சமீபத்தில் ஒபாமாவுக்கு புத்த மதத்தில் சில சந்தேகங்கள் வந்து உடனே தலாய் லாமாவை மீட் பண்ணி தன் டவுட்டை க்ளியர் செய்து கொண்டார் எனபது நமக்கு தெரிந்ததே.
தலாய் லாமா வீட்டுக்கு பால்காரன், பேப்பர் காரன், மளிகைகாரன்னு யார் பாக்கி கேட்க போனா கூட சீனாவுக்கு அடி வயிற்றில் புளியை கரைக்கும். இப்போ அமைதிக்காக நோபல் பரிசை வாங்கிய மன்னிக்கவும், பெற்றுக் கொண்ட ஒபாமாவே த-லாமாவை மீட்டினார் என தெரிந்ததும் சீனா அவசர அவசரமாக அமெரிக்க தூதுவருக்கு சம்மன் அனுப்பி காச்சு காச்சென காச்சியது.
"Tibet is an inalienable part of the inviolable territory of China, and the issues concerning Tibet are purely internal affairs of China."
"Tibet is an inalienable part of the inviolable territory of China, and the issues concerning Tibet are purely internal affairs of China."
அமெரிக்க தூதுவருக்கு இந்த சம்மன் எல்லாம் சாம்பார் வடை மாதிரி என்பதால் அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. நீங்க குடுத்த டீயில் அடுத்த தடவை கொஞ்சம் ஏலக்காயை தட்டி போட்டு தாங்க, எனக்கு ரொம்ப பிடிக்கும்! என கூலாக சொல்லி விட்டு வந்து விட்டார்.
நிற்க, இதே சீனா தான் இந்தியாவின் ஒருங்கிணந்த பகுதியான அருணாச்சல பிரதேசத்து பாறை, குட்டி சுவர்களில் "சீனா வாழ்க!", "இதுவும் சீனா தான்!" என கிறுக்கி வைத்தது. நாம சீனா தூதுவரை கூப்பிட்டு காய்ச்சினோமா? என்றால் இல்லை என்பது வருத்தமான செய்தி. நமது பிரதமர் தந்து கூட்டணி கட்சிகளிடம் ஒரு யோசனையாவது கேட்டு இருக்கலாம்.
அப்படி கேட்டு இருந்தால் உடனே மாநில கட்சிகளின் கிளைகள்- அருணாச்சல பிரதேசத்தில் துவங்கி இருக்கலாம். அங்கு நடக்கும் தேர்தலில் மாநில கட்சிகளும் போட்டியிட்டு இருக்கும்.
"வருங்கால முதல்வரே வருக!" "எதிர்கால அருணாசல பிரதேசமே வருக!"னு எல்லா சுவர்களிலும் நாம பெயிண்ட் அடிச்சு இருக்கலாம்.
தினமும் ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர்னு எப்பவுமே அந்த மாநிலம் பிசியாக இருக்கும்.
பிரசார கூட்டங்கள் என் வந்து விட்டால் நம்மூர் பேச்சாளர்களின் திறமைக்கு ஒரு அளவே கிடையாது. நாலு முக்கு சேருகிற இடத்தில் ஒரு மேடையை போட்டு "பீஜிங்கும் இந்தியாவின் ஒரு பகுதி தான்!" 2016ல நாங்க தான்டா பீஜிங்கில் ஆட்சி அமைப்போம்! என போகிற போக்கில் சொல்ல வைத்து விடலாம். என்னடா இது? முதலுக்கே மோசமாயிடும் போல!ன்னு சீனா கப்சிப்னு அடங்கிடும்.
தமிழகத்தின் ஒரு கட்சி அங்க போனா மத்த கட்சிகள் சும்மா இருக்குமா? அருணாசல பிரதேசத்து குழாய்களில் தண்ணி வரலை, கக்கூஸ் இல்லைனு தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடத்தலாம். இத்தனை நாளா எல்லாப் பயலும் சும்மா தானே இருந்தாங்க, தீடீர்னு எப்படிடா இவ்ளோ கூட்டம்னு சீனா மண்டைய பிச்சுக்கும்.
இதெல்லாம் சரி படலைன்னா கடைசி ஆயுதமாக, சன் பிக்சர்ஸ் தலாய் லாமாவை வைத்து சைன மொழியில் ஒரு படம் எடுக்கலாம். அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் அந்த படத்தின் ட்ரேய்லரை போட்டே சைனாவை கடுப்பேத்தலாம்.
இருக்கவோ இருக்கு, தமிழக திரைப்பட விருதுகள். தலாய் லாமாவுக்கும் ஒரு விருது வழங்கலாம், ஒரே டேக்கில் எப்படி குறிப்பிட்ட காட்சியை தலாய் லாமா நடித்து காட்டினார்?னு மேடையில் அவரையே சொல்ல வைக்கலாம்.
இல்லாட்டி குறைந்த பட்சம் ஒரு கலைமாமணியாவது வழங்கலாம். அந்த விழாவையும் அருணாச்சல பிரதேசத்திலேயே வைத்து கொள்ளலாம். விழான்னு வந்துட்டா எப்படியும் கலை நிகழ்ச்சிகள் இருக்கனும். மானாட மயிலாட கோஷ்ட்டியை அங்க எறக்கினா சீனா அலறி அடித்து கொண்டு ஓடி விடாதோ?
இதைப் போல உங்களுக்கும் ஏதாவது யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் கும்முங்க பாப்போம்.
பி.கு: என் பதிவுகளுக்கு அடிக்கடி வந்து தொல்லை குடுக்கும் சைனா காரர்களை கடுப்பேத்தவே தலாய் லாமாவுக்கு ஆதரவாய் இந்த பதிவு.
23 comments:
/பி.கு: என் பதிவுகளுக்கு அடிக்கடி வந்து தொல்லை குடுக்கும் சைனா காரர்களை கடுப்பேத்தவே தலாய் லாமாவுக்கு ஆதரவாய் இந்த பதிவு.//
என்னடா சம்பந்தா சம்பந்தமில்லாம அம்பி சொல்லிட்டு இருக்காரேன்னு கொஞ்சம் அதிகமாவே யோசிச்சுட்டேன் போல.. கடைசி பி.கு. பாத்து மண்டை காய்ஞ்சுடுச்சு.. :))
I was wondering how Ambi got 'ulaga arivu' suddenly-nnu!
:)
நம்ம பக்கம் யாரும் தலைவச்சு படுக்க மாட்டேங்கறானுக. ஹென்றி. ஜே. ஒரு தமிழருதான் போட்டிருந்தாரு. ரிஜக்ட் பண்ணீட்டேன்.
நடத்துங்க...
எனக்கு ஒரு டெரரான ஐடியா தோனுது.
வடநாட்டு சேனல்கள்ல(ஸ்டார் ப்ளஸ், செட் மேக்ஸ் வகையறாக்கள்) திரைத்துறை அல்லாத பிரபலங்களை வெச்சு இந்த ஜோடி நடன நிகழ்ச்சிகளை நடத்துவாங்க. உதாரணமா சமையல்காரர் சஞ்சீவ் கபூர், இந்திய ஃபுட்பால் கேப்டன் பைசெங் புட்டியா. அதே மாதிரி தலாய் லாமாவை யார் கூடவாச்சும் ஜோடியா ஆட விடலாம். அடிக்கடி டிவில தெரிவார்... ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்னாடியும் ஓம் அருணாச்சலேசுவராய நமஹன்னூ சொல்லச் சொல்லலாம். அப்படி ஆட முடியலைன்னா ஜட்ஜாகவாவது போட்டுடலாம்...கெமிஸ்ட்ரி பத்தலை, இன்னும் ஹெவியா ஆடனும்னு சொல்றது அவருக்கும் பெருசா கஷ்டமா இருக்காது.
//இதெல்லாம் சரி படலைன்னா கடைசி ஆயுதமாக, சன் பிக்சர்ஸ் தலாய் லாமாவை வைத்து சைன மொழியில் ஒரு படம் எடுக்கலாம். அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் அந்த படத்தின் ட்ரேய்லரை போட்டே சைனாவை கடுப்பேத்தலாம்.//
உங்களோட சுயநலம் கொஞ்சம் இருந்தாலும் இந்தப் பதிவை ஒரு தேசீயப் பார்வையில் பார்த்துட்டு உங்களை மன்னிச்சு விட்டுடறேன். இந்தப் பதிவு ஓகே! :))))))))))))
anne, idhellam oru mattera? enga annanai rasaayana thurayil irundhu, veliyuravu thuraikku maaththunga. apram paarunga, chinaave indiavaa maaridum:):):)
//என் பதிவுகளுக்கு அடிக்கடி வந்து தொல்லை குடுக்கும் சைனா காரர்களை கடுப்பேத்தவே//
சரிதான் :)))!
ennada ambi ithellam pesarapadiyennu yosichen... appuramthan matter teriuthu
மங் மிங் சு ....
ஸுஒ ஸுஒ மிங் தங் ....
அது வேற ஒன்னும் இல்ல சன் PICTURESஓட சீன மொழி திரைபடத்தின் ஒபெநிங்
என் இனிய அருணாச்சல் மக்களே உங்கள் பாசத்திற்கினிய....
அருணாச்சல் பிரதேஷ் BORDERல சீனா FACING - நல்ல ஹிந்தி படத்தோட பாட்டு செட்டிங்க்ஸ் மாதிரி நரையா LIGHTING போடலாம்.
சுருங்குன கண்ணு இன்னோம் கொஞ்சம் சுருங்கி பார்வை சக்தி கொறஞ்சுடும்
வேட்டைக்காரன் போன்ற உலகத் தரம் வாய்ந்த சன் PICTURES காவியப் படைப்புகள சீனா மொழில ரீமேக்கி இன்னும் கொஞ்சம் புண்ணியம் சேத்துக்கலாம்
:))
Greatest business mind anadhula irundhu unga nadavadikkai range agitu iruku! :P
சென்ஷி, உங்களுக்கே மண்டை காஞ்சிடுச்சா..? :p
பிளாகேஸ்வரி, ஹிஹி, ஒரு ஜிகேவுக்கு தான். :)
சின்ன அம்மணி, உம்னு ஒரு வார்த்தை சொலுங்க, எல்ல பயலையும் அங்க திருப்பி வுடறேன். :p
அண்ணமலை, வாங்க புரபசர். :)
கைப்பு, இத இத தான் எதிர்பாத்தேன் தல. உங்க ஐடியாஸ் எல்லாமே சூப்பரு. :))
கீதா மேடம், அதிசயம் தான்.
ராப், ஹிஹி, செம டெரர் ஐடியாவெல்லாம் குடுத்து புட்டீக. :)
ரா.ல, அதே தான்.
:)
எல்கே, ரைட்டு விடு. :)
ஸ்ரீநிதி, அவ்வ்வ்வ், சீனா காரனை நெலமைய நெனச்சு பாத்தேன், பரிதாபமா இருந்தது. :)
பொற்கொடி, இருந்தாலும் உன் ரேஞ்சுக்கு வர முடியுமா ரைட்டரே? :p
மீ தி ஆஜர் போட்டுக்கறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
(சாரி முதல் தபா போட மறந்துட்டேன்)
ஸ்ரீராம், ரிஜிஸ்டர்ல குறிச்சுகிட்டேன். நீங்க அன்புடன் போடலைன்னாலும் நாங்க அன்போடு புரிஞ்சுப்போம். :))
thamizhnattin arasiyal kootani pattriya oru lecture compulsaryaa vekkalam.simbuvoda "loosu pennae" madhiriyana ulagathara paadalgalin cassette chinese mozhiyil translate panni pattithotti ellam ketka sollalam.ramgopal varma padathai 10 times pakka sollalam.....china kaaran odida mattan.
nivi.
nivi, I am unable to control my laugh on seeing your comment. ;)))
dear ambi
nanna irukku
pl continue writing
inime regulara vandhu padippen
balasubramanyan vellore
உங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி பாலசுப்ரமணியன் சார்(இனிமே பாலு சார், ஓகேவா?). :))
ammanchj rommba nannayirukku
它是,很滑稽我大声笑了。
Hurray 对达赖喇嘛
translates to:
It is, was very funny I to smile loudly.
Hurray to Dalai Lama.
இந்த கமென்ட், மேட்டரை டேமேஜ் பண்ணும்னா எடுத்திருங்க.
இன்னும் சிரிச்சிட்டிருக்கேன்:-))))
Thanks for your compliment anony. :)
கெபி அக்கா, சைனாவுல ஏதோ திட்றீங்கன்னு மட்டும் தெரியுது. :)
இருந்தாலும் நீங்க போட்ருக்கற மொழி பெயற்ப்பை நம்பறேன். ;))
Post a Comment