Tuesday, October 06, 2009

புடவை

சார் தசரா வருது, ஒரு புடவை எடுத்து தாங்க! இப்படி உரிமையுடன் என் வீட்டில் வேலை செய்யும் லலிதா கேட்டவுடன் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.


தசரா எல்லாம் வழக்கம் கிடையாது மா! தீபாவளிக்கு தான் சீலை எடுத்து கொடுப்போம். சரியா? என பதில் குடுத்ததும் சரியென்று தலையாட்டினாலும் ஏமாற்றத்தை முகம் காட்டி கொடுத்து விட்டது. நானும் மறந்து விட்டேன்.


அதே கேள்வி. இந்த முறை என்னிடம் அல்ல, தங்கமணியிடம். கேட்டது லலிதா இல்லை, அவளின் அக்கா சரளா. லலிதா லீவு எடுத்தால் சரளா தான் சப்ஸ்ட்யூட். என்னடா இது வம்பா போச்சு? சரி, தசராவுக்கே எடுத்து குடுத்தறலாம்னு முடிவு பண்ணி தங்கமணி சகிதமா எங்க ஏரியாவுல இருக்கற ஒரு புடவை கடைக்கு போயாச்சு.


வருஷத்துல ஒரு தரம் எடுக்கறோம், நல்லதா குடுக்கனும்னு முடிவு பண்ணி, இந்த கலர் அந்த கலர்னு பாத்து, பார்டர்ல அன்னம் இருக்கா? மயில் இருக்கா? பூ போட்டு இருக்கா?, ஐந்தரை மீட்டர் இருக்கா? டேமேஜ் இல்லாம இருக்கானு எல்லாம் செக் பண்ணி மயில் கழுத்து கலர்ல ஒரு புடவை எடுத்து அதுக்கு மேட்சிங்க் பிளவுஸ் எல்லாம் செலக்ட் பண்ணி ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு.


வீக் எண்டுல சென்னை செல்வதால், மறக்காம புது புடவையை லலிதாவிடம் குடுக்க சொல்லி தம்பியிடம் சொல்லிட்டு ஊருக்கு போய் விட்டோம். தசரா முடிந்த பிறகு மறுபடி பெங்களூருக்கு வந்தபின் ஆபிஸ், வேலைன்னு ஓட்டம் துவங்கியது.


நான் ஆபிஸ் கிளம்புமுன் லலிதா வேலைக்கு வர, என்னமா? தசரா எல்லாம் சிறப்பு தானே? என மையமாய் கேட்டு வைத்தேன்.


புடவை நல்லா இல்லை சார்! பளிச்சென்று வந்த பதில் என்னை அதிர வைத்தது. உடுத்தின அன்றே துவைத்து இருப்பாளா? சுருங்கி விட்டதா? சாயம் போய் விட்டதா? படபடவென கேள்விகள் என்னிடம் இருந்து பறக்க, கலர் நல்லா இல்லை சார்! - ரொம்பவே நிதானமாக பதில் வந்தது.

நான் எதுவும் பதில் பேசவில்லை. ம்ம், நமக்கு பிடித்த கலர் அடுத்தவங்களுக்கும் பிடிக்கும் என எப்படி எதிர்பாக்க முடியும்? வாங்கறத்துக்கு முன்னாடி அட்லீஸ்ட் உன் விருப்ப கலர் என்ன?னு ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். யதேச்சதிகார அமெரிக்க மனப்பான்மையுடன் நாமே ஒரு முடிவு எடுத்து அதை அடுத்தவர் மேல் திணிக்கும் மனோபாவம் தானே இது? (கொஞ்சம் ஓவராத் தான் போறேனோ?)

மனதில் பட்டதை பளிச்சுனு, தைரியமா சொன்ன லலிதாவின் துணிச்சல்(அல்லது அட்டிடியூட்) என்னை மிகவும் கவர்ந்தது. போன தடவை நீங்க எனக்கு குடுத்த ரேட்டிங்க், சம்பள உயர்வு விகிதம் எனக்கு சுத்தமா பிடிக்கலை! என துணிச்சலாய் என் டாமேஜரிடம் சொல்ல எனக்கு துணிவு இல்லையே? ஒரு வேளை அப்படி துணிந்து சொல்லி இருந்தால் ஏதேனும் நிகழ்ந்து இருக்குமா? தெரியலை. காலம் பல நேரங்களில் சிலர் மூலமாக பரீட்சை வைத்து விட்டு பின் பாடத்தை நடத்துகிறது.

38 comments:

சென்ஷி said...

me the second

கபிலன் said...

"மனதில் பட்டதை பளிச்சுனு, தைரியமா சொன்ன லலிதாவின் துணிச்சல்(அல்லது அட்டிடியூட்) என்னை மிகவும் கவர்ந்தது. "
அதென்னவோ உண்மை தான். மனசுக்குள்ள திட்டிகிட்டு, வெளியே சூப்பரா இருக்குன்னு சொல்றதுக்கு இது எவ்ளவோ மேல் : )

போன தடவை நீங்க எனக்கு குடுத்த ரேட்டிங்க், சம்பள உயர்வு விகிதம் எனக்கு சுத்தமா பிடிக்கலை! என துணிச்சலாய் என் டாமேஜரிடம் சொல்ல எனக்கு துணிவு இல்லையே?

அங்க சுத்தி, இங்க சுத்தி..வரவேண்டிய மேட்டர்க்கு கரெக்டா வந்துட்டீங்க... : )

நல்லா இருக்கு!

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, மயில்கழுத்துக் கலர் நான் கட்டிண்டதில்லை, அந்தக் கலரில் வஸ்த்ரகலா பட்டு வாங்கி அனுப்புங்க தீபாவளிக்கு, நல்லவேளையாப் பதிவைப் போட்டிங்களோ, நினைவில் வந்ததோ! நானும் அதிகமா வடக்கே இருந்திருப்பதாலும், இப்போ தென்னாட்டில் வசிப்பதாலும், வடக்கும், தெற்கும் சங்கமம்னு சொல்லிப்பேன். :)))))))))))

Sridhar V said...

//மனதில் பட்டதை பளிச்சுனு, தைரியமா சொன்ன லலிதாவின் //

உங்களுக்கு பிடித்திருக்கலாம். ஆனால் attitudeகள் எப்போதும் எல்லோரையும் திருப்திபடுத்துவது இல்லை. இதை விட சிலர் சாமர்த்தியமாக ஆள் பார்த்து பேசுபவர்களே அலுவலகங்களில் அதிகமாக ஜெயிக்கிறார்கள்.

Blogeswari said...

Nalla post, asusual ! Ungalai madiri daan wish I could say "didnt like last year's ratings, don't like the concepts I work on" etc

மணிகண்டன் said...

me the 6th.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:)

நல்லா எழுதியிருக்கீங்க அம்பி.

@மணிகண்டன்... நீங்க 6th இல்ல, 7th :)

ambi said...

ஹலோ ராப், வாம்மா மின்னல். :)

சென்ஷி, ஒன்னும் சொல்றதுக்கில்லை. :)

ஹிஹி, ஒரு எக்சாம்பிளா அந்த பாயிண்டை எடுத்துகுங்க கபிலன். :)

உண்மை தான் ஸ்ரீதர், என் ஆரம்ப கால கேரியரில் ரொம்பவே அனுபவப் பட்ருக்கேன். சில நேரங்களில் சில மனிதர்கள். :)


கீதா மேடம், சாமியே சைக்கிள்ல போகுதாம், பூசாரி புல்லட் கேட்டானாம். :))


பிளாகேஸ்வரி, வீட்டுக்கு வீடு வாசப்படி. :)

நன்றி மணிகன்டன், சுந்தர். விடுங்க சுந்தர், மணியும் என்ன மாதிரி கணக்குல புலி போல. :))

sriram said...

அம்பி சார் அம்பி சார்,
எனக்கு எந்த கலர்ல வேணா பேண்ட், சர்ட் எடுத்துக் கொடுங்க, ஒண்ணுமே சொல்லாம சந்தோஷமா வாங்கி போட்டுக்கறேன்.
BTW, நல்ல டேமேஜரா இருக்கறது எப்படின்னு எழுதிக்கிட்டு இருக்கேன், ஓரிரு நாளில் வரும், உங்க அனுபவங்களை சொல்லுங்க, உதவியா இருக்கும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

ஆமா, ஓணத்துக்கு ஒரு போஸ்ட், இப்போ தசராவுக்கு ஒரு போஸ்ட், அப்போ அடுத்த போஸ்ட் தீவாளிக்கா??

sriram said...

எங்க இன்னும் பொற்கேடியக் காணோம்??

மணிகண்டன் said...

@அம்பி,

முதல் ஆறு கமென்ட்ல ஒண்ணு டெலீட் பண்ணிடுங்க :)-

Anonymous said...

பதிவர்கள் எல்லாரும் இப்படி பல்ப் வாங்கறதே வேலையாப்போச்சு :)

Unknown said...

முதல்ல, கீதாம்மா சொன்ன மாதிரி, மயில் கழுத்து கலர் புடவை வாங்கி அக்காக்களுக்கு அனுப்பினால் தானே லலிதாவுக்கு ஏன் பிடிக்கலைன்னு சொல்ல முடியும்? ஹிஹி.

//இதை விட சிலர் சாமர்த்தியமாக ஆள் பார்த்து பேசுபவர்களே அலுவலகங்களில் அதிகமாக ஜெயிக்கிறார்கள்.// முதல்ல அம்பி "லலிதம்மா ஹத்தர, பாள கல்ஸ்கொ பேக்காயித்து" (சரியா?): எப்படி கரைச்சா கல் மயில்கழுத்து கலரில் கரையும்? நல்லாயில்லன்னு சொன்னால், ஃபீல் பண்ணி திருப்பி தீவாளிக்கு வாங்கிட மாட்டாரா?

நிதானமா, "எனக்கு பர்ஃபார்மன்ஸ் ரெவ்யூ பிடிக்கலை, By the next review I'll hope to have done a good enough job to convince you otherwise"னு சொன்னா மானேஜர் ஏன் கோவிச்சுக்கப் போறார்? அஃப்கோர்ஸ், சொன்னது லலிதம்மா இனம்:‍-)ஆக இருந்தால், கட்டாயம் "I have faith in you" னு சொல்லிட்டுப் போயிடுவார்.

ambi said...

ஸ்ரீராம், பச்சை கலர் பாண்ட்டும், மஞ்ச கலர் சட்டையும் நீங்க பெங்களூர் வரும் போது ரெடியா இருக்கும். :p

ஓரிரு நாளிலா? சரி காத்திருக்கேன். :))

பொற்கேடிக்கு கூட உங்கள மாதிரியே அவங்க ஆபிஸ்ல நெறைய வேலையாம். :p

இந்த கேள்விய அங்க டுபுக்கு அண்ணாச்சி கிட்டயும் கேக்கலாம். :))

மணி, உங்க கமண்டை டெலிட் பண்ணீடவா? வரதே ஆறு கமண்டு, அதையும் டெலிட் பண்ண சொன்ன எப்படி பாஸ்? :))

சின்ன அம்மணீ, சொல்றத பாத்த, நீங்களும் பெரிய பல்ப் வாங்கி இருப்பீங்க போல. :p

@கெபி அக்கா, உங்க கமண்டை ரெம்ப ரசிச்சேன். சுத்தி முத்தி அக்காஸ், பாட்டிஸ் எல்லாம் மெயின் மேட்டருக்கு தான் வரீங்க. :))

தீவாளிக்கு எல்லாம் நோ புடவைன்னு கண்டிப்பா சொல்லி தான் குடுக்க சொன்னேன்.

என் கன்னட அறிவை இப்படி எல்லாம் டெஸ்ட் பண்ணாதீங்க.

நீங்க சொன்ன மாதிரி எல்லாம் அமெரிக்க மேனேஜர் வேணா சொல்லுவார். இங்க இந்தியாவுல இன்னும் "ஒரு உயரதிகாரிய எதிர்த்து பேச என்ன துணிச்சல்?" என்ற நிலை தான் இருக்கு. :))

ராமலக்ஷ்மி said...

அட நீங்க வேற, டேமஜரிடம் தைரியத்தைக் காட்டினா ஆப்பு நமக்கே! வீட்டில் வேலை செய்யும் பெண்மணிகளின் துணிச்சல் புடிச்சுதான் ஆகணும். இல்லேன்னாலும் ஆப்பு நமக்கே! குறிப்பா தம்பதி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில்..[நோட் திஸ் பாயின்ட்]:)!

rapp said...

எனக்கு மயில்கழுத்து கலரோ கழுத கலரோ எதுவானாலும் சரி, ஆனா பட்டுல இருக்கட்டும்:):):)

Anonymous said...

ambi,
unga veetu lalitha sarala ellam thevala polirukke.inga durga pooja/deepavalikku matching valayal ,bindi ellam ketpanga.idhaellam nammale vangikoduthallum sari illane adharkuriya dabbu koduthalum sari..avanga pangukku ketpanga!!!!
naan en dress,cosmetics selectionnukku kooda ivvallvu akkarai kattiyadhillai.amma thaye,idhelllam neeya eduthuko choice angeye vituduradhu.
reg attitude,ennaku ennavo namma ellam idathileyum lenient and soft attitude thaan.soft boss,soft house owner,soft tenant,soft wife!!!!(rengamani comment"neeye sollikardha")soft mother,soft "madrasi didi" for my maid..list will go on and on."attitude" appadinnaa??????
nivi

Anonymous said...

ambi,thangamanikku dasherra,diwali shoppingkku enna vangi kodutheergal?
1.vasthra kala pattu
2.paris collections from pothis
3.nakshatra by arr
4.kadhambari pattu
5.natural pattu rmkv
6.nalli special diwali collections
7.festival trends
8.designer sarees
ippodikku ivvalvu dhaan nyabagam vandhadhu.marupadiyum vandhu sollren.
nivi.

ராமலக்ஷ்மி said...

@ nivi,
//ippodikku ivvalvu dhaan nyabagam vandhadhu.marupadiyum vandhu sollren.//

marupadiyumaa:)? ambikku ippave kannai kattudhe!!!

ambi said...

ரொம்ப சரியா சொன்னீங்க ரா.ல. எப்படி பாத்தாலும் ஆப்பு நமக்கு தான். பாயிண்ட் நோட்டட் யுவர் ஆனர். :))

@ராப், ரொம்ப தெளிவா இருக்கீங்க. :))

ஆமா நிவி, பல சமயங்களில் சாப்ஃட்டா இருக்கறதுனால நெறைய பேர் டேக் இட் கிரான்டட்னு எடுத்துக்கறாங்க. உங்க புடவை லிஸ்டை பாத்தா சாப்ஃட் வைப் மாதிரி தெரியலையே! :p

நைசா உங்க ரெண்டாவது கமண்டை டெலிட் பண்ணீடலாமா?னு யோசிச்சேன். ஹிஹி. :p

தங்க்ஸும் ஆபிஸ் போறதுனால நாலு சட்டை (ரெண்டு எடுத்தா ரெண்டு ப்ஃரீ பான்டலூன்ல)+ ரெண்டு பேண்ட் எடுத்து குடுத்தாச்சு. ஸோ நோ புடவைஸ். :))

@ரா.ல, நான் நெனச்சேன், நீங்க சொல்லிட்டீங்க. :))

sriram said...

இந்த கேள்விய அங்க டுபுக்கு அண்ணாச்சி கிட்டயும் கேக்கலாம். :))

அந்த ஆள்கிட்ட கேட்டு கேட்டு சலிச்சு போச்சு, இப்போல்லாம் கேக்குறதே இல்ல, அதனால ஒரு சேன்ஜுக்கு உங்க கிட்ட கேட்டேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன அம்பி..
China பய புள்ள எல்லாம் comment போடுது..

ambi said...

ஸ்ரீராம், நீங்க சொல்றதும் கரக்ட்டு தான். நீங்களும் எவ்ளோ நாள் தான் கேட்பீங்க..? :))

@பட்டாபட்டி, என் பிளாக் பெயரை பாத்து ஏதோ சைனாகாரன் பதிவுன்னு அவன் நென்ச்சுட்டான் போல. :p

முதல் வருகைக்கு நன்னி ஹை. :))

திவாண்ணா said...

அம்பி. ஒரு பட்ஜெட்டை சொல்லி நீயே வாங்கிடுமான்னு அடுத்த தபா சொல்லிடுங்க!

sriram said...

ஆமா அம்பி, இப்ப கூட பாருங்க, செப் ஒண்ணாம் தேதி ஒங்க அண்ணன் போட்ட போஸ்ட்ல இப்ப போயி கும்மி அடிச்சுட்டு வறேன், பதிலும் இல்ல, அடுத்த போஸ்ட்டும் இல்ல.

இந்த ஒரு மாசத்தில எத்தனை கோடி பேர் போன் பண்ணி ஏன் எழுதலன்னு கேட்டீங்க, உங்க அன்புக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, எழுதுற மனநிலை அமையலன்னு சொல்வார் பாருங்களேன்.

ஆமா அப்புறம் ஒரு விஷயம். என் பதிவுக்கு நீங்க, பொற்கொடி போன்ற சிலர் மட்டும் பழகின தோஷத்துக்காக ரெகுலரா வந்து பின்னூட்டமும் போடறீங்க, உங்களுக்கு மட்டும் சைனாலேருந்தெல்லாம் பின்னூட்டம் வருதே எப்படி???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

Give a try.. tell your manager about what you felt about the rating!! Dont forget to write a post on that :)

Deekshanya said...

Nice thought! Aana, kodutha gift nalla illanu solrathu is not right. However it is, the gift doesnt matter, its the motive behind the gift that matters. Konjam vaai adigam than unga veetla velaparkaravangaluku. Refrain from any gifts for a while, it should serve her good.
Cheers
Deeksh

ambi said...

திவாண்ணா, நானும் அந்த பாயிண்டை யோசிச்சேன். இங்க உள்ளவங்க ரொம்ப வெவரமானவங்க. பட்ஜெட் எல்லாம் சொன்னா இதுக்கு மேல பேச்சு கேட்க வேண்டி இருக்கும். :))

@sriram, இப்ப தான் உங்க கும்மிய பாத்தேன். அண்ணாத்தை வெளியூர்னு அல்வா குடுத்து இருக்கார் போல. சைனா காரன் லடாக்ல இருக்கற பாறைல தான் கிறுக்கறான்னு பாத்தா என் பதிவுலயும் வந்து எழுதிட்டு போறான். நானும் மன்மோகன் சிங் மாதிரி அமைதியா இருக்கேன். :))

@மிட்டு, உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா? நல்லா இருங்கடே! :))

ஹலோ தீக்க்ஷ், சவுக்யமா? இப்ப எந்த ஊர்ல இருக்கீங்க? நீங்க சொல்ற மாதிரி எல்லாம் முறுக்கிக்க முடியாது. அப்புறம் விம் பாரும் கையுமா நான் தான் களத்துல இறங்க வேண்டி இருக்கும். :))

Geetha Sambasivam said...

//the gift doesnt matter, its the motive behind the gift that matters.//

பெயரைப் போல் தீக்ஷண்யமான பார்வையும் கூட. நீங்க சொல்றது சரிதான். ஆனாலும் அதை யாரும் நினைக்கிறதில்லை. அம்பி சொல்றது புதுசும் இல்லை, எங்க வீட்டிலே சில வருஷங்கள் முன் வரை நடந்தது தான். அப்போவே 300ரூக்குப் புடைவை வாங்கிக் கொடுத்து, வேலை செய்யும் அம்மா முகத்தில் தூக்கி அடிக்காத குறைதான். அப்புறமாப் பணமாவே கொடுத்து வாங்கிக்கோனு சொல்லிடறோம்.

தமிழன்-கறுப்பி... said...

ஆமால்ல...?

Kavinaya said...

//அட நீங்க வேற, டேமஜரிடம் தைரியத்தைக் காட்டினா ஆப்பு நமக்கே! வீட்டில் வேலை செய்யும் பெண்மணிகளின் துணிச்சல் புடிச்சுதான் ஆகணும். இல்லேன்னாலும் ஆப்பு நமக்கே!//

ரைட்! :) நல்லா சொன்னீங்க ராமலக்ஷ்மி.

ambi said...

@தமிழன், ஆமாவா இல்லையா? :))

வாங்க கவிநயாக்கா, பதிவிட்டது நானு, ஆமாம் போடறது ரா லாவுக்கா? :))

ராமலக்ஷ்மி said...

//வாங்க கவிநயாக்கா, பதிவிட்டது நானு, ஆமாம் போடறது ரா லாவுக்கா? :))//

கவிநயா எதிலும் கரெக்ட் என்பது ஒருபுறமிருக்க, நீங்களும் ஆமாம் போட்ட பாயிண்ட்தானே:)))?

ambi said...

கரக்ட்டா பாயிண்டை பிடிப்பீங்களே ரா.ல! :))

வல்லிசிம்ஹன் said...

அம்பி,சரளா, லலிதா எல்லாம் பிடிக்கலைன்னு

மட்டும் தன் சொல்வாங்க.. இங்க என்ன நடக்கும் தெரியுமா. பக்கத்து வீட்டில வாங்கினதைக் கொண்டு வந்து காண்பித்து அந்த அம்மாவுக்கு நல்ல ரசனைம்மானு வேற சொல்வாங்க.:)

வல்லிசிம்ஹன் said...

This has been happening for 30 years:)

மங்களூர் சிவா said...

/
மனதில் பட்டதை பளிச்சுனு, தைரியமா சொன்ன லலிதாவின் துணிச்சல்(அல்லது அட்டிடியூட்) என்னை மிகவும் கவர்ந்தது. போன தடவை நீங்க எனக்கு குடுத்த ரேட்டிங்க், சம்பள உயர்வு விகிதம் எனக்கு சுத்தமா பிடிக்கலை! என துணிச்சலாய் என் டாமேஜரிடம் சொல்ல எனக்கு துணிவு இல்லையே? ஒரு வேளை அப்படி துணிந்து சொல்லி இருந்தால் ஏதேனும் நிகழ்ந்து இருக்குமா?
/

உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு
:))