Thursday, April 17, 2008

ரெட்டை ஜடை வயசு - II

Part-I

மேக்கப் என்னவோ திருவள்ளுவர் மாதிரி போட்டாச்சு. நான் நினைத்த அனிமேஷனை எப்படி கொண்டு வருவது? என ஒரே யோசனை. பரமார்த்த குரு தன் சிஷ்ய புள்ளைகளிடன் யோசனை கேட்பது மாதிரி என் விசுவாச மாணவர்களிடமே மேட்டரை விளக்கினேன். ஒரு ஊஞ்சலில் வள்ளுவரை உக்காத்தி திரைக்கு பின்னாடி இருந்து இயக்கலாம்!னு சொல்றான் ஒருத்தன், வள்ளுவரையே கயிறு கட்டி மேடைக்கு மேலிருந்து தூக்கலாம்னு சொல்றான் இன்னொருத்தன். ஒன்னும் சரி வரலை. என் நோக்கம் எல்லாம், பார்வையாளருக்கு நாம் எப்படி வள்ளுவரை இயக்குகிறோம்? என்பது தெரியவே கூடாது.

அப்ப தான் கிஷ்கிந்தா வானர சேனையில் ஜாம்பவான் மாதிரி ஒருத்தன் பளிச்சுனு ஒரு ஐடியா குடுத்தான். கார்களை தூக்க ஜாக்கி பயன்படுத்துவோம் இல்லையா? அத மாதிரி ஏதாவது?னு அவன் சொல்ல, எனக்குள் வள்ளுவர் சும்மா ஜிவ்வுனு மேடையில் எழும்ப துவங்கினார்.

போட்டி நாளும் வந்தது. மேக்கப் எல்லாம் கச்சிதமாக அமைந்தது.கையில் ஏற்கனவே எழுதி வைத்த பனை ஓலை சுவடி, திருக்குறள், எழுத்தாணி எல்லாம் குடுத்து வெச்சாச்சு. மேடையில் வழக்கம் போல காந்தி வந்தார், அன்னை தெரஸா, இந்திரா காந்தி, ஆதி வாசி எல்லாம் வந்து போனார்கள்.

தீடிரென மொத்த அரங்க விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன. பவர் கட் என எல்லோரும் நினைத்திருக்கும் வேளையில், மேடையில் வள்ளுவர் தலைக்கு பின்னாடி ஒரு ஓளி வட்டம் தெரிந்தது. மேடை முழுக்க சாம்பிராணி புகை மூட்டம். பிண்னணியில் கவிதாலயாவின் "அகர முத எழுத்தெல்லாம்" பாடல் ஓடிக் கொண்டே இருந்தது. தீடிரென வள்ளுவர் உட்கார்ந்திருந்த மரபலகை மெல்ல இஞ்ச் இஞ்சாக எழும்ப துவங்கியது.

மரபலகையின் மேல் ஒரு சால்வை போட்டு வள்ளுவர் அமர்ந்து இருந்ததால் பலகை எப்படி இயக்கபடுகிறது? என பாக்கறவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. வள்ளுவரின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மிக பெரிய திரை மறைவில் இருந்து பரமார்த்த குருவின் சிஷ்யர்கள் இருவர் கார் ஜாக்கியை பதமாக இயக்கினார்கள்.

டக்குனு பிண்னணி இசை நிறுத்தப்பட்டது. "குழந்தாய்! இந்த ஒலை சுவடியை நடுவர்களிடம் கொண்டு போய் குடு!" என வள்ளூவர் முன் வரிசையிலிருந்த ஒரு பிகரை பாத்து பிட்டு போட, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. வள்ளுவர் கிடைத்த கேப்பில் கெடா வெட்டி விட்டார். அடபாவி! நான் எழுதி குடுத்த டயலாக்குல இது இல்லவே இல்லையே? என நான் பதற, அந்த குழந்தை வேறு வழியில்லாமல் வள்ளுவரிடம் ஓலை வாங்கி நடுவர் குழுவிடம் சமர்த்தாக குடுத்து விட்டு இருக்கையில் அமர்ந்து வள்ளூவரை முறைத்தது.

நடுவர் குழுவில் இரண்டு தமிழ் புரபசர்களும் இருந்தனர். அவர்கள் வள்ளுவரை நேரில் பாத்த பரவச நிலையிலிருந்து சகஜ நிலைக்கு வரவே இரண்டு நிமிடங்கள் ஆனது. அப்புறம் என்ன, காந்தி, இந்திரா என எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வள்ளுவர் பரிசு கோப்பையை தட்டி சென்றார்.

நான் லெக்சரராக பணி புரிந்த இரண்டாம் ஆண்டில், இரண்டாம் ஆண்டு மாணவர்களோடு ஏற்பட்ட இந்த அனுபவத்தை வ.வா சங்கத்தின் ரெண்டு போட்டிக்கு அனுப்புகிறேன்.

அப்புறம், படிச்சுட்டு ஆளுக்கு ரெண்டு கமண்ட் போட்டுட்டு போங்க என்ன?

13 comments:

mgnithi said...

முதல்ல அட்டெண்டன்ஸ்

mgnithi said...

வாழ்க பரமார்த்த குரு!...

ரெண்டு போட்டிக்கு ரெண்டு பார்ட்.. அடடா என்ன ஒரு டச்.

ரெண்டு கமண்ட் போட்டாச்சு.. எஸ்கேப் ...

இலவசக்கொத்தனார் said...

இதுக்குத்தான் இம்புட்டு பில்டப்பா? பில்டப் நல்லா இருந்ததுடோய்!!

Syam said...

onnu....

Syam said...

rendu....

ரசிகன் said...

//"குழந்தாய்! இந்த ஒலை சுவடியை நடுவர்களிடம் கொண்டு போய் குடு!" என வள்ளூவர் முன் வரிசையிலிருந்த ஒரு பிகரை பாத்து பிட்டு போட, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. வள்ளுவர் கிடைத்த கேப்பில் கெடா வெட்டி விட்டார்.//

சூப்பரு:)))))

Dreamzz said...

hahaha! nalla kalaikaraainga!

Ramya Ramani said...

அட வள்ளுவரையே தூக்கிய அம்பி ஷிஷ்ய கோடிகளா??

Anonymous said...

onnu,andha paiyan unga sishyapullannu nirupichittan.
nivi.

Anonymous said...

rendu,andha idea thiraimarivula neenga sollikuduthadhu illaye.
nivi.

வல்லிசிம்ஹன் said...

முதல் காமெண்ட் புத்திசாலி லெக்சரர்.
ரெண்டு அவரைவிட புத்திசாலி மாணவன்;)

ambi said...

@mgnithi, தமிழில் கமண்ட் போட்ட எம்ஜிநிதி
வாழ்க! வாழ்க!
மிக்க நன்றி பா! :))

@கொத்ஸ், எல்லாம் நீங்க கத்து குடுத்தது தானே குரு! :p

@syam, எலே ஷ்யாம், எப்படி இருக்க? :))

மிக்க நன்னி ரசிகன் & ட்ரீம்ஸ் :D

@ramya, இல்லை, அவங்க ஷிஷ்ய கேடிகள் :)

@nivi, வாங்க நிவி, என்ன சொன்னாலும் என்னை நம்பவே மாட்டீங்களே! :)

@valli madam, நீங்க சொன்னா சரி தான் மேடம். :))

Anonymous said...

People should read this.