Tuesday, June 20, 2006

பாட்டு பாட வா - II

Part-1

மத்த டீம் எல்லாம் புது, புது பாட்டா செலக்ட் பண்ணியிருந்தனர். ஒரு சேஞ்சுக்கு, நாம ஏன் பழைய பாட்டு பாடக்கூடாது?னு தோணியது.
என் டீம்ல இருந்த ஒருத்தன் உடனே, "ஆயிரத்தில் ஒருவன்" படத்திலிருந்து "அதோ அந்த பறவை போல" பாடலாம்! அதுலயும் நிறைய தடவை லலா! லா! எல்லாம் வரும்னு உருப்படியா ஐடியா குடுத்தான்.

உடனே மளமளவென காரியத்தில் இறங்கினோம். ஒருத்தன், நெட்டுலேருந்து பாட்டை எம்.பி.3யா டவுன்லோட் பண்ணி மொபைல் போனுக்கு கொண்டு வந்தான். இன்னொருவன், பாட்டு வரிகளை ப்ரிண்ட் அவுட் எடுத்து பனகல் பார்கில் சரவணா ஸ்டோர்ஸ் நோட்டிஸ் மாதிரி மத்தவர்களுக்கு வினியோகம் செய்தான். எதுக்கு தெரியுமா? கரெக்ட்டா, எந்த எடத்துல, எத்தனை தடவை லலா! லா! பாடனும்னு தெரியனும் இல்ல? அதுக்கு தான்!

நாங்களும், ரகசியமா பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம்.
எங்க டீம்ல ஒரிசாகாரர் ஒருத்தர் இருந்தார். தனி தவிலுக்கு,இந்தி பாட்டு பாடலாம்னு முடிவு பண்ணி, "ஓ! எக் லடிக்கி கோ தேக்கா தோ ஏஸா லகா!"னு 1942-லவ் ஸ்டோரி (R.D பர்மனின் கடைசி படம்)யை செலெக்ட் பண்ணிவிட்டேன். அவருக்கு அருமையான குரல்.

ஏதோ மிஸ்ஸாகிற மாதிரி எனக்கு ஒரு உறுத்தல். நாங்க தலைகீழா நின்னு பாடினா கூட டி.எம்.ஸ் மாதிரி பாட முடியாது. அந்த பாட்டு வேற நல்ல பாட்டு. நம்ம குறை தெரியாம இருக்கனும்னா பார்கற மக்களை திசை திருப்பனும்! ஏதாவது டகால்டி வேலை பண்ணிட வேண்டியது தான்!னு முடிவு பண்ணினேன்.

நாங்கள் எதிர்பார்த்த நாள் வந்து சேர்ந்தது. காலையிலிருந்தே பலப்பல போட்டிகளில் எங்கள் டீம் நன்னா புகுந்து விளையாடியது. மதியம் நடந்த எறிபந்து போட்டியில், எல்லா பயலும் மேனேஜருக்கே குறி வெச்சு எறிஞ்சானுங்க. (he, hee,எறிய சொன்னதே நான் தானே!)

மதியம் லஞ்ச்க்கு வந்த ஐஸ்கீரீமை பாட்டு பாடற கோஷ்டி யாருமே தொடலையே! குரல் கெட்டு விடுமாம்.

மாலை வெயில் தாழ்ந்ததுக்கு அப்புறம், கடற்கரை மணலில் எல்லாரும் சேர் போட்டு உக்காச்சுண்டா. முதலில் தனி தவில்களின் போட்டி ஆரம்பிச்சது. VGP-ஆர்கெஸ்ட்ரா சப்போர்ட் வேற கிடைத்தது.

முதலில் எல்லா பெரிய தலைகலையும் ஜட்ஜுகளா போடலாம்னு முடிவாச்சு. ஆனா, ஒரு தீவிரவாதி கும்பல், "எங்க பக்கம் தீர்ப்பு சொல்லலைனா, ஒரு பிராஜக்ட்டும் கிளைண்டுக்கு டெலிவரி ஆகாது. அப்படியே ஆனாலும், 1 வரிக்கு 4 எரர் வரும், எப்படி வசதி?"னு அன்பாக மிரட்டியதால் பெரிய தலைகளின் உள்துறை அமைச்சர்களை (மனைவி மார்களை) "நல்ல தீர்ப்பு சொல்லு தாயி!"னு சேர் போட்டு உக்கார வெச்சோம்.

பல பாம்பே ஜெயஷ்ரீகளும், சுவர்ண லதாக்களும் வசீகராவையும், அழகிய அசுரனையும் கூவி,கூவி கூப்பிட்டு கொண்டு இருந்தனர். சுருதி, தாளம் எல்லாம் சேரவேயில்லை.

எங்க டீம் ஒரிசாகாரர் போய் பட்டய கிளப்பிட்டார்.

போட்டி ரிஸல்ட் உடனே அறிவிக்கப்பட்டது. நாங்க தான் முதல் இடம்.
கடுப்பாகி போன மத்த டீம், நாங்க கோஷ்டி கானத்தில் ஒரு கை பாத்துக்கறோம்!னு உறுமினர்.

எம்.டி "நான் பாடறேன்! பார்க்க வாங்க!"னு தன் அப்பா, அம்மா, மனைவி, மச்சினினு குடும்பத்தையே கூட்டி வந்திருந்தார். இவ்வளவுக்கும் அவர் ரண்டக்க! ரண்டக்க!! கோரஸ் தான் பாடினார்.

ஒரு வழியா போட்டி ஆரம்பித்தது.
முதலில் "சகலகலா வல்லவன்" இளமை இதோ! இதோ! பாட்டு பாடியது ஒரு கோஷ்டி. (அதுலயும் லலா லலா வருமே!)
ரொம்ப நல்லா பாடினாங்க.

ரெண்டாவதா, அன்னியன் உலா வந்தார். எம்.டி. மனைவி விழுந்து, விழுந்து சிரிச்சாங்க.

'Ahem' மூணாவதா, நம்ம பாட்டு! உஷாரா மேடை ஸ்கீரினை போட சொன்னேன். பேக்ரவுண்ட் மியூசிக் ஒலிக்க ஆரம்பித்ததும், திரை விலகியது. மேடையில நாங்க ஒருத்தருமே இல்லையே!
திமு திமுனு ஒரு பத்து பேரு, மேடைக்கு சைடுலேருந்து ஓடி வந்து மேடை ஏறினாங்க. எல்லோரும் ஒரே மாதிரி 5 பீளிட் வச்ச பேகி பேண்ட், கை இல்லாத பனியன், தலையில குல்லா!
லலா லா! லா! லலா லா லா!னு பாடிகிட்டே மேடையில அங்கேயும், இங்கேயும் ஓடினாங்க.

"அதோ! அந்த பறவை போல வாழ வேண்டும்!
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்!"னு மேடைக்கு சைடுலேருந்து ஒரு கயிற்றில் தொங்கியபடி இப்போ தான் எம்.ஜி.ஆர்(அம்பி) என்ட்ரி. எனக்கும் அதே காஸ்டியூம் தான்.

பொதுவா, எம்.ஜி.ஆர் மாதிரி ஆடறது ரொம்ப ஈஸி. இடது கைய 4 தடவை தூக்கனும், வலது கைய 8 தடவை தூக்கனும். கையை தூக்கும் போது மறக்காம தலையை ஆட்டனும். ஒரு இடத்துலயே நிக்க கூடாது. கையை பின்னாடி கட்டிண்டு வளைஞ்சு வளைஞ்சு ஓடணும். எல்லா கூத்தும் தெளிவா பண்ணினேன்.

ஒருத்தனை நம்பியார் மாதிரி செட் பண்ணினேன். அவனும், கையை பிசைந்து கொண்டு, கையில வாள் எல்லாம் வச்சுண்டு தலைய, தலைய ஆட்டிண்டு,அங்கேயும், இங்கேயும் நடந்தான். ஒரு சரணம் முடிஞ்சதும், எம்.ஜி.ஆரும், நம்பியாரும் வாள் சண்டை எல்லாம் போட்டனர். எப்பவுமே, எம்.ஜி.ஆர் மூணு தடவை அடி வாங்கிட்டு தான் திருப்பி அடிப்பார். அந்த கூத்தும் நடந்தது. என் குரல் ஏதோ பரவாயில்லை. டி.எம்.ஸ் மாதிரி எல்லாம் என்னால பாட முடியுமா? அதான், இப்படி ஒரு டகால்டி வேலை.

கடைசி லலா லா முடிஞ்சதும், எங்க டீம்ல ஒருத்தன், "ரீப்பீட்ட்ட்டு"னு கத்தினான். மறுபடி ஒரு லலா லா பாடினோம்.

மேடைக்கு கீழே கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்குது. ஜட்ஜுகளும் சிரிப்பை அடக்க முடியாம தவிக்கறாங்க.
எம்.டி.யின் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராம். அவரால சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியலை. "பாட்டு பாட சொன்னா, ஒலியும் ஒளியும் காட்றீங்களே பா!"னு ஓடி வந்து எங்க டீமை அணைத்துக் கொண்டார்.

நம்பியாரை நோக்கி எங்க ஆபிஸ்ல வேலை பார்க்கற ஒரு பொண்ணு வந்தா. அவளுக்கு நாங்க சரோஜா தேவினு பட்டபெயர் வெச்சு இருந்தோம். கண்ணுக்கு இட்டுகற மை காது வரைக்கும் போகும், அதான் அந்த பட்டபெயர். நம்பியார் அந்த பொண்ணை டாவடிச்சுகிட்டு இருந்தான்.

சரோஜா தேவி: நீங்க சரியான மாங்கா!னு இத்தனை நாளா நினைச்சேன். இவ்ளோ நல்லா டான்ஸ் எல்லாம் ஆடுவீங்களா? நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.

நம்பியார்: (வழிந்தபடி) ரொம்ப தேங்க்ஸ்ங்க! உங்களுக்கு பிடிச்சு இருந்ததா?

சரோஜா: (பதிலுக்கு வழிந்தபடி) ம்ம்! ஆமா! ரொம்ப பிடிச்சு இருந்தது.(அட்ரா சக்கை! அட்ரா சக்கை!)

நம்ம பயலுக தான், கோடு காட்டினா போதுமே, ஜல்லி அடிச்சு, தண்ணி தெளிச்சு, தார் ஊத்தி, NH-7 ரோடே போட்ருவாங்களே! அப்படியே பிக்கப் பண்ணிட்டான் பையன். நான் பெனால்டி கார்னர்லேருந்து பந்தை பாஸ் பண்ணினேன், கரெக்ட்டா நம்பியார் கோல் போட்டுட்டான்.

நம்பியாரா நடிக்கவே மாட்டேனு அடம் பிடிச்சான். இமேஜ் ஸ்பாயில் ஆயிடுமாம். நான் தான் நல்ல வார்த்தை சொல்லி சம்மத்திக்க வெச்சேன்.

போட்டி முடிவு அறிவிக்கப்பட்டது. சகலகலாவல்லவனுக்கு முதல் இடம், எங்களுக்கு இரண்டாம் இடம், அன்னியனுக்கு மூன்றாம் இடம். எம்.டி.யின் அப்பா தனியாக எங்கள் டீமுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தார். மொத்த போட்டிகளிலும் வாகை சூடி நாங்கள் சிறந்த டீமாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். குஷி தாங்காமல் என் அணியினர், என்னை தூக்கி, தூக்கி போட்டு பிடித்து, தங்கள் விசுவாசத்தை காட்டினர். பரிசுப் பணம் 15 ஆயிரம் தேறியது.

ஓட்டல் போகலாம், தீர்த்தம் சாப்டலாம்னு ஆளாளுக்கு யோசனை.

தாம்பரத்தில் உள்ள தொண்டு நிறுவனத்துக்கு உதவி அளிக்கலாம்னு நான் முன்மொழிந்ததை ஏக மனதாக ஏற்று கொண்டனர். இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்ற அணிகளும் எங்களோடு சேர்ந்து கொண்டது. எம்.டி கையாலேயே, அந்த நிதியை நன்கொடை அளித்தோம். எம்.ஜி.ஆர் பாட்டு பாடிட்டு நன்கொடை அளிக்கலைனா நல்லாவா இருக்கும்? தர்மம் தானே தலை காக்கும்!

2 நாள் கழித்து, ஆபிஸ்லேயே திரை கட்டி, டெண்ட் கொட்டகை மாதிரி படம் போட்டு காட்டினர். சரோஜா தேவியும், நம்பியாரும் அருகருகே அமர்ந்து படம் பார்த்தனர். நாங்க அவங்களை பார்த்து கொண்டு இருந்தோம். போன நவம்பரில், இரு வீட்டார் சம்மததுடன் நம்பியாருக்கும், சரோஜா தேவிக்கும் டும் டும் டும்.

பின் குறிப்பு: இப்போ சரோஜா தேவி ஐந்து மாதமாம். (ஆனாலும், நம்பியார், ரொம்ப தான் பாஸ்ட்டு). பையன் பொறந்தா என் பெயர் தான் வைக்க போறானாம்! "ப்ளீஸ் அதேல்லாம் வேண்டாம்!"னு சொல்லிட்டேன்.

31 comments:

daydreamer said...

super maa..... padikkum podhe sirippa adakka mudiyala... office la ellarum nammala konjam oru mathiriyo ndra range la paathaanga.. ha arasiyal vazhkaila idhellam sagajamappa.... nagesh yaaru unga gumballa... neengale double act kuduthiteengala...

Ms Congeniality said...

ROTFL!!!!!
If I list down the lines which made me laugh I'd have put the whole post :-D

Super vaaluthanam pannikeenga pola?????

shree said...

ha ha ha sooperu! esp. - " "பாட்டு பாட சொன்னா, ஒலியும் ஒளியும் காட்றீங்களே பா!"னு ஓடி வந்து எங்க டீமை அணைத்துக் கொண்டார்."
hmm cycle gapla hero imagea pottu publicity pannikitta, vaalga

மு.கார்த்திகேயன் said...

ஆஹா! சந்தடி சாக்குல நம்பியார் பையனுக்கு உங்க பேர் வச்சுக்கலாம்னு ஆசையா.. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிடுச்குங்க ன்னா..

Geetha Sambasivam said...

அம்பி, நான் என்ன எழுதினாலும் விடாமல் வந்து ரசிக்கிறதுக்கு ரொம்ப நன்றி. விரைவில் உங்களைப் பாராட்டறதுக்கு ஒரு பதிவு போடணும். மத்தபடி எல்லாரும் ரசிக்கிறாப்பலதான் நானும் ரசிக்கிறேன்.

Geetha Sambasivam said...

அம்பி, நல்ல விளம்பரம் போங்க, நமக்கு நாமே திட்டமா? நடத்துங்க, நடத்துங்க.

Gnana Kirukan said...

ambi nerya eluthu potel polu iruku.,.need to catch up and read :)...wuld do :)

Anonymous said...

"பாட்டு பாட சொன்னா, ஒலியும் ஒளியும் காட்றீங்களே பா!"

:)

nice writeup. Aabisla neengalum velai parka mateengala? :P

Story Teller said...

hahaha.. (btw i appreciate your idea to donate the amount to the thondu niruvanam.... )

Harish said...

Thalaiva kalaikkitta..
kadaisia anda panatha udava koduteenga parunga...anga thaan neenga weight kaatareenga...
Ellarum Ambi kku oru O podunga :-)

அனுசுயா said...

அம்பி நல்லாயிருக்குங்க உங்க எழுத்து. ரொம்ப சுவாரசியமா இருந்தது. பாராட்டுக்கள்.

My days(Gops) said...

wow.
unga post'a padicha kandipaa sirikalam....sema'ah sirika vaikireenga.....blogplay super (blogplay => screenplay)...
timing is perfect...

thanga thalaivar paatu pottu prize kidaikaama poirumaa?

saroja devi, nambiyaar loves'a sethu vaika track pottadhu'ku ungalluku en saarba oru "O" poduren...

@நன்கொடை அளித்தோம்.
idhuku oru salute...

kuttichuvaru said...

ambi, as usual kalakkal!! attagaasam pannitteenga..... Oliyum OLiyum pottu kalaasittenga pola irukku!! ezhuthi irukkara style-la I cud imagine u hanging on the rope!! gud work....

hats off @ the gesture of donating to charitable organization!!

Syam said...

itha padikum bothu enga manager yenna syam computer kitta pesi sirichutu irukeenu kettan...ambi oda blog padikkarenna solla mudiyum...every deliverable is on schedule athunaala sandhosathu sirikarennu sonnen...wonderful ambi...

SLN said...

Ambi,

Came here from Dubukku's blog. Yours is as much funny and enjoyable. Will be another of my haunts now.

Cheers
SLN

Gopalan Ramasubbu said...

Sooperappu :).Money donate panathu nijamave nalla visayam.Good on u.

ambi said...

@daydreamer, he hee, danks. yeeh, double role..

@ms.c, U made my day! danks.

@veda, danks, ohh, yaaravathu chance kudutha vendaamnaa solluven!

@shree, he hee, danku.

@karthi, athellam vendaamnu solliten, danku..

@geetha, i feel honoured.. danks..

@arjuna, yes pa! nee padipa nu enakku theriyum. he hee..

@dubukku, danks anna, he hee, same blood!

@delhi, danks pa.

@harish, danks chellam.. :)

@anusuya, alot of danks..

@mydays, really i feel honoured.. nee matum enna kalakala ezhuthare paa!

@kutti, he hee, antha kaatchikku visil paranthathu... danks..

@syam, hahaaa, same blood here...

@sin, ohh, danks, dubukku annavukkum danks..

@gops, nandri shishya, yeeh, i promised that organisation..

Butterflies said...

paaaaaavi!ambi....officela sirikka vachu mathivittutinga!self controlaa irunthen .oooof sirippu adakka mudila!unga per vaikkaporaangala!kilinjathu krishnagiri

gayathri said...

ada eppavum pola kalasitenga..
cha 15k-la pangu kekalam-nu nenaichen..
epadi paniteengaley.. :p

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

அம்பி, டுபுக்கு அண்ணா மாதிரியே நல்ல எழுதரீங்க.அப்படியே keep-up பண்ணுங்க.

Unknown said...

அம்பி நன்னா எழுதி இருக்கேள். பாராட்டுகள்.
நம்பியாருக்கு சரோஜாதேவி கிடைச்சாச்சு. எம்.ஜி.ஆருக்கு யாராவது கிடைச்சாளா?? ;-)

Geetha Sambasivam said...

அம்பி, செஞ்சுரி அடிக்கிறதுக்கு எல்லாம் இல்லை. நேத்திக்கு நேரம் கிடச்சது. ப்ளாக்கர் வேறே சமத்தாக இருந்தது. அதான்.

Geetha Sambasivam said...

சரோஜா தேவி நம்பியாருக்குன்னா அதிலே வில்லியா வந்த ஜி. சகுந்தலாதான் எம்.ஜி.ஆருக்கு.

Geetha Sambasivam said...

அம்பி, அது எப்படி உங்க கண்ணிலே இது மட்டும் படுது? நல்ல sense of humor, உங்களுக்கு இல்லை, எனக்கு. அப்புறம் என் சித்தப்பாவைக் கண்டு பிடிச்சுட்டாங்க, அதனாலே இரண்டு பதிவுக்கு விஷயமே இல்லை.
சகிக்கலை, சித்தி ராதிக்கான்னா சித்தப்பா சரத்குமார் என்பது அரதப் பழசான ஜோக்.

அனுசுயா said...
This comment has been removed by a blog administrator.
Viji said...

hahaha. semma funny. ;)
nice decision... to donate the money! :)

Marutham said...

Wonderfully written ( ;) Long)post....Oru nalla Comedy padam patha mari irundhadhu..
Elaathayum vida //தாம்பரத்தில் உள்ள தொண்டு நிறுவனத்துக்கு உதவி அளிக்கலாம்னு நான் முன்மொழிந்ததை ஏக மனதாக ஏற்று கொண்டனர். இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்ற அணிகளும் எங்களோடு சேர்ந்து கொண்டது. எம்.டி கையாலேயே, அந்த நிதியை நன்கொடை அளித்தோம். // Indha varigal..... HATS OFF!! Its not just Fun you all care about- but also Others!! Arumai....

KC! said...

unmaiya sollu, idhu kadhai dhane?? apadiye unmaiya irundha MGR must be turning in his grave ;) aana soooper narration ambi, therinde vara nee

ambi said...

@shuba, he hee, danks.

@gayathri, thoda, Asku pusku..

@bala.g, danks.. Asin.. :)

@viji, he hee, danks..

@marutham, yeeh, i too felt very happy.

@usha, danks, danks.. kathaiyaa? gr..rrr

smiley said...

wow, super. antha pattin video irunthaal put it in ur blog :) pesama unga MD kitta solli oru puthiya cinema co arambika sollunga :)

Prabhu said...

Manager paadarennu avaroda entire family attending to see him sing "Randakka" in chorus -- ROTFL :)

samma funny post ambi :)
Nambiar settle aanar, MGR ku oru jayalalitha maatalaiya antha group la?