Monday, June 30, 2008

பக்கத்து சீட்டுல பிளாகர் உக்காந்தா...

போன முறை மைசூர் காவிரி எக்ஸ்பிரஸில் பூஜா விளைவால் கடுப்பான தங்கமணி, இந்த முறை புத்திசாலிதனமாய் செய்வதாய் நினைத்து, கவுஹாத்தி எக்ஸ்பிரஸில் எனக்கு டிக்கட் புக் செய்து இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) ரயில் நிலையத்துக்கு போய் சேர்ந்தேன். என் ரயில் தவிர எல்லா ரயிலும் எந்த பிளாட்பாரத்தில் வரும்?னு அறிவிப்பு வருகிறது. சரினு கவுண்டரிடம் (சாதி பெயர் இல்லீங்கண்ணா) கேட்டால் கவுஹாத்தி கேன்சலாகி விட்டதே!னு ரெம்ப சந்தோஷமா சொல்றார். வட மாநிலத்தில் பலத்த மழையால் ஒரு வாரமாகவே அந்த ரயில் எல்லாம் ரத்தாம். அப்புறம், ஒரு பேருந்தில் இடம் பிடித்து அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் என் சோக கதையை சொல்ல வேண்டியதா போச்சு.

நீங்க பேப்பர் எல்லாம் படிக்கறதில்லையா? பக்கத்தில் அமர்ந்த பாவத்துக்கு துக்கம் விசாரித்தார்.

இல்லீங்க, நான் பிளாக் தான் படிக்கறது.

அவர் ஒரு நொடி ஙேனு முழித்துவிட்டு, அதுல கூடவா இந்த செய்தியெல்லாம் வரதில்லை?

அதுல இதெல்லாம் வராதுங்க. ஒரு வேளை "ஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி!"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.

என்னை ஒரு ரேஞ்சாக பாத்துவிட்டு, நீங்க மாவோயிஸ்ட்டா? இல்ல கம்யூனிஸ்ட்டா? ஒரு ரேஞ்சா பேசறீங்க. இப்படிதான் பிளாக்குல வருமா?

அய்யா சாமி, நான் ரிசப்ஷ்னிஸ்ட் கூட இல்லை. நான் சும்மா ஒரு சாம்பிளுக்கு சொன்னேன், இதவிட பலபல மேட்டர்கள் எல்லாம் வெளிவரும்.

உதாரணத்துக்கு சிலது சொல்லுங்களேன்! மனுசன் லேசுலுல விடுவதாயில்லை.

உலத்தரத்துல எப்படி படம் எடுக்கனும்?னு கமலுக்கு ஒரு மூடிய கடிதம் போடுவாங்க. ஜூராஸிக் பார்க்குக்கும் தசாவதாரத்துக்கும் பத்து வித்யாசங்கள் காட்டுவாங்க. ஜலஜாவின் ஜல்சா கதைகள்னு ஒரு தொடரை ரீலீஸ் பண்ணுவாங்க. முன்/பின்/ நடு இலக்கியமெல்லாம் படைப்பாங்க.

கொஞ்சம் இருங்க, அது என்னங்க பின்னிலக்கியம்? நான் கேள்விபட்டதேயில்லையே?

அடடா இது தெரியாதா? விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ?

பாவம்! கேட்டவருக்கு கொஞ்சம் கண்ண கட்டி இருக்கும் போல. ஒரு மடக்கு தண்ணிய குடித்து கொண்டார்.

இப்படி எழுதினா யாரு படிப்பாங்க? நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா?னு எப்படி தெரிஞ்சுக்கறது?

என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.

அட, இது நல்லா இருக்கே! நீங்க சொல்றத கேட்டதும் எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு ஆசையா இருக்கு.

அதுகென்ன? காசா பணமா? கூகிள்காரன் சும்மா தரான். ஊருக்கு போனதும் ஆரம்பிச்சுடுங்க, சரியா?

சரிங்க, சாரி, கேக்க மறந்துட்டேன், உங்க பேரு?

அடியேன் நம்பி! சாரி அம்பி, ஆமா உங்க பேரு?

லிங்கம், ஜம்புலிங்கம்...

57 comments:

கோவி.கண்ணன் said...

//இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) //

அம்பி,

வரிக்கு வரி ஊசிப்பட்டாசு...படிச்சு சிரித்து சிரித்து வயுறு புண்ணாச்சு.

:)

சரவணகுமரன் said...

//ஒரு வேளை "ஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி!"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜம்புலிங்க'ஸ் ப்ளாக்.. இப்படி ஒரு ப்ளாக்கர் உருவாகனுங்கரதுக்காக அன்னைக்கே பூஜா விளைவு வந்துருக்கு.. அங்க இருந்து ஒரு ப்ளாக்கர் உருவாகறவரை எல்லாமே பட்டர்ப்ளை எபக்ட் தான்..

கைப்புள்ள said...

//என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க. //

பதிவைப் படிச்சிட்டு ஒரே ச்சிரிப்பான சிரிப்பு மோனே
:)

ஆயில்யன் said...

//என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க. //

உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் கூட பக்கத்து சீட்டு ஆளுக்கு ஏத்தி விட்டுட்டீங்கபோல!

சூப்பரா இருக்கு :))))

rapp said...

செமக் கலக்கல் அண்ணே.
//மனுசன் லேசுலுல விடுவதாயில்லை.
உலத்தரத்துல எப்படி படம் எடுக்கனும்?னு கமலுக்கு ஒரு மூடிய கடிதம் போடுவாங்க//
மூடியக் கடிதம்னா என்னண்ணே?
//ஜம்புலிங்க'ஸ் ப்ளாக்.. இப்படி ஒரு ப்ளாக்கர் உருவாகனுங்கரதுக்காக அன்னைக்கே பூஜா விளைவு வந்துருக்கு.. அங்க இருந்து ஒரு ப்ளாக்கர் உருவாகறவரை எல்லாமே பட்டர்ப்ளை எபக்ட் தான்//
இத அப்படியே வழிமொழிகிறேன்.

கண்மணி/kanmani said...

என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.//
:)))ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

pudugaithendral said...

அம்பி உண்மையைச் சொல்லுங்க

நிஜமா பயண போனீங்களா? இல்லை
கற்பனையா? :))))))))))))))

ஏன் கேக்கறேன்னா சும்மா போட்டுத் தாக்கியிருக்கீங்களே அதான் கேட்டேன்.

:))))))))))

ரசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

கோவி.கண்ணன் said..
//வரிக்கு வரி ஊசிப்பட்டாசு...படிச்சு சிரித்து சிரித்து வயுறு புண்ணாச்சு.//

எல்லோர் வயிறையும் புண்ணாக்குவதில் அம்பிக்கு மிஞ்சியோர் இல்லை.

கூடிய விரைவில் தமிழ் மணத்தில்..
எதிர் பார்க்கலாம்.. ஜம்புவின் பக்தி மணம் கமழும் வலைப் பூ..'லிங்கம்', அதில் முதல் பதிவு, "ந(அ)ம்பியை நம்பினோர் கை விடப் படார்" [இந்த 'பூஜா' பாச்சாக்கெல்லாம் பயப்படாதீங்க! டேக் இட் ஈஸி தங்கமணி!].

இராம்/Raam said...

ஹி ஹி.. சூப்பரு...

Kavi said...

//வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ?//

:) LOL

Syam said...

//என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.//

நல்ல பதிவு.. :-)

ராமலக்ஷ்மி said...

Syam said…\\//என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.//

நல்ல பதிவு.. :-)\\

பாருங்க syam, நான் கோவி.கண்ணன் சொன்னதை "ரீப்பீட்டேய்ய்ய்" செய்யாமல் அழகா வழிமொழிந்திருப்பதை..:)!

உங்கள் நண்பன்(சரா) said...

அம்பி நல்ல! காமெடிப் பதிவு! ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே சிரிப்புதான்,

உங்க ரிசப்சனிஸ்ட் பதில் அருமை!:)

//அடடா இது தெரியாதா? விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) //

:))(சுந்தர்!அடுத்த கதையில அம்பினு ஒரு கேரக்டரை ஆரம்பிக்கவும்)

அன்புடன்...
சரவணன்.

ramachandranusha(உஷா) said...

//வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ?//

நல்லாத்தான் தேறிட்டே :-))))) அப்படியே அதிக கெட்ட வார்த்தை இல்லாமல் ஒரு பி.ந.சி.கதை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Vijay said...

\\இல்லீங்க, நான் பிளாக் தான் படிக்கறது.
அவர் ஒரு நொடி ஙேனு முழித்துவிட்டு, அதுல கூடவா இந்த செய்தியெல்லாம் வரதில்லை?\\
"நான் ரொம்ப நாளா பேப்பர் படிக்கறதே இல்லை. எங்கம்மா கூட "என்னடா இது. எப்போது, பிளாகு பிளாகுன்னு அலையறேன்னு" திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

குங்குமம் விளம்பரம் மாதிரி சொல்லணும்னா பத்திக்குப் பத்தி வித்தியாசம். படிக்கப் படிக்கப் ஸ்வாரஸ்யம்.

Anonymous said...

//உருவாகறவரை எல்லாமே பட்டர்ப்ளை எபக்ட் தான்..//
avvvvvvvvv..epdinga ithu...athuva cominga :D
mr.vambi..poatu one hour kulla..reliance ipo kanakka comment kuvinjidichi :D pavanga..unga saga biriyani..saari..prayaani oor poi senthara?

~gils

Unknown said...

"நல்ல பதிவு". நல்லாவே சிரிச்சேன்.

டவுட்டு தனம்மா கேட்டு வரச் சொன்னாங்க‌:

//போன முறை மைசூர் காவிரி எக்ஸ்பிரஸில் பூஜா விளைவால் கடுப்பான தங்கமணி, இந்த முறை புத்திசாலிதனமாய் செய்வதாய் நினைத்து, கவுஹாத்தி எக்ஸ்பிரஸில்//

1. அந்த பதிவுல, பதிவு பூஜா பத்தி இல்லங்கற மாதிரி பில்டப் கொடுத்திருக்கீங்க. இதுலியோ அது பூஜா பதிவு தான்னு தெளிவா சொல்றீங்க. ஏன், தங்கமணி இந்த பதிவு படிக்க மாட்டாங்களா?

2. கவுஹாத்தி எக்ஸ்பிரஸ்ல "பூஜா விளைவா" புக் செய்தது தங்கமணியா, நீங்களா? தங்கமணியா இருந்தா, புத்திசாலிதனம் அப்பட்டம்:‍-P

Sridhar V said...

//வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ?//

ம்ம்ம்... பத்தாது. மறுகாலனியாதிக்க, பாசிச, பார்ப்பனீய, நுண்ணரசியல் போன்ற வார்த்தைகள் எல்லாம் மிஸ்ஸிங்.

போக வேண்டிய தூரம் நிறைய இருக்க்கு இன்னமும் :-))

Ramya Ramani said...

\\விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ?
\\

இதெல்லாம் எப்படி ROTFL :)

Ramya Ramani said...

\\கயல்விழி முத்துலெட்சுமி said...
ஜம்புலிங்க'ஸ் ப்ளாக்.. இப்படி ஒரு ப்ளாக்கர் உருவாகனுங்கரதுக்காக அன்னைக்கே பூஜா விளைவு வந்துருக்கு.. அங்க இருந்து ஒரு ப்ளாக்கர் உருவாகறவரை எல்லாமே பட்டர்ப்ளை எபக்ட் தான்..
\\

ஆஹா நிஜமாவே எப்படி தான் இப்படி Correlate பண்ரீங்களோ :))

மங்களூர் சிவா said...

//இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) //

நம்பி,

ச்ச

அம்பி

படிச்சு சிரித்து சிரித்து வயுறு புண்ணாச்சு.

:)

மங்களூர் சிவா said...

/
ஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி!"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.
/

எனக்கே லைட்டா கண்ணை கட்டுது இது!!
:)

மங்களூர் சிவா said...

/
இப்படி எழுதினா யாரு படிப்பாங்க? நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா?னு எப்படி தெரிஞ்சுக்கறது?

என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.
/

அவ்வ்வ்வ்வ்

ரீப்பீட்டேய்ய்ய

நல்ல பதிவு

மங்களூர் சிவா said...

/
//அடடா இது தெரியாதா? விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) //

:))(சுந்தர்!அடுத்த கதையில அம்பினு ஒரு கேரக்டரை ஆரம்பிக்கவும்)

அன்புடன்...
சரவணன்.
/

ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்

மங்களூர் சிவா said...

/
Sridhar Narayanan said...

ம்ம்ம்... பத்தாது. மறுகாலனியாதிக்க, பாசிச, பார்ப்பனீய, நுண்ணரசியல் போன்ற வார்த்தைகள் எல்லாம் மிஸ்ஸிங்.

போக வேண்டிய தூரம் நிறைய இருக்க்கு இன்னமும் :-))
/

ரிப்ப்பீட்ட்ட்டேய்ய்

தமிழ்மணி, அசுரன் பதிவுகளை திரும்ப திரும்ப படிக்கவும்

பினாத்தல் சுரேஷ் said...

ஜம்புலிங்கம்,உங்களை பதிவுலகுக்கு வரவேற்கிறேன்.

கயல்விழி,

//எல்லாமே பட்டர்ப்ளை எபக்ட் தான்..// அவருக்கு அஷ்டமத்துல சனின்னு சொல்றதுக்கு கமலஹாசன் கண்டுபிடிச்ச புது வார்த்தையா இது?

உஷா,

//அப்படியே அதிக கெட்ட வார்த்தை இல்லாமல் ஒரு பி.ந.சி.கதை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.// சக்கரை இல்லாம பால்பாயசம் கேப்பீங்க போலிருக்கே!

சரி கடைசியா அம்பி,

ஸ்ரீதர் சொன்னாப்போல, பி ந விலே போகவேண்டியதூரம் நிறைய இருக்கு. காமெடியில ரொம்ப தூரம் இல்லை :-)

பரிசல்காரன் said...

// நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

நல்ல பதிவு

:))

பரிசல்காரன் said...

// நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

நல்ல பதிவு

:))

Anonymous said...

//என்ன இப்படி கேட்டுடீங்க? நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா "அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க. //

LOL -O- LOLLU :)

Boston Bala said...

---"ஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி!"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.---

:))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

=))))

Syam said...

//ராமலக்ஷ்மி said...
பாருங்க syam, நான் கோவி.கண்ணன் சொன்னதை "ரீப்பீட்டேய்ய்ய்" செய்யாமல் அழகா வழிமொழிந்திருப்பதை..:)!//

எதோ காப்பி பேஸ்ட் பண்ணி காலத்த ஓட்டிட்டு இருகோம் அதுக்கும் ஆப்பு வெச்சுடுவீங்க போல இருக்கு... :-)

வல்லிசிம்ஹன் said...

அம்பி, தசாவதாரம் பார்த்து வந்த பட்டர்ஃப்ளை எஃபெக்டா இது!!

வீசித்திரன்,பின் வாசல்,அமெரிக்கா இன்னும் என்ன பாக்கி.

வயிறு சுளுக்கிக் கொண்டதால் மேற்கொண்டு எழுத முடியவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.:)

ambi said...

//படிச்சு சிரித்து சிரித்து வயுறு புண்ணாச்சு.
//

வயறு புண்ணான கோவி அண்ணாவுக்கு அரை கிலோ திவேலி அல்வா பார்சல்ல்ல். :)))

@ச'குமரன், மூத்த பதிவாராம்ப்பா. :p

//அன்னைக்கே பூஜா விளைவு வந்துருக்கு.. //

@முத்தக்கா, இதையே தான் என் தங்கமணிட்ட சொன்னேன், நம்பலையே. :p

//பதிவைப் படிச்சிட்டு ஒரே ச்சிரிப்பான சிரிப்பு மோனே
//

@kaips, நல்லாச் சிரியும். பதிவுலகை பாத்தா எனக்கும் சிரிப்பு தான் வருதுவே! :))

//உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் கூட பக்கத்து சீட்டு ஆளுக்கு ஏத்தி விட்டுட்டீங்கபோல!
//

ஆமா ஆயில்யன்.

//மூடியக் கடிதம்னா என்னண்ணே?
//

@rapp, அதாவது, கமல் மட்டும் தான் இவங்க கடிதத்தை படிக்க போறார்னு நினச்சு பதிவு போடுவாங்க இல்ல, அது தான் மூடிய கடிதம். :))

ambi said...

@கண்மணி, நீங்க ரெம்ப நல்லவங்க டீச்சர். :p

//நிஜமா பயண போனீங்களா? இல்லை
கற்பனையா? //

@பு-தென்றல், பயணம் செஞ்ச டிக்கட்டை ஸ்கேன் செஞ்சு போட சொல்லுவீங்க போலிருக்கே. :p

//கூடிய விரைவில் தமிழ் மணத்தில்..
எதிர் பார்க்கலாம்.. ஜம்புவின் பக்தி மணம் கமழும் வலைப் பூ..'லிங்கம்'//

@ரா-லக்ஷ்மி, விட்டா டெம்ப்ளேட் டிசைன் கூட நீங்களே செஞ்சு குடுப்பீங்க போலிருக்கே. :p

நன்றி ராமண்ணா, ஓவியா & ஷ்யாம்.

//சுந்தர்!அடுத்த கதையில அம்பினு ஒரு கேரக்டரை ஆரம்பிக்கவும்)
//

ஏன் சரா என்ற பெயர் கூட நல்லாத்தான் இருக்கு. :p

//அப்படியே அதிக கெட்ட வார்த்தை இல்லாமல் ஒரு பி.ந.சி.கதை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
//

@உஷாஜி, ஒரு பாரா வேணா எழுத முடியும். முழு கதை ரொம்ப கடினம். எனக்கு பப்பி ஷேம் வார்த்தைகள் எல்லாம் லேசுல வராது. (ஆமா! உஷாஜி, என்ன வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணாலையே?) :p

//குங்குமம் விளம்பரம் மாதிரி சொல்லணும்னா பத்திக்குப் பத்தி வித்தியாசம். படிக்கப் படிக்கப் ஸ்வாரஸ்யம்.
//

@vijay, பாத்துப்பா, இலவசமா பிளாக்கோபோபியா வந்துட போவுது. :p

@gils, ஆமா கில்ஸ், நீ எப்போ தமிழ்ல கமண்ட போற? :p

ambi said...

//ஏன், தங்கமணி இந்த பதிவு படிக்க மாட்டாங்களா?
//

@கெக்கபிக்குரணி, இப்ப எல்லாம் கொஞ்சம் லேட்டா தான் படிக்கறாங்க. அதுகுள்ள வேற அப்திவு போட்டுடலாம்னு ஒரு நம்பிக்கை தான். :))

//தங்கமணியா இருந்தா, புத்திசாலிதனம் அப்பட்டம்//

பாம்பின் கால் பாம்பறியும்? :)))

//ம்ம்ம்... பத்தாது. மறுகாலனியாதிக்க, பாசிச, பார்ப்பனீய, நுண்ணரசியல் போன்ற வார்த்தைகள் எல்லாம் மிஸ்ஸிங்.
//

வாங்க கொத்... சாரி Sridhar, :p

கரக்ட், தூரம் நிறைய இருக்கு. :)

//இதெல்லாம் எப்படி ROTFL :)
//

@ramya, இன்னும் ரெண்டரை வருஷம் போகட்டும், எப்படினு உங்களுக்கும் புரியும். ;))

//தமிழ்மணி, அசுரன் பதிவுகளை திரும்ப திரும்ப படிக்கவும்
//

@ம-சிவா, அட்ரஸ் எல்லாம் நான் கேட்டனா? நல்லா கோர்த்து விடறீங்க பா. :p

//அவருக்கு அஷ்டமத்துல சனின்னு சொல்றதுக்கு கமலஹாசன் கண்டுபிடிச்ச புது வார்த்தையா இது?
//

@suresh, ROTFL :))))

//சக்கரை இல்லாம பால்பாயசம் கேப்பீங்க போலிருக்கே!
//

அவங்க ஷுகர் ப்ரீ கேக்கறாங்க. நியாயபடி, ரவை இல்லாம உப்புமா கேப்பீங்க போல!னு தானே நீங்க கேட்டு இருக்கனும். :p

//ஸ்ரீதர் சொன்னாப்போல, பி ந விலே போகவேண்டியதூரம் நிறைய இருக்கு. காமெடியில ரொம்ப தூரம் இல்லை //

தன்யனானேன் பிரபு :))

@parisal, வாங்க பரிசல், நீங்களும் சாமியார் கதை எல்லாம் ஆரம்பிச்சாசு போலிருக்கு, :p

நன்றி அருண்.

@baba, நன்னி பாபா, சரவணகுமரனுக்கு நான் குடுத்த பதிலை படிக்க வேணாம். :p

@saamyan, :))

//எதோ காப்பி பேஸ்ட் பண்ணி காலத்த ஓட்டிட்டு இருகோம் //

@syam, ஆபிஸ்லயா, பிளாக்குலயா? :p

//வயிறு சுளுக்கிக் கொண்டதால் மேற்கொண்டு எழுத முடியவில்லை //

@வல்லி மேடம், தி-அல்வா சாப்டா சுளுக்கு சரியா போயிடுமாம். :p

gils said...
This comment has been removed by the author.
gils said...

அ..அம்ம்மா...அப்ப்பா...அசின்..அஷ்வர்யா ராய்..திரிஷா..பாவ்னா..பூஜா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

கப்பி | Kappi said...

:)))

ரசிகன் said...

//அடடா இது தெரியாதா? விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ?//

"அவ்வ்வ்வ்" "ரீப்பீட்டேய்ய்ய்" "நல்ல பதிவு", :)))

ரசிகன் said...

//இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) //

சூப்பர்.

ramachandranusha(உஷா) said...

@rapp, அதாவது, கமல் மட்டும் தான் இவங்க கடிதத்தை படிக்க போறார்னு நினச்சு பதிவு போடுவாங்க இல்ல, அது தான் மூடிய கடிதம். :))//

ஹா, ஹா :-) ஏன் மூடிய ஓபன் கடிதம்னும் சொல்லலாம் :-)

இவன் said...

//அட, இது நல்லா இருக்கே! நீங்க சொல்றத கேட்டதும் எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு ஆசையா இருக்கு.//
ஆஹா ஆஹா சனியனைத்தூக்கி பனியன்ல போட்டுகிட்டாரே.... anyways u r always welcome Mr.லிங்கம் ஜம்புலிங்கம்... butterfly effect நல்லாத்தான்யா வேலை செய்யுது

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யப்பா சாமீ
இதுக்குப் பின்னூட்டம் கூடப் போட முடியாம சிரிச்சிக்கிட்டே இருந்தேன்!

ஏதோ ட்ரெயின்-ன்னா ஓக்கே! எஸ்ஸாயிரலாம்! ப்ளைட்டுல பக்கத்து சீட்டுல பிளாகர் உக்காந்தா என்னாய்யா பண்ண முடியும் உன்னால? :-)

சரி, சரி, இதை உஅன்க்கு ஒரு வரமாக் கொடுக்கறேன்! வச்சிக்கோ! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//, நீங்க மாவோயிஸ்ட்டா? இல்ல கம்யூனிஸ்ட்டா//

//அய்யா சாமி, நான் ரிசப்ஷ்னிஸ்ட் கூட இல்லை//

ஹிஹி
எல்லாம் சரி...
நம்பி, ஐ மீன் அம்பி, எவ அவ? ஐ மீன் அந்த ரிசப்ஸனிஸ்ட்டு :-)

ambi said...

@gils, என்ன கில்ஸ், ஐஸ்வர்யா ராய்க்கு ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விட்ருக்க, அபிஷேக் பச்சன் உன் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப போறான் பாரு. :p

@கப்பி, ஓ! நீங்களும் மூத்த பதிவரோ? :)))

என்ன ரசிகன், ஆளே காணோம்? கல்யாணம் ஆயிடிச்சோ? :p

//மூடிய ஓபன் கடிதம்னும் சொல்லலாம் //

:)))

//சனியனைத்தூக்கி பனியன்ல போட்டுகிட்டாரே.... anyways u r always welcome Mr.லிங்கம் ஜம்புலிங்கம்... //

ஹிஹி, ஜம்புலிங்கத்துக்கு பலத்த வரவேற்ப்பு இருக்கு போலிருக்கே! :))

//இதை உஅன்க்கு ஒரு வரமாக் கொடுக்கறேன்! வச்சிக்கோ!//

@KRS, தன்யனானேன் பெருமாளே! அப்படியே ஒரு இல்ல மூணு பிசினஸ் கிலாஸ் (ஜெட் ஏர்வேய்ஸ் நல்லா இருக்குமாமே) டிக்கட் அனுப்பினா சவுகரியமா இருக்கும். :)))

ambi said...

//நம்பி, ஐ மீன் அம்பி, எவ அவ? ஐ மீன் அந்த ரிசப்ஸனிஸ்ட்டு //

@KRS, கண்டிப்பா இத்தாலி நாட்டு பெண் இல்லை. :p

50 - நானே போட்டுக்கறேன். இல்லாட்டி கொத்ஸ் வந்து தட்டிட்டு போயிடுவார். :))

Anonymous said...

nambi illa ambi,summa saram mariya
adukki irukeenga.LOL.
jambu enkira jambulingam enna annaar?blog ezuthum kalaiyil entha allavukku therinar!!!idha ellam adutha postula therivikkavum.
nivi.

ambi said...

வாங்க நிவி, ஜம்பு இனிமே தான் பிளாக் ஆரம்பிக்கனும். :p

gils said...

//என்ன கில்ஸ், ஐஸ்வர்யா ராய்க்கு ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விட்ருக்க, அபிஷேக் பச்சன் உன் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப போறான் பாரு. :p
//
athu chella peyar..kandukapdaatuh :D

ambi said...

//athu chella peyar..kandukapdaatuh //

@gils, அடுத்தவன் பொண்டாட்டிக்கு நீங்க செல்ல பெயர் வைக்கறீங்களா? நடத்து ராசா! நடத்து. :)

geethasmbsvm6 said...

//அடடா இது தெரியாதா? விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ?//

இத்தனை நாளாய்ப் புரியாமல் இருந்தது, இப்போ புரிஞ்சது!!!!!! :P

Vijayashankar said...

எடுக்கெல்லாம் தன்மானம் பாக்ரதுணு வெவஸ்தையெ இல்லை! நன்றி.

Anonymous said...

disperse in extinguished this gratis [url=http://www.casinoapart.com]casino[/url] perk at the powerful [url=http://www.casinoapart.com]online casino[/url] signal with 10's of proclivity [url=http://www.casinoapart.com]online casinos[/url]. be enduring a conform with each other at [url=http://www.casinoapart.com/articles/play-roulette.html]roulette[/url], [url=http://www.casinoapart.com/articles/play-slots.html]slots[/url] and [url=http://www.casinoapart.com/articles/play-baccarat.html]baccarat[/url] at this [url=http://www.casinoapart.com/articles/no-deposit-casinos.html]no robust casino[/url] , www.casinoapart.com
the finest [url=http://de.casinoapart.com]casino[/url] against UK, german and all wonderful the world. so in loosely sometimes non-standard happen b nautical line the treatment of the choicest [url=http://es.casinoapart.com]casino en linea[/url] discontinuity us now.