Tuesday, October 07, 2008

நாளைக்கு ஆயுத பூஜையாம்ல

நவராத்திரியின் கிளைமாக்ஸே இந்த ஆயுத பூஜை தான். அவரவர் தம் தொழிலுக்கு உதவும் கருவிகளை சுத்தபடுத்தி, பொட்டு வெச்சு பூ வெச்சு கும்புடற அழகு இருக்கே! அடடா! கண் கொள்ளா காட்சி.

செய்யும் தொழிலே தெய்வம்!
சீனியும்,ரவையும் சேர்ந்தா அமிர்தம்!னு பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க.

வருசம் பூரா சைக்கிளை, வண்டியை மிதிமிதினு மிதிக்கும் நம் மக்கள் இந்த நாளில் அத பாத்து பாத்து தொடைக்கறது என்ன, சந்தனம் வைக்கறது என்ன, குங்குமம் வைக்கறது என்னனு அமர்களம் படுத்திடுவாங்க.

இந்த கூத்தில் அகப்படவனுக்கு அஷ்டமத்து சனிங்கற மாதிரி பாவப்பட்ட ரங்கமணிகள் பாடு தான் திண்டாட்டம். அந்த டிவில அப்படி என்ன தான் இருக்கோ? இங்க வந்து அந்த கிச்சனை சுத்தம் பண்ணா என்ன? அந்த பரண்ல இருக்கற சுத்தம் பண்ணா என்ன?னு மிலிட்டரி ட்ரில் தோத்திடும். பத்து மணிக்கு நமீதா பேட்டி வருது!னு உண்மைய அதுவும் ஆயுத பூஜை அன்னிக்கு சொல்ல நாம என்ன அவ்வளவு பேக்கா?

கடந்த கால வரலாறு நமக்கு கத்து குடுத்த பாடங்கள் தான் என்ன? வாங்கிய விழுபுண்கள் தான் என்ன? :)

சரி, சொல்ல வந்ததை சொல்லிடறேன்: எல்லோருக்கும் இனிய விஜய தசமி/ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்.

இது என்னோட வழிபாடு:


இது தங்கமணியின் வழிபாடு: :)

45 comments:

Anonymous said...

அவா அவா அவாளோட தொழிலை ஷெஞ்சாத்தானே நம்மவா கடேஷீவரை கோயில்ல தட்டேந்தமுடியும் ?

*** எலி கோவில் பூசாரி தொப்பை சுந்தரம்***

சரவணகுமரன் said...

//அந்த டிவில அப்படி என்ன தான் இருக்கோ?//

டிவி'க்கு சந்தனம் குங்குமம் வைக்குறேன்னு சொல்லுங்க. பாத்து அவுங்க பாக்குற நேரத்துல நமீதா வந்துட போறாங்க. :-)

சரவணகுமரன் said...

இனிய விஜய தசமி/ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்

rapp said...

me the 4th

rapp said...

எனக்குப் பிடிச்சது சரஸ்வதி பூஜைதான்:):):)எவ்ளோ ஜாலியா எல்லாபுக்கையும் கணக்கு வாத்தியார் ஆசீர்வாதத்தோட சாமி ரூம்ல வெச்சிட்டு, சுத்திக்கிட்டு இருக்கலாம்:):):)

rapp said...

//அந்த டிவில அப்படி என்ன தான் இருக்கோ//


அண்ணே, ஒருதரம் இப்படித்தான் மியூசிக் சிஸ்டம்கு பொட்டு வெக்கிறேன் பேர்வழின்னு ஸ்பீக்கர்ல பொட்டு வெச்சு, கொஞ்ச நாள் பூனைக்கு சளிப்பிடிச்சாமாதிரி கத்திக்கிட்டு இருந்துச்சு. அத ரிப்பேர் பண்ண கொண்டுபோய் கொடுக்கறப்போ, அந்தக் கடை அண்ணாத்தே சிரிச்ச கேவலச் சிரிப்பு இப்பவும் மனத்திரையில் ஓடுகிறது:):):) ஆனாலும் இப்படி எதையாவது தப்பா செய்ய முயற்சி பண்ணுங்க, உதவி உபத்திரவமா போச்சுன்னா பொதுவா உதவி செய்ய கூப்பிட மாட்டாங்க:):):) என்ன நமிதா பேட்டிய பாக்கறதுக்கு ஒரு கண்ணை சரியா திறக்க முடியாது, அப்பவும் கண்ணடிக்கறீங்கன்னு வீண் பொல்லாப்பு வந்து சேரும்:):):)

rapp said...

//டிவி'க்கு சந்தனம் குங்குமம் வைக்குறேன்னு சொல்லுங்க. பாத்து அவுங்க பாக்குற நேரத்துல நமீதா வந்துட போறாங்க//

:):):)

rapp said...

அனைவருக்கும் இனிய விஜய தசமி/ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்

rapp said...

//சீனியும்,ரவையும் சேர்ந்தா அமிர்தம்//



இருங்க இருங்க, மறுபடி இன்ஸ்டன்ட் சேவை செய்ய ஸ்பெஷலா ரெக்கமெண்ட் பண்றேன்:):):)

rapp said...

//வருசம் பூரா சைக்கிளை, வண்டியை மிதிமிதினு மிதிக்கும் நம் மக்கள் இந்த நாளில் அத பாத்து பாத்து தொடைக்கறது என்ன, சந்தனம் வைக்கறது என்ன, குங்குமம் வைக்கறது என்னனு அமர்களம் படுத்திடுவாங்க//

என் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டியில் நான் விரும்பி தொங்கவிடும் கண்ணைக்குத்தும் கலர் ஜிகினாப் பேப்பர்களை நீங்கள் இருட்டடிப்பு செய்ததின் மர்மமென்ன:):):)

மெளலி (மதுரையம்பதி) said...

ஆயுதங்கள் சூப்பர். :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் நீ சொல்ற ஐடியா தான் எங்க வீட்டு அய்யா செய்யற வேலையும்..ஒரு முறை சாமி இடத்தை சுத்தம் பண்ரேன்னு பழய பூவோட சின்ன வெள்ளி க்ருஷ்ணனை சேர்த்து குப்பையில் போட்டுட்டாங்க.. தேடியும் கிடைக்கல..இனி நான் கூப்பிடுவேன்??? :)

Anonymous said...

அவனவன் நமக்குப் பயன் படும் அனைத்தையுங் கண்டு பிடிச்சுக்கிட்டு இருக்கான்.
அதை நல்லா பயன் படுத்திக் கொண்டு
விலை உயர்ந்த கேமிராவைச் சாம்பிராணிப் புகையில் கெடுத்துக் கொண்டு,கணினிக்குக் குங்குமப் பொட்டு
வைத்துக் கொண்டு,
பெரிய அயூதமாக விலங்கை மூளைக்குப் போட்டுக் கொண்டாடி மகிழ்கின்றோம்.வாழ்க அவர்கள் கண்டு பிடிப்புக்கள்,கொஞ்சம் விபூதி,சந்தணம்,குங்குமம் கொடுங்கோ!

பரிசல்காரன் said...

:-)))
:-)))))))))
:-)))))))))))
:-))))))))))))))

பரிசல்காரன் said...

Me the 15th!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

அம்பி நமீதாவை தாண்டி இன்னும் நிறைய பேர் வந்தாச்சே:)

பூரிக்கட்டைக்கும் எலிக்குட்டிக்கும் வாழ்த்துகள் சொல்லி
உங்களுக்கும் நல்ல காலம் அமைய:)
வாழ்த்துகிறேன்.

இலவசக்கொத்தனார் said...

பூரி கட்டை ஒன்றே ஆயுதம் என்ற சிறிய வட்டத்திற்குள் தங்கமணியை சிக்கச் செய்யும் உங்கள் ஆதிக்கப் போக்கினை வன்முறையாகக் கண்டிக்கிறேன்.

(டிஸ்கி: தங்கமணி பக்கத்தில் இருக்காங்க என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்.)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா எழுதறீஙக் அம்பி :)

ஆனாலும் போன பதிவிலிருப்பது போன்ற வலதுசாரிச் சாயல்தான் பிடிக்கவில்லை :(

மங்களூர் சிவா said...

//டிவி'க்கு சந்தனம் குங்குமம் வைக்குறேன்னு சொல்லுங்க. பாத்து அவுங்க பாக்குற நேரத்துல நமீதா வந்துட போறாங்க//

:):):)

மங்களூர் சிவா said...

20

//
இலவசக்கொத்தனார் said...

பூரி கட்டை ஒன்றே ஆயுதம் என்ற சிறிய வட்டத்திற்குள் தங்கமணியை சிக்கச் செய்யும் உங்கள் ஆதிக்கப் போக்கினை வன்முறையாகக் கண்டிக்கிறேன்.

(டிஸ்கி: தங்கமணி பக்கத்தில் இருக்காங்க என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்.)
//

:)))))))))))

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அம்பி அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல்...:)

Anonymous said...

இந்த அநியாயத்த பாருங்க தங்கமணியக்கா!

ஆயுத பூசயில வச்ச

உங்க அழகான ஆயுதத்துக்கு

மட்டு

விபூதி குங்குமம் இட்டுக்கல்ல.

Sridhar V said...

//செய்யும் தொழிலே தெய்வம்!
சீனியும்,ரவையும் சேர்ந்தா அமிர்தம்!//

செய்யும் தொழிலே தெய்வம்!
பின்னூட்டம் வாங்க தமிழ்மணம்... இப்படி ஏதாவது சொல்வீங்கன்னு பாத்தா, இப்படி சீனி, ரவை, அரிசி, உளுந்துன்னுட்டு இன்னமும் நீர் மாவாட்டறதில இருந்து வெளில வரலையாக்கும். :-))

பெனாத்தலாருக்கு சரியான சிஷ்யனய்யா நீர். கோபிகா பதிவுல ஒரு துடைப்பக்கட்டை. இங்கே அப்பள குழவி. இப்படி ஒவ்வொரு ஆயுதமா பதிவு செய்துகிட்டே வருகிறீர். wifeology-க்கு ஒரு நல்ல பங்களிப்பு. :-))

Anonymous said...

//பத்து மணிக்கு நமீதா பேட்டி வருது//

இன்னுமா நமீதாவ நினைச்சுகிட்டு இருக்கீங்க.......

எல்லோருக்கும் இனிய விஜய தசமி/ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்.


Kathir.

ஆயில்யன் said...

//வல்லிசிம்ஹன் said…

அம்பி நமீதாவை தாண்டி இன்னும் நிறைய பேர் வந்தாச்சே:)
///

ரிப்பிட்டேய்ய்ய் :)))))

ஆயில்யன் said...

//சரவணகுமரன் said...
//அந்த டிவில அப்படி என்ன தான் இருக்கோ?//

டிவி'க்கு சந்தனம் குங்குமம் வைக்குறேன்னு சொல்லுங்க. பாத்து அவுங்க பாக்குற நேரத்துல நமீதா வந்துட போறாங்க. :-)
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

சென்ஷி said...

:) ச்சூப்பர்,

rapp said...

me the 30th

Kavinaya said...

//இந்த அநியாயத்த பாருங்க தங்கமணியக்கா! ஆயுத பூசயில வச்ச உங்க அழகான ஆயுதத்துக்கு மட்டும்
விபூதி குங்குமம் இட்டுக்கல்ல.//

அதானே? :)

Geetha Sambasivam said...

still Nameetha??

Ambi getting old??? :P:P:P:P

rapp said...

//நமீதாவை தாண்டி இன்னும் நிறைய பேர் வந்தாச்சே

still Nameetha??

Ambi getting old??? :P:P:P:P//
நானும் வழிமொழிகிறேன்:):):)

MyFriend said...

சூப்பர்..

நீங்க நடத்துங்கண்ணே. :-)

Anonymous said...

ayudha pooja wishes and happy vijayadasami.hai nallliku ungaloda favourite poori kattaikku leaveaaaa!!!!!!!ketka marandutene dashara pudavai budget evvalovu?deepavali vera varudhu.unga kutti paiyanoda shopping poga rediya???
nivi.

KK said...

Appy ayutha poojai... blog'ku pooja podalaiya????

Naan pori vangalamnu vanthen... ;)

SKM said...

thangamani thangama velai vangaama viduvathal_than ungalukku blog pakkam vara neram irukku..namithavai(ththu..)parka neram irukku..mmmm..koduthuvaichavar.

yeppdiyo thedi yenga veetu swamy_yai navarathriku munbu kandu piduchutten.Adhuvae blog potta thripthi.RangamanigaLaiyellam...........

R-ambam said...

naanum gas stove kku poojai poattu leave vitralaamnu sonna.. en vootukkaarar kaekka maateingraar.

ambi said...

வாங்க ரவி, நீங்க சர்காஸ்டிக்கா ஏதோ சொல்ல நினைத்தாலும் நான் இதை நகைச்சுவையாகவே எடுத்து கொள்கிறேன். :))

அப்புறம் மேரேஜ் லைப் எப்படி இருக்கு? :)


சரவணன், நல்லா கோர்த்து விடறீங்க பா! :)

வாங்க ராப், உங்க மியூசிக் சிஸ்டம் அனுபவம் நினைச்சு ரொம்பவே சிரித்தேன். ஆமா, இந்த சேவை கதை எல்லாம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? :p

வருகைக்கு நன்னி மதுரை அண்ணா.

முத்தக்கா, உங்க வீட்டு ரங்கு ரெம்ப புத்திசாலி போல.

தெய்வீக சிரிப்பய்யா உங்கள் சிரிப்பு பரிசல். :)

வாழ்த்துக்கு நன்னி வல்லி மேடம்.

பக்கத்துல இருக்கும் போதே இவ்வளவு தைரியமா கொத்தண்ணா? :p

ambi said...

நன்னி சுந்தர், போன பதிவுல புகைபிடித்தல் பத்தி எழுதி இருந்தது உங்களை புண் படுத்தி இருந்ததா? வெரி சாரி சுந்தர். :(

உங்க பதிவையும், டாக்டர் புருனோவின் பதிவு+விளக்கங்களும் பார்த்தேன். :))


வாய்யா புது மாப்பி சிவா, வீட்ல இன்னும் ப்ரீயா விட்ருகாங்க போல. :))

வருகைக்கு நன்னி தமிழன். :)

//உங்க அழகான ஆயுதத்துக்கு

மட்டு விபூதி குங்குமம் இட்டுக்கல்ல.//

அனானி அண்ணா/தங்கச்சிக்கா, ஏன் இப்படி? :p

வாங்க Sridhar, ஏதோ நீங்க ரொம்ப தைரியசாலி மாதிரி பில்டப் குடுக்கறீங்க போல. :p

கதிர், ஆயில்யன், ரொம்ப நல்லவர் மாதிரி நடிக்கறீஙக பா! :))

ரெம்ப நன்னி சென்ஷி. :)

கவிநயா அக்கா நீண்க்களுமா? என்ன அதானே? :))

கீதா மேடம், கையை பாத்துகுங்க. :))

ராப், வேணாம் விட்ருங்க. :D

மை பிரண்ட், சரிங்க தங்கச்சிக்கா. :D

Nivi, என்னது தசரா ஷப்பிங்கா? ஏன் இப்படி..? தீபாளிக்கே எப்படி அல்வா குடுக்கலாம்?னு நீ யோசிச்சிங்க். :))

கேகே, அட நீ ஊர்ல தான் இருக்கியா? வந்துட்டாருய்யா தன்மான சிங்கம். :P

எஸ்கேம், உங்க வீட்லயும் பூஜை போட்டாச்சா? வெரி குட்.

வாங்க ஆ-ரம்பம், என்னது கேஸ் ஸ்டவ்வுக்கு பூஜையா? வெவரமா தான் இருக்கீங்க.

திவாண்ணா said...

:-)))))))

ராமலக்ஷ்மி said...

தங்கமணியின் ஆயுதம் ரொம்பப் புதுசாவே இருக்கே? இன்னும் அதற்கான உபயோகம் வரவில்லையோ:))?

திவாண்ணா said...

//தங்கமணியின் ஆயுதம் ரொம்பப் புதுசாவே இருக்கே? இன்னும் அதற்கான உபயோகம் வரவில்லையோ//

அதாவது அக்கா, அது அடிக்கடி உடைந்து போய்விடுமாகையால் எப்பவுமே புதுசா ஸ்டாக் இருக்கும். அப்படி ஒண்ணு போல இருக்கு!
:-))

ராமலக்ஷ்மி said...

திவா said... //அதாவது அக்கா, அது அடிக்கடி உடைந்து போய்விடுமாகையால் எப்பவுமே புதுசா ஸ்டாக் இருக்கும். அப்படி ஒண்ணு போல இருக்கு!
:-))//

:))))!

துளசி கோபால் said...

பூஜையில் வச்சுட்டதாலே அன்னிக்கு ஆபத்துலே இருந்து தப்பிச்சுட்டீங்களா?

( இல்லே ஒருவேளை புதுசை மட்டும் பூஜையில் வச்சாச்சா??

Viji said...

oru varushathukku approm post poatta kooda vidama vandhu padikkiringale... romba kanna kattudhu. Btw, junior vandhu konja masam aagudhu polarkku. Congratulations. Photo anuppardhu.