Thursday, September 09, 2010

விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும்
கலந்தெனக்கு நீ தருவாய்!
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
சங்கத் தமிழ் இந்தா!

அவ்வை மூதாட்டி எழுதியதை யாரோ ஒரு புது கவிஞர் இப்படி மாத்தி எழுதியதாய் படித்த நினைவு.

நாடு இருக்கற நிலமையில் மக்களும் இப்படி தான் பிள்ளையாரிடம் வேண்டிப்பாங்கன்னு எனக்கும் தோணுது.

ஆங்! எல்லாருக்கும் ரம்ஜான் மற்றும் விடுமுறை தின(அதான்பா! வினாயக சதுர்த்தி) நல் வாழ்த்துக்கள்.

8 comments:

எல் கே said...

dont pull words. enaku ramzan leave illa, saturdavyuvum leave illa

ambi said...

எல்கே கேக்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா..? :))

ஆக ஆளில்லாத கடையில ரெண்டு நாள் டீ ஆத்த போறீங்களா..?

ராமலக்ஷ்மி said...

பெங்களூரு வாழ் பெருமக்களுக்கு விடுமுறைதான்:)! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

// எழுதியதாய் படித்த நினைவு//

நம்பிட்டோம்:)!

திவாண்ணா said...

ஏம்பா இருக்கிறதைதானே கொடுக்க முடியும்? இன்னைய நிலமையிலே யாரும் சங்கத்தமிழை கொடுக்க முடியாது போல இருக்கே!

அபி அப்பா said...

அம்பி நான் என்ன இளிச்சவாயனா? பால்,தேனும், பாகும்(வெல்லம்) பருப்பு(பாதாம்) இதல்லாம் மொத்தமா கூட்டினாலே 100 ரூபாய்க்கு வாங்கிடலாம். "சங்கதமிழ்" 500 ரூபாய் ஆகுது. என்ன கொடுமை? நான் பிள்ளையார் என் கிட்ட 100 ரூபாய் முதலீடு செஞ்சா நான் 500 ரூபாய் பதில் மொய் எழுதனுமா? இதல்லாம் கதைக்காவாது. பழையபடியே வச்சுக்கலாம். பட் ஒன் கண்டிஷன் அவரு சங்கத்தமிழ் (மூன்று காப்பி) கலைஞர் கையெழுத்து போட்டு வாங்கி தரனும். ஆமா சொல்லிட்டேன்:-))

விடுமுறை தின வாழ்த்துக்கள்!!!

மணிகண்டன் said...

அபி அப்பா, அம்பி இருக்கற ஊருல பால், தேனு, பாதாம் பருப்பு எல்லாம் 50 ரூபாய்க்கு ரேஷன்ல கிடைக்கறது இல்ல. கலைஞர் ஆட்சி இல்ல. அது தான் அவர் இப்படி தெரியாம எழுதிட்டார். நீங்க கலைஞர் கிட்ட பேசி கரெக்ட் பண்ணி பெங்களூரை தமிழ்நாட்டுல இணைக்க சொல்லுங்க. புண்ணியமா போகும். ப்ளீஸ்.

எல் கே said...

//ஆக ஆளில்லாத கடையில ரெண்டு நாள் டீ ஆத்த போறீங்க///
atha en kekara, ippa puthusa oru proejct, sariya saturday than calls kilium

Shri said...

samaya nachunu adichirukeenga!