சாட்டிலைட் டிவிகளும் எப்.எம்களும் தமிழகத்தில் வராத காலத்தில் ரேடியோ தான் நம் மக்களுக்கு பொழுதுபோக்கு. அதில் நாடகம் எல்லாம் கூட ஒலிபரப்புவார்கள். ஒரு நாலு பேர் சுத்தி உக்காந்து கதாபாத்ரமாகவே மாறி டயலாக் பேசுவார்கள். ரொம்ப சுவாரசியமா இருக்கும். அதில் வரும் குரல்கள் நமக்கு ரொம்பவே பரிச்சயமா இருக்கும். ஏன்னா ராஜ ராஜ சோழனுக்கு குரல் குடுத்த அதே ஆள் தான் ஒட்டக்கூத்தருக்கும் குரல் குடுப்பார். எபப்டி ஜோதிகாவுக்கு குரல் குடுத்த அதே அம்மணி (சவிதா) சிம்ரனுக்கும் டப்பிங்க் குடுக்கறாரே அதே மாதிரி.
இப்படி உன்னிப்பாக கேட்டு வளந்ததாலோ என்னவோ பள்ளியில் படிக்கும்போதும் என்னையறியாமலே ஒரு கதை சொல்லியாக திகழ்ந்து இருக்கிறேன். பேச்சு போட்டிக்கு போய், கதை சொல்லும் போட்டியில் சும்மா கதை சொல்லி, நவராத்திரிக்கு வெத்தலை பாக்குடன் அரைத்த சட்னியை வழிச்சு போட உதவும் பேசின் கிண்ணங்களை பரிசாக வாங்கியதும் உண்டு. பேச்சு போட்டியில் மண்ணை கவ்விய விவரம் இங்கு தேவையில்லை.
அந்த அனுபவம் எல்லாம் இப்போ என் ஜூனியர் சாப்பிட அடம் பிடிக்கும் போது கைகுடுக்கிறது. நித்தமும் எங்க வீட்டில், அனுமார் கடல் தாண்டி இலங்கை சென்று சீதைக்கு கனையாழி குடுத்து விட்டு திரும்புகிறார். அனுமாருக்கே இப்படி தினமும் இலங்கை செல்வது போர் அடித்தாலும் என் மகனுக்கு மட்டும் போரடிப்பதில்லை. சமயத்தில் அனுமார் பொம்மையை தூக்கி கொண்டு சொய்ய்யிங்க்க்னு நான் ஸ்பெஷல் எபஃக்ட் எல்லாம் குடுத்து கொண்டு பறக்க வேண்டி இருக்கு. குழந்தைகள் கதை கேட்கும் போது அந்த உலகத்துக்கே சென்று விடுகிறார்கள். அதனால் தான அவர்களுக்கு அலுக்க வில்லை போலும்.
இன்னும் மொழி, அதன் எழுத்துக்கள், இலக்கணமெல்லாம் அறியப் பெறாத வயதில் (3 முதல் 6 வயது வரை) கதைகளின் மூலம் பயிற்றுவித்தல் ஒரு சிறந்த முறை என அறிகிறேன். இப்படி கதை கேட்டு வளந்த குழந்தைகளின் கற்பனை திறனும், படைப்பு திறனும் அபாரமாக இருக்குமாம். (அப்படியா..?#தன்னடக்கமாம்)..
மான்டிசரி முறையிலும் இத்தகைய கதை சொல்லல் முறை உள்ளதாமே. யாராவது வந்து சாட்சி சொல்லுங்க பாப்போம்.
பதிவர் விதூஷ் Scheme என்ற அமைப்பின் மூலம் ஒரு கதை சொல்லியாக திகழ்ந்து வருகிறார் என ஸ்ரீதர் நாராயண் பதிவின் மூலம் அறிந்தேன். அவருக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.
இதைப் போன்ற முயற்சிகள் ரொம்பவே அரிதாக நடைபெற்று வருகிறது. யாருக்கும் நேரம் இல்லை, அதை விட பொறுமை இல்லை. பெண்கள் இதழில் "என் குழந்தைகளுக்கு முள்ளங்கினாலே அலர்ஜி. ஆனா அவங்களுக்கு தெரியாம முள்ளங்கி போண்டா செஞ்சு குடுத்தேன், மிகவும் ப்ரியமாக சாப்பிட்டார்கள். என்னவர் கூட (எப்போதும் போல) என்ன? ஏது?ன்னு கேக்காமயே சாப்பிட்டார்" என வாசகர் கடிதம் எழுதும் மாதர் சங்க பெண்மணிகள் இதை மாதிரி அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லியாக இருந்து அந்த அனுபவத்தையும் கடிதமாக எழுதலாம்.
பெண்களூரில் இதை மாதிரி கதை சொல்லியாக இருப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு. ஒரே அப்பார்ட்மெண்டில் ஆறு வங்காளிகள், நாலு மல்லு, மூனு தமிழர்கள், கொசுறாக சில கன்னடர்கள், மராத்திகள் என இருப்பார்கள். என்ன தான் 'ஏக் காவ் மேன்' ஹிந்தியை மைய மொழியாக கொண்டாலும் தாய் மொழியில் வரும் திருப்தி வேறு எதிலும் வருவதில்லை. மேலும் இங்குள்ள குழந்தைகள் இங்க்லிஸில் பொளந்து கட்டுவார்கள். நாம் தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் கதை சொன்னாலும் குழந்தைகள் கொட்டாவி விடும் வாய்ப்புகள் அதிகம். "டோன்ட் போர் அஸ் அங்கிள்!னு நமக்கு ஆப்படித்து விட சாத்தியங்கள் இருப்பதால் நான் இந்த முயற்சியில் ஈடுபட வில்லை.
11 comments:
:)))
கதை கேட்க குட்டீஸ் ரெடின்னா நானும் நல்ல்லா கதை கட்டுவேன்.. என்பொண்ணு எப்பவும் கோயில் போனா இந்த சிலை பத்தியக் கதை இன்று இரவு சொல்லியே ஆகனும்ன்னு சொல்லிடுவா.. ஆனா பையனுக்கு ஒன்லி அனிமேசன் கதைகள் தான் வேணும் அதும் பீம், ஹனுமான் , கடோத்கஜ்..ன்னு ..
பொம்மை வாங்கினா கூட ஹனுமான் தான் வாங்கறான்.. வால் வாலோட தான் சேருமோ..? :)
ம்ம்ம்ம்ம் அப்புறம்?
இந்தப் பதிவின் மூலம் நீங்க தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சொல்லும் கருத்து என்ன அம்பி??
//ஜோதிகாவுக்கு குரல் குடுத்த அதே அம்மணி (சவிதா) சிம்ரனுக்கும் டப்பிங்க் குடுக்கறாரே// - பொது அறிவுக் களஞ்சியம் ஐயா நீர்..
//பேச்சு போட்டியில் மண்ணை கவ்விய விவரம் இங்கு தேவையில்லை.// - தேவையே இல்லை..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//சமயத்தில் அனுமார் பொம்மையை தூக்கி கொண்டு சொய்ய்யிங்க்க்னு நான் ஸ்பெஷல் எபஃக்ட் எல்லாம் குடுத்து கொண்டு பறக்க வேண்டி இருக்கு//
this is super
//பள்ளியில் படிக்கும்போதும் என்னையறியாமலே ஒரு கதை சொல்லியாக திகழ்ந்து இருக்கிறேன்.//
வாவ்! நீங்களுமா? பேச்சுப் போட்டிகள்னா வெறுமன மனப்பாடம் பண்ணி உணர்ச்சிகரமா பேசறதுதானே. ஆனா சுவாரசியமா கதை சொல்றது ஒரு அனுபவம்தான் இல்ல..
//குழந்தைகள் கதை கேட்கும் போது அந்த உலகத்துக்கே சென்று விடுகிறார்கள். அதனால் தான அவர்களுக்கு அலுக்க வில்லை போலும்.//
நம்ம வீட்டு ஜூனியர்... அவரே கதை சொல்றார் இப்ப. அதுவும் ஒரு இன்பம்தான் :)
நிச்சயம் நீங்கள் முனைந்து கதை சொல்ல முயற்சி எடுங்கள். நான் தற்சமயம் Toastmasters என்ற அமைப்பில் 5-7 நிமிடங்கள் பேசுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். சுவையாக, சுவாரசியமாக சில கதைகள் சொல்ல வேண்டும் என்பதே இலக்கு. அதற்கு இன்னமும் நிறைய பயிற்சி வேண்டும்.
உயிரே படத்தில் ஷாருக்கான் ரேடியோவில் கதை சொல்வதை பார்த்திருக்கிறீர்களா? மிகவும் அருமையான பாத்திர படைப்பு. எனக்கு பிடித்திருந்தது.
உங்களுடைய பதிவு மிகவும் அருமை :)
"பேச்சு போட்டியில் மண்ணை கவ்விய விவரம் இங்கு தேவையில்லை."
We must hear that too! :)
திருமதி. அம்பி அவர்களுக்கு, உங்கள் வீட்டில் பூரிக்கட்டை இன்னும் உடையவில்லை என்பதாக அறிகிறேன். என்னிடம் ஸ்டாக்கில் இன்னும் பல உள்ளன. வந்தால் வாங்கிக் கொள்ளலாம்.
அட்லீஸ்ட் தற்போதைக்கு 'உங்களைப் போல இவ்வளவு அருமையாகச் சமைத்துக் கொண்டே கதை சொல்லத் தெரியாததால் நானும் இந்த முயற்சியில் ஈடுபட வில்லை'என்று சொல்லி விடவும்.
அன்புடன்
கெ.பி.
பி.கு.:ஆமா, பேச்சுப் போட்டியில் அம்பியை மண்ணைக் கவ்வ வைத்ததும் வைப்பதும் நீங்க தானே?
//மூனு தமிழர்கள்,//
அந்த மூ'ணு' குழந்தைகளுக்காகவும் கொஞ்சம் பறக்கிறது:)?
ரொம்ப சந்தோஷமா இருக்கு கேக்க. குழந்தைகள் கதைக்கு அவ்வளவு நன்னா respond பண்ணுவா. எங்க சின்ன வயசில பாட்டி, பெரியபாட்டி சொல்லித்தான் பாதி இதிகாசம் மனப்பாடம். அப்ப டிவி கிவில்லாம் ஏது? நான் Saturdays Sundays ல என் ஓய்வு நேரங்களில் குழந்தைகளுக்கு value based கதைகள் activities , songs சொல்லிக் கொடுத்துண்டு வரேன்.அது தரும் மன நிம்மதி என் PROFESSION தர JOY க்கு EQUIVALENT. என் class ல இருக்கற kiwis எல்லாத்துக்கும், ஹனுமான், ஜாம்பவான், பீமன் க்ரிஷ்ண்ன் ராம் அத்துப்படி.நம்ப பசங்களும் எல்லா சமய prayersம் சொல்லுவாங்க . சின்ன நண்டு Benjamin காயத்ரி, பஜன், கணேஷ் ஸ்லோகம் சொல்லற அழகு தனி. குழந்தைகள் நம்ம கிட்ட கத்துண்டு சரியான சமயத்துல நமக்கு சொல்லிக்கொடுக்கவும் செய்வா. பாக்க கேக்க தெய்வ அருள் வேணும்!! தந்திருக்கணும். ஆசிர்வாதம்.
வாலுக்கு வாலு தான் பிறக்கும்னு கூட சொல்லலாம் முத்தக்கா. :P
திவாண்ண, கதையும் முடிந்தது வெண்டைகாயும் காய்ச்சது. :))
பாஸ்டன், பிளாக் இருந்தும் பதிவெழுதாம டபாய்க்கற சில பேர் கருத்து எல்லாம் கேக்கப்படாது. :P
நன்றி சுபா.
ஸ்ரீதர், எங்க ஆபிஸ்ல டோஸ்ட் மாஸ்டர் இப்போ இல்லை. பெண்களூர்ல ஏகப்பட்ட கிளப் இருக்கு. ஆனா வெயிட்டா சார்ஜ் பண்றாங்க. உயிரே படத்தை இங்க சொல்ல நினைத்தேன், மறந்து விட்டேன். தாங்கீஸ். :))
தி கிட், வேணாம், அளுதுதுடுவேன். :p
கெ.பி, ஒழுங்கா தானே இந்த பதிவை எழுதி இருக்கேன்..? ஏன் வைலன்ஸ்..? பி.கு.வை பத்தி நோ கமண்ட்ஸ். :))
ரா.ல. சு(கு)ட்டியதுக்கு நன்றி ஹை. :)
ஜயஸ்ரீ, கலக்கிட்டீங்க போங்க. நமக்கு பிடிச்ச விஷ்யங்களை செய்யும் போது வரும் ஆத்ம திருப்தியே அலாதியானது இல்லையா..? :)
Post a Comment