Wednesday, March 10, 2010

உலக இணைய தமிழ் மாநாடு

நான் வழக்கம் போல ஆபிசில் பிசியா(?!) வேலை பாத்துக் கொண்டிருக்கையில் தோழர் ஒளி என்பவரிடமிருந்து ஒரு மின்மடல்.

உலக தமிழ் மாநாடு நடக்க இருக்கிறது. அதில் உலக இணைய தமிழ் மாநாடும் ஒரு சப்ஜக்ட். அவரது நட்பு வட்டத்தில் அண்ணா பல்கலை கழகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியையும் கலந்து கொள்கிறார்கள், இணையத்தில் எப்படி தமிழை வளக்கலாம்னு உங்களுக்கு ஏதேனும் ஐடியா தோணினா சொல்லுங்க, அதை எல்லாம் அந்த மாநாட்டில் தொகுத்து உங்கள் குரலும் ஒலிக்கலாம் என்பது தான் அந்த மின்மடலின் சாரம்சம்.

அதை பாத்ததும் முதலில் எனக்கு மகிழ்ச்சி, ஆனா லேசா சந்தேகம். நம்மை வெச்சு யாரேனும் காமெடி கீமெடி எதுவும் பண்றாங்களோன்னு லேசா ஒரு டவுட்டு.

பின்ன, என்ன மாதிரி பிஸ்கோத்து பதிவரை எல்லாம் மதிச்சு இப்படி யாரு மெயில் அனுப்புவாங்க? நெஜமாவே எனக்கு தான் மெயில் அனுப்பினீங்களா?ன்னு வாய் விட்டு தோழர் ஒளியிடம் கேட்டு விட்டேன். ஆமா!ன்னு அவர் உறுதியா சொன்னதுக்கு அப்புறமா கொஞ்சம் அவகாசம் குடுங்க, மெயிலிடுகிறேன், அல்லது பதிவா போட்டறேன். அப்படியே நம்ம மக்களும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டமா போடுவாங்க (அப்படியே போட்டுட்டாலும்). நீயா? நானா? கோபி மாதிரி எல்லாத்தையும் நான் தொகுத்து தரேன்னு சொல்லிட்டேன்.

எனக்கு தோணின சில பாயிண்டுகள்:

1) என்ன தான் நாம இங்க்லீஸ்ல பீட்டர் விட்டு பதிவெழுதினாலும் தம் தாய் மொழியில் சொல்வதையே நம் மனம் விரும்பும். தமிழை தாய் மொழியா கொண்டவர்கள் கூட, இப்பல்லாம் வரும்! ஆனா வராதுங்கற மாதிரி, பேச தெரியுது, ஆனா படிக்க எழுத தெரியாதுன்னு ஒரு நிலை மெல்ல உருவாகி இருக்கு.

இந்த நிலை மாறனுமா இணையத்தில் தமிழிலும் எழுத நிறைய்ய பேர் முன் வரனும். முதலில் தப்பு தப்பா தான் வரும். காலப் போக்கில் திருத்திக்கலாம். எனது முதல் ஐந்து பதிவுகள் ஏகப்பட்ட எ-பிழையோட தான் இருக்கு. பழசை மறந்திட கூடாதுன்னு இன்னமும் அப்பதிவுகளை அப்படியே தான் விட்டு வெச்ருக்கேன்.

2) பிற மொழி கலப்பில்லாம எழுத பழகனும். அதுக்காக காப்பியை கொட்டை வடி நீர்ன்னும், ஐஸ்க்ரீமை பனிக்கூழ்ன்னும் ரொம்ப செந்தமிழில் செப்பவும் வேண்டாம். இப்ப இந்த பதிவுலேயே எத்தனை ஆங்கில வார்த்தைகள் இருக்குன்னு ஒரு நிமிஷம் எண்ணி பாருங்க (ஆபிஸ், பிசி, ஐடியா, சப்ஜெக்ட்). இதையெல்லாம் தவிர்க்கலாம் தானே..? :)


3) இணைய தமிழில் தொழில் சார் பதிவுகள் இன்னும் நிறைய்ய வரனும். சொல்ல போனா ஒரு சதவீதம் கூட அப்படிபட்ட பதிவுகள் வரலை என்பது தான் நிதர்சனம். அப்ப தான் தொழில் சார் கலைச் சொற்கள் நிறைய்ய வரும், அட மக்கள் யோசனையாவது செய்வாங்க. ஊடகங்கள் முக்யத்துவம் தருகிற அதே மாதிரி நிகழ்வுகளுக்கு இங்கயும் பதிவுகளா முக்யத்துவம் தந்து எழுதறது எந்த வகையில் நியாயம்? என்பது அவரவர் மன சாட்சியை(அப்படினா?) கேட்டுக் கொள்ளட்டும்.

4) இன்று எங்க பாத்தாலும் பெயர்ப் பலகைகளில் ஒரே தமிங்கலம் தான்.

XYZ ட்ரேடிங்க் ஏஜென்சிஸ்
XYZ டிம்பர் டிப்போ
XYZ மெக்கானிக் ஷாப்
XYZ என்டர்ப்ரைசஸ்
XYZ மெர்சண்ட் ஷாப்
XYZ ஸ்டேஷனரி ஷாப்

.......இப்படி சொல்லிண்டே போகலாம். இணையத்தில் எழுதுபவர்கள் இந்த மாதிரி சொற்களுக்கு தகுந்த தமிழ் சொற்களை பயன்படுத்தலாம். தெரிஞ்ச கடை முதலாளியா இருந்தா நயன்தாரா படத்துக்கு கீழே உங்க கடை பெயரை தமிழிலேயே எழுதுங்க அண்ணாச்சி!னு சொல்லிப் பாக்கலாம். அவரும் நயன் ரசிகரா இருந்தா கண்டிப்பா நீங்க சொல்றதை கேப்பாரு.

5) இணையத்தில் கதை எழுதுபவர்கள் "ஆஃவ்சம்"(awesome) என்பதை அற்புதம்! என்றே எழுதலாம். கதை அமெரிக்காவுலயே நடக்கறதா இருந்தாலும் மொழி நடை மாறாமால் தமிழிலேயே எழுத முடியும். ரா.கி ரங்க ராஜனின் மொழிபெயர்ப்புக் கதைகள் இதற்கு சரியான உதாரணம்.

இவ்ளோ தான் என் மண்டைக்கு தோணியவை. உங்களுக்கு இதை விட நல்ல ஆக்கங்கள் தோணலாம், கண்டிப்பா அதை (இந்த முறையாவது) இங்க சொல்லுங்க.

20 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு. யோசித்து சொல்கிறேன்:)!

Li. said...

1 . எளிய தொழில்நுட்பச் சொற்கள் இனைய அகராதி .

2 . பயனர் பெயர் / கடவுச் சொற்களும் தமிழிலில் செய்தல்

3 . தமிழ் யுனிகோடு transliteration முறைக்கு ஒரே மாதிரியான standard.
எ.டு. - தற்பொழுது
'aa' - ஆ,
'a' - ஆ
'ch' - ச் ,

'cha ' - ச
'sa' - ச
'chaa' - சா
'saa' - சா
என்று தற்பொழுது பலவாறாக ஒவ்வொரு எழுத்தையும் எழுத முடிகிறது, இதனை ஒழித்து, ஒரு எழுத்துக்கு ஒரே ஒரு ஆங்கில யுனிகோடு இருப்பது போல் செய்ய வேண்டும் .

4. கைப்பேசிகளிலும் யுனிகோடு தமிழ் உள்ளீடு/வெளியீடு.

மெனக்கெட்டு said...

//
இவ்ளோ தான் என் மண்டைக்கு தோணியவை.
//

நாலு வருஷம் பதிவு போட்டப்புறம் இப்பிடிச் சொன்னா எப்பிடி?

எல் கே said...

//ன்ன மாதிரி பிஸ்கோத்து பதிவரை எல்லாம் மதிச்சு இப்படி யாரு மெயில் அனுப்புவாங்க?//

adakam???

குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

நல்ல முயற்சி
1 . எல்லா வலைதளங்களிலும் தமிழ் மொழி சேவை ( tamil page option) பிரிவு கொடுக்கலாம் ( முடியாதபட்சத்தில் தமிழ் அல்லது தமிழ்நாடு சார்ந்த இணையங்களுக்கு தரலாம் )
2 . பள்ளி மற்றும் கல்லூரியின் தளங்களை தமிழில் தர ஆலோசனை செய்யலாம்
3 . தினமும் உபயோகிக்கும் பொருட்களின் தமிழ் வார்த்தைகளை, நடை முறை படுத்தலாம்
4 . அரசு துறை சார்ந்த படிவங்களை தமிழில் கட்டாய படுத்தலாம் ( reason is the tamil type writing works may be get an advantage)

இப்போதைக்கு இவ்வளவு தான் இந்த குட்டி மண்டையில் தோணியது.

sriram said...

"மீ த ஃபர்ஸ்ட்டை” Ban பண்ணலாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

//"மீ த ஃபர்ஸ்ட்டை” Ban பண்ணலாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

அடப் பாவிகளா.. மீ த‌ ஃபர்ஸ்ட்டு வர முடியலங்கற கடுப்புல அதை தடை (ban) செய்யணும்னு சொல்றீங்களா? அடுக்குமா பாஸ் இது?

அதை ஏன் கேக்கறீங்க அம்பி.. என்னுடைய ஸ்கூல்மேட்ஸ், காலேஜ் மேட்ஸ் 90% பேருக்கும் படிக்க தெரியாது, இத்தனைக்கும் அவங்க +2 வரை தமிழ் படிச்சுருக்காங்க! இதுல என்னை பாத்து "OMG! How do you write so much in Tamil?!! I thought you didnt know!"னு கேள்வி வேற. தலைல அடிச்சுக்கறதை தவிர ஒண்ணும் செய்ய முடியல.

mightymaverick said...

உலக தமிழ் மாநாடு நடத்தும் தமிழக அரசு முதலில் தமிழகத்துக்கானஇணையதளத்தை தமிழில் ஏற்றம் செய்ய வேண்டும்.

விக்கிபீடியாவிலும் கூகுளிலும் தமிழ் மொழியில் தேடும் வாய்ப்புகள் இருக்கும் போது இணையத்தில் தமிழகத்தினை பற்றி அறிய ஒரு தேடுதல் இயந்திரம் இல்லை. அண்ணா பல்கலைகழக மாணாக்கர்கள் எதிலெதிலோ ஆராய்ச்சி செய்து பட்டம் வாங்கியவுடன் அமெரிக்க வேலை தேடி ஓடி விடுகிறார்கள் (அனைவரையும் குறிப்பிட வில்லை; ஆனால் 90% இப்படி தான் நடக்கிறது.) அவர்களுக்கு இணையத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏதேனும் ஆராய்ச்சி செய்தால் அவர்கள் ஆராய்ச்சிக்கான செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளலாம். சுஜாதா ஒரு முறை ஒரு கட்டுரையில் அண்ணா பல்கலைகழக மாணாக்கர்கள் முயற்ச்சியில் முற்றிலும் தமிழில் வடிவமைக்கப்பட்ட லினக்ஸ் உள்ளதாக எழுதி இருந்தார். இப்படிப்பட்ட முயற்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.

இப்போதைக்கு இவ்வளவு தானப்பா தோணினது... கூடிய சீக்கிரம் இன்னும் சொல்லுறேன்...

தக்குடு said...

இன்னுமாடா இந்த ஊர் உன்னை நம்புது????...:)

ambi said...

வாங்க ரா.ல. நான் எஸ்கேப்புனு சொல்ல வரீங்க, இல்லையா..? :))

வாங்க ஒளி, கைப்பேசி உள்ளீடு ஏற்கனவே வந்தாச்சுனு சொல்றாங்க.

அகராதி நல்ல யோசனை.

யுனிகோடு - கொஞ்சம் சிக்கல். தனி விசைபலகை இல்ல தயார் செய்யனும்? :))

நானும் ரெம்ப மெனக்கெட்டு யோசிச்சு பாத்தேன். இவ்ளோ தான் தேறிச்சு. ;))

எல்கே, ஆமா, ஆமா. இதையும் தமிங்கலத்துல தான் எழுதனுமா? என்ன சோப் போட்டு குளிக்கறீங்க..? தமன்னா மாதிரி ரெம்ப கலரா இருக்கீன்களேன்னு கேட்டேன். ஹிஹி. :))

அடடா, கு-சா, இத இததான் எதிர்பாத்தேன். :))

பாஸ்டன் ஸ்ரீராம், கேடிக்கு ஆப்படிக்கும் உமது நுண்ணாரசியலை பாராட்டுகிறேன். :))

பொற்கொடி, உன்னை பாத்து அவங்களுக்கு பொறாமை. :p

மைட்டி மேவரிக், தேடுபொறி தமிழில் இருந்து என்ன பயன்..?

எங்கு, எப்படி தேடுகிறோம் என்பதை விட எதை தேடுகிறோம் என்பது தானே முக்யம்..? அங்கயும் நித்யா வீடியோனு தேடினா என்ன செய்யறது..? :))

கூகிளில் ஏற்கனவே தமிழில் தேடலாமே..?

அண்ணா பல்கலை மட்டுமல்ல, இன்னும் நிறைய ஐஐடிகளும் அப்படி தான். :))

புத்திக்கும் வயிற்றுக்கும் போட்டி வந்தால் எப்போதும் வயிறே ஜெயிக்கும். :))

தக்குடு, டாய், கடைல வியாவரத்த கெடுக்காத, ஓடி போயிடு. :))

எல் கே said...

@ambi

officela irunthu tanglishthan. veetla irunthunu tamila varum

Dubukku said...

//தக்குடுபாண்டி said...இன்னுமாடா இந்த ஊர் உன்னை நம்புது????...:)//

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))>>>>>>

ambi said...

டுபுக்கு, இது மட்டும் கரக்ட்டா உங்க கண்ணுல பட்டுடுமே! :))))

முனைவர் இரா.குணசீலன் said...

அட!!

நல்ல குறிப்புகள் தானே..
இதே சிந்தனைகளை உள்ளீடு செய்து கட்டுரைச்சுருக்கம் அனுப்பலாமே..

இன்றே கட்டுரைச்சுருக்கம் அனுப்பக் கடைசி நாள்..

ambi said...

//கட்டுரைச்சுருக்கம் அனுப்பலாமே//

வாங்க முனைவர் குணா,

எங்க அனுப்பனும்..? யாருக்கு அனுப்பனும்..? மின்மடல் முகவரி எதாவது..?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அம்பி,
தமிழக அரசு சேவைத் தளங்கள் முதலில் தமிழில் ஒழுங்காக இயங்க வேண்டும்;விற்பனை வரித் தளத்திலிருந்து மாத மதிப்புக் கூட்ட வரித் தளங்கள் வரை-VAT-தமிழில் ஒழுங்காக இயங்குவதில்லை;அவை எல்லாம் தமிழில் மட்டும் இயங்குதாகவும்-ஒழுங்காக-ஆங்கிலத்தில் வேண்டுவோருக்கு தனியாக ஒரு சிறு கட்டணமும் வசூலிக்கலாம்-வைத்தருக்கலாம்.
அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் தமிழ் உண்மையில் இயங்கு மொழியாக்கலாம்.நாம் உட்பட யாரும் ஆங்கிலத்தில் உரையாடினால்தான் மாவட்ட ஆட்சியாளரே காது கொடுக்கிறார்..விவேக் ஒரு படத்தில் போக்குவரத்துக் காவலரிடம் விடுமுறை விண்ணப்பம் ஒப்பிப்பாரே,அது கிட்டத்திட்ட உண்மையில் நடக்கிறதுதான் போல...
அனைத்துப் பள்ளியிலும் 8 ஆம் வகுப்பு வரையாவது தமிழ் ஒரு மொழிப்பாடமாகவாவது கட்டாயமாக இருக்க வேண்டும்.
பல்கலைக்கழகப் பாடங்கள் தமிழில் படிக்க ஏதுவாக தமிழில் தரமான தொழில்நுட்பப் புத்தங்கள் வரவேண்டும்;அவற்றை அரசு ஊக்குவிக்க வேண்டும்..

எல்லாவற்றிற்கும் மேலாக நமது குழந்தைகளை தமிழில் படிக்க,பேச,எழுத ஊக்குவிக்க வேண்டும்..அம்பியின் அம்பிக்கு அம்பி அப்பாவா அல்லது டா(ஏ)டி யா?

:)))

ambi said...

அறிவன் ஐயா, தங்களின் விரிவான பின்னூட்டம் கண்டு அகமகிழ்ந்தேன். எல்லா படிவங்களும் தமிழில் உள்ளன. ஆனால் பயன்படுத்துவோர்(என்னையும் சேர்த்து தான்) மிக கம்மி என நினைக்கிறேன்.

அப்ப்பா என அழுத்தம் திருத்தமாக கூப்பிடுகிறான். பள்ளி சென்றபின் டாடி என மாத்த மாட்டான் என நம்புகிறேன். :)

நம்பிக்கை தானே வாழ்க்கை! :))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அம்பி,

{எல்லா படிவங்களும் தமிழில் உள்ளன. ஆனால் பயன்படுத்துவோர்(என்னையும் சேர்த்து தான்) மிக கம்மி என நினைக்கிறேன். }
அவ்வாறில்லை;என்னுடைய அனுபவத்தின் மூலமே நான் பதிலிறுத்தேன்.மதிப்புக் கூட்டு வரிக்கான மாதாந்திர படிவத்தை இணையத்தில் உபயோகிப்போருக்கு நான் சொல்வது தெரிந்திருக்கலாம்..
தமிழ் வடிவப் பக்கங்களில் பல உசாத்துணைகள் வேலை செய்வதில்லை;அழுத்தினால் முட்டுச் சந்தில் நிற்கிறது இணையப்பக்கம்!ஆனால் ஆங்கில வழிப் பக்கங்களில் இந்த தொந்தரவுகள் இல்லை..

தாய்வழிக் கல்வியில் கற்காத குழந்தைகள் தாய்மொழியில் சிந்திக்கவும் மறக்கின்றன;இது இயல்பான மூளைத் திறனையும் பாதிக்கின்றது..

இதை ஒரு எளிய உதாரணம் மூலம் நான் பலமுறை பலரிடம் விளக்கியிருக்கிறேன்..

then என்ற வார்த்தைக்கான பிரயோகங்கள் எவ்விதம் அமையும் என்று கேட்டபோது பலர் அதன் நேர்மறை உபயோகமான பிறகு' என்ற பொருள் வரும் சாத்தியங்களைத்தான் குறிப்பிடுவார்கள்..ஆனால் அந்த வார்த்தைக்கு அப்பொழுது' என்ற பொருளில் எதிர்மறைப் பிரயோகமும் உண்டு என்பதை பல ஆங்கிலவழிக் கல்வியில் படித்த என்னுடைய தோழர்கள்,தோழிகள் சுட்ட மறந்திருக்கிறார்கள்..

இவை போன்ற காரணங்கள் தாய்வழிக் கல்வி இல்லாத காரணமே என்பது என் கணிப்பு.

ஆங்கிலம் இன்றைய பொருண்மை உலகியலில் அவசியமே.ஆனால் தமிழின் இழப்பில் ஆங்கிலம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.English at the cost of tamil is not acceptable.

-நீண்ட பத்தியாகி விட்டது,மன்னிக்கவும் !
:)
உங்களை அங்கிளாக்கியதால் என்னை ஐயாவாக்கி பழி தீர்த்து விட்டீர்களா?
:))

ambi said...

அறிவன் ஐயா (பார்ரா, மறுபடியும்?),

அருமையான விளக்கங்கள். மறுப்பேதும் இல்லாமல் ஒத்துக்கறேன்.

எப்போதும் அறிவன் சார் என்று தான் விளிப்பேன்(பழைய பதிவுகளை பாருங்க). இந்த பதிவுலயாவது கொஞ்சம் தாய் மொழியில் கூவுவோம்னு தான் ஐயா. :)

வேற யாராவதா இருந்தா "என்னடா அம்பி, என்னை எதுக்கு ஜயானு கூப்புடற?னு? கேட்டு இருப்பாங்க. :p

நீங்க கொஞ்சம் தெளிவா இருக்கீங்க. :))

mightymaverick said...

//புத்திக்கும் வயிற்றுக்கும் போட்டி வந்தால் எப்போதும் வயிறே ஜெயிக்கும். :))//

எல்லோரும் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பங்களை தேடி ஓடுவதினாலேயே வயிறுவெற்றி பெறுகிறது... சந்தர்ப்பங்களை உருவாக்கும் போது இந்த நிலை மாறிவிடும்... ஆனால் யாரும் சந்தர்ப்பங்களை உருவாக்குவதில் முயற்சிசெய்வதில்லை. விழுந்து விடுவோமோ என்கிற பயம் தான் இதற்கு காரணம்... என்னுடைய ஒரு பதிவில் எழுதிய ஒரு வாசகத்தினை இங்கே கொடுக்கிறேன்... "என்றுமே முயற்சி செய்யாமல் எனக்கு ஆதரவு இருந்தால் சாதித்திருப்பேன் என்று சொல்லுவர்களை விட முயற்சி செய்து ஆதரவு இல்லாமல் தோற்றவர்கள் மேலானவர்களாய் இருப்பார்கள்."

//தக்குடு, டாய், கடைல வியாவரத்த கெடுக்காத, ஓடி போயிடு. :))//

போணியாகாத சரக்கை கடைல வச்சுகிட்டு வியாபாரத்தினை கெடுக்காதேன்னா எப்படி அம்பி???