Monday, August 24, 2009

யேர் இந்தியா

க்ரிப்டாலஜி படித்து சைடு போசில்(அப்போதைய) அரவிந்தசாமி சாயலில் இருக்கும் என்னை, இன்டர்போலுக்கு ஆலோசனை வழக்குவதற்காக என் துறைத் தலைவர் டெல்லிக்கு அனுப்பினார் என நான் இந்த பதிவை ஆரம்பித்தால் உங்களில் பலருக்கு தொண்டையில் கிச்கிச் வந்து, ஹக்க்க் என துப்பி விடுவீர்கள் என எனக்கு தெரியும்.

காலாவதியாகி விட்ட எங்கள் கம்பெனியின் பிராடக்ட் லைசன்ஸை இந்த ரிசிஷன் நேரத்தில் புதுப்பிக்கலாமா? வேணாமா? என மண்டையை தடவியபடி கிளைன்ட் யோசிப்பதற்குள், அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் பிராடக்டை வாங்கினால் ஈரேழு பதினாலு லோகங்களில் உள்ள செய்திகள் எல்லாம் உங்கள் லேப்டாபிலேயே அருவியா கொட்டும். உங்கள் பிசினஸில் தேனாறும் பாலாறும் ஓடும்! என அள்ளிவிடும் வழக்கமான சீப் டிரேய்னர் தன் மனைவியின் ரெண்டாவது பிரசவத்துக்கு போய் விட்டதால், பிராடக்ட் பில்டப் குடுக்க நீ தான் டெல்லிக்கு போகனும்! என என் துறை தலைவர் எனக்கு கொம்பு சீவி விட்டபடியால், நானும் வழக்கமாக எங்கள் ஆபிசில் டிக்கட் புக் பண்ணி தரும் ஹெச்ஆர் அட்மின் உதவியை நாடினேன்.

எப்பவோ எனக்கும் அவனுக்கும் நடந்த ஒரு வாய்க்கால் தகராறை மனதில் வைத்து, யேர் இந்தியாவுல மட்டும் தான் டிக்கட் இருக்கு, இந்த பிடி! என டிக்கட்டை கையில் குடுத்தான். ஏன் இப்படி?னு நான் கேட்டதுக்கு, நாம் எல்லோரும் இந்தியர்கள், எனவே இந்திய பொருளையே வாங்குவோம்! என எழுந்து நின்னு உறுதிமொழி எடுக்கறான். விஜய் மல்லய்யா கூட இந்தியர் தான்டே! என நான் சொன்னதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

எனக்கு யேர் இந்தியாவில் டிக்கட் கிடைத்ததில் தங்கமணிக்கு அளவில்லா சந்தோஷம். உங்களுக்கு பிரேக் பாஸ்ட் ஊட்டிவிட்டு, பாட்டு பாடி, கதை சொல்லி தூங்க வைத்து பத்ரமா டெல்லியில் கொண்டு போய் விடுவாங்க! கவலையே படாதீங்க! என தங்கமணி தன் பங்குக்கு வெந்த புண்ணில் வெங்காயத்தை தடவினார். நல்லா இருடே!

உங்களுக்கு லால் பகதூர் சாஸ்த்ரியை தெரியுமா? இந்திய பிரதமராக இருந்தாரே! அவர் பிரதமராக பதவியேற்ற அதே வருஷம் யேர் இந்தியாவிலும் நிறைய்ய பேர் யேர்ஹோஸ்டஸ்ஸாக டூட்டியில் சேர்ந்தார்களாம். அதுக்கப்புறமா புது அப்பாயின்மெண்டே போடலை போலிருக்கு.

ரயிலா இருந்தா பயணிகள் சார்ட் எல்லாம் ஒட்டுவாங்க. லிஸ்ட் பாத்து அண்டை அயலார் நட்புறவை வளக்கலாம், வேற ஒன்னுமில்லை. இங்க அத மாதிரி லிஸ்ட் எல்லாம் ஒட்ட மாட்டாங்க போல. பிளைட்டில் அவ்வளவாக கூட்டமில்லை. பக்கத்து சீட்டில் ஆள் அமைவதெல்லாம் இறைவன் குடுக்கும் வரம்! என உறுதியாக சொல்வேன். என்ன தான் யேர் இந்தியாவில் டிக்கட்டை கிழித்து குடுத்தாலும், அன்னிக்கு கடவுள் ரொம்பவே கருணை காட்டி இருந்தான். குதிரை வால் கொண்டை, காதில் பிளாட்டினம் ரிங்க், டெனிம் டி-ஷர்ட், த்ரீ-போஃர் என அழைக்கப்படும் முக்காலே அரைக்கால் ஜீன்ஸ், கையில் ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம்.

இந்த பெண்கள் ஏன் தான் ஷெர்லாக் ஹோம்ஸையும், ஹாரி பாட்டரையும் கட்டி கொண்டு அழுகிறார்களோ? எனக்கு தெரிந்ததெல்லாம் என் அருமை மகன் உண்ணும் செர்லாக் தான். (அதையும் இப்பலாம் துப்பி விடுகிறான், ஃபேளவர் மாத்தனும் போல.)

இந்த கதையின் முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் வரும் பாருங்கள்! அங்க தான் ஷெர்லாக் ஹோம்ஸ் சேர் போட்டு நிக்கறார்! என பொத்தாம் பொதுவாக நூல் விட்டதில் க்ளிக் ஆகி விட்டது.

இந்த கதையை நீங்கள் ஏற்கனவே படித்து இருக்கிறீர்களா?

ரெண்டு தடவை. உங்களுடன் சேர்ந்து மூனாம் தடவையும் படிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.

இந்த சம்பாஷனைக்கு பிறகு, லேமேன் பிரதர்ஸ் செய்த தவறுகள், ஐரோப்பாவின் வேலையில்லா திண்டாட்டம், நார்த் கொரியா பரிசோதனை செய்த ஏவுகணை டெக்னாலஜி, என லோக விஷயங்களை பத்தி கன்னாபின்னாவென குதிரை வால் கொண்டையுடன் விவாதிக்க நான் ஒன்னும் லூசு இல்லை.

1) பாந்தினி சில்க் மெட்டீரியலில் கரீனா கபூர் அணிந்து வரும் பட்டீயாலா மாடல் எடுப்பாக இருக்குமா? இல்லை கட் சுடிதார் தான் சிறந்ததா?

2) கார்னியரில் என்ன பொருட்கள் புதிதாக மார்கெட்டுக்கு வந்திருக்கிறது?

3) ராக்கி சாவந்துக்கு வாழ்வு குடுக்கப் போகும் வள்ளல் யார்?

4) பெண்களுரில் மிகச் சிறந்த மால் எது? என உபயோகமான கருத்துக்கள் பரிமாறப் பட்டன. அடுத்த சீட்காரர்களும் தங்கள் கருத்துக்களை தாராளமாக அள்ளி வழங்க, நீயா? நானா? கோபி மாதிரி நிகழ்ச்சியை(கடலையை) சுமூகமாக கொண்டு செல்ல வேண்டியதா போச்சு.

ஆனாலும் இந்த பைலட் ரொம்ப மோசம். வண்டி உளுந்தூர்பேட்டையில அஞ்சு நிமிஷம் நிக்கும். டிபன், காப்பி சாப்டறவங்க சாப்டுக்கலாம்னு ஒரு அறிவிப்பு குடுத்து, ஹைதராபாத், நாக்பூர்னு வண்டியை ஸ்டாப்பிங் போட்டு ஓட்ட வேணாமோ? எங்கயும் நிப்பாட்டாமல் வண்டியை நேரே டெல்லிக்கு கொண்டு போய் விட்டார்.

டக்குனு எழுத பேப்பர் எதுவும் கிடைக்காததால், குதிரை வால், தனது ஈமெயில் ஐடியை என் உள்ளங்கையில் எழுத வேண்டியதா போச்சு. முகம் அலம்பும் போது தண்ணீர் பட்டதால் அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)

44 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அப்புறமென்ன யேர் இந்தியான்னு முதல்ல ஒரு புலம்பல்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தில்லி எப்பவந்தீங்க?

செர்லாக்கை துப்பறானா அருமை மகன்? நாலு ப்ளேவர் வாங்கிவச்சு நாலுவேளையும் நாளும் தரவேணாமா..?

Sridhar Narayanan said...

//லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பதவியேற்ற அதே வருஷம் யேர் இந்தியாவிலும் நிறைய்ய பேர் யேர்ஹோஸ்டஸ்ஸாக டூட்டியில் சேர்ந்தார்களாம். அதுக்கப்புறமா புது அப்பாயின்மெண்டே போடலை போலிருக்கு//

புரியுது. இந்த மாதிரி சூழ்நிலைல இப்படித்தான் எல்லாம் தோணும்.

எல்லாம் பிரமை. பெங்களூரு திரும்பியவுடன் ஜோதி நிவாஸ் காலேஜ், ஃபோரம் மால், பிரிகேட் ரோடுன்னு ஒரு நடை போயிட்டு வந்தீங்கன்னா சித்த பிரமை சரியாயிடும் அம்பி சார் :))

Geetha Sambasivam said...

//என லோக விஷயங்களை பத்தி கன்னாபின்னாவென குதிரை வால் கொண்டையுடன் விவாதிக்க நான் ஒன்னும் லூசு இல்லை//

athane, delhi poyittu vantha perumai, athuvum vimanathil pona perumai pichukkuthu poola! :P :P:P:P

G3 said...

//உங்கள் பிசினஸில் தேனாறும் //

வேகமா படிக்கறப்போ கோளாறும்னு படிச்சிட்டேன் ;)))))

G3 said...

//அதையும் இப்பலாம் துப்பி விடுகிறான், ஃபேளவர் மாத்தனும் போல//

:))))))))))))))

G3 said...

//முகம் அலம்பும் போது தண்ணீர் பட்டதால் அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)//

En indha dubaakooru??? Boys padathula varra maadiri andha kaiya xerox eduthutu plastic cover pottu pala naatkal moodi vechirundheengannu illa thagaval vandhudhu :P

ambi said...

வாங்க சுந்தர், என்ன இருந்தாலும்..... :)))

முத்தக்கா, டெல்லின்னதும் நீங்க தான் நியாபகத்துக்கு வந்தீங்க. உங்க அட்ரசும் இல்ல, நம்பரும் இல்ல. திருப்பதில போய் மொட்டைய தேடின மாதிரி ஆயிடக் கூடாதேன்னு தான் உங்களை தொந்தரவு பண்ணல. நாலு வேளையா? ஒரு வேளைக்கே பெண்டை நிமுத்தறான். :))

ஸ்ரீதர், பிரமை இல்லைய்யா. உண்மை, உண்மையை தவிர ஒன்னுமே இல்லை. எனக்கு ஆபிசே எம்.ஜி ரோட்டுல தான். அதுனால பிரச்சனை இல்லை. :))

@geetha madam, பின்ன இருக்காதா? மூஞ்சூரு கடிச்சதையே சில பேர் பதிவா போட்டுக்கறாங்க. :p

ஜி3 அக்கா, இப்படியெல்லாம் புரளியை கிளப்பி விட்டு ஒரு கலவரத்துக்கு காரணகர்த்தாவாய் மாற வேண்டாம் என எச்சரிக்கிறேன். :))

Blogeswari said...

Ha ha ha! Wonderful read, Ambi!

Pudichaalum Puliyangomba pidichittiye

பாசகி said...

///...அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)//

நாங்களே நம்பமாட்டோம் :))))

பாசகி said...

//En indha dubaakooru??? Boys padathula varra maadiri andha kaiya xerox eduthutu plastic cover pottu pala naatkal moodi vechirundheengannu illa thagaval vandhudhu :P//

கடைசில அந்த பேப்பரோட நிலமையும் பாய்ஸ் படத்துல வர்றமாதிரியா :))))

dubukudisciple said...

amma enna ponatha pathi mattum ezhuthi iruke thiruma entha airline atha pathi konjam ezhutharthu...

Dinesh C said...

:))))

Ithuku thana ipod vaangi vechukanum!

Meena Sankaran said...

அட்டகாசம் அம்பி சார். உங்க எழுத்து நடையை ரொம்ப ரசிச்சேன். வாழ்த்துக்கள்.

Anonymous said...

யேர் இந்தியாவா?? எப்போலேர்ந்து?? எங்கூர்ல எல்லாம் ஏர் இந்தியான்னு அழகா தமிழ்ல சொல்லுவோம்.

ஷைலஜா said...

// சைடு போசில்(அப்போதைய) அரவிந்தசாமி சாயலில் இருக்கும் என்னை, ..///


அம்பீ! :):) நான் ஒண்ணூம் சொல்லப்பா இதுக்கு.:)

ஷைலஜா said...

//
எப்பவோ எனக்கும் அவனுக்கும் நடந்த ஒரு வாய்க்கால் தகராறை மனதில் வைத்து, யேர் இந்தியாவுல மட்டும் தான் டிக்கட் இருக்கு, இந்த பிடி! என டிக்கட்டை கையில் குடுத்தான். ஏன் இப்படி?னு நான் கேட்டதுக்கு, நாம் எல்லோரும் இந்தியர்கள், எனவே இந்திய பொருளையே வாங்குவோம்! என எழுந்து நின்னு உறுதிமொழி எடுக்கறான். விஜய் மல்லய்யா கூட இந்தியர் தான்டே! என நான் சொன்னதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.
///////

ஓவர்! ஆனாலும் ரசிச்சித்தான் ஆகணும்:0

ஷைலஜா said...

//
இந்த பெண்கள் ஏன் தான் ஷெர்லாக் ஹோம்ஸையும், ஹாரி பாட்டரையும் கட்டி கொண்டு அழுகிறார்களோ? எனக்கு தெரிந்ததெல்லாம் என் அருமை மகன் உண்ணும் செர்லாக் தான். (அதையும் இப்பலாம் துப்பி விடுகிறான், ஃபேளவர் மாத்தனும் போல.)

///


:) ஐயோ அம்பி லூட்டி அடிக்கறீங்க:0

ஷைலஜா said...

டக்குனு எழுத பேப்பர் எதுவும் கிடைக்காததால், குதிரை வால், தனது ஈமெயில் ஐடியை என் உள்ளங்கையில் எழுத வேண்டியதா போச்சு. முகம் அலம்பும் போது தண்ணீர் பட்டதால் அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)
//////

ஒரு இடமும் நம்பாது! சிரிச்சி சிரிச்சி பல் வலி அம்பி:)

ஷைலஜா said...

//
சின்ன அம்மிணி said...
யேர் இந்தியாவா?? எப்போலேர்ந்து?? எங்கூர்ல எல்லாம் ஏர் இந்தியான்னு அழகா தமிழ்ல சொல்லுவோம்
//


>>>>>>>>>>>>>>>

அப்படிப்போடுங்க இந்த அம்பிக்கு!:)

Kavinaya said...

//வேகமா படிக்கறப்போ கோளாறும்னு படிச்சிட்டேன் ;)))))//

:)))

//அவர் பிரதமராக பதவியேற்ற அதே வருஷம் யேர் இந்தியாவிலும் நிறைய்ய பேர் யேர்ஹோஸ்டஸ்ஸாக டூட்டியில் சேர்ந்தார்களாம். அதுக்கப்புறமா புது அப்பாயின்மெண்டே போடலை போலிருக்கு.//

ஐயோ பாவம். குதிரை வாலைக் கண்டதும் இந்த குறை தீர்ந்திருக்குமே :))

நான் மிக ரசித்து படித்த உங்க பதிவுகளில் இதுவும் ஒண்ணு. அருமை! :)

sriram said...

ஹாய் ஸ்ரீராம் (என்ன ஷாக்கா..)
கலக்கல் போஸ்ட், அடுத்த முறை
குட்டை பாவாடை Kingfisher ப்ராப்திரஸ்து.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

ஆயில்யன் said...

//எனக்கு யேர் இந்தியாவில் டிக்கட் கிடைத்ததில் தங்கமணிக்கு அளவில்லா சந்தோஷம். உங்களுக்கு பிரேக் பாஸ்ட் ஊட்டிவிட்டு, பாட்டு பாடி, கதை சொல்லி தூங்க வைத்து பத்ரமா டெல்லியில் கொண்டு போய் விடுவாங்க! கவலையே படாதீங்க!//

LOL :)))))

Porkodi (பொற்கொடி) said...

shailajaku vandha madhri enakum pal valikudhu! ana geetha paatiku prachanai ille - adhan palle illiye! :P

Porkodi (பொற்கொடி) said...

paiyan cerelac thuparan, naangalam postuku thuparom, thangs summave thuppuvanga/! aiyo ambi ipdi thuppu vazhkaiya agiduche unga vazhkai? :D

ambi said...

பிலாகேஸ்வரி, புளியங்கொம்பா? நல்லா கோர்த்து விடறாங்க பா. :))

முதல் வருகைக்கு நன்றி பாசகி (வித்யாசமான பேரா இருக்கே). :)

டுடி, ரிட்டர்ன் ஜர்னி அடுத்து வரும். :p

வாங்க தினேஷ், ஐபாடா? அது ரெம்ப போர்.

முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி மீனாக்ஷி மேடம். :)

சின்ன அம்மணீ, ஏர் இந்தியான்னு தான் எழுத நெனச்சேன். ஏர் இருக்கு, கலப்பை எங்க?னு பின்னூட்டம் வரும். அதான். :))

ஷைலக்கா, பல்வலியா? அடடா? பாத்துங்க. அமெரிக்காவில் இருந்து வரும் போது எனக்கு என்ன வாங்கி வரப் போறீங்க? :p

வாங்க கவிநயா அக்கா. பாத்து ரெம்ப நாளாச்சு. :)

ambi said...

அட, வாங்க பாஸ்டன் ஸ்ரீராம். என் பெயர் எல்லாம் சொல்லி நெஜமாவே ஷாக் குடுக்கறீங்க. :)
என்னை நல்லவன், வல்லவன்னு டுபுக்கு எக்கசக்கமா புகழ்ந்து இருப்பாரே! :p

ரிட்டன் ஜர்னி கிங்க் பிஷர் தான். :))

வாங்க ஆயில்ஸ். :)

எலேய் கொடி, ஆட்டம் ஜாஸ்த்தியா இருக்கே! :p

Geetha Sambasivam said...

@geetha madam, பின்ன இருக்காதா? மூஞ்சூரு கடிச்சதையே சில பேர் பதிவா போட்டுக்கறாங்க. :p//
@அம்பி, அப்படியே பதிவுக்கு ஒரு லிங்க் கொடுக்கலாமில்லை?? எங்கே! உதவினா என்ன விலைனு கேட்பீங்க! :P:P:P:P

Geetha Sambasivam said...

//ana geetha paatiku prachanai ille - adhan palle illiye! :P//

போர்க்கொடி, என்ன ஆச்சு?? துள்ளல் அதிகமா இருக்கு??? ரங்கு கிட்டே போட்டுக் கொடுக்கவேண்டியது தான்! :P:P:P:P

ambi said...

//அப்படியே பதிவுக்கு ஒரு லிங்க் கொடுக்கலாமில்லை?? //

இப்படியா விளம்பரம் தேடிக்கறது? அந்த மொக்கைகெல்லாம் லிங்க் குடுக்கறதா இல்லை. :)))

Anonymous said...

ambi,kalakittenga...next time office selavula, thangs,junior sagidham king fisheril payanam amaya vazhtukkal.eppavathu cerelac sappitu parthirukireergalla?sagikkathu...junior en thuppa maattan...adutha dhadavai rasam illai thatchi mum try panni paarungal.mudhinda varai spponil saapitirundahl id,thangamanikkum,kaatiirukkalam.thangamani ungalukkaga chartered flight arrange seithirupargal you see you missed a chance...
nivi.

mgnithi said...

ambi.

ithukke ivalo feelingna naan ithu varaikkum ponathu ellam air india thaan.. en company travel desk aalukku en mela enna kobamo theriyala...

intha kodummaikku rendu varusham kazhichu vera route air indiala pona athe Lal bagathur batch hostess vanthu nikkaranga.. enna kodumai sir ithu..

sriram said...

//என்னை நல்லவன், வல்லவன்னு டுபுக்கு எக்கசக்கமா புகழ்ந்து இருப்பாரே! :p//
அவர் பொய் சொல்ல மாட்டார், அப்படியே சொன்னாலும் நாங்க நம்பிடுவோமா? just kidding
அவர் சொல்லித்தான் நீங்க நல்லவர் / வல்லவருன்னு எங்களுக்கு தெரியுமா என்ன???
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

Anonymous said...

I wish you health and happiness every day!
Ich wünsche Ihnen Glück und Gesundheit jeden Tag!
Je vous souhaite santé et bonheur chaque jour!

整形
婦產科
張艮輝
法拍屋
瑜珈
服飾
隔熱紙
清潔
雲林

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ:-))))

பாருய்யா, வேற்று மொழிக்காரன்கூட வந்து 'பாராட்டி' இருக்கான்.

Vijay said...

படிச்சு வயிறு கிழிஞ்சு போச்சு. அப்படியே காதிலும் புகை வருது :-)

ஷைலஜா said...

At Tue Aug 25, 02:48:00 PM, ambi said…


///
ஷைலக்கா, பல்வலியா? அடடா? பாத்துங்க. அமெரிக்காவில் இருந்து வரும் போது எனக்கு என்ன வாங்கி வரப் போறீங்க? :p////


என்னவோ அம்பி எழுதி இருக்கார்னு தெரியுது ஆனா என்னன்னே தெரியலையே! பார்வைக்கு செலக்டிவ் அம்னீஷ்யா:)

‘ பாவம் சிரமப்படாதீங்கக்கா நம்ம பெங்களூர்கருடா மால்ல எல்லாம் கிடைக்குது ச்சும்மா கைய வீசிட்டுவாங்க’ன்னு எழுதி இருப்பாரு தங்க அம்பி சமத்துத்தம்பி!!:)

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

ambi said...

வாங்க நிவியக்கா, இப்ப ரசம் சாதம் சாப்டறான். ஐடியை காட்டி இருந்தால் என்ன நடந்து இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். :)))

வாங்க சீனா காரர், என் பதிவை நீங்க கூட படிக்கறீங்களா? அவ்வ்வ்வ்.

எம்ஜி நிதி, உனக்கும் அதே ஏர் இந்தியாவா? உன் பீலிங்க்ஸ் புரியுது. :p

அடடே பாஸ்டன் ஸ்ரீ, நீங்க ரொம்ப நல்லவரு. :)
ரொம்ப நாளா என் வீட்டுக்கு வந்து போயிருக்கீங்க போல. ரெம்ப நன்னிங்க. :))

வாங்க துளசி டீச்சர், நீங்க இப்படி சிரிப்பா சிரிக்கற அளாவுக்கு சைனா காரர் டேமேஜ் பண்ணிட்டு போயிடாரு. :))

ஹலோ விஜய், எப்படி இருக்கீங்க? பாத்து ரெம்ப நாளாச்சு. :)

ஷைலக்கா, கழுவற மீனுல நழுவற மீனா நீங்க? சரி, வாங்க கருடா மாலுலயே நம்ம டீலை முடிச்சுக்கலாம். :)))

தகவல் போஸ்டருக்கு மிக்க நன்றி ஞானி சார். :)

Geetha Sambasivam said...

இப்படியா விளம்பரம் தேடிக்கறது? அந்த மொக்கைகெல்லாம் லிங்க் குடுக்கறதா இல்லை. :)))//

hihihi நாங்க கொடுத்துட்டோமில்ல லிங்கு?????????? லிங்குசாமி இல்லைங்க, லிங்க், சுட்டி! :))))))
http://geethasmbsvm6.blogspot.com/2009/08/blog-post_18.html

//ஷைலக்கா, கழுவற மீனுல நழுவற மீனா நீங்க? சரி, வாங்க கருடா மாலுலயே நம்ம டீலை முடிச்சுக்கலாம். :)))//

ஹாட்ஸ் ஆஃப் ஷைலஜா, நீங்க கொடுத்த அடியிலே அம்பி மூக்கு உடைஞ்சு ரத்தம் கொட்டினதைக் கண்ணாலே பார்த்து ரசிச்சேன்! நன்னிங்கோ!

ஷைலஜா said...

கீதா சாம்பசிவம் said...
////

ஹாட்ஸ் ஆஃப் ஷைலஜா, நீங்க கொடுத்த அடியிலே அம்பி மூக்கு உடைஞ்சு ரத்தம் கொட்டினதைக் கண்ணாலே பார்த்து ரசிச்சேன்! நன்னிங்கோ!//


அச்சசோ கீதா ஏமாந்துட்டீங்களே சும்மாவா அம்பி அப்படி சொல்லுவாரு மனுஷனின் விஷமத்தனம் புரியாத அப்பாவியா இருகீங்க..கருடாமாலுல வெறும் நம்மவீட்டு 2ம்தண்ணி டிகாஷன் காபியே 130ரூ சில்லறை! அமெரிக்க மாலே தேவலாம்!

Fri Aug 28, 12:29:00 PM

Mambalam Mani said...

super!!

pudugaithendral said...

ஏர் இந்தியாவில் ஏர்ஹோஸ்டஸ் அப்பாயிண்ட்மெண்ட் பத்தி ரொம்ப கரெக்டா சொல்லியிருக்கீங்க.

போனமாசம் அயித்தான் சென்னையிலிருந்து ஹைதைக்கு ஏர் இந்தியாவில் தான் வந்தார். பொதுவாக அப்பா ஊரிலிருந்து வந்ததும் பசங்க போய் கட்டி பாசமழை பொழிவாங்க.

இந்த முறை கட்டிகிட்ட பசங்க ச்சே, ஏர் இந்தியாவில வந்தீங்களா!! நாத்தம். முதலி குளிச்சிட்டு வாங்கன்னு”!!! சொன்னாங்க.

10 வயசு வாண்டுக்கே ஏர் இந்தியா பிடிக்கலை.

மங்களூர் சிவா said...

//முகம் அலம்பும் போது தண்ணீர் பட்டதால் அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)//

பொறாமை சாரே!
:)))