Friday, September 22, 2006

கடவுள் பாதி! மிருகம் பாதி!



கேப்டனின் அகில உலக கொள்கை பரப்பு செயலாளரும், எனது நண்பனுமான அர்ஜுனா மற்றும் புளியோதரை மன்னனின் பாசமலருமான வேதா(ளம்) இருவரும் "Five wierd Things in Me" என்ற தலைப்பில் எழுத சொன்னார்கள். அது தான் "கடவுள் பாதி! மிருகம் பாதி!" என்று நான் என் ஸ்டைலில் மாற்றி விட்டேன்.

ரெளத்ரம் பழகு!
சிறு வயதில் நான் கொஞ்சம் அதிகமாகவே பழகி விட்டேன். கோபம் அதிகமாக வரும். போதா குறைக்கு சின்ன வயதிலிருந்தே நரசிம்மர்(கேப்டன் படம் இல்லை)மீது தீவிர பக்தி, உபாசனை. கோபம் வரும் சமயங்களில் அம்மா மட்டும் தான் சமாதானப் படுத்த முடியும். நானும் இந்த கோபத்தை அடக்க வேண்டும்! என்று பல வழிகள் கையாண்டு பார்த்து விட்டேன்.
ஒரு சத்ரு சொன்னானேனு தாமிர பரணி நதியின் 12 அடி ஆழத்தில் தம் பிடித்து யோகத்தில் அமர்ந்து எல்லாம் பார்த்தேன். கண் முன்னால் ஒரு பாம்பு வந்து, "என்ன அம்பி சவுக்கியமா?"னு குசலம் விசாரித்ததில் அலறி புடைத்து கொண்டு துண்டை காணும், துணியை காணும்!னு வந்தது தான் மிச்சம். அப்புறம் என் உடன்பிறப்பு கிருஷ்ண பரமாத்மா மாதிரி கரையில் வந்து துண்டு குடுத்து காப்பற்றினான். இதை கேட்டு விட்டு அந்த சத்ரு சொல்றான், "அது நாக கன்னிகை டா மாப்ளே! நாக லோகம் போயி அமிர்தம் எல்லாம் பருகி இருக்கலாம். நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடியே!"

அடப்பாவி! பொட்டுனு ஒரு போடு போட்டிருந்தா தெரிஞ்சு இருக்கும், அது நாக கன்னிகையா? இல்ல நான் தான் ஜெமினி கனேசனா?னு. Now i'm Mr.Cool. (upto some extent) :)

சுதந்திரம் எமது பிறப்புரிமை!
ஒரு விஷயம் வேண்டும்/செய்ய வேண்டும்! என்று முடிவெடுத்து விட்டால் ரொம்ப உறுதியாக இருந்திருக்கிறேன். ஸ்கூல் படிக்கும் போது பஞ்சாபில்(யாரு யா அது? நமுட்டு சிரிப்பு சிரிக்கறது?) (Ambala District) நடந்த ஒரு NCC கேம்ப்பில் கலந்து கொள்ள நான் தேர்வாகி விட்டேன். ஆனால் அப்போ தீவிரவாதிகள் அட்டகாசம் அதிகம் என்பதால் என் அப்பா என்னை அனுப்ப மறுத்து விட்டார். எனக்கு பயங்கர கோபம், வருத்தம், ஏமாற்றம், எல்லாம்! ஒரு மாதம் என் அப்பாவிடம் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதன் பின் சுசீந்தரத்தில் நடந்த இன்னொரு கேம்புக்கு அப்பாவே அனுப்பி வைத்தார்.
அந்த அளவுக்கு பிடிவாதம் இப்போ இல்லை.

நாராயண! நாராயண!
இனியவர்களை வம்புக்கு இழுத்து, கலகம் மூட்டி, சீண்டுவது மிகவும் பிடிக்கும். என் உடன்பிறப்பை செமையா சீண்டுவேன். "இன்னிக்கி அம்மா சுட சுட கேசரி பண்ணி இருந்தா! கொஞ்சமா இருந்ததா, நானே எல்லாத்தையும் சாப்டாச்சே! ஏவ்வ்வ்வ்!னு ஒரு ஏப்பமும் விட்டாச்சுனா உடன்பிறப்புக்கு(Srini) பிரஷர் குப்புனு ஏறிடும். அப்புறம் என்ன? ஏது?னு கூட விசாரிக்க மாட்டான். தாமிரக்கனி ஸ்டைலில் என்னை நாலு தட்டு தட்டுவான். அம்மாவிடம் போயி குதிப்பான். எனக்கு செம ஜாலி. இப்ப பிளாக்குலயும் இந்த சேவையை செவ்வனே செய்து வருகிறேன். விட்டு விடலாமா?னு யோசிக்கிறேன்.

நியாபகம் வருதே! நியாபகம் வருதே!
என் நியாபக சக்தி மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. பல சமயங்களில் இது வரம், சில நேரங்களில் சாபம். நம் முதுகில் குத்தியவர்களை பார்த்தால் அவர்களது கீழான செயல் தான் நினைவுக்கு வந்து தொலைக்கும்.
"மன்னிகறவன் மனுஷன்!
மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்!" - விருமாண்டி டயலாக் தான் இப்போ எல்லாம் சொல்லி பழகறேன்.


"நான் சந்தோஷம் கொண்டாடும் சன்யாசி!"
2 நாட்களுக்கு முன்னால் கீதையில் கர்ம யோகம் படித்து கொண்டு இருந்தேன்.(நம்புங்க ப்ளிஸ்).

அதில் ஒரு வரி, "ஏ பார்த்தா! எவன் ஒருவன் தன்னுடய கடமையில் உறுதியாக இருந்து, முழு மனதுடன் அதில் ஈடுபடுகிறானோ, அவனை அந்த கர்மத்தின் பலன் பாதிப்பதில்லை!" எனவே உன் கடமையில் இருந்து சிறிதும் பிறழாதே!"

அடடா! என்ன ஒரு சத்யமான வரிகள்!னு அனுபவித்து கொண்டிருக்கும் போது தானா ஒருத்தன் என்னை செல் போனில் அழைகணும்?

"சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்!
அங்கே தொலந்தவன் நானே!"

என்ற தேவ கானம்(ஹி, ஹி) காதில் விழ, இந்த பாடலை எழுதிய கவிதாயினி தாமரையின் வரிகளை மெச்சுவதா? அந்த பாடலில் கண்ணாலேயே எல்லாம் பேசி, ஒயிலாக நடை பயிலும் அசினின் நடைழகை மெச்சுவதா? என்று நான் பேரின்ப நிலையை அடைந்தேன்.
(அடச்சீ! இது ஒரு பொழப்பா?னு நீங்க துப்பினாலும் பரவாயில்லை. ஏனெனில் கர்மத்தின் பலன் என்னை சாராது, ஹி,ஹி, கிருஷ்ணர் சொல்லியிருகாரே)

கத்திரிக்கா! கத்திரிக்கா!
யாரு தான் இதை கண்டுபிடிச்சாங்களோ? சே! எனக்கு பிடிக்காத காய்கறியில் டாப் - 10 இல் தொடர்ந்து 26 வருடங்களாக முதலிடம் வகிக்கிறது. ஊரில் "அம்மா! உங்க பெரிய பையன் வீட்டுல இல்லையே"?னு கேட்டு விட்டு தான் தெருவில் கத்திரிகாய் விற்க காய்கறிகாரன் வருவான். TRC ஸார், உங்க வீட்டுல நான் வரும் போது இந்த காய் செஞ்சு போட்டு என்னை பழி வாங்கிடாதீங்க. நான் பாவம் இல்ல?

சரி, உண்மையை சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்! தன்னுடைய குறைகளை வெளிப்படையாக சொல்வதே ஒரு நல்ல குணம் தானே! (ஆமாம்!னு சொல்லுங்கோ)நான் என்னை மாற்றி கொள்வேன், கொள்கிறேன்!

"ஒரு குழந்தையை வையாதே பாப்பா!"னு எனக்காக பாரதி அன்னிக்கே சொல்லிருக்கார். அதுனால ஹி,ஹி!

இந்த தொடர் பதிவில் சில பேரை இழுத்து விடலைனா நன்னாவா இருக்கும்?

1) 'கில்லி' ப்ரியா! - புதிதாக வீடு கட்டி இருப்பவர். இவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.

2) 'கொடி கொடியாம்' பொற்கொடியாம்! - டகால்டி ராணி! என்னிடம் பென்ஸ் கார் கேட்ட புண்ணியவதி.

3) 'எந்தரோ மஹானுபாவுலு' TRC ஸார் - எதுகை மோனையில் புகுந்து விளையாடுபவர். என்னை அவர் வீட்டுக்கு அழைத்து பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார். ம்ஹும்... விதி யாரை விட்டது?

பி.கு: அடுத்த பதிவு ஒரு ஆளுக்கு வசமா ஆப்பு! யாருக்கு?னு யோசிச்சுண்டே இருங்க.

45 comments:

golmaalgopal said...

//அது நாக கன்னிகை டா மாப்ளே! நாக லோகம் போயி அமிர்தம் எல்லாம் பருகி இருக்கலாம். நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடியே!" // ROTFL....

cha nalla chance dhaan... :)

soobera ezhudhirkeenga... :) naaradhar sevaiyei thodarungal...

naan dhaan phashtu....no katthirikaai pls :)

Anonymous said...

enna da... konja naala kesari pathi mentione pannalayenu pathen...

Known Stranger said...

narayana narayana...

hm ella, addangumm orru kalyantha pannu - addagum... ella nna addakka paduvai

rowthira thunai prapthirasthu - dhathasthu - amen

Syam said...

அப்ப பஞ்சாப் மேல உனக்கு சின்ன வயசுல ஏற்ப்பட்ட ஈர்ப்பு இப்பதான் நிறைவேறி இருக்கு...நடத்து ராசா...கடமைல கண்னா இரு எப்பவும் அதுனால என்ன பலன் வந்தாலும் வந்துட்டு போகட்டும் :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

TRC ஸார், உங்க வீட்டுல நான் வரும் போது இந்த காய் செஞ்சு போட்டு என்னை பழி வாங்கிடாதீங்க. நான் பாவம் இல்ல?
அடப்பாவமே நாளைக்கு பாத்து எனக்கு பிடிச்ச கத்திரிக்க என்னைக் கறி, கத்திரிக்காய் கூட்டு அப்பறம் கத்திரிக்காய் சாம்பர்.
உனக்கு கத்திரிக்காய் பிடிக்காதா அப்ப இப்படிச் சொல்லலாம். இந்த கத்திரிக்காய் இருக்கே அது நல்லகாயே இல்லை அதுனாலதான் ஆண்டவன் அதுக்கு மேலே ஒரு ஆணி வெச்சு அடக்கிவெச்சுட்டான்.
உனக்கு பிடிச்சுஇருந்தா இப்படி சொல்லுவேன் இந்த கத்திரிக்காய் இருக்கே அது ரொம்ப நல்ல காய் ஆன்டவன் கூட அதுக்கு எவ்வளவு அழகா ஒரு கீரிடம் வெச்சு இருக்கான் பாத்தியா

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா.. கத்திரிக்காய் ஜோரா இருக்குமே :) என்ன எதுக்கு இழுத்து விட்டீங்க.. உங்கள பத்தி எல்லார் வீட்டுக்கும் போய் பீத்திக்கறேனே அதுக்கு இதான் பரிசா? (ஆப்பு எனக்கு இருக்காதுனு திடமா நம்பறேன்.. கவுத்துடாதீங்க)

Priya said...

ROTFL.. செம comedy.. அந்த நாரதர் விஷயம் நீங்க சொல்லி தான் தெரியணும்னு இல்ல.

5 னு சொல்லிட்டு 6 போட்டிருக்கீங்க? கணக்குல(யும்) weaka?

கத்திரிக்கா பிடிக்காததெல்லாம் weird ஆ? இல்ல TRC sir ட்ட எப்படி சொல்லலாம்னு யோசிச்சி இப்படி idea பண்ணினீங்களா?

//'கில்லி' ப்ரியா! - புதிதாக வீடு கட்டி இருப்பவர். இவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.//
அஹா.. உங்களுக்கு அடுத்தது எழுதணுமா? கிழிஞ்சது.
அய்யோ உங்க புகழ்ச்சிய கேட்டு cold வந்துடும் போல இருக்கு.

shree said...

as usual, supera yeludi irukka.. kudos!! :) yaaru, geetha mamiya illa TRC sira pudichi iluppa, correcta???

Prasanna Parameswaran said...

nalla irukku! :)

Ms Congeniality said...

Enakum kathirikaai suthamaa pudikaadhu..
LOL!! at Narayana Narayana

gils said...

ambinna...ellar car kethaiyum correcta solitu namma rekoshta pathi shollma ututley.. :D nagankanigaiya..hahaha..ungala suthi nallavnga neriya per irukanga pola :) punjab anniya neenga select panadu unga subconsciousla epdi vanthuchinu ipo thaan theriyuthu.... :D adutha aapu yaarukungo....aaavlaga irukirathu..seekrama podunga

மு.கார்த்திகேயன் said...

//யாரு யா அது? நமுட்டு சிரிப்பு சிரிக்கறது?//

வேற யாரு சாட்சாத் நானே தான்.. அப்பவே பஞ்சாப் போயிருந்தா குஷி படதுல மாதிரி "இந்த இருவரும் ஒரு காலத்தில் ஒன்று சேர்வார்கள்னு" கடவுள் வந்து அசரிரீ கொடுத்திருப்பார்..

ஆமா.. எப்படி இருக்கா அந்த கோதுமை ராணி..
அவ கிட்ட மட்டும் கோபப் படுறதே இல்லைனு கேள்விபட்டேன் உண்மையா அம்பி LOL :-))

மு.கார்த்திகேயன் said...

//அடுத்த பதிவு ஒரு ஆளுக்கு வசமா ஆப்பு! யாருக்கு?னு யோசிச்சுண்டே இருங்க.//

பாத்து அம்பி.. பழக்க தோசத்துல உனக்கே ஆப்பு வச்சுக்க போற :-))

KC! said...

seridhan, weird things ellam enna? Sollave illa? (he he)

Geetha Sambasivam said...

அம்பிக்குக் கத்தரிக்காய் பிடித்த பெண்ணாக அமைய என்னோட வாழ்த்துக்கள்.
@அம்பி, தி.ரா.ச. வீட்டுக்கு எப்போ வரீங்க? சொன்னா கத்தரிக்காய் மாலை கொடுத்து அனுப்புவேன். அப்படியே எங்க வீட்டுக்கும் வந்தா கத்தரிக்காய் சாதம், சாம்பார், கறி, கூட்டு,, பச்சடி, கொத்சு என்று அமர்க்களபடுத்தலாம்.

Maha said...

hello ninga American college a??onga photo va engayo patha mari iruku?..njoyable reading!

Gnana Kirukan said...

that was a funny post ambi :D lol - gud one :)

rnatesan said...

அம்பி ஆபத்தாச்சே!!கத்தரிக்கா மாதிரி ஆத்துக்காரி அமஞ்சுடப் போறா!!பாத்து!!

Porkodi (பொற்கொடி) said...

பாருங்க.. எல்லாருமே மன்னி பத்தின கனவுல தான் இருக்கோம் :)

Porkodi (பொற்கொடி) said...

என்னது

ambi said...

@G'gopal, he hee, dank U :)
yeh, yeeh, nee thaan pashtu!
so unakku kesari kindi tharatumma? :)

@suresh, hee hee, danks. atha ellam marakka mudiyumaa naa? :)

@Kstranger, vaaya vaa! already ippa naan konjam adangi poi thaan iruken. ithula Asirvaatham verayaa? :)

//கடமைல கண்னா இரு எப்பவும் அதுனால என்ன பலன் வந்தாலும் வந்துட்டு போகட்டும்//
@syam, nee entha kadamaiya solra? onnume puriyaliyee? (mugil looku)

//வருடம் தவறாமல் கார்த்திகை மாதம் சோளிங்கபுரம் தரிசனம் உண்டு//
@veda, ohh Gr8. annalum innum nalla buthi vantha paadilai. :)

//நாளைக்கு பாத்து எனக்கு பிடிச்ச கத்திரிக்க என்னைக் கறி, //
@TRC, but unga veetu kathrikaai kariya naan taste panninen theriyuma? nanna irunthathu. :)

ambi said...

//அதுனாலதான் ஆண்டவன் அதுக்கு மேலே ஒரு ஆணி வெச்சு அடக்கிவெச்சுட்டான்......//
@TRC sir, LOL. Birbal rangeku pesaringa sir! :)


//ஆப்பு எனக்கு இருக்காதுனு திடமா நம்பறேன்.. கவுத்துடாதீங்க//
@porkodi, cha! unaku illai. don't worry. :)

//5 னு சொல்லிட்டு 6 போட்டிருக்கீங்க? கணக்குல(யும்) weaka? //
illa, athu kathrikaikku kosuru. :)

//அய்யோ உங்க புகழ்ச்சிய கேட்டு cold வந்துடும் போல இருக்கு.//
cha! unmaiyaa thaan sonnen. :) cold vantha "sukku kashayam kudichuko! blog ellam ezhuthikoo!" :)

//geetha mamiya illa TRC sira pudichi iluppa, //
@shree, danks yekka, no, this is different. wait and see! :)
btw, congrats. :D

@indianangel, danks :D

ambi said...

@Ms.C, danks, U also kathrikai hate groupaa? superrrrrrr. same pinch! no back pinch.(usharayittom illa) :D

@gils, danks, danks.
//punjab anniya neenga select panadu unga subconsciousla epdi vanthuchinu ipo thaan theriyuthu//
summa iruyaa, veetula velakku maaru pinchudum. :D

//"இந்த இருவரும் ஒரு காலத்தில் ஒன்று சேர்வார்கள்னு//
@karthik, vaaya vaa! ippo kushi padathula jothika nu solluva! aprom athula vara maathiri Mumtaj yaaru?nu keppa! :D

aapu ellam correcta veppen don't worry :)

@usha, un kusumbuku oru alave illaya? :D

@geetha, vaango! vaango! welcome! ammaa, return ticket Goods vaandiyila!nu kelvipaaten. :D
//தி.ரா.ச. வீட்டுக்கு எப்போ வரீங்க? //
naan vanthutu kilambiyaachu! :)

//hello ninga American college a??//
@giri, yeeh, ME American College 96 - 99 batch!
//onga photo va engayo patha mari iruku?..//
*ahem* Unga History bookula pathrupeenga, intha Alexander, Napoleon, varisaiyil 'Ambi The Great!'nu sari sari! :D

@arjuna, danks nanba, nee new poshtu potutiyaa? :D

//கத்தரிக்கா மாதிரி ஆத்துக்காரி அமஞ்சுடப் போறா!!//
@Nateshan sir, paravayilla, naan adjust pannipen. (vera vazhi? :(

//எல்லாருமே மன்னி பத்தின கனவுல தான் இருக்கோம் //
@porkodi, neenga mattuma..? LOL :D

@veda, venaam, naan, ava ellam manasthi! sollitten. :D

Pavithra said...

ROTFL ;-) .. I love brinjal ..But I know lot of people who don't like brinjal so..that's not a weird thing. Then, yaaro saabham vitu irukaanga..unga varungala ponmani pathi..100% true appadi than amaiyum..enakku piditha entha food-um en husband-ku pidikaathu..avarukku pidichathu enakku pidikathu. ;-)

Unknown said...

//துண்டை காணும், துணியை காணும்!னு வந்தது தான் மிச்சம்//

Unmayaaveva?

gayathri said...

after a looooooong time seeing all ur posts.. ellamey epavum pola suuuuuuuuper.. nanga kudumbathoda vilundhu vilundhu sirichom!!!

Porkodi (பொற்கொடி) said...

vedha, ena epdi iruku unga poonjai udambu.. grrrrrr nan azhagu nu enake teriyum, ada enna anony vandhu solradhu? nangallam kavariman jaadi.. terinjukonga.. :)

Sasiprabha said...

TRC sir paridhaabapattu vittiruppaar.. Naana irundha saadham, sambar, pulikolambu, thovaiyal, vathal, enna kathiri, masala, kadaisal, vatha kolambu ellathaium kathirikkailaye ready panni iruppen ... Ippidiyellaam naan solluvenu neenga edhirpaartha, sorry appidi illa. Kathirikaiya kannula kooda kaati irukka maten.. Chennai meet pathi post seekiram podunga.. Yaar poda poreenga..

Porkodi (பொற்கொடி) said...

@sasi:
enna ipdi ketutinga? ivaru than podanum.. namala adi vangi maala mudiuma sollunga?

Anonymous said...

Hoi ambi...

nalla list...

naan kan kottama sight adikirathu nirasimhar orutharaithaan... che... enna looku.. enna built'u... kovam vandhaalum appadi varanum'ya

Hare Rama hare krishna iyakkathoda iscon temples store poi paarunga... ange narasimharoda nachu poster onnu irukkum... ennoda hall'a intha poster'a thaan ennoda style'a bamboo frame pootu maati irukken...

http://krishna.tv/lord-nrsimhadev-p-539.html

kovam vandha amma thaan samathanap paduthuvaangala... hmm pakkalam pakkalam athu ethanai kalathukkunnu.. :P

punjab'aaaaaaaaaaaaa ooho ithu vitta kathai thotta kathaiya irukkum poola irukke!!!!

kathirikkai pidikaathaa... nallathuthaan kathirikaikku.... athukkum ungalai pidikaathunnu vengayathukitta sollucham.. :P

adhutha post'la yaarukko aappa... paathu kanna comment'sellam ungalukku bounce aaga pooguthu... ennoda appu kandippa undu...:P

adada... beta versionukku maarungappa ... comment poodurathukulla kaduppadikuthu

மு.கார்த்திகேயன் said...

/athula vara maathiri Mumtaj yaaru?nu keppa!//

O.. intha aasai kooda unda, ambi..chari..kathaipadi inneram mumtajum vathirukkanume.. yaar athu..(neruppu illaama pukaiyum) solluppa sollu..yaar athu

ambi said...

@pavi, danks, :D
//yaaro saabham vitu irukaanga..unga varungala ponmani pathi..100% true appadi than amaiyum.//
venaam naan azhuduven, paravayilla, i'll change myself and try to swallow kathrikai. :D(ellam en thala ezhuthu!nu thalaila adichunde saaptuven, vera vazhi?)

@bala.g, unmai :(

@veda, enna sirippu? rascal.. :D

@gayathri, vaama minnal! how r u? happy that U enjoyed. :D

@porkodi, apdi solluma! nextu time, naalu saathu saathuvoom, kavala padatha! namma azhaga paathu kannadiye vekkapaduthu! illaya? but, kavari maan!nu solli paavam maanai avamana paduthi irukka vendaam neey! :D

@sasi, dank U! cha! neey varuva!nu ethirpaarthu kozhandhais(me & porkodi) emaanthu pochu theriyumaa?
//Chennai meet pathi post seekiram podunga.. Yaar poda poreenga.. //

yen thalaila kattitaanga athaiyum! :)




@

ambi said...

@veda, en thangaikku eppavume comedy thaan! :D

@porkodi, ahaaa! athuku thaan valaya virichiyaa? :D

@kanya, vaama jillu! unakkum narasimharaa? same pinch. yeeh, me also used to see narasimhar for a long time. but veetula padam maata koodathu!nu amma sollitta. :(

ippo kovam konjam kaami ayiduchu!
btw, beta is not as good as this. shorry! :)

@karthik, enna sirippu? oru mumtaajum vendam. ullathuke vazhiye kanoom! thonga vendi irukku! vaytherichala kottigatha. Grrrrrrrr.

EarthlyTraveler said...

haha!LOL!
Ennaku Kathrikkai aravae pidikkadhu,but my MR-ku adhu fav item.andha madhirithan amaiyum.

unga sevai thodarattum.--SKM

Sasiprabha said...

/*/sasi, dank U! cha! neey varuva!nu ethirpaarthu kozhandhais(me & porkodi) emaanthu pochu theriyumaa?/*/ Andha kozhandhaigalukku Alphenlebe lollypop vaangi vechirundhen. Appuram oru arai kilo varukkaadha kadalai vaangi vechirundhen.. (Ellaarum sendhu pesi pesi adha varuthuralaamnu thaan) Ellame waste aagidichu... Ippa enakku ore feelings.. Pongappa.

Harish said...

Ambi ji...vayaru valikaradu pongo...
Ungalukkum kattirika pidikkadha?en udanpirappukkum ade pirachanai thaan...
Yaaru anda aapu vaanga pora case?Usha thaane?

Prabhu said...

funny post ambi....

thamizh-la samma funny ezhutharathu - atleast enaku therinju dubbukku and neenga thaan...
(thalai-la konjam ice ganam jaasthiya iruntha erakki vachundunga..:)

Enna da geethai- elaam oru buildup nu paathaa kadasila 'asin' pathi jolllaaa..
asin laye iruke... a-sin nu so oru karma-vum ungala baathikathu...

vishy said...

hmm appo.. vidama loda loda nu pesara allu mari theriyuthu neenga ezhutharatha paartha...

adutha post la appu yaarukku nu oru alvavukku theriyuthu... avangadhana adhu??

ambi said...

//andha madhirithan amaiyum.
//
@SKM, hmmm. enna panrathu adjees pannikka vendiyathu thaan. after all ithu kooda pannalaina epdi..? :D

//Andha kozhandhaigalukku Alphenlebe lollypop vaangi vechirundhen. //
@sasi, apdiyaa? hhhm :(
peel pannatha, nestu meetu potruvoom! :D

@harish, danks pa!
//Yaaru anda aapu vaanga pora case?Usha thaane?//
cha! avloo thairiyam enaaku lethu. aprom kodala urivi maalaya potruvaa usha! LOL :)


//thamizh-la samma funny ezhutharathu - atleast enaku therinju dubbukku and neenga thaan...//

@prabhu, thappu! thappu! Dubukku anna Thala naan summa oramaa okkanthu kacheri panren avloo thaan. anyway, boost, horlicks complain ellam kalakki adicha maathiri irukku!
How was Ur India Trip? dharisanam ellam panniya? (kovila sonnnen) LOL :D

@vishy, cha! naan romba calm & quiet. usha told alot abt U :D

மு.கார்த்திகேயன் said...

//thonga vendi irukku//

so yaarukkO vaalaiyai pottutu kokku maathiri kaaththirukeengannu theriyuthu, ambi..

chchOOOO.. pavam payyan..

ambi said...

@karthik, athu epdi pa, neeya onnu ninachundu ennaya correcta varura?

cha! cha! athellam onnum illa. no commitments, no worries. Just be myself. :D

Porkodi (பொற்கொடி) said...

ரொம்ப பிச்சினு சீன் போட்டது போதும், போடுங்க பதிவ..

EarthlyTraveler said...

//adjees pannikka vendiyathu thaan. after all ithu kooda pannalaina epdi..? :D//
indha madhiri adjust pannikiren sollara pasanga pathadhu illa.If you are ready for that ,you will be the happiest person and un asai polavae ponnu varatum.I wish you all the best kanna.--SKM

ambi said...

@porkodi, nee oruthi pothum, en manatha vangarathuku, tdy post podaren. :D

@SKM, Ohh, thanks for your Asirvatham. i'm really moved. periyavanga periyavanga thaan! :)

Balaji S Rajan said...

Ambi,

Post was nice but lacks your touch of humour. What was your age when you had a trip to go to Punjab? Probably terrorism would have been just a simple thing. Probably they would have assumed something else at that age... Tirunelvelikkey Halwa kuduthutanga... Illaina appavey neenga Punjab horse pidichittu vandhu irundheengana...Yellam oru bayam thaan.... Annanum thambiyum ivalavu settaiya...