Thursday, January 15, 2009

சிட்டி சென்டர்


மால் என்றவுடன் உங்களுக்கு ஏதேனும் கஞ்சா, அபின் போன்ற லாகிரி வஸ்து நினைவுக்கு வந்தால் நீங்கள் ரொம்பவே ராம் கோபால் வர்மா படம் பார்ப்பவராக இருப்பீர்கள். கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.

திருமால் நினைவுக்கு வந்தால் மார்கழி குளிரில் சுடசுட வெண்பொங்கலுக்கு பஜனை செய்தவராக இருப்பீர்கள். போகட்டும்,பெருமாள் உங்களையும் காப்பாத்தட்டும்.

இதையெல்லாம் மீறி தமிழர்களிடையே ஒரு மால் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை மாதிரி சென்னைவாசிகளுக்கு ஸ்பென்சர் தவிர இன்னொரு மால் தான் சிட்டி சென்டர்.(இன்னுமா தமிழ்ப்படுத்தலை?)

அன்றாட வாழ்வில் நாம் என்னவெல்லாம் பயன்படுத்த மாட்டோமோ அதையெல்லாம் கடை போட்டு, லைட்டு போட்டு கடை பரத்தி வைத்திருக்கிறார்கள். சிறிது பயம் கலந்த ஆர்வத்துடன் மக்கள் எஸ்கலேட்டரில் கால் பதிக்கிறார்கள். அலேன் சோலி, ரேமான்ட்ஸ், போன்ற பிராண்டட் கடைகளில் கடைப் பணியாளர்கள் தாயக்கட்டை உருட்டி கொண்டிருக்கிறார்கள். லேண்ட் மார்க்கில் நிலமை கொஞ்சம் பரவாயில்லை. சிடி வாங்கும் சாக்கில் பலர், ஏசியில் அமர்ந்து ஒசியில் பாட்டு கேட்கிறார்கள். இன்னும் சிலர் கையில் டிபன் பாக்ஸ் எல்லாம் கட்டி கொண்டு புக்ஸ் செக்க்ஷனில் சம்மனம் போட்டு அமர்ந்து யவன ராணி படித்து கொண்டிருக்கிறார்கள். புஃட் வேர்ல்டில் தம் குழந்தைகளுக்கு செர்லாக் தேடும் அம்மாக்கள், காஸ்மெடிக்ஸ் செக்க்ஷனில் கோத்ரேஜ் டை தேடும் அரக்கு கலரில் லிப்ஸ்டிக் அடித்த ஆன்டிக்கள், இடது கையில் பாப்பின்ஸ் வைத்து கொண்டு, வலது கைக்கு டெய்ரி மில்குக்கு அடம் பிடிக்கும் டெனிம் ஜீன்ஸில் டிராயர் அணிந்த மஷ்ரூம்கட் செட்டிநாட் வித்யாஷ்ரம் குழந்தைகள், பில்லுக்கு கார்டு தேய்க்கவும், ட்ராலி தள்ள மட்டுமே அழைத்துவரப்படும் அப்பாவி ரங்குக்கள், யார்ட்லி(ஒரிஜினல்) யார்ட்லி(டூப்ளிகேட்), டாமி பாய்/கேள், ஓல்ட் ஸ்பைஸ், என கலவையாய் மணக்கும் கசகச மக்கள், எதையோ தேடி, எதையோ வாங்கி, எங்கோ ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.

எத எடுத்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் என அறிவிக்கப்படா விதிப்படி பெண்களுக்கு கை, காது, மூக்குக்கு என தோரியம் நீங்கலாக பூமியில் கிடைக்கும் எல்லா மெட்டல்களிலும் நகைகள் கொட்டிக் கிடக்கிறது. பெண்ணுக்கு அழகு புன்னகையே! என கல்யாணமான புதிதில் சாலமன் பாப்பையா மாதிரி நான் தீர்ப்பு சொன்னதில் நொந்து போன என் தங்கமணி அமைதியாக எல்லாத்தையும் பார்த்துக் கொண்டே வந்தார் என நினைத்தது சில வினாடிகளில் தப்பா போச்சு.

அந்த பிளாக் கலர் டாப்ஸ் போட்ட பொண்ணை தானே பாத்தீங்க? என அம்மணி அதிரடியாய் கேட்க, "கட்டிடம் எல்லாம் என்னமா கட்டியிருக்கான், லைட்டு எல்லாம் என்னமா மின்னுது!" என நான் சமாளிக்க பாத்தும் கதை ஒப்பேறவில்லை. நிலைமையை உடனே சமாளிக்க அபியும் நானும் படத்துக்கு டிக்கட் வாங்க வேண்டியதா போச்சு. படம் முழுக்க தேடியும் அபி அப்பாவுக்கு பதில் பிரகாஷ்ராஜ் தான் வந்தார். என்ன அனியாயம்? முடிந்தால், விரிவாக இந்த படத்தை பற்றி எழுத உத்தேசம். ஏற்கனவே பலர் இப்படத்தை பற்றி எழுதியாச்சு.

சிட்டி சென்டர் வாசலில் முகேஷ் அம்பானி மட்டுமே ஆட்டோ பிடிக்க முடியும். எங்க போகனும்?னு கேக்கறதுக்கு முன்னாடியே டூபிப்ட்டி குடு சார்! என கூலாக கேட்கிறார்கள். ஒன்னும் சொல்றதுக்கில்லை.

33 comments:

மணிகண்டன் said...

me the first.

Anonymous said...

கலக்கிறிங்க ம் எழுதுங்க எழுதுங்க தொடர்ந்து எழுதுங்க

மணிகண்டன் said...

அம்பி,
கருப்பு கலர் டாப்ஸ் பாக்கறத மட்டும் தான் உங்க துணைவி பாத்தாங்க. நீங்க பாத்த மத்த டாப்ஸ் எல்லாம் பாத்து இருந்தா "வில்லு" உட்பட எல்லா படமும் அழைச்சிக்கிட்டு போகவேண்டி இருக்கும்.

அபி அப்பா said...

ஆகா, ஒரு மால்க்கு போய் வந்ததை என்ன ஒரு அழகா சொல்லியிருக்கீங்க!ந்நிங்க சுத்த மோசம் அம்பி,ஆனாலும் அந்த கருப்பு டாப்ஸ் பெண்னை மட்டுமா பார்க்கிறது!:-))

அபி அப்பா said...

அபியும் நானும் படத்திலே நான்நடிச்சு இருந்தா தானே நான் வருவேன்!

பினாத்தல் சுரேஷ் said...

வைபாலஜியில் மால் மகாத்மியம் எழுதிய நினைவு வருகிறது :-)

நான் இந்த சிட்டி செண்டர் மட்டும் இன்னும் போக வாய்ப்பு கிடைக்கவேயில்லை. உங்கள் விவரணை “போதும்டா சாமி” என்ற உணர்வைத் தூண்டி என்னை உய்விக்கிறது!

சின்னப் பையன் said...

ஹாஹா... ‘கடைகளை' பாக்க மட்டும் போகலான்றீங்க???? ஓகே ஓகே....:-))))

sriram said...

அப்போ கடைகளையும் கட்டைகளையும் பாக்க city center சிறந்த இடம் ன்னு சொல்றீங்க?
february ல இந்தியா வரும் போது பாத்திர வேண்டியதுதான்.

என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
Boston USA

ஷைலஜா said...

அம்பி! என்ன பார்வை உங்க பார்வை! ரொம்ப ரசிச்சேன்.... பெங்களூரு கருடா மால் பத்தியும் எழுதுங்களேன் சீக்கிரம்

இராம்/Raam said...

அம்பி,


இஸ்பாகானி சென்ட‌ர்'னு ஒன்னு தேனாம்பேட்டை பக்கத்திலே இருக்கே... அது எப்பிடியிருக்கும்?? அதுக்கெல்லாம் நான் போன‌தே இல்லை... :)

அதேமாதிரி ந‌ம்ம‌ பெங்க‌ளூரூ'லேயும் ஃபோர‌ம்,க‌ருடா மால், டோட்ட‌ல் மால்'னு எதுக்குமே போனதே இல்லை.. :)

mgnithi said...

//சிட்டி சென்டர் வாசலில் முகேஷ் அம்பானி மட்டுமே ஆட்டோ பிடிக்க முடியும். எங்க போகனும்?னு கேக்கறதுக்கு முன்னாடியே டூபிப்ட்டி குடு சார்! என கூலாக கேட்கிறார்கள். ஒன்னும் சொல்றதுக்கில்லை.
//
avarala kooda mudiyumangrathu konjam santhegam thaan...

மேவி... said...

in citi center its dead cheap for guys who are richie rich. i do purchase there since my fav. brands are there.

but one cannot spend time time there like people in spencers

Sridhar V said...

//பெண்ணுக்கு அழகு புன்னகையே! //

Oh! Really??? :))))

Kalakkals!

G3 said...

:))))))))))))))))

// mgnithi said...

//சிட்டி சென்டர் வாசலில் முகேஷ் அம்பானி மட்டுமே ஆட்டோ பிடிக்க முடியும். எங்க போகனும்?னு கேக்கறதுக்கு முன்னாடியே டூபிப்ட்டி குடு சார்! என கூலாக கேட்கிறார்கள். ஒன்னும் சொல்றதுக்கில்லை.
//
avarala kooda mudiyumangrathu konjam santhegam thaan...//


Repeatae :)))

G3 said...

//இராம்/Raam said...

அம்பி,


இஸ்பாகானி சென்ட‌ர்'னு ஒன்னு தேனாம்பேட்டை பக்கத்திலே இருக்கே... அது எப்பிடியிருக்கும்?? அதுக்கெல்லாம் நான் போன‌தே இல்லை... :)//

Aama aama.. raam anga pogavae illae.. aari pona kaapiya kudikkavae illa... pakkathu tablela irundha ponnungala paakavae illa... idhu ellam nadakkum bodhu naanum kappiyum pakkathula illavae illa :)))

Kathir said...

//அலேன் சோலி, ரேமான்ட்ஸ், போன்ற பிராண்டட் கடைகளில் கடைப் பணியாளர்கள் தாயக்கட்டை உருட்டி கொண்டிருக்கிறார்கள்//

அங்க இருக்கின்ற கடைகளில் நல்ல collections இருக்கு ங்க.

Kathir said...

//இஸ்பாகானி சென்ட‌ர்'னு ஒன்னு தேனாம்பேட்டை பக்கத்திலே இருக்கே.//

Nungambakkam High road la இருக்கிறது தானே சொல்றீங்க....
நான் சென்னைல வேலை பார்க்கும் போது எங்க ஆபீஸ் இஸ்பாகானி சென்ட‌ர்க்கு பக்கத்து கட்டிடம் தான்.

அப்புறம், ஆபிஸ் வாசல் லயே MOP Vaishnav college........

5 வருஷம் போனதே தெரியல.....

;))

ILA (a) இளா said...

நானும் ஒரு தடவை அங்கே போயிட்டு பிரியாணி மட்டும் சாப்டுட்டு வந்துட்டோம். இனிமே வாங்கனும்னா பாண்டி பஜார் போயிரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்

நானானி said...

//இஸ்பாகானி சென்ட‌ர்'னு ஒன்னு தேனாம்பேட்டை பக்கத்திலே இருக்கே... அது எப்பிடியிருக்கும்??//

அது நுங்கம்பாக்கம் ஹைரோட்டிலே இருக்கு. அங்கேயும் அம்பானி சகோதரர்கள் மட்டுமே ஷாப்பிங் பண்ண முடியும்.

நானானி said...

சிட்டி செண்டர் பத்தி அழகாக் சொல்லியுள்ளீர்கள்! வேலூர் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் அண்ணன் பேத்தி வாரயிருதி நாட்களில் எங்க வீட்டுக்கு வருவாள். வந்ததுமே, 'அம்மம்மா! நானும் ஃப்ரண்ட்சும் சிட்டி செண்டருக்குப் போகிறோம். சாயங்காலம்தான் வருவேன்.' என்று சொல்லி விட்டுப் போவாள். ஒவ்வொரு முறையும்.
அப்படி என்னதான் இருக்கிறதோ?
நீங்க சொன்னாமாதிரி ஸ்பென்சருக்கு அடுத்தது இதுதான்.

Anonymous said...

ஆமா மணி, நீங்க தான் பஷ்டு. அட ஆமா, ஆனா விலு அப்ப ரிலீஸ் ஆகல, தப்பிச்சேன். :))

பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்னி ஹஜன். :))


வாங்க அபி அப்பா, மத்ததையும் சொன்னா செய்கூலி, சேதாரம் ஜாஸ்த்தி ஆயிடுமே. அபின்னு பேரை கேட்டாலே எனக்கு உங்க நினைவு தான் வரும். :))

வாங்க தல, நீங்க தொடாத டாபிக்கா? என்ன இருந்தாலும் சீனியராச்சே. லிங்க் கிடைக்குமா? சிட்டி சென்டர் போங்க, ஆனா உசாரா இருங்க. :)

சின்ன பையன், அதே! அதே! கடை கன்னிகளை பாக்க மட்டும் போங்க. :p

gils said...

citi center sonna udanay naan kuda west mamblam ila antha area pakkamana postonu nenchen...neenga eppo vambi ccku vanthel..enga veedu athulenthu remba kita..oru pone panirukapdaatho

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர் அம்பி...

இன்னும் 1-2 வருஷம் போகட்டும், எஸ்கலேட்டர்ல போகணும், லிப்ட்ல போகணும்ன்னு பொடியன் கேட்பான்...ஆகவே இப்போவே மனதை-பர்ஸை ரெடி பண்ணிக்கவும்.. :-)

Anonymous said...

as usual kalakkittenga.rangmaniya shopping kooda kootittu poradula enna sandosham theriyuma??neenga solra madhiri cardtheikka,trolley thalla,appuram jammunu mcdonaldo,yo!chinavo,donutsso,paanipuri bhelpuriyo samattha enakkum enpennirkum sethu vangithara,santhshama billukku ninnu,kadakadaya window shopping panna ,taghuero,nakshatra ellame namakku illanu baskin robbins saaptukitte polambina, orunaal vangithantha pochunnu rengu reel vudarudhum (maal ulla pona mattum icecream kaillerdhu yaaro pudinkina kuzhandhai maadhiri face vechikardhum)nijamve sandhoshamana
tharunangal.namma mall culturukkulla maatikkittu rombanallachu.
nivi.

Anonymous said...

கரக்ட்டா பாயிண்டை புடிச்சீங்க ஸ்ரீராம். மிஸ் செஞ்சுடாதீங்க, ஐ மீன் கடை கன்னிகளை. :))

வாங்க ஷைலக்கா, இந்த பாட்டை போன்ல பாடி காட்டி இருந்தா இன்னும் இனிமையா இருந்திருக்கும். :))


இராம், இந்த அரிய தகவலை எல்லாம் முன்னாடியே சொல்றதில்லையா? :))

அடுத்த தடவ போய் சேவிச்சுக்கறேன். ஜி3 அக்கா என்னமோ சொல்றாங்க போல. :p

ஆமா எம்ஜிநிதி, எப்படியும் பிப்ரவரிக்கு அப்புறம் நீங்க அங்க போக வேண்டி இருக்கும். :))


மேவீ, ஆம்பிளைங்க என்னிக்கு ஷாப்பிங்க பண்ணி இருக்காங்க? காலாகாலமா தீவட்டி தானே புடிச்சிட்டு இருக்கோம் ? :)))


வருகைக்கு மிக்க நன்னி ஸ்ரீதர்.


ஜி3 அக்கா, சிட்டி சென்டர்ல இராமுக்கு சேதாரம் ஜாஸ்த்தி போல. :p


தகவலுக்கு ரெம்ப நன்னி கதிர். 5 வருஷமா? அடப் பாவிகளா? ஹிஹி, எனக்கு கூட எம்ஜி ரோடுல தான் ஆபிஸ், பாருங்க 3 வருஷம் போறதே தெரியல. :))


ஆமா இளா, பாண்டி பஜார் தான் நம்ம பர்ஸுக்கு உகந்த இடம். :)


தகவலுக்கு மிக்க நன்னி நானானி அம்மா. :))

கில்ஸ், அடடா உங்க வீடு அங்கயா? அடுத்த தடவ கண்டிப்பா கால் பண்ணிட்டு வரேன். சென்னை போய் நம்பர் மாத்தி இருப்பியே? :p

சரியா சொன்னீங்க மதுரை அண்ணா, அத நினைச்சா தான் பயமா இருக்கு. இப்பவே பயம் காட்றீங்களே? :))

வாங்க நிவி, உங்க ரங்குவை சும்மா தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிச்சு இருக்கீங்க போல. என்ன ஒரு வில்லத்தனம்..? :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திருமால் எப்படி மக்களை கஷ்டகாலத்தில் காப்பாற்றுவாரோ அப்படித்தான் இந்த மால் கூட.. அதாவது தில்லியில் வெயில் வாட்டு வாட்டு என்று வாட்டிக்கொண்டிருக்கையில் நாம் ஹாயாக கிளம்பி கூலாக அமர்ந்து வர ஏதுவாக இருக்கும்.. அவ்வளவே.. எப்பவாவது கேட் மாஸில் லில்லிபுட்டில் பிள்ளைகளூக்கு பிறந்த நாளுக்கு துணி எடுக்கலாம்.. மெக் டொனால்டில் சாப்பிடலாம்.. மற்றவை அனைத்தும் கொலுப்படிகள் வேடிக்கைப்பார்க்கலாம்.. :)

ambi said...

அடடா ரொம்ப தெளிவா அழகா சொல்லிட்டீங்க முத்தக்கா.

பெங்களூரில் ஏற்கனவே குளுகுளுன்னு இருக்கறதால மால்களுக்கு எப்பவாச்சும் தான் வேடிக்கை பாக்க மட்டும் தான்(நான் கடைகளை சொன்னேன்) உள்ளே போறது. :))

Dinesh C said...

//சிட்டி சென்டர் வாசலில் முகேஷ் அம்பானி மட்டுமே ஆட்டோ பிடிக்க முடியும். எங்க போகனும்?னு கேக்கறதுக்கு முன்னாடியே டூபிப்ட்டி குடு சார்! //

இருக்கிறது பத்தாதுனு இந்த கூத்து வேறயா! கொடும.

Anonymous said...

ஆமா தினேஷ்,

கொடும கொடுமன்னு கோயிலுக்கு போன அங்க ரெண்டு கொடும தலைய விரிச்சு போட்டு ஆடிச்சாம். :))

Karthik said...

college bunk adhicha naama la anga thaan iruppom la... INOX la 10 roopa ticket vaangithu adakalam pannuvoom.. pakkathula beach.. veyila porutpadutaamal romance seiyum kaadalargalai maranji irundhu sundal pothu adipoom!!! aana city centre la poi AC kaata thavira onnum vaanga maathoom.. landmark la coffee kudikara cup edhutaale 100 rupa solraan!! key chain 50 ruupa...

Anonymous said...

கார்த்திக், அதானே, நாம எவ்ளோ வெவரமான ஆளுக. :))

Boston Bala said...

:) :))

rapp said...

ஹா ஹா ஹா, ஒரு காலத்துல உங்க புலம் பெயர்ந்த NRI கணக்கா இருந்த எங்க சொந்தக்காரங்க விட்ட பீலாவால, நான் இந்த மாதிரி மாலுக்கெல்லாம் போய் அப்பா சொத்தை அழிச்சா மோட்சம் கெடச்சி, அமெரிக்க ஜனாதிபதியாகிடலாம்ங்கற ரேஞ்சுல நெனச்சிக்கிட்டு இருந்தேன். இப்பவும் அந்த பயங்கரவாதிகள் அதே மாதிரி திரிஞ்சிக்கிட்டுத்தான் இருக்காங்க:):):)