Tuesday, October 13, 2009

கிரெடிட் கார்டு/லோன் வேணுமா?

மும்பையை தலைமையிடமாக கொண்ட அந்த பேங்கிலிருந்து கரக்ட்டா என் சம்பள நாளுக்கு அடுத்த நாள் மேற்படி கேள்விகளுடன் ஒருத்தர் எனக்கு போன் பண்ணுவார். எனக்கு அந்த ஆள் பேசும் தொனி பிடிக்காது. நான் என்னவோ திக்கு தெரியாத காட்டில் தவிப்பது போலவும், அவங்க பேங்க் தான் ஏதோ கோவிலில் குடுக்கும் சுண்டல் போல எனக்கு கிரெடிட் கார்டும் பெர்சனல் லோனும் வழங்குவது போல பில்டப் குடுப்பார்.

மும்பை எஸ்டிடி கோட் பாத்தவுடனேயே மொபைலை கட் பண்ணி விடுவேன். அந்த நம்பர் கூட எனக்கு அத்துபடி. போன தடவை அதே மும்பையில் இருந்து கால், வேற நம்பரில் இருந்து. புத்திசாலித்தனமா கால் பண்றாராம். பெரிய ஆபிஸ்களுக்கு நாலைந்து போன் லைன்கள் வரிசையாக இருக்கும் என்பது பொதிகை தொலைகாட்சியில் "காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு" பார்த்தவர்களுக்கு கூட தெரியும். சரி விடுங்க, என்ன தான் சொல்றார் இந்த ஆள்?னு இந்த தடவை பேசினேன். ஆச்சர்யம் பாருங்கள் இந்த தடவை போன் பண்ணியது ஒரு பெண். ஜொள்ளாண்டவரின் கருணையே கருணை.

ஹலோ, நான் ராக்கி பேசறேன், நீங்க தானே அம்பி..? உங்களுக்கு கோல்டன் கிரெடிட் கார்டு தரப்....

கார்டு கிடக்குது கழுத. என்னமா ராக்கி, உன் கல்யாணம் தான் என்.டி.டிவில அமர்களப்படுது. நீயே கதின்னு கனடால இருந்து வந்திருக்கற அந்த மொட்டையவே கல்யாணம் பண்ணிக்க தாயி. நீ விரும்பறவனை விட உன்னை விரும்பறவனை கல்யாணம் பண்ணிக்கனு ரஜினி சொல்லி இருக்காரு.

அடக் கடவுளே! நன் ராக்கி சாவந்த் இல்ல, ராக்கி ஜெயின். என் ஆபிஸ்ல தான் என்ன கலாய்க்கறாங்கன்னா கிளையன்ட் நீங்களுமா?

அப்படியா? வெரி சாரி. எனக்கு கார்டெல்லாம் வேணாம். எதிர்காலத்துல தேவை இருந்தா ராக்கிக்கு தான் போன் போடுவேன். ஓக்கேவா? -ஹெவ் ஏ நைஸ் டே!

கலகலவென சிரிப்பு சத்ததுடன் (ரெண்டு பக்கத்திலும் தான்) போன் கட் செய்யப்பட்டது.

இதே மாதிரி பல ராக்கிகள், திவ்யாக்கள், லாவண்யாக்கள் தங்கள் வங்கிக்காக தினமும் போன் செய்கிறார்கள். நமக்கு வேணாம் என்பதை எதுக்கு வள்ளுனு விழுந்து பிடுங்கி சொல்லனும்? யோசித்து பாருங்கள், அவங்க வேலைய அவங்க செய்றாங்க. நமது கிளையன்ட் இதே மாதிரி விழுந்து பிடுங்கினா நமக்கு எப்படி இருக்கும்?

நம்மால் இத்தகைய ராக்கிகளுக்கு, திவ்யாக்களுக்கு போன் மூலம் பரிமாறப்படும் கோபம், இன்னொரு ரூபத்தில் வேறு யாருக்கோ போய் சேரும். அது ஒரு சாலை விபத்தாக கூட முடியலாம். இதுவும் பட்டர்பிஃளை எபக்ஃட் தான். சட்டியிலிருந்து கிண்ணத்தில் மாற்றுவதற்க்கு கோபம் ஒன்னும் சூடான கேசரி இல்லை. :)

இது என் கருத்து மட்டுமே. எல்லாருக்கும் பொருந்துமா? என தெரியாது. :)

33 comments:

கபிலன் said...

இதுல இருந்து என்னா தெரியுதுன்னா...
ராக்கியும், திவ்யாவும் போன் பண்ணா சாஃப்டா வேணாம்னு சொல்லணும்...
விக்னேஷ்க்கும், ராமகிருஷ்ணனுக்கும் நம்பர் பார்த்த உடனே கட் பண்ணிடனும்... : )
கரெக்டா புரிஞ்சிகிட்டனா அம்பி : )

ஆனா, நிஜம் தான். அப்படி போன் பண்றவங்க கிட்ட கொஞ்சம் பொறுமையா சொல்லி கட் பண்றது தான் நியாயம்.

ராமலக்ஷ்மி said...

//சட்டியிலிருந்து கிண்ணத்தில் மாற்றுவதற்க்கு கோபம் ஒன்னும் சூடான கேசரி இல்லை. :)//

கேசரி இல்லாமல் பதிவெழுதுவது அம்பிக்கு அத்தனை சுலபமான காரியம் இல்லை:)!

Jokes apart,

// எல்லாருக்கும் பொருந்துமா? //

பொருந்தணும். எனக்கும் சேர்த்துதான். இந்த நேரத்தில் எரிச்சல் வருவது இயற்கைதான். கஷ்டப் பட்டு கட்டுப் படுத்தப் பழகிக் கொண்டாயிற்று. அந்தமுனையில் இருப்பவரின் வயிற்றுப்பாடு அது என ஒருகணம் எண்ணினால் போதும், வரும் கோபம் காணமல் போகும்.

சென்ஷி said...

/நம்மால் இத்தகைய ராக்கிகளுக்கு, திவ்யாக்களுக்கு போன் மூலம் பரிமாறப்படும் கோபம், இன்னொரு ரூபத்தில் வேறு யாருக்கோ போய் சேரும். //

அப்ப அவங்ககிட்ட கொடுக்கற அன்பு (ஜொள்ளு) எப்படி கிடைக்கும் அம்பி :)

துளசி கோபால் said...

அதான் மச்சம் என்பதா?

நாங்களும் ஒரு க்ரெடிட் கார்டு வேணுமுன்னு அப்ளை பண்ணி மாசம் ஒன்னு ஆகுது. தினமும் பெங்களூருவில் இருந்து வெரிஃபை பண்ணிக்கிட்டேஏஏஏஏஏஏஏ இருக்காங்க.....
உன்னைப்போல் ஒருவன் பார்க்க முடியலை இதால்.

இதுவும் ஒரு பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டுதான்.!!

Amazing Photos 4 All said...

ஜூப்பர்

Sridhar Narayanan said...

//சட்டியிலிருந்து கிண்ணத்தில் மாற்றுவதற்க்கு கோபம் ஒன்னும் சூடான கேசரி இல்லை. :)//

எப்படிய்யா இப்படி? :) தமிழ் சினிமாவிற்கு அல்லது குறைந்தபட்சம் டிவி சீரியலுக்காவது வசனம் எழுதனும் நீங்க.

நம்ம பையன் ஒருத்தன் கிரெடிட் கார்டு வேணும்னா ஃபோன் போட்ட பெண்ணையே வெரிஃபிகேஷனுக்கு காஃபி ஷாப்புக்கு கூப்பிட்டுப் பேசினார்பா. ஷார்ட் கட்ல கார்டு வாங்குறாராம். ஹ்ம்ம்... அதுக்கெல்லாம் மச்சம் வேணுமாம்ல :)

மஞ்சூர் ராசா said...

தொடர்ந்து இது போல ஃபோன் வருவது உண்மையிலேயே எரிச்சலை வரவழைக்கதான் செய்கிறது. தங்கள் வியாபாரம் நடக்கவேண்டும் என்பதற்காக ஒரு சில ஏஜெண்ட்கள் குறிப்பாக இன்ஸூரன்ஸ், , எம் எல் எம் ஆட்கள் செய்யும் கொடுமை தாங்கமுடியாது.

sriram said...

அம்பி
நான் இந்தியாவில் இருந்த போது "you have been approved for a XYX Credit card" ன்னு சொல்வாங்க, நேரம் காலம் தெரியாம போன் பண்ணுவாங்க, நான் எப்போ அப்ளை பண்ணினேன், நீங்க அப்ரூவ் பண்ண என்று கேட்டேன், ரொம்ப வழிந்து விட்டு போனை வைத்து விட்டாள்.
அமெரிக்காவில் இன்கமிங் இலவசமில்லை என்பதால் Unsolicited Telemarketing ரொம்ப கம்மி.. நிம்மதியா இருக்கு..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

Blogeswari said...

Kovattha control pannakkodadunnuM edo oru magaan sollirukkar . So...

கீதா சாம்பசிவம் said...

//கலகலவென சிரிப்பு சத்ததுடன் (ரெண்டு பக்கத்திலும் தான்) போன் கட் செய்யப்பட்டது.//

வீட்டுக்கு வந்ததும் வேறே மாதிரி சத்தம் கேட்டிருக்கணுமே! :P:P:P
அது சரி, என்ன திடீர்னு தொலைபேசி மெசேஜ் கொடுத்துட்டு இன்னும் வஸ்த்ரகலா வந்து சேரலை?? மயில் கழுத்துக் கலர் தானே?? :P:P:P

சிடி பாங்க் கிரெடிட் கார்டோட எங்க அனுபவம் ஒரே வருஷத்தில் எல்லாத்தையும் சரண்டர் பண்ணிட்டு,(1ரூக்குப் பொருள் வாங்கினால் அதுக்கு எப்படி 5 ரூ ஆகும்னு அதிசயமா இருக்கும்) இப்போ எந்த வித கார்டும் இல்லாமல் அப்பாடா! னு இருக்கோம். :)))))))

கவிநயா said...

ராக்கி குரல் கேட்ட பிறகுதானே இந்த மாதிரி ஞானோதயமெல்லாம் பிறக்குது? :)

வல்லிசிம்ஹன் said...

அம்பி அவங்க போன் செய்யட்டும் வேணாங்கலை.

கரெக்டா 12.30க்குத் தூக்கம் கண்ணிழுக்கும் நேரத்தில செய்யணுமா.
:(
நீங்கதான் அவங்க ஃப்ரண்டு ஆச்சே. ...இந்த மாதிரி ஒரு சாயந்திர வேளைல செய்தா எல்லாரும் கேட்பாங்களாம். லோன் கொடுங்க. திருப்பிக் கேட்காதீங்கன்னு சொல்லிடுங்கோ.,

ambi said...

கபிலன், நீங்க புரிஞ்சுகிட்டதை இப்படி முதல் ஆளா வந்து டமால்னு போட்டு உடைக்கனுமா? :))

ரா.ல, அதுவா ஒரு ப்ளோவுல வந்துடுது. சில சமயம் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என சொல்ல வைத்து விடுகிறார்கள். :)

சென்ஷி, கரக்ட்டா பாயிண்டை புடுச்சீங்க பாருங்க, ஸ்ரீதர் அண்ணாச்சியின் பின்னூட்டத்தை வாசிக்கவும். அது அவரவர் தனித்திறமையை பொறுத்தது. :))

ரீச்சர், நல்லா பாருங்க, நீங்க நியூசி அட்ரஸ் குடுத்து இருப்பீங்க. :))

இல்லாட்டி மேகி மாதிரி ரெண்டு நிமிஷத்துல டெலிவரி பண்ணிடுவாங்க. (மேகி என நான் நூடுல்சை தான் குறிப்பிட்டேன், பஞ்ச தந்திரம் நினைவுக்கு வந்து தொலைக்குது). :p

வாங்க தமிழ் நெஞ்சம். (எப்படி கண்டுபிடிச்சேன் பாருங்க) :))

ambi said...

ஸ்ரீதர், என் மேல கோவம்னா ரெண்டு சாத்து சாத்துங்க. அதுக்காக இப்படி வசனகர்த்தாவா ஆக்காதீங்க. :))

நம்ம பையன்னு நீங்க சொன்னது ச.சங்கர் தானே? :p

உண்மை தான் மஞ்சூர் ராசா, அவங்களை இப்படி தான் சுமூகமா டீல் பண்ணனும், இல்லாட்டி நமக்கு பிபி எகிறியது தான் மிச்சம். :)

ஸ்ரீராம், வழிந்தாளா இல்லாட்டி வெட்கம் தாங்காமல் தேங்க்ஸ் என்றாளா? :))

பிளாக் அக்கா, சொன்னது டாக்டர் ருத்ரன். அவருக்கும் பிளாக் இருக்கு. :))

கீதா மேடம், வஸ்த்ரகலாவா? யாரது? :p

கிரேடிட் தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டிட்டா தொல்லை இல்லை. விடுங்க, கூகிள்காரனே உங்களை படாதபாடு படுத்தறான். :p

கவி நயா, இப்படி எல்லாம் மடக்கி மடக்கி கேள்வி கேட்டா நான் என்ன சொல்ல? (உண்மைய சொல்லிடுவேன்) :))

வல்லிமா, 12.30கு வல்லிமா தூங்கிடுவாங்கன்னு நான் சொல்லி வைக்கறேன். இல்லாட்டி அடுத்த தடவை அம்பிகிட்ட சொல்லிடுவேன்னு நீங்க மிரட்டுங்க. :p

Anonymous said...

ambi,
unglalukku rakhi jain/sawant/kapoor mattuma panaranga,chinallerndhu unga "special friend"kooda dhhaan message mela message anupparanga.china llerndu message varathukku oru maccham venum pola.so enjoy.thangamanigal saarbil oru vendukol.rakhi sollra ellathaiyum porumaiya ketkum neengal,thangamani sollradhaiyum kaadhu koduthu ketkanum.for eg.kadai edhunnu theriyala..online shopping madhiri pattu pudavaiyum order pannallam.bill mattum rengamani peril varumam!!!!idhellam kaadhu koduthu kettal evvalvu nalla irukkum.
nivi.

Anonymous said...

ambi,
wishing you and your family a very very happy diwali.


nivi.

Porkodi (பொற்கொடி) said...

vandhuten! vandhuten!!

Porkodi (பொற்கொடி) said...

adada moral ellam pinni pozhiyudhe! ambi neengala idhu? enna aniyayam!

ah.. neengale thaan.. rakhi - kesari, idhu podhume! :P idhuve oru raakano dhivyano call panni irundha idhe madhri pesuvingla? adhan call cut paniduvingle! mannnnnnnnniiii!

Porkodi (பொற்கொடி) said...

paatiku vasthrakala venuma?? oru chinnalam pattu podhum!

ambi said...

வாங்க நிவி, ஆம இந்த சைனா காரன்/காரி தொல்லை தாங்க முடியலை. ராக்கி சொல்றதை ஐஞ்சு நிமிஷம் தான் கேக்கறோம். ஆனா ஆயுசு பூராவும் தங்க்ஸ் பேச்சை தானே கேட்க வேண்டி இருக்கு..? :p

ஏற்கனவே நீங்க சொல்ற மாதிரி தான் பில் வருது. :p

உங்களுக்கும் எங்கள் இனிய தீப திரு நாள் வாழ்த்துக்கள். :)

பொற்கேடி, எதுக்கு மா அடிக்கடி மன்னிய கூப்டற? எதுனாலும் டீலிங்க் நமக்குள்ளயே இருக்கடும். :))

சின்னாளப் பட்டும் ரொம்ப ஜாஸ்தி தான். :p

Dinesh C said...

//இத்தகைய ராக்கிகளுக்கு, திவ்யாக்களுக்கு போன் மூலம் பரிமாறப்படும் கோபம், இன்னொரு ரூபத்தில் வேறு யாருக்கோ போய் சேரும்//

annatha! athu enna verum ponnungalukku mattum thaan butterfly effecta?

திவா said...

//நம்மால் இத்தகைய ராக்கிகளுக்கு, திவ்யாக்களுக்கு போன் மூலம் பரிமாறப்படும் கோபம், இன்னொரு ரூபத்தில் வேறு யாருக்கோ போய் சேரும்//

வேற எங்கே அவங்களோட ரங்க் ஸூக்கு போய் சேரும்.
ரங்க்ஸ் எல்லாரும் இப்ப அம்பியை வாழ்த்தணும்.
ஹாப்பி தீபாவளி அம்பி!

ஆமா, பாஸ்டன் ஸ்ரீராம் சொல்லறாரே? //அமெரிக்காவில் இன்கமிங் இலவசமில்லை //
அதென்ன இன்கம்மிங் இலவசம் இல்லை? புரியலை.

rapp said...

me the 25th

rapp said...

//மும்பை எஸ்டிடி கோட் பாத்தவுடனேயே மொபைலை கட் பண்ணி விடுவேன். அந்த நம்பர் கூட எனக்கு அத்துபடி. போன தடவை அதே மும்பையில் இருந்து கால், வேற நம்பரில் இருந்து. புத்திசாலித்தனமா கால் பண்றாராம். பெரிய ஆபிஸ்களுக்கு நாலைந்து போன் லைன்கள் வரிசையாக இருக்கும் என்பது பொதிகை தொலைகாட்சியில் "காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு" பார்த்தவர்களுக்கு கூட தெரியும். சரி விடுங்க, என்ன தான் சொல்றார் இந்த ஆள்?னு இந்த தடவை பேசினேன். ஆச்சர்யம் பாருங்கள் இந்த தடவை போன் பண்ணியது ஒரு பெண். ஜொள்ளாண்டவரின் கருணையே கருணை.
//

naisaa samaalikkareenga, yemaandhittu:):):)

rapp said...

//பல ராக்கிகள், திவ்யாக்கள், லாவண்யாக்கள்//

verum rakhiz ku mattum indha salugayaa, illa, arnold vagayaraavukkumaa?

sriram said...

திவா
இந்தியாவில் செல்போனில் இன்கமிங் இலவசம், அதாவது உங்க செல்போனில் வரும் அழைப்புகள் இலவசம், ஆனால் அமெரிக்காவில் (பல நாடுகளில் இப்படித்தான், எந்தெந்த நாடுகள்ன்னு எனக்கு தெரியல)மாசத்துக்கு 600 நிமிடங்களுக்கு 40$, 1000 நிமிடங்களுக்கு 50$ என்று சார்ஜ். இன்கமிங்க் / அவுட்கோயிங் எல்லாமே இந்த 600/1000 நிமிடங்களில் அடக்கம்.
இப்போ புரியுதா
அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

துளசி கோபால் said...

இந்தியா முழுசும் இன்கமிங் கால் இலவசமா?

நாங்க பெங்களூர் போயிருந்தப்ப இன்கமிங் எல்லாத்துக்கும் சார்ஜ்ன்னு கொஞ்சம்கொஞ்சமா எல்லாக் காசும்போய் கடைசியில் ஏர்போர்ட்லே இருந்து கேன்ஸலான ஃப்ளைட்டை வீட்டுக்குச் சொல்லமுடியாம அவஸ்தையாப் போச்சு(-:

விசாரிச்சதுலே, நம்ம ஃபோன் சென்னையில் ரெஜிஸ்டர் செஞ்சதாம். தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் இன்கமிங் இலவசமாம்.

என்னமோ போங்க. ஆளாளுக்கு ஒரு சட்டம்!

கீதா சாம்பசிவம் said...

பிஎஸ் என் எல் என்றால் மட்டும் இன்கமிங் இலவசம்னு நினைக்கிறேன். மத்ததுக்கு இல்லை! பி எஸ் என் எல்லும் வெளிநாட்டில் இருந்து வரும் இன்கமிங் கால்களுக்கு சார்ஜ் உண்டு.

sriram said...

டீச்சர், நீங்க சொல்றது ரோமிங், நான் சொன்னது இன்கமிங்க் in base location.
The Roaming concept has been removed in many countries but not in India..

uma said...

ambi innumaa kesaria vidalae,
vanthen meendum naane,
epdi irukeal
naan free inimeal pathivugal varum

Anonymous said...

unmayave Rakhi Sawant call panni credit card pathi pesina, neenga udane ok sollirupenga dhane(credit card apply panna dhan)!!

ambi said...

பின்னூட்டம் இட்ட திவாண்ணா, உமா (கோபு)மேடம், மிட்டு எல்லாருக்கும் ரெம்ப நன்றி.

என் சார்பா பதிலளித்த பாஸ்டன் ஸ்ரீராமுக்கு ஸ்பெஷல் நன்றி. :)

மங்களூர் சிவா said...

/

கார்டு கிடக்குது கழுத. என்னமா ராக்கி, உன் கல்யாணம் தான் என்.டி.டிவில அமர்களப்படுது. நீயே கதின்னு கனடால இருந்து வந்திருக்கற அந்த மொட்டையவே கல்யாணம் பண்ணிக்க தாயி. நீ விரும்பறவனை விட உன்னை விரும்பறவனை கல்யாணம் பண்ணிக்கனு ரஜினி சொல்லி இருக்காரு.
/

ஹா ஹா
:))