கதை, கவிதை!னு பட்டய கிளப்பும்
பவித்ரா சிஸ்டர் நம்மை எழுத சொன்ன பதிவு இது!
3 Smells I love:என்ன தான் நாம் ஏலக்காய், கிராம்பு எல்லாம் போட்டு சர்க்கரை பொங்கல் செய்தாலும், அது கோவிலில் நைவேத்யம் ஆகி, சுட சுட நம் கையில் வரும் போது வித்யாசமாக ஒரு நறுமணம் வீசுமே! அந்த தெய்வீக நறுமணம்.
சிறு குழந்தைகளை குளிப்பாடி, அதன் மேல் ஜான்ஸன் பவுடர் எல்லாம் போட்டாலும், அந்த பவுடரை மீறி ஒரு வாசனை வருமே! அது சூப்பர்.
முல்லைப்பூ அல்லது பிச்சிப்பூ (இரண்டும் ஒன்று தானா?) வாசனை. அதுவும் இந்த பூச்சரங்கள் இருக்க வேண்டிய தலையில் இருந்தால், டாப்பு டக்கர். (ஹிஹி)
3 Smells I hate: பீடி சிகரெட் வாடை. சே! குமட்டிக்கொண்டு வரும். இந்த கருமத்தை எப்படி தான் ஊதறாங்களோ?
பான் பராக் வாடை - இந்த ஜிலேபி தேசத்தில் எல்லார் வாயிலும் பான் பராக் தான். கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் கண்ட இடத்தில் புளிச்!னு துப்பும் அந்த ஜந்துக்களை பார்க்கும் போது நான் மெய்யாலுமே சில வினாடிகளுக்கு அன்னியனாக மாறி விடுகிறேன்.
கொய்யா/பலாப்பழ வாசனை - அது என்னவோ சின்ன வயசுல இருந்தே இந்த ரெண்டு பழங்களோட வாசனைனா அலர்ஜி.
3 Jobs that I have had in my life: முதலில் ஒரு வருடம் பார்த்த லெக்சரர் வேலை. மிகவும் போர் அடிக்கும் சப்ஜக்ட்ஸை கூட பையன்களுக்கு எப்படி சுவாரசியமாக எடுக்கலாம்?னு தினமும் யோசிச்சு புதுசு புதுசா பல டெக்னிக்குகளை(டகால்டிகளை) பயன்படுத்திய காலங்கள்.
சென்னையில் பார்த்த சாப்ட்வேர் வேலை.
இப்போ பாக்ற வேலை. (நான் ஆபிஸ்ல நிஜமாலுமே வேலை எல்லாம் செய்றேன்!னு என் தம்பி கூட நம்ப மாட்டேங்கறான்.)
3 Movies that I could watch over and over: தில்லுமுல்லு - தேங்காய் சீனிவாசன் ரஜினியை இன்டர்வியூ பண்ணூம் சீன், எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.
தில்லானா மோஹனாம்பாள் - "அடேங்கப்பா! ஆட்டம் ரொம்ப ஜாஸ்த்தியா இருக்கே!"னு பாலையா நக்கல் விடுவாரே! அப்படி ஒரு படம் இப்ப எல்லாம் சான்ஸே இல்லை.
காதலிக்க நேரமில்லை(படம் பெயரை தான் சொன்னேன்) - இங்கேயும் பாலையா தான் பட்டய கிளப்புவார்.
3 Fond memories: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எனது முதல் நாள். நெல்லையில் படித்த எனக்கு அந்த கல்லூரியின் பிரமாண்டம், பழமை, மக்கள் எல்லாரையும் பார்த்து ஒரு வித மலைப்பு, பிரமிப்பு, படபடப்பு. பட்டிகாட்டான் யானையை பார்த்த மாதிரி. ரெண்டே நாள் தான், அப்புறம் நம்ப வால்தனத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம் இல்ல?
என் முதல் கம்பெனியின் கடைசி நாள். நான் கிளம்பும் போது அங்கே இருந்த ஆபிஸ் பாய் கண்களில் துளிர்த்த கண்ணீர் துளிகள். "இனிமே எங்கிட்ட எல்லாம் யார் சார் பேசுவாங்க?"னு சொன்ன அவரின் வார்த்தைகள். ஒரே பீலீங்க்ஸ் ஆப் இந்தியாவா போச்சு!
ஒரு மாதம் முன்னாடி எங்க மேனேஜர், "தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்க முடியாத ஒரு சந்தேகததை, இந்த அம்பி தீர்த்து வெச்சுபுட்டான்!"னு சொல்லி டீம் மீடிங்க்ல ஒரு பெரிய காட்பரீஸ் சாக்லேட் குடுத்தாங்க. ரூமை விட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல பஞ்சாபி தட்டி பறிச்சுடுச்சு! :(
3 Jobs I would love to have:மறுபடி கல்லூரி வேலை. நம்மால முடிஞ்ச அளவு சமூகத்தில நாலு நல்லது செய்யனும்.அவ்ளோ தான்!
3 Things I like to do: சின்ன குழந்தைகளோடு என் பொழுதை இனிமையாக கழிப்பது.
நேரம் கிடைக்கும் போது இந்த பிளாக் எல்லாம் படிக்கறது,(இத தானே முழு நேரமும் செய்யறது!னு குத்தி காட்ட வேண்டாம்.)
என் உடன்பிறப்புடன் தினமும் ஆபிசில் நடந்த விஷயங்களை பற்றி அரட்டை அடிப்பது.
3 Of my favorite foods: Butter scotch Ice Cream
தக்காளி சாதம், தயிர் சாதம்
ஹிஹி, கேசரி.
3 Places I would like to be right now: நெல்லை அகத்தியர் அருவி, பாண தீர்த்த அருவிக் கரைகள்,
மதுரையில் அமைதியான என் தாத்தா வீடு, கடை வீதிகள்.
எனக்கு ப்ரியமானவர்கள் இதயத்தில் எப்பொழுதும்.(டச் பண்ணிட்டேன் இல்ல?).
3 Things that make me cry:உண்மையானவர்கள்!னு நான் நம்பியவர்கள் புரியும் நம்பிக்கை துரோகங்கள். நான் அதிகம் கண்ணீர் சிந்துவதில்லை.
சரி, மூனு பேரை இழுத்து விட்ருவோம் இந்த தடவை.
1)
SKM - எழுத ஒன்னும் இல்லை!னு சொன்னீங்க இல்ல? நல்ல ஹோம்வொர்க், ம்ம் ம்ம், ஒழுங்கா எழுதுங்க.
2)
கைப்புள்ளை - தல! நீங்க இந்த அடியவன் வீட்டுக்கு வரதே பெரிசு, ஹிஹி, அதான் ஏதோ என்னால முடிஞ்ச கைங்கர்யம்.
3)
கார்த்திக் - இந்த போஸ்ட்டை நீங்க படிச்சு முடிக்கறத்துக்கு முன்னாடி கார்த்திக், என் டேகை எழுதி போஸ்டா போட்ருப்பார் பாருங்க.