Monday, November 02, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர்

புது பதிவு போட இப்பல்லாம் ரொம்பவே மெனக்கட வேண்டியுள்ளது. எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் நேரம் வாய்க்கறதே இல்லை.

தினமும் தவறாம வந்து பார்ப்பவர்களுக்கும், இவனுக்கெல்லாம் ஏன்டா பாலோயர்களா ஆனோம்? என நொந்து கொள்பவர்களுக்கும்:

உங்களின் ஒத்துழைப்புக்கும், புரிந்துணர்வுக்கும் ரொம்ப நன்றி.(மைக் கெடச்சா போதுமே?)
***********************************************************************************
என் அருமை மகனுக்கு மியுசிக் ரொம்ப பிடிக்கறதே என்பதாலும், தங்கமணி குடுத்த குடைச்சலாலும் பேட்டரி போட்டு இசைக்கும் ஒரு பியூனோவை எங்கள் ஏரியாவில் உள்ள என் ஆஸ்தான கடையில் முடிந்த வரை பேரம் பேசி வாங்கி வந்தேன்.

ஜுனியருக்கு என்ன தோணியதோ தெரியலை, பியூனோவை கடம் மாதிரி தட்ட ஆரம்பித்து விட்டான். பின் அதை கவுத்தி போட்டு மிருதங்கமாகவும் வாசிக்க ஆரம்பித்து விட்டான். தெரிஞ்சு இருந்தா கடமே வாங்கி குடுத்து இருக்கலாம். ஒரு பியானோ தப்பித்து இருக்கும்.
***********************************************************************************
ப்ரைம் டைமில் பாடாவதி சீரியல்களுக்கு நடுவில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருவதால் எங்கள் வீட்டில் ஒட்டுமொத்த ஆதரவும் பெற்று விட்டது. ஒரு மணி நேரம் ரிமோட் கன்ட்ரோலை மறந்து நாங்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. சீனியர்களை விட ஜுனியர் குழந்தைகள் மிக கடினமான பாடல்களை மிக எளிதாக பாடி வருகிறார்கள்.

விஜய் டிவியின் மிகப் பெரிய பலமே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவர்கள் வடிவமைக்கும் கண்கவர் செட்டுகளும் ஒரு காரணம். குடுத்த காசுக்கு மேலேயே ஆர்ட் டைரக்டர் கூவி இருப்பார். (கலைஞர் டிவியில் மானாட மயிலாட நீங்கலாக( அதுவும் நமீதா வருவதால்) மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏதோ கோவில் மண்டபத்தில் செட் போட்டது போல இருக்கும்.)

இந்த நிகழ்ச்சிக்கு மற்றுமொரு பலம் இப்பொழுது வாய்த்துள்ள நடுவர்கள். அதுவும் பாடகர் மனோ நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் ரொம்பவே அருமையா இருக்கு.

சில துளிகள்:

1) பாடுகிற குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர் தான் ரொம்ப டென்ஷனாகிறார்கள். இந்த கொம்பு சீவி விட்டு பந்தயத்துக்கு அனுப்பும் மனப்பான்மை என்று தான் மாறுமோ?

2) ஆறிலிருந்து பதினான்கு வயது வரை என அறிவித்து இருப்பதால் மழலை மாறாத குழந்தைகளும் உள்ளன. எலிமினேஷன் என அவர்களை நோகடிப்பது மிகவும் வருத்தமிகு செயல். இதை தவிர்த்து இருக்கலாம்.

3) ஸ்பாட் செலக்ட் ஆகும் குழந்தைகள் மேல் சாக்லேட் மழை பொழிவது போல செட் செய்து இருக்கிறார்கள். எல்லாமே காட்பரீஸ், கிட்காட் என பெரிய்ய பெரிய்ய சாக்லேட் பட்டைகள். தொம் தொமென குழைந்தைகள் தலையில் விழுகிறது.

"குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை" என பதிவர்கள் யாரேனும் பின் நவீனத்துவமாக பதிவிடுமுன்னர், எக்லஸ், லாக்டோ கிங்க் போன்ற சின்ன சின்ன சாக்லேட் மழை பொழியுமாறு செய்தால் விஜய் டிவிக்காரர்கள் தப்பித்தார்கள். (வன்முறையில் கூட பெரிசு, சின்னதுன்னு இருக்கா? என்றெல்லாம் பதிவு வராது என நம்புகிறேன். :)

இப்பலாம் நடுவர் பேச ஆரம்பிக்கும் முன்னரே இந்த குழந்தைக்கு நல்ல குரல் வளம், செம எனர்ஜி, ரெண்டு ஸ்கேல் சுருதி கம்மியா எடுத்து இருக்கலாம், ரெண்டாவது சரணத்துல தாளம் கொஞ்சம் மாறி விட்டது! என தங்கமணி டெக்னிக்கலா பேச ஆரம்பித்து விடுகிறார்.

அதோடு விட்டா பரவாயில்லை, நீங்க என்ன நோட் பண்ணீங்க?னு என்னை கேக்கனுமா?

1) தொகுப்பாளினி வில்லு புகழ் திவ்யா ஆரம்பத்தில் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருந்தார். இப்ப தேறி விட்டார்.

2) பெரும்பாலும் பழுப்பு, மருதாணி கலர் என லைட் ஷேடுகளிலேயே தம் உடையை தேர்ந்தெடுக்கிறார்.

3) உடை கலருக்கு மேட்சாக லைட் ஷேட் லிப்ஸ்டிக் தான் போடுகிறார்.

4) பேசி முடித்த பின், இடது புறமாக தலையை சாய்த்து கொள்கிறார்.

5) தலைமுடியை கட் செய்து ஸ்ட்ரெய்ட்டனிங்க் செய்து இருக்கிறார்.

- என நானும் என் பங்குக்கு சில டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கி விட்டேன். :)

30 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

தங்கமணிக்கு,
பதிவின் கடைசிப் பகுதியை கவனமாகப் படிக்கவும் !!!!!

(பத்தியாச்சா இல்லையா??!!!)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பேருதான் அம்மாஞ்சி,நோட் பண்றதெல்லாம் கும்மாஞ்சி மேட்டரா இருக்கே !

பிரகாஷ் said...

அந்த சின்ன பையன் ஸ்ரீகாந்த் எல்லா பாட்டும் நல்லா பாடுறான்

CS. Mohan Kumar said...

அம்மாஞ்சி.. கலக்கரேல் போங்கோ.. என்னடா ஒரே சீரியசா இருக்கேன்னு பார்க்கும் போது கடைசியில் மேட்டேருக்கு வந்துடீங்க. திவ்யா.. முதல் தடவை பார்த்தால் என்னவோ போல் இருக்கும்; ஆனால் பார்க்க பார்க்க பிடிக்கும் ரகம்.

இன்று தான் முதல் முறை -comment போடுகிறேன், சில தினங்கள் முன் தான் ஒரு நண்பர் மூலம் உங்கள் blog பற்றி அறிந்தேன். (நண்பர் ஆணா பெண்ணா என நீங்கள் கேட்பது தெரிகிறது; பதில் உமது ஊகத்துக்கே)

யாமும் ஒரு blogger-தான். நேரம் கிடைக்கும் போது நம்ம blog பார்த்துட்டு ரெண்டு வரி எழுதுங்க.

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/

pudugaithendral said...

தங்கமணிக்கு,
பதிவின் கடைசிப் பகுதியை கவனமாகப் படிக்கவும் !!!!!

பத்தியாச்சா இல்லையா??!!!)//

ரிப்பீட்டு. சத்தம் ஹைதை வரை கேக்கணும் அம்மணி.

:)))))))

சென்ஷி said...

அம்பி.. இங்க வந்திருக்கற பின்னூட்டத்தைப் பார்த்தா யாருக்குமே உங்களைப் பத்தி சரியா தெரியலை போலருக்குது :)

ஆயில்யன் said...

//பாடுகிற குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர் தான் ரொம்ப டென்ஷனாகிறார்கள். இந்த கொம்பு சீவி விட்டு பந்தயத்துக்கு அனுப்பும் மனப்பான்மை என்று தான் மாறுமோ?///

கரீக்ட்டு ! எதோ ஒரு கட்டாயத்துக்காக எம்புட்டு டென்ஷன் ! :(

Sridhar V said...

குட். நமக்குப் பிடிச்ச ப்ரோகிராம் பத்தி பதிவு போட்டதுக்கு.

தொகுப்பாளினி திவ்யா தான் ஒரு மலையாளின்னு போனவாரம் சொன்னவுடன அம்பிகிட்டேந்து பதிவு. ஆனாலும் உம்ம மலையாள சேச்சிங்க பாசம் தாங்கமுடியலயே.

sriram said...

//தினமும் தவறாம வந்து பார்ப்பவர்களுக்கும், இவனுக்கெல்லாம் ஏன்டா பாலோயர்களா ஆனோம்? என நொந்து கொள்பவர்களுக்கும்//

புரிஞ்சா சரி.. (உங்கண்ணனுக்கும் சேத்துத்தான் சொல்றேன்..)

உங்களோடு நான் - சாரி உங்க கருத்திலிருந்து வேறுபடுகிறேன், ஸ்ரீகாந்த் - ஒரு நல்ல Entertainer but not a singer. நல்ல ஞாபக சக்தி மற்றும் தாள ஞானம். மற்றபடி அந்த சிறுவன் பாட்ட நல்லா படிக்கிறான்.

அம்பி, ஒரு மலயாளப்பொண்ணு தூள் கெளப்புதே - அதப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே, ஒருவேளை பதினெட்டு வயசுக்கு மேல இருந்தாத்தான் உங்க கண்ல படுமோ?
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

தினமும் தவறாம வந்து பார்ப்பவர்களுக்கும், இவனுக்கெல்லாம் ஏன்டா பாலோயர்களா ஆனோம்? என நொந்து கொள்பவர்களுக்கும்//

I agree with sriram.. Neengalaam blog update pannalaina yenakallam yeppadi dhan neram poogum?

வல்லிசிம்ஹன் said...

அம்பி, ஜய டிவி பார்க்கிறதில்லையா. அங்க எச்பிபி கலக்குகிறாரே. வரவங்களும் ரொம்பவே நல்லாப் பாடறாங்களே.
விஜய் டிவி ல எல்லாம் நல்லாத்தான் நடத்தறாங்க.

ஆனால் குழந்தைகள் வாயில் பெரிய அநாகரீகமான வார்த்தைகள் வரும்போது அவ்வளாவா மனசு ஒட்டவில்லை..

ambi said...

ஹலோ அறிவன் சார், நகைகள் 'பற்றிய' பதிவுக்கு வந்தீங்க. அப்புறமா மறுபடியும் பத்த வெக்க வந்தாச்சா? வெரிகுட். :))

@உங்களோடு நான், ம்ம், பாஸ்டன் ஸ்ரீராம் ஏதோ சொல்லி இருக்கார் பாருங்க. :)

மோகன் குமார், வாங்க, உங்க கருத்துக்கு நான் ஆமாம் போட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும். எனவே மீ தி கப்சிப். :))
உங்க நண்பரை நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க. :p

புதுகை தென்றல், என்ன ஒரு வில்லத்தனம்..? :))

ஆமா சென்ஷி, நான் ஒரு அப்பாவின்னு ஏதோ உங்களுக்காவது தெரிஞ்சு இருக்கே! :p

ஆமா ஆயில்யன். ரொம்ப அடக்கி வாசிச்ச மாதிரி இருக்கே. :p

ஸ்ரீதர், அட அப்படியா? எனக்கு முதல்ல இருந்தே ஒரு சம்சயம். இப்ப கிளியராயிட்டல்லோ! :))

அந்த எபிசோட் நான் பாக்கலை. மானேஜர்கள் ஒழிக.

Geetha Sambasivam said...

//- என நானும் என் பங்குக்கு சில டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கி விட்டேன். :)//

அதானே, டெக்னிகல் பாயிண்டா? டெக்னிகல்???? வஸ்த்ரகலாவை அனுப்புங்க, இல்லாட்டி த.ம.வுக்குத் தனி மெயில் போகும்!

ஆயில்யன் said...

//சென்ஷி said...

அம்பி.. இங்க வந்திருக்கற பின்னூட்டத்தைப் பார்த்தா யாருக்குமே உங்களைப் பத்தி சரியா தெரியலை போலருக்குது :)//

கம்முன்னு வந்துட்டு கம்முன்னு போகப்பிடாதா அவ்வ்வ்வ் :)

ஆயில்யன் said...

//தொகுப்பாளினி திவ்யா தான் ஒரு மலையாளின்னு போனவாரம் சொன்னவுடன அம்பிகிட்டேந்து பதிவு. ஆனாலும் உம்ம மலையாள சேச்சிங்க பாசம் தாங்கமுடியலயே.//

ஹைய்:))))

CS. Mohan Kumar said...
This comment has been removed by the author.
Dinesh C said...

Neenga adukki vitta technical pointsku prize kidaichu irukanume annatha!

Anonymous said...

ambi,vijay t.v ,art director set nalla potrundhalum,art director lighting konjam brightaa koduthirkkalam.etho discotheque rengil irupadhal,compere face matrum dress combinations,clearaaga illai.juniors talent sollave vendam,huge talent.adharku pinnal avargalum matrrum parentsin munaippum abbaram.
naangal "big boss" parpom.andha format thamizhil vandhal,inmatesaaga yaar yaarai podalam enru veetile discussion vandhadhu.imagine controversial personalities under one roof for 24 hours@90 days with 32 cameras sorrounding you...sema masala...
nivi.

sriram said...

என்னோட கமெண்டுக்கு முன்னால இருக்குற கமெண்ட் வரைக்கும் பதில் போட்டுட்டு அதுக்கப்புறம் பதில் போடாத்துக்கு ஏதாவது உள்குத்து காரணம் இருக்கா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ambi said...

//அதுக்கப்புறம் பதில் போடாத்துக்கு ஏதாவது உள்குத்து காரணம் இருக்கா?
//

@sriram, No, No, nothing at all. Haven't got time and moreover my office system(pls note this point) has developed with some hardware issues now. That's it.

(ssspaa, eppadiyellam yosikaraanga paa, mudiyala) :))

ambi said...

ஸ்ரீராம், நீங்க என்ன ஊதினாலும், அவரு காதுல விழவே விழாது. ஸ்ரீகாந்த் கொஞ்சம் வளரனும். (அவரை பத்தி நான் ஒன்னுமே சொல்லலையே!). அல்கா பத்தி சொல்றீங்களா? தங்கமணியின் பேவரட் பொண்ணு, எனக்கும் தான். பைனல்ல வரும் பாருங்க. :))

மிட்டு, அது சரி. உங்களுக்கு தெரியுது, என் மானேஜருக்கு தெரியலையே! :))

வல்லி மேடம், ஜெயா - எஸ்பிபி நிகழ்ச்சியும் பாக்கறதுண்டு. ஆம, சில பாடல்கள் குழந்தைகள் பாடும் போது சங்கடமா இருக்கு.

கீதா மேடம், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்.... :))

மோகன் குமார், சரி விடுங்க, நல்லாவே கொளுத்தி போடறிங்க. :)

தினேஷ், ஆமா, ஆமா, பலமா கிடைச்சது. :p

நிவி, சரியா சொன்னீங்க. லைட்டிங்க் மணிரத்னம் படம் மாதிரி இருக்கு. பிக் பாஸா..? வீட்ல ஹிந்தி நிகழ்ச்சிகள் பாக்கறதில்லை. நேரமும் இல்லை. :))

மங்களூர் சிவா said...

நீங்க அடுக்கிய பாயிண்ட் எல்லாம் படு சூப்பர்!
:))

sriram said...

///ஸ்ரீகாந்த் கொஞ்சம் வளரனும். (அவரை பத்தி நான் ஒன்னுமே சொல்லலையே!)///

அம்பி- ஸ்ரீகாந்த் பத்தி நான் சொன்னது - உங்களோடு நான் - என்ற பெயரில் பின்னூட்டம் இட்டவருக்கு - மூணாவது கமெண்டா இருக்கு பாருங்க..

Kavinaya said...

//- என நானும் என் பங்குக்கு சில டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கி விட்டேன். :)//

இந்த விஷயத்தில் உங்க technical expertise தெரிஞ்ச விஷயம்தானே :)))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அப்பப்போ கண்ணுல் பட்ற பதிவுல(அதாவது நீங்க மாட்டிக்குற வாய்ப்பு இருக்குற பதிவு!) எல்லாம் வந்துகிட்டுதானே இருக்கேன்..

:))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஏதோ நம்மால முடிஞ்சது !

குப்பன்.யாஹூ said...

this programme is now good due to Mano and villu Divyaa only, chithra is waste, they can depute harini or magathi in place of chithraa.

தமிழன்-கறுப்பி... said...

//தொகுப்பாளினி வில்லு புகழ் திவ்யா ஆரம்பத்தில் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருந்தார். இப்ப தேறி விட்டார்.//
ஆனாலும் இவங்களோட காம்பியரிங்க் எனக்கு புடிக்கல,2006 ல சின்மயி நல்லா செய்திருப்பாங்க..

ambi said...

வாங்க சிவா, நானும் ரவுடி தான் நீங்களும் சொல்லித் தான் பாக்கறீங்க, நாங்க நம்பறதாயில்லை. :))

ஸ்ரீராம், ரைட்டு விடுங்க. :)

கவி நயா அக்கா, அதானே! நாமளும் டெக்னிக்கலா ஸ்ட்ராங்க்னு தெரியப்படுத்தலைனா எப்படி? :))

அறிவன் சார், இத ஒரு பொது சேவை மாதிரி செய்யறீங்க போல. நடத்துங்க. :))

குப்பன் யாஹோ, ம்ம், ஹரிணி நல்ல சாய்ஸ். சின்ன குழந்தைங்க, ரொம்ப ஷார்ப்பா கமண்ட் குடுத்தா கண்ல தண்ணி வந்துடும்னு சித்ரா சாப்ஃட்டா இருக்காங்க. அவங்க குணமும் அதே. :))

தமிழன், பாக்கா பாக்க புடிக்கும்னு மோகன் ஜொள்ளி இருக்கார் பாருங்க. :p

Frankee said...

Naanum regulara paarkiren super singer. Ennamo chinmaye or DD ponnumpodhu irukkira kalakalappu indha ponnu kitte ille. Note panra alavukka onnum ille Ammanchi. Koncham tastee mathikkongo (thangamani enna sonnaga unga commentukku).

Chitra ma is very cute. she is very opt to this programme.

Indha vaaram paartheengala. Deepak ode DD panrange. koncham anavishya pechukkal irundhalum nallathan irukku.