Friday, February 09, 2007

நடந்தாய் வாழி காவேரி!



மண், பெண், பொன் இவை மூன்றுக்கும் சண்டையிட்ட மனித இனம் தண்ணீருக்கும் சண்டையிட தவறியதில்லை. (ஷ்யாம், தண்ணினா நிஜமான தண்ணி, பகார்டியோ, பேக்பைபரோ இல்லை)

17 வருஷமா 600 முறை கூடி பேசி சும்மா ஜவ்வா இழுத்து காவேரி நதி விஷயத்துல ஒரு தீர்ப்பை சொல்லிட்டாங்க. வழக்கம் போல ஜிலேபி தேசம் " நாட்டாமை!(ஷ்யாம் இல்லை) தீர்ப்பை மாத்தி சொல்லு!"னு கத்திடாங்க. தமிழக பஸ்கள் வர/போக முடியலை, ரோடு எல்லாம் மறியல், அம்மா டிவி, (கிராண்ட்)சன் டிவி எல்லாம் கட். பந்த் வேற நடக்க போகுது. ஒரே கும்மமேளா தான்!

இந்த தடவை பாதுகாப்பு ஏற்பாடுகளை கொஞ்சம் நன்னா பண்ணிருந்ததால அதிகம் சேதம் இல்லை, (இதுவரைக்கும்).

"அம்பி! இந்த தடவை உன்னை தான் நாலு சாத்து சாத்துவா! எங்களை அடிக்க மாட்டா! - இது எங்க ஆபிஸ்ல இருக்கற ஒரு ரசகுல்லாவின் அல்ப சந்தோஷம்.

இந்த தடவை உஷாரா பிரட், பிஸ்கட் எல்லாம் முன்னாடியே வாங்கி வெச்சுட்டேன். இல்லைனா ஹிஹி,இருக்கவே இருக்காங்க நம்ப டுபுக்கு டிசிப்பிள்.

சரி, மேட்டருக்கு வருவோம்.

1) இப்ப நாஸிக்குல நோட்டு அடிக்கறாங்க, அதுக்காக எங்களுக்கு போக தான் மீதிய இந்தியாவுக்கு அனுப்புவோம்!னு அந்த ஊர்காரங்க சொன்னா எப்படி இருக்கும்?

2) நம்ப நெய்வேலில கரிய தோண்டி அனல் நிலையம் மூலமா மின்சாரம் தயாரிச்சு அனுப்பறாங்க. எங்களுக்கு தான் எல்லாம்!னா சொல்றோம்?

என்ன இது சிறு பில்லத்தனமா இல்ல இருக்கு..?

இது போதாது!னு நம்மூர்ல இருக்கற கழக கண்மனிகள்
"கன்னடம் வென்றாய்!
காவேரி தந்தாய்!
கழகம் காத்தாய்!
கத்ரிக்காய் பொரித்தாய்!"னு போஸ்டர் அடிச்சா இங்க எங்களுக்கு ரிவிட்டு அடிப்பாங்க.அதனால கொஞ்சம் அடக்கி வாசிங்கண்ணா!

இயற்கையின் மீது உரிமை கொண்டாட வேண்டாம். பதிலுக்கு இயற்கையும் நம் மீது உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டால்
"பினாமி வைத்திருப்பவன் கூட
சுனாமியில் போய் சேர வேண்டியது தான்! அப்புறம்
அனானி கமண்ட் கூட கிடைக்காது!"

நைல் நதி, கங்கைகரை, தாமிரபரணி(எங்க ஊர விட்டு குடுக்க மாட்டோம் இல்ல) என நதிக்கரைகளில் தான் மனித நாகரீகம் தழைத்து வளர்ந்தது. அந்த நதியை வைத்தே இன்று மனிதன் மாக்களாய் மாறி சண்டையிடுவதை நினைத்தால் நாம் வெட்கப்படனும், வேதனைப்படனும். ஆனா பாருங்க நிறைய பேரு ஹையா! பந்த்! ஒரு நாள் லீவு! ஜாலி!னு குதிக்கறாங்க.

இந்த தீர்ப்பு வரதுக்கே 17 வருஷம் ஆயி போச்சு! இதுக்கு தான் நம்ப சின்ன கவுண்டரை தீர்ப்பு சொல்ல சொல்லி இருந்தா பத்து நிமிஷத்துல தோளுல துண்ட மாத்தி போட்டு தீர்ப்பு சொல்லி இருப்பாரு! இத நான் இங்க சொன்னா நாலு சாத்து சாத்துவானுங்க! எதுக்கு வம்பு!
நல்லா தண்ணி காட்றாங்க பா!

பி.கு: காதலர் தின ஸ்பெஷல் - உலக பிரவுசர்களை கலக்க வருகிறது ஆதலால் பிளாக் எழுதுவீர் - II

29 comments:

Anonymous said...

Hi ambi,
long time reader,first time posting a message.kaveri issue-vum bangalore bandhum oodan perava sagotharigal pola iruku...still remember the roits of 90's, when i was studing in school in bangalore...hmmm...eppa thaan theerumo....good post..ungal adutha blogirku aavalodu kaathirukirom...

Hema

Ponnarasi Kothandaraman said...

Hahaha..nALLAa message and pinkurippu was 2 good ;)

Porkodi (பொற்கொடி) said...

yaar indha pudhu anony?? :)

Porkodi (பொற்கொடி) said...

kaadhal kathrikkai vandhappuram edha pathi venalum kavidhai aruviya kotudhu polarku? :)) benaami tsunami anony solren ;)

Porkodi (பொற்கொடி) said...

andha haiya bandh jolly nu gudichadhu yaaru neenga thaane? ;) indha build up ku onnum kuraichal illa, seekram podunga illana ulaga browsergal vera padatha book pannidum!

Ms Congeniality said...

//"கன்னடம் வென்றாய்!
காவேரி தந்தாய்!
கழகம் காத்தாய்!
கத்ரிக்காய் பொரித்தாய்!"//
ROTFL at that :-D

Arunkumar said...

வழக்கம்போல ஒரு ரவுசான போஸ்ட்

//
"கன்னடம் வென்றாய்!
காவேரி தந்தாய்!
கழகம் காத்தாய்!
கத்ரிக்காய் பொரித்தாய்!"
//
கவுஜ கவுஜ...

நியூ இயர்ல தொடங்கின பில்டப்பு இந்த பி.கு மேட்டர காதலர் தினத்துலயாவது முடிங்கப்பு !!!

மு.கார்த்திகேயன் said...

என்ன அம்பி, ரொம்ப நாள் கழிச்சு பெர்மிசன் கிடச்சு வந்தாச்சு போல

மு.கார்த்திகேயன் said...

/பி.கு: காதலர் தின ஸ்பெஷல் - உலக பிரவுசர்களை கலக்க வருகிறது ஆதலால் பிளாக் எழுதுவீர் - II //

அம்பி.. இந்த பதிவை எவ்வளவு நாளா எழுதுறப்பா.. ஒவ்வொரு பதிவுலையும் இப்படி ஒரு பி.கு போட்டுடுற

மு.கார்த்திகேயன் said...

/"பினாமி வைத்திருப்பவன் கூட
சுனாமியில் போய் சேர வேண்டியது தான்! அப்புறம்
அனானி கமண்ட் கூட கிடைக்காது!" //

உன்னால மட்டும் தான் முடியும்.. சும்மாவா இப்படி பேசி பேசித் தானே போனின் மறுபக்கம் சிரிப்பொலி மட்டுமே ரொம்ப நேரம் கேட்குதாம்

மு.கார்த்திகேயன் said...

//இப்ப நாஸிக்குல நோட்டு அடிக்கறாங்க, அதுக்காக எங்களுக்கு போக தான் மீதிய இந்தியாவுக்கு அனுப்புவோம்!னு அந்த ஊர்காரங்க சொன்னா எப்படி இருக்கும்?
//

இது பாயிண்ட்.. பாத்து இரு.. உன் வீட்டுக்கே வந்து ஆப்பு வைக்கபோறாங்க

Syam said...

//1) இப்ப நாஸிக்குல நோட்டு அடிக்கறாங்க, அதுக்காக எங்களுக்கு போக தான் மீதிய இந்தியாவுக்கு அனுப்புவோம்!னு அந்த ஊர்காரங்க சொன்னா எப்படி இருக்கும்?

2) நம்ப நெய்வேலில கரிய தோண்டி அனல் நிலையம் மூலமா மின்சாரம் தயாரிச்சு அனுப்பறாங்க. எங்களுக்கு தான் எல்லாம்!னா சொல்றோம்//

அட்றா சக்க...அம்பி நீ எங்க்யோ போய்ட்ட...இப்படியே போனா KF பீரும் பெங்களூர்லதான் தயாரிக்கறாங்க தமிழ்நாட்டுக்கு அனுப்ப கூடாதுனு சொன்னாலும் சொல்வாங்க...

Syam said...

சைக்கிள் கேப்புல கழகத்த போட்டு பாத்துட்ட...சாக்கரதயா இரு அப்பு இல்லனா...அதுக்கு தனியா முரசொலில மடல் எழுதுனாலும் எழுதுவாய்ங்க...:-)

Anonymous said...

//
"கன்னடம் வென்றாய்!
காவேரி தந்தாய்!
கழகம் காத்தாய்!
கத்ரிக்காய் பொரித்தாய்!"
//
ROTFL

kalaasal...chancae illa... :))

romba doo much'ah build uppu going on...hmmmm

தி. ரா. ச.(T.R.C.) said...

இது போதாது!னு நம்மூர்ல இருக்கற கழக கண்மனிகள்
"கன்னடம் வென்றாய்!
காவேரி தந்தாய்!
கழகம் காத்தாய்!
கத்ரிக்காய் பொரித்தாய்!"னு போஸ்டர் அடிச்சா இங்க எங்களுக்கு ரிவிட்டு அடிப்பாங்க.அதனால கொஞ்சம் அடக்கி வாசிங்கண்ணா!

இயற்கையின் மீது உரிமை கொண்டாட வேண்டாம். பதிலுக்கு இயற்கையும் நம் மீது உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டால்
"பினாமி வைத்திருப்பவன் கூட
சுனாமியில் போய் சேர வேண்டியது தான்! அப்புறம்
அனானி கமண்ட் கூட கிடைக்காது

அம்பி நீ எங்கேயோ போயிட்டே.இப்போ இரண்டு 'C" யோட சகவாசம் இல்லே அதான் சக்கை பஓடு போடறே.
நீ அடிவாங்கு ஆனா என்னை வேறே இல்லை பழிவாங்கிட்டே பந்த் அன்னிக்கி வரச் சொல்லி.ஏதோ ஒரு முடிவோடுதான் இருக்கே.

Porkodi (பொற்கொடி) said...

rendu 'c'a???! ambi! trc sir enna solraar? manni! neenga onnum kandukradhu illiya?? :)

Princess said...

Thaneerukaga than 3rd world war enbargale?

Athu nijamaga koodum endru naan bayanthathu undu.
epothu than theerumo intha sandai.

oralavukku cauvery prachanai theernthuvidum endru namikai vandhulathu. Parpom. :)

Anonymous said...

ஹாய் அம்பி,

இதுயெல்லாம் சரி, நம்ம ஊரில ஒரு வாரமா ஒரு தமிழ் சானலுமே வேலை செய்யலயே, அதுக்கு நாம என்ன சொல்றது?( உதயா டிவியும் உதயா செய்தியும் நாமளா பிச்சையா போட்டது தானே) அதுக்கும் கூட கேடு வந்துட்டுதே?

SKM said...

//இப்ப நாஸிக்குல நோட்டு அடிக்கறாங்க, அதுக்காக எங்களுக்கு போக தான் மீதிய இந்தியாவுக்கு அனுப்புவோம்!னு அந்த ஊர்காரங்க சொன்னா எப்படி இருக்கும்?
//good point.
//"கன்னடம் வென்றாய்!
காவேரி தந்தாய்!
கழகம் காத்தாய்!
கத்ரிக்காய் பொரித்தாய்!"//
ROTFL at that :-D
//பி.கு: காதலர் தின ஸ்பெஷல் - உலக பிரவுசர்களை கலக்க வருகிறது ஆதலால் பிளாக் எழுதுவீர் - II //
indha built up ku onnum kurachal illa.
/"பினாமி வைத்திருப்பவன் கூட
சுனாமியில் போய் சேர வேண்டியது தான்! அப்புறம்
அனானி கமண்ட் கூட கிடைக்காது!" //
idhuvum saridhan.

good post Ambi.

தி. ரா. ச.(T.R.C.) said...

rendu 'c'a???! ambi! trc sir enna solraar? manni! neenga onnum kandukradhu illiya?? :)
அம்மா பரதேவதை போர்கொடி.
நீ பாட்டுக்கு ஏதாவது கொளுத்திப் போட்டுட்டு போயிடாதே.அம்பி உடம்பு தாங்காது. ஒரு C தங்கமணி இன்னொரு C TRC.

Porkodi (பொற்கொடி) said...

solravar ozhunga sollita naan yen kolutharen :) adhu unga thappu sir! ambi vaazhkaila pralayam undaaka paathingale!! :))

Gopalan Ramasubbu said...

உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி !
நடந்தாய் வாழி காவேரி !

விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி !

நடக்கறதெல்லாம் பாத்தா இப்படியே பாட்ட மட்டும் பாடி சந்தோச பட்டுக்கவேண்டியதுதான்.. வருனபகவான் ஒவ்வொரு வருசமும் போர் எடுத்துப்போய் காவிரிய கூட்டிட்டு வந்தாதான் உண்டு!.

அப்பறம் அம்பி குருவே, பஞ்சாபி ஜிகிடி எப்படி இருக்குது? விசாரிச்சதா சொல்லப்பு :)

ambi said...

//long time reader,first time posting a message//

@hema, ahaa! ticket ellam kidayuthunga, blog ellam oc la thaan ellarom padikaranga. oru commentu pottu ponga thaayi! :)

//still remember the roits of 90's, when i was studing in school in bangalore.//
ohh is it..? pple ehre felt nostolgic.thank god, this time no such brutal things happend so far!

thanks for dropping by! :)

@ponarasi, dankQ! danQ! :)

@porkodi, freeya vidu, konjam pamous ayitaale ipdi thaan! (ayoo! kallu eriyaranga pa!) :)

// kavidhai aruviya kotudhu polarku//
he hee, kavithai!nu nee thaan solra. athu jollu!nu oor makkal solranga. seekram next part post pannidaren. en manatha vaanga nee oruthi pothum! :)

//ROTFL at that //
@Ms.C, ada daa! nee sirithal siripazhagu! (he hee, summa paatu padinen ejamaan!) :p

//பி.கு மேட்டர காதலர் தினத்துலயாவது முடிங்கப்பு //
@arun, mudikka thaan paakren, damager vuda maatengraar. :(

//இப்படி பேசி பேசித் தானே போனின் மறுபக்கம் சிரிப்பொலி மட்டுமே ரொம்ப நேரம் கேட்குதாம் //
@karthi, unakkum ketruchaa..? cha! enna telephone dpt..! :) seekram post podaren. danQ for the support. :)

//KF பீரும் பெங்களூர்லதான் தயாரிக்கறாங்க தமிழ்நாட்டுக்கு அனுப்ப கூடாதுனு //
@syam, athane paarthen, un kavalai unakku! :)

@gopal. build up..? he hee :)

@TRC sir, neenga bnglre vaanga, naama pesi theethukalam! :)
rendu c moonu C! nu kilappi vidatheenga. already getting aapu! :)

@kodi, santhegam theenthatha? kolatharathuku udane vanthuduviyee? :p

//oralavukku cauvery prachanai theernthuvidum endru namikai vandhulathu.//
@princess, correct. but intha koomuttai pasanga othukka maatengraanga. :)

@sumathi, he hee, athaan naan innum tv e vaangala. :) kannada padam parunga. ellathukum oscar award 10 to 15 tharalam. :) ROTFL

@SKM, danQ akka. veetula ellarum sovkiyama..? :p

//ambi vaazhkaila pralayam undaaka paathingale//

@kodi, koluthinathu neey! pichu puduven pichu! :)

Ahaa pramatham gops. teacher pulla!nu once again prooved. good on U! :)
//பஞ்சாபி ஜிகிடி எப்படி இருக்குது? விசாரிச்சதா சொல்லப்பு :)
//

@gops, he hee, my shishyan!nu again prooved. avalukenna, jammunu nalla irukka. solren! solren! :)

Anonymous said...

//ahaa! ticket ellam kidayuthunga//- ticket irukkardha irundha yevan varuvan inge...

ஜி said...

//தாமிரபரணி(எங்க ஊர விட்டு குடுக்க மாட்டோம் இல்ல)//

அட.. நீங்களும் நம்மூருதானா...
நல்லா இருக்கியாலே...

தண்ணி பிரச்சனை.. தானா கிடைக்கிறது.. அதுனால கன்னடக் காரங்க கொடுக்க முடியாதுன்னு மல்லுக்கு நிக்கிறாங்க.

ஆனா, நிலக்கரி பொருளாதாரம்... அத மத்தவங்களுக்குக் கொடுத்தாதான் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் அடிப்படாது. அதுனால, அத தர மாட்டேன்னு வம்பு பண்ண மாட்டேங்குறோம்...

ஆனாலும் இந்த ஜிலேபி தேசப் பயலுவலுக்கு ஓவர் குசும்புதான். அவனுக்குப் போவத்தான் மிச்சம்னு சொல்றதெல்லாம் ஓவர் மேல ஓவர்...

இலவசக்கொத்தனார் said...

அம்பி, பதிவு நல்லாத்தான்லே இருக்கு. ஆனா உம்ம ரசிகர்கள்தான் இப்படி ஆங்கிலத்தில் பொளந்து கட்டறது படிக்கத் தெரியலை. கொஞ்சம் எல்லாரையும் தமிழில் எழுதச் சொல்லக் கூடாதா?

ஜி, நீரும் நம்மூர்தானா? இம்புட்டு நல்லா எளுதும் போதே நினைச்சேன், மக்கா தாமிரபரணி தண்ணி குடிச்ச மாப்ளைதான்னு.

Appaavi said...

//இது போதாது!னு நம்மூர்ல இருக்கற கழக கண்மனிகள்
"கன்னடம் வென்றாய்!
காவேரி தந்தாய்!
கழகம் காத்தாய்!
கத்ரிக்காய் பொரித்தாய்!"னு போஸ்டர் அடிச்சா இங்க எங்களுக்கு ரிவிட்டு அடிப்பாங்க.அதனால கொஞ்சம் அடக்கி வாசிங்கண்ணா! //

Rombaaaa sari!

Anonymous said...

Hey ambi ,
enoda prev comment nyabagam vechundu this time flash news corect aa potutel.. good !

even i stay in b'lore only.

yappa, aanalum indha "media paduthum paadu" iruke adu daan too much.. b'lore silent aa irundaalum , enavo porkalam madiri ella tamil tv's la project panirkaanga.. oor lendhu relations ellam phn mela phn.. the same media is the reason for propogating a wrong judgement message. acutally max limit daan 419 but minimum is less than karnataka. judgement enna nu corect aa therinjukaama chumma ellarayum yethi vida vendiyadhu...

enaku vanda kovathula, bombay movie la arvindsamy ella kalavaram panra bad boys kitta kathara madiri naanum poi kathalam nu nenachen ... aprom porumaya poiten..

--- Sri.

Ram said...

"கன்னடம் வென்றாய்!
காவேரி தந்தாய்!
கழகம் காத்தாய்!
கத்ரிக்காய் பொரித்தாய்.!

hahaha - yenpa 'thatha' va ipdi asingapaduthureenga...hey these lines really fundu...
ps:
athula yenna na, 'thatha' va kindal pannina yenakku ore kushi aaidum..

:))