Friday, August 13, 2010

மனீஷாவும் சோன் பப்படியும்

சில பதார்த்தங்களுக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள்? என ரூம் போட்டு ஆராய்ச்சி செய்வதை விட கையில் கிடைத்தால் லபக்குனு முழுங்கி விட தோணும். சோன் பப்டியும் அப்படி தான். மாலை நேரங்களில் தெருவில் டிங்க் டிங்க்னு மணி அடித்து கொண்டு தள்ளு வண்டியில் ஒரு கண்ணாடி ஜாடியில் வெள்ளை வெளேர்னு இருக்கும். அந்த ஜாடிக்குள் லாவகமா கையை விட்டு ஒரு கைப்பிடி சோ-பாவை ஒரு பேப்பரில் போட்டு தருவார்.

எனக்கு தெரிந்து சோ-பாவை யாரும் தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ வீட்டில் செய்தது இல்லை என நினைக்கிறேன். சோன்பப்படி செய்வது எப்படி?னு எந்த பதிவும் எனக்கு தெரிந்தவரை தமிழில் வந்ததில்லை. கூகிளில் தேடினால் ஆங்கில பதிவுகள் காண கிடைக்கின்றன. ராஜஸ்தானிகள் - லாலா மிட்டாய் கடை வைத்திருப்பவர்கள் தான் செய்கிறார்கள். ஹால்டிராம்ஸ் காரர்கள் கட்டி கட்டியாக அழகா பீஸாக பாக் செய்து பேக்கரிகளில் வைத்திருக்கிறார்கள்.

யாராவது தங்கள் வீட்டுக்கு என்னை சாப்பிட கூப்பிட்டால் நான் வாங்குவது கால் கிலோ சோ-பா தான். ஒரு கட்டத்தில் நான் அந்த பேக்கரிக்கு போனாலே கடைகாரன் சோ-பாவை எடுத்து பேக் பண்ண ஆரம்பித்து விட்டான். தெரிந்த சிலர் வீட்டுக்கு ரெண்டாம் தரம் போன போது, "என்ன அம்பி, சோன் பப்டியா?" என அவர்களே கேட்க ஆரம்பித்து விட்டார்கள். :)

கேசரியெல்லாம் கிண்டி டிபன் பாக்ஸில் போட்டு கொண்டு போக முடியாது. சூடு ஆறி விடும் என்பது மட்டுமல்ல மத்த ஸ்வீட்ஸ் எல்லாம் ரொம்பவே காஸ்ட்லி, மேலும் சோ-பா பாக்கெட்டை நம் கண் முன்னாடியே பிரித்து நமக்கும் ஒரு பீஸ் தருவார்கள். ஹிஹி.

ஆத்தா நான் பாசாயிட்டேன்!னு ஹிந்தியில் கத்தி கொண்டே வரும் அமிதாப், ஜிதேந்திரா, சாருகான், சல்மான்கான்களுக்கு அவர்கள் அம்மா மஞ்ச கலர் லட்டுவோ அல்லது சோன் பப்டியையோ தான் ஊட்டுவார்கள். கவிஞர் வாலிக்கும் என்னை மாதிரி சோன் பப்டி பிடிக்கும் போல. இந்தியன் படத்தில் 'மாயா மச்சீந்திரா' என ஆரம்பிக்கும் பாடலில் சோன் பப்படி! என அழுத்தம் திருத்தமாக எஸ்.பி.பி குரலில் மனீஷா கொய்ராலாவை வர்ணித்து இருப்பார். அந்த வரிக்கு தியேட்டரில் நான் மட்டும் கை தட்டினேன், மனீஷாவுக்காக இல்லை சோ-பாவுக்காக! என நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் நம்ப போவதில்லை.

சோன் பப்டிக்கு விக்கி பக்கங்கள் எல்லாம் இருக்கு. என்ன தான் சோ-பா செய்வது எப்படின்னு பல ரெஸிப்பிகள் வந்தாலும் லாலா மிட்டாய்காரகளின் ரெஸிபி இன்னமும் ரகசியமா இருக்குனு கேள்விப்பட்டேன்.

இங்கு பெண்களுர் தெருக்களில் சோ-பா வண்டி எல்லாம் வருவதில்லை. சென்னையிலும் அதிகம் பாத்ததில்லை. ஒரு வேளை சில ஏரியாக்களில் வரலாம். இன்றைய விலைவாசியில், பாவம் இந்த சோன் பப்டிகாரர்கள் எப்படி தாக்கு பிடிப்பார்களோ..? ரேஷன் கார்டு இருந்தா தானே ஒரு ரூவாய்க்கு அரிசி கிடைக்கும்..? இவர்களுக்கும் ரேஷன் கார்டு இருக்குமா? ம்ம், கடவுள் ஒவ்வொரு சோன் பப்டி பாக்கெட்டிலும் ஒருத்தர் பெயரை எழுதி வைத்திருப்பான் என்ற நம்பிக்கை தான் இவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

18 comments:

சென்ஷி said...

//மேலும் சோ-பா பாக்கெட்டை நம் கண் முன்னாடியே பிரித்து நமக்கும் ஒரு பீஸ் தருவார்கள். ஹிஹி.//

அக்மார்க் அம்பி குசும்போட :))

செம்ம கலக்கல் இடுகை...

சோன் பப்டி கடையில வாங்கி சாப்பிடுற இருக்கற ஆனந்தத்தை விட தெருவில அந்தத் தள்ளுவண்டியில வாங்கி பஞ்சு பஞ்சா சாப்பிடுற சுகம் தனி :)))

Vijay said...

சென்னை பீச்சில் சில சோ-பா காரர்கள் திரிவார்கள். முன்பெல்லாம் 1 ரூபாய்க்கெல்லாம் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது 5 ரூபாய்க்குக் கூட ஒரு கவளம் தான் கிடைக்கின்றது. நகரத்துக்கு குடிபெயர்ந்தபின் சோ-பா’க்களும் தொலைந்து போனதன் லிஸ்டின் சேர்ந்து விட்டது. :(

ஷைலஜா said...

என்ன இருந்தாலும் மைபா முன் இந்த சோ பா வருமா அம்பி?:) எம்டி ஆர் சோன்பாப்டி ரொம்ப நல்லாருக்குமே! ஆனா இதென்ன ஸ்வீட்டோ செய்யவும் ஒழுங்கா வராது வாயிலபோட்ட உடனே மாயமா காணாம போய்டும்!!நிஜ சோபா மைபாவைவிட அம்பி பதிவு தான் வழகக்ம்போல ஜோர்(ஐஸ்லாம் இல்ல:):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சோன் பப்டி கடையில வாங்கி சாப்பிடுற இருக்கற ஆனந்தத்தை விட தெருவில அந்தத் தள்ளுவண்டியில வாங்கி பஞ்சு பஞ்சா சாப்பிடுற சுகம் தனி :)))//

ding ding ding
ரிப்பீட்டேய்..

Anonymous said...

நல்ல பதிவு நன்றி அம்மாஞ்சி :-)

பெங்களூர்ல தள்ளுவண்டி சோன் பப்டி கிடைக்குதே - எங்க BTM Layout ஏரியாவிலே நான் நிறைய வாங்கிச் சாப்டிருக்கேன் :)

- என். சொக்கன்,
பெங்களூரு.

திவாண்ணா said...

விரைவில் அம்பி பிடிஎம் லே அவுட் க்கு ஷிப்ட் ஆவதை எதிர்பாருங்கள்!

Sridhar Narayanan said...

//இந்தியன் படத்தில் 'மாயா மச்சீந்திரா' என ஆரம்பிக்கும் பாடலில் சோன் பப்படி! என அழுத்தம் திருத்தமாக எஸ்.பி.பி குரலில் மனீஷா கொய்ராலாவை வர்ணித்து இருப்பார்.//

இப்படி ஒரு பாட்டைக் கேட்டுட்டு ஒரு பதிவு எழுதிட்டீங்களா? :)

உண்மையை சொல்லுங்க... முதல்ல ஜாகீர் ஹுசைன் தபலாவை பத்திதானே எழுத ஆரம்பிச்சீங்க? :))

sriram said...

என்னாச்சு தல, ஏன் திடீர்னு கேசரியை டைவர்ஸ் பண்ணிட்டு சோ.ப வை பிடிச்சிட்டீங்க?? ஏதாவது ராஜஸ்தான் பொண்ணு டீம்ல புதுசா சேந்துருக்கா??


என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Sanjai Gandhi said...

//எனக்கு தெரிந்து சோ-பாவை யாரும் தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ வீட்டில் செய்தது இல்லை என நினைக்கிறேன்.//

ஏன்னா, சோ.பாலகிருஷ்ணன் வீட்டில் செய்யும் பொருளல்ல.. :)

அபி அப்பா said...

@சஞ்சய்

ஏன்? நல்லா பொசு பொசுன்னு எனக்கு அவரை பார்த்தா அப்படிதான் இருக்கும்:-)) நல்லவரு.

அந்த பச்சை கலர் குடுவை பார்க்க நல்லா இருக்கும். தவிர ஒரு கை நிறைய அள்ளி அய்யோ இத்தனையா என நாம் ஆசைப்படும் போது ஒரு உதறு உதறி கொஞ்சமா ஒரு பேப்பரில் வைத்து லாவகமா அமுங்காம மடிச்சு தரும் அழகும் நல்லா இருக்கும் அம்பி!

Shobha said...

சூபர் அம்பி. நீங்கள் கட்சி மாறியது தெரிந்தால், கேசரிக்குக் கோபம் வரும்.
பீஸ் சோபா எல்லாம் சரியில்லை ,அள்ளித் தின்றால்தான் ஜோரு..
கும்பகோணத்தில் ரொம்ப பேமஸ் .
நில்கிரிஸ் சூப்பர்மார்க்கெட்டில் கிடைக்கும்


சோபா oops ஷோபா

Anonymous said...

son papdi alias sopa....kallakkal.andha vandikaran vikkara sonpapdikku aadhikaalathil veetla "thada".hmm...romba assapattrirukkiren...kidaithadhillai....haldirams sonpapdi andha kuduvai sonpapdi madhiri illai...en vottu gundu gulopjamunukku...mayamachindravil sonpapdi mattum rasithal....andhaper mattum dhaana nyabagam varanum...manisha enga nybagathhukku vandhannga???
???

nivi.

Vijay said...

அம்பி,

டிங்..டிங்...டிங்... எவ்ளோ தூரம் ஓடி இருக்கோம் தெரியுமா வண்டி பின்னாடியே? ம்ம்..ம்... எதாவது ஒரு தெருவுல யாராவது நமக்கு தெரிஞ்சவங்க வாங்கினா நமக்கும் கொஞ்சம் கிடைக்குமேன்னு நப்பாசைதான்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nostalgic post...reminded of days we ran behind the so-pa cart...hmmmmm.....

uthira said...

ethuvume matter kidaikama ezhuthanumenu etho ezhuthina mathiri iruku

இனிய தமிழ் said...

நல்ல அனுபவம் தான்...

Unknown said...

Just happened to see this blog.
Very simple & great writting. Cool.Ambi nice writting.

Raguraj Sivanantham said...
This comment has been removed by the author.