Friday, February 02, 2007

பால் காய்ச்சியாச்சு!

பேச்சிலரா சிவனேனு இருந்த(இருக்கற) இந்த குழந்தைய வசமா மாட்டிவுட்டுடாங்க. இது வரைக்கும் சின்னதா ஒரு ரூம்ல இருந்த நான் இனிமே இருக்க முடியுமா? அதுனால, சரி! அழகா, சின்னதா, ஒரு வீடு (இது தங்கமணிக்கு - சின்ன வீடு இல்ல எஜமான்) பாத்துடலாம்!னு முடிவு பண்ணி இந்த ஜிலேபி தேசதுல சுத்தி சுத்தி வந்தேன்.

எல்லா பயலும் வீடு வாடகைக்கு பதிலா வீட்டோட விலையேவே சொல்றான். ஒரு வீட்ட பாக்க போன போது பாதி ரூம் கட்டி முடிக்காம இருக்கே! என்னயா மேட்டர்?னு கேட்டா உங்க கிட்ட அட்வான்ஸ் வாங்கி தான் மீதிய கட்டனும்! எப்படி வசதி?னு பல்ல காட்றான்.

அப்ப தான் கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் மாதிரி நம்ப
டுபுக்குடிசிப்பிள் என் மேல இரக்கப்பட்டு பொங்கல் அன்னிக்கி சாப்பிட கூப்டாங்க. நமக்கு தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் ஆச்சே! நைட்டுக்கு பார்சலும் சேர்த்து தருவீங்களா?னு முன்னாடியே போன்ல விசாரிச்சுண்டு அவங்க வீட்டுக்கு போயி சும்மா கட்டு கட்டுனு கட்டிடேன்.

சூப்பரா சமச்சு இருந்தாங்க. (ஹிஹி, ரசத்துல தான் கொஞ்சம் காரம் கம்மி).
அப்ப தான் அவங்க பக்கத்து அபார்ட்மெண்ட் காலி!னு கேள்விப்பட்டு கப்புனு அமுக்கிட்டேன்.
விதி யாரை விட்டது? இனிமே தான் இருக்கு அவங்களுக்கு தலைவலியே!
நல்ல பவுர்ணமி அன்னிக்கி பாலும் காச்சியாச்சு!அடுத்த போஸ்ட் "வீட்டுக்கு வெள்ளை அடிச்சாச்சு! கக்கூஸ் கழுவியாச்சு!னு எல்லாம் கண்டிப்பா போட மாட்டேன். பயப்படாதீங்க.

ஆகவே மக்களே! இப்ப சொல்லுங்க, பிளாக் எழுதினா உங்களுக்கு என்ன என்ன கிடைக்கும்..?

Next Post: ஆதலால் பிளாக் எழுதுவீர் - II Don't miss it. :)

47 comments:

G3 said...

Attendence!!!

Poi posta padichittu varen :))

G3 said...

Aaha.. mokkai manna!!! ennaiyae minjiteenga!!! :-)

//Next Post: ஆதலால் பிளாக் எழுதுவீர் - II Don't miss it. :) //
Indhu build-upkku mattum korai illa.. postu dhaan vara maatengudhu ;-))

Arunkumar said...

as usual , rouse post ambi :)
//
எல்லா பயலும் வீடு வாடகைக்கு பதிலா வீட்டோட விலையேவே சொல்றான்.
//
LOL :)

//
Next Post: ஆதலால் பிளாக் எழுதுவீர் - II Don't miss it. :)
//
ellarukkum therinji pochu.. indha Buildup ellam illame seekiram potudradhu better :)

@g3
//
ennaiyae minjiteenga!!! :-)
//
ungala minjuradha? indha vishayathula ungala beat panna oruthara Brahma innum padaikala !!!

பொற்கொடி said...

அட்டெண்டன்ஸ்!

பொற்கொடி said...

விவிசி :) சொந்தமா வீடு கட்டினா கூட இவ்ளோ ரவுசு ஆகாது ;) பாவம் தங்கமணி :(

வெற்றி said...

அம்பி,
நல்ல நகைச்சுவையாக, படிக்கச் சுவாரசியமாகச் சொல்லியுள்ளீர்கள்.
இதே பாணிலை உங்களின் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்...

Ms.Congeniality said...

Dubuku Disciple superaa samaikaraangala..nalladha pochu :-p

Ms.Congeniality said...

Porkodi,
idhuke ippdi naa, sondhamaa veedu kattum bothu enna rousu viduvaaru nu paakanum :-p

மு.கார்த்திகேயன் said...

அப்படி போடு அம்பி.. பால் காய்சியதற்கு வாழ்த்துக்கள்.. சோ.. எல்லாம் ரெடி.. ஆனா கல்யாண தேதியை மட்டும் இப்படி சொல்லாம இருக்கிறது நியாயமில்லை அம்பி

மு.கார்த்திகேயன் said...

ஓ.. அம்மணியும் (தங்கமணி) இன்னும் பின்னூட்டம் போடுறாங்க போல..

மு.கார்த்திகேயன் said...

//பேச்சிலரா சிவனேனு //

பேச்சிலர்னா எப்படி சிவனாகும்..

அம்பி, ஏதும் உள்குத்து இல்லியே

பொற்கொடி said...

@manni:
ninga onnum ambikku salaichavar illainu proving :)nijamave paavam dubukku disciple, inime avanga veedu tedi paal kaaichi... :))

golmaalgopal said...

aahaa thala...romba naal aachu post'ah paathu...

//அழகா, சின்னதா, ஒரு வீடு (இது தங்கமணிக்கு - சின்ன வீடு இல்ல எஜமான்) //

adraa adraa... :))

//ஆதலால் பிளாக் எழுதுவீர் - II Don't miss it.//

Build-uppu...hmmm

@thalai's தங்கமணி

saapaatukku inime anga dhaan dera'va ??? :)))

dubukudisciple said...

hi ambi
naalla post thaan!! ana enna puzgareengala illai ... adu thaan santhegama iruku!!!!!
seri seri inime unge veetliye samachu kuduthuduren.. enga veetla gas and provisions micham...
correct thanee Would be ambi???

.:: MyFriend ::. said...

புதிய வீட்டுக்கு வாழ்த்துக்கள் அம்பி.. திருமண திகதி எப்போது?

ஆதலால் ப்ளாக் எழுதுவீர் என்று சொன்னீர்கள்.. அப்போ, புது வீட்டு பால் காய்ச்சி எங்களுக்கு விருந்து பரிமாற கூடாதா?

கைப்புள்ள said...

புது வீட்டுல பால் காய்ச்சியதற்கு வாழ்த்துகள் அம்பி.

//ஆதலால் பிளாக் எழுதுவீர் - II Don't miss it. :)//

பார்ட் 1ஐயே எங்கே எங்கேன்னு தேடிட்டு இருக்கேன்...இதுல பார்ட் 2வா? பார்ட் 1ஐப் போடுப்பா முதல்லே.
:)

Ms.Congeniality said...

dubukku disciple,
Edhaavadhu samayal la doubt naa onga kitta ketukalaam nu nenachen, adhukulla porkodi and gopal thappa purinjitu ongalayum bayamurthitaanga :-p

அனுசுயா said...

ஆகா திரு மற்றும் திருமதி அம்பி ரெண்டு பேரும் சேர்ந்து கலக்கும் பின்னூட்டங்கள்னு தலைப்பு வைக்கலாம் போலயிருக்கு. வாழ்த்துக்கள் அம்பி புது வீடு பால் காய்ச்சுனதுக்கு.

pisaasu said...

ஹாய் அம்பி,

//ஹிஹி, ரசத்துல தான் கொஞ்சம் காரம் கம்மி).உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்(சுதா.next time salt +kaaram added)

@பொற்கொடி,
சுதா நினைச்சாலும் வீட்ட விட்டு போக முடியாது, ஏன்னா அது அவங்க சொந்த வீடாக்கும், வேனும்னா அம்பிய மூட்ட கட்ட வேண்டியது தான்(சுதா தொல்ல தாங்க முடியாம)

அம்பி என் கமெண்ட் உங்க பிளாக்குல ஏன் வர மாட்டேங்குது?

Delhi_Tamilan said...

wow.. congrats.. veedum pachachu.. appuram enna.. pugundhu vilayadunga sir...

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. ஒரு ஆள் என்னடான்ன சென்னையிலே உனக்கு பொண்ணு பாக்கறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்யறார். பங்களூரிலே என்னாடா என்றால் ஒருத்தர் தன் வீட்டையே வடகைக்கு விடறார்
அதலால் பிளாக் எழுதுவீர் தங்கமணியுடன் சேர்ந்து

Syam said...

வாழ்த்துக்கள் அம்ப்ரிரிரி...ஆதலால் பிளாக் எழுதுவீர் 2 ஆ...என்னமோ போ :-)

Syam said...

//Dubuku Disciple superaa samaikaraangala..nalladha pochu //

@Ms.C,

unga saapttu problem kooda solve aagiduchu...ensaaai :-)

Harish said...

Hmmm...veedu katrada vida vaadagaikki paakiradu daan romba kashtam pola :-)

Arunkumar said...

25 potu oru masala paal vaangikkalaama?

தி. ரா. ச.(T.R.C.) said...

@அருண்குமார் உன்னைப் பாத்தா பாவமா இருக்கு! 100 போட்டாலும் அம்பி கிட்டே இருந்து ஏதாவது வாங்கிடல்லாம்னு மனப்பால்தான் குடிக்கனும் மசாலாபாலா வேணும்.

My days(Gops) said...

//பேச்சிலரா சிவனேனு இருந்த(இருக்கற) இந்த குழந்தைய வசமா மாட்டிவுட்டுடாங்க. //
*cough cough* vaaaila nalla nalla vaarthaigal ellam varundhu, but venaaaam vutudren..... :P

//எல்லா பயலும் வீடு வாடகைக்கு பதிலா வீட்டோட விலையேவே சொல்றான்.//
Rotfl..ambi touch....


//என்னயா மேட்டர்?னு கேட்டா உங்க கிட்ட அட்வான்ஸ் வாங்கி தான் மீதிய கட்டனும்! எப்படி வசதி?னு பல்ல காட்றான்.//
idhu maaadhiri ethanai peru'paaaa?

//வீட்டுக்கு வெள்ளை அடிச்சாச்சு! கக்கூஸ் கழுவியாச்சு!னு எல்லாம் கண்டிப்பா போட மாட்டேன். //
thala'na thala thaaaan . :))
lol....

/பிளாக் எழுதினா உங்களுக்கு என்ன என்ன கிடைக்கும்..//
comment kidaikkum, appppa "pongal" "alwa"nu kidaikum...

Mathuraiampathi said...

புது வீட்டுல பால் காய்ச்சியதற்கு வாழ்த்துகள் அம்பி

பொற்கொடி said...

rotfl @ trc sir :)

ambi said...

//ennaiyae minjiteenga//

G3 yekka, mokkaikune innoru aal geetha madam!nu oruthar irukaanga. naama ellam tution padikanum avanga kitaa. :p

//Indhu build-upkku mattum korai illa.. postu dhaan vara maatengudhu //

@G3 akka, yenna seyya? ungaluku theriyuthu, enga mngrku theriya maatenguthe? summa summa velai sey!nu solranga. :(

//indha Buildup ellam illame seekiram potudradhu better //
@arun, yeeh, post production stagela irukku, editing mudinju release pannida vendiyathu thaan! :D

ROTFL on your reply to G3. :)

//சொந்தமா வீடு கட்டினா கூட இவ்ளோ ரவுசு ஆகாது//
@kodi, eley! oru salt pongal che! sakra pongal kindinathu enna ravusu vuttu post potta, naan un annan!nu kaata vendaama..? :p


//நல்ல நகைச்சுவையாக, படிக்கச் சுவாரசியமாகச் சொல்லியுள்ளீர்கள்.
//
@vetri, thanks vetri, boost kudicha maathiri irukku! :)


//Dubuku Disciple superaa samaikaraangala..nalladha pochu //

@Ms.C, kumtukaren ejamaan! konjam periya manasu pannunga! :)

//ஆனா கல்யாண தேதியை மட்டும் இப்படி சொல்லாம இருக்கிறது நியாயமில்லை //
karthik, sure, athu thani post, he hee :)

//அம்மணியும் (தங்கமணி) இன்னும் பின்னூட்டம் போடுறாங்க போல.. //
apdiyaa? engappaa..? :p

//பேச்சிலர்னா எப்படி சிவனாகும்..

அம்பி, ஏதும் உள்குத்து இல்லியே
//
ahaa, patha vechiye karthi..! :)

@golmaal, Aii gopalu! h r u? hw was your training at orissa..? :p

//ana enna puzgareengala illai ... adu thaan santhegama iruku//
@dubukkudisciple, he hee, innuma santhegam..? :p

//அப்போ, புது வீட்டு பால் காய்ச்சி எங்களுக்கு விருந்து பரிமாற கூடாதா?
//
@my friend, kandippa undu, he hee, moi ellam ezhuthuveenga illa? :p

//பார்ட் 1ஐயே எங்கே எங்கேன்னு தேடிட்டு இருக்கேன்...இதுல பார்ட் 2வா? பார்ட் 1ஐப் போடுப்பா முதல்லே.
//
@kaipulla, thala, konjam keezha scroll panni parunga thala. :)

//அம்பி ரெண்டு பேரும் சேர்ந்து கலக்கும் பின்னூட்டங்கள்னு தலைப்பு வைக்கலாம் போலயிருக்கு//
@anusuya, he hee :) LOL coimbatore aalungakaluke konjam kusumbu jaasthi thaan! :p

veda said...

/சூப்பரா சமச்சு இருந்தாங்க. (ஹிஹி, ரசத்துல தான் கொஞ்சம் காரம் கம்மி)./

ஓசி சோறுக்கு இதெல்லாம் டூ மச் அம்பி:)மெனுவுல கத்திரிக்காய் மறக்காம சேர்த்துருந்தாங்களா?

பாவம் அவங்களுக்கு உங்களை பத்தி தெரியலை இல்லேன்னா இப்டி சாப்பாட்டுக்கும் கூப்டு, அப்டியே பக்கத்துல வீடும் புடிச்சு கொடுத்து இப்டி சொந்த செலவுல சூனியம் வச்சுப்பாங்களா?;)

Madhusoodhanan said...

Ambi ,
Pudhu veedu .. Pudhu post ..

pramadham

கீதா சாம்பசிவம் said...

தி.ரா.ச. சார், என்ன சேம்சைட் கோல் போடறீங்க போல் இருக்கு? சொந்த அனுபவமா? நொந்த அனுபவமா? எப்படி இருந்தாலும் நல்லா இருக்கு.

@கார்த்திக்&இன்னும் யாரோவுக்கு, அதான் அம்பி "மே மாதம்" படம் தவிர வேறே பார்க்கமாட்டார்னு சொன்னேனே, மறந்து போச்சா?

Viji said...

oye ambi... orey noraiya irukku... paatha pal madhiri therilaye? :P pakkathla thangamani illa nnu vere edhayavadhu kaichittingala? :)) ellam nattamai kudukkara dheiryam/ookkam. ;-)

SKM said...

@Ambi: congratulations!
pavam DD,innimae avnga thoonguna madhiridhan.

@Ms.C:
Ambi ku yetha Ammanidhan.

@Dubukku Disciple:
//seri seri inime unge veetliye samachu kuduthuduren.. enga veetla gas and provisions micham... //
aahaa!neega samalichuduveenga ivanga ravusu yellam.Kathirikkai samachu potta unga pakkamae vara mattanga.

Usha said...

congrats dude..

ambi said...

//அம்பி என் கமெண்ட் உங்க பிளாக்குல ஏன் வர மாட்டேங்குது?
//

@pisasu, ahaa! naan comemnt moderation kooda pannaliye..? nalla parunga, athu en blog thaana?nu. :p
how do U know sudha..?


@delhi tamilan, thanks dude. h ru? long time no see..? :)

//ஒரு ஆள் என்னடான்ன சென்னையிலே உனக்கு பொண்ணு பாக்கறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்யறார். பங்களூரிலே என்னாடா என்றால் ஒருத்தர் தன் வீட்டையே வடகைக்கு விடறார்
//
@TRC sir, he hee. ellam unga aasirvaatham! :)

@syam, thanks naatamai! DD ya kelappi vidatha. already avanga oru rangeaa thaan irukaanga. :)

//vaadagaikki paakiradu daan romba kashtam pola //
@harish, aama chellam. :) soon i'l land on your new blog. konjam biji. he hee :)

@arun, paal thaane vaangikoo! :)

//100 போட்டாலும் அம்பி கிட்டே இருந்து ஏதாவது வாங்கிடல்லாம்னு மனப்பால்தான் குடிக்கனும் //

@TRC sir, ROTFL :) ithellam too much. parunga, geetha madam ellam pesum padiyaa ayiduchu! :)

//comment kidaikkum, appppa "pongal" "alwa"nu kidaikum...
//
@sachin gops, sila samayam bannu koodu kidaikkum! :p

@mathuriampathi, thanks sir. :)

@kodi, eley! enna sirippu? siru pulla thanama..? :)

//மெனுவுல கத்திரிக்காய் மறக்காம சேர்த்துருந்தாங்களா?//

@veda, Grrrrrrrrrr.

//இப்டி சொந்த செலவுல சூனியம் வச்சுப்பாங்களா?;) //
@veda, ROTFL :) correctu. paavam, vithi yaarai vittathu..? :)

@madu, thanks madhu, narasimhar next post pottachaa? will chk out soon. :)

@geetha madam, enga kootaniya pirikara velai ellam inga vendaam, aama solliten! :)
//மே மாதம்" படம் தவிர வேறே பார்க்கமாட்டார்னு சொன்னேனே, மறந்து போச்சா? //
he hee, clue kuduthachaa? :)

//orey noraiya irukku... paatha pal madhiri therilaye? :P //

@viji, ahaa! patha vechiye vijilu..!

//pakkathla thangamani illa nnu vere edhayavadhu kaichittingala? :)) ellam nattamai kudukkara dheiryam/ookkam //

ROTFL :) side gapula syamkum aapu! very gud! very gud!
*ahem, nee innum kadaiya moodaliyaa? manasthi aache neey..? :p

@usha, vaama minnal. thanks, next time enga veetula vanthu aatam podu ok vaa? :)

ambi said...

@skm, thanks skm.

//Kathirikkai samachu potta unga pakkamae vara mattanga. //

venaam, azhuthuduven. :p

Anonymous said...

//*ahem, nee innum kadaiya moodaliyaa? manasthi aache neey..? :p//- kadai ellam eppavo moodiyachu. aana, comment pannuven.
-Viji

கீதா சாம்பசிவம் said...

அம்பி, என்னத்தைப் பிரிக்கிறது நான் வந்து உங்க கூட்டணியையும், கூட்டையும்? அதான் எல்ஜியையும், செஞ்சியையும் போல உட்கார்ந்து இருக்கீங்களே, தெரியலை? அங்கே வந்து பாருங்க எங்க தொண்டர் படையோட கொண்டாட்டத்தை. ரகசியமா வச்சுக்கிறீங்களா? ரகசியமா? எல்லாம் ரகசியமாக் கசியுது. ஒற்றர் படைத் திறமையா வேலை செய்யுதே! இப்போ என்ன பண்ணுவீங்க? தலைவிக்குத் தெரியாம ரகசியமா? :D

smiley said...

sub contract vidara mathiri, apartment room sub rent panninaal, neengalum house owner pol demand seyalam.
good post :)

Manoj said...

புது வீடு கிடைத்ததற்க்கும், குடியேரியதற்க்கும் என் வாழ்த்துக்கள்.

புது வீடு புகுவது ஒரு தனி திட்டமா? அல்லது ஒரு 'பெரிய' திட்டத்தின் பாகமா?

Princess said...

enga adutha post-a kanam?

இராமச்சந்திரன் said...

அம்பி...

நெஞ்ச தொட்டு சொல்லு(ங்க).... ப்ளாக் எழுதினா என்ன கிடைக்கும்னு தெரியாதா ? (அஃப்கோர்ஸ் உங்களுக்கு எங்கிட்டேர்ந்து ஒன்னும் கெடைக்கலை).

ரொம்ப நடிச்சீங்கன்னா நான் தங்கமணிகிட்ட டீல் பண்ணிக்கறேன்.

புதுமனை புகுந்ததற்கு வாழ்த்துக்கள்.

ambi said...

//kadai ellam eppavo moodiyachu. aana, comment pannuven.//

@viji, ada daa! enna oru kolkai pidippu! :p

@geetha madam, avanga ellam ungala vechu comedy panraanga! innuma puriyala..? :)

//apartment room sub rent panninaal, neengalum house owner pol demand seyalam.
//
@smiley, ROTFL :) gud idea.

@manoj, ahaa! athellam onnum illenganaa! :)

@princess, varuthu, varuthu! :)

@rams, LOL, kandupuchiteengalaa..?
:)

Anonymous said...

...please where can I buy a unicorn?

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信