Friday, May 12, 2006

வாழ்க ஜனநாயகம்!

வர வர தமிழ்நாடு லன்டன் மாதிரி ஆகி விட்டதோனு எனக்கு தோனறது. அங்க தான், 2 கட்சி மாறி மாறி ஆட்சிக்கு வரும். இங்கேயும் அப்படி தானே நடந்துன்டு வரது?

மொத்தம் 16% வோட்டு வாங்கி இருக்கார் கேப்டன், அதுவும் தில்லா,தனியா நின்னு. இந்த சதவிதம் தேசிய கட்சினு பீத்திக்கர காங்கிரஸ் கூட வாங்கலை.

சரி, இப்போ அடுத்த முதல்வரின் நன்றியுரையை வாசிங்கோ.

சிறு நரி கூட்டம் ஒன்று, சில காலம் கொக்கரித்து வந்தது. சிங்கம் ஒன்று வருகுது பார்!னு என் தம்பியே நல்ல பாடம் புகட்டினாய்! அக்கூட்டத்துக்கு பாடை கட்டினாய்!

2 ரூபாய்க்கு அரிசி தருவேன் உனக்கு என்று நான் சொன்னதை நம்பி வாய் பிளந்தாய், தம்பி அது உனக்கு வாய்க்கரிசியடா!

வெறும் அரிசி தானா? என்ற உன் ஏக்கம் எனக்கு புரிகிறது. சாம்பார், ரசம், பொறியல், கூட்டு எல்லாம் என் கூட்டணி கட்சிகள் பறிமாறும்! ஊறுகாயை மருத்துவர் பறிமாறுவதாக வாக்களித்து உள்ளார். கவலை கொள்ளாதே!

கலர் டிவி தருவேன் என்றேன். தம்பி, மற்ற தரமற்ற நிகழ்ச்சிகளை பார்த்து உன் மனதை திரிந்து கொள்ளாதே!
என் பேரனின் சன் டிவி மட்டும் பார்!
திராவிடம் வளர்!. இமயம் தொடு!
அதில் நம் கட்சி கொடி நடு!

இதை தான் நமது அறிஞர் அண்ணா அன்றே சொன்னார்,
"பிகருக்கு தெரியுமா பெருங்காய வாசனை?
ஜிகிடிக்கு தெரியுமா ஜிஞ்சர் வாசனை?" என்று!

இனி நமது பேச்சு, முழுமூச்சு எல்லாம் நமது அருமை புதல்வன், பட்டத்து இளவரசன் ஸ்டாலினை ஆட்சி கட்டிலில் அமர்த்துவதே!
இது தான் உனது ஆசை, லட்சியம், நமது கட்சியின் கொள்கை என நான் சொல்லவும் வேண்டுமோ?

தாத்தா, என்னை மறக்கலாமா? என எனது பேரன், "உலக தகவல் தொடர்பே"! என்று உன்னால் புகழப்பட்ட வீரன், விவேகன், என் மறுமகன் மாறனின் தவ புதல்வன், தயாள குணம் படைத்தவனாம் தயா நிதி மாறன் அழுவது கண்டு உன் மனம் விம்மும் என நான் அறிவேன்.

எனவே தான் சுழற்சி முறையில், மகன், பேரன் என்ற முறையில் ஆட்சி அமைக்கலாம் என்ற உன் முடிவை, என் தலையாய கடமையாக மேற்கொள்ள போகிறேன்.

பேத்தியும் வர வேண்டுமென கட்சி செயற்குழு கூட்டம் தீர்மானம் இயற்ற உள்ளது.
கழக கன்மணியே! உனக்கு நன்றாக தெரியும், நான் என்றுமே கட்சி செயற்குழுவுக்கு கட்டுப்பட்டவன் என்று!

மகிழ்ச்சி கொள்! மறக்காமல் எனது மடல்களை படித்து உன் பொது அறிவை வளர்த்து கொள்! IAS வினாத்தாள்களில் கூட அதிலிருந்து தான் கேள்விகள் வருகின்றன.

வாழ்க நம் கட்சி! வாழ்க நம் குடும்பம்!!

இனி புதிய ஆட்சியாளர்கள் எப்படி பங்கு பிரிச்சுப்பானு பார்க்கலாம்!

1)வழக்கம் போல பேராசிரியர் அன்பழகனுக்கு கல்விதுறையோ, இளிச்சவாய்துறையோ போகும். (உருவாகலாம், யாருக்கு தெரியும்?)

2)தம்பி "துச்சாதனன்" துரை முருகனுக்கு வளம் கொழிக்கும் பொதுப்பணி துறை. (ஆனா பாதி பங்கு உரிய இடத்துக்கு போய் சேரும்!)

3)"தியாக செம்மல்" பழனிவேல் ராஜனுக்கு சபா நாயகர் பதவி. (இலவசமாக சின்சா ஒன்று வழங்கப்படும்).

4)"கழக போர் வாள்" பொன்முடிக்கு போக்குவரத்து துறை. (தினப்படி வசூலை வாரிக் கொண்டு வர கண்டக்டர் பை ஒன்று வழங்கப்படும்)

5)நிதிதுறை, நீதித்துறை, காவல்துறை, கல்லா துறை,வசூல் துறை, நாமம் போடும் துறை, அல்வா துறை எல்லாம் முதல்வர் பொறுப்பில்.

இப்போழுதே சில காவல் துறை, IAS அதிகாரிகள் பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வைத்தால் நல்லது. எப்படியும் குரு பெயற்ச்சிபடி இட மாற்றம், உத்தியோக மாற்றம், எல்லாம் வர போகுது. தண்ணி இல்லாத காடு எங்கேனு கூகிள் டாட் காமில் தேடவும்.

மற்றபடி, சட்டசபைக்கு, நமது கேப்டன் உஜாலா வேட்டி, சட்டையில் வருவாரா? இல்லை காக்கி யூனிபார்மில், முட்டி வரை தொடும் கோட் அணிந்து வருவாரா?னு சைதாப்பேட்டையில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றம் நடக்கலாம். சென்னை வாசிகள் தவறாது கலந்து கொள்ளவும்.

பின்குறிப்பு: ஒரு வாரம் லீவு எடுத்து கொண்டு, மதுரை, கல்லிடை எல்லாம் போய் வரலாம்னு இருக்கேன். என் பிளாக்கை பத்ரமா பாத்துகோங்கோ!

பின் பின்குறிப்பு: நாளை (13-May-2006) தனது 7 th மண நாளை கொண்டாடும் என் அருமை அண்ணன் டுபுக்குஅவர்களுக்கு 123 வது வட்டத்தின் சார்பாக இந்த அருமை தம்பி அம்பி, தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறான். (மன்னி, நல்லா வெயிட்டா பில்லு தீட்டுங்க!)

23 comments:

Ram said...

:)) Athu seri...Thalapathi stalin kku ulla ministry pathi sollave illaiye...yenna thairiyam umakku....
Nadappathu Kazhaga aatchi...Kudumpam thaan kazhagam..Kazhagam thaan kudumbam..!!

Blogeswari said...

சூப்பர்! நெசமாவே தாத்தா, ஸாரி, எள்ளு தாத்தா இப்படி ஸ்பீச் குடுத்துச்சா? சும்மாவா பாடினாங்க, எண்பதிலும் ஆசை வரும்.. ஆசை வந்தால் அரிசி கிடைக்கும்..எள்ளு தாத்தாவிற்கு இன்னமும் பதவி ஆசை போகலப்பாரு.. இவரு எப்ப இந்த அஞ்சு வருஷத்தை கம்ப்ளீட் பண்ணி.. எப்ப..சரி, அதை விடு! நெசமாவே சூப்பர் போஸ்ட்!

daydreamer said...

romba over a arasiyal pesiteenga varaaru thatha unga veedu thedi

kuttichuvaru said...

ha ha.... nalla post.... Stalin intha time amaichar aagiduvaaru.... also I heard PTR also wont be speaker this time n wus be in the cabinet appdinnu..... avarukkum aasai irukkaathaa?? Dubukku Annanukku enathu vaazhthukkal!!

Anonymous said...

danks danks
paravallaye correcta nyabagam vechikittu irukkiye :))

Unknown said...

Ambi, paathu bathrama irundhukonga...potu thallida poraanga....

Gnana Kirukan said...

"2 ரூபாய்க்கு அரிசி தருவேன் உனக்கு என்று நான் சொன்னதை நம்பி வாய் பிளந்தாய், தம்பி அது உனக்கு வாய்க்கரிசியடா!"

ROTFL :))..That was a good one :)) - lol

aruna said...

Hey, you have improved a lot compared to your first few posts. & accept my 'paaraatukkal' for writing such a good one..fun & well written with the same yethugai as karunanidhi speaks!!

aruna said...

btw, I am blogrolling u

KC! said...

hey, has karunanidhi won?!! Hayyo!! Un post vida kodumai ache adhu!!!

gayathri said...

a hilarious stuff.. enjoyed reading..
vilundhu vilundhu sirichen.. ROTFL..

smiley said...

thangalukku entha postavuthu koduthara allathu oru post carduavathu koduthara? :)
nice post

Paavai said...

looks like you qualify for contesting in the next elections :)-

Gopalan Ramasubbu said...

சோற்றாலடித்த பிண்டங்கள்.. திருந்தாத ஜென்மங்கள்.. தமிழனை திருத்தவே முடியாது-apadinu sonna varu ipoo CM.enaku apadiye grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.en naadum,naatu makkalum, naasamai poovarkal nu oru dialogue iruku athu thaan nyabakathuku varuthu.good post Ambi.

Butterflies said...

hey...sema kalaiiii karunaanithikku fax anupparen...paathu aanandak kaneer vidattum

SAVANT said...

"மொத்தம் 16% வோட்டு வாங்கி இருக்கார் கேப்டன், அதுவும் தில்லா,தனியா நின்னு. இந்த சதவிதம் தேசிய கட்சினு பீத்திக்கர காங்கிரஸ் கூட வாங்கலை."

உடன்பிறப்பே !!

"மொத்தம் 16% வோட்டு வாங்கி இருக்கார் கேப்டன், அதுவும் தில்லா,தனியா நின்னு. இந்த சதவிதம் தேசிய கட்சினு பீத்திக்கர காங்கிரஸ் கூட வாங்கலை."
ஆஹா ஏமாற்றப்பட்டிருக்கிறாய் அம்பி. அல்லது ஏமாற்ற அனுமதித்திருக்கிறாய்.
காங்கிரஸ் போட்டியிட்டது 48 தொகுதிகளில். கேப்டன் போட்டியிட்டது 232 தொகுதிகளில்.
இதில் பிதற்ற என்னயிருக்கிறது? வெற்றி பெற்ற இடங்களைச் சொன்னாலே போதும். காங்கிரஸ் - 35, கேப்டன் - 1 ?
தில்லாய் தோற்றிருக்கிறார் கேப்டன் அவரை ஃபுல்லாய் தேற்றியிருக்கிறாய் நீ.
காங்கிரஸும் கேப்டனும் வாங்கியது 8.43 சதவிகித ஓட்டுக்களே. தெரியாமல் பேசாதே. தெரிந்தால் மட்டுமே பேசு.
எப்படியிருப்பினும் கேப்டன் பற்றிய உன் சிந்தனை போற்றத்தக்கது. ஒருவரை தேற்றும் உன் எண்ணத்தை நான் வரவேற்கிறேன்.

நரி, சிங்கம் என்று கானகம் வரைக் கற்றறிந்திருக்கிறாய், அப்படியிருந்தும் அம்பியெனும் என் தம்பியே! அம்மையார் ஏசி காரில் ஆசி வழங்கிய தேர்தல் நாடகம் உனக்கு தெரியாது போனதேன்? ஒருவேளை தூங்கிக்கொண்டிருந்தாயோ? நீ தூங்கியதால் பார்த்தாயா... வாயிலுக்கு அரிசி என்பது வாய்க்கரிசியாகி விட்டது. பரவாயில்லை கண்மணியே! உதயசூரியன் உதித்துவிட்டது ரூ.2 அரிசியும் கையெழுத்தாகிவிட்டது. எழுந்து விடு. இனியும் உறங்காதே.

ரசம், கூட்டு, ஊறுகாய் என உன் பசியினை சொல்லியிருக்கிறாய் எங்கள் விருந்தோம்பலைத் தெரிந்தும் வைத்திருக்கிறாய் ! உனக்கு என் பாராட்டுக்கள். அதில் தயிர்சாதத்தை கவனமாகத் தவிர்த்திருக்கிறாய் அது அம்மையாருக்கு நீ வழங்கியிருக்கும் இட ஒதுக்கீடா? எப்படியிருப்பினும் உன் பலகட்சி பற்றுதலை என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை. தன் ஆட்சி காலத்தில் அம்மையார் உன்னை யானை மேல் ஏற்றிவிட்டாரா? இல்லை உங்கள் உம்மாச்சி கோயிலில் மதிய உணவு அளித்த நன்றி விசுவாசமா? இல்லை எங்கள் திராவிடர்களைக் காலில் விழவைத்த அந்த அகம்பாவத்துக்கு நீ அளிக்கும் அக்மார்க் முத்திரையா?

கலர் டீவி என்பது ஒரு உபகரணம் தான். என் பேரனின் சன் டிவி மட்டும் பார் என்று ஒருபொழுதும் நான் சொல்ல மாட்டேன். சன் டிவியும் பார் இது தான் என் வேண்டுகோள். அறிவினை வளர். ஆராய்ச்சி செய். திராவிடம் வளர். இமயம் தொடு. அதில் இந்தியக் கொடி நடு. வீரம் விளை. வெற்றி பெறு. அறிஞர் அண்ணாவின் செல்வாக்கைக் குலைக்காதே சொல்வாக்கை ஜிகிடிகளுக்கும் பிகருக்கும் செலவாக்காதே. என் காலம் முடியப் போகிறது ஒப்புக்கொள்கிறேன். பிகருக்கு பெருங்காயமும் ஜிகிடிக்கு ஜிஞ்சரும் மிக முக்கியம் பார் அதைவிட முக்கியம் அவர்களைப் பற்றி நாம் பதிவிடுவது. வேண்டாம் தம்பியே பிகரும் ஜிகிடியும் வெளித்தோற்றம் தான். உண்மை உணர்.

அருமை புதல்வன் இளவரசன் ஸ்டாலின் என்று அழகாக நையாண்டி பேசியிருக்கிறாய். வாழ்த்துக்கள். உன் வார்த்தைகளில் ஒப்புமையும் இருக்கிறது ஒப்பனையும் இருக்கிறது. வளர்த்துக்கொள். நான் நினைத்திருந்தால் என் மகனையும் உன்னைப் போலொரு கணிப்பொறியாளனாக்கியிருக்க முடியும். அல்லது நீ சொல்லும் ஜிகிடிகளுடன் அமெரிக்காவில் கபடியாட விட்டிருக்கலாம். அல்லது சன் டிவி போல் ஒரு மின் டிவி நிறுவியிருக்கலாம். யோசித்து பார்த்தாயா? அரசியலில் எவ்வளவுக்கெவ்வளவு லாபம் உண்டோ அதைவிட நஷ்டம் அதிகம். சிறை சென்ற எந்த தகப்பனும் மகனைச் சிறைக்கனுப்ப நினைக்க மாட்டான். அப்படி நினைப்பவன் ஒரு உண்மையான தகப்பனே இல்லை. பொது வாழ்க்கை ஸ்டாலின் அவனாகவே முன் வந்து தேடிக்கொண்டது. நாட்டின் மேல் நீ வைத்திருக்கும் நல்லெண்ணத்துக்கு என் நன்றி. அதற்காக அதிகம் பேசாதே.

என் பேரன் பற்றிய உன் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறேன். அவனுக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தது என் பாசத்தினால் தான். கொஞ்சம் யோசித்து செய்திருக்க வேண்டும். பாசம் கண்ணை மறைத்து விட்டது. இதை ஒப்புக்கொள்கிறேன்.

தமிழகத்தின் கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றைப் பார். பெரியாரும், அண்ணாவும், எம்ஜிஆரும் நானும் விதைத்த விதைகள் இன்று மரமாகியிருக்கும். இதில் நானெழுதிய கடிதங்களிலிருந்து IAS வினாக்கள் வருவது தவறென்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. வள்ளுவர் கோட்டத்தையும், வள்ளுவன் சிலையையும் பற்றி வினாக்கள் வந்தால் ஒப்புக்கொள்வாயா? விவரம் உணர். அரசியல் பிரம்மாண்டம் உனக்கு இன்னும் புலப்படவில்லை என்று தோன்றுகிறது.

எந்த உயர்குடி சமுதாயம் எங்களை ஒதுக்கி வைத்ததோ அவர்களுக்கு ஆதரவாக நானில்லை என்பது தானே உன் வேட்கை. வேட்கை உயர்ந்தது தான். உறுதி கொள். உண்மையை ஆராய். விஷயம் விளங்கும். வெற்றி பெறு. வாழ்த்துக்கள். என் வாழ்த்தை நீ கேட்காவிடிலும் ஏற்காவிடிலும் வயதானவன் வாழ்த்து உனக்கு வசந்தத்தையே சேர்க்கும். வாழ்க வளர்க ! - மு.க

Syam said...

Jaya TV, SUN TV rendum paartha effectu....sooberunga annow.....

shree said...

dey dey ambi, unakku yenda indha veenn velai. padikka koodadhavanga padichu unna sulukkeduthuda poranga jaakradhai

Geetha Sambasivam said...

அம்பி, சொல்லவே இல்லையே ஊருக்குப் போறதா? ஒரு வாரமா நான் என்ன நினைச்சேன்னா ஆட்டோ எதும் தான் வந்திடுச்சோனு. பயந்துட்டேன் போங்க.

Harish said...

yeppadulerundu Murasoli kku neenga editor aaneenga thalaiva?

Gopalan Ramasubbu said...

Ambi guruve nan ungalai tag paniten.seekerama eluthunga.:)

Manoj said...

விஜயகாந்த்துக்கு ஓவா?! காங்ரெசைவிட பெரிய ஆளா?! நின்னது எத்தனை, ஜெயிச்சது எத்தனை என்று கணக்கு பாரும் ஓய்! அப்ப புரியும். காங்ரெஸோட ஹிஸ்ட்ரீ, ஸ்ட்ரெந்த் எதுகிட்டயும் எந்த கட்சியும் வரமுடியுமா?

அப்புறம், அம்மா மட்டும் என்னவோ உங்க வீட்டுக்கு கிண்ணத்துல பால் சாதம் கொண்டு வந்து ஊட்டின மாதிரி பேசறீங்க? குடும்பம்ங்கறது கலைஞரோட வீக்னெஸ், பணம், அகங்காரம்ங்கறது அம்மாவோட வீக்னெஸ். (பன்னீ(ர்)செல்வம், அம்மா கால்ல விழுந்தா, 'இதெல்லாம் எதுக்கு, எழுந்திருங்கோ'-ன்னு சொல்லாம, ஆசீர்வாதம் பன்னி எழுப்புராங்க?!). ஆட்சிக்கு வந்தவுடனே விலையேற்றம், பஸ்-பாஸ் நிறுத்தம் எல்லாம் மறந்ததா?

இந்த அம்மா, சினிமாவுல அம்மா வேஷம் போடத்தான் லாயக்கு. அந்த கிழவர், பேரன் பேத்தியெல்லாம் கூப்டு வெச்சி, 'செல்லமே, கன்னே'-ன்னு கொஞ்ச தான் லாயக்கு. புதுசா யாருமே வரமாட்டாளா?

shree said...

ambi, u r tagged, check out my blog :)