலும் இப்போ சக்கை போடு போடுகிறார். ரன் படத்தில், "காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே!" என இவரின் பாடலை கேட்டு புளங்காகிதமடைந்த தமிழர்கள் ஏராளம். சரி விடுங்க, மாதவனே அப்படி தான் தமிழ் பேசறார், அதான் உதித்தை பாட வெச்ருகாங்க, இல்லையா?னு சமாதானம் சொல்லி கொண்டேன்.
இந்த ஹீரோக்கள் தண்ணீயடித்து விட்டு "ஏரோப்ளேன் பறக்குது பார் மேல"னு ஒரு தத்துவ பாடல் பாடுவார்கள் நம் தமிழ் சினிமாவில். அந்த பாடல்களுக்கு கூப்டுடா உதித் அண்ணனை!னு கோடம்பாக்கம் சிவப்பு கம்பளம் விரித்தது. பின் மெல்ல மெல்ல "சோனியா! சோனியா சொக்க வைக்கும் சோனியா" என டூயட் எல்லாம் உதித் குரலில் நம் ஹீரோக்கள் பாடி ஆடினார்கள். இப்போ என்னடானா மெலடில கூட உதித் அண்ணன்,ஏழரை கட்டையில் பாட ஆரம்பித்து விட்டார்.
எந்த பாடலுக்கு யாரை பாட வைத்தால் அந்த பாடல் சிறப்பாக அமையும்? என திறமையான இசையமைப்பாளருக்கு கணிக்க தெரிய வேண்டும். இந்த விஷயத்தில் எனக்கு தெரிந்து ராஜா, ரகுமானை விட விஞ்சி நிற்கிறார் என கருதுகிறேன். (ரகுமான் ரசிகர்கள் என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப நேரிடலாம்). :)
பல புதிய குரல்களை நமக்கு அறிமுகபடுத்தியதில் ரகுமான் கிங்க் தான். ஆனால் சிவாஜியின் சஹானாவை உதித் அண்ணனுக்கு தாரை வார்த்தது எல்லாம் டூ மச்சோ மச்! ஆமா!
இதே பாடலை, ஒரு மது பாலகிருஷ்ணனோ, ஷ்ரிராம் பார்த்தசாரதிக்கோ ஹரிஷ் ராகவேந்திராவுக்கோ குடுத்து இருந்தால் பின்னி பெடலெடுத்து இருப்பார்கள். தமிழில் தான் உதித் அண்ணன் தாண்டவமாடுகிறார் என பார்த்தால் இங்கு கன்னடத்திலும் அண்ணன் பட்டய கிளப்புகிறார் என கன்னட கண்மணிகள் புலம்புகிறார்கள்.
பள்ளி காலங்களில் கோனார் தமிழ் உரைகளை படிக்காத மாணவர்களே இருக்க முடியாது. அதுபோல உதித் நாராயண் தமிழ் உரைனு யாரேனும் கைடு போட்டால் கொஞ்சம் உபயோகமாய் இருக்கும். திரைபடங்களுக்கு தமிழில் பெயர் வைத்து வரிவிலக்கு வாங்குபவர்கள் நல்ல தமிழ் பாடல் உச்சரிப்புக்களில் அசட்டையாக இருப்பது ஏனோ? எனபது புரியாத புதிராகவே உள்ளது.
********************************************************
இந்த இடுகையும் ரெண்டு போட்டிக்கு தான்.
40 comments:
"அதில் அந்த பாடகர் ஒரு வாரமாய் ரெண்டுக்கு வராமல் நயம் மலவாழபழம் நான்கை உள்ள தள்ளி விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீரையும் குடித்து விட்டு டாய்லட்டில் பிரம்மபிரயத்தனம் செய்யும் போது ஏ.ஆர்.ரஹ்மான் ரீரெக்கார்டிங்க் வைத்திருப்பார் போலும். ரொம்பவே மெனக்கெட்டிருப்பார் பாவம்."
ஏய், என்னையா இது. சிரிச்சு சிரிச்சு
வகுறு வலிக்குது.
பிதாமகன்ல சேட்டன்கிட்ட சூர்யா எப்பிடிய்யா நீங்க மட்டும் லம்பு லம்பா அடிக்கிறீங்கன்னு கேப்பாரு.அதுக்கு சேட்டன் நா தமிழ தப்பு தப்பா பேசுது.
மக்கள் அல்லாரும் என்னைய நம்புது அப்புடிம்பாரு.
அதுமாதிரி நம்மாளுகள எங்கிட்டு போனாலும் செருப்பக் கொண்டே அடிக்கிறாய்ங்க.இவிய்ங்க என்னடான்ன
வெளங்காத வாயனுக்கு வெண்ணைய
போட்டு உருவுறாய்ங்க.
0 கமெண்ட்னு சொல்லுது. (உதித்) என்கேயே கேட்ட மாதிரி இருக்கென்னு படிச்சேன்.
உண்மையிலேயே சஹானா பாடலை குதறிவிட்டார்.
நமது இசையமைப்பாளர்கள் ஏன் தான் இவரை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்களோ....
அத்தனையும் சத்தியமான வாக்கியமுங்க. நீங்க சொல்லிடீங்க... நான் சொல்ல தவிக்கிறேன்.இதெல்லாம் கேட்க போன பிறப்பில் என்ன?? செய்தோமோ??
//"காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே!"//
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க???
அவர் "பர்வாயில்லய்"னு தானே பாடினார்...
Oh My god!Nalla solteenga ponga! Avar runla padina "Paruvaillai" enna famous ayiduchu namma oorla!
எம்.எஸ்.வி-ய வெச்சு, ஒழுங்கா உச்சரிக்கர வரைக்கும் காத திருகிட்டே சொல்லலாம்.
ஒரு வேளை அரிசிய மெல்ரதுலயும், கோதுமைய மெல்ரதுலயும் நாக்கு வேறவேற மாதிரி டெவலப் ஆகுமோ?
குருவி பாட்டைக் கேட்கலீங்களா?
இந்தியில சரியான உச்சரிப்பு இல்லின்னா பாடகருக்கு வாய்ப்பு இல்லீங்கோ. ஆனா நம்மூருல இந்த மாதிரி குழந்தைத்தனமான (???) உச்சரிப்புக்குத்தான் டிமாண்டு!!!!
உதித் நாராயண் தமிழை உதுத்த நாராயண். அவரு பாடலைன்னு இந்த இசையமைப்பாளர்களுக்கு வருத்தமோ வருத்தம் போல. கூப்டு நம்ம உயிரை வாங்குறாங்க.
// வெட்டிப்பயல் said...
//"காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே!"//
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க???
அவர் "பர்வாயில்லய்"னு தானே பாடினார்... //
ஓ அப்படியா... நாங்கூட அந்தப் பொண்ணு முகத்துல பருவாயில்லைன்னு பாடுனாருன்னுல்ல நெனச்சேன்...
// Manoj said...
எம்.எஸ்.வி-ய வெச்சு, ஒழுங்கா உச்சரிக்கர வரைக்கும் காத திருகிட்டே சொல்லலாம். //
மனோஜ், எம்.எஸ்.வி தமிழ் வராதுங்குற ஒரே காரணத்துனாலயே லதா மங்கேஷ்கரைத் தமிழில் பாட வைக்கலையாம். உச்சரிப்பு வராதுன்னு சொல்லீட்டாராம். அதே மாதிரி கண்டசாலாவை "உலகே மாயம் வாழ்வே மாயம்"னு பாட வெச்சாரு. அவரு வால்வே மாயம்னு பாடுனதால அடுத்தடுத்து வாய்ப்புக் குடுக்கலையாம். இது விஷயமா தொடக்ககாலத்துல ஏசுதாஸ் கிட்டயும் சண்டை போட்டிருக்காராம். அது சரி.... மலையாளியாப் பொறந்திருந்தாலும் தமிழுக்கு அவரு எந்தக் குறையும் வைக்கலை. தமிழ் நாட்டுலயே பொறந்தவங்கதானே தமிழுக்கு குறை வைக்கிறதெல்லாம்.
ரெண்டும் ரெண்டு துருவம். அதான் இழு இழுன்னு இழுக்குது.
யாரும் கோச்சுக்கலைன்னா இப்படிச் சொல்லலாம்.
'தர்ப்பையை நாக்குலே வச்சுக் கொளுத்தணும்.'
hmm! :)
////"காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே!"//
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க???
அவர் "பர்வாயில்லய்"னு தானே பாடினார்...//
repeate!
hmm! :)
////"காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே!"//
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க???
அவர் "பர்வாயில்லய்"னு தானே பாடினார்...//
repeate!
//காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே//
சாரி அம்பி அண்ணே.. அது பரவாயில்லே இல்லை.. "பருவாயில்லே"...
அப்புறம் அந்த ஏரோப்ளேன் பாட்டு.. அதுல பறக்குது பார்னு சொல்ல மாட்டான்.. பறக்குது "பரு மேலே"னு சொல்வான்.. அப்டி என்னதான் அவனுக்கு அந்த பரு மெல கண்ணோ?
அப்படியே இதை பாருங்க. எவ்ளோ அழகான வரிகள். சும்மா கடிச்சி துப்பி இருப்பான்.
இந்த டுபாக்கூர் பத்தி கெட்ட கெட்ட வார்த்தைல திட்டி ஒரு பதிவு போட ஆசை... ஆளும் இவன் உச்சரிப்பும்.. கர்மம் கர்மம்.. மருத்துவர் ஐயா எப்டிதான் இவன தமிழகத்துல அனுமதிக்கிறாரோ.
இப்போ குருவியில் கூட உதித் ஒரு பாடலைக் கடித்து குதறியுள்ளார். திருந்தமாட்டார்கள் இவர்கள்.
என்னைப்போல பல பேருக்கும், பாடகர்கள் சரியாக தமிழில் உச்சரிக்காதது வருத்தமே என்று தெரிகிறது!! அதுவும் உதித் நாராயணன் எல்லாம் ரொம்ப ஓவர்.
குஷி படத்தில் "யார் சொன்னதோ" என்று ஒரு பாட்டு வரும்,அதில் ஒரு வரி
"கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக்கிடக்கும்,
சின்ன உளி தட்டித்தட்டி எழுப்பும்"
அதில் எழுப்பும் எனும் வார்த்தையை பாடகி எலுப்பும் எலுப்பும் என்று உச்சரித்து கடுப்பேத்தி விடுவார்!! மற்றபடி நல்ல பாடல் அது!!ஆனால் இதனாலேயே எனக்கு அந்த பாடலைக்கேட்டாலே எரிச்சல் வரும்.
அதுவும் படத்தில் ஜோதிகா எலுப்பும் என்று சொல்லுவது போல் நாக்கை அசைத்து நடித்து என் எரிச்சலை முழுமையாக்கி விடுவார்...
என்னக்கொடுமை சார் இது!! :-(
BTW
////"காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே!"//
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க???
அவர் "பர்வாயில்லய்"னு தானே பாடினார்.../////
இதுக்கு ஒரு ரிப்பீட்டேய்.....
அன்பேசிவம் படத்தில,எலே மச்சி மச்சி பாட்டை விட்டு விட்டீங்களே:)
அதில,
''நீ வாது தக்க ரொம்ப கெட்டிக்காரான்''
அப்படீங்கற லைனை அப்புறமா புரிஞ்சு கொண்டேன்.
'' நீ வாதத்துக்கு கெட்டிக்காரன்னு:)''
:);)))))))))))))))))0
சூப்பர்.
@வாங்க ஒரிஜினல் மனிதன், கரக்ட்டா சொன்னீங்க அண்ணே! ஏன் தான் நம்ம இயக்குனர்கள் இவங்க பின்னாடி ஓடறாங்களோ? :(
@சாமான்யன், அவரு பெயரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல. :p
//உண்மையிலேயே சஹானா பாடலை குதறிவிட்டார்.
//
@anony, உண்மை! உண்மை.
உங்க பெயரை சொல்லி இருக்கலாம் இல்ல அண்ணே/அக்கா? :))
//நீங்க சொல்லிடீங்க... நான் சொல்ல தவிக்கிறேன்//
@yogan, அட இதுல என்ன தவிப்பு? நீங்களும் ஒரு பதிவா போடுங்க. :))
//அவர் "பர்வாயில்லய்"னு தானே பாடினார்...
//
@vetti, அட ஆமா! திருத்தியதற்க்கு(கஷ்ட காலம்) மிக்க நன்னி பாலாஜி :))
Ramya ramani, ஆமா ரம்யா, அந்த பாடல் ரெம்ப பேமஸ்,
என்ன தங்க்லிஷ்ல கமண்ட் போடறீங்க? :))
//ஒழுங்கா உச்சரிக்கர வரைக்கும் காத திருகிட்டே சொல்லலாம்.
//
@manoj, திருகினா மட்டும் போதாதுனு எனக்கு தோணுது மனோஜ். :D
ஹிந்தியின் உச்சரிப்புகள் வேற, நம்மது வேற. ழ நமக்கு மட்டுமே சொந்தம். :))
@ila, குருவியா? பெங்களூர்ல பறக்கலையே அது. :))
ரொம்ப கரக்ட்டா சொன்னீங்க சின்ன அம்மணி :)
@ji.raa, பிலிம் நியூஸ் ஆனந்தன் ரேஞ்சுக்கு பல தகவல்களை அளித்த ஜி.ரா அண்ணனுக்கு ஒரு ஓ! போடுங்க பா எல்லோரும். :))
@tulasi teacher, டீச்சரே இப்படி சொன்னா எப்படி? :P
யானை படம் எல்லாம் போட்டேன், நீங்க வரலை, இப்ப வந்ததுக்கு ரெம்ப நன்னி. :)
nijamave ella music directorum sindhikka vendiya point.padal varigalayum adhan arthaathiyum padaga padagiyarukku puriya vaikka vendiyathu music director cum lyricist kadamai.rerecordingum advance tech irukkum kalathil "paruvaillayai anumathikraargal enral yaarai nondhu kolvathu!!
thamizhai thooku medayil ettravendu enru pirandhirukkum jenmangalai ennna solvathu!!!thalai
ezuthu!!!!!!!
nivi.
சில கேள்விகள்...
தமிழ் சரியா உச்சரித்து ஒரு பாடகர் பாடினா தமிழ் வளருமா?
சன் லைட் மூன் லைட் பாட்டு எழுதுறவங்க எல்லாம் எந்த ஊரு?
தமிழ் சினிமா தமிழ் மொழிய அழிக்க முடியுமா?
ஒரு படம் முழுக்க தமிழ் வசனம் தமிழ் சொற்கள் உள்ள பாட்டுன்னு
எடுத்தா அதை பார்க்க நமக்கு பொறுமை இருக்கா?
தமிழ் நடிகர்கள் நடிகைகள் பண்ணாத தமிழ் கொலையா?
டிஸ்கி : நான் உதித் ரசிகன் இல்லை இல்லை இல்லை
//@வாங்க ஒரிஜினல் மனிதன், கரக்ட்டா சொன்னீங்க அண்ணே! ஏன் தான் நம்ம இயக்குனர்கள் இவங்க பின்னாடி ஓடறாங்களோ? :(//
அம்பி,
உதுத்த நாராயணன் விஷயத்துல நீங்க சொல்றது தான் என் கருத்தும். இப்பல்லாம் அவர் குரலைக் கேட்டாலே எரிச்சலாத் தான் இருக்கு. ஆனா வேற்று மொழி பாடகர்கள்ல நல்லா பாடறவங்களும் இருக்காங்க...உதாரணத்துக்கு சோனு நிகம். பார்த்தேன் ரசித்தேன் படத்துல பாடிருக்காரு கேட்டுப் பாருங்க...அதே மாதிரி மும்பை எக்ஸ்பிரஸ்ல 'பூ பூத்தது' பாட்டு. சில பேர் முயற்சி எடுத்து உச்சரிப்பு, மொழி எல்லாத்தையும் சரி செஞ்சிக்கிட்டு பாடறாங்க. உதுத்தவர் அந்த முயற்சியே எடுக்கறதில்ல போல.
குருவி படத்துல சுனிதி சௌகான் சோழி, சுழட்டின்னு எல்லாம் நல்ல ஸ்பஷ்டமாத் தான் பாடிருக்காங்க.
:)
@dreamz, ட்ரீம்ஸ், ரிப்பீட்டு தவிரவும் நிறைய வார்த்தைகள் இருக்குபா :P
//இந்த டுபாக்கூர் பத்தி கெட்ட கெட்ட வார்த்தைல திட்டி ஒரு பதிவு போட ஆசை... //
@sanjai, நோ! நோ! சஞ்சய் (ராமசாமி) :)
அவரு ஹிந்தில, அவரு தாய்மொழில பெரிய ஆளு தான், என்ன கொஞ்சம் இங்க முயற்சி பண்ணனும்.
//இப்போ குருவியில் கூட உதித் ஒரு பாடலைக் கடித்து குதறியுள்ளார். //
நான் இன்னும் கேக்கலை வந்தியதேவன். வருகைக்கு மிக்க நன்னி! :)
//பாடகி எலுப்பும் எலுப்பும் என்று உச்சரித்து கடுப்பேத்தி விடுவார்!! மற்றபடி நல்ல பாடல் அது!!//
ஆமா! சிவிஆர். நானும் நோட் பண்ணி இருக்கேன், ஜோவை இல்ல, அந்த வரிகளின் உச்சரிப்பை. :P
சரி, உங்களுக்கு அந்த பாட்டு பிடிக்கறத்துக்கு வேற ஏதாவது காரணம் இருக்கா? :D
//''நீ வாது தக்க ரொம்ப கெட்டிக்காரான்''
அப்படீங்கற லைனை அப்புறமா புரிஞ்சு கொண்டேன்.
//
@valli madam, வாவ்! சூப்பர், இவ்ளோ உன்னிப்பா கவனிச்சு இருக்கீங்களே! சூப்பர். :))
ரொம்ப கரக்ட்டா சொன்னீங்க நிவி. என்ன ஒரு பொறுப்பா பதில் போட்டு இருக்கீங்க நிவி. Hats off. :))
IF You don't mind, தமிழ்ல கமண்ட் போட உதவி வேணுமா?
//தமிழ் சரியா உச்சரித்து ஒரு பாடகர் பாடினா தமிழ் வளருமா?
//
@mgnithi, வளருமானு தெரியாது ஆனா தமிழ் இன்னும் கொஞ்ச நாள் மக்கள் மத்தியில் புழங்கும். :))
//சன் லைட் மூன் லைட் பாட்டு எழுதுறவங்க எல்லாம் எந்த ஊரு?
//
ஒவ்வொரு பூக்களுமே! எழுதிய அதே கைகள் தான் இந்த பாடலையும் எழுதியது. என்ன செய்ய? டெஸ்ட் மேட்ச்சும் வேணும், 20-20 cricket வேணுமே மக்களுக்கு. :)
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Computador, I hope you enjoy. The address is http://computador-brasil.blogspot.com. A hug.
//தமிழ் சினிமா தமிழ் மொழிய அழிக்க முடியுமா?//
@mgnithi, தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது!னு ரிப்போர்ட் சொல்லுது.
அதுக்கு இப்போதைய தமிழ் சினிமாக்களும் ஒரு வகையில் காரணமே!னு நான் நினைக்கிறேன்.
//ஒரு படம் முழுக்க தமிழ் வசனம் தமிழ் சொற்கள் உள்ள பாட்டுன்னு
எடுத்தா அதை பார்க்க நமக்கு பொறுமை இருக்கா?//
1) என்னடி முனியம்மா உன் கண்ணுல மை! இன்னமும் மேடையில் சக்கை போடு போடுகிறது.
2) நறுமுகையே! நறுமுகையே!, கல்யாண தேனிலா, ஆகாய வெண்ணிலாவே, தரை மீது வந்தேனோ, நிற்பதுவே! நடப்பதுவே! இவை எல்லாம் முழுதும் தமிழ் வரிகள் உள்ள பாடல்களே!
//தமிழ் நடிகர்கள் நடிகைகள் பண்ணாத தமிழ் கொலையா?//
இப்ப எங்க தமிழ் நடிக/ நடிகையர்கள்? எல்லாம் மும்பை, கேரளா இம்போர்ட் தானே? ( நயந்தாரா, கோபிகா குட்டி என்னை மன்னிக்க கடவது)
ஆனா படத்துல அவங்களுக்கு டப்பிங்க் குடுத்து தமிழை காப்பாத்தி விடரோம் இல்ல.
இப்ப ப்ரச்சனையே தமிழ் உச்சரிப்புல தான். உங்க பெயரை எம்ஜி நிதி என்பதற்க்கு பதில் எம்.காந்திமதினு வாசிச்சா உங்களுக்கு எவ்ளோ கடுப்பா இருக்கும்? :P (no offense pls)
நம்மூர்ல அதே நல்ல தமிழ் பாடகர்கள் இருக்கும் போது கனி இருக்க காய் கவர்வதேன்? என்பதே என் கேள்வி!
//டிஸ்கி : நான் உதித் ரசிகன் இல்லை இல்லை இல்லை
//
ரசிகனு தான் சொல்லி பாருங்களேன், வீட்டுக்கு ஆட்டோ இல்ல, ஜாமான் செட்டோட லாரியே அனுப்ப ரெடியா இருக்கோம். :))
//ஆனா வேற்று மொழி பாடகர்கள்ல நல்லா பாடறவங்களும் இருக்காங்க...//
தல, நீங்க சொன்னா அப்பீலே இல்லீங்கோ. :))
*ahem, ஷ்ரேயா கோசலை மனசுல வெச்சு தானே இந்த ஸ்டேட்மெண்ட்? இப்பவே அண்ணிக்கு போன் போட்டு சொல்லிடறேன். :P
//சோனு நிகம். பார்த்தேன் ரசித்தேன் படத்துல பாடிருக்காரு கேட்டுப் பாருங்க//
உண்மை, உண்மை.
//This post is likeable, and your blog is very interesting, congratulations //
@computadors, Thanks alot :))
i wonder how do you manage to read a post which is in tamil language. :D
/குருவி பாட்டைக் கேட்கலீங்களா?/
'சொழட்டி போட்ட சோழி போல சொழண்டு நின்னேளா'ன்னு சுநிதி சௌஹான் எவ்ளோ அழகா சொல்றாங்க. எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாதான் இருந்தது.
//"காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே!" //
அது ப'ரு'வாயில்லே :-)
//@computadors, Thanks alot :))//
un kusumbukku oru alavey illayaa
:-)
அம்மாச்சி அவர்களே,
//எம்.எஸ்.வி-ய வெச்சு, ஒழுங்கா உச்சரிக்கர வரைக்கும் காத திருகிட்டே சொல்லலாம். //
திரு.மனோஜ் சொன்ன மாதிரி சென்ற ஞாயிறு அன்று கோவை நிகழ்ச்சியில் ஒரு பாடலை கோவை முரளி ஒரு பாடலில் ஒரு லைன் தப்பா பாடிட்டார்ன்னு நினக்கிறேன். உடனே நடுவுலே எம்.எஸ்.வி சார் ஒரு கத்து கத்துவார் கேளூங்க (ஆடியொ கோப்பு பாடும் நிலா பதிவில் இருக்கு) மனுசன் ஆடிப்போய்ட்டார் ஒரே ஒரு பாட்டை எம்.எஸ்.வியிடம் உதித் அண்ணாவை உடனும் துண்ட காணோம் துணியை காணோம் ஓட்டம் எடுத்துடுவார்.
இந்தப் பதிவு "பருவாயில்லை"!
@syam:
Naatamaikaaraiya ... eppa postu poda poreenga?
அது ரொம்ப சிம்ப்பிள். அந்தக் காலத்தில பாடல்பதிவு பாடகரோடு இசைக்கருவிகளையும் இணைத்து ஒரே முறை பதிவு செய்வார்கள். இசையமைப்பாளரும் அருகிலிருந்து கவனித்து திருத்தி பதிவு செய்வார்கள். இப்போதெல்லாம் 'ட்ராக்'ல பாடுறது ஒரு லோக்கல் பாடகரா இருப்பார். பின்னர் இந்த 'ஸ்டார்' பாடகர்கள் எப்போது நேரம் கிடைக்குதோ அப்போது பாடுவார்கள். அவர்கள் என்ன தமிழில் எழுதி வைத்தா பாடுகிறார்கள்? ஆங்கிலத்தில் எழுதி என்ன தோணுதோ அப்படியே பாடுவார்கள் என நினைக்கிறேன். 'ட்ராக்'ல இருப்பது சரியான உச்சரிப்புடன் பாடியிருந்தாலும் அதையொட்டியே இவர்களும் சரியாக பாடுவார்கள் என எதிர்பார்க்கமுடியாது. இப்போதேல்லாம், ரஹ்மான் பாடல் ட்ராக்கை பாடகருக்கு அனுப்பி விட்டால் அவர் மும்பையிலேயே பாடி அனுப்பிவிடுவார்களாம். இந்த லட்சணத்தில் யார் அவர்களை திருத்திப் பாடவைப்பது? இசையமிப்பாளர்களுகென்ன, கல்லா கட்டிவிட்டு நடையைக் கட்டவேண்டியதுதான். இந்த லட்சணத்தில் ரசிகர்கள் விரும்புவதால்தான் வேற்றுமொழி பாடகர்களை பாடவைக்கிறோம் என்ற சப்பைக்கட்டு வேறு. இதற்கெல்லாம் சரியான எதிர்ப்பு இம்மாதிரி பாடல்களைப் எல்லோரும் புறக்கணிப்பதுதான். சினிமாப் பித்துப் பிடித்த தமிழகத்தில் அதெல்லாம் நடக்கும்ண்ணு நெனக்கிறீங்க?
http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_25.html
என்னங்க இது, தமிழ்நாட்டில தமிழ எத்தன பேரு சரியா பேசுறாங்க ன்னு முதல்ல சொல்லுங்க. இப்பல்லாம் 'டமிள்' (மன்னிக்கனும் தமிழத்தான் இப்படி எழுதியிருக்கேன்), பேசுறவங்களுக்குத்தான் மரியாதையே கிடைக்குது.
சினிமா வேற, வாழ்க்கை வேறயா என்ன?
தமிழன் கலாச்சாரம் அடிப்படையிலேயே மாறிட்டு வருது. உணவு, உடை, உறைவிடம் இதுல ஏதாவது ஒன்னுல தமிழின் சாரம், உண்மையான தமிழின் அடையாளம் திரியாமல் இருக்கிறதா?
ஒரு நாளும் கிழமையுன்னா, வீட்டில தொலைக்காட்சிப் பெட்டியத் திறக்க முடியல்ல. எல்லாம் திரைப்பட நடிகர், நடிகையர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என்று திரையுலகத்தினரே அணிவகுத்து வருகின்றனர்.இதுவே ஒரு பெரிய கொடுமை. அதைவிட பெரிய கொடுமை என்னாடா ன்னா, இவங்கள யாருமே தமிழ ஒழுங்கா உச்சரிக்கிறது இல்ல.
'ரசிகர்கள் என்ன கேட்குதூஉ, அதை நான் செய்யுதூஉ'என்று அளபெடைகள் ல்லாம் அதுல படையெடுக்கும். அதுக்காக யாராவது பொங்கல், தீபாவளி ன்னா தொலைக்காட்சிப் பெட்டியைத் திறக்காம இருக்காங்களா? என்னையும் சேர்த்துதான்.
விருந்தினர்களோட பேசி அளவளாவுறத விட, இவங்களோட இந்த அளபெடைத் தமிழத்தான், வாயைத் திறந்துட்டுப் பாக்குறோம். அதனாலதான், ஓ! இப்படி பண்ணினாதான் மக்களுக்குப் புடிக்குது போலன்னு திரையுலக தில்லாலங்கடிகள் அந்த வேற்று மொழி வித்துவான்களை, தலைவாழையிலை போட்டு வரவேற்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இது வெறும் வியாபாரம் மட்டும்தான்.
அந்த பாட்டை நான் இன்னும் கேக்கலை மனோஜ்.
@நாட்டாமை, பதிவு போடற நெனப்பே இல்லையா? :p
வாங்க கோவை ரவி, ஜெயா டிவிலயும் ஒரு நிகழ்ச்சில எம்.எஸ்.வி செமையா காச்சிட்டார்.
பகிந்தமைக்கு மிக்க நன்றி. :)
மிக்க நன்றி தருமி சார் :))
@mgnithi, நல்லா கேளுங்க நாட்டாமைய! :))
@indian, கரக்ட்டா சொன்னீண்க்க இந்தியன். இந்த டிராக் சிஸ்டம் ஒரு வகைல நல்லது பண்ணாலும், இசை அமைப்பாளார்கள் தான் பொறுப்பு எடுத்துகனும்.
@geetha madam, உங்க வலைசர பதிவை படிச்சாச்சு. :)
//தமிழ்நாட்டில தமிழ எத்தன பேரு சரியா பேசுறாங்க ன்னு முதல்ல சொல்லுங்க//
அதானே! பெயர் பலகைல எல்லாம் தமிங்கலம் தான் தாண்டவமாடுது.
என்ன இருந்தாலும் நீங்க நமீதாவை இப்படி சொல்லி இருக்க வேணாம். பாவம், பச்ச மண்ணு அது! :p
முதல் வருகைக்கு நன்றி தமிழரசன்.
/
தமிழில் தான் உதித் அண்ணன் தாண்டவமாடுகிறார் என பார்த்தால் இங்கு கன்னடத்திலும் அண்ணன் பட்டய கிளப்புகிறார் என கன்னட கண்மணிகள் புலம்புகிறார்கள்.
/
கலக்கல்
அந்த கொடுமைய சில சமயம் கேட்பதுண்டு!!!!
SanJai said...
அப்புறம் அந்த ஏரோப்ளேன் பாட்டு.. அதுல பறக்குது பார்னு சொல்ல மாட்டான்.. பறக்குது "பரு மேலே"னு சொல்வான்.. அப்டி என்னதான் அவனுக்கு அந்த பரு மெல கண்ணோ?
அப்படியே இதை பாருங்க. எவ்ளோ அழகான வரிகள். சும்மா கடிச்சி துப்பி இருப்பான்.
/
இப்பதான் இந்த எழவை பாத்தேன்
:(((((((((((
//அதில் அந்த பாடகர் ஒரு வாரமாய் ரெண்டுக்கு வராமல் நயம் மலவாழபழம் நான்கை உள்ள தள்ளி விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீரையும் குடித்து விட்டு டாய்லட்டில் பிரம்மபிரயத்தனம் செய்யும் போது ஏ.ஆர்.ரஹ்மான் ரீரெக்கார்டிங்க் வைத்திருப்பார் போலும். ரொம்பவே மெனக்கெட்டிருப்பார் பாவம்."//
rotfl :) ulti vambi..kalasal post
~gils
Post a Comment