ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடறாங்களா? என காமடி வசனங்கள் நிறைந்த தீ படமும், படிக்காதவன் பட விளம்பரங்களுக்கு நடுவில் செய்திகளை போடும் சன் டிவியில் நேற்று ஒரு சுவாரசியமான விஷயத்தை காட்டினார்கள்.
என்னோட பேச விருப்பமா? உடனே இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்கனு யாரோ ஒரு அபிராமியிடம் இருந்த ஒரு குறுஞ்செய்தி வர, நம்மாளு ஒருத்தர் உடனே அந்த நம்பருக்கு டயல் பண்ணி குணா கமல் மாதிரி அபிராம்மி அபிராம்மின்னு புலம்பி இருக்காரு. அவரு டயல் பண்ணது ஒரு ஐஎஸ்டி நமபர்னு அஞ்சு நிமிஷத்துல அவர் பேலன்ஸ் எல்லாம் கரைஞ்சு போனபிறகு தான் தெரிஞ்சு இருக்கு.
இதே மாதிரி உங்களுக்கு அந்த பாட்டு டவுன்லோடு பண்ணனுமா? தண்டயார்பேட்டை கிரிகெட் மேட்ச் ஸ்கோர் வேணுமா? இவரோட பொன்மொழிகள் வேணுமா?ன்னு ஒரு நாளைக்கு எத்தனை விதமான அழையா விருந்தாளிகளாய் இந்த குறுஞ்செய்திகள்.
எண்ணிக்கைக்கு ஒரு நாளைக்கு அஞ்சுன்னு வெச்சா கூட ஒரு மாசத்துக்கு நூத்தியம்பது (அப்ப பிபரவரி மாசத்துக்கு?னு பாயிண்ட் எல்லாம் பிடிக்க கூடாது).
வாடிக்கையாளர் சிம் வாங்கிய ஒரே பாவத்துக்கு தான் இந்த கருமத்தை எல்லாம் சகிச்சுக்க வேண்டி இருக்கு. இப்படி கு.செ வராம இருக்கனும்னா DNBன்னு டைப் பண்ணி அவுகளுக்கு அனுப்பி வைக்கனுமாம். உடனே 48 மணி நேரத்திலோ அல்லது ஒரு வாரத்திலோ மேல் நடவடிக்கை எடுப்பாங்களாம்.
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்:
வாடிக்கையாளரா மனம் உவந்து ஒரு மண்ணாங்கட்டி சேவையோ, மோர்குழம்போ உங்க கிட்ட கேக்கலை. நீங்களா ஏதோ தானமா குடுக்கற மாதிரி கு.செ அனுப்பி வைக்கறீங்க. அதுக்கு நாங்க தயவு செய்து டிஸ்டர்ப் செய்யாதீங்க!னு எதுக்கு கெஞ்சனும்? இதே நிலை தான் தான் வெளி நாட்டிலும் இருக்கிறதா? அங்க எல்லாம் கன்ஸ்யுமர் ரைட்ஸ் ரொம்பவே மதிக்கபடும் என்பதால் கேக்கறேன்.
இது பத்தி ஒரு நண்பனிடம் பேசியபோது மேலும் சில சுவாரசியமான தக்வல்கள் தெரிய வந்தது. அதாகப்பட்டது நாம ஐ.டி ப்ரூப், அட்ரஸ் ப்ரூப், ரேஷன் கார்டு எல்லாம் குடுத்து ஒரு சிம் கார்டு வாங்கினால் நம்மை மாதிரியே நம்பர் வாங்கிய லட்சோப லட்சம் இ.வாக்களின் நம்பர்கள் அடங்கிய டேட்டாபேஸை கணிசமான தொகைக்கு இப்படி மார்கெட்டிங்க் செய்யும் கேக்க்ரான் மோக்ரான் ஆளுகளுக்கு நம்ம சர்வீஸ் புரவைடர் ஒரு பொது சேவை மாதிரி வழங்கி விடுவாராம்.
அப்புறம் என்ன? நான் ஷில்பா பேசறேன், நான் ஸ்வேதா பேசறேன்! உங்களுக்கு லோன் குடுக்க ஆசையா இருக்குன்னு ஒரே கால்ஸ் தான், கு.செ தான்.
சைடு கேப்புல இத்தகைய ஷில்பாக்களை பிக்கப் செய்யும் ஆட்களும் உண்டு என்பதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயம்.
இதே மாதிரி நொந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கா? வரிசையா சொல்லுங்க பாப்போம்.
41 comments:
ஹிஹி, செல்போன் இருக்கிறதையே மறந்துடணும், அம்புட்டு தேன்! நாம எல்லாம் எடுத்துட்டா போறோம்?? :P:P:P:P
ஆஹா,மீ த ஃபர்ஷ்டு!
குறுஞ்செய்தி வந்தாத்தான் பரவாயில்லையே. ரோமிங்கில் இருக்கும் போது தான் கூப்பிட்டு உங்களுக்கு ஃப்ரீ க்ரெடிட் கார்ட் கொடுக்கறோம், வேணுமான்னு கேட்டு கொடைவாய்ங்க.
Sometimes the calls we get are really funny. Recently i got a call from my service provider saying, considering your maximum usage our company offering you to convert your prepaid card to postpaid. This has that benefit this benefit etc.
Ithula enna kodumaina antha sim card-la ennoda usage Rs. 60 per month. Ithula enna maximum usage pathuttaingannu puriyala.
அப்பாடின்னு மதியம் தலை சாய்க்கும்போது, ஐசிஐ லோன் வேணுமா,ஜோசியம் பார்க்கணுமா, இப்படீனு ஒர் செய்தி. ஒரு நளைக்கு டிங் டிங்னு அஞ்சாறு தடவைகளாவது.
அதனால் இப்ப சைலண்டில போட்டு விடுகிறோம்.
:))
புரியாத பாஷைலை sms அனுப்புறவங்களை என்ன செய்யலாம் அண்ணே... :)
"இதே நிலை தான் தான் வெளி நாட்டிலும் இருக்கிறதா? அங்க எல்லாம் கன்ஸ்யுமர் ரைட்ஸ் ரொம்பவே மதிக்கபடும் என்பதால் கேக்கறேன்."
உங்களுக்கு ரொம்பத்தான் நம்பிக்கை!
நாம் யாருக்காவது missed கால் குடுத்தால் உடனே அந்த நம்பருக்கு (நம் செலவில்) ஒரு S.M.S அனுப்பப்படும்.
"You have received a call from '---' please call back"
அது நம் Boss க்கா இருந்தால் அவ்வளவு தான்.
"இவன் யாரு என்னை கால் பண்ண சொல்ல" என்று தகராறு வேறு வரும்.
call center ல் சொன்னாலும் கண்டு கொள்வதில்லை.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
(தப்பா நினைக்கலைன்னா?)
visit counter
( நீங்களும் இதில ஒரு ஆளா? என்று கேட்டிருக்கிறீர்களே !)
அதற்கு மேல் உள்ள counter 118000+ காட்டுகிறது. கீழே pages etc., statistics ல்
visits 9800+ காட்டுகிறதே!
என்ன கணக்கு ? உள்குத்து ஏதாவது இருக்கோ?
அந்த ஆண்டவனே நினைத்தாலும் நம் செல்போன் யை இந்த மாதிரி இன்காமிங் போன் calls மற்றும் sms ல இருந்து காபாத்த முடியாது.......
இது எல்லாம் மார்க்கெட்டிங் ல இருக்கிற ஆளுகள் உள் இருக்குற dealing....
அதாவது give and take பாலிசி தான்.....
உதரணத்துக்கு .....
உங்கள் family யின் ஜாதகம் குறைந்தது உங்கள் ஏரியாவில் இருக்கும் 50 கம்பெனி கிட்ட இருக்கும்.....சின்ன கம்பெனி முதல் பெரிய கம்பெனி வரை உங்கள் குடும ஜாதகம் அலச படும்.......
சில சமயம் உங்கள் அக்கௌன்ட் யில் எவ்வளவு காசு இருக்கு பாலிசி நம்பர் போன்ற எல்லா detailகளும் இவர்கள் வைத்து இருப்பார்கள்.........
"ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடறாங்களா? என காமடி வசனங்கள் நிறைந்த தீ படமும், படிக்காதவன் பட விளம்பரங்களுக்கு நடுவில் செய்திகளை போடும் சன் டிவியில் நேற்று ஒரு சுவாரசியமான விஷயத்தை காட்டினார்கள்"
pavmunga naam
//அதற்கு மேல் உள்ள counter 118000+ காட்டுகிறது. கீழே pages etc., statistics ல்
visits 9800+ காட்டுகிறதே!
என்ன கணக்கு ? உள்குத்து ஏதாவது இருக்கோ? //
அதே, அதே, மெனக்கெட்டு நீங்க கண்டு பிடிச்சது தப்பாய் இருக்குமா? :P:P:P:P
என்ன பண்ணிதொலைக்க...
nice.
ரோமிங்ல் இருக்கும் போது வரும் மார்க்கெட்டிங் கால்களால் வெறுத்து போயிருந்தேன்.
இப்போதெல்லாம் தமிழ்நாடு போகும் போது தமிழ்நாடு சிம்கார்ட். கர்னாடகா சிம்கார்டை கழட்டிவிடுவேன் அதனால் குறைந்தது நம் பணம் ரோமிங்கின் போது தப்பிக்கும்.
//சைடு கேப்புல இத்தகைய ஷில்பாக்களை பிக்கப் செய்யும் ஆட்களும் உண்டு என்பதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயம்.
இதே மாதிரி நொந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கா? வரிசையா சொல்லுங்க பாப்போம்.//
இது வரை அப்படி எதுவும் பிக் செய்ததில்லை! டிரையிங்க் மை பெஸ்ட்!
:(
//சைடு கேப்புல இத்தகைய ஷில்பாக்களை பிக்கப் செய்யும் ஆட்களும் உண்டு என்பதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயம்.
இதே மாதிரி நொந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கா? வரிசையா சொல்லுங்க பாப்போம்.//
ஓ! நொந்த அனுபவமா! நான் மேலெ இருக்குற பாராவையும் சேர்த்து சொந்த அனுபவத்தைக்கேக்குறீங்களோன்னு நினைச்சிட்டேன்!
சில நேரம் குரூப்பா செர்ந்து கலாய்க்க பார்ப்பாங்க!
அந்த ஷில்பா கேட்டது :
"சார்! நீங்க என்னவெல்லாம் கார்டு யூஸ் பண்ணுறீங்க?"
நான் சொன்னது: "நான் ரேஷன் கார்டு யூஸ் பண்ணுறேன், விசிட்டிங் கார்டு, எலெக்ட்ரிசிட்டி கார்டு,...."
அந்தப் பக்கம் அஞ்சாறு பொண்ணுங்க சேர்ந்து சிரிக்கிற சத்தம் கேட்டுது!
//உங்கள் family யின் ஜாதகம் குறைந்தது உங்கள் ஏரியாவில் இருக்கும் 50 கம்பெனி கிட்ட இருக்கும்....//
அட! பேசாம நல்ல வரனா பார்த்து முடிச்சி கொடுங்கன்னு அவங்ககிடயே கேக்கலாம் போல!
//இது வரை அப்படி எதுவும் பிக் செய்ததில்லை! டிரையிங்க் மை பெஸ்ட்!
:(//
சிபி வீடு அட்ரஸ், தொலைபேசி எண் எல்லாம் என் கிட்டே இருக்குனு சொல்லிக்கிறேன்.:P:P:P:P:P
நம்ம இலங்கையில இல்லாத தொல்லை இது ஒன்னுதான். ஆனால் கொன்செப்ட் நல்லாதான் இருக்கு.....
இங்கே இன்கம்மிங்கே காசு, சும்மா தொட்டாவே பேலன்ஸ் போயிருது.. :(
நல்லா மேனேஜர்கிட்ட திட்டு வாங்கிட்டு வந்து உக்காரும்போதுதான் பார்ட்டிக்கு போகலாம் வரியா பாட்டை உங்க காலர் டோனாக செட் செய்ய எண் ஒன்றை அழுத்துங்கள் அப்படின்னு ஒரு கொடுமை போன்ல கேட்கும். முதல்ல எல்லாம் ஒரே நம்பர்ல இருந்துதான் போன் வரும். பார்த்ததும் கட் செஞ்சுடுவேன். இப்ப அவங்களும் புது புது நம்பர்ல இருந்து கூப்பிட்டு கடுப்பேத்தறாங்க.
//(அப்ப பிபரவரி மாசத்துக்கு?னு பாயிண்ட் எல்லாம் பிடிக்க கூடாது).//
அம்பீ, அட சே, நாங்க என்ன அப்பிடியா, இங்கிதம் தெரியாம பேசுவோம். பிப்ரவரி கணக்க விடுப்பா, அட்லீஸ்ட் ஜுலை ஆகஸ்ட்பா? 31, 31 ஆச்சே…ஹி…ஹி..ஹி..
நம்ப கதைய கேளுங்க. பர்ஸ்ட் டைம், இந்த மாதிரி கால்(பார்ட்டிக்கு போகலாம் வரியா பாட்டை உங்க காலர் டோனாக செட் செய்ய எண் ஒன்றை அழுத்துங்கள் )வந்தப்போ நான் ரொம்ப அவசரமா காளியப்பா நர்சிங்ஹோம்க்கு பைக்ல போய்ட்டு இருக்கேன். என்னடா செல் அடிக்குதேன்னு வண்டிய ஒரம் கட்டி எடுத்து கேட்டா இந்த கொடுமை. வந்த ஆத்திரத்துல சரிவீஸ் புரவைடர கூப்பிட்டு வாங்கு வாங்குன்னு வாங்கினேன். (கால் அட்டண்ட் பண்ணினவர், எல்லாத்தையும் கேட்டுட்டு, சார், உங்க பேரு என்ன? உங்க செல் நம்பர் என்ன? நீங்க ஜாயின் பண்ணப்போ என்ன புருப் குடுத்து ஜாயின் பண்ணீங்க… இந்த ரேஞ்சுல பத்து கேள்வி கேட்டுட்டு…அப்புறம் எதுவுமே நடக்காத மாதிரி, சார், எங்க சர்வீஸ் உங்களுக்கு புடிச்சி இருக்கான்னு கேட்டது தான் ஹைலைட்டே.
நீங்க கேக்கற கேள்வி கரெக்ட். இந்த மாதிரி பல அருமையான சேவைகள் தராங்க.
ஆனா, எவ்வளவு பேரு இத தடுக்கறது எப்படின்னு கண்டுபிடிக்கறாங்க. அப்படி கண்டுபிடிச்சாலும் எவ்வளவு பேரு தடுக்க முயற்சி எடுக்கறாங்க ?
அவசியமான பதிவு.
nijamave torture thhanga mudiyala.daily kaalai 8 manikku rengukku orr call,3 sms veedham varum.renguvum boss kitterndhu ninaithu kondu baya bakthiyoda paarthal urupadatha sms.?(pinna padiyalakkara perumal phono illa sms kodutha oru bayam venam!!!!)enna,enkitte kooda andha bayam illa!!!!kodumai ennana ,bossukkum,rengsukkum sms mattrum e-mailum thaan pechuvarthaiye nadakkum.neenga solra madhiri car ottum bothu,illana two whheeler ottum bodhu indha sms thollai thangamal phoneaa appadiye thooki adikallamannu kovam varum.ambi,neengalum bossukku bayandha jaathiya!!!!
nivi.
//அதுக்கு நாங்க தயவு செய்து டிஸ்டர்ப் செய்யாதீங்க!னு எதுக்கு கெஞ்சனும்? //
சரியான லாஜிகல் கேள்வி.
//சிபி வீடு அட்ரஸ், தொலைபேசி எண் எல்லாம் என் கிட்டே இருக்குனு சொல்லிக்கிறேன்.:P:P:P:P:P//
ஹிஹி! தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று நானும் சொல்லிக்கிறேன்!
@Sibi, grrrrrrrrrrrrrrrrrrr., phone potachu thangamanikku! :P:P:P:P
கீதா மேடம், ஆமா, செல்போன்ல பேசினாலே துட்டு போயிடும்னு உங்க கிட்ட யாரோ சொல்லி இருக்காங்க போலிருக்கு. :))
விஜய், ஆமா, வேணும்னே ரோமிங்க்ல இருக்கும் போது கூப்ட்டு நமக்கு ஆப்பு வைப்பாங்க. :(
தோழி, அட எனக்கும் கேட்டாங்க, போஸ்ட் பெய்டா மாத்தினா நான் பில்லே கட்ட மாட்டேன், பரவாயில்லையான்னு கேட்டேன், அந்த அம்மணி டோக்குனு போனை வெச்சுடுச்சு. :))
//போஸ்ட் பெய்டா மாத்தினா நான் பில்லே கட்ட மாட்டேன், பரவாயில்லையான்னு கேட்டேன், அந்த அம்மணி டோக்குனு போனை வெச்சுடுச்சு. :))///
க்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க பில் கட்ட மாட்டீங்க, ஆனால் என்னைக் கிண்டல் பண்ணுவீங்க??? என்ன ஒரு வில்லத் தனம்! :P :P:P:P:P:P:P:P:P:P:P
வல்லிமா, லோன் தானே தாராளமா வாங்கிக்கறேன், ஆனா வருசத்துல பத்து மாசம் இந்தியாவுல இருக்க மாட்டேன் பரவாயில்லையா?ன்னு அடுத்த தடவை கேளுங்க வல்லிமா. :))
வாங்க தமிழன் கறுப்பி, புரியாத பாஷைல எல்லாம் அனுப்பறாங்களா? பெரிய ஆளுங்க நீங்க. :))
மெனக்கெட்டு, நீங்க சொன்ன சிச்சுவேஷனை நினைச்சு எனக்கு சிரிப்பா வருது.
இதுல பெரிய ரகசியம்லாம் ஒன்னும் இல்லை. முதல்ல இருக்கற ஹிட் கவுண்டர் நான் 2006ல வெச்சது. ரெண்டாவது இப்ப தான் டிசம்பர் ஒன்னு 2008ல வெச்சது.
எதிர் கட்சிகள் கூட சேராதீங்க. :))
மேவீ, ரகசியத்தை இப்படி பப்ளிக்கா போட்டு உடைக்கறீங்களே? :))
ஆகாய மனிதன், ரெம்ப அடி வாங்கி இருக்கீங்க போல.
ம சிவா, அடிக்கடி தமிழ் நாட்டுல என்ன வேலை? தங்கமணி இதெல்லாம் கண்டுக்கறதே இல்லையா? என்னவோ போ, நல்லா இருந்தா சரி சிவா. நாராயணா நாராயணா. :))
வாங்க சிபியாரே, இன்னும் பிக்கப் செய்யலையா? இத நாங்க நம்பனும்னா? ஆமா, ஒரு க்ரூப்பா சேர்ந்து நம்ம வாயை பிடுங்குவாங்க. உமக்கு தான் கல்யாணம் எல்லாம் முடிஞ்சு போச்சே!. (சரி! எனக்கும் தான்) :))
Hisham, இலங்கைல இதெல்லாம் கிடையாதா? அப்படியே அமைதியான வாழ்வும் இறைவன் அருளால் நின் மக்களுக்கு நிரந்தரமாக வாய்க்கட்டும்.
இளா, அடப் பாவ்மே! அப்ப மீஸ்டு கால் கூட குடுக்க முடியாதா? :))
தாரணி ப்ரியா, ஹிஹி, சரி விடுங்க, வீரர்கள் வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம். :))
@vijay, உடனே நீங்க ஸ்ஸ்ஸ்பா, முடியல! அப்படின்னு சொல்லி இருப்பீங்களே! :))
சரியா சொன்னீங்க மணி, இந்தியர்களுக்கு சகிப்புத் தன்மை ரொம்பவே ஜாஸ்த்தி. எனக்கும் தான். (நான் என்னவோ தொரை மாதிரி பதில் சொல்றதா நினைச்சுக்க கூடாது இல்ல)
:p
வாங்க நிவியக்கா, உங்க வீட்டு ரங்கு கைல பிளாக்பெர்ரியா? சரியா போச்சு. எதுக்கு எங்க மேனேஜரை எல்லாம் இப்ப கூப்டறீங்க? அவருக்கு தமிழ் வேற எழுத படிக்க தெரியும். :))
வருகைக்கு ரொம்ப நன்றி பட்டாம்பூச்சி. :))
இங்கயும் இது இருக்கு, சில சமயம் எஸ்எம்எஸ் வரும். அதை திறந்து பார்த்தாலே காசு எடுத்திடுவாங்களாம். இது இங்க போன வருஷம் பெரிய பிரச்சினையா ஆச்சு. அதுவும் குறிப்பிட்ட கம்பெனிகளின் சேவையை உபயோகிக்கும்போது கூடுதல் தொல்லைகள். அது மட்டுமில்லாம, சில சமயம் நம்பர் ஹைட் பண்ணி வரும் சில கால்களை எடுக்கும்போதும் இதே பிரச்சினை. ஆனா எடுக்காமையும் இருக்க முடியாது, சில சமயம் சில நார்மல் கால் சென்டர்கள், அதாவது நம்ம பாங்க் சம்பந்தப்பட்ட ஆளுங்களா இருப்பாங்க, நெஜமாவே எதாவது விஷயம் இருக்கும். இதுக்கு சட்டத்துக்கு மேல சட்டம் போட்டாச்சு. ஆனா முழுசா செல்போன் கம்பெனிகளையும் குத்தம் சொல்ல முடியாது. சில சமயம் சில சைபர் புலிகள் ராண்டமாக நம்பர் எடுத்து வம்படி பண்றாப்படி செய்திடறாங்கன்னும் சொல்றாங்க.
வாங்க ராப், என்னது கு.செ படிக்கவே காசு குடுக்கனுமா? இந்தியா தேவலை போலிருக்கே.
வீட்ல ரெம்ப சமையல் வேலையா? இல்லாட்டி மாமியார் வந்ருக்காங்களா? இல்ல, லேட்டா வந்ருகீங்களே, அதான் கேட்டேன். :))
//டேட்டாபேஸை கணிசமான தொகைக்கு இப்படி மார்கெட்டிங்க் செய்யும் கேக்க்ரான் மோக்ரான் ஆளுகளுக்கு நம்ம சர்வீஸ் புரவைடர் ஒரு பொது சேவை மாதிரி வழங்கி விடுவாராம்//
இல்லை அம்பி.
இந்தியாவில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலமாக மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு தகவல் செல்வதில்லை. மாறாக, railway reservation form போன்றவற்றின் மூலமாக செல்கின்றது.
@இளவரசன், அட அப்படியா? புதிய தகவலுக்கு மிக்க நன்றி. :))
அம்பி அது DNB இல்ல. அது DND (DO NOT DISTURB). இத வேணும்னுட்டுதானே போட்டீங்க!!
//அது DND (DO NOT DISTURB).//
அடடா, எழுத்துப் பிழை. நன்றி இளைய பல்லவன்.
வேணும்னு எல்லாம் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பப் போவதில்லை. :))
2015 la no blogs at all y ambi,have u stopped ur sevai.
Post a Comment