மேலும் ஆசை ஆசையாய் ஆர்குட்ல வீடு கட்டி சிலபல பழைய காலேஜ் மக்களின்(பிகர்களின்) ஏகோபித அபிமானத்தை பெற்று, வளர்ந்து வந்த நிலையில், ஒரு சபிக்கப்பட்ட ஞாயிறு நன்பகல் ரெண்டு மணியளவில் "கீழுதட்டில் வாய்ப்புண் வந்துருக்கு, என்ன செய்யனும் அம்பி? என்ற ஒரு பிகரின் ஸ்கிராப்புக்கு கர்ம சிரத்தையாய் பதில் ஸ்க்ராபிக் கொண்டிருக்கும் போது தங்கமணி நெற்றிக் கண்ணை திறக்க, அத்தோடு என் ஆர்குட் அக்கவுண்ட் பஸ்பமாகி போனது. உடனே, "தாட்சாயிணி, நன்றாக என்னை பார்!"னு எல்லாம் ஒன்னும் எகிறிக் குதிக்கலை. (ஆமா! அப்படியே குதிச்சுட்டாலும்).
நாட்டுல பல கிரிமனல் வேலைகள் எல்லாம் இப்ப ஆர்குட் வழியாத் தான் நடக்கறதாம்! அதான் நான் ஒதுங்கிட்டேன்! என தனி மெயிலில் துக்கம் விசாரித்தவர்களிடம் டெம்ளேட் மெயில் அனுப்பி ஆறுதலடைந்தேன்.
தங்கமணி கட்டிக் குடுத்த வெங்காய சாம்பாரும், உருளைகிழங்கு கார கறியையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, ஆபிசில் மதியம் கண் சொருகும் நேரத்தில் எல்லாரும் பீட்டர் விடும் இந்த ட்விட்டர்னா என்னனு கொஞ்சம் நோண்டிப் பாப்போம் என ஒரு நப்பாசையுடன் லேசா துருவினால் முக்காலேஅரைக்கால் பிளாகுலக மக்களும் ட்விட்டர்ல வூடு கட்டிக் கொண்டு இருக்கிறர்கள் என புரிந்தது.
- பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டது.
- குண்டூசி தேடுகிறேன்.
- கண்டேன் குண்டூசியை!
- மிஷன் இன் பிராக்ரஸ்.
- முடிஞ்சது சோலி!
இப்படியெல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள்.( நல்லா இருங்கடே!)
சிலபேர் வெண்பா பாடி இருக்கிறாகள். நமீதா பத்தி கிசுகிசு எல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள். சிலபேர் வெள்ளகார தொரை அவங்களுக்கு அனுப்பிய தபால் பத்தி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.
வீட்ல கரண்ட் இல்லை. டாய்லெட்ல தண்ணி வரலை. பேப்பர்காரனுக்கு பாக்கி இருக்கு.
நான் நல்லவளா கெட்டவளா?
உங்க வீட்ல நவராத்ரிக்கு என்ன சுண்டல்?
மூனார் போயி நாலு மாசமாச்சே! வீட்ல ஏதேனும் விஷேசம் உண்டா?
மாமியாருக்கு பிபி ஷுகர் எல்லாம் எகிறி விட்டதா?
இந்த ஆதி ஏன் தான் அபிய இப்படி படுத்தறானோ?
எங்காத்து அர்ஜுன் ஜுனியர் சிங்கர்ல பாடறான்.
போளி செய்வது எப்படி?(போலி இல்ல போளி, திரும்ப படிங்கடே!)
புது பதிவு போட்டால் போஸ்டர் ஒட்ட(என்னையும் சேர்த்து தான்) இதுவும் ஒரு சுவராக பயன்படுகிறது. இதுலயும் ஜிகினா வேலை காட்டுகிறர்கள் சில டெம்ளேட் ராஜாக்கள். பதிவுகளை விட, இணையத்தில் சிதறி கிடக்கும் பல சுவாரசிய தகவல்களின் லிங்குகள் டிவிட்டுகளாக வருவது நன்றாக உள்ளது. ஆனால் இங்கயும் தங்கள் அதிமேதாவித்தனத்தை பறை சாற்றும் சில ட்விட்டுகள் அயர்ச்சியைத் தான் தருகிறது.
ட்விட்டர்ல வெறும் நூத்தி நாப்பது எழுத்துக்கள் தான் எழுத முடியுமாம். உனாதானா அண்ணாச்சி எல்லாம் தன் பதிவின் தலைப்பே இவ்ளோ நீளத்துக்கு வெப்பாரு. ட்விட்டர்ல உங்களுக்கு அக்கவுண்டு தர மாட்டோம்னு அவருக்கு மெயில் அனுப்பிட்டாங்களாமே, நெஜமா? :)
தமிழ் வெர்ஷன்ல ட்விட்டர் வந்தா சிட்டுக்குருவின்னு பெயர் வெப்பாங்களா?சரி தான், இது பிளாக், ஆர்குட்டை விட வெட்டி போலிருக்கு. சீசீ, இந்த பழம் புளிக்கும். :)
34 comments:
//ஆர்குட்டை விட வெட்டி போலிருக்கு. சீசீ, இந்த பழம் புளிக்கும். :)//
ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டீங்க....ரைட்டு...
ஹி போஸ்டர் ஒட்ட நல்லாதானே இருக்கு ட்விட்டர்:)?
ஆர்குட் அக்கவுண்ட் பஸ்பமான கதை பலே பலே:))!
ஆமாம் அது என்னாங்க ட்விட்டர்
இருக்கீங்களா யாரும்?//
இருக்கோம் இருக்கோம்! குத்துகல்லாட்டா குந்தியிருக்கோம்!
//இது பிளாக், ஆர்குட்டை விட வெட்டி போலிருக்கு///
அவ்வ்வ்வ்வ்வ் !
அம்பி நெக்ஸ்ட் டிவிட்டர்ல மீட் பண்ணலாம் ரை ரைட்டு! :)
டிவிட்டரில் ஃபிகர் பிடிப்பது எப்படின்னு ஒரு அறிவுரைப் பதிவா இருக்கும்ன்னு நினைச்சு ஏமாந்து வந்துட்டேன் :(
Linkedn is better than Twitter, more Professional.
Btw the Future of Computers seems to be Cloud Computing..No Processors, use the net as a Processor.
Just google it...
Linkedn?
தினசரி பத்து மெய்ல் வருது, தெரிஞ்சவங்ககிட்டேந்து. நான் இங்கே இருக்கேன், நீங்களூம் சேந்துக்குங்கன்னு.. கேட்டா இல்லையே நான் அனுப்பலைங்கறாங்க. என்ன சேதி இது?
இப்பலேலாம் அதை பாத்தவுடனே டெலீட் செய்யறேன். கொஞ்ச நாள்ள இன்னொரு மெய்ல் நீ சேரலையே? இன்னார் தப்பா நினைச்சுப்பாங்கன்னு பயமுறுத்துது! நாரயணா!
//கீழுதட்டில் வாய்ப்புண் வந்துருக்கு, என்ன செய்யனும் அம்பி? என்ற ஒரு பிகரின் ஸ்கிராப்புக்கு கர்ம சிரத்தையாய் பதில் ஸ்க்ராபிக் கொண்டிருக்கும் போது தங்கமணி நெற்றிக் கண்ணை திறக்க, அத்தோடு என் ஆர்குட் அக்கவுண்ட் பஸ்பமாகி போனது//
:) :)
After a long time a post by Ambi !!
ஹிஹிஹி, எனக்கும் வந்தது ட்விட்டருக்கு, இந்த நூத்தி நாப்பது எழுத்துதான் இம்சை பண்ணித்து, வேணாம் போனுட்டேன். நமக்கெல்லாம் சரியா வராது.
அப்புறம் டெடிபேர் கொடுத்திருக்கேன்னு மெயில் வரும், Linkedn லே சேருனு சொல்லுவாங்க, நூறு மில்லியன் இல்லைனா பில்லியன் லாட்டரியிலே விழுந்திருக்குனும் வருது, இப்போ லேட்டஸ்ட் மைக்ரோசாப்ட் உங்களுக்குப் பணம் கொடுக்குதுதான். நூறு மெயில் வந்துடுத்து, வேண்டாம்னு சொல்லியாச்சு.:)))))))))))))))
face book ஐ விட்டுட்டீங்களே????
அருமையான பதிவு
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
எனக்கு இந்த சோசியல் நெட் வார்கிங் வெப்சைட் என்றாலே கொஞ்சம் அலர்ஜி தான்..... சில பல வருடங்கள் முன்பு யாகு சாட் ல புகுந்து விளையாடி இருக்கிறேன்........ முகபுத்தகம்(FACEBOOK ) ல இப்ப என்ன பண்ணுவது என்று எனக்கு தெரியல
அம்பி,
அதான் நான் அனுப்பின Orkut Invite க்கு அப்படி ஒரு டெம்ப்ளேட் பதில் வந்ததா?
எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போனார் அப்படிங்கறா மாதிரி நானும் Orkut, Twitter, Linkedin எல்லாத்திலேயும் ஐடி வச்சிருக்கேன், லாகின் கூட் ஞாபகம் இல்ல..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இருக்கோம் இருக்கோம்! குத்துகல்லாட்டா குந்தியிருக்கோம்!
Re-twitting..
போர் தான்!
நல்ல காலம்... என்ர ற்வீற்றுகள நீங்கள் பாக்கேல...
பாத்திருந்தா அதத் தனிப் பதிவாப் போட்டிருப்பியள்... :P
ட்விட்டர்ல வீடு இருக்கு ஆனா என்ன ? ஒன்னும் புரியல அங்க.. என் டிவிட்டுக்கு யாராவது பதில் போட்டதெல்லாம் ரொம்ப நாள் பாக்கவே தெரியல எனக்கு.. நீங்க கூட ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க என் டிவிட்டைப்பத்தி அதை ஒரு மாசம் கழிச்சு பாத்தேன்.. :)
/
சென்ஷி said...
டிவிட்டரில் ஃபிகர் பிடிப்பது எப்படின்னு ஒரு அறிவுரைப் பதிவா இருக்கும்ன்னு நினைச்சு ஏமாந்து வந்துட்டேன் :(
/
ரிப்பீட்டு
:))))
//சீசீ, இந்த பழம் புளிக்கும்.//
நானும் இப்படித்தான் சொல்லிட்டிருக்கேன்.:)
இந்த ட்விட்டர் பிடிக்காம தான் நான் zeole.com ஆரம்பிச்சேன். இது எனது புது முயற்சி. zeole பயன் படுத்தி பாருங்க... உங்களுக்கு பிடிச்சிருக்கா பாருங்க.
//உனாதானா அண்ணாச்சி எல்லாம் தன் பதிவின் தலைப்பே இவ்ளோ நீளத்துக்கு வெப்பாரு. ட்விட்டர்ல உங்களுக்கு அக்கவுண்டு தர மாட்டோம்னு அவருக்கு மெயில் அனுப்பிட்டாங்களாமே, நெஜமா? //
lmao :)))))))))))))))))))))))))
//(இருக்கீங்களா யாரும்?)//
இருக்கோமே!
//"தாட்சாயிணி, நன்றாக என்னை பார்!"னு எல்லாம் ஒன்னும் எகிறிக் குதிக்கலை. (ஆமா! அப்படியே குதிச்சுட்டாலும்).//
உங்களை பாத்தா பா...வமா...
வே இல்லை! :)
//சீசீ, இந்த பழம் புளிக்கும்.//
எனக்கும்! :)
முதல் வருகைக்கு நன்றி பாலாசி. :)
உங்க போஸ்டரையும் பாத்தேன் ரா.ல. என் ஆர்குட் பஸ்பமானதுல அவ்ளோ ஆனந்தமா? :p
வாங்க நட்சத்திர டாக்டர், வம்பளக்க அதுவும் ஒரு மீடியா. :)
ஆயில்யன், எனக்கு இவ்ளோ ஆதரவா? அட, டிவிட்டர்ல நீங்க புலி ஆச்சே! :))
சென்ஷி, எப்படின்னு சொல்லலாம், ஆனா செய்கூலி, சேதாரம் எல்லாம் ஜாஸ்தியாயிடும். :))
ஆமா புத்தா, லிங்க்டின் ரொம்ப புரபஷனல். Will google out about cloud computing. Thanks for the info. :)
திவாண்ணா, Linkedin தைரியமா சேருங்க. கடலூர் மட்டுமல்ல, கன்யாகுமரில கூட எத்தனை டாக்டர்ஸ் இருக்காங்கனு தெரிஞ்சுக்கலாம். LinkedIn a professional network which connects similar professionals from various locations.
பாராட்டுக்கு நன்றி மோகன். :)
கீதா மேடம், கண்டிப்பா உங்களுக்கு டிவிட்டர் சரியா வராது. :))உங்களுக்கு யாரு லிங்க்டின்ல சேர சொல்லி அனுப்பினாங்க..? :p
Facebook பத்தி எனக்கு தெரியாது, நோ அக்கவுண்ட்.
நன்றி உலவு.காம். மீதி வரிகளை காப்பி பேஸ்ட் பண்ண மறந்துட்டீங்களா? :p
டம்பி மேவீ, யாஹூ சாட்ல பெரிய ஆளா? (அது என்ன டம்பி..?) :)
ஸ்ரீராம், வாங்க, இப்ப புரிஞ்சதா என் ஈமெயிலுக்கு பின்னாடி உள்ள பிளாஷ்பேக்..? நான் கஷ்டப்பட்டு லிங்க்டின் பாஸ்வேர்டை நினைவில் வெச்சு இருக்கேன். :))
ரீப்பீட்டு போட வந்த இளாவுக்கு நன்றி ஹை. :)
ஆமா வால் பையன். விலாவரியா சண்டையோ எதிர்பதிவோ கூட டிவிட்டர்ல போட முடியாது. :))
கனககோபி, நீங்கள் சொல்றத பாத்தா உங்க டிவிட்டுகள் சுவாரசியமா இருக்கும் போலிருக்கே..? சாம்பிளுக்கு ஏதேனும்..? :))
முத்தக்கா, நீங்க ரெம்ப சுறுசுறுப்புன்னு எனக்கு தெரியாதா முத்தக்கா? ப்ரீயா விடுங்க. :p
@சிவா, சென்ஷி சொல்றாரேனு நீயும் சொல்லாத, உன் தங்க்ஸும் என்னோட பதிவை படிப்பாங்கன்னு எப்பவோ சொன்ன நியாபகம். :p
சின்ன அம்மணி, வெரிகுட். அப்படியே மெயின்டேன் பண்ணுங்க. :)
@The Kid, Zeo புதுசா இருக்கே. என்னனு பாக்கறேன். தகவலுக்கு நன்றி ஹை. :)
அனானி, imao...என்ன? பெயர போட்டு கமண்டுங்க பா. :)
கவிநயா அக்கா, பாவனாவே சே! பாவமாவே இல்லையா? :))
ட்விட்டர்?..
இரும்படிக்கும் இடம்..எறும்புக்கு பயம்.
எப்படியோ,எழுத்து சுவராஸ்யம் என்பதை புரியதெரிகிறது..மோகனுக்கு நன்றி!
உங்களுக்கும் மக்கா.மோகன் தளத்தில் சிலாகித்ததுக்கு.
:)))))))))
Iniya pirandha naal vaazhthukkal Ambi uncle!! :)
வாங்க பா.ரா, முதல் வருகைக்கு நன்றி. உங்களை சிலாகிக்க வில்லை, நீங்க அதற்கு பொருத்தமானவரே. :))
வாங்க புதுகை அக்கா. :))
@porkodi, அட ரொம்ப நியாபகமா வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீங்களே, ரெம்ப சந்தோஷமா இருக்கு. :))
மிக்க நன்றி பொற்கொடி ஆன்டி. :p
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்பி:)!
@ramalakshmi, அட ரொம்ப நியாபகமா வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீங்களே! Thx a lot for your wishes. :)
//அட ரொம்ப நியாபகமா வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீங்களே//
unnai ellam madhichu gnabagama vaazhthu sonna, template reply kudukriya nee? porandha naalu mudinja vuttu velila vara sollo pathukaren unna!
//template reply kudukriya nee?//
@porkodi, LOL on your reply. pettai rowdy maathiri ennamaa soundu vudara nee..? paavam unga veetu rangu.. :)))
hey ambi....
long time.. three years lae avalavu changes.. whos the baby in the profile.. very cute..
hope u remember me..
more later,
Regards,
Raji
Post a Comment