Friday, February 16, 2007

ஓம் நம சிவாய!


அன்னைக்கு நவராத்திரி என்றால், அய்யனுக்கு இன்று சிவராத்திரி! மாசி மாதம் தேய்பிறை சதுர்தசியில் வருவது தான் சிவராத்திரி.
******************************************************************************
உலகாளும் மன்னனுக்கு உறக்கம் வரவில்லை. எப்படி வரும்? விடிந்தால் அவன் பார்த்து பார்த்து கட்டிய சிவ ஆலய குடமுழுக்கு ஆயிற்றே! எல்லா ஏற்பாடும் தயார் நிலையில். வீதியேங்கும் வண்ண கோலங்கள் என்ன, வான வேடிக்கைகள் என்ன! வேத மந்திரங்களின் கணீர் ஓசை என்ன! சத்திரங்களில் 18 வகை பதார்த்தங்களுடன் வந்தவருக்கு எல்லாம் உணவேன்ன! என்று நாடே திமிலோகப்பட்டது.

"மன்னா! இதை மாதிரி ஒரு ஆலயம் இந்த உலகில் இதுவரை எவரும் கட்டியதில்லை, இனி கட்டப்போவதும் இல்லை!" என்று தலமை சிற்பி இறுமாப்புடன் சொன்ன சொற்கள் மன்னனின் காதில் தேனாய் பாய்ந்ததில் வியப்பேன்ன? நடு ஜாமம் மூன்றாம் நாழிகையிலும் மன்னன் உறங்காமல் புரண்டு படுத்தான்.

எல்லாம் முகஸ்துதி படுத்திய பாடு!

"விடிந்தால் என் லக்ஷியம் நிறைவேறி விடும். உலகை ஆளும் ஈசனுக்கு நான் ஆலயம் எடுத்து விட்டேன்! என வரலாறு இதை பதிவு செய்து விடும்". மெதுவாக கர்வம் அங்கே தலைதூக்கியது.

களைப்பு மிகுதியால் மன்னவனும் கண்யர்ந்தான்.

கனவில் தோன்றினான் பசுபதி நாதன்.






பாராளும் மன்னனே! நாளை நீ எமக்கு அமைத்த ஆலயத்தில் யாம் குடி பெயற இயலாது. அன்பன் ஒருவன் இதே நாளில் கோலாகலமாக குடமுழுக்கு ஏற்பாடு செய்துள்ளான். வேறு முஹூர்த்தம் பார்த்து கொள்! முடிந்தால் நீயும் அந்த விழாவில் கலந்து கொள்!

உறக்கம் கலைந்து துள்ளி எழுந்தான். குழப்பத்தில் ஆழ்ந்தான்.

யாரங்கே! கூட்டடா மந்திரி சபையை!
நாலாம் ஜாமம் முடிவில் அவசர கூட்டமா? என்ன நேர்ந்தது?

ஆனாலும் கூப்பிட்டது மன்னன், தலைபணிந்தது அரசவை.

"என் நாட்டில் இன்னொரு குடமுழுக்கா? யாரது? எங்கே? எப்படி எனக்கு தெரியாமல்? ஒற்றர் படை உறங்கி விட்டதா? விரைவோம் ஈசன் சொன்ன அனபரது இருப்பிடத்துக்கு!" - அதிகாரம் சாட்டையை சொடுக்கியது.

சாதாரண குடில். குடமுழுக்குக்கான அறிகுறி எதுவும் இல்லை.

யாரது வீட்டில்?

என்ன விஷயம்? பாராளும் மன்னன் பரதேசி என் வீட்டு வாயிலில்...?

கனவின் விவரம் அறிவிக்கப்பட்டது. கையது பொத்தி, கண்ணீர் மலகி மெய்யொழுக வாய் திறந்தார் அன்பர்.
மன்ன! நீங்கள் கட்டிய ஆலயம் பார்த்து அன்பனும் ஆசை கொண்டேன்.

"உள்ளம் பெருங்கோவில்!
ஊண் உடம்பு ஆலயம்!
கண்ணிரன்டும் தூங்கா மணி விளக்கு!" எனவும்


நெஞ்சகமே கோவில்!
நினைவே சுகந்தம்!
அன்பே மஞ்சன நீர்!
பூஜை கொள்ள வாராய் பராபரமே! என்று உருகி அழைத்தேன். அதற்க்கு தானோ என்னவோ நம் ஈசன் தலை சாய்த்து இருக்கிறான்.


"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருகாயில்?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?"

- சிவ வாக்கியர் (சித்தர் பாடல்கள்)


அன்பரது தாள் பணிந்து வணங்கியது அதிகாரம்.



படோப பூஜைகள், அபிஷேகங்கள், தூப தீப வழிபாடுகள் என மனம் லயிக்காமல் ஸ்வாமி கும்மிடுவதை விட மனமுருகி நாலு வில்வம் சாத்தினால் நாதன் செவி சாய்க்காமலும் இருப்பானோ?


இந்த சிவ ராத்திரி நன்னாளில் " நெட் கனெக்க்ஷன் வரலை! பிளாக்கர் பப்ளிஷ் ஆகலை! போட்ட போஸ்ட்டுக்கு கமண்ட் வரலை! போன்ற முக்கியமான உலக கவலைகளை சிறிது தள்ளி வைத்து சூடான பில்டர் காப்பியையும் மறந்து ஈசன் நினைவும் கொள்வோமே! :)
பி.கு: இந்த பதிவை படித்து விட்டு "எலேய் அம்பி! மெய்யாலுமே நீ தானா இப்படி போஸ்ட் போட்டது? உன் லிங்க் தானா?னு செக் பண்ணினேன்!" அப்படினு என்னை வெச்சு காமடி, கீமடி எதுவும் பண்ண படாது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா!
எனக்கும் அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி வரும்.
ஓம் நம சிவாய!ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!

28 comments:

Bharani said...

anna first comment potukaren :)

Bharani said...

ippa poi padichitu kannathula potukaren :)

Bharani said...

ennaku indha vishayathula zero knowledge....neenga kuduthu irukara info ellam vachidhaan build up pannanum

Bharani said...

//உலகை ஆளும் ஈசனுக்கு நான் ஆலயம் எடுத்து விட்டேன்! என வரலாறு இதை பதிவு செய்து விடும்". மெதுவாக கர்வம் அங்கே தலைதூக்கியது.//...andha "Naan" bold panni oru K.B touch kuduthu irukeenga :)

Bharani said...

//படோப பூஜைகள், அபிஷேகங்கள், தூப தீப வழிபாடுகள் என மனம் லயிக்காமல் ஸ்வாமி கும்மிடுவதை விட மனமுருகி நாலு வில்வம் சாத்தினால் நாதன் செவி சாய்க்காமலும் இருப்பானோ?
//...unmai unmai...unmaiyandri verounrum illa

Bharani said...

first commentku sivaraathiri nyvedhiya pongal, sundal meendha marakama anupidungo :)

Anonymous said...

sivarathri annaiku esanai pathi post pottu manasa nerachiteenga..nice post ...nice pictures...koil-luku poi dharisanam pannina mathri iruku....ellam sivamayam

Ravi said...

En ishta deviam Eesan pathi oru nenjam thodum post pottu kalakkiteenga. But neenga sonna doubt enakkum vandhadhu (andha link dhaan) ;-)

Adhuvum andha Thanjavur periya koyil Siva lingam... aahaaa evvalavu dhadavai paarthaalum pularikkum!!

Swamy Srinivasan aka Kittu Mama said...

adade ! ungala enavo nnu nenachen, bakthi post ellam pottu kalakareenga !
Siva ! Siva ! :)

மு.கார்த்திகேயன் said...

உண்மையிலே நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன் அம்பி..

மு.கார்த்திகேயன் said...

//இந்த சிவ ராத்திரி நன்னாளில் " நெட் கனெக்க்ஷன் வரலை! பிளாக்கர் பப்ளிஷ் ஆகலை! போட்ட போஸ்ட்டுக்கு கமண்ட் வரலை! போன்ற முக்கியமான உலக கவலைகளை சிறிது தள்ளி வைத்து சூடான பில்டர் காப்பியையும் மறந்து ஈசன் நினைவும் கொள்வோமே! //


ஓ.. இங்கிருக்கும் கோயிலில் இன்று சிவராத்திரி விஷேச பூஜைகள் நடக்கப் போகுது அம்பி.. போகணும்..

மற்றபடி, தூண், துரும்புன்னு போன்ற உயிரற்ற பொருள்களில் கூட இருக்கும் ஈசன், நம்ம மனசை ராசா மாதிரி ஆள்வார், அம்பி

ஓம் நமச்சிவாயா!

golmaalgopal said...

nalla naal adhuvuma...nalla vishayatha potadhu...adhuvum ummaachiya patthi potadhu..romba nalla irukku ambi...

aamaa..ungalukkum appappo nalla buddhi varudhu[enna maadhiriye... :)]...

Anonymous said...

எல்லாம் கரெக்டா இருக்கு. ஆனாலும் எனக்கு ஒரு டவுட்டு வந்த்திடுச்சி.
"சிவ பூசைக்குள்ளே கரடி புகுந்திடிச்சி என்று சொன்னா அதென்ன ?

புள்ளிராஜா

Sree's Views said...

Hi Ambee,
Enjoyed the post!
Reflects my sentiments :)

Ms Congeniality said...

//"உள்ளம் பெருங்கோவில்! ஊண் உடம்பு ஆலயம்! கண்ணிரன்டும் தூங்கா மணி விளக்கு!" எனவும்

நெஞ்சகமே கோவில்! நினைவே சுகந்தம்! அன்பே மஞ்சன நீர்!பூஜை கொள்ள வாராய் பராபரமே! என்று உருகி அழைத்தேன். அதற்க்கு தானோ என்னவோ நம் ஈசன் தலை சாய்த்து இருக்கிறான்.

"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருகாயில்?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?"

- சிவ வாக்கியர் (சித்தர் பாடல்கள்)
//
Beautiful words :-)
Kashta pattu ezhuthu kooti padichi purinjinten :-p

MyFriend said...

சொன்ன மாதிரியே நீங்க வெள்ளி வெள்ளிக் கிழமைதான் பதிவு போடுறீங்க.. :-?

சிவராத்தி அன்னைக்கு சிவனை பற்றி சில விஷயம் சொன்னதுக்கு நன்றி அம்பி. இங்கே மணி இப்போது விடியற்காலை 3.. முழிச்சிக்கிட்டு சிவனைப் பற்றி உங்களுடைய போஸ்டில் படித்துக் கொண்டிருக்கிறேன். ;-)

Manoj said...

ஆஹா! சிவன் கோயில் 12 மணி புளியோதரய முழுங்கிட்டு, இண்டர்நெட்ட பாத்தா...

பரவால்லண்ணா, இண்டர்நெட்-கல்யாணம் அப்படி இப்படின்னு முன்னேறிட்டாலும், நம்ம மக்கள், இன்னும் பக்த்தியோட தான் இருக்கா.

தென்னாடுடைய சிவனே போற்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

எனக்கும் அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி வரும்
அதான் பாத்தோமே டிஸெம்பர் 1 ஆம் தேதியன்னைக்கு.
அஹம்பாவத்தை அடக்கிய நல்ல பதிவு.

Syam said...

தங்கமனி வந்தாச்சு இன்னும் நல்ல புத்தி வரலனா...அமெரிக்கால இருந்து அடி ஆன்லைன்ல வராது :-)

Geetha Sambasivam said...

நல்ல பதிவு போட்டாலும் நடுவே இல்லாட்டியும் கடைசியிலாவது நமக்கு உள்குத்து, வெளிக்குத்துக் குத்தாமல் எழுத வராது. இதிலே நல்ல புத்தியா வந்திருக்கு? :D ஏதோ தங்கமணி நம்பினாச் சரி.
அது சரி, கணேசனையே எழுதச் சொல்றதுக்கு என்ன? எத்தனை நாளைக்கு இந்த மாதிரிப் பதிவுகளுக்கு அவன் "ghost writer" ஆக இருப்பான்? பாவம் கணேசன், கணேசா, தைரியமா முன்னாலே வா!

david santos said...

Helo!
Very, very good
Tank you

Sumathi. said...

ஹாய் அம்பி,

அது சரி, இந்த சிவராத்திரிக்கு நீங்க என்னவெல்லாம் பண்ணீங்க? எத்தனை சிவனைப் பாத்தீங்க? இங்க கோலார் பக்கத்தில கோடிலிங்கம் னு இருக்கே பாத்துருக்கீங்கள?

Porkodi (பொற்கொடி) said...

aajar!

Porkodi (பொற்கொடி) said...

hai adhu 23!!

Porkodi (பொற்கொடி) said...

எலேய் அம்பி! மெய்யாலுமே நீ தானா இப்படி போஸ்ட் போட்டது? உன் லிங்க் தானா?னு செக் பண்ணினேன்!! :-)

KC! said...

sorry, I think I am in the wrong blog,I intended to come to ambi's blog (he he)

My days(Gops) said...

thala, ennamo solli irrukeenganu enakku theriudhu, but i duno'nu enna'nu naaan solla maaten....


edho purinchadhu, adhuvum nallavey purinchadhu....
( idhuku mela, keela me no telling :)) )

Princess said...

Kathaiyai erkanave padithirunthalum.
meendum ninaivu utiyamaiku nandri.