Friday, April 04, 2008

பரீட்சை

வால் டிராயர் போட்டு கொண்டு எல்.கேஜி படிக்க ஸ்கூல் போன காலத்திலும் சரி, துவைக்காத ஜீன்ஸ் அணிந்து காலேஜ் செமஸ்டர் பரீட்சை எழுத போன போதும் சரி இந்த எக்ஸாம் பீவர் என சொல்லபடும் பரீட்சை பயம் எல்லாம் எனக்கு இருந்ததில்லை.
இதற்கு காரணம் அட்டை டூ அட்டை எல்லாம் கரைத்து குடித்து விட்டு போனேன் என அர்த்தம் கொள்ள கூடாது.

பள்ளி காலங்களில் அப்படி படித்ததுண்டு. ஐந்தாம் வகுப்பில் தொடர்ந்து எல்லா பரீட்சைகளிலும் முதலாவதாக வந்ததுக்காக, ஆண்டு இறுதியில் மேடை போட்டு கேசரி சாப்பிட ரெண்டு எவர்சில்வர் பேசின் குடுத்தார்கள். இன்னும் பத்ரமாக வைத்திருக்கிறேன்.

ஆறாவது சற்று பெரிய பள்ளிகூடம். புதிய களம், புதிய ஆசிரியர்கள். கண்ண கட்டி தமிழ்மணத்துல விட்ட மாதிரி இருந்தது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு. இந்த சமூக அறிவியல் பாடத்தில் தூர்தர்ஷனில் வரும் சுரபி ரேணுகா ஷாஹேன் தயவில் இமய மலை பத்தி நான் மட்டும் எக்ஸ்ட்ரா பிட்டு போட்டதில் என்னை தவிர மொத்த கிலாஸும் பெயில். நான் மட்டும் 45 மதிபெண்கள். பாஸ் ஆனா தான் ரேங்க் தருவார்கள். (இப்பவும் அப்படி தானே?)ஆக நான் மட்டும் பாசாகி முதல் ரேங்கும் பெற்று அடுத்த பத்து நாட்களுக்கு கிளாஸில் மகுடம் இல்லாத மகாராஜா ரேஞ்சுக்கு சீன் போட முடிந்தது.

அந்த பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியருக்கு ஒவ்வொரு மாதிரி எழுதனும்.

1) ஒருத்தருக்கு பாயின்ட் பாயின்டா எழுதினா தான் பிடிக்கும்.
2) ஒரு டீச்சருக்கு முக்யமான வரிகளை கலர் ஸ்கெட்ச்சால் பெயின்ட் அடிக்கனும்.
3) ஒரு ஆசிரியருக்கு பாரா பாராவா எழுதனும். எத்தனை ஷீட் பேப்பர் எழுதி இருக்கோம்னு பாத்து தான் சில பேர் மார்க் போடுவாங்க.

இந்த பாரா பார்ட்டிய நம் மக்கள் ஈசியா ஏமாத்திடுவாங்க. பாராவின் முதல் மற்றும் கடைசி வரிகள் மட்டும் அறிவியல் சம்பந்தமா எழுதிட்டு, நடுவுல அவனவன் ஈஷ்டத்துக்கு ராமாயணம் முதல் படையப்பா படத்தில் நீலாம்பரியின் பங்கு வரை எழுதி வைப்பான். நடுவுல நியூட்டன், ஐன்ஸ்டின் எல்லாம் வேறு வந்து நீலாம்பரியை குசலம் விசாரித்து விட்டு போவார்கள்.இதுல டோட்டல் மிஸ்டேக்னு சொல்லி மேலும் சில மார்க்குகள் வாங்கி வரும் கில்லாடிகளும் உண்டு.

எக்ஸாம் நடக்கற ஹால்களுக்கு மேற்பார்வைக்கு எந்த வாத்யார் வருகிறார்? என்பதை பொறுத்து தம் மார்க்குகளை முடிவு செய்யும் மக்களும் இருந்தனர். குறிபிட்ட ஒரு டீச்சரை எல்லா ஹால் மாணவரும் வலிய போய் தம் ஹாலுக்கு அழைத்து வருவர். ஏன்னா அந்த டீச்சருக்கு அவ்ளோ தயாள குணம்.

ஒரு வழியாக பள்ளீயில் இருந்து கல்லூரி வந்தபிறகு படிப்பு என்பது வேறு விதமாய் மாறியது.
இந்த கிண்டியில் நடக்கும் குதிரை ரேஸ் பத்தி தெரியுமா? இந்த குதிரை தான் ஜெயிக்கும்! என யூகத்துடன் பணம் கட்டுவார்களே, அது போல கல்லூரி வந்தபிறகு குறிபிட்ட பகுதியில் இருந்து தான் கேள்வி வரும் என கணித்து அதை மட்டும் படித்து விடுவேன்.

என் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால், நான் படிச்சது மட்டும் தான் பரீட்சைக்கு வரும்! என நான் சொன்னதை இரண்டு ஆண்டுகள் வரை நம்பிய நண்பர்களும் உண்டு. அப்ப மூனாம் ஆண்டு என்ன ஆனது?னு நீங்க பின்னூட்டம் போடலாம். அந்த வருடம் குருபெயற்ச்சி ஆகி விட்டார் என சமாளித்து விட்டேன்.

சரி, இப்ப என்ன மேட்டர்னா, திருமணத்துக்கு பின்பும் எம்பிஏவில் எழுத வேண்டிய பேப்பர் நாலு பாக்கி இருக்கு! என தங்கமணி கூறியதும் (ஹிஹி, நானாவது இனி எக்ஸாமாவது) கடமை கண்ணாயிரமாக, "அதுக்கென்ன! நமக்கு படிப்பு தான் முக்யம்! நீ படிம்மா! என பெரிய தசரத சக்ரவர்த்தி மாதிரி வாக்கு குடுத்து விட்டேன்.

அந்த பரீட்சை இப்ப வந்து நிக்குது. ஈஸ்டர் விடுமுறை! ஹாயா வீட்டுல குறுந்தகடு (சி.டி தான்)பாக்கலாம்! என்ற என் திட்டத்துக்கு ஆப்பு வைப்பது போல் வீட்டில் வேலை செய்பவர் வேறு லீவு எடுத்து கொள்ள, நீங்க தானே வரம் குடுத்து இருக்கீங்க!னு சமயம் பாத்து தங்கமணி கோல் போட, வேற வழி இல்லாமல், எங்க வீட்டு சிற்றம்மல மேடையில் நானே தேவாரம் பாடவேண்டியதாய் போயிற்று. :)

ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!னு பெரியவங்க சொல்லி இருக்காங்க போலிருக்கு.

28 comments:

Dreamzz said...

//விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!//
அட அட! என்னம்மா தேரிட்டீங்க!

Dreamzz said...

//1) ஒருத்தருக்கு பாயின்ட் பாயின்டா எழுதினா தான் பிடிக்கும்.
2) ஒரு டீச்சருக்கு முக்யமான வரிகளை கலர் ஸ்கெட்ச்சால் பெயின்ட் அடிக்கனும்.
3) ஒரு ஆசிரியருக்கு பாரா பாராவா எழுதனும். எத்தனை ஷீட் பேப்பர் எழுதி இருக்கோம்னு பாத்து தான் சில பேர் மார்க் போடுவாங்க.
/

ஹிஹி! :)

mgnithi said...

//ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!னு பெரியவங்க சொல்லி இருக்காங்க போலிருக்கு//

Moral of the story purinjiduchu...

mgnithi said...

Exam - my favourite days.. Enga roomla ellarum exam pathi bayapatta naan mattum romba casualla iruppen.

Veetla ella roomlayum yaaravathu oruthan padikarathe paarkarapa bayangara comedya irukkum... oru oruthanukkum oru style..

oruthan 12 mani varaikkum padippan.. innoruthan 12 manikku mela thaan bit kilipaan.. Namma padikkalanalum parava illa, avanum padikka koodathunu solli theaatre kootitu povaanga..night padikka try panravane kathai solli thoonga veipaanga... bookla ethavathu oru unit olichu vechuduvaanga..intha maathiri comedy ellam neraiya nadakkum.

Karthikeyan Ganesan said...

அடடா... நான் 3-வது கமன்ட் போடனும்-னு நினைசேன்... அதுக்குள்ள இடம் காலி-ஆகிடுச்சே...!!!

சரி தல...

நீங்க தங்கமனி-ய படிக்க வெக்க காட்ற ஆர்வத்தை பார்த்தா.. உங்களோட நல்ல மனசு புரியுது...!!

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!னு பெரியவங்க சொல்லி இருக்காங்க போலிருக்கு.//

இது, இது.....எப்பயிருந்து நீங்க இவ்வளவு உண்மை பேச ஆரம்பிச்சீங்க?

வல்லிசிம்ஹன் said...

அம்பி, தங்கமா இருக்கீங்களே.
பரீட்சைன்னதும் நீங்க தான் திருப்பி எழுதப் போறீங்கனு நினைச்சேன்.
தங்கமணியா.

படிக்கட்டும் படிக்கட்டும்.படிப்புதான் முக்கியம். பாத்திரமா முக்கியம்.;)
அப்புறம் சமையல் யார் செய்யறது? அதையும் நீங்களே எடுத்துக்கலாமே:)

Anonymous said...

டேய் ஒழுங்கா எல்லா வேலையும் பண்ணு. ராத்திரி ஒழுங்கா அலாரம் வைச்சு எழுந்து டீ போட்டு குடு...வேற எதாவது நியாபகம் வந்தா சொல்றேன்.

ஹீ ஹி ஏதோ என்னால முடிஞ்சது...

Sumathi. said...

ஹாய் அம்பி,

//விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!//

ஆஹா... பாத்திரம் தேய்ச்சேனு எவ்வளவு ஸ்டைலா சொல்றீங்க.. வாழ்க.

டுபுக்கு நானும் என் பங்குக்கு சிலது சொல்றேன் ஹி ஹி ஹி..

அதாவது வீட்டு வேலைல்லாம் முடுச்சுட்டு தங்கமணி படிக்கும் போது பக்கத்துல இருந்து தூங்காம பாக்கனும், அப்ப தங்கமணி அசதில தூங்கிட்டா மெதுவா தொந்தரவு பண்ணாம புக்கை எடுத்து மூடி வைக்கனும், அப்பறம் கொசு ஏதும் கடிச்சு தூக்கம் கலையாம பாத்துக்கனும்..இப்படி இன்னும் இன்னும் சொல்லனும்னு ஆசை தான்.,
ஆனா வீட்டுக்கு ஆட்டோ வருமோன்னு தான் யோசனையா இருக்கு.

Devilish Angel said...

Hahaha... katrathu kaiyalavunnu purinjidhuchu...

Anonymous said...

ambi sir,exam patthi ezhithinnengle,neenga thaan marupadiyum ezhudhaporinglonnu ninacchen.nalla vellai.all the best ,thangamanikku illa ungallukku thaan.manaivvikku sevai seiyum bakkiyam ellarukkum kidaikkuma!!!!!!!!! enjoy!!!!!
nivi.

ரசிகன் said...

ஹா..ஹா... அம்பியண்ணா.. இவ்ளோ மேட்டர் சொல்லும்போதே நெனைச்சேன். எதை சொல்ல இம்புட்டு அடித்தளம் போடறாருன்னு....
உங்க கடமைய எம்புட்டு ஸ்டெயிலா சொல்லிப்புட்டிங்க :)))))

SKM said...

nan solla vandhadhai unga neighbour sollittanga. good job! continue.

ரசிகன் said...

//ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!னு பெரியவங்க சொல்லி இருக்காங்க போலிருக்கு.//

ஏதேதேது போற போக்கைப் பாத்தா , உங்க திறமையை உபயோகப் படுத்திக்கறதுக்காக..,இன்னும் ரெண்டு மூனு வருஷத்துக்கு பரிட்சைய நீட்டிச்சாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல,.,.:)))))

ரசிகன் said...

நல்லா ரசிக்கும்படியா இருக்குங்கண்ணா:)))))

(எது? என் நிலமையா? ந்னு நீங்க...கேக்கறது நல்லாவே கேக்குதுங்கண்ணா....:)) )

மங்களூர் சிவா said...

/
விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!னு பெரியவங்க சொல்லி இருக்காங்க போலிருக்கு.
/

:)))))))))

இது என்னமோ புதுசா செய்யறமாதிரி எழுதறீங்களே அம்பி!!!!!

மங்களூர் சிவா said...

வழக்கமா நடக்கறதுதானே!!!!!!!!

மங்களூர் சிவா said...

//1) ஒருத்தருக்கு பாயின்ட் பாயின்டா எழுதினா தான் பிடிக்கும்.
2) ஒரு டீச்சருக்கு முக்யமான வரிகளை கலர் ஸ்கெட்ச்சால் பெயின்ட் அடிக்கனும்.
3) ஒரு ஆசிரியருக்கு பாரா பாராவா எழுதனும். எத்தனை ஷீட் பேப்பர் எழுதி இருக்கோம்னு பாத்து தான் சில பேர் மார்க் போடுவாங்க.
/

கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்க

Arunkumar said...

//
ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!னு பெரியவங்க சொல்லி இருக்காங்க போலிருக்கு
//

thala indha oru paravukkaga thaan matha ellam ezhuduna maathiri irukku :)

Arunkumar said...

sema ROTFL post as usual...

//
ஆண்டு இறுதியில் மேடை போட்டு கேசரி சாப்பிட ரெண்டு எவர்சில்வர் பேசின் குடுத்தார்கள்.
//
ungalukkuma ?
enakku konjam perusa kuduthadhu naala inna thedi varaikum veetla adhu thaan sakkara dabba :)

Arunkumar said...

//
இந்த சமூக அறிவியல் பாடத்தில் தூர்தர்ஷனில் வரும் சுரபி ரேணுகா ஷாஹேன் தயவில் இமய மலை பத்தி நான் மட்டும் எக்ஸ்ட்ரா பிட்டு போட்டதில் என்னை தவிர மொத்த கிலாஸும் பெயில்
//
LOL :)


//
ராமாயணம் முதல் படையப்பா படத்தில் நீலாம்பரியின் பங்கு வரை
//
appollam enga neelaambari..
en peru maanickam , enakku innoru peru irukku kadhai thaan :)


//
அந்த வருடம் குருபெயற்ச்சி ஆகி விட்டார் என சமாளித்து விட்டேன்.
//
ROTFL :)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆகா சுமதிக்கு எவ்வளவு நல்ல மனசு. தாம் பெற்ர இன்பம் இவ் வையகம் பெறவேண்டும் என்பதில். அம்பி பாக்கி ஏதாவது தெரியலைன்ன மின்னல் ரங்கமணிகிட்டெ கேட்டுக்கோ

ambi said...

//அட அட! என்னம்மா தேரிட்டீங்க!
//

@dreamz, என்ன பண்றது தினேஷ்? எல்லாம் விதிபடி தான் நடக்கும். :P

@mgnithi, அடடா! சூப்பரா இருக்கே உங்க அனுபவம். தமிழ்ல கமண்ட் போடலாமே, படிக்க ஈசியா இருக்கும் இல்ல. No offense pls, :)

//நீங்க தங்கமனி-ய படிக்க வெக்க காட்ற ஆர்வத்தை பார்த்தா.. உங்களோட நல்ல மனசு புரியுது...!!//

@K-Ganeshan, அடடா! என் மனசை புரிந்து கொண்ட கார்திகேயனுக்கு மிக்க நன்னி. :))

//எப்பயிருந்து நீங்க இவ்வளவு உண்மை பேச ஆரம்பிச்சீங்க?
//
@M]pathi, சரி, இப்படி வாரனுமா சபைல? :))

//அப்புறம் சமையல் யார் செய்யறது? அதையும் நீங்களே எடுத்துக்கலாமே//

@valli madam, சரியா போச்சு! நீங்களே பாயிண்ட் எடுத்து குடுப்பீங்க போலிருக்கே! :))

//ஏதோ என்னால முடிஞ்சது...//

@dubukku, அடடா என்ன ஒரு உதவி! எனக்கும் டைம் வரும், அப்ப இருக்கு உங்களுக்கு. :))

@suamthi, சுமதியக்கா, எதுனாலும் பேசிக்கலாம், இப்படி பழி வாங்காதீங்க. :)

ambi said...

@mythili, முதல் வருகைக்கு நன்னி ஹை! :))

@nivi, ஆமா! அந்த பாக்யம் அவ்ளோ லேசுல கிடைக்குமா? :P

//உங்க கடமைய எம்புட்டு ஸ்டெயிலா சொல்லிப்புட்டிங்க //

@rasigan, கூடிய சீக்ரம் நீயும் சொல்லுவ பா! :))

@skm, வாங்க அக்கா! சவுக்கியமா இருக்கீங்களா? :))

//இன்னும் ரெண்டு மூனு வருஷத்துக்கு பரிட்சைய நீட்டிச்சாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல//

@rasigan, என்னாது இன்னும் மூனு வருஷமா? பத்த வெச்சியே பரட்டை! :))

//இது என்னமோ புதுசா செய்யறமாதிரி எழுதறீங்களே அம்பி//
@Manglaore siva, சரி, சிவா, ப்ரீயா விடுங்க. :))

@arun, என்ன அருண், இந்தியா வந்தாச்சா? பொண்ணு பாத்தாச்சா? :))

ambi said...

@TRC sir, ஆமா சார், சுமதியக்கா தன் கடமையை சூப்பரா செஞ்சு இருக்காங்க. :))

Swamy Srinivasan aka Kittu Mama said...

haha arumayaana flashback

starting ae top takkar
andha kalathu kannamma drawer (vaal drawer) podaama evanaalum irundhirukka mudiyaadhu :-)

school, college matter laam thathroobam...kudharai maela katra pandhayamaedhaan...iddhu enna koothunna andha 10 kostins surungi 5aagi, 4aagi appuram indha 3 dhaanda varudhunnu rajasekhar pada title maadhiri padichuttu ponaa sila samayam mega aapu varum..onnumae varaadhu..sila samayam 3um vandhu namba padicha anda moonayum marakka adikara maadhiri oru sandhosham kilambum

andha modhal main sheets gaali panra kushi namba pasangalukku irukkae...alaadhi sandhosam..
ezundhu ninnu adhuvum penaava kaila vechundae ninnu oru novel writer kanakka pose kodukkum bodhu oru chinna beedhi vera kilambum matha pasangalukku...aaha niraya ezudharaanaennu :-)

sweet nothings exams ellaam...indha azagula nightla padikka tea vera...1 kostin padichaa udanae oru cricket break vera..aamaam mottai maadila one pitch catch, 10 pitch catch nu kanda rules poattu aadardhu...

hmmmm yaedho thaeri adhisayamaa inikku ellarum engayo kuppai kottindu dhaan irukkaan :-)

Arulz said...

u got a nice sense of humor.. u got urself a fan!

ராமலக்ஷ்மி said...

வல்லிம்மா புதுகைத் தென்றலின் வலைச் சரப் பதிவில் உங்களை க்ரேஸி மோகன் போல என சொன்னது மிகையே இல்லை அம்பி. அது எப்படிங்க..ஒரு ஜோக்குக்கு சிரிச்சு முடிக்கிறதுக்குள்ள...அடுத்தடுத்து..:)!
ரொம்ப ரசி(சிரி)த்துப் படித்தேன். வாழ்த்துக்கள்.

இன்னும் வருவேன், மற்ற பதிவுகளும் படிக்க...