Part-1, Part-2
நீங்கள் அணிந்து இருக்கும் ஸ்வெட்டர்/ஜெர்கினை வைத்தே பெண்களூருக்கு வந்து எத்தனை காலம் ஆனது?னு சொல்லி விடலாம்.
1) ஜெர்கின் முழு ஜிப்பும் கழுத்து வரை போட்டு குணா கமல் மாதிரி மங்கி தொப்பி போட்டு இருந்தால் இங்கு காலடி வைத்து சில தினங்களே ஆகி உள்ளது.
2) ஜெர்கின் ஜிப்பை போடாமல் டூயட் காட்சியில் வரும் விஜயகாந்த் மாதிரி காட்சி அளித்தால் சில வாரங்கள் கடந்து விட்டீர்கள்.
3) என்னாது? ஜெர்கினே போடலையா? இங்க வந்து ஒரு வருடம் ஆச்சோ?
4) ஸ்லீவ்லெஸ்ஸா..? வேணாம்! நான் வாய தொறக்கறதா இல்லை.
நானும் இப்படி தான் நல்ல குளிர் காலம் ஆரம்பிக்கும் நவம்பரில் ஹாயாக புதிய வானம்! புதிய பூமி!னு பெண்களூர் வந்திறங்கினேன். எங்கெங்கு காணினும் ஒரே பிகர் மயமடா!
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்!
பிகரில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!னு அந்த காலத்துலேயே சும்மாவா பாடி வெச்சுருகாங்க.
ஊரை சுத்தி எக்கசக்க அனுமார் கோவில்கள். பஸ் ஸ்டாப்பில் நாம் கொஞ்ச நேரம் அசையாமல் உட்கார்ந்து இருந்தால் கூட, அனுமார் கோவிலாக்கி விடுவார்கள். சங்கடஹர சதுர்த்திகளில் (பவுர்ணமியில் இருந்து நாலாம் நாள்) பேச்சிலர்கள் இரவு உணவுக்கு ஓட்டல்களுக்கு செல்வதில்லை. ஏனெனில் அன்று இந்த ஊர் பிள்ளையார் கோவிலில்களில் தடபுடலாக பூஜை நடத்தி சுட சுட வெண்பொங்கல், புளியோதரை, கொண்டகடலை சுண்டல் என அமர்களப்படுத்துகிறார்கள். எந்த சாமியா இருந்தா என்ன? மக்கள் வயிற்றுப் பசியை தீர்ப்பதே பெரிய புண்யம் தானே? உண்டி குடுத்தோர் உயிர் குடுத்தோர் அன்றோ? (ஒரு காலத்தில் வாங்கி சாப்பிட்ட பொங்கலுக்கு எவ்ளோ கூவனுமோ கூவியாச்சு) :)
உணவு முறைன்னு பாத்தா ஒரு இட்லிக்கு ஒரு பிளேட் சாம்பார் மாதிரி ஒரு திரவம் குடுக்கறாங்க. பெண் பாக்கும் போது கொடுக்கற கேசரிய தாராளமா ஒரு பிளேட் கேசரிபாத்னு தராங்க.
எரிச்சல் தரகூடிய ஒரு விசயம் என்னனா நூத்துக்கு எழுபது பேர் (அதுல அறுபது பேர் கன்னடர்கள்) வாயில் பான்பராக் போன்ற ஒரு லாகிரி வஸ்துவை போட்டு மெல்வது.
கன்னட திரைப்பட துறை பண்ணும் காமடிக்கு அளவே கிடையாது. எந்த மொழி படங்களும் அப்படியே டப் செய்ய மாட்டார்களாம். ஆனா ஒரு தமிழ் படம் விடாம ரீமேக் செய்து ரிலீஸ் செய்து விடுவார்கள். அதிலும் மறைந்த விஷ்ணுவர்த்தன், சரத்குமார் படங்கள் எல்லாத்தையும் காப்பி அடித்து தானே அப்பா சரத், தாத்தா/பேரன் சரத், பெரியப்பா/சித்தப்பா சரத்னு எல்லா ரோல்களிலும் வந்து இம்சை படுத்துவார்.
உதாரணமாக நம்மூர் நாட்டாமை படத்தை இங்க சிம்ஹாத்ரி சிம்ஹா!னு காப்பி பேஷ்ட் பண்ணி விஜயகுமார் ரோலிலும் வி-வர்த்தனே கையில் கிராபிக்ஸ் உதவியுடன் செல்ல பிராணியாக ஒரு சிங்கத்துடன் திரையில் வந்து விட்டார்.
நடுரோட்டில் நின்று கொண்டு மஞ்சுநாத்/பரமேஷா/மஞ்சுளா/ராஜ்குமார் இந்த நாலு பெயரில் ஏதாவது ஒன்னை சொல்லி கூப்பிட்டால் குறைஞ்சது ஐம்பது பேராவது திரும்பி பார்ப்பார்கள்.
மக்களுக்கு கடவுள் பக்தி ரொம்ப்ப ஜாஸ்த்தி. எல்ல கன்னடியர்களும் மூக்கு ஆரம்பிக்குமிடத்தில் ஒரு குங்கும பொட்டு வைத்திருப்பார்கள். கன்னடம்/ராஜ்குமார்னு நீங்க கொஞ்சம் சத்தம் போட்டு பேசினால் மிக்ஸி விளம்பரத்தில் சொன்ன மாதிரி தர்ம அடிக்கு நான் கியாரண்டி.
கன்னட மக்கள் அடிப்படையில் பார்த்தால் அன்பானவர்கள். உதவும் மனப்பான்மை மிக்கவர்கள். ஆனால் நம்மைப் போலவே எளிதில் உணர்ச்சி வசபடுபவர்கள். இதனை இங்குள்ள அரசியல்/இன சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ம்ம், இக்கரைக்கு அக்கரை மஞ்சள், சாரி, பச்சை. :))
இந்தியாவிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கபடுவது இங்கு தான்.
ஆசியாவிலேயே அதிகமான பப்புகள் இருப்பதும் இங்கு தான். (பப்புனா குழந்தைக்கு ஊட்டும் பப்பு சாதம் அல்ல).
நூற்றுக்கு தொன்னூறு சதவீத பெண்கள் லிப்ஸ்டிக் அடித்துக் கொள்கிறார்கள். பத்து சதவீதம் பேர் அன்றைய தினம் லிப்ஸ்டிக் தீர்ந்து போனதால் மறுபடியும் வாங்க கடைகளில் நிற்கிறார்கள்.
தென்னிந்தியாவிலேயே அதிக பிகர்கள் இருக்கும் சிட்டியும் இது தான்!னு கைபுள்ள என்கிட்ட ரகசியமா சொன்னார். கேரளாவை அவர் கணக்குல சேர்க்க வில்லை என்று எண்ணுகிறேன். ஆயிரம் இருந்தாலும்... (சரி இதுக்கே மண்டகபடி இருக்கு எனக்கு).
சராசரியாக ஒரு நாளைக்கு பத்து பேர் தங்கள் வேலையை ரீசைன் செய்து விட்டு வேற கம்பனிக்கு மாறுகிறார்கள். ஆனா புடுங்க போவது என்னவோ ஒரே வகை ஆணியை தான்.
இங்கு மக்களுக்கு எரிச்சல் தரக்கூடிய ஒரு பெரிய விஷயம் டிராபிக் நெரிசல் தான். எல்க்ட்ரானிக் சிட்டி, ஐடிபிஎல் செல்லும் கம்பனி பேருந்துகளிலேயே பெரும்பாலும் பிராஜக்ட் ஸ்டேடஸ் மீட்டீங்கை நடத்தி முடித்து விடுகிறார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் அடுத்த கம்பனி பஸ்ஸில் தமது பயோடேட்டாவை குடுத்து ஒரு வாரத்தில் பஸ் மாறி விடுகிறார்கள். அந்த அளவுக்கு டிராபிக் நெருக்கடி உள்ளது. டிசம்பர் 2010ல கிழக்கே போகும் மெட்ரோ ரயில் வரும்னு சொல்றாங்க, பாப்போம், நம்பிக்கை தானே வாழ்கை.
பெங்களுரில் தவிர்க்க வேண்டிய நபர்கள்:
1) கின்டர் கார்டன் ஸ்கூல் நடத்துபவர்கள். சில பள்ளிகளில் பெற்றோருக்கு பஞ்சாமிர்தமும் குடுத்து மொட்டையும் போட்டு விடுகிறார்கள்.
2) ரியல் எஸ்டேட்காரர்கள்: பெரும்பாலும் ரெட்டிகளே! ஆனால் பலே கெட்டிகாரர்கள். கணக்கு போட்டு பாத்தா கார் பார்கிங்குக்கா இவ்ளோ லோன் போட்டு குடுத்தோம்?னு தோணும்.
3) மெகா மால்காரர்கள்: தோலிருக்க சுளை முழுங்குவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரு பாப்கார்ன் பாகெட்டை நாப்பது ரூவாய்க்கு விற்று விடுகிறார்கள். நீ எதுகுய்யா வாங்கற?னு தான் நானும் கேக்கறேன்.
இதுவும் கண்டவர் விண்டிலர்! கதை மாதிரி தான் போலிருக்கு.
இவ்ளோ சங்கடங்கள் இருந்தாலும் இந்த ஊருக்கே உரித்தான வானிலை அடடா! ஆனா சம்மரில் இங்கும் வெய்யில் கொளுத்தத் தான் செய்கிறது.
சென்னையை விட ஆணி புடுங்க சம்பளம் தாராளமா தராங்க. செலவும் ஜாஸ்தியா தான் இருக்கு என்பது வேற விஷயம். சில விஷயங்களை ஆராயகூடாது, அனுபவிக்கனும். (அப்பாடி, மாரல் ஆப் தி பதிவு சொல்லியாச்சு!)
50 comments:
கவலை படாதீங்க அம்பி! அம்மா ஆட்சி வரட்டும். மாயவரத்துல ஒரு லூஸ்டெல் பார்க் திறந்து அதிலே உங்களை 50 வது மாடிக்கும் மேல மொட்டை மாடில குந்த வச்சு அழகு பார்க்கிறோம். ஏன்னா எங்க ஊர்ல நல்ல அருமையான வீடு 1500 க்கு வாட்கைக்கு கிடைக்கும். 75 ரூபாயில் 3 வேளை நல்லா துன்னலாம். பாணி பூரி கூட 8 ரூபாய்க்கு 15 தருவான் நல்ல தாராளமான பாணியுடன்.முதல் நாள் முதல் காட்சி ராவணன் 50 ரூபாய்க்கு பார்க்கலாம். கார் பார்க்கிங் ஃப்ரீ. ரொம்ப அவசரமா பார்க் செய்யனும்ன்னா கூட நடு ரோட்டிலே பப்பரக்கான்னு நிப்பாட்டிட்டு போகலாம். ஏன்னு ஒருத்தன் கேட்க மாட்டான்.(நீங்களே உங்களை கேட்டுகிட்டா தான் உண்டு) பார்க்கிறவன் ஒதுங்கி வேற ரூட் எடுத்து போவான். இல்லாட்டி இதான் பார்க்கிங் போலருக்குன்னு நினைச்சு அதுக்கு பின்னாடி பார்க் பண்ணிட்டு போவான்.
ஒன்வே என்பதே கிடையாது. அப்படியே எதுனா போலீஸ்காரர் கேட்டா கூட "என்னா சார் அநியாயமா இருக்கு. காலைல கூட இது ஒன்வேயா இல்லியே/"ன்னு கேட்டா கூட போதும். (ஏன்னா ஒரு நாளைக்கு பல தடவை ஒன்வேயை மாத்துவாங்க)
எல்லாத்துக்கும் மேல கிளைமேட். அதை கிளைமேட்ன்னு சொல்வதை விட நம்ம கிளாஸ்மெட்ன்னு சொல்லலாம். தைரியமா டேமேஜர் கிட்ட "சார் கிளம்பும் போது செம மழை"ன்னு சொல்லலாம். ஏன்னா ஒரு தெருவிலே பெய்யும். அடுத்த தெரு காயும். அப்படி ஒரு சூப்பர் கிளைமேட்.
இப்படி பல நன்மை இருக்கு எங்க ஊர்ல:-)))))
Ambi You have touched all the points. Pubs, Figures, IT Jobs, Malls, Weather off course school admission!!!!!!! Romba kavaliya School admissiona ninaichu
இன்னும் சொல்லிகிட்டே போகலாம். அதுக்கு பதிலே நான் ஒரு பதிவே போடுவது உத்தமம்;-))
:)
இதை படிச்சுட்டு எத்தனை பேர் பெங்களூருக்கு குடியேறப்போறாங்கன்னு பாப்போம் :)
தலைவரே இப்பதான் உங்கள் வலைக்கு வந்து பார்த்தேன். நிஜமாவே சூப்பர்.
/பிகரில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!னு அந்த காலத்துலேயே சும்மாவா பாடி வெச்சுருகாங்க.//
manni enga?? oorla illaya?
அம்பி, குழந்தை ஸ்கூலுக்குப் போகப் போறானா?
ஏன் பொல்யூஷன்,பார்த்தீனியம் அலர்ஜி இதெல்லாம் விட்டு விட்டீர்கள்:)
நாங்க இருக்கும்போது பவர்கட் நிறைய இருந்தது,. காலையில் கீழ இறங்கும்போது லிந்ப்ட் வேலை செய்யும். மார்க்கெட்ல இருக்கிற அத்தனை பொருட்களையும் வாங்கிண்டு திரும்பும்போது ...நோ பவர் அப்டீன்னு வாட்ச்மேன் சொல்லுவான்:)ரெண்டு நாள் வந்துட்டுப் போறதுக்கு பங்களூர் ஓகே:)
சுஜாதா பெங்களூரை பற்றி எழுதும் வரிகள் நினைவு வந்தது.
சுவாரசியமாகவே எழுதியுள்ளீர்கள் அம்மாஞ்சி ....நல்ல பேரு.
சுஜாதா பெங்களூரை பற்றி எழுதும் வரிகள் நினைவு வந்தது.
சுவாரசியமாகவே எழுதியுள்ளீர்கள் அம்மாஞ்சி ....நல்ல பேரு.
"நடுரோட்டில் நின்று கொண்டு மஞ்சுநாத்/பரமேஷா/மஞ்சுளா/ராஜ்குமார் இந்த நாலு பெயரில் ஏதாவது ஒன்னை சொல்லி கூப்பிட்டால் குறைஞ்சது ஐம்பது பேராவது திரும்பி பார்ப்பார்கள்." :-)
எப்படி? நம்மூரிலே அம்பி, அம்மாஞ்சி-ன்னு கூபிடரமாதிரியா? :))
நல்லா பொலம்பறீங்க. :))
//பாணி பூரி கூட 8 ரூபாய்க்கு 15 தருவான் நல்ல தாராளமான பாணியுடன்.//
அபி அப்பா: அது என்ன பாணி-ன்னு பாத்து சாப்டுங்கோ..
/அதுக்கு பின்னாடி பார்க் பண்ணிட்டு போவான்.//
இது கலகலா...
நல்ல கட்டுரை நன்றி அம்மாஞ்சி ;)
- என். சொக்கன்,
பெங்களூரு.
நல்ல கட்டுரை நன்றி அம்மாஞ்சி ;)
- என். சொக்கன்,
பெங்களூரு.
பெண்களூர் --> இப்ப்படித்தான் அந்த ஊரைச் சொல்லணும்., என் வாழ்வில் மிகச் சிறந்த தருணங்களைக் கழித்த ஊர். 9 வருடங்கள் கழிந்தது தெரியாமல் பறந்தே போய் விட்டது.
சென்னையில் பார்க்கும் ஒவ்வொரு சமாசாரத்துக்கும் பெங்களூரோடு ஒப்பிடுகிறேன். ஹோட்டல் மால், தியேட்டர் ஃபிகர் ஆஃபீஸ், வாகன நெரிசல், வீட்டு வாடகை வானிலை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பெங்களூரில் மழை ஆரம்பித்ததிலிருந்து தினமும் என் தங்கை தொலைபேசி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வாள்.இரண்டு வாரங்களாக சென்னையில், “எனக்கும் மழை பெய்யத் தெரியும்” என்று சொல்லிக்கொள்வது போல் மழை பெய்கிறது.
”சும்மா எப்போதும் சென்னை குத்தம் சொல்லிண்டு, இங்க இருக்கறவாள்’லாம் மனுஷா இல்லையா? பெங்களூர் புராணம் பாடினது போதும்” என்று மேலிடம் உத்தரவு போட்டாலும் உம்ம மாதிரி ஆட்கள் உசுப்பேத்தி விடறீங்களே.
மீண்டும் பெங்களூர் வீதிகளில் உலா வந்ததொரு உணர்வு.
//தென்னிந்தியாவிலேயே அதிக பிகர்கள் இருக்கும் சிட்டியும் இது தான்!னு கைபுள்ள என்கிட்ட ரகசியமா சொன்னார். கேரளாவை அவர் கணக்குல சேர்க்க வில்லை என்று எண்ணுகிறேன். ஆயிரம் இருந்தாலும்... (சரி இதுக்கே மண்டகபடி இருக்கு எனக்கு)//
அடப்பாவி மனுஷா!
அம்பின்னு ஒரு நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு ஒரு மூத்த பதிவரு என் பதிவுக்கு லிங்க் குடுத்துருக்காரு பாருன்னு தங்க்ஸ் கிட்ட காமிச்சு பெருமை பட்டுக்க முடியாத படி ஆப்பு வச்சிட்டீரே!
இருக்கட்டும்...இருக்கட்டும் கவனிச்சிக்கிறேன். நான் ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை போஸ்ட் போட்டாலும் எனக்கும் ஒரு ப்ளாக் இருக்கு...எனக்கும் லிங்க் குடுக்க தெரியும்...கூடிய சீக்கிரம் நீர் என்கிட்ட ரகசியமா சொன்ன கில்மா சமாச்சாரங்களை லிங்கா எதிர்பார்க்கவும்.
வர்ட்டா?
என்ன பெங்களூர் பாசம் பொங்கி வழியுது?? சீக்கிரமே அங்கேயிருந்து கெளம்புறீங்களோ??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//கின்டர் கார்டன் ஸ்கூல் நடத்துபவர்கள். சில பள்ளிகளில் பெற்றோருக்கு பஞ்சாமிர்தமும் குடுத்து மொட்டையும் போட்டு விடுகிறார்கள்//
உன் பையனை பள்ளிக்கூடத்துல சேக்க சிரமப்படுற கதை தெரியுமப்பு...
//உணவு முறைன்னு பாத்தா ஒரு இட்லிக்கு ஒரு பிளேட் சாம்பார் மாதிரி ஒரு திரவம் குடுக்கறாங்க. பெண் பாக்கும் போது கொடுக்கற கேசரிய தாராளமா ஒரு பிளேட் கேசரிபாத்னு தராங்க.//
சாரி தம்பி... அதை விட கம்மியா தான் பெரும்பாலான கடைகளில் தருகிறார்கள்... இதற்காகவே, வீட்டில் சேமியவிற்கும் ரவைக்குமான பட்ஜெட் தனியா போட வேண்டி இருக்கு...
//மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்!
பிகரில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!னு அந்த காலத்துலேயே சும்மாவா பாடி வெச்சுருகாங்க.//
அம்மிணி, கவனிச்சீங்களா? இவர் சென்னைக்கு வேலையை மாற்றாததற்கு இதுவும் ஒரு காரணம்...
//ஸ்லீவ்லெஸ்ஸா..? வேணாம்! நான் வாய தொறக்கறதா இல்லை//
அலுவலகத்தில் நிறைய ஸ்லீவ்லெஸ் உண்டுங்கிறது தெரிகிறது...
ட்விட்டரில் சொக்கன் கொடுத்திருந்த லிங்க் பிடித்து இங்கே வந்து படித்தேன், ரசித்தேன்.
பெண்களூர் நான் மிகவும் ரசிக்கும் ஊர். இந்த ஏப்ரலிலும் நாலு நாள் வந்திருக்தேன். இந்தியா திரும்பும்போது அங்கே தான் செட்டிலாகவேண்டும், பார்க்கலாம்!
\\ லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
ட்விட்டரில் சொக்கன் கொடுத்திருந்த லிங்க் பிடித்து இங்கே வந்து படித்தேன், ரசித்தேன்.
பெண்களூர் நான் மிகவும் ரசிக்கும் ஊர். இந்த ஏப்ரலிலும் நாலு நாள் வந்திருக்தேன். இந்தியா திரும்பும்போது அங்கே தான் செட்டிலாகவேண்டும், பார்க்கலாம்!\\
சுத்தம்! பெண்களூர் அம்பியை நம்ம ஊருக்கு தள்ளிகிட்டு வரவேண்டி நம்ம ஊர் பெருமையை கூவிகிட்டு இருக்கேன். நம்ம ஊரு அண்ணாச்சி பெண்களூருக்கு பிச்சிகிட்டு போறாரே! தப்பா கூவிட்டனோ?
ரெகுலரா மண்டகப்படி இருக்கும் போதே இந்த பேச்சு.. :)))
என்ன பெண்களூருக்கு "பிரியா" விடை கொடுக்கற உத்தேசமா?
//கையில் கிராபிக்ஸ் உதவியுடன் செல்ல பிராணியாக ஒரு சிங்கத்துடன் திரையில் வந்து விட்டார்.//
சாரி பாஸ்.. அந்த கொடுமைய செஞ்சது நாங்க தான்...
//பெண் பாக்கும் போது கொடுக்கற கேசரிய தாராளமா ஒரு பிளேட் கேசரிபாத்னு தராங்க.//
இது போதுமே அம்பி பெண்களூர்லே
செட்டில் ஆறதுக்கு.....))
ulahathulaye traffic nale road roller en kanavar kalla yeri pona kadha engaluku matum than nadanthirukum.
lunch ku restaurant polamnu kilambina dinner ku avan restaurante moodrathukula poi senthuduvom.
apappa bang., traffic ninachale allergya iruku
ana athayum kandukama nanga varavaram ur suthirukarthu vera vishayam
போன வாரம் பெங்களூர்லதான் சுத்திகிட்டிருந்தேன்
:))
வாங்க அபி அப்பா, ஏற்கனவே கலைஞர் ஆட்சில வீட்டுக் குழாய திறந்தாலே பாலும் தேனும் வழிஞ்சோடுதே. நல்லா குடுக்கறாங்க டீடெயிலு. :))
உங்க பதிவை படிக்க ஆவலுடன் இருக்கோம் அபிஅப்பா. :)
சுபாஷினி, அட அதிசயமா கமண்ட் எல்லாம் போடறீங்க.. :p
சூரியனே சிரிக்குதுபா. :)
சின்ன அம்மணி, நல்ல விதமா தானே சொல்லி இருக்கேன். ஏதும் தப்பா சொல்லி இருக்கேனா..? :)
ரொம்ப நன்றி டாக்டர் சிவா.
எல்கே, நோ நோ வைலன்ஸ். :p
வாங்க வல்லிமா, பவர் கட் அதிகம் தான். ஆனா தஸ்புஸ்னு வேர்க்கவே வேர்க்காது. ஒரு காலத்துல பென்ஷனர்ஸ் பாரடைஸ் இந்த ஊர் தானே..? :)
நன்றி மாணிக்கம், சின்னப்பயல். விதூஷ். :)
சொக்கன் சார், உங்கள் வரவால் தன்யனானேன், டிவிட்டியதுக்கும் நன்றி. :))
விஜய், உங்கள் ஒவ்வோரு வரிக்கும் ரெண்டு கையையும் தூக்கி ஆமோதிக்கறேன். வீட்டுக்கு வீடு வாசப்படி, இல்லையா..? :p
ஹிஹி, வாங்க கைப்பு, உண்மையை சொல்வேன் நல்லதை செய்வேன் வேறோன்றும் தெரியாது. நான் சொல்லவேயில்லைனு உங்களால சொல்ல முடியலை பாத்தீங்களா..? :p
மிரட்டல் எல்லாம் பலமா இருக்கே..? :))
பத்த வெச்சியே பாஸ்டன்.. :p
விகடவுள், கடையை மாத்தவும். வந்த வேலை முடிஞ்சதா..? :p
லாஸ்-ஏஞல்ஸ் ராம், அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)
அபி அப்பா, நாங்க உண்மைய மட்டும் தான் சொல்றோம். போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். :p
கேடி, போக போக தெரியும். :))
k4k, ஹஹா, உங்க வேலை தானா அது..?
சுபா, உங்களுக்கு தெரியுது... :p
ஆமா உத்ரா, வர வர டிராபிக் நெருக்கடி தாங்க முடியல. வீட்டுக்கு ஒரு மரம் வளக்க சொன்னா தலைக்கு ஒரு கார் வாங்கறாங்க. :))
ம-சிவா, அப்டியா..? யார் கூட..? :p
/
ம-சிவா, அப்டியா..? யார் கூட..? :p
/
ஜீவ்ஸ்,கேபிள் சங்கர்,சந்தோஷ்,வெங்கி, ஜோசப் பால்ராஜ், சென்
ரிட்டர்ன்ல
கிருஷ்ணகிரில ஒரு மீட், ஈரோடுல ஒரு மீட், திருப்பூர்ல ஒரு மீட், கோவை மீட் --> மங்களூர்
கேபிள் சங்கர் போட்டோவோட பதிவு போட்டிருக்கார்.
/யார் கூட..?
/
நீங்க எதிர்பாக்கிறமாதிரி எதும் இல்ல
:)
bengaloor pathi rombha intrestingana post
nalla sirichen tks
நானும் ஜோதிலே கலந்துக்க தான் கமெண்ட் லே ஆரம்பம் ok vaa
ம-சிவா, அடடா, பெரிய்ய ரவுண்டப் தான் போல. கொஞ்சம் வருத்தமா சொல்ற மாதிரி இருக்கே. :p
நீங்க சிரிச்சதுல எனக்கும் சந்தோஷம் ஹரிமோகன். :)
சுபா, வெரிகுட். :)
//விகடவுள், கடையை மாத்தவும். வந்த வேலை முடிஞ்சதா..? :p//
கண்ணா... நமக்கு ரெண்டு கடை தான்... ஒண்ணு அம்மாஞ்சியின் அல்வா கடை; தக்குடுவின் அல்வா கடை... :P
//நடுரோட்டில் நின்று கொண்டு மஞ்சுநாத்/பரமேஷா/மஞ்சுளா/ராஜ்குமார் இந்த நாலு பெயரில் ஏதாவது ஒன்னை சொல்லி கூப்பிட்டால் குறைஞ்சது ஐம்பது பேராவது திரும்பி பார்ப்பார்கள்.//
அதிகமா சிரிச்சதுல அஜீரணமே வந்துடுத்து எனக்கு. (அனாவுக்கு அனா...சும்மா ரைமிங்கா இருக்கட்டுமேன்னு சொன்னேன்):-)
சூப்பர்! இனி சிரிக்காம பெங்களூரை பத்தி நினைக்க முடியாதபடி பண்ணிடீங்க.
//பிகரில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!னு//
இப்ப புரியுது... உங்க பிரதர்க்கு inspiration யாருன்னு...ஹா ஹா ஹா
//தர்ம அடிக்கு நான் கியாரண்டி.//
இவ்ளோ வெளிபடையா அனுபவ பதிவு கூட போட்றதுண்டா....?
//நூற்றுக்கு தொன்னூறு சதவீத பெண்கள் லிப்ஸ்டிக் அடித்துக் கொள்கிறார்கள். பத்து சதவீதம் பேர் அன்றைய தினம் லிப்ஸ்டிக் தீர்ந்து போனதால் மறுபடியும் வாங்க கடைகளில் நிற்கிறார்கள்//
நீங்க கேப்டன் ரசிகர்னு நினைக்கிறேன்... statistics தூள் பறக்குதே...
//Porkodi (பொற்கொடி) said...என்ன பெண்களூருக்கு "பிரியா" விடை கொடுக்கற உத்தேசமா?//
யாரு அந்த ப்ரியா????????
வி.கடவுள், அது சரி. :)
மீனா சங்கரன், வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும். நீங்க பெங்களூர்ல இருந்தீங்களா..? :)
வாங்க அப்பாவி(?) தங்கமணி, டோட்டல் டேமேஜ். ப்ரியா யாரு?னு என்கிட்டயே கேட்டு இருக்கலாம். ஆனாலும் எஜமான் பேரை நான் எப்படி சொல்வேன்..? :))
வி.கடவுள், அது சரி. :)
மீனா சங்கரன், வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும். நீங்க பெங்களூர்ல இருந்தீங்களா..? :)
வாங்க அப்பாவி(?) தங்கமணி, டோட்டல் டேமேஜ். ப்ரியா யாரு?னு என்கிட்டயே கேட்டு இருக்கலாம். ஆனாலும் எஜமான் பேரை நான் எப்படி சொல்வேன்..? :))
வி.கடவுள், அது சரி. :)
மீனா சங்கரன், வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும். நீங்க பெங்களூர்ல இருந்தீங்களா..? :)
வாங்க அப்பாவி(?) தங்கமணி, டோட்டல் டேமேஜ். ப்ரியா யாரு?னு என்கிட்டயே கேட்டு இருக்கலாம். ஆனாலும் எஜமான் பேரை நான் எப்படி சொல்வேன்..? :))
//////Porkodi (பொற்கொடி) said...என்ன பெண்களூருக்கு "பிரியா" விடை கொடுக்கற உத்தேசமா?//
யாரு அந்த ப்ரியா????????////
அம்பியின் தங்கமணி பார்க்க வில்லை என்று நினைக்கிறேன்.... பார்த்திருந்தால், அம்பிக்கு வீட்டில் "என்னை வைத்து உன்னோட பதிவுகளில் இன்னும் காமெடி பண்ணுறியா" ன்னு பெரிய மண்டகப்படியே நடந்திருக்கும்...
போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகைய
சேர்த்திருக்கேன்.
நன்றி இளா, btw, ஹைப்பர்லிங்க் வேலை செய்யலை. :))
இப்போ?
"ஆமாவா" தமிழை விட்டுடீங்களே!
நன்றி இளா, நீங்க மறுபடி லிங்கறதுக்கு முன்னாடியே பாத்துட்டேண். :))
ப்ரதீப், அட ஆமா. :)) நன்றி ஹை.
அங்க ஹோட்டல்ல போடற சாம்பார்ல,
என்ன போடறாங்களோ தெரியலே...
ஸ்வீட்டா இருக்குமே...
yepppa...yenna flow ya..yosichu yosichu yezhuthina maadri ela..lovely sense of humor ungalukku, am just reading all ur posts at one shot.
yepppa...yenna flow ya..yosichu yosichu yezhuthina maadri ela..lovely sense of humor ungalukku, am just reading all ur posts at one shot.
Post a Comment